:
செய்திகள் ஆய்வுகள் :
ஐரோப்பா
:
பிரித்தானியா
Britain's Socialist Workers Party and the defence of national reformism-Part
3
A review of Alex Callinicos's An Anti-Capitalist
Manifesto
பிரிட்டனின் சோசலிச தொழிலாளர் கட்சியும் தேசிய சீர்திருத்தவாதத்தை பாதுகாத்தலும்
அலெக்ஸ் காலினிகோஸ் இன் ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு அறிக்கை
பற்றிய மதிப்புரை
பகுதி 3
By Chris Marsden
7 July 2004
Back to screen version
அலெக்ஸ் காலினிகோசின் ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு அறிக்கை, போலிட்டி
பிரஸ், லண்டன், ISBN 0-7456-2904-0
மேற்கண்ட புத்தகத்தைப் பற்றிய மூன்று-பகுதி ஆய்வுக் கட்டுரையின் இறுதிப் பகுதி கீழே பிரசுரிக்கப்படுகிறது.
மார்க்சிச எதிர்ப்பில் நிபுணர்
உலக, ஐரோப்பிய சமூக அரங்குகள் வகித்த அரசியல் பங்கின் இறுதி நிரூபணம் அதன்
சொந்த தன்மையிலேயை உள்ளடங்கியுள்ளது.
உலக வர்த்தக அமைப்பிற்கு (WTO)
1999-ம் ஆண்டு சியாட்டிலில் நடைபெற்ற எதிர்ப்புக்கள் முதலாளித்துவத்திற்கு சமூக அரசியல் அளவில் மிகவும் பரந்த முறையில்
எதிர்ப்பை எதிர்பார்த்தன; இதைப்பற்றிப் பின்னர் கூறுவோம். ஆனால் அத்தகைய ஆற்றல்மிக்க நிலைக்கு உலக, ஐரோப்பிய
சமூக அரங்குகளின் தலைவர்களின் பிரதிபலிப்பு அத்தகைய சமூக இயக்கங்களின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டு அவை பழைய
கட்சிகள், அரசாங்கங்கள் இவற்றிற்கு அரசியல் சவால் விடாமல் தடுத்துவிடவேண்டும் என்பதாகவே இருந்தது.
இந்த முடிவுடன், உலக சமூக அரங்கின் தலைவர்கள், உலகில் சிறு எண்ணிக்கையிலான அரசாங்கங்கள்
தீங்கு செய்துவிட்டு தப்பிக்கக்கூடியதாக இருக்கிறது- மற்றும் அது அவற்றை எதேச்சாதிகாரம் மற்றும் சர்வாதிகாரத்திற்காக
கண்டனத்திற்கு ஆளாக்கும் என்று எதிர்ப்புக் குரல் எழுப்புவோர் மீது ஒருவிதமான அரசியல் தணிக்கையை திணித்து இருக்கின்றனர்.
2001- ல் தெற்கு பிரேசில் நகரமான
போர்டோ அலேக்ரேயில் நடைபெற்ற முதல் உலக சமூக அரங்கு
மீது அதன் தேர்ந்தெடுக்கப்படாத தலைமையிடத்தினால் "கொள்கைகள்
சாசனம்" என்பது சுமத்தப்பட்டது. இது அரசியல் நடைமுறையில் உள்ள பழைய கட்சிகள் மீது கொள்ளப்படும் சீற்றத்தை,
அவற்றை எதிர்க்க எவரேனும் முற்பட்டால் அவரை அவ்வமைப்புகளுடன் கட்டிவைக்கும் முயற்சியாகும். சாசனத்தின் ஒன்பதாவது
குறிப்பு ''உலக சமூக அரங்கு சாதாரண சமுதாயத்தின் அமைப்புக்களுக்கும், இயக்கங்களுக்கும் இடையே உட்தொடர்பை
கொண்டு அவற்றை ஒன்றாய் கொண்டுவருகிறது" என வலியுறுத்துகிறது. இந்த சொற்றொடர் எவையெல்லாம் ஒதுக்கப்படுகின்றன
என்பதை அடையாளம் காட்டுவதற்குச் சரியாக விளக்கப்படவில்லை. "கட்சிப் பிரதிநிதிகளோ, இராணுவ அமைப்புக்களின்
பிரதிநிதிகளோ இந்த அரங்கில் கலந்து கொள்ள முடியாது."
