:
வட அமெரிக்கா
Stop the Democratic Party's attack on third-party campaigns!
Place SEP candidate Tom Mackaman on the
ballot in Illinois!
மூன்றாவது கட்சி பிரச்சாரத்தின் மீது ஜனநாகக் கட்சி தாக்குதலை நிறுத்து!
SEP வேட்பாளர்
''ரொம் மக்கமனை வாக்குப்பதிவில் சேர்த்துக்கொள்!
Statement of the Socialist Equality Party
3 July 2004
Back to screen version
இல்லினோய் மாகாண சட்டசபைக்கு
SEP வேட்பாளர் ரொம்
மக்கமன் போட்டியிடுவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சியை கண்டித்து சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர்கள்
அனைவரும் அமெரிக்காவிலும், உலகம் முழுவதிலும் ஜனநாயக உரிமைகளை காத்து நிற்பவரும் இல்லிநோய் சேம்ப்பைன்
கவுண்டி கிளார்க்கின் அலுவலகத்திற்கு வெள்ளம் போல் கண்டனக் கடிதங்களை குவிக்கும்படி கேட்டுக்கொள்கிறது. ஜனநாயகக்
கட்சியும், குடியரசுக் கட்சியாலும் விடப்படும் ஜனநாயக விரோத சவால்களை முறியடிப்பதற்கு இதர மூன்றாவது கட்சிகள்
அனைத்தும் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று
SEP கேட்டுக்கொள்கிறது.
மக்கமனும் அவரது ஆதரவாளர்களும் தாக்கல் செய்த மனுவை இல்லினோய் இல் உள்ள ஜனநாயகக்கட்சி
அலுவலர்கள் ஆட்சேபித்தனர், அதில் 2032 கையெழுத்துக்கள் அடங்கியிருந்தன, ஒரு சுயேட்சை வேட்பாளராக வாக்குப்பதிவில்
கலந்து கொள்ளும் அந்தஸ்தை பெறுவதற்கு 1,344- வாக்காளர்களின் கையெழுத்துக்கள் போதும். மாநிலத்தில் உள்ள
கிழக்கு-மத்திய பாகமான சேம்பைன்-நகரத்தில் உள்ள இல்லினோய் மாகாண சட்ட சபையில் 103-வது மாவட்ட
பிரதிநிதியாக பதவியில் இருக்கும் ஜனநாயகக் கட்சியை சார்ந்த
Naomi Jakobsson-க்கும்
அவரை எதிர்த்து நிற்கும் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கும் எதிராக
SEP வேட்பாளர்
போட்டியிடுகிறார்.
மக்கமனும் அவரது SEP
பிரதிநிதிகளும் ஜனநாயகக் கட்சியின் ஆட்சேபனைக்கு எதிராக, ஜூலை 6- செவ்வாய்கிழமை காலை 10-மணிக்கு
சேம்ப்பைன் கவுண்டி நீதிமன்ற அறையில் வாதாடுவார்கள். உள்ளூர் தேர்தல் வாரிய முடிவு அறிவிக்கப்பட்ட 10- நாட்களுக்குள்
வேட்பாளர் அல்லது ஆட்சேபனை எழுப்பியவர், சர்குட், நீதிமன்ற கிளார்க்கிற்கு நீதித்துறை மறு பரிசீலனை மனுவை
தாக்கல் செய்யலாம்.
எங்களது வேட்பாளரை வாக்குப்பதிவிலிருந்து புறக்கணிக்க ஜனநாயகக் கட்சி
மேற்கொண்டுள்ள முயற்சியை நிராகரிக்கும்படி கோரும் மின்னஞ்சலை சேம்பைன் கவுன்டி தேர்தல் குழுவுக்கு அனுப்புமாறு
SEP அழைப்பு விடுக்கிறது. கேம்ப்பைன் கவுண்டி கிளார்க்
மார்க்ஷெல்டன் அலுவலகத்திற்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட வேண்டும்.
mail@champaigncountyclerk.com
மின்னஞ்சல்களின் பிரதிகளை உலக சோசலிச வலைத் தளத்திற்கு அனுப்புமாறு
தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.
