WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
The New York Times and the threat to cancel the November election
நியூயோர்க் டைம்ஸும், நவம்பர் தேர்தல்கள் இரத்து செய்யப்படுவதற்கான
அச்சுறுத்தலும்
By Barry Grey
20 July 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
புஷ் நிர்வாகம், நவம்பர் மாத ஜனாதிபதித் தேர்தலை ஒருவேளை இரத்து செய்யலாம்
என்பதற்கான விவாதங்களைத் தொடக்கியுள்ளது என்பது பற்றிய அரிய தகவல் வெளிப்பாடு பற்றி, ஒரு தலையங்கம்
எழுதுவதின் மூலமோ மற்றும் சற்றே செய்திச்சுருக்கத்தைவிடக் கூடுதலான செய்தியை வெளியிடுவதற்கோ, நியூ
யோர்க் டைம்ஸிற்கு ஆறு நாட்கள் ஆகியுள்ளன.
Newsweek
செய்தி இதழ், ஜூலை 11ம் தேதி ஞாயிறன்று, உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை, நீதித்துறையின் சட்ட ஆலோசனை
அலுவலகத்திலிருந்து தேர்தல் நாளையொட்டி ஏதேனும் பயங்கரவாத தாக்குதல் நடைபெறுமேயாயின், தேர்தல்களை
ஒத்திவைப்பதற்கான சட்ட அடிப்படை பற்றி ஒரு விரிவான பகுப்பாய்வை கேட்டுள்ளது என்ற தகவலை வெளியிட்டது.
அத்தகைய நடவடிக்கைக்கான மாற்றுத் திட்டம் பற்றிய முயற்சிகள்கூட, அதிலும்
வாக்குகள் எண்ணிக்கை நசுக்கப்பட்டு நிறுவப்பட்ட ஓர் அரசாங்கம், 9/11 நிகழ்வுகளை சாக்குப்போக்காக
காட்டி போர்களை தொடக்கியும், குடியுரிமைகளை தாக்கியும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள தடைகள், சமநிலை
பற்றி ஈவிரக்கமின்றி மிதித்து நசுக்கித்தள்ளும் ஓர் அரசாங்கத்திடமிருந்து வரும்போது, அமெரிக்க மக்களுடைய மிக
அடிப்படையான ஜனநாயக உரிமைகளுக்கு பேராபத்து விளைவிக்கக்கூடியதும், முன்னோடியில்லாத வகையிலுமான
அச்சுறுத்தலைத்தான் தெள்ளத்தெளிவாக பிரதிநிதித்துவம் செய்கிறது.
ஆயினும்கூட, "காலச் சான்றிதழ் போன்றது" என்று அழைக்கப்படும் ஒரு செய்தித்தாள்
கிட்டத்தட்ட ஒரு வார காலம் குறிப்பிடத்தக்க வகையில் இதைப்பற்றி மெளனம் சாதித்தது. ஜூலை 17, சனிக்கிழமை
அன்று டைம்ஸ் இறுதியாகப் பிரசுரித்தது, ஒரு செய்தித் தகவலும், தேர்தலை ஒத்திவைக்கும் கருத்தே கிடையாது
என்று அதிகாரிகள் கூறியதைப் பற்றிய தலையங்கக் குவிப்பும்தான். இந்தச்சிறு தகவல்கள் முழுப் பிரச்சினையையும் துரதிருஷ்டவசமானது
என்றதே ஒழிய, குறிப்பிடத்தகுந்த, முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் அநாகரிகச் செயல் என்று குறிப்பிடவில்லை.
"ஒரு கெட்ட சிந்தனை, நிராகரிக்கப்பட்டது" என்று தலையங்கம் கூறியுள்ளது, இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டது,
அதைப் பற்றி இனி ஏதும் கூறவேண்டியதில்லை என்ற கருத்தை உட்குறிப்பாகக் கொண்டுள்ளது.
