World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraqi prime minister accused of murdering detainees

கைதிகளை கொலை செய்ததாக ஈராக் பிரதமர் மீது குற்றச்சாட்டு

By James Conachy
19 July 2004

Back to screen version

சிட்னி மோர்னிங் ஹெரால்ட் மற்றும் ஏஜ் செய்திப்பத்திரிகை வெளியிட்டுள்ள கவனிக்கப்படாத செய்தியில் அமெரிக்கா நியமித்துள்ள ஈராக்கின் இடைக்கால பிரமதர் அயத் அல்லாவி கைவிலங்கிடப்பட்ட கண்கட்டப்பட்ட ஆறு கைதிகளை கொலை செய்ததை இரண்டு ஈராக்கியர் நேரில் பார்த்ததாக தெரிவிக்கின்றனர். ஜூன் நடுவில் நடைபெற்ற உடனடி மரணதண்டனை குற்றச்சாட்டின்பொழுது அல்லாவி பாக்தாத்தில் உள்ள அல்-அமாரியா பாதுகாப்பு மையத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இத்தகவல்கள் அந்த செய்திப்பத்திரிகைகளுக்கு பலவாரங்களுக்கு முன்னர் கிடைத்திருந்தது. இறுதியாக ஜூலை 17ல் அந்த கட்டுரையை பிரசுரிக்க தீர்மானிக்கப்பட்டது. ஈராக் மற்றும் அமெரிக்க அதிகாரிகள், நேரில் கண்டவர்கள் கொடுத்துள்ள தகவல்களை மறுத்தும் நிராகரித்தும் எந்தவிதமான விளக்கத்தையும் தர தவறிவிட்டதால்'' என்று அது குறிப்பிட்டிருந்தன. பேட்டியினை எடுத்த பாக்தாத் தொடர்பாளர் Paul McGeough இன்படி, இரண்டு சாட்சிகளையும் ஒருவரோடு ஒருவர் தொடர்பற்று தனித்தனியாக பேசினர். அவர்களுக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை.

அவர்களில் ஒருவர் அந்தப் பத்திரிகையாளரிடம் கூறினார் ''கைதிகள் சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தார்கள், நாங்கள் முற்றத்தில் நின்றோம் அப்போது உள்துறை அமைச்சர் [Falah al-Naqib] அங்கு வந்து, அவர்கள் அனைவரையும் அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்ல தான் விரும்புவதாக கூறினார். அல்லாவி அப்போது அவர்களுக்கு மரணத்தைவிட மோசமான தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் ஆனால் அதன் பின்னர் அவர் தன்னுடைய இடுப்பு பட்டியிலிருந்து துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினார்''.

நேரில் கண்ட மற்றொருவர் கைதிகள் அனைவரும் இளைஞர்கள் என்றும், அவர்கள் அமெரிக்க எதிர்ப்பில் சம்மந்தப்பட்டவர்கள் என்று சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் என்றும் ''அல்லாவி'' அவர்களை சுட்டுக்கொல்வதற்கு முன் பல நாட்கள் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். ''வாய் திறந்து பேசவேண்டும் என்று ஏற்கனவே அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முதல் எட்டு மணிநேரம் வரை போலீசாரால் தாக்கப்பட்டனர். இப்படி சித்ரவதைக்கு உள்ளாவதைவிட சாவதுமேல் என்று அவர்கள் நினைத்தனர்'' என்று அவர் கூறினார்.

அல்லாவி ஏழு கைதிகளை கொடூரமான முறையில் சுட்டதாக இரண்டு சாட்சிகளும் குற்றம் சாட்டினர். ஆறுபேர், உடனடியாக இறந்து விட்டனர். மற்றொருவர் கடுமையான காயம் அடைந்தார். அந்தப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள கட்டுரை இப்படி சுட்டுக்கொல்லப்பட்ட 3 கைதிகளின் பெயர்கள் Ahmed Abdulah Ahsamey, Amer Lutfi Mohammed Ahmed al-Kutsia, Walid Mehdi Ahmed al-Sammarrai ஆகும்.

அல்லாவியின் மெய்க்காவலர்கள் அந்த உடல்களை நிசான் ஜீப்பின் பின் பகுதியில் போட்டுக்கொண்டு சென்றதை பார்த்ததாக நேரில் கண்ட ஒருவர் கூறினார். மற்றொருவர் அந்த உடல்கள் பாக்தாத் புறநகரில் அமைந்துள்ள பாலைவனப்பகுதியில் புதைக்கப்பட்டதாக தெரிவித்தார், அது அபு கிரைப் சிறைச்சாலையின் மேற்கு பகுதியில் உள்ளது. காயம்பட்டவரது கதி என்னவாயிற்று என்பது அந்த அறிக்கையிலிருந்து தெளிவாக தெரியவில்லை.

