World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிGerman "labour reform": all-out attack on the unemployed ஜேர்மனி ''தொழில் சீர்திருத்தம்'' வேலையில்லாதோர் மீது ஒட்டுமொத்த தாக்குதல் By Dietmar Henning ஜூலை 9ல் ஜேர்மன் பாராளுமன்ற மேலவையில் தொழில் சந்தை சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. மேலவையின் ஒப்பந்தத்துடன் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிஸ்மார்க்கால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜேர்மன் தொழில் மற்றும் சமூகநலன்புரி சட்டம் தனது இறுதி பாராளுமன்ற தடையை கடந்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னர், ஜேர்மன் பாராளுமன்றத்தில் (Bundestag-கீழ்சபையில்) சகல பிரிவினராலும் பெரும்பான்மையாக இம்மசோதா தொடர்பாக ஏற்கனவே உடன்பாடு ஏற்பட்டது. எவரும் அதற்கு எதிராக கடுமையாக குரல்கொடுக்கவில்லை. மக்களுக்கு எதிரான சதியை ஒத்ததாக அந்த வாக்குகள் அமைந்தது. ஜனநாயக சோசலிச கட்சியை சார்ந்த இரண்டு பிரதிநிதிகள் அதற்கு எதிராக வாக்களித்தனர், என்றாலும் பல மாநிலங்களில் அவர்களது கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் அந்தச்சட்டத்தை செயல்படுத்துவதில் முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் திகதி சட்டம் நடைமுறைக்கு வரும். ஓராண்டிற்கு மேல் வேலையில்லாமல் இருக்கும் 2 மில்லியனுக்கு மேற்பட்ட வேலையற்றோர் இனி மிகக்குறைந்த உதவித்தொகையையே பெறுவார்கள். அவர்களது உதவித்தொகை சட்டப்படி மாதம் 345 யூரோக்களாக குறைக்கப்படும் அல்லது கிழக்கு ஜேர்மனியின் 331 யூரோக்களாக்கப்படும். அதிகாரபூர்வமான மதிப்பீடுகளின்படி, புதிய விதிகளின்படி இனி அரை மில்லியன் பேருக்கு எந்தவிதமான உதவித் தொகையும் கிடைக்காது. இச்சட்டம் வேலையில்லாத மில்லியன் கணக்கான மக்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இனி கசப்பான வறுமையில் தள்ளும். ''தொழிற் சந்தையில் தக்க நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்'' பற்றிப் பேசியபோதிலும் இந்தசட்டம் நிறைவேற்றுவதில்தான் மத்திய-பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் Wolfgang Clement (சமூக ஜனநாயகக் கட்சி) இன் பதவியே தங்கியிருந்தது. புதிய சட்டத்திற்கு தரப்பட்டுள்ள பெயரான ''வேலையில்லாதோருக்கான உதவி II" என்பதே மோசடியானது. இது வேலையில்லாதோருக்கான உதவித்தொகையை ஒழித்துவிட்டு சமூகப் பாதுகாப்பு என்கின்ற பெயரால் மிகவும் இழிவுபடுத்துகின்ற வகையில் சொற்ப தொகையை உதவியாக பெறவிருக்கிறார்கள். எதிர்காலத்தில், பல தசாப்தங்களாக பணியாற்றி தங்களது சொந்த தவறுகள் எதுவும் இல்லாத நிலையில் வேலை இழப்பவர்கள் இதே வகையான இழிவுபடுத்தும் சொற்ப உதவித்தொகையையே சமூக பாதுகாப்பு நலன்களால் பெறுப்போகின்றார்கள். தொழில் அலுவலகம் எதிர்காலத்தில் வேலையில்லாதிருப்போரிடம் மிக