World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Democratic candidate Kerry vows to maintain US troops in Iraq for years

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கெர்ரி ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்களை ஆண்டுக் கணக்கில் வைத்திருக்க சபதம்
By Patrick Martin
17 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

வோல் ஸ்றீட் ஜேர்னல் -க்கு வியாழன் அன்று அளித்த பேட்டியில், ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரி, தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கில் அதன் முதலாவது பணிக்காலம் முழுவதும் - 2008 இறுதிவரை தங்கி இருக்கும் என்று அறிவித்தார். புஷ் நிர்வாகமானது கெர்ரி நிர்வாகத்தைவிட மிகவிரைவாக துருப்புக்களை ஈராக்கிலிருந்து விலக்குவதற்கே விரும்பும் எனவும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கருத்துரைத்தார்.

பேட்டியின் உள்ளடக்கம் மற்றும் அதை வெளியிடுவதற்கு தேர்ந்தெடுத்த வெளியீடு -ஈராக்கில் போருக்கு ஆதரவாக மிகவும் தீவிரமாக வக்காலத்து வாங்கி வருகின்ற ஊடகமாகவும் அமெரிக்க அரசியல் நிறுவனத்திற்குள்ளே உள்ள அதி வலதுசாரியின் தலைமை ஆசிரிய தலையங்க குரலுமாக இருந்து வருகின்ற ஜேர்னல் இரண்டும் ஒரு செய்தியை அனுப்புவதற்கு அரசியல் ரீதியாக கணக்கிட்டுள்ளன. கெர்ரி இப்போது புஷ்-ஐ ஆதரிக்கின்ற அதிவலதுசாரி சக்திகள் உள்பட, அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டிற்கு, ஈராக் ஆக்கிரமிப்பையும் அமெரிக்கா வென்று கைப்பற்றலையும் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதற்கு தன்மீது நம்பிக்கை வைக்கப்பட முடியும் என்று மறுஉத்திரவாதம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புக்களை விலக்குவதற்கு மூன்று நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கெர்ரி வகுத்தார். நாட்டில் "ஸ்திரத்தன்மையின் மட்டத்தை அளவிடுவது", வைத்திருக்க வேண்டிய ஸ்திரத்தன்மைக்கான கண்ணோட்டத்தை அளவிடல்" மற்றும் "அவர்களின் பாதுகாப்புப் படைகளின் திறத்தை அளவிடுவது அவசியமானது என்று அவர் கூறினார். அதுவரைக்கும், "ஈராக்கில் தோல்வியடைந்த அரசை உலகம் வைத்திருக்க விரும்பாததற்கு ஆவன செய்வேன்" என்றார்.

ஈராக் தொடர்பாக கெர்ரிக்கும் புஷ்ஷிற்கும் இடையிலான பிரதான வேறுபாடு என்னவெனில், அதன் சாரத்தில் ஈராக்கில் அமெரிக்காவின் பணி "சுதந்திரம்" மற்றும் "ஜனநாயகம்" இவற்றை கொண்டுவருவது என்ற புஷ்ஷின் தொடர்ந்த, பண்பாடற்ற மற்றும் பொய்யான கூற்று இருந்த போதிலும், வோல் ஸ்றீட் ஜேர்னல் -உடனான கெர்ரியின் கலந்துரையாடலில் அந்த வார்த்தைகள் கிட்டத்தட்ட இல்லாதிருந்தன.

ஈராக்கில் வெற்றிக்காக கெர்ரியால் நிர்ணயிக்கப்படும் மூன்று அளவீடுகள் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேனின் ஆட்சியை விவரிப்பதைக் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கதாகும். அனைத்து மூன்று அளவீடுகளும் -ஸ்திரத்தன்மை, ஸ்திரத்தன்மையை நீடித்தல், மற்றும் பாதுகாப்பு -தற்போதைய அமெரிக்க ஆதரவு பிரதமர் இயாத் அல்லாவி போன்ற, புதிய சதாமால் தலைமை தாங்கப்படும் ஒரு இராணுவ மற்றும் போலீஸ் சர்வாதிகார நிறுவனத்தால் திருப்தி கொள்ளப்படும்.

