World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Socialist Equality Party files petitions for Michigan congressional candidate

மிக்சிகன் பாராளுமன்ற வேட்பாளருக்காக சோசலிச சமத்துவக் கட்சி வேட்புமனு தாக்கல்

By E. Galen
16 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

மிக்சிகன் மாநிலம் 15-வது நாடாளுமன்ற மாவட்டத்தில் ஜெரி வைற் ஐ வாக்குப்பதிவில் சுயேட்சை வேட்பாளராக ஏற்றுக்கொள்வதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் எனக் கோரி சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள், வாக்காளர்கள் கையெழுத்து அடங்கிய மனுக்களை வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளனர். ஜூலை 14-ல் SEP, மாகாணத் தலைநகர் லான்சிங் இல் உள்ள தேர்தல் அலுவலக செயலாளரிடம் 4500-க்கு மேற்பட்ட மிக்சிகன் மாகாண வாக்காளர்களின் கையெழுத்து அடங்கிய மனுவை தாக்கல் செய்தனர். வாக்குப்பதிவில் கலந்துகொள்ளும் வேட்பாளர் 3000- வாக்காளர்கள் கையெழுத்தை தாக்கல் செய்தால் போதும்.

தேர்தல் அலுவலக செயலாளர், கையெழுத்து இட்டவர்களை பதிவு செய்த வாக்காளர்களா என சரிபார்த்து, அடுத்த மாதம் கேட்கப்படுவதற்குரிய வாய்ப்பின்போது, மாநில தேர்தல் வாரியத்திற்கு தேர்தல் தகுதியை பெறுவதற்கு பரிந்துரை செய்வார்.

கடந்த இரண்டு மாதங்களில் டசின் கணக்கான SEP ஆதரவாளர்கள் இந்த கையெழுத்துக்களை திரட்டினர். பதினைந்தாவது நாடாளுமன்ற மாவட்டம் மாகாணத்தில் தென்கிழக்கு முனையாகும். இந்த மாவட்டத்தில் மன்ரோ கவுண்டி, வாஷ்டனா கவுண்டியில் உள்ள அன் ஆர்பர் மற்றும் ஒய்ப்சிலான்டி நகரங்கள் மற்றும் டெட்ராய்ட் புறநகர்களான ரோமுலஸ், டெய்லர், இங்க்ஸ்டர், உட்ஹேவன்ஸ், பிளாட் ராக் டியர்பானின் ஒரு பகுதி (போர்ட் கார் கம்பெனி தலைமை அலுவலகம் உள்ள இடம்) மற்றும் டியர்பான் மலைப்பகுதிகள் அடங்கியுள்ள வெய்ன் கவுண்டியின் தென்மேற்கு பகுதியும் இதில் உள்ளடங்கும்.

இந்த மாவட்டத்தில் அரைடசின் பிரதான மோட்டார் நிறுவனங்கள் உள்ளடங்கி உள்ளன, பெரும்பாலானவை போர்டுக்கு சொந்தமானவை ஆகும். ஏனைய பிரதான வேலைகொள்வோருள் மிச்சிகன் பல்கலைக் கழகம் மற்றும் அதன் மருத்துவ மையம், டிட்ராயிட் -வெய்ன் கவுண்டி பெருநகர் விமான நிலையம், மோட்டார் பொருட்கள் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மேஸ்கோ, மற்றும் மொன்ரோ அருகில் பெரும் மின்சார நிறுவனங்கள் பலவற்றை இயக்கி வரும் டிட்ராயிட் எடிசன் ஆகியன உள்ளடங்கும்.