விரிவான அடிப்படையில் தனிபட்ட தகவல்களை கேட்டுப்பெறும். எடுத்துக்காட்டாக எதிர்காலத்தில் ஜூலை 19 திகதிக்குப்பின் மனுச்செய்பவர்கள் 16 பக்க கோரிக்கை மனுவை பூர்த்தி செய்து அனுப்பவேண்டும், இந்த விபரங்கள் மத்திய தொழிலாளர் அமைப்பின் வலைத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. தனது சொந்தவருவாய் மட்டுமல்லாமல் அதே வீட்டில் வாழுகின்ற மனுதாரரின் உறவினரது நிதி மற்றும் தனிபட்ட நிலைமைகளை பற்றிய விபரங்களையும் தெரிவிக்க வேண்டும். வசதிகள் பற்றிய சோதனை முந்தைய சட்டதின்படி, ஒருவர் கடைசியாக பெற்ற நிகர ஊதியத்தின் அடிப்படையில் வேலையில்லாதோருக்கான உதவித்தொகை கணக்கிடப்பட்டது. ஓராண்டிற்கு மேல் வேலையில்லாதிருக்கும் நீண்டகாலம் வேலையில்லாதிருப்போர் கடைசியாக அவர்கள் பெற்ற ஊதியத்தில் 53 சதவீதத்தை உதவித்தொகையாக பெற்றுவந்தனர். அதே வீட்டில் வாழுகின்ற குடும்பத்தில் மற்றவர்களது வருமானம் அல்லது சொத்து, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. தான் பணியாற்றிய காலத்தில் வேலையில்லாதோருக்கான காப்பீட்டுத்திட்டத்திற்கு சந்தா செலுத்தியவர்கள் சட்டப்படி வேலையில்லாதோர் நலன்களை பெறுகின்ற தகுதிபடைத்தவர் ஆகிறார். தற்போது இப்படி கோரிக்கை எழுப்பவே முடியாது. சமூக பாதுகாப்பு போன்று ''வேலையில்லாதோருக்கான உதவி II" அவரது குடும்பத்தில் வாய்ப்பு வசதிகளை துல்லியமாக மதிப்பீடு செய்த பின்னர் வழங்கப்படுகின்றது. கூட்டு குடும்பத்தில் வாழுகின்ற மற்றவர்களது வருமானம் மற்றும் சொத்து கணக்கெடுக்கப்பட்டு அதற்கு பின்னர்தான் இனி உதவித்தொகை வழங்கப்படும். இந்த காரணத்திற்காகவே, கோரிக்கை மனுவில் ''வேலையில்லாதோருடன் வாழுகின்ற மற்றவர்களது வருமானம் சொத்துக்கணக்கும்'' கேட்கப்படுகிறது---- எந்த வித உரிமை கொண்டாடுபவர்கள் அல்லது அவருடன் வாழ்பவர் --- வங்கிக்கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்---- அதில் ஏதாவது சேமிப்பு இருந்தால், அது கணக்கிற்கு எடுக்கப்பட்ட பின்னரே உதவி குறித்து தீர்மானிக்கப்படும். ''சொத்து'' என்பதில் வங்கியில் உள்ள பணம் வைப்புத்தொகை கையிருப்பு, பணம், கார் (அதன் பதிவு செய்யப்பட்ட ஆண்டு, வடிவம் அதனுடைய மதிப்பு ஆகியவை கணக்கிடப்படும்) ஆயுள் காப்பீட்டுக் கணக்கு, கட்டிட உதவிசங்க கணக்கு அதேபோல ''மற்றைய சொத்தான (நகைகள், வண்ண ஓவியங்கள், தொல் பொருட்கள் பற்றிய விபரங்கள் அனைத்தும் அடங்கும்.)'' சட்டத்தில் ''சொத்து'' என்ற பதத்திற்கு எந்த விளக்கமும் தரப்படவில்லை, உள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி அவர் விருப்பப்படி சொத்துக்கணக்கில் குடும்பம் பாரம்பரியமாக சேகரித்து வைத்திருக்கும் பழைய நாணயங்கள், அறையில் காணப்படும் வண்ண ஓவியங்கள் ஆகியவற்றையும் அவர்கள் விருப்பப்படி ''சொத்து'' என சேர்த்துக்கொள்கிறார்கள். அதே போன்று