ஜனநாயக மயமாக்கல் பற்றிய புஷ்ஷின் இரட்டைப் பேச்சை ஒருபுறமாய் தள்ளிவைக்க விரும்பும் அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டின் பகுதியை கெர்ரி பிரதிநித்துவம் செய்கிறார். போருக்கு விரையும்பொழுது அமெரிக்க மக்களை ஏமாற்றுவதற்கு இது தேவைப்பட்டது, அதற்கு அவர்கள் ஒத்துப்போனார்கள், ஆனால் இப்போது அவர்களது உண்மையான வேலையில் ஈடுபடுவதற்கான தருணம் வந்துவிட்டது, பாதுகாப்பு நிலைமைகளை ஏற்படுத்துவதன் மூலம் ஈராக்கின் பெரும் எண்ணெய் சேர்ம இருப்பில் இருந்தும் பாக்தாதில் அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள பொம்மை ஆட்சியுடனான இலாபகரமான ஒப்பந்தங்களிலிருந்தும் அமெரிக்க மூலதனம் இலாபத்தைக் கறந்தெடுக்கவும் முடியும்.

ஜேர்னல் பேட்டியை சுருக்கிக் கூறுகிறவாறு, "ஈராக்கில் முன்னேற்றத்திற்கும் பரந்த பயங்கரவாத எதிர்ப்புப்போருக்கு புஷ் ஏற்படுத்தியிருக்கின்ற அதே இலக்குகளை மிகவும் ஆக்கபூர்வமாக பின்பற்றக்கூடிய, பலத்தின் ஒரு தலைவராக திரு.கெர்ரி தன்னைக் காட்டிக்கொள்வதில் உறுதிகொண்டவராக இருக்கிறார்."

புஷ் தொடர்பாக கெர்ரிக்கு ஏதாவது விமர்சனம் இருப்பின் பெரும்பாலும் அது வலதுபுறம் இருந்தே ஆகும். புஷ் உயர் இராணுவத் தட்டினரைப் போதுமான அளவு கலந்தாலோசித்திருக்கவில்லை, ஒரு ஜனாதிபதி என்ற வகையில் அவர் "இந்த ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் செய்ததைவிடவும் மிகுந்த மரியாதையுடன் அவர்களது கூற்றைக் கேட்க வேண்டும்" என்று கூறினார். அமெரிக்க கூட்டணியினருக்கு இழைக்கப்பட்ட பாதிப்பை சரிசெய்ய புது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் எனக் கூறி, ஆக்கிரமிப்புக்கு துருப்புக்களை அளிக்க ஏனைய நாடுகளை ஊடாடி இணங்கச்செய்வதில் பெரும் வெற்றியை ஈட்டுவதற்கும் கூட அவர் உறுதிகொடுத்தார்.

புஷ் மிகவும் முன்பின் ஆராயாது ஈராக்கிலிருந்து படைவிலக்க முற்சிக்கலாம், அது புதிய அமெரிக்க ஆதரவு ஆட்சிக்கு ஆபத்தாக அமையக்கூடும் என்று கெர்ரி எச்சரித்தார். "பலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்" என்று அவர் Journal-இடம் கூறினார், போருக்கு எதிராக வளர்ந்துவரும் பொதுமக்கள் எதிர்ப்பை தணிக்கும்பொருட்டு, வெள்ளை மாளிகையானது நவம்பர் தேர்தல்களுக்கு முன்னரே சிலதுருப்புக்களை விலக்கிக்கொள்ளவும் கூடும். "எந்த அரசியல் நகர்வுக்காகவும் நான் தயாராகவே இருக்கிறேன்" என்று கெர்ரி கூறினார். "அவர்களை கடந்துபோக நான் எதையும் செய்திருக்கவில்லை."

ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்களின் இருப்பு "முடிவில்லாத அர்ப்பணிப்பு" அல்ல என்று கெர்ரி கூறியபோதிலும், அவர் ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டுவதற்கான முடிவான தேதி இலக்கு எதையும் கொடுக்க மறுத்தார். "எனது முதலாவது பதவிக்காலத்தின் முடிவில், எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவு நாங்கள் குறைத்திருக்கவில்லை எனில், அதனை எனது ராஜதந்திரத்தின் தோல்வி என நான் கருதுவேன், ஆனால் அந்த எண்ணிக்கையை உறுதியாக உங்களிடம் கூறமாட்டேன்" என்று அவ் இதழிடம் கூறினார்.

போர் எதிர்ப்புக் கருத்து விலக்கு

கெர்ரியின் கூற்றுக்கள் ஒரு குறிப்பிடத்தகுந்த மற்றும் கல்விபுகட்டும் அரசியல் உண்மையின் மிகவும் பளிச்சென்ற விளக்கிக்காட்டலாகவே இருக்கின்றன. பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை ஒரு தவறென கருதுகின்றபோதிலும், 40 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் அமெரிக்க துருப்புக்கள் உடனடியாக விலக்கிக்கொள்ளப்படும் என்று நம்புகின்றனர், உத்தியோகபூர்வ இருகட்சி முறையானது போர் எதிர்ப்பு பொதுக் கருத்துக்கான வெளிப்பாட்டுக்கு இடமின்றி ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை உருவாக்குவதற்கு சதித்திட்டம் போடுகின்றது.

புஷ்-ஐ திரும்ப தேர்ந்தெடுப்பதற்கான குடியரசுக் கட்சியின் பிரச்சாரம், ஒருவேளை போருக்கான ஒரேயடியான ஆதரவு மற்றும் பயங்கரவாதத்துடன் சதாம் ஹூசேனின் தொடர்பு பற்றிய முன்னரே அம்பலப்படுத்தப்பட்ட பொய்களை முடிவின்றி திரும்பக் கூறுதல் மற்றும் புஷ்ஷின் இராணுவ ஆக்கிரமிப்புக் கொள்கை மற்றும் முன்கூட்டிய போர் அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பானது என்ற கூற்றை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது.

கெர்ரியை தேர்ந்தெடுக்க கோரும் ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரமானது ஈராக்கில் போரை புஷ் கையாண்டது பற்றி விமர்சிக்கின்றது, ஆனால் போர் அடிப்படையாகக் கொண்டிருக்கும் ஆதாரங்கள் எதனையும் சவால் செய்யவில்லை, மற்றும் ஈராக்கை தாக்குவதற்கான அதிகாரத்தை புஷ்-க்கு அளிக்கும் அமெரிக்க செனட்டில் நடைபெற்ற அக்டோபர் 2002 வாக்கெடுப்பில் அவரது ஆதரவை அளித்து கெர்ரியே அதனை ஆதரித்திருக்கிறார்.

உலக சோசலிச வலைத் தளம் முன்னரே விளக்கியவாறு (பார்க்க: "ஹோவார்ட் டீனின் எழுச்சியும் வீழ்ச்சியும்: ஜனநாயகக் கட்சி அரசியலில் ஒரு புறநிலைப் படிப்பினை"), ஜனாதிபதிக்கான பிரச்சாரத்தின் குவிமையமாக போர் பற்றிய பிரச்சினை ஆகிவிடாது தடுப்பதற்கு பெருநிறுவன கட்டுப்பாட்டிலுள்ள ஊடகத்தாலும் ஜனநாயகக் கட்சி தலைமையாலும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை முன்மொழிதலுக்கான போட்டி கவனமாக கையாளப்படுகிறது. முன்னாள் வெர்மாண்ட் கவர்னர் ஹோவார்ட் டீன் கடந்த ஆண்டு முன்னணி போட்டியாளர் அந்தஸ்துக்கு உயர்ந்ததற்கு போர் எதிர்ப்பு உணர்வு காரணமாக இருந்தது. அவரிடமிருந்து முன்மொழிவைக் கைப்பற்றுவதற்கான அவர்களின் வெற்றிகரமான முயற்சியின் ஒரு பகுதியாகவே, கெர்ரி மற்றும் உதவி ஜனாதிபதிக்காகப் போட்டியிடும் அவரது சகா ஜோன் எட்வர்ட்ஸ் உள்பட, டீனின் போட்டியாளர்கள் பெரும்பாலோர் ஜனநாயகக் கட்சி முதல்நிலை வாக்காளர்களின் போர் எதிர்ப்பு உணர்வை ஏற்றுக் கொண்டனர்.