ஆட்சேபனை மனுவை சேம்பைன் கவுண்டி ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவரும்
தற்போது அக்கட்சியின் பொருளாளராக பணியாற்றி வருபவருமான
Geraldine Parr தாக்கல் செய்திருந்தார்.
SEP ஆதரவாளர்கள்
திரட்டியிருந்த 1,021 வாக்காளர் கையெழுத்துக்கள்--- மொத்தம் திரட்டிய கையெழுத்துக்களில்
பாதிக்குமேற்பட்டவை---- செல்லாது என்று அந்த மனு கூறியது. இந்தக் குற்றச்சாட்டில் உண்மையும் இல்லை, சட்ட
அடிப்படையும் இல்லை. மாறாக கேசத்தை பிளந்துகொண்டு வாதிடும் சட்ட நுட்ப அடிப்படைகள் மட்டுமே உள்ளன. சில
கையெழுத்துக்கள் செல்லாது ஏனெனில் அவற்றில் கோவையாக எழுத்துக்கள் இல்லாது அச்சிட்ட எழுத்துக்கள் உள்ளன,
அல்லது "முகவரிகள் இல்லை, அல்லது முழுமையாக இல்லை'' என்று கூறியிருக்கிறார்கள். (இதன் மாடி குடியிருப்பு எண்கள்
சரியாக இல்லை).
ஆட்சேபிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் 80-முதல் 90-சதவீத மனுவில்
கையெழுத்திட்டிருப்பவர்கள் வசித்த முகவரி ஒன்று இப்போது வாழுகின்ற முகவரி வேறொன்று என்பதுதான் பிரதான
குற்றச்சாட்டாகும். இது பெரிதும், மாணவர் சமுதாயத்தில் பொதுவான இயல்நிகழ்வாகும்---- கேம்பைனில்தான்
இல்லினோய் பல்கலைக்கழகம் உள்ளது---- அங்குள்ள மக்கள் அடிக்கடி தங்களது வீடுகளை மாற்றிக்கொள்வது வாடிக்கை.
இதை அடிப்படையாகக் கொண்டு ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியிருப்பது மாணவ
இளைஞர்களின் ஜனநாயக உரிமைகள் மீது அவர்கள் கொண்டிருக்கும் தீவிரமான விரோதப்போக்கைக் காட்டுகிறது.
இந்த ஆட்சேபனைகள் ஒட்டுமொத்தமாக கற்பனை அடிப்படையில் அமைந்துள்ளன, ''அந்த
சீட்டுக்களிலுள்ள வாக்குமூல கையெழுத்துக்கள் நோட்டரி பப்ளிக் அல்லது ஏனைய முறையான அதிகாரி சான்றிதழ்
அளிக்கவில்லை'' என்று கூறுகிறார்கள். எனவே அந்த சீட்டிலுள்ள அனைத்து கையெழுத்துக்களும் செல்லாதவை.
உண்மையிலேயே, 105 பக்கங்களைக் கொண்ட கையெழுத்துக்களையும் சுற்று வட்டம், மற்றும் நோட்டரி பப்ளிக்
கையெழுத்திட்டுள்ளனர்.