தேவையான வாகனம், வீட்டு சாமான்கள், ஆகியவற்றையும் அந்த அதிகாரிகளே ''பொருத்தமானதா'' என முடிவு செய்து கொள்கிறார்கள். வேலையில்லாமல் இருக்கின்ற ஒருவர் எந்தக்காரை, எந்த தளபாடங்களை, குடியிருப்பை பயன்படுத்துவது என்பதையும் அந்த அதிகாரிகளே முடிவு செய்கிறார்கள். உள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலர் முடிவு செய்தபின்னர் சம்மந்தப்பட்டவருக்கு இருக்கின்ற ''சொத்து'' கரைந்த பின்னர்தான் உதவி பெறுகின்ற தகுதி வருகின்றது. புதிய நெறிமுறைப்பட்டதன் கீழ், அடிப்படை உதவித்தொகைக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களுக்கு உதவித் தொகை கிடையாது. இந்த வகையில், சுமார் 5 லட்சம் மக்களுக்கு உதவித்தொகை மறுக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வேலையில்லாதிருக்கின்ற ஒருவர் தனது மனைவியோ, அல்லது கணவரோ ஒவ்வொரு ஆண்டும் 2000 யூரோக்களுக்கு குறைவான சேமிப்பு வைத்திருப்பவர்களாக இருந்தால்தான் இந்த உதவித்தொகை கிடைக்கும். (அதிகளவாக 13,000 யூரோ வரை) மேலும் தனது வீட்டைச்சேர்ந்த ஒவ்வொருவருக்கும், அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு 750 யூரோக்கள் வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. தற்போது வேலையில்லாதிருக்கும் ஒருவர் இதற்கு முன்னர் பணியாற்றிய காலத்தில் ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்திருந்தால் தற்போது முதிர்ச்சியடையாத நிலையிலும் அவற்றை ரொக்கமாக்கி அவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இப்படிச்செய்வதால், ஜேர்மன் மக்களில் 70சதவீதம் பேர் ஆயுள் காப்பீடை இழக்கின்றனர். (ஒரு யூரோ இரண்டு யூரோ சேமிப்பவர்கள் கூட ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்த வகையில் ஜேர்மனியில் 600 பில்லியன் யூரோக்கள் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன.) மத்திய தொழில் அலுவலக துணைத்தலைவர், ஹென்ரிக் ஹால்ட், மனுதாரர்கள் தருகின்ற விபரங்கள் ஓய்வூதிய காப்பீட்டு நிறுவனங்கள், சுகாதார காப்பீட்டு நிறுவனங்கள், வரிவிதிப்பு அதிகாரிகள் ஆகியவர்களோடு கலந்து சரிபார்க்கப்படும் என்று அறிவித்துள்ளார். முறைகேடு எதுவும் கண்டுபிடிக்கப்பட்டால், ''மனுதாரரின் வீட்டில் விசாரிக்கப்படும்'' என்றும் ஹால்ட் தெரிவித்தார். இதுபோன்ற சூழ்நிலைகளில், மனுதாரரின் குடும்பத்தை சேர்ந்தவர்களது உடல்நிலை மற்றும் மனநிலை குறித்தும் விசாரிக்க வேண்டும். கீழ்கண்ட கேள்விகளுக்கு பங்குதாரர் உரிமைதாரர் பற்றி விடைதரவேண்டும்:- ''உங்களது கருத்துப்படி அவர்/அவள், ஒரு நாளைக்கு 3 மணிநேரம் பயனுள்ள வகையில் பொதுவான வேலை சந்தைகளில் பணியாற்றுகின்ற தகுதியுள்ளவர் என்று கருதுகிறீர்களா? இல்லை என்று பதிலளித்தால் அதை நியாப்படுத்த வேண்டும். அதே போன்று ஓர் ஆண்டிற்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் அவருக்கு வேறு எந்த வருவாயும் இல்லாமலும், ''சொத்தும்'' இல்லாமல் இருந்தாலே சமூகப்பாதுகாப்பு வழங்கப்படும். அதே வீட்டில் உள்ள குழந்தைக்கும் இவ்வுதவி வழங்கப்படும். ''வேலையில்லாதோருக்கான உதவி II'' இன் படி மாதத்திற்கு, ஒரு தனி நபருக்கு மேற்கில் 345 யூரோக்களும், கிழக்கில் 331 யூரோக்களும் வழங்கப்படும். 