World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Victims of Indian school fire:

The government is responsible for this tragedy

இந்தியப் பள்ளி தீப்பற்றியதில் பாதிக்கப்பட்டோர்:
இந்த துயரத்திற்கு அரசாங்கமே முழுப்பொறுப்பு

By our correspondents
22 July 2004

Back to screen version

தென்னிந்தியாவிலுள்ள கும்பகோணம் நகரத்தில், சென்ற வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்து 90 குழந்தைகளைக் கொன்ற, ஸ்ரீ கிருஷ்ணா தனியார் பள்ளி, நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள இதனையொத்த ஆயிரக்கணக்கான நிறுவனங்களுக்கு ஒரு மாதிரியாகும். அது அளவுக்கு அதிகமாக பெருமளவு மாணவர்களைக் கொண்டிருந்தது மற்றும் அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகளும் அடிப்படை வசதிகளும் இல்லாதிருந்தது. தங்களது மகன்களையும் மகள்களையும் அங்கு அனுப்பியோருக்கு, அது பெரும்பாலான அரசாங்க பள்ளிக்கூடங்களை விடவும் இன்னும் சிறந்ததாக இருந்தது.

பெரும்பாலான தனியார் பள்ளிகளைப் போலல்லாமல், ஸ்ரீ கிருஷ்ணா பள்ளிக்கூடம் நன்கு நிலைநிறுத்தப்பட்டிருந்தது, உத்தியோக ரீதியிலான அனுமதி பெற்றிருந்தது மற்றும் தமிழிலாவது அல்லது ஆங்கிலத்திலாவது கற்பிக்க வகைசெய்தது. உள்ளூர் வாசியும், பள்ளியின் பழைய மாணவியுமான லக்க்ஷ்மி விவரித்ததாவது: எவ்வாறாயினும், பல ஆண்டுகளாக அதன் நிலைமைகள் மோசமடைந்து இருந்தன. "இந்தப் பள்ளிக்கூடம் 1960ல் தொடங்கப்பட்டது. 1980கள் வரையிலும் அது மிகச் சிறிய நிறுவனமாக இருந்தது. 1985ல் இந்நிறுவனமானது உயர்நிலைப் பள்ளி ஒன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்க அங்கீகாரத்தைப் பெற்றது."

1990களில் அதன் விரிவாக்கம் இந்தக் கட்டிடம் முற்றிலும் போதாது என்பதை அர்த்தப்படுத்தியது. இத்தனை மாணவர்கள் படிப்பதற்கு இந்தக் கட்டிடம் மிகவும் சிறியதாகும் என்று லக்க்ஷ்மி புகார் கூறினார். "முதலாவதாக, அது நெரிசலானது. இரண்டாவதாக, அதற்குப் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை. மூன்றாவதாக, அது இந்த இரைச்சல் மிகுந்த நகரின் மையத்தில் இருக்கிறது."

பள்ளிக்கூட உரிமையாளர், புலவர். பழனிச்சாமி, அரசியற்பிரமுகராக இருப்பது, உத்தியோக ரீதியிலான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு உதவியது. தமிழ்நாடு மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான உள்ளூர் பேச்சாளர்களில் ஒருவராக தற்போது அவர் இருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோது, அவர் திமுக உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். கோபமுற்ற உள்ளூர்வாசிகள் அவரது வீட்டை சூறையாடிய பின்னரே, தீ விபத்து தொடர்பாக அவரையும் ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் போலீஸ் கைது செய்தது.

அந்தப் பள்ளிக்கூடத்திற்கு தங்களது குழந்தைகளை அனுப்பிய பெரும்பாலோர் ஏழைகள் ஆவர். உலக சோசலிச வலைத் தளமானது அப்பகுதியை பார்வையிட்டு, பள்ளிக்கூடத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள நத்தம் எனும் கிராமத்திலிருந்து படிக்க வரும், தீ விபத்திலிருந்து தப்பிப்பிழைத்த மாணவர்களுடனும் அவர்களது பெற்றோருடனும் பேசியது. இந்தக் கிராமத்திலிருந்து பள்ளிக்கூடத்திற்கு வருகை தரும் 65 குழந்தைகளுள் பதினான்கு பேர் இந்தத் தீ விபத்தில் இறந்தனர்.

1997ல் திமுக ஆட்சியிலிருக்கும்பொழுது கும்பகோணத்தில் குடிசை போட்டிருந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு நத்தம் கிராமம் உருவானது. ஆனால் அரசாங்கம் தரமான சாலை வசதி, கழிப்பிட வசதி மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. கிராமத்தினர் அனைவருக்கும் நிலம் மட்டுமே கொடுக்கப்பட்டது. அவர்கள் தாங்களாகவே சிறிய வீடுகளையும் குடிசைகளையும் கட்டிக் கொள்ள வேண்டி இருந்தது. வண்ணப் பூச்சு பூசுபவர்கள், தச்சர்கள், உள்ளூர் சந்தைகளில் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் ரிக்ஷா ஓட்டுபவர்கள் உள்பட, அவர்களுள் பெரும்பாலோர் மிகவும் ஏழ்மையானவர்கள் ஆவர்.