இந்த கொலைகள் நடந்தபோது 30 பேர் அங்கு இருந்ததாக நேரில்கண்டவர்கள் தெரிவித்தனர். ஈராக் போலீசாரும், அமெரிக்க சிறப்பு படையிலிருந்து வந்த ஐந்து அல்லது ஆறு சிவிலியன் உடுப்பிலிருந்த அமெரிக்கர்களும், அல்லாவியின் பாதுகாப்பு விவகாரத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள். ஆறுபேரை கொலை செய்த பின்னர் அல்லாவி அவர்களிடம் பேசும்போது ''ஈராக்கில், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு கிளம்பும் எதிர்ப்பை எப்படி ''அடக்கியாளுவது'' என்று ஈராக் போலீசாருக்கு காட்டுவதற்காக தாம் இவ்வாறு செய்ததாக குறிப்பிட்டார்'' என்று கூறப்பட்டுள்ளது.

நேரில் கண்ட ஒருவர் விளக்கம் தரும்போது: ''எவரையும் கொன்றுவிட்டால் அதற்காக போலீசாரும், இராணுவமும் பயப்படவேண்டியதில்லை--- குறிப்பாக இனக்குழு பழிவாங்கல் பற்றி கவலைப்பட தேவையில்லை. அவரும் உள்துறை அமைச்சகமும், எல்லோரையும் முழுமையாக பாதுகாக்கின்ற வகையில் கட்டளை ஒன்றை அனுப்பப்போவதாக கூறினார். ''ஈராக்கை அழிக்கவும் நமது மக்களை கொல்லவும் விரும்புகின்ற எவரையும் நாம் அழித்தாக வேண்டுமென்று'' அவர் குறிப்பிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அந்தப் பத்திரிகைகள் அல்லாவி அலுவலகத்திற்கு குறிப்புக்களை அனுப்பியும் ஒருவாரம் வரை அதிகாரபூர்வமான மறுப்பு எதுவும் வரவில்லை, புலன் விசாரணைபற்றி எந்த ஆலோசனையையும் பிரதமர் அலுவலகம் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தகவல்கள் பிரசுரிக்கப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது இன்றுவரை புஷ் நிர்வாகம் எந்த மறுப்பையும் வெளியிடவில்லை. பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் குற்றச்சாட்டுக்களை வதந்திகள் என்றும் மோசமாக மறுத்தது. ''இது சம்பந்தமாக தூதரக பத்திரிகை அலுவலகத்தை பொறுத்தவரை இந்தச் சம்பவம் முடிந்துவிட்டதாக'' என்று அறிக்கை வெளியிட்டது.

ஈராக்கின் மனித உரிமைகள் அமைச்சர் Bakhtiar Amin, ஆஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்திற்கு இன்று அளித்த பேட்டியில் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதாகவும் ஆனால், அவை உண்மையென்றுதான் நம்பவில்லை என்றும் தெரிவித்தார். அந்தப் பத்திரிகையாளருக்கு எதிராக அவதூறு வழக்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக அச்சுறுத்தினார்.

ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் ஹில் குற்றச்சாட்டுக்களை பொருட்படுத்த தேவையில்லை என்பது போல் கருத்து தெரிவித்தார். அந்த சம்பவம் பற்றி ஈராக்கில் உள்ள ஆஸ்திரேலிய, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க தூதரகங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். தொழிற்கட்சி சார்பில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் நிழல் பாதுகாப்பு அமைச்சர் Kim Beazley' இவரோடு சேர்ந்து கருத்து தெரிவிக்கும்போது மத்திய கிழக்கு ''மிக பிரம்மாண்டமான வதந்திகள் உலவும் அங்காடி'' என்றும் ''இந்த நாட்டில் இரண்டு அநாமதேய அடித்தளத்தை கொண்டு எழுதியவை அச்சிட தகுந்தவையாக கருதுவதில்லை'' என்று கூறினார்.

இந்த செய்தியை ''வதந்திகள்'' என்று தள்ளுபடி செய்வது அதைமூடி மறைக்கும் செயலாக ஆகும். McGeough அனுபவமிக்க, அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர் அவரது செய்தி மூலங்கள் நேரில் கண்ட சாட்சிகள் அவர்கள் இறந்துவிட்ட மூன்று பேருடைய பெயர்கள் உட்பட நடைபெற்ற நிகழ்ச்சியை குறிப்பாக விவரித்திருக்கின்றனர். இன்றுவரை எவரும் அந்த விவரங்களை மறுக்கவில்லை. அந்த இரண்டு ஈராக்கியர்களும், தங்களது பெயர் வெளியில் வரக்கூடாது என்று தயக்கம் காட்டுவதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. குற்றச்சாட்டுக்களின் தன்மையை பார்க்கும்போது அவர்கள் இருவரும் தங்களது உயிருக்காக பயந்து கொண்டிருப்பது தெளிவானது.