SEP மனுவிற்கு ஜனநாயகக்கட்சி
தெரிவித்துள்ள ஆட்சேபனை ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, முழுமையான கோழைத்தன நடவடிக்கை -----விஷம்
வைத்துக் கொல்பவர், அல்லது கொள்ளைக்காரர் தனது தடயமே தெரியாமல் காரியத்தை முடிப்பதுபோன்று
செய்திருக்கிறார்கள். மாநில ஜனநாயகக்கட்சியின் பிரதிநிதியான ஜக்கோப்சன் இந்த ஆட்சேபனையில் தனக்கு
எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறியிருப்பதாக அவரது மாவட்ட அலுவலக பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் மக்கமன்னின் மனுக்களை இல்லினோய் மாநில பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியின் இரண்டு ஊதியம்
பெறுகின்ற ஊழியர்கள் பரிசீலனை செய்துள்ளனர். எலிசபெத் பிரெளன் மற்றும் பிரேன்டன் ஹாஸ்டெட்டலர் என்ற இரண்டு
ஜனநாயகக்கட்சி ஊழியர்களையும் WSWS
நிருபர் தொடர்பு கொண்டபோது அவர்கள் இருவரும் ''தனிப்பட்ட குடிமக்கள்'' என்ற முறையில் செயல்பட்டதாக
ஜனநாயக கட்சி முகவர்களாக செயல்படவில்லை என்றும் கூறினார்கள். ஆனால் ஹாஸ்டெட்டலர் ஜாக்கோப்சனை தனது
நண்பர் என்று வர்ணித்தார். ''எனது நண்பர்களை ஆதரிக்க நான் ஒரு முயற்சி செய்கிறேன்'' என்று குறிப்பிட்டார்.
இல்லினோய் SEPக்கு
விடுத்துள்ள சவால்கள் ஏதோ ஒரு தனிமைப்படுத்தப்பட்டதல்ல அல்லது விதிவிலக்கு நடவடிக்கை அல்ல. இது ஜனநாயகக்
கட்சிக்காரர்கள் இல்லினோய் மட்டுமல்ல அமெரிக்கா முழுவதிலும் மூன்றாவது கட்சி தேர்தல் பிரச்சாரத்தை
அடக்குவதற்காக மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கையின் ஒர் அங்கமாகும். இல்லினோய் மட்டுமே, ஜனநாயக
மற்றும் குடியரசுக்கட்சி நிர்வாகிகள் 2- டசின் வேட்பாளர்களுக்கு எதிராக ஆட்சேபனை மனுக்களை தாக்கல்
செய்திருகின்றனர், இப்படி ஆட்சேபிக்கப்பட்டிருப்பவர்களில் சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரால்ப் நாடெர், பசுமைக்
கட்சி ஜனாதிபதி நுழைவுச்சீட்டு வேட்பாளர் மற்றும் இதர பசுமை கட்சி வேட்பாளர்கள், லிபர்டேரியன் வேட்பாளர்கள்
மற்றும் இதர சுயேட்சைகளும் அடங்குவர்.
தேசிய அளவில், ஜனநாயகக்கட்சி நாடெரின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை
சீர்குலைப்பதில் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது, அரிசோனா மாநிலத்தில் அவரது மனுக்களுக்கு ஆட்சேபனைகள்
தெரிவிக்கப்பட்டன, Oregon
பகுதியில் அவரது தேர்தல் பிரச்சாரத்தில் மனுச்செய்யும் பிரதிநிதிகளுக்காக
ஏற்பாடு செய்யப்பட்ட மண்டபத்தை ஜனநாயகக் கட்சிக்காரர்கள் பிடித்துக்கொண்டு அவரது ஆதரவாளர்கள் வந்து
கையெழுத்துப்போட முடியாதபடி தடுத்துவிட்டனர்.
இந்த ஜனநாயக விரோத தந்திரோபாயங்களுக்கு ஜனநாயகக் கட்சியின் உயர்மட்டம்
அனுமதி வழங்கியுள்ளது. ஜனநாயகக் கட்சி தேசியக்குழு பிரதிநிதியான
Jano Cabrera ஜூன்
30ல் நியூயோர்க்டைம்ஸ்- க்கு பேட்டியளித்தபோது ''பல்வேறு கட்சிகள் நாடெர் சேகரித்துள்ள
கையெழுத்துக்களை மாநில அளவில் ஆட்சேபித்து வருகின்றன என்பதை நாங்கள் அறிவோம்... இந்த முயற்சிகளை நாங்கள்
ஆதரிக்கிறோம்'' என்று குறிப்பிட்டார்.