ஒன்பது வயது நிரம்பிய ஸ்ரீதர் பண்டரிநாதன், தீக்காயங்களால் அரசாங்க மருத்துவமனையில் இறந்தார். அவரது அம்மா அமுதா கூறினார்: "எந்தத் தொடக்கப்பள்ளியும் இங்கு இல்லை. நல்ல சாலைகள் இல்லை. ஸ்ரீ கிருஷ்ணா பள்ளிக்கூடம் எங்களது பிள்ளைகள் போக்குவரத்திற்கு வாகன வசதி மட்டும் செய்து கொடுத்தது. எனவே நாங்கள் அவனை இந்தப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப முடிவு செய்தோம். பள்ளிக்கூடப் போக்குவரத்திற்கான கட்டணம் மலிவானது என (மாதத்திற்கு முப்பது ரூபாய்) நாங்கள் நினைத்தோம். நாங்கள் நிறைய பணம் செலவழிக்க முடியாததால் எங்கள் குழந்தையை தமிழ் பயிற்றுமொழிப் பிரிவில் சேர்த்தோம் (இது ஆங்கில பயிற்றுமொழிப் பிரிவை விடவும் மலிவானது).

"செய்தியைக் கேள்விப்பட்டு நாங்கள் பள்ளிக்குச்சென்ற பொழுது, அவர்கள் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. போலீஸ் நிர்வாகிகள் திருமண மண்டபத்திற்கு சென்று அங்கு என் மகன் இருக்கிறானா எனத் தேடும்படி கூறினர். நாங்கள் அங்கு அவனைக் காணவில்லை. பின்னர் நாங்கள் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்குதான் அவனைப் படுக்கையில் கண்டோம்." அவரது மகன் உயிருடன் இருந்ததாகவும் அவரைக் காப்பாற்ற முயற்சிகள் எடுத்தபோதும் தீக்காயங்களின் காரணமாக இறந்தார் என்பதை அவர் விளக்கினார்.

"எனது கணவர் கும்பகோணத்தில் உள்ள மைதீன் புகையிலை கம்பெனியில் புகையிலையை பாக்கெட்டில் நிரப்புவராக வேலை பார்த்து வருகிறார், மாதத்திற்கு ரூபாய் 1,500 (34 அமெரிக்க டாலர்கள்) சம்பாதிக்கிறார். எங்களுக்கு மூன்று குழந்தைகள்: மூத்தவன் எட்டாம் வகுப்பு படிக்கிறான், இளையவன் ஆறாம் வகுப்பு படிக்கிறான் மற்றும் கடைசி மகன், இந்தத் தீயில் இறந்தவன், நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

"ரேஷன் முறையைப் பயன்படுத்தி நாங்கள் வாழ்க்கையை ஒருவாறு சமாளித்து வருகிறோம். சிலவேளைகளில் வெளியே சந்தையில் ஒரு கிலோ 13 ரூபாய் வீதம் அரசியை வாங்கிக் கொள்கிறோம். ரேஷன் கடை கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சாலை வசதி மிக மோசம். ஒரு அவசரம் ஏற்பட்டால் கூட, இங்கிருந்து 6 கிலோ மீட்டர், கும்பகோணம் சென்றால் ஒழிய, எந்தவித சுகாதார மையமோ அல்லது டாக்டரோ இங்கு கிடையாது."

இந்த தீயில் காயமடைந்த எட்டுவயது நிரம்பிய விஜய் பாலசிவராமன் எனும் மாணவன், சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறான். கும்பகோணம் காய்கறி சந்தையில் வேலை பார்க்கும் தொழிலாளியான அவனது மாமா பூங்காவனம் முருகேசன் தீவிபத்திற்கு தமிழ்நாடு நிர்வாகத்தைக் குற்றம் சுமத்தினார். "இந்தத் துயரத்திற்கு அரசாங்கமே பொறுப்பு, ஏனென்றால் இந்தமாதிரி ஒரு பள்ளியை நடத்துவதற்கு அவர்கள்தான் அனுமதி கொடுத்தார்கள். ஆளும் கட்சி அரசியல்வாதிகள் ஏன் நாங்கள் செய்தி ஊடகங்களிடம் புகார் கூறுகிறோம் என்று கேட்டனர். ஆனால் நாங்கள் வேறு என்ன செய்ய முடியும்?"

அவரது குடும்பம் எதிர்கொள்ளும் நிலைமை பற்றியும் அவர் பேசினார். "நான் இரவில் மட்டும் வேலை பார்க்கிறேன், மற்றும் மாதம் ரூபாய் 1,500தான் சம்பாதிக்கிறேன். ஒருநாளைக்கு நான் இரண்டு முறை உணவுதான் உட்கொள்கிறேன். இந்த கிராமத்தினரில் பெரும்பாலோர் மத்தியில் இது சர்வசாதாரணமாகும்."

அவர் கிராமத்தில் வசதிகள் இல்லை என்பதை சுட்டிக் காட்டினார். "சுடுகாடு கூட இங்கிருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சுடுகாட்டிற்குப் போகின்றவழி, குழந்தையின் இறந்த உடலை நான்குபேர் தூக்கிக்கொண்டு போகமுடியாதவகையில் குறுகலாக உள்ளது. எங்களது கிராமத்தில் ஒரே ஒருவர் வீட்டில் தொலைபேசி வசதி உள்ளது. ஏதாவது தபால் வரும்பொழுது, தபால்காரர் கிராமத்து சாலை பிரதான சாலையுடன் சந்திக்கும் இடத்தில் கடிதங்களைக் கொடுத்துவிடுவார் (2 கிலோ மீட்டர் தொலைவில்)."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved