WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Motion to dismiss Illinois Democrats' challenge to SEP candidate
சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் நிறுத்தப்படக்கூடாது என்ற இல்லினோய் ஜனநாயகக்
கட்சிக்காரர்களின் வாதுரையை தள்ளுபடி செய்யக் கோரி தீர்மானம்
By Jerry White
22 July 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
புதன் கிழமை அன்று சாம்பெயின் மாவட்ட தேர்தல் குழுவின் முன், சோசலிச சமத்துவக்
கட்சியின் இல்லினோய் மாநில பிரதிநிதிக்கான வேட்பாளர் ரொம் மக்கமன் உடைய வழக்குரைஞர், மக்கமன்னுடைய
தேர்தல் வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டிருந்த நூற்றுக் கணக்கான சட்டபூர்வ வாக்காளர்களின் கோரிக்கையை
மறுக்க வேண்டும், அவருடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும் என்று மோசடித்தனமான
முறையில் ஆட்சேபித்து, ஜனநாயகக் கட்சி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடிசெய்யக் கோரும் தீர்மானத்தை
சமர்ப்பித்துள்ளார்.
இந்த "அகற்றித் தள்ளுபடி செய்யும் மனுக் கோரிக்கையை" இல்லினோய் மாநிலத்தில்
வாக்குச் சீட்டிற்கான அங்கீகாரம் பற்றிய முக்கிய வழக்குரைஞர்களில் ஒருவரான ஆண்ட்ரூ ஸ்பைகெல்-ஆல் எழுதப்பட்டது.
இவர் தற்பொழுது இல்லினோய்சின் லிபரேரியக் கட்சியின் (Libertarian
Party) பொது வழக்குரைஞர் ஆவார்;
இல்லினோய் ஜனநாயகக் கட்சியினரால் தேர்தல் மனுக்கள் சவாலுக்குட்படுத்தப்பட்ட, ஜனாதிபதி பதவிக்கான சுதந்திரமான
வேட்பாளராகிய ரால்ப் நாடெரையும் இவர்தான் பிரதிநிதித்துவம் செய்கிறார்.
ஜூலை 6 அன்று மாவட்டத் தேர்தல் குழு மக்கமன்னுடைய வழக்கில், ஜனநாயகக்
கட்சியினர் சவால் விட்டுள்ள 1000க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களையும் வரி வரியாக பரிசீலனை செய்யுமாறு
உத்தரவு இட்டுள்ளது. ஜூலை 27 அன்று நடக்க இருக்கும் விசாரணையில் தேர்தல் குழு இறுதித் தீர்ப்பைக் கூறவிருக்கிறது
ஸ்பைகலினால் அளிக்கப்பட்டுள்ள மன்ற தீர்மானக் கோரிக்கை மனு, சாம்பெயின்
மாவட்ட ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவரான ஜெரால்டைன் பார் தொடுத்துள்ள ஆட்சேபனை மனு, "நல்ல
தன்மையற்று அளிக்கப்பட்டுள்ளது, தடுக்கப்பட்டுள்ள ஏராளமான ஆட்சேபனைகளை கொண்டுள்ளது, ...சாம்பெயின்
மாவட்ட வாக்காளர் பதிவுச் சான்றுகளை நல்ல முறையில் ஆராயாமல் தயாரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கிறது.
மாநிலத் தேர்தல் வாரியத்தின் விதிகளின்படி, சாம்பெயின் மாவட்ட தேர்தல்வாரியம் "நல்லெண்ண அடிப்படையில்
இல்லாத எதிர்ப்புக்களை பொறுத்துக் கொள்ளககூடாது" என்று ஸ்பைகெல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பார்ரினுடைய எதிர்ப்பு தயாரிக்கப்பட்டதும், இப்பொழுது குழுவின் முன்
வழக்காடுவதற்கு வந்துள்ள கோரிக்கையும் "வரிகள் செலுத்துவோர் செலவில் மாநில அரசாங்க ஊழியர்களால்,
தேர்தல் விதிமுறை, மற்றும் அண்மையில் இயற்றப்பட்ட அரசாங்கச் சட்டத்திற்குட்டபட்ட அரசின் ஊழியர்கள்
நன்னடத்தை விதிமுறையையும் மீறுவதாக உள்ளது என்றும்" அம் மனு கூறுகிறது. முதலில்
SEP
மனுக்களை பார்வையிட்டு, நகல் எடுத்த எலிஜபெத்
பிரெளனும் பிரெண்டன் ஹோஸ்டெட்லரும் , இரு அரசு ஊழியர்களும்
House Democratic
ஊழியர்கள், பிந்தையவர் மன்றத் தலைவர் மைகேல் மாடிகனின் கீழ் நேரடியாக வேலைபார்ப்பவர் ஆவார்.