மாநில மற்றும் உள்ளூர் ஜனநாயகக் கட்சிக்காரர்களின் நடவடிக்கை இருகட்சி முறைக்கு
மாற்று எதுவும் தோன்றி விடாது நசுக்குவதற்கான தங்களின் விருப்பத்திற்கும் மேலாகவே சென்று கொண்டிருப்பதை
வெளிப்படுத்துகிறது, இப்படி தடுப்பதே பிற்போக்குத்தனமான ஜனநாயக விரோத நடவடிக்கைதான். ஆனால்
இதற்கெல்லாம் மேலாக மிக அடிப்படையானது, 2004- தேர்தல்களில் முக்கியமான பிரச்சனைகளான ஈராக் போரும்
மக்களது ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டு வருவதும், வாழ்க்கைத்தரம் வீழ்த்தப்படுவது அரசியல் விவாதமாக
நடைபெறுவதை தடுப்பதற்கு ஜனநாயகக்கட்சி முயற்சித்து வருகிறது. இதில் ஜனநாயகக் கட்சிக்காரர்களும், குடியரசுக்
கட்சிக்காரர்களும் ஒன்று சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
ஜனநாயகக் கட்சி தொடுத்திருக்கின்ற இந்தத் தாக்குதல் குடியரசுக் கட்சியினர் அல்லது புஷ்
மறுதேர்தலுக்கு எதிராக அல்ல, மாறாக மூன்றாவது-கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக தாக்குதல் தொடுத்திருப்பது மிக
ஆழமான அரசியல் முக்கியத்துவம் நிறைந்ததாகும். குறிப்பாக
SEP, பசுமைக் கட்சியினர் மற்றும் நாடெருக்கு எதிராக அவர்கள்
கிளம்பியிருப்பது இத்தகைய வேட்பாளர்கள் ஏதாவது ஒரு வகையில் ஈராக் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
வாக்காளர்கள் ஆதரவை பெற்றுவிடுவார்கள் என்பதற்காகத்தான்.
2000-ம் ஆண்டு தேர்தலில் புளோரிடாவில் குடியரசுக் கட்சி, வாக்கு நசுக்கப்பட்ட
பின்னர் மறு எண்ணிக்கையை தடுக்க அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் வந்த பின்னர் இறுதியாக அமெரிக்க உச்சநீதிமன்றம்
தலையிட்டது. ஜனநாயக கட்சியும் அதன் வேட்பாளர் அல்கோரும் இப்படி வலதுசாரிகள் தேர்தலையே களவாடியதை
அடிபணிந்து ஏற்றுக்கொண்டார்கள். அந்த நேரத்தில் இந்த அடிபணிவிற்கு
SEP ஒரு எச்சரிக்கை
விடுத்தது -- இந்த சரணாகதியை பெரு நிறுவன-கட்டுப்பாடு ஊடகங்கள் அங்கீகரித்திருப்பது, அமெரிக்க ஆளும் செல்வந்த
தட்டில், குறிப்பிடத்தக்க தேர்தல் வாக்கின் ஜனநாயகத்தை தற்காத்து நிற்பதற்கு எந்த தரப்பும் இல்லை என்பதை
விளக்கிக்காட்டுகிறது.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றைய தினம் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் குடியரசுக்
கட்சியை பின்பற்றி ஜனநாயக மற்றும் வாக்குப்பதிவு உரிமைகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.