இந்த மாவட்டத்தில் ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக் கழகம் மற்றும் ஒய்ப்சிலான்டியில் உள்ள கிழக்கு மிச்சிகன் பல்கலைக் கழகம் ஆகிய இரண்டு பிரதான கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் பலமான ஆதவைப் பெற்றது. அதேபோல பல்வேறு சமுதாய கல்லூரி வளாகங்களிலும் (community college campuses) : வாஷ்ட்டனா கவுன்டி சமுதாய கல்லூரி, வெய்ன் கவுன்டி சமுதாய கல்லூரி, ஹென்றி போர்டு சமுதாயக் கல்லூரி, மொன்ரோ கவுன்டி சமுதாயக்கல்லூரி- வளாகங்களிலும் பலமான ஆதரவு கிடைத்தது.

இந்த மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகைகள் கொண்ட நகரமான அன் ஆர்பரில் பெரும்பாலான கையெழுத்துக்கள் திரட்டப்பட்டன. ஆனால் ஒய்ப்சிலான்டியில் உள்ள ஓகியோ, டொலிடோவின் வடக்கே 15 மைல்கள் தொலைவிலுள்ள பழைய தொழில்துறை நகரமான மொன்ரோவிலும் நூற்றுக்கணக்கானவர்கள் கையெழுத்திட்டனர். பல பெரிய கார் தொழிற்சாலைகள் உள்ள மற்றும் தொழிலாள வர்க்க டெட்ராய்ட் புறநகர்ப் பகுதிகளான டெய்லர் மற்றும் இங்க்ஸ்டரிலும் நூற்றுக்கணக்கானவர்கள் கையெழுத்திட்டனர். இந்த பகுதிகளில் மிக அதிகமாக கறுப்பு இன தொழிலாளர்களும் இளைஞர்களும், வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மிகக்கடினமான சமுதாய சூழ்நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

பிரச்சார ஆதரவாளர்கள் வர்த்தக வளாகங்களிலும், பல்பொருள் அங்காடிகளிலும், பலசரக்குக்கடைகளிலும், கடன் வழங்கும் சங்கங்களிலும், மருந்துக்கடைகளிலும், கல்லூரி மாணவர்கள் கூடும் இடங்களிலும், கையெழுத்துக்களை திரட்டினர். மைக்கல் மூரின் திரைப்படமான பாரன்ஹீட் 9/11 -ஐ பார்க்க வந்தவர்களிடமிருந்து குறிப்பிட்ட பலமான ஆதரவை வென்றனர்.

ஜெரி வைற் ஐ வேட்பாளராக நிறுத்துவதில் SEP மனுவில் கையெழுத்திட்ட பலருக்கு மத்திய பிரச்சனை ஈராக் போராக இருந்தது. கையெழுத்திட்டவர்களில் பலர் ஜனநாயகக்கட்சி வேட்பாளர் ஜோன் கெர்ரியின் போர் ஆதரவு மனப்பான்மையால் ஆத்திரம் அடைந்தனர். அது மாவட்ட ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் டிங்கெலால் ஆதரிக்கப்டுவது குறித்தும் சீற்றம் கொண்டனர்.

பாரம்பரிய தாராண்மை மற்றும் போர் எதிர்ப்பு பகுதிகளான அன் ஆர்பர் போன்ற பகுதிகளில் மட்டுமல்லாமல், தொழிலாள வர்க்கம் வாழுகின்ற புறநகர் பகுதிகளிலும், போர் எதிர்ப்பு ஆவேச உணர்வு நிலவுவதை SEP ஆதரவாளர்கள் எதிர்கொண்டனர். இந்த உணர்வின் தீவிரம் தேர்தலில் போர் எதிர்ப்பு சோசலிச வேட்பாளரை இடம்பெறச்செய்வதற்கு மனுவில் கையெழுத்திட உடனடியாக சம்மதித்தததில் வெளிப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல், மனுவில் கையெழுத்து வாங்கியபோதே அந்தந்த இடங்களிலேயே நூற்றுக்கணக்கான டாலர்களை நன்கொடையாகவும் தொழிலாளர்கள் வழங்கினார்கள்.