மூன்றாவது அரசாங்க ஊழியரான கிரிஸ்டன் பாயர், ஜனநாயகக் கட்சியின் சார்பில் இத்தகைய மனுக்களை
"சரிபார்ப்பவர்கள்" தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பவர், ரொம் மக்கமனால் எதிர்க்கப்படும்
தற்போதைய மாநில பிரதிநிதி
Naomi Jakobsson இன் சட்டமன்ற
பிரிவு உதவியாளர் ஆவார்.
பார்ரினால் முதலில் எழுப்பப்பட்டுள்ள எதிர்க்கருத்துக்கள் பற்றிய ஏமாற்று வலைத்
தகவல்கள் பற்றி மன்றத் தீர்மானக் கோரிக்கைமனு ஒரு பகுப்பாய்வை தந்துள்ளது. பொதுத் தேர்தலில் தோமஸ்
மக்கமன் வேட்பாளராக நிற்பதற்குத் தேவையான குறைந்த பட்ச வாக்காளர் எண்ணிக்கை 1409 என்று
ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வாமான கூற்று தவறாகக் கூறுகிறது என்று அது ஆரம்பிக்கிறது; உண்மையில்
தேவையான குறைந்த பட்ச வேட்பாளர் எண்ணிக்கை 1325 தான், அதாவது முந்தைய பொதுத் தேர்தல்களில்
103வது மாவட்டத்தில் போடப்பட்ட மொத்த வாக்குகளில் 5 சதவிகிதத்திற்கு சமமான 1325 தான்.
"பலகாலமும் அரசியலில் இருக்கும் பார் போன்றவர்கள் எளிதில் கடந்த தேர்தலில் போடப்பட்ட வாக்குகளை
அறிந்திருக்க முடியும் ... அதன் பின்னர் எளிதான முறையில் கணக்குப் போட்டு தேவையான, சரியான எண்ணிக்கை
என்ன என்று அறிந்திருக்க முடியும்" என்று மனு குறிப்பிட்டுள்ளது.
பார் ஒரு தப்புக் கணக்கைப் போட்டுவிட்டார் என்று வைத்துக்கொண்டாலும்,
"இவ்வம்மையாருடைய நல்லெண்ணமற்ற தன்மை இன்னும் தெளிவாக அவருடைய மனுவின் 5 லிருந்து 12 பத்திகளில்
தெளிவாகிறது; வேண்டுமென்றே இவர் தேவையான குறைந்த பட்ச வாக்காளர்கள் எண்ணிக்கையை உயர்த்த
முயன்றுள்ளார் என்பதை ஐயத்திற்கிடமின்றித் தெளிவாக்குகின்றன" என்று மன்ற தீர்மானக் கோரிக்கை மனு
கருத்துரைக்கிறது.
