World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Volunteer to help place Socialist Equality Party candidates on the ballot in key battleground states!

சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளர்களை முக்கிய போர்க்களச் சூழலுள்ள மாநிலங்களில் வாக்குச் சீட்டில் பதிவு செய்வதற்கு உவந்து உதவிடுக!

Statement by the SEP 2004 Committee

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும், எமது வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தங்கள் நேரம், உழைப்பு மற்றும் நிதி வசதிகளை பல முக்கியமான போர்க்களச் சூழலுள்ள மாநிலங்களில் SEP இன் ஜனாதிபதி வேட்பாளர்களை வாக்குச்சீட்டில் பதிவு செய்வதற்கு உவந்து உதவுமாறு அவசர வேண்டுகோளை முன்வைக்கின்றன.

தற்பொழுது நாங்கள் நம்முடைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்குச்சீட்டுத் தகுதியை ஒகையோ, ஐயோவா, மின்னெசோட்டா மற்றும் வாஷிங்டன் மாநிலங்களில் பெறுவதற்கு மனுப் போட்டுள்ளோம்; இப்பணி விரைவில் விஸ்கொன்சனிலும் தொடங்கும். இந்த மனு முயற்சிகள் வெற்றிபெறுவதற்கு உங்கள் தீவிர ஆதரவை நாங்கள் நாடுகிறோம்!

சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களான, ஜனாதிபதி வேட்பாளர் பில் வான் ஒகென், மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜிம் லோரன்ஸ் இருவரும்தான் ஜனநாயக, குடியரசுக் கட்சிகளுக்கும் அவற்றின் வேட்பாளர்களான ஜோன் கெர்ரி மற்றும் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிற்கும், 2004 தேர்தல்களில் ஒரு புரட்சிகரமான சோசலிச மாற்றைக் கொடுப்பவர்களாவர்.

எங்களுடைய பிரச்சாரம் ஒன்றுதான் ஈராக்கியப் போரை எதிர்த்து, அமெரிக்கப் படைகள் உடனடியாக, நிபந்தனையற்ற முறையில் திரும்பப் பெறுதல் வேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளது. கெர்ரி-எட்வர்ட்ஸ் பிரச்சாரம் ஒரு போருக்காதரவான வாக்கை நாடுகிறது. ஜனநாயகக் கட்சியினர், கெர்ரி நிர்வாகம் ஈராக்கிய ஆக்கிரமிப்பை தொடரும், அதேபோல "பயங்கரவாதத்தின் மீதான போரை" முடிவில்லாததாக வைத்திருக்கும் என்று தெளிவாக்கியுள்ளனர்.

புஷ் நிர்வாகத்துடனும் குடியரசுக் கட்சியுடனும், கெர்ரியும் ஜனநாயகக் கட்சியும் அடிப்படை வேறுபாடுகள் எதையும் கொண்டிருக்கவில்லை என்பதோடு அவர்களுடைய பிரச்சாரமுறை முற்றிலும் வலதுசாரி அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. ஜனநாயகக் கட்சி இப்பொழுது நாடு தழுவிய முறையில் மூன்றாம்-கட்சி உறுப்பினர்களுக்கு வாக்குச்சீட்டில் பதிவுத் தகுதியை மறுக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அக்கட்சி, புஷ் நிர்வாகம் மற்றும் அதன் இராணுவக் கொள்கைகளை எதிர்க்கும் ரால்ப் நாடெர், பசுமைக் கட்சி, சோசலிச சமத்துவக் கட்சி அல்லது எந்தக் கட்சியையும் அல்லது எந்த வேட்பாளரையும் வாக்குச்சீட்டுப் பதிவு இல்லாமல் போகவேண்டுமேன்று முயற்சிக்கிறது.

இல்லினோய்சில், அனைத்துச் சட்ட பூர்வமான தேவைகளையும் பூர்த்தி செய்த பின்னரும், ஜனநாயகக் கட்சி அலுவலர்கள், மாநிலப் பிரதிநிதியாக 103வது தொகுதியான சாம்பெயின்-அர்பனாவில் இருந்து SEP வேட்பாளர் ரொம் மக்கமன் வாக்குச்சீட்டில் இடம் பெறக்கூடாது என்று சவால்விட்டுள்ளதற்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் SEP உள்ளது. ஜனநாயகக் கட்சியினரின் அப்பட்டமான தீய நோக்க சவாலை எதிர்த்துப் போராடுவதற்கு SEP பிரச்சாரத் தொண்டர்கள் பல நூற்றுக்கணக்கான மணிநேரச் செலவை அர்ப்பணிப்பது தேவைப்பட்டிருக்கிறது, அதேபோல கணிசமான தொகை சட்டச் செலவுகளையும் மேற்கொள்ள வைத்துள்ளது.