SEP மனுவில் கையெழுத்திட்டவர்கள் எழுப்பிய மற்றொரு முக்கிய பிரச்சனை சமூக சமத்துவம் பற்றியதாகும். ஊடகங்கள் நீட்டி முழக்குவதைப்போல் பொருளாதாரம் சீரடையவில்லை, மாறாக தொடர்ந்து பாதுகாப்பற்ற நிலை நீடிக்கும், நகர மக்களை வாட்டும், பொருளாதார பின்னடைவும் ஊதிய வெட்டும் தங்களை பாதிக்கிறது என்ற வாழ்க்கை அனுபவத்தை சந்தித்துக்கொண்டிருக்கின்ற மக்களைத்தான் SEP தேர்தல் பிரசாசரத்தில் இடைவிடாது எதிர்கொண்டது. வறுமையும், சமுதாய புறக்கணிப்பும் வளர்ந்து கொண்டு வருவதை சமூக ஊழியர்கள் வர்ணித்தனர். தொழிற்சாலைகள் வேகத்தைக் கூட்டுவதாகவும் கதவடைப்பு செய்வதற்காகவும் தொழிலாளர்கள் கூறினர். மிக உயர்ந்த தேர்ச்சிபெற்ற பொறியாளர்கள் எவ்வாறு கதவடைப்புக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும் எவ்வாறு ஒருமணி நேரத்திற்கு 7- டாலர்கள் கொடுக்கும் வேலையை எடுக்கும்படி நிர்பந்திக்கப்படுகின்றனர் என்றும் கூறினர்.

இந்த பிரச்சாரத்தில் அடிக்கடி எழுப்பப்பட்டது எதுவெனில் அரசாங்கத்தின் மீது அவ நம்பிக்கை நிலவுவது குறிப்பாக புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" பிரகடனம் பற்றி, ஊடகங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்தது பற்றியதாகும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் எதிர்ப்பு கண்டனப் பேரணிகளிலும் WSWS -ஐப் படிப்பதிலும் ஈடுபட்டிருக்கும் மக்களை அல்லது SEP யை அறிந்தவர்களை ஆதரவாளர்கள் சந்தித்தனர்.

SEP வேட்பாளர், ஜெரி வைற், வயது (45) சோசலிச இயக்கத்தில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் ஆவார். அவர் நியூயோர்க் நகரில் யுனைடெட் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் ஊழியராகயிருந்த போது மற்றும் அவர் டீம்ஸ்டர் யூனியன் உறுப்பினராக இருந்தபோது சோசலிச இயக்கத்தில் சேர்ந்தார். சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கஸ் லீக்கின் சார்பில் அதே மாவட்டத்தில் பாராளுமன்ற வேட்பாளராகவும், 1996- ஜனாதிபதி தேர்தலில் SEP- ன் ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிட்டவர்.

ஜெரி வைற் இன் பிரதான எதிராளி ஜனநாயகக் கட்சியின் இன்றைய காங்கிரஸ் உறுப்பினர் ஜோன் டிங்கல் ஆவார். அமெரிக்க நாடாளுமன்ற கீழ்சபையில் (பிரதிநிதிகள் சபையில்) நீண்டகாலமாக தொடர்ந்து பணியாற்றி வருபவர், அவர் ஏறத்தாழ 50- ஆண்டுகளாக அந்த இடத்தை வகித்து வருகிறார். (அதற்கு முன்னர் அவரது தந்தை 20- ஆண்டுகள் அதே சபை உறுப்பினராக பணியாற்றியவர்). இது பெரும்பாலும் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் நிறைந்த மாவட்டம், எனவே குடியரசுக் கட்சிக்காரர்களிடமிருந்து அவர் கடுமையான எதிர்ப்பை சந்திக்கவில்லை. ஆனால் டிங்கலின் சொந்த அரசியல் கருத்துக்கள், குறிப்பாக போருக்கு அவரது ஆதரவு, மாவட்ட மக்களில் மிகப்பெரும்பாலோரது உணர்வுகளுக்கு எதிராக உள்ளது.

Top of page