பார்ரினால் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்சேபனைகள் பற்றித் தெளிவான பகுப்பாய்வை
ஸ்பைகெல் கொடுத்துள்ளார்; இது அந்த ஆட்சேபனைகள் எவ்வளவு அற்பத்தன்மையானவை என்பதை நன்கு
தெரிவிக்கின்றன. "மனுவில் காட்டப்பட்டுள்ள முகவரிகளில் கையெழுத்திட்டவர்கள் பதிவாகவில்லை" என்பது முதல்
ஆட்சேபனை. ஜனநாயகக் கட்சியினர் இந்த அடிப்படையில் 1000 கையெழுத்துக்களுக்கு எதிர்ப்பு
தெரிவித்தபோதிலும்கூட, சாம்பெயின் மாவட்ட வாக்காளர் பதிவேட்டைப் பரிசீலனை செய்தால் குறைந்தது 464
பேராவது அதே விலாசத்தைத்தான் வேட்பு மனுவிலும், தங்கள் வாக்களாளர் பதிவு அட்டையிலும் குறித்துள்ளனர்
என்று தெரியவரும். "எனவே பாரும் அவருடைய உதவியாளர்களும் உண்மையில் அச்சான்றுகளை பரிசீலனை
செய்யவில்லை என்பதும், குறைந்த பட்சம் 464 வாக்காளர்களைப் பொறுத்தவரையிலாவது நன்னம்பிக்கை
ஆட்சேபனைகளை செய்தார் (இந்த நிலைமைதான் உள்ளது) என்பதும் ஒப்புக்கொள்ளப்படவேண்டும்" என்று மனு
கூறுகிறது.
SEP
ஆரம்பத்தில் கொடுத்துள்ள பட்டியலில் இருக்கும் 2003 பேரில் 982 வாக்காளர்கள் ஜனநாயகக் கட்சியினரால்,
ஆட்சேபனை செய்யப்படவில்லை. ஜனநாயகக் கட்சியினரின் ஆட்சேபனைக்குட்பட்ட 464 தெளிவான
வாக்காளர் எண்ணிக்கையை மொத்தச் சரியான கையெழுத்துக்களின் எண்ணிக்கையில் சேர்த்துக் கொண்டால்,
எண்ணிக்கை 1,446 என்று குறைந்தபட்சத் தேவைக்கு மிகவும் அதிகமாகவே வந்துவிடுகிறது.
பாரின் கெட்ட நோக்கம் இந்தச் சரியான கையெழுத்துக்களுக்கு இவ்வம்மையார்
கூறும் ஆட்சேபனைகளிலிருந்து மேலீடாக தோன்றவில்லை, அது ஜனநாயகக் கட்சியினரின் "பார்வையாளர்களால்",
மாவட்ட எழுத்தர் அலுவலகத்தில் அவர்கள் முறையான கையெழுத்துக்களையும் சரியாக இணைந்திருந்த போதிலும்
கூட, அவர்கள் ஆட்சேபனையை தொடர்ந்து கூறிய ஆரம்ப பதிவுச்சான்றுகள் சரிபார்ப்பின் பொழுது, அவர்களால்
பயன்படுத்தப்பட்ட வேண்டுமென்றே முட்டுக்கட்டை போடும் வழிமுறைகளால் ஐயத்திற்கிடமின்றி நிலைநாட்டப்பட்டது
என மனு குறிப்பிடுகிறது. (See
WSWS article, "A travesty of democracy in Illinois Democrats conspire
against voters in bid to remove SEP from ballot).
இதற்கு மிகவும் அப்பட்டமான முறையில் இருக்கும் உதாரணம், "ஒரு பெயரை,
வேட்பாளர் தோமஸ் மக்கமன்னுடைய பெயரையே, அவர்கள் தொடர்ந்து ஆட்சேபனைக்கு உட்படுத்தியது ஆகும்;
அப்பெயர், கொடுக்கப்பட்டிருந்த விலாசத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்ததோடு மட்டுமின்றி, அதேமுறையிலும்,
அதே விலாசத்திலும் 105 வேட்பு மனுக்களிலும் இருந்திருந்தது."
எழுத்தர் அலுவலகத்தில் இருந்து ஆய்வாளர்களில் ஒருவருடைய பெயர் மக்கமனுடைய
மனுவில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டபோது மற்றொரு நிகழ்வு நடந்தது.
"கையெழுத்திட்ட நபர் அங்கேயே இருந்தபோதிலும், தன்னுடைய கையெழுத்தையும், விலாசத்தையும்
சரிபார்த்தபின்னரும் கூட, பார்ரின் பார்வையாளர்கள் அந்த வாக்காளர் பற்றிய ஆட்சேபனையை தொடர்ந்தனர்"
என மனு கூறுகிறது.