எத்தகைய கட்சிக்கு உலக சமூக அரங்கிற்கு விரோதப்போக்கு காட்டுகிறது என்பதை
தெளிவுபடுத்தும் வகையில், சாசனம் உடனடியாக இந்த வகையில் கட்டாயத்தைக் கூறுகிறது: "இந்த சாசனத்தின்
திட்டங்களை ஏற்கும், அரசாங்க தலைவர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தனிப்பட்ட முறையில் அரங்கில் பங்கு
பெற அழைக்கப்படலாம்.
இக்கருத்தை அடிக்கோடிடும் வகையில் சாசனத்தின் 10ம் குறிப்பு, உலக சமூக அரங்கு
"வரலாறு, அபிவிருத்தி, பொருளாதாரம் போன்றவற்றை சிக்கலான ஆய்வுகளாக காட்டும் அனைத்துக் கருத்துக்களையும்
எதிர்க்கிறது என்று வலியுறுத்துகிறது; இது மார்க்சிசத்தை எதிர்க்கிறது என்ற பொருள் உடையது--- ஏனெனில் அதன்
விரோதிகள் அதை ஒரு "ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள பொருளாதார ஆய்வுவகைப்பட்டதாக" (Economic
Reductionism) கண்டனத்திற்கு உட்படுத்துகின்றனர்.
உலக ஐரோப்பிய சமூக அரங்குகள் "அரசியலுக்கு அப்பால்" நின்று "சாதாரண
சமுதாயத்தை" பிரதிபலிப்பதாக சித்தரிக்கும் முயற்சி, அதிகாரம் "சமுதாயத்தில் செயலூக்கமுள்ளோரால்"
செலுத்தப்படுவதை காக்கும் வகையை நியாயப்படுத்த முற்படுகிறது. ஆனால் உண்மையில் இது தேர்ந்தெடுக்கப்படாத,
பொறுப்புக் கூறத் தேவையில்லாத உலக, ஐரோப்பிய சமூக அரங்குகளின் தலைமைகளின் ஆளுமை சவாலுக்குட்படாத
நிலைமைக்குத்தான் வழிவகுக்கிறது, அத்தலைமையும், மறைக்க கூட முடியாத நிலையில் உள்ள, பழைய மதிப்பிழந்த, சமூக
ஜனநாயக, ஸ்ராலினிச கட்சிகளின் பிரதிநிதிகளையும், கணக்கில் அடங்காத வகையிலான முதலாளித்துவ தேசியவாதத்தின்
பிரநிதிகளையும் அடக்கியதுதான்.
உலக சமூக அரங்கின் அரசியல் நேர்மையை ஏற்றுக்கொள்ளும்
SWP, LCR
போன்றவை, அமைப்பிற்குள்ளேயே விசுவாசத்திற்குரிய எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில் செயல்படத் தடையேதும் இல்லை.
ஆனால் அரசியல் கட்சிகளுக்கு எதிரான தடை என்பது உண்மையான சோசலிச அரசியலால் ஈர்க்கப்படுவர்களை
தனிமைப்படுத்தும் வகையில் தன் பங்கை கொண்டுள்ளது
காலினிக்கோசின் "இடைமருவு கோரிக்கைகளும்" சோசலிச தொழிலாளர் கட்சியின்
தன்மையும்
காலினிகோசால் பட்டியல் இடப்பட்டுள்ள ''பல்வேறு வகைகொண்ட முதலாளித்துவ-எதிர்ப்பு
போக்குகளுக்குத்தான்", அவர் ஒரு இடைமருவு வேலைத்திட்டம் என்று கூறுவதை அளிக்க வருகிறார் இத்தகைய குறிப்பு
லியோன் ட்ரொட்ஸ்கியினால் இயற்றப்பட்டு நான்காம் அகிலத்தால் 1938-ம் ஆண்டு வரையப்ட்டது.
ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை பற்றியது போன்றே, காலினிகோசின் திட்டம்
ட்ரொட்ஸ்கி விரிவாகக் கூறியுள்ளதற்கு முற்றிலும் எதிரானதாகும்.