இந்தச் சவாலை இல்லினோய்சில் எதிர்கொள்ள நாம் உறுதிபூண்டுள்ளோம்; மேலும் நம்முடைய வேட்பாளர்களை பல மாநிலங்களிலும் இயன்ற அளவு வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்வதற்கும் முயன்று வருகிறோம், ஆனால் உங்களுடைய உதவி எங்களுக்குத் தேவை. ஒரு சிறு நிதி ஆதிக்க செல்வந்தத் தட்டின் நலன்களுக்கு மட்டும் சேவை செய்து, பெரும்பான்மையான மக்களை பற்றிக் கவலைப்படாத, இரு பெருவர்த்தக கட்சிகளுக்கு எதிராக, உண்மையான ஜனநாயக மற்றும் சோசலிச மாற்றை முன்னெடுக்கும் ஒரே பிரச்சாரம் 2004 சோசலிச சமத்துவக் கட்சிப் பிரச்சாரம்தான்.

இன்று உழைக்கும் மக்களை எதிர்கொண்டுள்ள கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினைகள் பற்றி தீவிர விவாதத்தை ஆரம்பிக்கும் வகையில்தான் நாங்கள் அடிமட்டப் பிரச்சாரத்தைக் கொண்டுள்ளாம்: ஈராக்கில் போர், பொருளாதார நெருக்கடிகள், ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல் ஆகியவை "பயங்கரவாதத்தின்மீதான போர்" என்ற அடிப்படையில் அரசியல் நிறுவனத்தால் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எந்த அளவிற்கு மக்கட்தொகையினரின் பரந்த தட்டுக்களை நாங்கள் அடைந்து, எங்களுடைய சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைக்க முடியும் என்பது உங்களைப் பொறுத்துத்தான் உள்ளது.

இன்றுவரை, எங்களுடைய ஆதரவாளர்கள் நியூ ஜேர்சி மற்றும் கோலராடோ மாநிலங்களில் வான் ஒகெனையும் லோரன்சையும் இடம்பெறச்செய்வதற்கு மனுக்களையும், வேட்பாளர் முன்மொழிவு சான்றுகளையும் மனுச்செய்திருக்கிறார்கள். மைன் தொகுதியான 2ம் தேசியச் சட்ட மன்ற மாவட்டத்திற்கான எமது வேட்பாளருக்கு -கார்ல் கூலி- ஏற்கனவே தக்க பதிவுச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது; ஜூலை மாத நடுவில் நம்முடைய வேட்பாளராக மிச்சிகனின் 15 வது பாராளுமன்ற மாவட்டத்திற்கான எமது வேட்பாளரை -ஜெர்ரி வைட்டை- வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்வதற்கான தகுதிக்கான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜனநாயகமற்ற கட்டுப்படுத்தும் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிர்ப்பில், நாங்கள் இன்னும் இரண்டு தேசிய சட்டமன்ற வேட்பாளர்களைகளை -ஓகையோவில் முதல் தொகுதியில் டேவிட் லோரன்சையும், கலிபோர்னியாவின் 29 வது மாவட்ட தொகுதியில் ஜோன் பேர்ட்டனையும் வாக்குச் சீட்டில் இடம்பெறச்செய்வதற்கு சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

இப்பொழுது எமது ஜனாதிபதி வேட்பாளர்களை ஐந்து முக்கிய மாநிலங்களில் -ஓகையோ, ஐயோவா, மின்னேசோட்டா, விஸ்கொன்சன், மற்றும் வாஷிங்டன் ஆகிய 5 மாநிலங்களிலும் நிற்க வைக்கும் மனுத் தாக்கல் முயற்சிகளைக் கொண்டுள்ளாம்; இதற்கு உங்களுடைய தீவிர ஆதரவைத் தருமாறு அழைப்பு விடுக்கிறோம். உடனடியாக காலத்தில், கையெழுத்துக்கள் சேகரிக்கும் முயற்சியில் முன்வந்து உதவுமாறு நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறோம். உங்களால் தீவிரமாக மனுத் தாக்கல் நடைமுறையில் பங்கு பெற முடியவில்லை என்றால், இப்பிரச்சாரம் பற்றி நாங்கள் விளம்பரப்படுத்தும் வகையில் பிரச்சார அறிக்கைகளை வழங்குதல், நம்முடைய வேட்பாளர்கள் மேடைகளில் தோன்றுவதற்கான வழிவகைகளை அமைத்தல் போன்றவற்றில் உதவுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