ஒரு வேடிக்கைக்குட்பட்ட கவலை காட்டாத போலித்தன்மைக்குப் பின்னணியில் வேறு
ஏதோ ஒன்று உள்ளது. டைம்ஸின் உண்மையான போக்கை, இவ்வாறு சுருக்கமாகக் கூறமுடியும் "இதைப்பற்றி அதிகம்
பேசாவிட்டால், அதுவே நலம்! "
புஷ் நிர்வாகம் தேர்தல்களை இரத்து செய்வது பற்றிய விவாதங்களின் தொடர்பாக
அதிகம் வெளிப்படுத்தப்படவில்லை. இதில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள், அவர்களுடைய நிலைப்பாடு என்ன?
தேர்தல்கள் இரத்து செய்வதற்கு எம்மாதிரியான நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்ற அடிப்படை பற்றி எத்கைய
விவதாங்கள் நடந்தன? அப்படிப்பட்ட அசாதாரண நிகழ்விற்கு எத்தகைய பேரழிவுத் தொடக்கம் அளவுகோலாக
இருக்கவேண்டும்.? எந்த அதிகாரத்தின்படி, எந்த நெருக்கடிக்கால அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு,
இப்பொழுதுள்ள அரசாங்கம் தொடர்ந்து ஆட்சிசெய்ய முடியும்?
மேலே கணக்கில் எடுக்கப்பட்டுள்ள எதுவுமே ஆராயப்படவில்லை; ஆயினும் டைம்ஸ் முயற்சி
எடுத்துக் கொண்டு தானே ஆய்வை நடத்தி அமெரிக்க மக்கள் முன்னிலையில் உண்மையை முன்வைக்க அக்கறை ஏதும்
காட்டவில்லை. மாறாக, இதனுடைய செயலாற்றும் கோட்பாடு ஆபத்துக்களை மறைப்பதாகவும், மக்களை இருளில்
வைத்திருக்கவேண்டும் என்பதாகத்தான் உள்ளது.
இக் கட்டுரைகள் வெளியிடப்பட்ட முறையே இதை நன்கு நிரூபிக்கிறது. பொதுவாக செய்திகள்
ஊர்ந்து காணப்படும் சனிக்கிழமை வரை டைம்ஸ் பொறுத்திருந்தது; அப்பொழுது அதன் தினசரி வாசகர்கள் வாராந்திர
அளவில் குறைந்த ஊக்கத்தைக் கொண்டிருப்பர்; இதுவரை தேர்தலுக்கான அச்சுறுத்தல் பற்றி அச்சில் வருவதற்கு
டைம்ஸ் பொறுத்திருந்தது. இந்தச் செய்திக் கட்டுரையை 10 வது பக்கத்தில், அதிக கவனத்தை ஈர்க்காமல், வெளியிட்டு
அத்துடன் நீதித் துறையின் மறுப்புக்களை, அதாவது இத்தகைய தேர்தல் ஒத்திவைப்புத் திட்டத்தை அது ஆராயக்கூட
இல்லை என்பதையும், வெளியிட்டது. இந்த உண்மைகளே, டைம்ஸ் இப்பிரச்சினையை ஒரு முடிவுற்றுவிட்ட பிரச்சினை
என அளிக்கும் முயற்சியை பொய்யெனக் காட்டிவிட்டன.
உள்நாட்டு பாதுகாப்புத் துறையில் இருந்து தேர்தல்களை ஒத்திவைப்பது பற்றிய
வகையை ஆராயுமாறு எத்தகைய கோரிக்கையும் வரவில்லை என்று நீதித்துறை மறுத்ததாக கட்டுரை குறிப்பிட்டுள்ளது;
ஆனால் உள்நாட்டு பாதுகாப்புத் துறை அத்தகைய கோரிக்கை விடப்படத்தாக தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் முரண்பாடுகளைப் பற்றி எந்தக் கருத்தையும் கூறாமல் டைம்ஸ் தகவலைத் தொடர்கிறது.