இதன் விளைவாக, அபரிமிதமான ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள் போரை எதிர்த்ததுடன் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அமெரிக்க துருப்புக்களை விலக்கிக் கொள்வதற்கு ஆதரவாக இருந்தனர் என்ற போதிலும், ஜனநாயகக் கட்சி முன்மொழிவு மற்றும் ஜனநாயகக் கட்சி மேடையானது, விரும்பிய வெளிப்பாட்டை -மத்திய கிழக்கில் அமெரிக்க முதலாளித்துவத்திற்கு ஒரு மேலாதிக்க மூலோபாய பாத்திரத்தினை வழங்கும் மற்றும் அமெரிக்க பெருநிறுவன நலன்களுக்கு உலகின் இரண்டாவது எண்ணெய் சேர்ம இருப்பினை கிடைக்க கூடியதாகச் செய்யும் ஒரு நிலையான, அமெரிக்க ஆதரவு ஆட்சியை- உத்திரவாதப்படுத்துவதற்கு தேவைப்படும் வரைக்கும் ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்களை வைத்திருப்பதற்கு அர்ப்பணித்திருந்தது.

ஜனநாயகக் கட்சியின் வரைவு திட்ட அறிக்கை போர் எதிர்ப்பு கண்ணோட்டங்களை விளக்கிக் காட்டுகிறது. திட்ட அறிக்கையானது 16,000 வார்த்தைகளையும் 35 பக்கங்களையும் கொண்டிருக்கிறது, ஆனால் அது அமெரிக்க மக்கள் எதிர்கொள்கின்ற மைய அரசியல் பிரச்சினை மீது எந்த நிலைப்பாடும் எடுக்காதிருக்கிறது. ஈராக்கில் போர் பற்றிய வரைவு அறிக்கை மொழியானது அறிவிப்பதாவது: "அமெரிக்கா ஈராக்கில் போருக்குப் போகவேண்டுமா என்பது பற்றி மக்களின் நல் விருப்பு உடன்படாது." அந்த திட்டத்தில் இப்பொழுது என்ன செய்யப்பட வேண்டும் என்று- ஐக்கிய நாடுகள் சபையை ஈடுபடுத்துதல், அதிக சர்வதேச ஆதரவை கொண்டுவரல், முதலியன போன்றவை- அதிக விவாதம் இருக்கிறது, ஆனால் அந்தத் திட்டமானது இப்போர் நியாயமானதா அல்லது இல்லையா என்பது பற்றி சர்வசாதாரணமாக கருத்துக்கூறாது விலகுகிறது.

பதிலாக, ஜனநாயகக் கட்சியினர் 40,000 துருப்புக்கள் அளவில் அமெரிக்க இராணுவத்தின் அளவை அதிகரிப்பதற்காக, பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் யுதத்தத்திற்கான அமெரிக்க ஆதரவை தீவிரப்படுத்த, மற்றும் ஏறக்குறைய ஈராக்கை காலவரையின்றி ஆக்கிரமித்தலை பராமரிக்க அழைப்பு விடுக்கின்றனர். "மத்திய கிழக்கை சீர்குலைக்கும் சக்திகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஒரு சொர்க்கமாக தவிர்க்கமுடியாமல் ஆகும் ஈராக்கில் ஒரு தோல்வியடைந்த அரசை நாம் அனுமதிக்க முடியாது", என அத்திட்டமானது திரும்பத்திரும்ப கூறுகின்றது.