இதுவரை எந்த பெரிய அமெரிக்க செய்தி பத்திரிகை அல்லது தொலைக்காட்சி வலைபின்னலோ இந்தக் குற்றச்சாட்டுக்களை வெளியிடவில்லை, இரண்டு ஆஸ்திரேலிய முன்னணி நாளிதழ்கள் வெளியிடுகின்ற அளவிற்கு அந்த செய்திகள் நம்பகத்தன்மை கொண்டவை, அவை நிரூபிக்கப்பட்டுவிட்டால் கொலை குற்றச்சாட்டுக்களின் கீழ் அல்லாவியை உடனடியாக கைது செய்தாக வேண்டும். சென்ற வாரக்கடைசியில் பிரிட்டனில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரொபின் குக் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிய பின்னரும் ஈராக்கில் இன்னமும் தணிக்கை முறை செயல்படுத்தப்பட்டே வருகின்றது.

சென்ற ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா படையெடுப்பு நடத்திய நேரத்தில் இதே அமெரிக்க ஊடகங்கள் சதாம் ஹூசேனின் பாத்திஸ்ட் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கொலை சித்ரவதை, கற்பழிப்புக்கள் பற்றி பல்வேறு தகவல்களை வெளியிட்டன, ஆனால் இன்றைய தினம் அமெரிக்கா நியமித்த அல்லாவி ஆட்சியில் அதே முறையில் வளர்ந்து கொண்டிருக்கும் சான்றுகளைப்பற்றி அமெரிக்க ஊடகங்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை.

அல்லாவியின் கடந்த காலம் கசப்பானது என்பது வாஷிங்டனுக்கு நன்றாகவே தெரியும். 1975 வரை பாத்திஸ்ட் சர்வாதிகாரத்தின் உளவாளியாகவும், தாக்குதல் நடத்துகின்ற நபராகவும் செயல்பட்டு வந்தவர், அதற்குப்பின்னர் 1980களில் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு முகவராக செயல்பட்டவர். 1990களில் ஈராக்கை பிடிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நோக்கங்களுக்கு உடந்தையாக செயல்பட்டவர், 2003ல் தனது நாட்டின் மீது அமெரிக்க படையெடுத்ததை ஆதரித்தவர்.

அண்மையில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில் முன்னாள் CIA ஏஜென்ட்டுகள் தந்துள்ள அல்லாவி பற்றிய கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. 1990களின் நடுவில் பல குடிமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக ஈராக்கில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்புக்களில் அல்லாவியின் ஈராக் தேசிய உடன்பாடு கட்சி (INA) சமந்தப்பட்டிருந்தது. இந்த ஈராக் தேசிய உடன்பாட்டில் கூட குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் முன்னாள் பாத் இராணுவ அதிகாரிகளும் புலனாய்வு அதிகாரிகளும் இடம்பெற்றிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரைக்கு தலைப்பு ''ஒரு கடுமையான நாட்டிற்கு கடுமையான மனிதர்'' என்பது இந்தக் கட்டுரையை மேற்கோள் காட்டியுள்ள McGeough CIA இன் முன்னாள் அதிகாரி Reuel Marc Gerecht, அவர் நியூயோர்க்கு அவர் [அல்லாவி] மிகப்பயனுள்ள உளவாளி, தான் சரி என்று கருதுவதை உறுதியாக நம்புபவர். அல்லாவி பற்றி இரண்டு உண்மைகள் எழுந்துள்ளன. ஒன்று, பெரிய சிந்தனையாளன் என்று அவர் தன்னை கருதிக்கொள்ள விரும்புபவர். இரண்டாவது, அவரது உறுதியான தன்மை என்னவெனில் அவர் ஒரு குண்டன் (Thug) ஆகும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கம் பதவியேற்ற மூன்று வாரங்களில், அல்லாவியின் தேர்ந்தெடுக்கப்படாத, மக்களது வெறுப்பிற்கு இலக்கான நிர்வாகம், இராணுவச்சட்டத்தை கொண்டுவருவதற்கு அதிகாரத்தை பெற்றுள்ளதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடைவிதிக்கவும், குடிமக்களது தொலைபேசிகள் மற்றும் மின்னஞ்சல்களை கண்காணிக்கவும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது. சதாம் ஹூசேனின் ஆட்சிகால இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகளை பதவியில் சேர்த்துக்கொள்ளப் போவதாகவும், எதிர்கட்சிகளை ''அடியோடு ஒழித்துக்கட்ட'' இரகசிய போலீஸ் அமைப்பை உருவாக்கியிருப்பதாக இந்த வாரம் அல்லாவி அறிவித்திருக்கிறார். ஏற்கனவே பாக்தாத்தில் அவரை ''மீசையில்லாத சதாம் ஹூசேன்'' என்றும் அல்லது ''அமெரிக்காவின் சதாம்'' என்றும் வெறுப்புடன் மேற்கோள் காட்டப்படுகின்றது.