ஸ்ராலினிச, சமூக ஜனநாயக அமைப்புக்கள், அதற்கு வக்காலத்துவாங்குபவர்கள் இவற்றிற்கு
சமரசம் செய்து கொள்ள முடியாத அரசியல் விரோத போக்கை இடைமருவு வேலைத்திட்டம் கொண்டிருந்தது.
அனைத்து விதமான தேசிய சீர்திருத்த வாதங்களுக்கும் எதிரான உலக சோசலிச புரட்சியின் முன்னோக்கை அது
முன்வைத்திருந்தது; அத்தகைய வரலாற்று இலக்கை அடைவது நான்காம் அகிலத்தை கட்டுவதிலேயே தங்கியுள்ளது என்றும்
வலியுறுத்தியிருந்தது.
இந்த மூலோபாய பணிக்கேற்ப, ட்ரொட்ஸ்கி, தொடர்ச்சியான இடைமருவுகால
கோரிக்கைகள் சிலவற்றை முன்மொழிந்தார்; அவை "புறநிலை புரட்சிகர நிலைமைகளின் முதிர்வுத் தன்மைக்கும்,
தொழிலாள வர்க்கத்தினதும், அதனது பாதுகாவலனினதும் முதிர்ச்சி அடையாத நிலைக்கும் (பழைய தலைமுறைகளின்
குழப்பம், ஏமாற்றம், இளைய தலைமுறையில் அனுபவம் இன்மை), இடையே உள்ள முரண்பாட்டை கடப்பதற்கான"
இலக்கை கொண்டிருந்தன என்று அவர் குறிப்பிட்டிருந்தார். வெகுஜனங்களின் நாளாந்த போராட்ட போக்கினூடாக, ஒரு
சோசலிச புரட்சிக்கான வேலைதிட்டத்திற்கும் தற்போதைய கோரிக்கைக்கும் இடையே ஒரு பாலத்தை கண்டுகொள்ள
உதவி செய்வது அவசியமாகும் என்று அவர் கூறினார். இப்பாலத்தில், இன்றைய நிலைமையில் இருந்து விளையும்
இடைமருவுக்கு தேவையான கோரிக்கைகள், இன்றைய தொழிலாள வர்க்கத்தின் பரந்த தட்டுகளின் நனவுபூர்வமாக அவை
விளைந்து, இறுதியாக மாற்றீடு இல்லாத அளவிற்கு, தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றி வெற்றி அடைவதில்
முடியும்" எனக் கூறினார். (The Transitional Program for
Socialist Revolution, Pathfinder Press, New York, 1977, pages 113-114).
இதற்கு முரணாக, காலினிக்கோசின் இடைமருவு கோரிக்கை வேலைத்திட்டம் தொழிலாள
வர்க்கத்தின் அரசியல் நனவை உயர்த்துவதை இலக்காகக் கொள்ளவில்லை; உலக, ஐரோப்பிய சமூக அரங்குகளின்
தலைவர்களுக்கு ஓர் கூட்டணி அமைக்கத்தான் அழைப்பை விடுத்துள்ளது. எனவேதான், அவர்கள் அனைவரும் ஏற்கக் கூடிய
முறையில் முதல் அடிப்படைக் கருத்தில் இருந்து ஆரம்பித்து, அதில் ரொபின் வரியைப் புகுத்துவது என்பது போன்ற
கோரிக்கைகளை சேர்த்துள்ளார்.
இத்தகைய கோரிக்கைகள் குட்டி முதலாளித்துவத்தின் சமூக தட்டினரின் நலன்களை
பிரதிபலிக்கின்றன, முதலாளித்துவத்தின் உந்துதலான சமுதாய கட்டுமானத்தை அழித்து தன்னை வளர்த்துக் கொள்ளும்
தன்மை, வெடிக்கும் தன்மையுடய வர்க்க மோதல்களை கட்டவிழ்த்து விடுமோ என்ற அச்சத்தால் அந்த தட்டுகள் பீதியுடன்
உள்ளன. உயர்கல்வி கூடங்கள், தொழிற்சங்க தலைமைகள் மட்டம், சமூக ஜனநாயகக் கட்சிகள் அல்லது ஐக்கிய நாடுகள்
அல்லது ஏராளமான அரசு சார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்துள்ள சிந்தனைக் குழுக்கள் போன்றவற்றுடன் இவர்கள்
கொண்டுள்ள ஓரளவு சலுகை வாய்ந்த தன்மை இதனால் ஆபத்திற்குள்ளாகும்.