திட்ட குழுவானது போரை ஒரு தவறு என்று அழைக்கும் மற்றும் அமெரிக்க துருப்புக்களை விலக்கிக்கொள்ள ஒரு குறிப்பிட்ட தேதியை முன்மொழியும் மொழியை நிராகரிக்கிறது. ஜனாதிபதிக்கான ஆரம்பநிலை தேர்தல்களில் ஒரு அமைதி வேட்பாளராக போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் டெனிஸ் குசினிக்கின் ஆதரவாளர்கள் போர் எதிர்ப்பு மொழிக்கான தங்களின் அழைப்பை கைவிட்டனர் மற்றும் பேரவையில் இப்பிரச்சினையை வலியுறுத்தாதிருப்பதற்கு உடன்பட்டனர். திட்ட விவாதத்தில் குசினிக்கின் பிரதிநிதியாக இருக்கும், ஹவாயின் அன்னா டயஸ், குசினிக் தமக்கு போராட்டத்தை கைவிடுமாறு கூறியதாகவும், "நாம் ஐக்கியப்படுவதற்கே விரும்புகிறோம்" என்று மேலும் குறிப்பிட்டதாகவும் கூறினார்.

கெர்ரியும் அவருடன் சேர்ந்து போட்டியிடும் சகா எட்வார்ட்சும் கடந்த வாரம் பல்வேறு பத்திரிகைகளுடனும் "60 நிமிடங்கள்" எனும் CBS செய்தி நிகழ்ச்சியுடனும் கூட்டாக பேட்டி கொடுத்ததில், ஈராக் மீது படை எடுத்தது தொடர்பான முடிவு பற்றி அதேபோல கருத்துக்கூறா நிலைப்பாட்டையே எடுத்தனர். ஈராக்குடனான போருக்கான புஷ் நிர்வாகத்தின் அடிப்படைகள் -பேரழிவு ஆயுதங்களைப் பெற்றிருத்தல் மற்றும் பயங்கரவாதிகளுடனான தொடர்புகள் பொய்யானவை என்று செனட் புலனாய்வுக் குழு அறிக்கை கூறும் வெளிச்சத்தில், அவர்கள் இருவரும் போரை அங்கீகரித்ததற்காக வருத்தம் தெரிவிக்கிறார்களா எனக் கேட்கப்பட்டனர்.

அந்த ஜனநாயகக் கட்சியினர், இப்போது தெரியவந்ததை அறிந்ததும் போருக்கு வாக்களித்திருக்க வேண்டுமா என்று கேட்டதற்கு நேரடியாக விடை அளிக்க மறுத்துவிட்டனர். எட்வார்ட்ஸ் நிலைப்பாட்டை சுருக்கிக் கூறினார்: "என்ன செய்திருக்கிறோம், இந்தத் தகவலை அல்லது அந்த தகவலைக் கொண்டிருந்தால், என்று கற்பனை ரீதியாக பின்னால் திரும்பிச்சென்று மறுமதிப்பீடு செய்தல், இப்போது நமக்குப் பயனுள்ளது அல்ல."

மழுப்புவதற்கு இறுமாப்புடன், கெர்ரி நியூயோர்க் டைம்ஸிடம் கூறினார்: "இதோ பார், வாக்கு இன்று இடம்பெறவில்லை, அதுதான் அது. செனட்டர் எட்வர்ட்சுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன். அது காலத்தை வீணடிப்பதாகும். இதுபற்றியதல்ல அது. எமக்கு முன்னால் அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், அந்தக் கணத்தின் அடிப்படையில் நாம் வாக்களித்தோம். அந்த தகவலை அடிப்படையாகக் கொண்டதில் அந்த நேரத்தில் அது சரியான வாக்காக இருந்தது. அந்தக் கால கட்டத்தில்."