புளோரிடாவில் அல்கோருக்கு விழுந்த நியாயமான வாக்குகளை எண்ணுவதை குடியரசுக் கட்சிக்காரர்கள் தடுக்க
முயன்றதைப்போல் இப்போது ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இல்லினோய்சில்
SEP வேட்பாளர்
மக்கமன் தாக்கல் செய்த நியாயமான மனுக்களையும், அதேபோல ரால்ப் நாடேர் மற்றும் சுயேட்சைகளும் தாக்கல்
செய்துள்ள முறைமையான மனுக்களை கணக்கிடுவதை தடுக்க முயன்றுவருகிறார்கள். இதர மாகாணங்களிலும்
SEP வேட்பாளர்கள்
இதே போன்ற ஜனநாயக விரோத தாக்குதலை சந்திப்பர் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டை பொறுத்தவரை கெர்ரி - பிரச்சாரத்தின் பிரதான
பங்களிப்பு 2004- தேர்தல்களில் ஈராக் போரின் சட்டபூர்வமான தன்மை குறித்து அதிகாரபூர்வமான விவாதம் நடத்தி
எந்த சவாலும் தோன்றாது தடுப்பதுதான். மிகப்பெரும்பாலான அமெரிக்கர்கள் ஈராக் போரை எதிர்க்கின்றனர் என்று
கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன; 40-சதவீத அமெரிக்க மக்கள் உடனடியாக எல்லா அமெரிக்க துருப்புக்களும் ஈராக்கிலிருந்து
வெளியேற வேண்டும் என்று கூறுகின்றனர். இத்தகைய கோடிக்கணக்கான மக்கள் புஷ் மற்றும் கெர்ரி என்கிற இரண்டு
பெரும் கோடீஸ்வர அரசியல்வாதிகளுக்கு இடையிலான போட்டியில் தங்களளை பிரதிநிதித்துவம் செய்யமுடியாது ஆக்கப்பட்டுவிட்டனர்.
அந்த இரண்டு கோடீஸ்வர அரசியல்வாதிகளும் ஈராக்கில் ஆக்கிரமிப்பை நிலைநாட்டவும், ஈராக் மக்களின் கிளர்ச்சியை
அடக்கவும் அதற்கு எவ்வளவு செலவானாலும், எத்தனை உயிர்கள் பலியானாலும் உறுதியாக நிலைநாட்டுவதில் குறியாக
இருக்கின்றனர்.
எனவேதான் SEP
தேர்தல் பிரச்சாரம் அரசியல் முன் தணிக்கைக்கு இலக்காவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஏனெனில் நமது ஜனாதிபதி,
துணை ஜனாதிபதி வேட்பாளர்களான பில்வான் ஓகென், மற்றும் ஜிம் லோரன்ஸ் மற்றும் இதர நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற
வேட்பாளர்கள் மக்கமன்னை போன்றவர்கள் ஈராக் போரை தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் மையமாக எடுத்து
வைக்கின்றனர். உடனடியாகவும், நிபந்தனை எதுவுமில்லாமலும், அனைத்து அமெரிக்க துருப்புக்களும் இதர வெளிநாட்டு
துருப்புக்களும், ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும். ஈராக் மக்கள் தங்களது நாட்டை சீர்ப்படுத்திக்கொள்வதற்காக
போர் இழப்பீடுகளை வழங்க வேண்டும். இந்த காட்டுமிராண்டி தனமான ஆக்கிரமிப்பு மற்றும் நாடு பிடிப்பால் ஏற்கனவே
பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டுவிட்டனர். இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருந்த அமெரிக்க
அதிகாரிகள் மீது விசாரணை நடத்துவதற்கு போர் குற்றவியல் நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று நாங்கள்
கோருகிறோம்.
ஈராக் போரை எதிர்ப்பவர்களை அத்தோடு கெர்ரி மற்றும் ஜனநாயகக் கட்சியினரின்
போர் ஆதரவு அரசியல் மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டு ஆத்திரம் அடைகிறவர்கள் அனைவரையும்
நவம்பர் தேர்தலில் போர் எதிர்ப்பு வேட்பாளர்களை தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக
கண்டனக் குரல்களை எழுப்பும்படியும் கண்டித்து மின்னஞ்சல்கள் சேம்ப்பைன் கவுண்டி கிளார்க் மார்க் ஷெல்டனின்
அலுவலகத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
mail@champaigncountyclerk.com
மின்னஞ்சல் பிரதிகளை உலக சோசலிச வலைதளத்திற்கு அனுப்புமாறு
கேட்டுக்கோள்கிறோம் editor@wsws.org
SEP பிரச்சாரத்திற்கு ஆதரவாக நிதி
வழங்குமாறு கேட்டுக்கோள்கிறோம்.
donate online |