சான்றுகளை பற்றிய துவக்க ஆய்வும் ஜனநாயகக் கட்சியினர் அம்முறையை தவறாகக்
கையாண்டதால் கேலிக்கூத்தாயிற்று. ஜனநாயகப் பார்வையாளர்களுக்கு, சான்றுகள் ஆய்வு ஆட்சேபனைக்கான
ஆதாரம் ஏதும் இல்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்த போதிலும், அவர்களுக்கு அனைத்தையும்
ஆட்சேபனைக்குட்படுத்தக்கூடிய வகையில் அச்சிடப்பட்ட குறிப்புக்கள் கொடுக்கப்பட்டு இருந்தது கேலிக்கூத்தை
அடிக்கோடிட்டுக் காட்டியது.
முழு ஆட்சேபனை மனுவும் தீய எண்ணத்தில் உள்ளதால், இல்லினோய் தலைமை
நீதிமன்றத்தின் 137 வது விதி குறிப்பிட்டுள்ள வகையில் பாருக்கு எதிராக தடைகள் விதிக்கப்படவேண்டும் என்று
SEP
வழக்குரைஞர் வாதிட்டுள்ளார். சட்டத்தின்படி அதற்கான தண்டனைகள், வழக்கிற்கான முழுச்செலவினங்கள், மற்றும்
வழக்குரைஞர் கட்டணம் தொகை முதலியவை உண்மையை ஆராயாமல், நல்லெண்ணம் இல்லாமல் ஒரு சட்டக் கருத்தை
முன்வைத்துக் கூற்றை எழுப்பினால் வழங்கப்படலாம்.
"வாக்குச்சீட்டில் பதிவு செய்து கொள்ளும் உரிமை தேர்ந்த உரிமையாதலின், எளிதில்
அது சட்ட பூர்வமாக மறுக்கப்படக் கூடாது. (Sullivan
vs.Couny Officers Electoral Bd of Du Page County, 225 Ill. App. 3rd 691
(2nd Dist.1992).
இருந்தும் கூட ஆட்சேபனை கூறுகிறவர் இந்தக் குழுவை இதைத்தான் செய்யுமாறு தன்னுடைய ஆட்சேபனையாளர்
மனுவை தாக்கல் செய்வதின் மூலம் செய்துள்ளார்; இதில் தக்க தகுதி இல்லை; ஆகவே மனுவைத் தள்ளுபடி
செய்வதுடன், அசாதாரணமான முறையில் தடைகள், விதிக்கப்படவேண்டும்."
அரசாங்கப் பணியாளர்களைப் பயன்படுத்தல்
இவ்விதத்தில் ஆட்சேபனைகளில் கடைசிப் பிரிவு தள்ளுபடி செய்யப்படலாம் என்பது
ஜனநாயகக் கட்சி அரசாங்க ஊழியர்களை தவறாகப் பயன்படுத்திய அடிப்படையில் அமைந்துள்ளது. "ஆட்சேபனை
தெரிவிப்பவரின் மனுத் தயாரிப்பு, மற்றும் ஆட்சேபனைகளின் மீதான நடந்து கொண்டிருக்கும் வழக்கின் தயாரிப்பு,
குறைந்த பட்சம், கிறிஸ்டின் பாவெர், எலிசபெத் பிரெளன், பிரெண்டன் ஹோஸ்டெட்லர் என்ற மூன்று அரசாங்க
அலுவலர்களால் தயாரிக்கப்பட்டது, தயாரிக்கப்பட்டு வருகிறது -- இவை வரிப்பணம் செலுத்துவோருக்கு இழப்பை
ஏற்படுத்துவதோடு, தேர்தல் தலையீட்டுச் சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது. தேர்தல் தலையீட்டுச் சட்டம்,
பொது நிதி அரசியல், மற்றும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு ஒதுக்கப்படுவதையோ அல்லது எந்த ஒரு வேட்பாளர்,
அரசியல் அமைப்புக்கள், இவற்றிற்கு ஒதுக்கப்படுவதையோ தடை செய்கிறது. குற்றப் பிரிவின் அடிப்படையில்
இவற்றிற்கான தண்டனைகள் வழங்கப்படும்.