சோசலி தொழிலாளர் கட்சியினது அங்கத்தவர்களும் இப்பிரிவினரின் ஒரு பகுதியாகத்தான்
உள்ளனர். வரலாற்று அளவில், இது கீழ்மட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி இருந்ததுடன், அதனால் அதனுடைய வாய்வீச்சுக்களும்
சமூகத்திற்கான தீர்வுகளும் மிக தீவிரமான தன்மையை கொண்டிருந்தன. காலினிக்கோஸ் போன்றவர்கள் தங்களைவிட
சமுதாயத்தில் உயர்ந்து இருப்போருக்கு இடது ஆலோசகர்களாக இருப்பதற்கான பெரும் வாய்ப்பு காண்பதுடன் முன்னைய
அதிகாரத்துவ தொழிலாளர் அமைப்புக்குள் புத்துயிர் பெறும்வகையில் செயல்படுகின்றனர்.
காலினிகோஸின் திட்டம் நடைமுறையில் எவ்வாறு தோன்றுகிறது
ஈராக்கிற்கான அமெரிக்கப்போர் தோன்றியது, அதையொட்டிய வெகுஜனங்களின் அரசியல்
எதிர்ப்பு வெளிப்பட்டது, அதில் வரலாற்று சிறப்பாக 11 மில்லியன் மக்கள் சர்வதேச அளவில் பெப்ரவரி 13, 2003ல்
ஆர்ப்பாட்டம் நடத்திய இந்தப் பின்னணியில்தான் காலினிக்கோசின் புத்தகம் வெளியிடப்பட்டது.
இந்த வெகுஜன இயக்கம், மிகப் பெரிய முறையில் பழைய சமூக ஜனநாயகவாதிகள்,
ஸ்ராலினிச அமைப்புக்களுக்கு எதிராக அரசியல் கிளர்ச்சியாக ---- குறிப்பாக போரை ஆதரித்த பிரிட்டன் போன்ற
நாடுகளின் அரசாங்கங்களுக்கு எதிராக வளர்ச்சியுற்றது.
இங்கு காலினிக்கோசின் முன்னோக்கில் இருந்த அரசியலளவிலான பிற்போக்கான விளைபயனை
தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. சோசலி தொழிலாளர் கட்சி போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் முக்கிய நிலையைக்
கொண்டிருந்த காரணம் அதிகாரபூர்வமான தொழிலாளர் இயக்கம் வலதுபுறம் பாய்ந்து சென்றதால் எற்பட்டிருந்த
வெற்றிடத்தினால்தான். தொழிற்கட்சி அரசாங்கம் போரில் ஈடுபடுகையில் போரெதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு
கொடுத்து தங்கள் நிலைமைக்கு ஆபத்து ஏற்படுத்திக் கொள்ள ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் முற்படுவர்,
தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களில் இருந்து பெருமளவில் கலந்து கொள்ளாத நிலை இருந்தது, தொழிற்சங்கங்களின்
கூட்டமைப்பு வெளிப்படையாக அதைக் கண்டித்தது ஆகியவை எல்லாம் நிகழ்ந்தன.
எனவே வளைகுடாவில் போரை நிறுத்துக எனக் கூறும் எதிர்ப்புக்களை அமைக்கும் பொறுப்பு
சோசலி தொழிலாளர் கட்சி தலைமையின்மேல் விழுந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தொழிலாள வர்க்கத்தை
போருக்கு எதிராகவும், சோசலிச முன்னோக்குடன் அரசாங்கத்திற்கெதிராகவும் அணிதிரட்டாமல், சோசலிச
தொழிலாளர் கட்சி முதலாளித்துவத்தில் முற்போக்கு எனக் கூறிக்கொள்வோரையும், குட்டிமுதலாளித்துவ ஒன்றாக
இணைக்கும் முயற்சியைத்தான் கொண்டுள்ளது.