தலையங்கம் இதைவிட அதிகமாக பளிச்சிடும் எதிரிடையான கருத்துக்களையும், அதிர்ச்சிகளையும்
கொண்டிருப்பது தேர்தல்களுக்கு அச்சுறுத்தல் பற்றி அதிக கேள்விகளை எழுப்ப வைப்பதுடன், இது கூறியதைவிட அதிக
பங்கு டைம்ஸிற்கு உண்டு என்பதைக் காட்டுகிறது. கடந்த வாரம் புஷ் நிர்வாகம், ஒருவேளை பயங்கரவாதத்
தாக்குதல் நேரிட்டால் நவம்பர் தேர்தலை ஒத்திவைப்பதற்கான வாய்ப்பை பரிசீலனை செய்கிறது என்பதைக்
கேட்க "உளைச்சல்" பெறுவதாக எழுதியுள்ளது.
அமெரிக்க தேர்தல் உதவிக் குழுவின் தலைவரான
DeForest Soaries
இந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ளதின் மூலம் ஒரு "நெருப்புப்புயலை" கிளப்பியுள்ளார் என்றும் டைம்ஸ் எழுதியுள்ளது.
இத்தகை "உளைச்சல் தரும்" நிகழ்வுகளுக்கும் அதையொட்டிய அரசியல்
"நெருப்புப்புயலுக்கும்" இடையே நியூ யோர்க் டைம்ஸ் பின் ஏன் மெளனமாக இருந்தது? டைம்ஸ் பத்திரிக்கையை செய்திக்காவும்
அரசியல் கருத்துரைகளுக்காகவும் படிப்பவர்களுக்கு இவ்விஷயம் பற்றி எதுவுமே தெரிந்திருக்காது.
புஷ் நிர்வாகத்தில் இதுபற்றிய தொடர்புடைய அதிகாரிகள் சிறிதும் கள்ளங்கபடம்
அற்றவர்கள் என்று தெரிவிக்கும் வகையில் டைம்ஸ் தொடர்ந்து கூறுகிறது: "எத்தகைய நல்ல உணர்வைக்
கொண்டிருந்தாலும், இதைப்பற்றிய வினாக்கள் அவநம்பிக்கை போக்குடன்தான் விடையிறுக்கப்பட்டன." தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைஸ் மற்றும்
Soaries
இருவரும் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கம்
இல்லை என்று மறுத்ததாகவும் தெரிவித்தபின்னர் அறிவிக்கிறது; "இந்தப் பிரச்சினை இப்பொழுது எழுப்பப்பட்டு,
தீர்க்கப்பட்டும் விட்டது நன்மையேயாகும்."
இத்தகைய வேண்டுமேன்றே குருட்டுத்தனம், அசட்டைப் போக்கு, நேர்மையற்ற
தன்மை இவற்றின் இணைப்புடன் டைம்ஸ் இவ்விஷயம் "தீர்க்கப்பட்டுவிட்டது" என்று அறிவித்துள்ளது. உண்மையாகவா?
Newsweek
செய்தியை வெளியிடுவதற்கு சில நாட்களுக்கு முன் மட்டுமே நடந்த, உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலர் டாம்
ரிட்ஜ், மாட்ரிட்டில் இரயில்கள் மீது குண்டுத்தாக்குதல்கள் மார்ச் மாதம் நடந்தவற்றை முன்னோடியாகக் காட்டி,
அமெரிக்காவில் தேர்தல்களை தடை செய்யும் நோக்கத்துடன், அல் கொய்தா ஒரு பயங்கரவாதத் தாக்குதலை
"நடைமுறைப்படுத்தக்கூடிய கட்டத்தில்" உள்ளது என்று கூறிய வினோதமான செய்தியாளர் கூட்டம் பற்றி கருத்து
என்ன? கடந்த வாரம் தேர்தல் உதவிக் குழு உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கையில், தனி மாநிலங்கள் தங்களுடைய
விருப்பத்தில் தேர்தல்களை இரத்து செய்யலாம் அல்லது வாக்காளர்களின் ஜனாதிபதிக்கான வாக்குகளை பறிக்கும்
வகையில் மாநிலச் சட்ட மன்றங்கள் மூலம் ஜனாதிபதித் தேர்வாளர்களை நியமிக்கும் உரிமையைக் கொண்டுள்ளன
என்று கூறிய கூற்றுக்கள் என்ன?