இறுதியாக, ஒரு சுதந்திரமான, முன்றாம்-கட்சி வேட்பு பிரச்சாரத்திற்கு ஆகும் கணிசமான செலவினங்களுக்கு உங்களுடைய தாராளமான நன்கொடைகளை அளிக்குமாறு அழைப்பு விடுக்கிறோம். அமெரிக்காவில் இத்தகைய பிரச்சாரத்தை மேற்கொள்ளுவது நடைமுறையிலும், நிதியளவிலும் மகத்தான சவாலாகும். நாங்கள் ஒரு பெரிய கட்சி அல்ல; எங்களுடைய வளங்கள் குறைந்தவையே. ஜனநாயகக், குடியரசுக் கட்சிகள் தங்களுடைய அரசியல் கருவிக்காக பில்லியன் டாலர்கள் கணக்கில் செலவிடுகின்றன; அவற்றிற்கு முற்றிலும் ஊழல் மலிந்த செய்தி ஊடகம் உதவிக்கு நின்று, இக்கட்சி வேட்பாளர்கள்தான் மக்களுக்கு உள்ள ஒரே விருப்பத்தேர்வு என்ற பிரச்சாரத்தைச் செய்து வருகின்றன.

ஈராக்கின் மீதான போரை எதிர்ப்பவர்களானால், பெரும் செல்வம் கொழிக்கும் ஒரு பகுதிக்கும் பெரும்பாலான உழைக்கும் மக்கள், இளைஞர்கள் இவற்றிற்கிடையே பெருகிவரும் இடைவெளியை, மக்கள் உரிமைகள் அரிக்கப்படுவதை, நீங்கள் எதிர்ப்பவர்களானால், நீங்கள் நடவடிக்கை மேற்கொள்ள இதுதான் தருணமும் வாய்ப்பும் ஆகும். இரு பெரு-வர்த்தக கட்சிகளுக்கு ஒரே உண்மையான மாற்றை 2004 தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சிதான் வழங்குகிறது. SEP வேட்பாளர்களை வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்வதற்கு உதவுங்கள்; எங்களுடைய பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கு, உங்களால் எவ்வகையில் முடிந்தாலும் முயலுக.

இப்பிரச்சாரத்திற்கு ஆதரவு தருவதற்கு உவந்து முன்வருக!

ஆன்லைன் மூலம் நன்கொடை வழங்குக!

-------------------------------------------------------------------------------

SEP 2004 பிரசாரம், மனுத்தாக்கல் செய்ய, விளம்பரத்திற்கு, தேர்தல் பிரசுரங்களைப் பங்கீடு செய்ய இன்னும் பல பணிகளுக்கு, உவந்து முன்வரும் தொண்டர்களை நாடுகிறது!

இப்பொழுது போர்க்களச் சூழலை ஒத்துள்ள மாநிலங்களில் மனுத்தாக்கல் செய்வதற்கு உவந்து முன்வருக!

ஓகையோ : ஐயோவா : வாஷிங்டன் : மின்னேசோட்டா : விஸ்கொன்சன்

ஓகையோ: இங்கு நமக்குக் குறைந்தது 5000 கையெழுத்துக்கள் தேவை; இல்லினோய்சில் ஜனநாயகக் கட்சியினர் செய்தது போல் நம்முடைய மனுக்களுக்கு எதிர்ப்பு வந்தால் அதைக் காக்கும்பொருட்டு, அதற்கும் மேலான எண்ணிக்கையில் கையெழுத்துக்களை சேகரிக்க நாம் நோக்கம் கொண்டுள்ளோம். SEP மனுக்களுக்களில் ஏற்கனவே 1000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஒரு பெரிய மத்திய மேற்குத் தொழில்துறை மாநிலமான ஓகையோவில் 11 மில்லியனுக்கு மேலான மக்கட்தொகை உள்ளது; புஷ், மற்றும் கெர்ரி இருவருடைய பிரச்சாரங்களிலும் இது குவிமையமாக இருந்து வருகிறது. 2004 தேர்தல்களில் உண்மையான விருப்பத்தை வாக்காளர்கள் தெரிவிவிக்கவேண்டியது தேவையாகும்; அந்த விருப்பம் SEP தான்! ஏற்கனவே மனுத்தாக்கல்கள் டேடன், சின்சினாட்டி, டோலிடோ மற்றும் பல நகரங்களிலும் தொடக்கப்பட்டு, நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன; அதிலும் குறிப்பாக, அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து நிபந்தனையின்றி திரும்பப் பெறவேண்டும் என்னும் SEP இன் அழைப்பிற்கு நல்ல ஆதரவு உள்ளது. இப்போராட்டத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்!