இதன் முக்கிய பிரதிநிதிகள், கருத்துவேறுபாடுகளை கொண்ட தொழிற்கட்சியினர், ஐக்கிய
நாடுகள் சபையின் செல்வாக்குடையவர்கள், மதகுரு Jesse Jackson,
அல்ஜீரியாவின் முன்னைய தலைவர் பென் பெல்லா மற்றும் பிரிட்டனின் மூன்றாம் கட்சியான லிபரல் ஜனநாயகக் கட்சியின்
தலைவர் சார்ல்ஸ் போன்றவர்களோடு மேடைகளில் தோன்றினர். போரை நிறுத்துக எனக் கூறும் கூட்டணி சோசலி
தொழிலாளர் கட்சி, பிரிட்டிஷ் முஸ்லீம் சங்கம் (Muslim
Association of Britain-MAB), மற்றும்
அணுவாயுதக் குறைப்பிற்கான பிரச்சாரம் (CND) இவற்றின்
கூட்டாகப் போயிற்று.
ஒரு வலது-சாரி அடிப்படை போக்கை கொண்ட பிரிட்டிஷ் முஸ்லீம் சங்கம் ஷாரிய
சட்டத்தை மீண்டும் கொண்டுவர ஆதரவு கொடுக்கும் எகிப்திய முஸ்லிம் சகோதரக் குழுவுடன் தொடர்பு கொண்டுள்ளது,
ஆனால், சோசலி தொழிலாளர் கட்சியை பொறுத்தவரையில் சந்தர்ப்பவாத முறையில் இதை ஒரு கருவியாக
பாவித்து போரை எதிர்க்கும் இளைய முஸ்லீகளுக்கு அழைப்புவிடலாம் என கருதியது. அணுவாயுதக் குறைப்பிற்கான
பிரச்சாரம் பொதுவாக செயலாற்றாத ஒரு அமைப்பு; வயதாகிவிட்ட ஸ்ராலினிசவாதிகள், கிறிஸ்தவர்கள், ஒரு சில
மத்தியதர வர்க்கத்தின் அமைதிவாதிகள் என கூறுவோர் ஆகியோருக்கு ஓய்வுகால இல்லம் போன்றது ஆகும்.
ஆனால் சோசலி தொழிலாளர் கட்சி, நம்பிக்கையிழந்த இத்தகைய கூட்டணி, பழைய
கட்சிகள், அமைப்புக்கள் இவற்றிற்கு எதிரான சமூக இயக்கத்திற்கு தொழிலாள வர்க்கத்திற்கு சுயாதீனமான அரசியல்
முயற்சிக்கு எதிராக வாதிட மிகவும் அத்தியாவசியமாக இருந்தது. அரசியல் வேறுபாடுகளை எழுப்ப மறுப்பது, போருக்கு
எதிரான பலதரப்பட்டோர் பங்கு கொள்ளும் இயக்கத்திற்கு இன்றியமையாதது என்றும் சோசலி தொழிலாளர் கட்சி
வலியுறுத்தியது. அப்பொழுது தான் எவரையும் பகைத்துக்கொள்ளாமல், போருக்கான பொது எதிர்ப்பின் தரத்தை அதே
முறையில் கொள்ள முடியும் எனவும் அது கூறியது.
உண்மையில், சோசலிச அரசியல்மீதுதான் இந்தத் தடை இருந்தது, ஏனெனில் இது
ஐரோப்பிய சக்திகள், மற்றும் ஐ.நா.தான் உண்மையில் அமெரிக்கப் போர்வெறிக்குத் தடுப்பாக இருக்கமுடியும் என்ற
கருத்தைக் கூறியவர்களுடைய ஆதிக்கத்திற்கு போர் எதிர்ப்பு இயக்கம் உட்படுவதை அனுமதித்தது.
இந்த தோல்வியுற்ற முன்னோக்குத்தான் போர் எதிர்ப்பு இயக்கம் அமெரிக்க, பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஓர் அரசியல் அச்சுறுத்தலாக வளரமுடியாமல் தடுத்துவிட்டது.
ஆயினும்கூட, போருக்குப் பின்னர், சோசலி தொழிலாளர் கட்சி ஒரு அரசியல்
வேலைதிட்டத்தை தொடங்கி வைத்தது; இதிலும் ஒரு புதிய கட்சி அமைக்கப்படுவதற்கு, அது சோசலிச கொள்கைகள்
வெளிப்படையாக எதிர்ப்பதையும், அனைத்து வர்க்கங்களும் ஏற்கக் கூடிய மிகக் குறைந்த அளவு ஜனநாயகக்
கோரிக்கைகளை ஒரு முகப்படுப்படுத்தலையும் கொண்டிருக்கவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது.