அமெரிக்க பாதுகாப்பில் ஈராக்கில் ஒரு போலீஸ் அரசை அமைப்பதற்காக புஷ் நிர்வாகத்தை கண்டிப்பதற்கு பதிலாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நியூயோர்க் டைம்சும், வாஷிங்டன் போஸ்டும் அல்லாவியின் கொடூரம் மற்றும் இரக்கமற்ற பண்பையும் பாரட்டியுள்ளன. இதற்கு முன்னர், அதே ஊடகங்கள் அமெரிக்கா ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக ஈராக் மீது படையெடுத்ததாக கூறிவந்தன, இப்போது அந்தக்கருத்தை தூக்கி எறிந்துவிட்டு, ''சக்திவாய்ந்த'' அல்லாவிக்கும் அவரது நடவடிக்கைக்கும் ஆதரவளிக்க ஆரம்பித்துள்ளன.

ஜூலை 11-ல் நியூயோர்க் டைம்சில் Dexter Filkins கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அல்லாவி பற்றி நிலவுகின்ற ஒரு வதந்தியான, அண்மையில் புலன் விசாரணை நடந்தபோது ''அல்லாவி'' ஒரு கோடரியை எடுத்து ஒரு கைதியின் கையை துண்டித்து விட்டாராம், இந்த கொடூரமான நடவடிக்கை பற்றி கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் பற்றி Filkins மகிழ்ச்சியடைவதாக எழுதுகிறார்:- ''எவரும் வாய்திறக்கவில்லை, கோடாரியை எடுத்து வாருங்கள் என்று பிரதமர் கூறியதாக கூறப்படுகின்றது, அந்தக்கதை மேலும் நீடிக்கின்றது. அல்லாவி லெபனானை சேர்ந்த ஒரு கைதியின் ஒரு கையை கோடாரியால் வெட்டினார், உடனடியாக அந்த லெபனான் குழுவைச் சேர்ந்த அனைவரும் எல்லா உண்மைகளையும் கக்கிவிட்டனர்'' என்று கூறப்பட்டுள்ளது.

Filkins இன் கருத்துப்படி பிளவுபட்டுக்கிடக்கின்ற நாட்டை ஒன்றுபடுத்துவதற்கு இதுபோன்ற சூழ்நிலைகளில் இப்படிப்பட்ட சிறப்பான மனிதரான, அல்லாவிதான் தேவை.

ஜூலை 14-ல் வாஷிங்டன் போஸ்டை சேர்ந்த David Ignatius அல்லாவி திட்டத்தை ''ஒழுங்கற்ற அந்த நாட்டை நிர்வகிக்கின்ற முரட்டு முன்னாள் பாத் கட்சிக்காரர்'' என்று பாராட்டியுள்ளார். சென்ற நவம்பரில் தான் ''அமெரிக்கா கொடுமை மிக்க ஒரு ஆட்சியிலிருந்து ஈராக் மக்களை விடுவிக்கும் ஒரு நல்லகாரியத்தை செய்திருக்கின்றது'' என்று Ignatius அறிவித்திருந்தார்.

இதுபோன்ற விமர்சகர்களால் சென்ற ஆண்டு ஈராக்கிற்கு விடுதலையையும், ஜனநாயகத்தையும் படையெடுப்பு கொண்டுவரும் என்று அமெரிக்க மக்களுக்கு கூறப்பட்டது. இதில் உண்மை என்னவென்றால், மத்திய கிழக்கில் வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்திய குற்றவியல் மூலோபாயத்தின் ஓர் அங்கமாக, புஷ் நிர்வாகம் இந்த படையெடுப்பை நடத்தியதுடன், தேர்ந்தெடுக்கப்படாத அமெரிக்க ஆதரவுக் குழு ஒன்றை அது ஈராக் மக்கள் மீது திணித்துள்ளது. எந்தவிதமான சட்ட அங்கீகாரமோ, அல்லது மக்கள் ஆதரவோ இல்லாமல் ஈராக்கை காலவரையறையின்றி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு மக்களை ஒடுக்கும் பயங்கர நடவடிக்கைகளில் அல்லாவியின் ஆட்சி ஈடுபட்டிருக்கின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved