World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German interior ministers end separation of police and intelligence services

ஜேர்மன் உள்துறை அமைச்சர் போலீஸ், புலனாய்வு சேவைகளுக்கிடையிலான பிரிவை நீக்க முடிவு

By Martin Kreickenbaum
20 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஜூலை 9 ல் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் மேல்சபையில் நாட்டின் வரலாற்றிலேயே முன்கண்டிராத சமூகநலன்புரி முறையை தீவிரமாக வெட்டி கட்டுபடுத்துவது தொடர்பான "Hartz IV" மசோதா நிறைவேற்றியது. அதே நாளில், ஜேர்மன் மாகாணங்களின் உள்துறை அமைச்சர்கள் வடக்கு ஜேர்மன் நகரான Kiel இல் கூடி ஒருதொகை ஜனநாயக உரிமைகளை மேலும் கட்டுப்படுத்துவதற்கு உடன்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே நாளில் நடைபெற்றது தற்செயலாக நேர்ந்தது என்றாலும், சமூக ஜனநாயகக்கட்சி (SPD)-பசுமைக்கட்சி கூட்டணி மத்திய அரசாங்கம் கடைபிடித்து வரும் இரண்டு கொள்கைக்குமிடையில் அடிப்படை தொடர்பு அங்கே உள்ளது.

Hartz IV சட்டப்படி பல்லாயிரக்கணக்கான வேலையில்லாத மக்கள் ஏழ்மை நிலைக்குத்தள்ளப்படுவதும், ஜேர்மனியில் சமூக சமத்துவமின்மைகள் அதிகரிக்கவும் செய்யும். இந்த ஒப்பிடமுடியாத சமூக துருவமுனைப்படுத்தல் ஒருபக்கம் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதலை சுமத்துவதாகவும், மற்றொரு பக்கம், இந்தக் கொள்கைகளுக்கு பெருகிவரும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொள்வதற்காக போலீஸ் மற்றும் அரசாங்க பாதுகாப்பு சேவைகளின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டும் வருகின்றன.

மாநில அரச உள்துறை அமைச்சர்களாலும், மத்திய உள்துறை அமைச்சர் Otto Schily யாலும் (SPD) Kiel மாநாட்டில் எடுக்கப்பட்ட மிகமுக்கியமான முடிவுகளில் போலீசிற்கும், புலனாய்வு சேவைகளுக்கும் இடையில் நிலவிவந்த தனித்தன்மையை ஒழித்துக்கட்டப்பட்டது. இதில் காலத்தை வீணாக்காமல்: உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் பேர்லினில் அரசியல் சட்டத்தை பாதுகாப்பதற்கான மத்திய அலுவலகம் அமைக்கப்படும். (புலனாய்வு சேவைகளை இவ்வாறு அழைப்பார்கள்). இந்த அலுவலத்தின் பல்வேறு மாநில மற்றும் மத்திய ஏஜென்சிகள் தருகின்ற தகவல்கள் அனைத்தும் திரட்டப்பட்டு அவை ஆய்வு செய்யப்படும். இதனுள் அரச உள்நாட்டு புலனாய்வு சேவைகள் (Inlandsgeheimdienst), வெளிநாட்டு மத்திய புலனாய்வு சேவை (Bundesnachrichtendienst), இராணுவ புலனாய்வு சேவை (MAD) மற்றும் மத்திய போலீஸ் அமைப்பு (BKA) அதேபோல் மாநில போலீஸ் தகவல்கள் அடங்கும். இங்கே சேகரிக்கப்படும் தகவல்கள் மேலே கூறப்பட்ட அனைத்து ஏஜென்சிகளுக்கும் தரப்படுவதுடன், இந்த புதிய அலுவலகம் நேரடியாக புலனாய்வு துறைக்கு இந்த பிரச்சனை தொடர்பாக திடீர் சோதனைகள் கைது நடவடிக்கைகளுக்கான கட்டளைகளை பிறப்பிக்கும்.

உள்ளூர் போலீஸ் நிலையம் வரை ஜேர்மனியின் பாதுகாப்பு சேவை அலுவலகம் ஒவ்வொன்றிற்கும் இந்தப்புள்ளி விவரங்கள் கிடைக்கும். எனவே, ஒரே நடவடிக்கைகள் மூலம் 1949-ம் ஆண்டு ஜேர்மன் கூட்டாட்சி குடியரசு உருவாக்கப்பட்ட நேரத்தில் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்ட போலீஸ் மற்றும் புலனாய்வு அமைப்புக்களுக்கிடையே நிலவிவந்த பிரிவை ஒழித்துக்கட்டிவிட்டது.

பாதுகாப்பு சேவைகள் ஒருங்கிணைக்கப்படுவது அண்மையில் எடுக்கப்பட்ட ஏனைய நடவடிக்கையைப்போல் இஸ்லாமிய பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தால் எழுந்துள்ள ஆபத்துக்களால் நியாயப்படுத்தப்படுகிறது. உள்துறை அமைச்சர் மாநாட்டு தலைவர் Klaus Buß (SPD), இந்த நடவடிக்கை நியாயம்தான் என்று வாதாடியும், இஸ்லாமிய பயங்கரவாதம் ''காலவரையின்றி'' ''மிக உயர்ந்த'' அளவிற்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது என்றும், எனவே இதை பராமரிப்பது, தகவல்களை ஒரு இடத்தில் திரட்டி அதனை முழுமையாக பயன்படுத்துவது மிகவும் அவசியம்'' என்று கூறினார்.

எதிர்வரும் வாரங்களிலும், மாதங்களிலும் இஸ்லாமிய பயங்கரவாதம் தீவிரவாதம் தொடர்பாக தற்போது கிடைக்கின்ற தகவல்கள் அனைத்தும் ஒன்று திரட்டப்படும். என்றாலும், வரலாற்று ரீதியான அனுபவம் எடுத்துகாட்டுவதைப்போல், திரட்டப்படுகின்ற தகவல்கள் அனைத்தும் ஒரே ஒரு ''இஸ்லாமிய கோப்பு'' என்று அழைக்கப்படுவதில் மட்டுமே சேர்க்கப்படும் என்பது நிச்சயமற்றது.

போலீசாருக்கும், புலனாய்வு சேவைகளுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு நிலவுவது அடிப்படை அரசியலமைப்பு கொள்கைகளை இரத்து செய்வதாக அமைந்திருக்கிறது. இந்த ஒத்துழைப்பு, BKA தலைவர் Jörg Ziercke இன் வார்த்தையில் சொல்வதைப்போல் ஒரு ''தகவல் வலைபின்னலை'' வளர்க்கும். இது போன்ற கண்காணிப்பு சட்டபூர்வமாக தடுக்கப்பட்டதாக, இருந்தாலும் கூட, வீடுகளில் மக்கள் உரையாடுவதை போலீசாரால் பதிவுசெய்வதும், தொலைபேசியில் பேசுவதை ஒட்டுக்கேட்கும் தகவல்களையும், புலனாய்வு சேவைகள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இப்படி தனிமனிதர்களின் உரிமைகளுக்கு எதிராக அரசியல் சட்டம் தந்துள்ள பாதுகப்பையும் மீறி நடவடிக்கைகள் எடுப்பதற்கு அனுமதிப்பது மட்டுமல்லாமல் அது சம்மந்தமான புள்ளிவிவரங்களும் பல்வேறு அலுவலகங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பல்வேறு அதிகாரத்துவங்களுக்கிடையே அதிக நெருக்கமான தனிமனிதர்கள் மற்றும் இரகசிய தொடர்புகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்த உண்மையை அரசாங்கம் மறைப்பதற்குகூட முயலவில்லை. பவேரியாவின் உள்துறை அமைச்சர் Günter Beckstein (கிறிஸ்தவ சமூக யூனியன்சிஷிஹி) ஷிறிஞி மற்றும் CSU/CDU (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் இது CSU-யுடைய சகோதர அமைப்பு) சகாக்கள் சார்பில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ''புள்ளிவிவரங்கள் சுற்றுக்கு விடப்படுவது தனிப்பட்ட இலாக்காக்களுக்கு இடையில் மட்டுமே நடப்பதாக இருக்காது'' என்று அறிவித்தார்.

இதற்கு முன்னர் போலீஸ் மற்றும் புலனாய்வு சேவைகளுக்கிடையே நிலவிய பிரிவு அர்த்தமற்ற பகட்டு நாடகம் என்று ஷில்லி வாதிட்டார். ''போலீஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கிடையே சட்டப்படி பிரிவினை செய்யப்பட்டிருப்பது, தகவல் பரிவர்த்தனை அல்லது ஒத்துழைப்பை தடுப்பதாக இல்லை.'' என்று வார செய்தி இதழ் Stern க்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் அந்த சட்டம் ஒத்துழைப்பு தடுக்க மற்றும் தகவல் தொடர்பு பறிமாற்றத்தை தடையை நீக்க திட்டமிட இயற்றப்படவில்லை என்றால் எதை செய்வதற்காக அந்த சட்டம் இயற்றப்பட்டது?.

இந்தவகையில் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் Schily கருத்துக்கள் அளவிற்கு செல்லவில்லை. அவர் BKA வை சர்வ வல்லமை பொருந்திய அமைப்பாக உருவாக்க உறுதி கொண்டிருக்கிறார், இதில் புலனாய்வு சேவைகள் மற்றும் போலீஸ் துறைகளில் அதிகாரம் ஒன்றாக சேர்க்கப்படும்.

ஷில்லியின் திட்டப்படி, BKA எதிர்காலத்தில் தற்காப்பு பணிகளையும் மேற்கொள்ளும். இதுவரை BKA அத்தகைய பணிகளை மேற்கொள்வதற்கு திட்டவட்டமான தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. திட்டவட்டமான குற்றங்கள் தொடர்பாக அரச வழக்குதொடுனர் அலுவலகம் ஏற்பாடு செய்கிற பணிகளை மட்டுமே மேற்கொள்ளவேண்டும். தடுப்பு பணிகளும் தரப்பட்டால் BKA எல்லையற்ற அதிகாரங்களை படைத்ததாக ஆகிவிடும். ஒரு இரகசிய சேவையைப் போன்று BKA கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதுடன், போலீஸ் ஏஜென்சியை போன்று நீதித்துறை அதிகாரங்களும் கிடைக்கின்றன.

பிரிவு சட்டத்தின் தோற்றம்

தற்பொழுது பொருத்தமற்றதாக கருதப்படும் போலிசாருக்கும், புலனாய்வு சேவைகளுக்கும் இடையே பிரிவு 1949 ஏப்ரல் 14ல் மூன்று மேற்கு கூட்டணி வல்லரசுகளும் எழுதிய ''போலீஸ் கடிதத்தை'' தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்தக்கடிதம் ஜேர்மன் நாடாளுமன்ற கவுன்சிலுக்கு, புதிய கூட்டாட்சி குடியரசின் அரசியல் சட்டம் தொடர்பாக எழுதப்பட்டதாகும். அந்தக் கடிதம் கூட்டணி நாடுகள் தங்களது கடிதத்தில் எதிர்கால புலனாய்வு சேவைகளுக்கு ''போலீஸ் அதிகாரம் எதுவும் இருக்ககூடாது'' என்றும், மாநில அல்லது உள்ளூர் போலீஸ் இலாக்காக்களுக்கு மேலாக மத்திய போலீஸ் ஏஜென்சி எதற்கும் அதிகாரம் இருக்ககூடாதென்று சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இந்த பிரிவு சட்டம் அரசியல் சட்ட அந்தஸ்தைப் பெற்றது.

நாஜி ஆட்சி அனுபவங்களைக் கொண்டு இந்த நெறிமுறைகள் வகுப்பப்பட்டன, அவர்கள் பல ஆண்டுகள் முயன்று, மக்களை அச்சுறுத்தி பணியவைப்பதற்காக சக்திவாய்ந்த மத்திய பாதுகாப்பு சாதனங்களை பரந்தளவில் உருவாக்கியிருந்தனர்.

வைமார் குடியரசுக்காலத்தில் கூட அரச கண்காணிப்பு மற்றும் வழக்குத்தொடுக்கும் அங்கங்களின் அதிகாரங்கள் சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்கள் உதவியோடு பெருமளவில் விரிவுபடுத்தப்பட்டது. 1933ல் ஜனவரியில் நாஜிக்கள் பதவிக்கு வந்ததும், ஜேர்மன் குடியரசின் ஒவ்வொரு மாநிலத்திலும் நாச வேலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதுள்ள இரகசிய உளவுபிரிவு போன்ற ஒரு அரசியல் போலீஸ் செயல்பட்டு வந்தது. 1933 ஏப்ரலில், நாடாளுமன்றத்தில் தீவிபத்து ஏற்பட்ட பின்னர், அந்த நேரத்தில் பிரஷ்ய உள்துறை அமைச்சராக இருந்த Hermann Göring இரகசிய மாநில போலீசான கெஸ்டபோவை (Gestapo) உருவாக்கினார். 1936 ஜூனில் Heinrich Himmler எல்லா அரசு போலீஸ் துறைகளையும் மையப்படுத்தி கெஸ்டபோவின் அதிகாரங்களை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தினார்.

அதற்குப் பின்னால், கெஸ்டாபோ போலீசோடு இணைக்கப்பட்டு பாதுகாப்பிற்கான போலீஸ் துறை (Sipo) உருவாக்கப்பட்டது. இறுதியாக, 1939 செப்டம்பர் இரண்டாவது உலக போர் ஆரம்பத்தின்போது, இந்த அமைப்பு மத்திய பாதுகாப்பு துறைகளோடு இணைக்கப்பட்டது (RSHA).