புஷ் நிர்வாகத்தின் தேர்தல் ரத்து செய்வது பற்றிய உள் விவாதங்களில் மிக நிரபராதித்தனமும்
அதே நேரத்தில், மிகவும் நம்பிக்கைக் குறைவிற்குட்டபட்டதுமான ஒரு கருத்தை, அதாவது, இவை அனைத்தும் உள்நாட்டுப்
பாதுகாப்புத்துறை, CIA,
FBI மற்றும் சில அமைப்புக்கள் சேகரித்துள்ள
"உளவுச் செய்தி" அடிப்படையில் எழுந்தது என்பதை பெரும் மதிப்புக் கொடுத்து, உட்குறிப்பாக, டைம்ஸ் ஏற்றுள்ளது.
ரிட்ஜூம் அவர் கோஷ்டியும் கூறுவதை ஆர்வத்துடன் ஏற்பது, இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த செனட்
உளவுத்துறைக் குழுவின் அறிக்கையில் ஈராக் போரை நியாயப்படுத்துவதற்காக, அரசாங்கத்தின் ஈராக்கின் பேரழிவு
ஆயுதங்கள் பற்றி, மற்றும் சதாம் ஹுசைனுக்கும் அல்கொய்தாவிற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய கூற்றுக்கள்
தவறு என்று வெளியிடப்பட்டதனால் பாதிக்கப்படவில்லை, என்பது தெளிவாகிறது.
புஷ் நிர்வாகம் அமெரிக்க மக்களுக்கு ஈராக்கிய "அச்சுறுத்தல்" பற்றி மலை போல்
சான்றுகளைக் குவித்துக் கூறிய பொய்கள் இருந்தபோதிலும், இந்த நிர்வாகம் இரகசியமாக ஈராக்கிய எழுச்சியாளர்களையும்
பிடிபட்ட பயங்கரவாதிகளையும் சித்திரவதைப்படுத்தியுள்ளது என்ற போதிலும், முன் கூட்டியே எச்சரிக்கைகள்
வந்துள்ளன என்பதற்கு ஆதாரம் இருந்தும் ஏன் 9/11 தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை
என்பதை விளக்காவிடினும் கூட, டைம்ஸின் உட்குறிப்பின் படி அரசாங்கத்தின் காரணங்களை பற்றிக் கேள்வி கேட்பது
கூட முறையற்றது என்று ஆகிறது.
செய்தித்தாள்களை வெளியிடுபவர்களுக்கு நன்கு தெரியும். புஷ் நிர்வாகம் ஓர் அரசியல்
குற்றஞ்சார்ந்த குழுவின் தலைமையில் நடத்தப்படுகிறது என்றும், அதிகாரத்தை நெறியற்று கைப்பற்றி, சதித்திட்டத்தின்
மூலமும் தூண்டுதல் வகையிலும் ஆட்சி நடத்துகின்றனர் என்பதும் அவர்களுக்கு தெரியும். புஷ், செனி, ரம்ஸ்பெல்ட்
மற்றும் அவர்களுடைய கோஷ்டி, எத்தகைய மதிப்பையும் ஜனநாயக உரிமைகளுக்கோ, அரசியல் அமைப்பிற்கோ
கொடுப்பதில்லை என்றும், சட்டத்திற்குப் புறம்பான வகைகளைக் கையாண்டு அதிகாரத்தில் நிலைத்திருக்க பாடுபடுபவர்கள்
என்றும் அவர்களுக்கு நன்கு தெரியும்.