சோசலிச சமத்துவக் கட்சியின் மாற்றீடு

போரை கெர்ரி பகிரங்கமாக தழுவுவது, The Nation இதழ், படத்தயாரிப்பாளர் மைக்கல் மூர் மற்றும் பேராசிரியர் நோம் சோஸ்கி போன்ற நபர்கள் உள்பட, போரின் பல்வேறு முக்கிய தாராண்மை எதிர்ப்பாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டின் அரசியல் திவாலை காட்டுகிறது. நம்பத்தகுந்த பொம்மை ஆட்சி நிறுவப்படும் வரைக்கும் ஈராக்கில் அமெரிக்கா இராணுவ ஆக்கிரமிப்பைக் கட்டாயம் தொடர்ந்து செய்யவேண்டும் என்ற கெர்ரியின் திரும்பத்திரும்ப கூறப்பட்ட மற்றும் தவறிழைக்காத அறிவிப்புக்கள் இருப்பினும், பரந்த போர் எதிர்ப்பு உணர்வின் வெளிப்பாட்டிற்கான ஒரு சாதனம் என கெர்ரியை அவர்கள் முன்வைக்கின்றனர்.

புஷ் திரும்பவும் தேர்ந்தெடுக்கப்படுவதை தடுப்பதற்கு ஒரே இயலக்கூடிய மாற்றாக கெர்ரி இருக்கிறார் என்ற அடிப்படையில் இந்த தாராண்மைவாதிகள் கெர்ரிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கின்றனர். புஷ்ஷை தவிர வேறு எவருமில்லாமலோ அல்லது கெர்ரியோ நவம்பர் 2ல் ஜனாதிபதியாகத் தேர்ந்து எடுக்கப்படலாம் என்பது, ஒரு வேளை, உண்மைதான். ஆனால் கெர்ரிக்கு ஆதரவளிப்பதா அல்லது வாக்களிப்பதா என்பதல்ல வாதம். அது அமெரிக்க இரு கட்சி முறையை நிராகரிப்பதற்கான ஒரு வாதமாகும், அந்த இருகட்சி முறையானது அமெரிக்க மக்களுக்கு அத்தகைய நெரிக்கின்ற மற்றும் பிற்போக்கான மாற்றுக்களை வழங்குகிறது.

இந்த தேர்தலில் மையப் பிரச்சினை சக்திமிக்க வகையில் அரசியல் வாக்குரிமை பறிப்பு ஆகும், அது போர் எதிர்ப்பு வாக்காளர்களுக்கு மட்டுமல்ல, தொழிலாள வர்க்கம் ஒட்டுமொத்தத்திற்கும்தான் - அதாவது, அமெரிக்க மக்களின் பரந்த பெரும்பான்மையினருக்கு ஆகும். புஷ், செனி, கெர்ரி மற்றும் எட்வார்ட்ஸ் அனைவரும் கோடீஸ்வர அரசியல்வாதிகள், அமெரிக்க அரசியல் வாழ்வில் ஏகபோகம் செய்யும் மற்றும் இரு பெரு வர்த்தக கட்சிகளை கட்டுப்படுத்தும் பெரு நிறுவன தலைவர்கள் மற்றும் மில்லியனர்களின் குறுகிய அடுக்கை சார்ந்துள்ள மற்றும் அவர்களால் கவனமாக பராமரிக்கப்படுபவர்கள் ஆவர்.

இரு கட்சி முறைக்கு ஒரு மாற்றானது ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய வெகுஜன அரசியல் கட்சியை கட்டுதலின் மூலமும் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுதல் மூலமும் மட்டுமே அபிவிருத்தி அடைய முடியும். 2004 தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் -ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கான பில்வான் ஒகென் மற்றும் ஜிம் லோரன்ஸ், மற்றும் பாராளுமன்ற மற்றும் சட்டசபைக்கான எமது வேட்பாளர்கள் -இந்த வரலாற்று மற்றும் உடனடி பணியை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான வழிவகைகளை வழங்குகின்றது.

See Also :

அமெரிக்கத் தேர்தலை இரத்து செய்ய புஷ் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகள்

Top of page