இப்படி அரசாங்கத்தின் பாதுகாப்பு அதிகாரங்கள் அனைத்துமே கெஸ்டாபோவில் இணைக்கப்பட்டதால் நாஜி ஆட்சியின் போது அது சக்திவாய்ந்த அடக்குமுறை ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. 1945இற்கு பின் ஜேர்மனியில் அதேபோன்ற அதிகார குவியல் ஒரே பாதுகாப்பு ஏஜன்சியிடம் சென்றுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் ''போலீஸ் கடிதம்'' எழுதப்பட்டது. தற்போது Kiel பகுதியில் நடைபெற்ற உள்துறை அமைச்சர்கள் மாநாடு இந்தக் கருத்துக்களுக்கு விடைகொடுத்து அனுப்புவதாக அமைந்துவிட்டது.

கெஸ்டாபோ அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் மீது திட்டமிட்டு ஏவிவிட அனைத்து வகையிலும் பயன்படுத்தப்பட்டது. 1939 வரை, பிரதானமாக தொழிலாளர் அமைப்புக்களை சேர்ந்த தொழிலாளர்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இது பயன்படுத்தப்பட்டது. அவர்கள் குறிவைக்கும் நபர்கள் கைது செய்யப்பட்டனர், வழக்கறிஞர்கள் வைத்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது, காலவரையின்றி ''பாதுகாப்புக் காவலில்'' வைக்கப்பட்டனர். சித்ரவதையை அடிக்கடி பயன்படுத்தி ஒப்புதல் வாக்கு மூலங்களும் அறிக்கைகளும் பெறப்பட்டன.

''தடுப்புக்காவல்'' என்ற சொல், 1933 பெப்ரவரியில் நாடாளுமன்ற தீ விபத்து பிரச்சனையை ஒட்டி வெளியிடப்பட்ட கட்டளையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது, அது தேசிய சோசலிச ஆட்சியை ஸ்தாபிக்கும் நோக்குடன்தான் அறிமுகப்படுத்தப்பட்டது, இது பிறப்பிக்கப்பட்டு நான்கு மாதங்களில் 26,000 அரசியல் கைதிகள் ''தடுப்புக்காவலில்'' வைக்கப்பட்டனர்.

1944ல் கெஸ்டோபோ இரகசிய போலீசில் 32,000 பேர் பணியாற்றினர். அரசாங்கத்தின் எதிரிகள் மற்றும் அரசிற்கு எதிரான தகவல் பறிமாற்றங்களை கண்டுபிடிப்பதில் மிகத்திறமையாக செயல்பட்ட அமைப்பாகும். பல்லாயிரக்கணக்கானோர் தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டு முகாம்களில் கூட்டமாக சிறை வைக்கப்பட்டனர்.

பாதுகாப்பு சாதனங்கள் அனைத்தும் ஒன்றாக மையப்படுத்தி கொண்டுவரப்பட்டு அதில் புலனாய்வு சேவைகளும், போலீசாரும் இணைந்து செயல்படுவதால் ஏற்பட்ட கசப்பான வரலாற்று அனுபவங்களுக்கு அப்பாலும், இன்றைய தினம் சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்கள் அந்த கசப்பான அனுபவங்களை துச்சமாக தூக்கியெறிந்திருக்கின்றனர்.

இந்த வரலாற்றை புறக்கணித்துவிட்டு ஷில்லி ஸ்டர்ன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தனது மையப்படுத்திய நடவடிக்கைகளை நியாயப்படுத்தியுள்ளார். ''நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய தந்தையர்கள் இன்றைய தினம் இஸ்லாமிய பயங்கரவாதம் எழுப்பியுள்ள ஒரு அச்சுறுத்தலைப் போன்ற சூழ்நிலையை கற்பனை கூட செய்துபார்த்திருக்க முடியாது. இதுதான் இன்றைக்கு நான் எடுத்துள்ள நடவடிக்கைகளின் அடிப்படை. நான் 50 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய சூழ்நிலையை கருதிப்பார்க்கவில்லை'' என்று கூறினார்.

ஜேர்மன் அரசியல் சட்டத்தை அதன் கொள்கைகளை இவ்வளவு தெளிவாக துச்சமாக மதிக்கின்ற முன்னணி அரசியல்வாதிகள் அபூர்வம்வம்தான். அதே நேரத்தில், அவரது அறிக்கை அவரது ஆட்சியின் கொள்கைகள் இரத்தினச்சுருக்கமாக எடுத்துக்காட்டுகிறது. ''பயங்கரவாத்திற்கு எதிரான போரின்'' பெயரால் கடந்த சில ஆண்டுகளில் ஷில்லியின் நிலுவை கணக்குகள் தடுமாறியுள்ளது.

அமைப்புகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன, வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு பேச்சுரிமையும், எழுத்து சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. தஞ்சம் கோரும் உரிமை ஏறத்தாழ இரத்துச்செய்யப்பட்டு விட்டது. தனிநபர் தொடர்பான குறிப்புகள் அனைத்து பகுதியையும் ஷில்லியின் அலுவலகத்தில் பதிவாகும். பொதுக்கூட்டம் நடத்தும் உரிமைகளுக்கான கட்டுப்பாடுகள் ஏற்கனவே வந்து கொண்டிருக்கின்றன. இப்போது போலீஸ் மற்றும் புலனாய்வு அமைப்புக்களுக்கு இடையிலான பிரிவு இரத்து செய்யப்பட்டு மத்திய பாதுகாப்பு சாதனங்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றது. ஜேர்மனியின் பழமைவாத எதிர்கட்சியான CDU/CSU நாடாளுமன்றத்தில் ஒரு பாதுகாப்பு காவல் மசோதாவை (Security detention bill) கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது, இதைத்தான் பல வாரங்களாக தீவிரமாக ஷில்லி வலியுறுத்திவருகிறார். ''தடுப்புக்காவலின்'' இந்த வழி கெஸ்டபோவிற்கு வெகுதூரத்தில் இல்லை.

இப்படி மிகப்பெரும் எடுப்பில் அரசாங்கத்தின் அடுக்குமுறை சாதனம் கட்டப்பட்டு வருவதற்கும், அச்சுறுத்தும் பயங்ரவாதத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. சமூக ஜனநாயக கட்சி சிதைந்துகொண்டு வரும் நிலைமைகளின் கீழ், பவேரியா முதலமைச்சர் Edmund Stoiber (CSU) போன்ற முதலாளித்துவ பிரிவுகளைச் சார்ந்தவர்கள் நாடு முழுவதிலும் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் என்று அச்சம் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு நேசநாட்டு படைகளின் ஆதரவோடு 1945இன் பின் கொண்டுவரப்பட்டு நிலைநாட்டப்பட்ட ஜேர்மனியின் ஜனநாயகக் கட்டமைப்புகளும், பொருளாதார மறுமலர்ச்சியால் உருவாக்கப்பட்ட நிலைமைகளும், இன்றைய தினம் ஜேர்மனியின் நலன்புரி முறையை சிதைப்பதை தொடர்வதற்கும், அதேபோல பரந்த மக்களது எதிர்ப்புக்கு எதிராக போராடவும் தியாகம் செய்யப்படுகின்றது. இதே காரணத்தினால் தான் ஜேர்மனியின் ஆளும் செல்வந்த தட்டு போலீஸ் மற்றும் இராணுவப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கான குரலை ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஜூன் இறுதியில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் ''ஒட்டுமொத்த பாதுகாப்பு கருத்து'' தொடர்பாக உடன்பட்டது. 25,000 பேர் கொண்ட உள்நாட்டு பாதுகாப்பு படையை உருவாக்கும் கோரிக்கையில் உடன்பாடு ஏற்பட்டது. இராணுவத்தைப்போன்று ஆயுதம் தாங்கிய இந்த படை நாடுமுழுவதிலும் 50 பகுதிகளில் அமைக்கப்படும். இந்த ''தேசிய காவலர்கள்'' பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கல்ல, மாறாக உள்நாட்டில் பாரியளவில் நடைபெறும் கண்டனங்கள் பேரணிகளை சமாளிப்பதற்கு பயன்படுத்தப்படும். இந்த வகையில் இவர்களை ''கெஸ்டபோவோடு மட்டுமல்ல 1918ம் ஆண்டு நடைபெற்ற புரட்சியை ஒடுக்கிய வைமார் குடியரசுக் காலத்தில் இருந்த சுதந்திரமான கொலைப்படைகளுடனும் (Freikorps) ஒப்புநோக்கத்தக்கது. 1923ல் தேசிய இராணுவத்தோடு இணைக்கப்பட்ட சுதந்திரமான கொலைப்படை றூவர் செம்படை இராணுவத்தை ஒழுங்கமைத்த ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாளர்களை முறியடிக்க மிகக் கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சமூக ஜனநாயக கட்சி - பசுமை கட்சி அரசாங்கம் ஜேர்மனியில் கடைபிடித்துவரும் கொள்கைகள் இத்தகைய வலதுசாரி சக்திகளைத்தான் ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றன.

Top of page