பொதுவாக ஆழ்ந்த அவநம்பிக்கையை காட்டும் சோசலி தொழிலாளர் கட்சி
காரியாளர்கள்கூட, தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிரிவுகள் தம்மை ஏற்கொண்டுள்ளதை பற்றி
சினமடைந்துள்ளனர். இதை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவர்கள் உறுதியாக இருந்ததால், தங்களுடைய
சோசலிச சிந்தனைகளை கைவிட்டு, தங்களோடு சேரத்தயாரக உள்ள அதிருப்தியுடைய தொழிலாளர், ஸ்ராலினிசக் கட்சி
அல்லது வேறு எவரையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள விரும்புகின்றனர்.
சோசலி தொழிலாளர் கட்சி
ஊக்குவித்த ரெஸ்பெக்ட் ஐக்கியக் கூட்டணியின் (RESPECT-Unity
coalition) பெருமைக்குரிய சாதனை, அது கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போர் எதிர்ப்பு
தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஜோர்ஜ் காலோவேயின் ஆதரவைப் பெற்றதுதான்; இவர் தன்னுடைய
சந்தர்ப்பவாத உறவுகளுக்காக அரபு முதலாளித்துவத்தினருடன் தொடர்பு கொண்டு மதிப்பிளந்தவர் மட்டுமல்லாது
வெளிப்படையாகவே மார்க்சிசத்திற்கு எதிராக தன்னுடைய விரோதப்போக்கை அறிவித்தவர். ஜூன் மாதம் நடைபெற்ற
ஐரோப்பிய தேர்தல்களில், இந்த அமைப்பு வேட்பாளர்களை நிறுத்தியபோது அவர்கள் அதிகாரபூர்வமான தலைப்பான "ரெஸ்பெக்ட்
ஐக்கியக் கூட்டணி (George Galloway)" என்பதின்கீழ்
நிறுத்தப்பட்டிருந்தனர்.
தொழிற் கட்சி, மற்றும் தொழிற் சங்கங்களிலிருந்து எதிர்த்து வெளிவந்து, ரெஸ்பெக்ட்
இன் வேலைதிட்டத்திற்கு உருக்கொடுத்து ஆதரவு தேடக்கூடிய பலரில் காலோவே முதலாவதாக இருப்பார் என்று சோசலி
தொழிலாளர் கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. தேர்தலில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற ஒருபக்க
நினைப்பில், சோசலி தொழிலாளர் கட்சி ஆசியர் வாழும் பகுதிகளில் நிறைய வாக்குகளைப் பெறுவதற்கு முற்றிலும்
அடிப்படைவாதங்கள் நிறைந்த முஸ்லிம் மத கருத்துக்களை ஏற்றுள்ளது. ஆனால் இதன் சந்தர்ப்பவாதத்தின் தன்மை உள்ள
நிலை அது மற்ற சக்திகள் இதன் திட்டங்களான சோசலிசமற்ற வகையை ஆதரிக்க முன்வந்தால் அவற்றோடும்,
தேர்தலுக்காக உவகையுடன் சேர்ந்து கொள்ளும் என இருக்கிறது.
சர்வதேசரீதியாக, சோசலி தொழிலாளர் கட்சி பிரிட்டனில் தனக்குள்ள செல்வாக்கை
வைத்து, ஐரோப்பிய முதலாளித்துவ-எதிர்ப்பு என்று கூறப்படும் அமைப்பில் ஒரு இடத்தைப் பெற விழைகிறது.
இதனால் ஐரோப்பிய சமூக அரங்கு என்பதைச்சுற்றியுள்ள இடது கூறுபாடுகளை அருகில்
கொண்டு வருகிறது. இதில் கையெழுத்திட்டவர்கள், சோசலி தொழிலாளர் கட்சி,
ரெஸ்பக்ட்-ஐக்கிய கூட்டணி, பிரிட்டனில் இருந்து ஸ்கொட்டிஷ் சோஷலிஸ்ட் கட்சி, பிரான்சில் இருந்து
LCR கட்சி, மற்றும் இதேபோன்று போர்த்துக்கல்,
டென்மார்க், கிரீஸ், லுக்ஸம்பேர்க், ஸ்பெயின் மற்றும் காடலோனியா ஆகியவற்றிலிருந்து வரும் முற்போக்கு குழுக்கள்
ஆவர்.