புஷ் நிர்வகத்திற்கு இப்பொழுதுள்ள கடும் நெருக்கடியை எடுத்துக் கொண்டால்,
போரெதிர்ப்பு உணர்வு பெருமளவு வளர்ந்துள்ளது என்பதை மறுக்க முடியாது, மற்றும் அதிகாரபூர்வமான
கருத்துக்கணிப்பு உட்பட பல குறிப்புக்களை புஷ்ஷின் மறு தேர்வு பெரும் கேள்விக்குறியாகிவிட்டது என்பது,
இவையனைத்தும் தேர்தலுக்கு முன்பு ஒரு வகையான ஆத்திரமூட்டல் இருக்கும் என்ற அச்சத்தை உண்மையாக்குகின்றன.
ஒரு வாரம் முழுவதும் மிகுந்த நிதானத்துடன் தங்கள் மெளனத்தைக் காத்திட்ட
பொழுது, புஷ் நிர்வாகம் நவம்பர் தேர்தல்களை இரத்து செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது பற்றி, அரசியல்
நடைமுறை கடுமையான விவாதத்தில் ஆழ்ந்திருத்தது என்பதை டைம்ஸின் ஆசிரியர்கள் நன்கு அறிவர். செய்தித்தாளில்
மிக உயர் பதவி வகிப்போர், புஷ் நிர்வாகத்திடம் இருந்து "நம்பிக்கை தரக்கூடிய மறுப்புக்கள்" பெறுவதற்கு
முயற்சியும் மேற்கொண்டிருக்கலாம்; அத்தகைய மறுப்புக்கள் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக சதித் திட்டங்கள்
போடப்படுவதை மறைப்பதற்கு செய்தி ஊடகத்திற்கு நன்கு பயன்படும்.
மயக்கத்தில் ஆழ்த்தக்கூடிய தக்க மறுப்புக்கள் வெளிவந்து நடைமுறைக்குள் சீற்றங்கள்
தணியும் வரை பொறுத்திருந்து பின்னர் செய்தியை வெளியிட ஏடு முன்வந்து, இந்த விஷயத்திற்கு "தீர்வு
காணப்பட்டுவிட்டது" என்றும் கூறியுள்ளது.
வேண்டுமென்றே கையாளப்படும் இத்தகைய போலித்தனங்கள் நியூ யோர்க்
டைம்ஸிற்குப் புதிதல்ல. உதாரணமாக, மார்ச் 2002 ல், அமெரிக்கத் தலைநகர்மீது பயங்கரவாதிகள்
அணுவாயுதத் தாக்குதல் நடத்தினால் அதற்கு முன்னெச்சரிக்கையாக புஷ் நிர்வாகம் இரகசியமாக ஒரு "நிழல்
அரசாங்கத்தை" நிறுவியுள்ளது, என்று வாஷிங்டன் போஸ்ட் ஒரு முதல் பக்க செய்தியை, உண்மையை,
வெளியிட்டபோது, இதைப்பற்றி சிறிதும் அக்கறை காட்டாத மேலெழுந்தவாரியான இரு கட்டுரைகளை டைம்ஸ்
வெளியிட்டு, இதைப்பற்றி ஒரு தலையங்கம் கூட எழுதவில்லை.
புஷ் நிர்வாகத்தின் இச்செயல், இன்னும் அது நடைமுறையில் உள்ளது, ஜனநாயக,
அரசியலமைப்பு விதிகளுக்கு முன்னோடியில்லாத வகையில் ஆபத்தை விளைவிக்கும் தன்மையுடையது ஆகும். ஒரு நிர்வாக
உத்தரவின் படி, 100-150 பேர் அடங்கிய தேர்ந்தெடுக்கப்படாத நிர்வாகத் துறை அதிகாரிகளை, கிழக்குக்
கடற்கரை மலைப்பகுதிகளில் உள்ள கோட்டைகளுள் இருக்கும் நிலவறைக்குள் வாழும் அதிகாரிகளை, 90-நாட்கள்
சுழற்சி முறையில் அங்கிருப்பவர்கள், வாஷிங்டன்மீது அணுவாயுதத் தாக்குதல் நடக்கும் பட்சத்தில் அதிகாரத்தை
தாங்களே செலுத்த தயாராக இருக்கும், தயார் நிலையில் உள்ள ஓர் அரசாங்கத்தை வெள்ளை மாளிகையானது
அமைத்துள்ளது.
சட்ட மன்றம் அல்லது நீதித்துறைப் பிரிவுகளின் அதிகாரிகள் எவரும் இதில் சேர்த்துக்
கொள்ளப்படவில்லை; தேசிய சட்ட மன்றத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவர்களோ அல்லது முறையாக
அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதிக்குப் பின் அதிகாரம் கொள்ளுவோரும் கூட இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளதைப்
பற்றி தெரிந்திருக்கக்கூட இல்லை.
ஒரு தேர்தல் இரத்து செய்யப்பட்ட பின்னர், எவ்வகையான அரசாங்கம் வெளிப்படும்
என்பதை குறிக்கும் வகையில் இந்த நிழல் அரசாங்கம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அது இராணுவம், போலீஸ்
இவற்றின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சர்வாதிகாரமாக அமையும்.
தயார் நிலையில் உள்ள இந்த போலீஸ் அரசாங்கம், தேர்தல்களை ஒத்திவைப்பது
பற்றி அரசாங்கத்திற்குள் நடக்கும் உள் விவாதங்கள், பயங்கரவாத தாக்குதல் திறன் பற்றியவையாக இல்லை
என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. 9/11 போன்ற மிகப் பெரிய தாக்குதல்கள் மீண்டும் நடைபெறுமேயானால்,
இயற்கையின் பெரும் சீற்ற அழிவு போல், அவை மிகவும் தடைகளை தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது வெளிப்படை.
ஆனால், 9/11 க்குப் பிறகு, புஷ் நிர்வாகம் ஓர் அச்சம், பெரும் பீதி இவற்றைத் தோற்றுவிக்கும் சூழ்நிலையை
வேண்டுமென்றே, அது "பயங்கரவாதத்தின்மீதான போரை" வெளியில் தொடரவும், உள்நாட்டின் ஜனநாயக உரிமைகள்
மீது தாக்குதல்களை கொள்ளவும், உள்நாட்டு பாதுகாப்புத் துறை ஒன்றை நிறுவவும், தேசபக்தி சட்டத்தை
இயற்றுவதை நியாயப்படுத்தவும்தான் பயன்படுத்தியுள்ளது.
நிர்வாகம் நவம்பர் தேர்தலை உண்மையாகவே தடைக்கு உட்படுத்த அல்லது இரத்து
செய்ய விழைகிறதோ இல்லையோ, வருங்காலத்தின் தேர்தல்கள் நிகழாவகையில் செயல்படுத்துவதற்கு ஒர் அதிகாரத்தை
ஏற்படுத்தும் அரசியல் முயற்சியைத் தொடங்கி விட்டது. ஏற்கனவே, வாஷிங்டன் போஸ்ட் உட்பட பல முக்கிய செய்தித்
தாழ்களிலும் விளக்கக் கட்டுரைகள் இடம்பெற்றுவருகின்றன, தேசியசட்ட மன்றத்திற்கு இரு கட்சியையும் சார்ந்த,
"நடுநிலை"க் குழு ஒன்றை அமைத்து தேசிய தேர்தலை ஒத்திவைக்க அல்லது இரத்து செய்யும் அதிகாரம் பெற்றிருக்கும்
வகையில் அதிகாரம் அதற்குக் கொடுக்கவேண்டும் என்ற அழைப்பை வாஷிங்டன் போஸ்ட் விடுத்துள்ளது.