Elction Code at 10 OP ILCS
5/9-25/1.
பார், மற்றும் இத்திட்டத்தில் அவருடைய ஆலோசகர்களான மைக்கேல் மாடிகன்
மற்றும் இல்லினோய் ஜனநாயகக் கட்சியினர் நடத்தை வாக்களிப்பதைத் தடுத்தல் அல்லது வேட்பாளரை
ஆதரிப்பது கூடாது (10
ILCS 5/29-4),
அரசியலமைப்பில் கூறப்பட்டுள் உரிமைகளை மறுத்தல் (10
ILCS 5/2917),
வாக்குப் போடுவதைத் தடுக்க சதிசெய்தல்
(10 ILCS
5/29-18)" என்று கூறியுள்ள
தடைகளை மீறியிருக்கிறது.
ஒரு குற்றஞ்சார்ந்த சுமை சுமத்தப்படவேண்டுமா என்பதை ஓர் உயர் மன்றம்
தீர்மானிக்கவேண்டும் என்றிருந்தாலும், மேற்கூறிய விதிமுறைகளின் வரம்புகளை மீறியதற்காக, சாம்பெயின் மாவட்டத்
தேர்தல் குழு, ஜனநாயக்கட்சியின் ஆட்சேபணையைத் தள்ளுபடி செய்தல் என்பது "மக்கமனுக்கு கொடுக்கவேண்டிய
தக்க பரிகாரம்" ஆகும் என்று மனு வாதிடுகிறது.
State Officials and Employees Ethics Act
- அரசாங்க அதிகாரிகள், அலுவலர்கள் நெறிமுறைச் சட்டம் 5
ILCS
430/5-15 அரசு அலுவலர்களை
தடைசெய்யப்பட்ட அரசியல் வேலையை அரசாங்க நேரத்தில் செய்யக்கூடாது என்று கூறுகிறது. "பார் மனுவைத்
தயாரித்தலில் ஈடுபட்ட அளவிற்கும், பார்ரின் மனுவை, அரசு ஊழியர்கள் சான்றுகளை ஆராய்ந்த நிலைக்கும்,
வழக்குத் தொடர்பான மற்ற அம்சங்களை பரிசீலித்த அளவிலும், அவர்கள் அரசாங்க அதிகாரிகள், மற்றும்
ஊழியர்கள், அரசாங்க நேரத்தில் செய்திருந்தால், அரசாங்க அதிகாரிகள், அலுவலர்கள் நெறிமுறைச் சட்டத்தை
மீறியவர்கள் ஆவர்."
மக்கமன் ஏற்கனவே தலைமை ஆய்வாளரை இந்தத் தீவிரமான, தக்க
குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என்று மனு குறிப்பிட்டது.
(
பார்க்க: WSWS article,
"SEP demands investigation: Letter to Illinois Inspector General from
Tom Mackaman".) ஆயினும் கூட,
சாம்பெயின் மாவட்ட தேர்தல் குழுவிற்கு "பார் மற்றும் கிறிஸ்டின் பாவெர், எலிசபெத் பிரெளன் மற்றும்
பிரெண்டன் ஹோஸ்டெடெலர், மற்றும் இந்த விஷயத்தில் ஈடுபட்டிருந்த, ஈடுபட்டிருக்கும், எந்த அரசாங்க
அதிகாரியாயினும், அவர்களுக்கு ஆணையிட்டு உடனடியாக அவர்கள் குழுமுன் வரவேண்டும் என்றும், அனைத்து நேர,
சம்பளச்சான்றுகளையும் கொண்டுவந்து தடுக்கப்பட்ட செயல்களில் அவர்கள் மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு
ஈடுபட்டார்களா என்பதை அறிய சமர்ப்பிக்கவேண்டும்" என்று ஆணையிடும் அதிகாரம் உண்டு என்றும் வழக்கறிஞர்
வாதிட்டுள்ளார்.