Partido della Rifondazione Comunista
ஐ தன்புறம் இழுத்துக் கொள்ளும் இதன் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை; ஏனென்றால்
Partido della Rifondazione Comunista
ஸ்ராலினிச கட்சிகளில் எதிரணியில் இடத்தை பிடித்துள்ளது.
ஜூன் மாத ஐரோப்பிய தேர்தல்களுக்காக வெளியிடப்பட்ட ஐரோப்பிய
முதலாளித்துவ-எதிர்ப்பு அறிக்கை தான்தான் போர் எதிர்ப்பு வெகுஜனங்களின் அரசியல் வாரிசு எனவும்
கூறிக்கொள்ளுகிறது. பின் இந்தப் பங்கை ஐரோப்பிய சமூக அரங்கிடம் அளிக்கிறது, அதற்காக இது வலியுறுத்திக் கூறும்
காரணம்: "ஜுன் 2004 தேர்தல்கள், இடைவிடாமல் பூகோள நீதிக்கு ஐரோப்பியர்கள் பாடுபட்டு வரும்
கோரிக்கைகள் திட்டங்கள் இவற்றிற்கான வாய்ப்பை தருகின்றன." என்பதாகும்.
சோசலி தொழிலாளர் கட்சியும் அதன் இணை சிந்தனையாளர்களும், ஐரோப்பிய
ஒன்றியத்திற்கு ஒரு தேசிய சீர்திருத்தவாத மாற்றீடை கொடுக்க முற்பட்டுள்ளனர்.
ஆனால் தலைப்பில் "பலமான ஐரோப்பிய அரசிற்கு எதிராக ஒரு சமாதனமான
ஐரோப்பா" என்ற தலைப்பில், இந்த அறிக்கை ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு ஒரு சட்டரீதியான தன்மையை
கொடுத்து, அதன் தேவைகளை காலினிகோசின் புகழ்பெற்ற அரசுகள் "ஒன்றாகச் செயல்பட்டு இயங்கும்" ஐரோப்பிய
ஒன்றியம் என்ற கோரிக்கையின்பால் நேரடியாக செலுத்துகிறது.
அது அறிவிக்கிறது: "முதன் முறையாக, ஐரோப்பிய அமைப்பில் அடையாளம் காணப்பட்டுள்ள
ஆளும் வர்க்கங்கள், ஐரோப்பிய மக்களிடமிருந்து அமெரிக்க ஆளும் வர்க்கத்தை எதிர்த்ததின் மூலம் சற்று சட்டபூர்வ
தன்மையை அடைந்துள்ளனர், இதற்காக ஜனாதிபதி புஷ்ஷின் சட்டவிரோத, காட்டுமிராண்டித்தனமான கொள்கைகளுக்கு
நன்றி செலுத்தவேண்டும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் எவ்வளவு செய்ய இயலும் என்பதைப் பற்றிய மாயைகளை நாங்கள்
கொண்டிருக்கவில்லை.
எங்களுடைய நிலை:
"போர் வேண்டாம்! ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச மோதல்களில் தலையிடுவதற்கு
போரினை பாவிப்பதை தவிர்க்கவேண்டும்"
ஐரோப்பிய மக்களை தேசிய வகையில் பிரிக்கும் போதும், தேசிய அரசுகளின் உரிமைகளை
நிலைநிறுத்தும்போதுதான் அது ஐரோப்பிய ஒன்றியத்தை அது எதிர்க்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்பை எதிர்க்கும்
பிரிவில், அறிக்கை அறிவிப்பதாவது; "அனைத்து அதிகாரங்களும் இறையாண்மை பெற்ற மக்களிடம் இருக்கவேண்டும் என்று
நாங்கள் நம்புகிறோம். அரசுகளின் தலையீடு இல்லாமல் நாடுகள் தங்களுடைய உரிமையை எதிர்காலத்தில் நிர்ணயிக்க
முடியும் என்று நாங்கள் அங்கீகரிக்கிறோம், நாங்கள் எங்களுடைய அரசியல் ஆய்வு எப்படி இருப்பினும், இடது சக்திகள்
இதற்கான போராட்டத்தில் இத்திசையில் இணைந்து நிற்கிறோம்.