ஓகையோவில் கையெழுத்துச் சேகரிக்கும் பணிக்கு உவந்து முன்வருக!

* * *

ஐயோவா: நாங்கள் ஏற்கனவே SEP ஐ வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்வதற்குத் தேவையான 1500 கையெழுத்துக்களில் மூன்றில் ஒரு பங்கை சேகரித்துள்ளோம்; இம்மாநில விதிகளின்படி, வாக்குப் போடுவதற்குத் தகுதியுடையவர்களின் கையெழுத்துக்கள் இருந்தால் போதுமானது; அவர்கள் பதிவுசெய்த வாக்காளர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை; எனவே வாக்குச் சீட்டில் இடம்பெற எளிமையான விதிகள் உடைய மாநிலங்களில் இது ஒன்றாகிறது. அடுத்தமாதம், ஆகஸ்ட் 13 கடைசித்தேதி என்பதைக் கருத்திற்கொண்டு, இங்கு பெரிய முயற்சியைக் கொண்டுள்ளோம். நீங்கள் ஐயோவா பிரச்சாரத்தில் பங்கு பெற விரும்பினால், கீழேயுள்ள இணைப்பை கிளிக் செய்க.

ஐயோவாவில் கையெழுத்துக்களைச் சேகரிக்க உவந்து முன்வருக!

* * *

வாஷிங்டன்: ஆகஸ்ட் 24ம் தேதிக்குள் தேவையான பதிவு செய்யப்பட்டுள்ள 1000 வாக்காளர்களின் கையெழுத்துக்களை சேகரிக்கும் பணிக்கான மனுக்களில் கையெழுத்திடல் தொடங்கிவிட்டன. மனுத்தாக்கல் மற்றும் கையெழுத்து சேகரிப்பதற்கான விதிமுறைகள் இரண்டிலும் தடைகள் உள்ள தேர்தல் விதிமுறைகள், நம்முடைய ஆதரவாளர்களின் முயற்சிகளுக்கு சவாலாக உள்ளன; ஆயினும்கூட, நம்முடைய வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச்சீட்டில் இடம் பெறுவதற்கு நாம் முயன்று வருகிறோம். இதற்கு உங்களுடைய உதவி தேவை!

வாஷிங்டனில் கையெழுத்துக்கள் சேகரிக்க உவந்து முன்வருக!

* * *

மின்னேசோட்டா: வான் ஒகெனையும், லோரன்சையும் வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்வதற்கு இங்கு குறைந்தது 2000 கையெழுத்துக்கள் தேவை; இரட்டை நகரங்களான மின்னியாப்பொலிஸ்/சென்ட் போல் இவற்றில் மனுக்கள் தாக்கல் முறை ஏற்கனவே தொடக்கப் பட்டுவிட்டது. அமெரிக்காவில் சோசலிச இயக்க வரலாற்றில் மின்னேசோட்டாவிற்கு சிறப்பிடம் உண்டு; கடந்த காலத்தில் தொழிலாளர்களின் முக்கிய போராட்டங்களுக்கு இது ஒரு முக்கிய தளமாக இருந்திருக்கிறது. SEP, மின்னேசோட்டா வாக்காளர்கள் தேர்தல் தினத்தன்று எமது வாக்காளர்களுக்கு வாக்கு அளிக்கவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது; இதற்கு நாங்கள் உங்கள் உதவியை நாடுகிறோம்.

மின்னேசோட்டாவில் கையெழுத்து சேகரிப்பதற்கு உவந்து முன்வருக!

* * *

விஸ்கொன்சன்: இந்த இறுதிப் போர்க்களத்தை ஒத்த மாநிலத்தின் மனுத் தாக்கல் முறை இன்னும் தொடங்கப்படவில்லை. இது ஆகஸ்ட் 1 அன்று ஆரம்பமாகும். செப்டம்பர் 7ம் தேதிக்குள், பதிவான 2000 வாக்காளர்களின் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட வேண்டும். நீங்கள் எங்களுடைய விஸ்கொன்சன் மனுத்தாக்கல் முயற்சிக்கு உதவமுடியுமா எனத் தெரிவியுங்கள்.

விஸ்கொன்சனில் கையெழுத்துக்களைச் சேகரிக்க உவந்து முன்வருக!

Top of page