14 வயது வரை குழந்தைகளுக்கு சமூக பாதுகாப்பு உதவித்தொகை 207/198.60 யூரோக்கள். 15வயது முதல் 276/264.80 யூரோக்களாகும் வேலையில்லாத இரண்டுபேர் ஒன்றாக வாழ்ந்தால் அவர்களுக்கு மாதாந்த விகிதத்தில் 90% ''வேலையில்லாதோருக்கான உதவி II'' படி இருவருக்கும் வழங்கப்படும்.(310.50/297.90 யூரோ) தனியாக வாழுகின்ற பெற்றோர்கள் உடல் ஊனமுற்றவர்கள், கருவுற்ற பெண்கள், ஆகியோர் வீடு மற்றும் வெப்பமாக்கலுக்கான கூடுதல் உதவித்தொகைகளை அவர்களது நிலைக்கு ஏற்றப்படி கோரமுடியும்----''அவர்களுக்கு இது பொருத்தமானால்'.' இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு பதிலளிப்பதே வெட்கக்கேடானது தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இழிவு என்று கருதி பல்லாயிரக்கணக்கானோர் இத்தகைய கோரிக்கை எதையும் தராமல் ஒதுங்கிக்கொள்கின்ற நிலையும் ஏற்படும். எடுத்துக்காட்டாக; வேலையில்லாதிருக்கும் ஒர் தந்தை தனது மகனிடம் உன்னுடைய வருவாய் என்ன என்று கேட்டு தொழில் அலுவலகத்திற்கு தகவல் தரமுடியுமா? ''நியாயமான'' வேலைகள் வழங்குதலும் அனுமதிகளும் உள்ளூர் தொழில் பரிமாற்ற நிலையத்தில் வேலைசெய்வவோர் வேலையில்லாதவர்களை கட்டுப்படுத்துவதுடன், அவதானிக்கப்படுகின்றனர். வேலையில்லாதோர் சகலதையும் செய்யவேண்டும் என மேலும் நிர்ப்பந்திக்கப்டுவதுடன், இந்த பிரச்சாரத்தின் நோக்கம் வெட்டை அமுல்படுத்துவதற்கான ஆதரவை பெறுவதுமாகும். ஒவ்வொரு வேலைவாய்ப்பு அலுவலகரும் 100 பேருக்கு ஒருவர் என்றில்லாது குறைந்த பட்சம் 75 பேருக்காவது உதவித்தொகை வழங்குகின்ற அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பொருளாதாரத்துறை அமைச்சர் கிளமெண்ட் தெரிவித்தார். இது உண்மையிலேயே வேலையில்லாமலிருப்பவர்களுக்கு உதவுவதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில் 150 பேருக்கு 1 வீதம் ஒரு ஆலோசகர் நியமிக்கப்பட்டால் அதுவே திருப்தி அளிப்பதாகும் என்று கூறப்படுகின்றது. மேலும், வேலையில்லாதோர் எந்தவகை தொழில்களில் அமர்த்தப்படுவார்கள்? தொழில்கள் கிடைப்பது அபூர்வமாகயிருக்கிறபோது, ஒரு ''நியாமான'' வேலை வழங்குவது என்பது பெரிய மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும். அரசியல் விதிப்படி 2005 ஜனவரி 1 ஆரம்பத்திலிருந்து வழங்கும் எந்த வேலையும் ''நியாமனதாக'' கருதப்படும். தொழிற்சங்க ஊதிய விகிதங்களைவிட அல்லது வழக்கமான உள்ளூர் ஊதிய விகிதங்களை விட குறைந்த ஏறத்தாழ 30 சதவீதம் குறைந்த ஊதிய விகிதங்களில் பணியில் அமர்த்தப்படுகின்ற