ஜனநாயக உரிமைகளை, தேசிய இறையாண்மையை பாதுகாப்பதுடன் பொருத்தும் வகையினால்,
இந்த அறிவிப்பு மீண்டும் வெளிப்படையாக தேசிய அரசை தொழிலாள வர்க்கத்தின் உரிமையைப் பாதுகாக்க உறுதியளிக்கும்
கருவி என்று நினைத்து, அது ஆளும் வர்க்கங்களின் ஆணைகளை நிறைவேற்றும் முக்கிய கருவியாக இருக்காது என்றும் நினைக்கிறது.
"அரசுகள் அல்லாத நாடுகள்" என்ற குறிப்பு Basque,
Catalan என்று ஸ்பெயினில் உள்ள பிரிவினை அமைப்புகளையும்,
ஸ்கொட்லாந்து சோசலிச கட்சியுடைய தேசியவாதத்தையும் குறிக்கிறது. இத்தகைய இயக்கங்களை இடது அல்லது
முற்போக்கு என்று குறிப்பிடுவது தொழிலாள வர்க்கத்திடையே பிளவு மனப்பான்மை விதைப்பதை மறைக்கும் வகையில்
இருந்து, அது பிராந்திய செல்வந்த தட்டினருக்கான தங்கள் பூகோள பெருநிறுவனங்களுடனான தொடர்பை ஸ்தாபிப்பதற்கும்,
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து உதவித்தொகை கறந்தெடுப்பதற்காகவும்.
சோசலி தொழிலாளர் கட்சியும் அதன் கூட்டணி அமைப்புக்களும் ஒருமுறை கூட ஐரோப்பிய
ஐக்கிய சோசலிச அரசுகளை தோற்றவிக்கப்படவேண்டும் எனக்கூறியதில்லை என்பது வலியுறுத்தப்படவேண்டும். அவை வர்க்கமற்ற
"ஐரோப்பா, கீழிருந்து" என்ற கோரிக்கையை முன்வைக்கின்றன. இது "மற்றும் தொழிற்சங்க, விவசாய அமைப்புக்கள்,
சுற்றுச்சூழல் குழுக்கள், ஏதுமற்றோரினது இயக்கங்களான (வேலையற்றோர், வீடற்றோர், தஞ்சம் கோருவோர்), இனவெறி
எதிர்ப்பு இணையங்கள், கல்வி, அறிவுஜீத முயற்சிகள், மூன்றாம் உலகப் பிரச்சாரங்கள், அரசு சார்பற்ற அமைப்புக்கள்
என்ற அமைப்புகளுக்கும் இதில் இயங்குபவர்களையுமே அடையாளப்டுத்துகின்றன.
சுருங்கக் கூறின், இது ஐரோப்பிய சமூக அரங்கின் ஊகங்கள், நலன்கள் இவற்றால்
உருவாகக் கூடிய ஐரோப்பா பற்றிப் பாராட்டிப் பேசி, அது "ஒரு அசாதாரணமான வடிவமைப்பு, ஜனநாயகம், அலகு
சார்ந்த ஒற்றைப் பொறுப்பும் உடையது, "ஐரோப்பிய அளவிலான ஒரு புதிய இயக்கம் உருவாகி வெளிப்பட்டுள்ளது"
என்றும், "இப்பொழுது அரசியல் துறையில்" "முதலாளித்துவ-எதிர்ப்பு" முறையில் வெற்றியடைய வேண்டும் எனவும் குறிக்கிறது.
மீண்டும் காலினிகோசாலும், சோசலிச தொழிலாளர் கட்சியாலும் முன்னெடுக்கப்படும்
முன்னோக்கு, குட்டிமுதலாளித்துவ பிழைப்புவாதிகளின் ஒரு தட்டின் நலன்களைத்தான் வெளிப்படுத்துகிறது. அவர்கள்
இதுகாறும் உள்ள நிலையின் இடது-முழக்கமிடும் பாதுகாவலராக தங்களின் சிறப்புப் பாத்திரத்தினையும் சோசலிசத்தின்
உறுதியான எதிர்ப்பாளர்கள் என்பதையும் கைமாறாகக் கொடுப்பதன்மூலம், அதிகார நிலைகளிலிருந்து கடந்தகாலத்தில்
ஒதுக்கிவைக்கப்பட்ட தங்களின் நிலைகளை முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தியத்தை பார்க்கின்றனர். |