1933ல் பெப்ரவரி மாதம், நடைபெற்ற இழிபுகழ்பெற்ற ரிக்டாக் தீவிபத்து, இப்படி
ஜனநாயகத்தை புறக்கணிக்கும் செயலுக்கு போலிக்காரணமாக பயங்கரவாதத்தை பயன்படுத்தியதற்கு தக்க ஒப்புமை
உதாரணம் ஆகும். பற்றியெரிந்திருந்த பாராளுமன்றம் கொடுத்த வாய்ப்பை ஹிட்லரும் நாஜிக்களும் பற்றிப்பயன்படுத்தி
தீவிரமான மக்கள் உள்ளக் கொந்தளிப்பு, அச்சம் இவற்றைத் தூண்டிய வகையில் ஏற்படுத்தி பாராளுமன்றத்தையே,
பாராளுமன்ற விதிமுறைகளை தள்ளிவைக்கும் சட்டத்தை இயற்றவைத்ததுடன், ஜனநாயக உரிமைகளை அகற்றி ஒரு
போலீஸ் அரசாங்கத்தை ஏற்படுத்தி, ஹிட்லர் உண்மையில் வரம்பற்ற அதிகாரங்களை செலுத்த அனுமதிக்கவும் செய்தனர்.
தேசிய சட்ட மன்றம், அமெரிக்கத் தேர்தலை தள்ளிவைக்க இசைவு தருமேயானால் அது, ஹிட்லரின் "செயலாக்க
உதவும் " மார்ச் 1933 சட்டத்தின் தற்கால, அமெரிக்க சமச்செயலாக செய்துவிடும்.
மக்கள் வாக்கு அளிக்கும் உரிமைக்கு எதிராக இப்பொழுது நடக்கும் சதியிலும், புஷ்
நிர்வாகத்தின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல் இவற்றைப் பொறுத்த வரையில் நியூயோர்க் டைம்ஸின்
பங்கு இழிவானது என்பது தெளிவாகிறது; இந்த முன்னாள் அமெரிக்க தாராள கொள்கையின் குரல் இத்தகைய
நிலைமை வளர்வதை எதிர்க்க ஏதும் செய்யாது. நேர்மையற்ற மற்றும் அரசியல்ரீதியில் பிற்போக்கான பங்கை
டைம்ஸ் கொண்டுள்ளது, தாராண்மை கொள்கையின் பொறிவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; அரசியல் நிறுவனத்திற்குள்ளே
ஜனநாயக உரிமைகளை காத்தல் பற்றி தீவிர அக்கறை கொண்டிராத தன்மையும் இதன்மூலம் புலப்படுகிறது.
மேலும், முழு அரசியல் நிறுவனமும் அரசியல், அறநெறி அளவில் அழுகிப்போனமைக்கும், அமெரிக்க முதலாளித்துவ
ஜனநாயகத்தின் தோல்விக்கும் சான்று அளிக்கிறது.
டைம்ஸால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ஆளும் செல்வந்தத்தட்டின் பகுதிகள், மிகக்
கூடுதலான முறையில், வெளிப்படையாக மரபுவழியிலான முதலாளித்துவ ஜனநாயக நடைமுறைகளின் தகர்ப்பை
அச்சத்துடனும், முன்னுணர்வுடனும் கண்டு, எல்லாவற்றுக்கும் மேலாக மிகப்பெரிய சமுதாய மற்றும் அரசியல் விளைவுகள்
கீழிருந்து வரும் என்று அஞ்சுகின்றனர். அவர்கள் நியாயம், நிதானம் இவற்றின் துணைகொண்டு முறையிட்டு ஆளும்
செல்வந்தத்தட்டின் மிகவும் பிற்போக்கான பகுதிகளைத் தடுத்து நிறுத்தவும், அதே நேரத்தில் அவர்கள் உழைக்கும்
மக்களை அரசியல் ரீதியில் நிராயுதபாணி ஆக்கவும், தங்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க முதலாளித்துவ
ஆளும் செல்வந்த தட்டிற்கெதிராக அவர்கள் அணிதிரளாமல் தடுக்கவும் பாடுபடுகின்றனர்.
See Also :
அமெரிக்கத் தேர்தலை இரத்து
செய்ய புஷ் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகள்
Top of page |