நிலை ஏற்படும். சம்மந்தப்பட்ட நபரின் முந்தைய அனுபவம் கல்வித்தகுதி, அவர் வாழும் இடத்திற்கும் பணியின் இடத்திற்கும் இடையில் உள்ளதூரம் அல்லது பணியாற்றுவதற்காக ஏற்ற சூழ்நிலைகள் இல்லாத நிலை ஆகியவற்றை கருதிப்பார்க்க போவதில்லை. எடுத்துக்காட்டாக, புதிய விதிகளின்படி ஹனோவரில் ஓராண்டிற்கு மேல் வேலையில்லாதிருக்கும் ஒரு கம்யூட்டர் பொறியாளர் ஸ்ருட்காட்டில் உள்ள பண்டசாலையிலும் பணியாற்ற தயாராக இருக்கவேண்டும். ''பயன்தரும் தொழில் வழங்கலை'' (அலுவலகரால் வழங்கப்படும் ஏதாவது ஒரு வேலை) அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஆரம்பத்தில் 3 மாதங்களுக்கு அவரது உதவித்தொகையில் 30 சதவீதம் (கிட்டத்தட்ட 100 யூரோ) ''வேலையில்லாதோருக்கான உதவி II'' லிருந்து வெட்டப்படும். எவர் ஒருவர் வேலைகளை புறக்கணிக்கின்றனரோ அவர்களுடைய உதவி மேலும் குறைக்கப்படும். இந்த நிலைமையில், கற்பிணி பெண், இயலாதவர்கள், தனி பெற்றோர்கள் ஆகியோரின் வீட்டு வசதி, மின்சார வசதி ஆகியவையும் வெட்டப்படும். 30 சதவீதத்திற்கு மேல் உதவிகள் வெட்டப்பட்டால், உள்ளூர் தொழில் பரிமாற்று செய்பவரால் ''பற்றாக்குறையை நிறைவுசெய்யும் உதவி'' வழங்க முடியும். உதாரணமாக, உணவு கூப்பன் வழங்கப்படும். 15 வயது முதல் 25 வயதுவரையிலுள்ள இளைஞர்கள் ''பயன்தரும் தொழில் வழங்கலை'' மறுத்தால் அவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை உதவித்தொகை இரத்து செய்யயப்படும். அவர்களுக்கு தங்கியிருக்கும் வீடு, மின்சாரக்கட்டணம், ஆகியவற்றை வீட்டுச் சொந்தக்காரர்களுக்கே நேரிடையாக வழங்கிவிடுவார்கள். அவர்களுக்கு உணவுக்கூப்பன்கள் வழங்கப்படும்.இத்தகைய இழிவுபடுத்தும் மரியாதை அரசியல் தஞ்சம் நாடுபவர்களுக்கு நீண்டகாலம் தரப்பட்டுவருகிறது. இப்போது அதே மரியாதை மில்லியன் கணக்காக வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த புதிய சட்டம் ''தொழிலாளர் சந்தையில் திருப்பு முனையாக'' அமைந்திருப்பது மட்டுமல்லாமல், வர்க்கப் போராட்டத்தில் புதிய கட்டமாகவும் அமைந்திருக்கின்றது. 1930களில் இருந்து சமுதாயத்தின் வர்க்கத்தன்மை தெளிவாக வெளியில் தெரியவில்லை. இப்போது தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்க்க தவறிவிட்டதால், ஆளும் செல்வந்த தட்டினர் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் தங்களது நடவடிக்கைகளை மேற்க்கொண்டிருக்கின்றனர். தொழில் அதிபர்கள் சங்கம் ஏற்கனவே ஊதிய விகிதங்களை மேலும் குறைப்பதற்கும், விடுமுறைகால சலுகைகளை வெட்டுவதற்கும் கோரிக்கைகளை விடுத்து வருகின்றது. இந்த தாக்குதலை எதிர்ப்பதற்கு, தொழிலாளர்களுக்கு ஒரு புதிய கட்சி தேவை, அந்தக் கட்சி சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில், முதலாளிகளின் இலாப நோக்கிற்கு பதிலாக பொதுமக்களது நலன்களை முன்நிறுத்துவதாக இருக்கவேண்டும். |