இறுதியாக, ஆட்சேபனை மனுவை அகற்றித் தள்ளுபடி செய்யக் கோரும் மனு,
மாவட்ட தேர்தல் குழுவை ஓர் ஆணையை வெளியிட்டு தோமஸ் மக்கமன்னுக்கும்
SEP
க்கும் கீழ்க்கண்ட பரிகாரங்களை அளிக்குமாறு கோருகிறது;
a.
பார், மற்றும் இந்த விஷயத்தில் ஈடுபட்ட, ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அரசாங்க அலுவலரும்
ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிப்பதுடன், அவர்கள் அனைத்து நேர, மற்றும் சம்பளச் சான்றுகளைக்
கொண்டுவரவேண்டும் என்றும் இது தடைசெய்யப்பட்ட அரசியல் நடவடிக்கையில் அவர்கள் வரிசெலுத்துவோர் இழப்பில்
ஈடுபட்டனரா என்பதை நிர்ணயிக்க உதவும் என்று கோரப்படுகிறது.
b.
ஆட்சேபனை தெரிவித்தவரின் மனு அற்பமானது என்றும் அது தீய எண்ணத்துடன் பதிவு செய்யப்பட்டு,
வழக்காடப்படுகிறது என்பதைக் காணல் வேண்டும்;
c.
மேலும் 137 வது விதியின் படி வேட்பாளருக்கு ஆவன செய்யவேண்டும் என்றும்;
d. ஆட்சேபணையாளர்
மனுவை மறுத்து தள்ளுபடி செய்வதுடன், பாரை அனைத்துச் செலவுகள், வழக்குச்செலவுகள், வழக்குரைஞர் கட்டணத்
தொகை ஆகியவை வேட்பாளர் இந்த மனுவின் பாதுகாப்பிற்காகச் செலவிட்டதை வழங்குமாறு உத்தரவு இடவேண்டும்;
e. தோமஸ்
மக்கமன்னுடைய பெயர் நவம்பர் 2, 2004 பொதுத் தேர்தலில் 103 வது பிரதிநிதிகள் தொகுதியில் வாக்குச்
சீட்டில் அச்சிடப்பட வேண்டும் என்று அறிவிக்க வேண்டும்;
f.
இச்சூழ்நிலையில் வேட்பாளருக்கு இன்னும் கூடுதலான, தேவையான பரிகாரங்களை, குழு எவை தக்கவை எனக் கருதிகிறதோ
அவற்றை வழங்கவேண்டும் என்றும் கோரப்படுகிறது.
* * *
ஜனநாயகக் கட்சியால் எழுப்பப்பட்ட ஆட்சேபனையை நிராகரித்து ரொம் மக்கமனை
வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சாம்பெய்ன் மாவட்ட தேர்தல் வாரியத்தை அழைக்குமாறு
சோசலிச சமத்துவக் கட்சியானது உலக சோசலிச வலைத் தள வாசகர்களையும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பவர்களையும்
கேட்டுக் கேட்டுக்கொள்கிறது. தயவு செய்து அனைத்து மின் அஞ்சல்களையும் அனுப்ப:
mail@champaigncountyclerk.com
தயவு செய்து மின்அஞ்சல்களின் படிகளை உலக சோசலிச வலைத் தளத்திற்கு
இம்முகவரியில் அனுப்புக:editor@wsws.org.
சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்துக்கு ஆதரவாக நிதி உதவ -donate
online
See Also :
இல்லினோய்சில் ஜனநாயகத்தின்
ஒரு கேலிக்கூத்து
SEP யை வாக்குப்பதிவிலிருந்து
நீக்க வாக்காளர்களுக்கு எதிராக ஜனநாயகக் கட்சியினர் சதி
மூன்றாவது கட்சி பிரச்சாரத்தின்
மீது ஜனநாகக் கட்சி தாக்குதலை நிறுத்து!
SEP வேட்பாளர்
''ரொம் மக்கமனை வாக்குப்பதிவில் சேர்த்துக்கொள்!
இல்லினோய் வாக்கு சீட்டில்
கலந்து கொள்ள முடியாமல் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரை தடுக்க ஜனநாயகக் கட்சி முயற்சி
Illinois-
மாநில சபை பிரச்சாரத்திற்கான தகுதிபெற SEP
மனு தாக்கல்
Top of
page |