:
வட அமெரிக்கா
Democrats move to keep SEP candidate off Illinois ballot
இல்லினோய் வாக்கு சீட்டில் கலந்து கொள்ள முடியாமல் சோசலிச சமத்துவக் கட்சி
வேட்பாளரை தடுக்க ஜனநாயகக் கட்சி முயற்சி
By the Editorial Board
1 July 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
நவம்பரில் நடக்கும் பொதுத்தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில்
இல்லினோய்சிலுள்ள Champaign County
இலிருந்து அமெரிக்க கீழ்சபைக்கு போட்டியிட முடியாதவாறு தோமஸ் மக்மன்
ஐ தடுப்பதற்கு ஜனநாயகக் கட்சி அலுவலர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
தற்போது இல்லினோய் (Illinois)
103-வது மாவட்டத்தில் கீழ்சபையில் பதவிவகிப்பவருமான ஜனநாயகக் கட்சியின்
Naomi Jakobsson உம் அவரது குடியரசுக் கட்சி
போட்டியாளரையும் எதிர்த்து மக்மன் போட்டியிடுகிறார். இல்லினோய்
Champaign Urbana
மாநிலத்தின் கிழக்கு-மத்திய பகுதியில் உள்ளது. ஜூன் 21இல் மக்மனும் அவரது ஆதரவாளர்களும் 2032
கையெழுத்துக்கள் அடங்கிய மனுவைத்தாக்கல் செய்தனர், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு 1344
கையெழுத்துக்கள் இருந்தால் போதுமானது.
தேர்தல் வாரியத்தில் சோசலிச சமத்துவக் கட்சி (SEP)
மனுத்தாக்கல் செய்த மறுநாள், Springbield
மாநில சட்டசபையை சேர்ந்த இரண்டு ஜனநாயகக் கட்சி
உறுப்பினர்களான Liz Brown
மற்றும் Brendan Hostetler
மனுவை பார்க்க வேண்டுகோள் விடுத்து அல்லது அதனை பார்த்தனர். அதே போன்று ஒரு குடியரசுக் கட்சி அலுவலரும்
கோரினார். ஜூன் 28 திங்கள் மாலை ஆட்சேபனைக்குரிய காலக்கெடு முடிவடைவதற்கு மூன்றுமணி நேரத்திற்கு
முன்னர் Champaign County
ஜனநாயகக் கட்சி முன்னாள் தலைவரும் கருவூலருமான
Geraldine Parr முறையான ஆட்சேபனை மனுவை தாக்கல்
செய்தார், மக்மனுக்கு வேட்பாளர் தகுதியிற்கு போதுமான கையெழுத்துக்களை சோசலிச சமத்துவக் கட்சி திரட்டவில்லை
என்று மனுவில் குறிப்பிட்டிருந்த்தார்.
இந்த ஆட்சேபனை 1,021 கையெழுத்துக்களே சோசலிச சமத்துவக் கட்சி
ஆதரவாளர்களால் திரட்டப்பட்டது என்று கோரியும்-- இது தேவையானதில் பாதிக்கு மேற்பட்டது என்றும்-- பதிவு
செய்யப்பட்ட வாக்காளர்கள் அல்ல, அல்லது அவர்கள் அந்த மாவட்டத்தில் வசிப்பவர்கள் அல்ல, அல்லது அவர்கள்
பெயர்கள் தெளிவாக இல்லை, அல்லது கையெழுத்திடுவதற்கு பதிலாக அச்சிடப்பட்டிருக்கின்றது என்றும் குற்றம்
சாட்டினர்.
மாநில மற்றும் உள்ளூர் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இரண்டு-கட்சி முறைக்கு
மேலாக தேர்தல் மாற்றீடாக எதுவும் வரவிடாமல் அடக்குவதை எதிரொலிப்பதுடன், அதேபோல பிற்போக்கு
மற்றும் ஜனநாயகத்திற்கு புறம்பான நடவடிக்கையாகவும் உள்ளது. மிகவும் அடிப்படையாக, 2004 தேர்தல்களில்
மிக முக்கியமான பிரச்சனைகளான ஈராக் போர், ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத்தரத்தின் மீது
தொடுக்கப்பட்டுவரும் தாக்குதல்கள் போன்றவற்றை அரசியல் விவாதத்திற்குள்ளாவதை தடுத்து நிறுத்துவதற்கு
ஜனநாயகக் கட்சிக்காரர்கள் விரும்புகிறார்கள். இவற்றில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிக்கரார்கள்
இணைந்தே செயல்படுகின்றனர்.
ஜோன் கெர்ரியின் ஜனாதிபதி பிரச்சாரத்தின் முக்கிய வேலை, அமெரிக்க ஆளும்
செல்வந்த தட்டினருடன் இணைந்து ஈராக் போரின் சட்டபூர்வமான நிலைக்கு எந்தவித சவாலும் கிளம்பாமல் தடுப்பதுதான்.
பெரும்பாலான அமெரிக்க மக்கள் ஈராக்கிய போரை எதிர்த்து நிற்கின்றனர், 40-சதவீதம் பேர் எல்லா அமெரிக்க
துருப்புகளும் வெளியேற வேண்டும் என்று விரும்புகின்றனர். இத்தகைய கருத்துக்களை கொண்ட கோடிக்கணக்கான மக்கள்
முற்றிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்தவும் ஈராக் எதிர்ப்பை அடக்கவும் அதற்காக எவ்வளவு உயிர்பலி,
பணச்செலவையும் பொருட்படுத்தாது என்றும் கருதும் புஷ் மற்றும் கெர்ரி என்கிற இரண்டு பெரும் கோடீஸ்வரர்களுக்கு
இடையிலான வேட்பாளர்கள் போட்டியில் எவ்வித பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருக்கவில்லை.
சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் தவிர்க்கமுடியாத அளவிற்கு
அரசியல் முன்தணிக்கைக்கு உள்ளாகி இருப்பதற்கு காரணம், நமது ஜனாதிபதி வேட்பாளர் பில்வான் ஓகென் மற்றும்
ஜிம் லோரன்ஸ் மற்றும் நமது நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள் அதே போல ரொம் மக்மன்
போன்றவர்கள் ஈராக் போரை தங்களது பிரச்சாரத்தின் மையமாகக் கொண்டுடிருப்பதுதான். நாங்கள்
உடனடியாக எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் எல்லா அமெரிக்க மற்றும் இதர வெளிநாட்டுத் துருப்புக்களும்
ஈராக்கிலிருந்து வெளியேறவேண்டும் என்று கோரியும், தங்களது நாட்டை சீரமைத்துக் கொள்வதற்கு அவர்களுக்கு
போர் இழப்பீடு தரவேண்டும் என்றும் கோருகிறோம், இந்த கொடூரமான ஆக்கிரமிப்பு மற்றும் நாடுபிடிப்பு
நடவடிக்கை மூலம் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர்களை பலியாக்கியிருக்கிறார்கள், இந்த போர்
குற்றங்களுக்கு காரணமாக உள்ள அமெரிக்கத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு தாக்கல் செய்ய
வேண்டும் என்று கோருகின்றோம்.
WSWS -க்கு ரொம் மக்மன்
தந்துள்ள அறிக்கையில்: ''ஜனநாயகக் கட்சி, சோசலிச சமத்துவக் கட்சி வாக்குப்பதிவு அந்தஸ்தை பெறுவதை
தடுக்க முயன்றிருப்பது, நமது கட்சிமீது மட்டுமல்ல, என்னை மாநில வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்கு எதிரான
நடவடிக்கை மட்டுமல்ல, என் சார்பில் மனுவில் கையெழுத்திட்ட வாக்காளர்கள் மீதும் தொடுக்கப்பட்ட
தாக்குதலாகும். இவர்களுடைய இலக்கு இரண்டு பெரு வர்த்தகக் கட்சிகளுக்கு அரசியல் மாற்றீட்டை விரும்புவதை
மற்றும் இரு கட்சி கொள்கையான ஈராக் போர் தொடர்பாகவும் சமூக சேவைகள், கல்வி, வீட்டுவசதி,
சுகாதார சேவைகள் வெட்டு தொடர்வதையும், 103-வது மாவட்டத்தில் மட்டுமல்ல, மாநிலம் முழுவதிலும்,
நாடுமுழுவதிலும் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து நிற்பதை விரக்தியடையச் செய்வதற்காகும்.
நான்
Champaign-Urbana, பகுதியிலுள்ள நமது ஆதரவாளர்கள்
அனைவருக்கும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களுக்கும் மற்றும் பொதுவாக ஜனநாயக உரிமைகளையும்
வாக்களிக்கும் உரிமைகளையும் காத்துநிற்போருக்கும் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து கண்டனக்குரல்
எழுப்ப வேண்டும் என்றும் Champaign County
அலுவலருக்கு மனுசெய்து இந்த ஆட்சேபனையை இரத்துசெய்ய கோர வேண்டும்'' என்று கேட்டுக்கொள்கிறேன்.
இல்லினோய்சில் ஜனநாயக மற்றும் குடியரசுக்கட்சி அரசியல் இயந்திரங்கள் மூன்றாவது
கட்சி சுயேட்சை வேட்பாளர்களை தடுத்து நிறுத்துவதை வழக்கமான நிகழ்ச்சிபோக்காகக் கொண்டிருக்கின்றனர்.
மக்மனுக்கு எதிராக மட்டுமல்ல, இரண்டு டசின் மூன்றாவது கட்சி அல்லது சுயேட்சை வேட்பாளர்களுக்கு
இல்லினோய்ஸ் ஜனநாயக, மற்றும் குடியரசுக் கட்சிகள் ஆட்சேபனை எழுப்பியுள்ளன. ஜனாதிபதி பதவிக்கான
பசுமைக்கட்சி தலைவரும் சுயேட்சை வேட்பாளருமான ரால்ப் நாடெர், இதர பசுமைக்கட்சி வேட்பாளர்கள்
மற்றும் பல தாராளவாதகட்சி வேட்பாளர்கள் ஆகியோருக்கும் எதிராக ஆட்சேபனைகள் தெரிவித்திருப்பதும் இதில்
அடங்கும்.
அமெரிக்காவிலேயே மிக அதிக அளவு மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில்
ஒன்றான இல்லினோய்சில் இந்த இரண்டு கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடமுடியாத அளவிற்கு
புறக்கணிப்பது அவர்களது இரு-கட்சி முறைகளுக்கு எவ்வளவு குறுகலான ஆதரவு அடிப்படையை கொண்டது என்பதை
காட்டுகிறது. பணக்கார செல்வந்த தட்டின் சார்பில் இரண்டு கட்சிகளும் செயல்படுகின்றன, அவர்களது வலதுசாரி
கொள்கைகளுக்கு எதிர்ப்புக்கள் வளர்ந்து வருகின்றன, இந்த நிலையில் எந்த ஒரு கட்சியும் தனக்கு எதிரான
கருத்துக்களை கூறுவதை சகித்துக்கொள்ளமுடியவில்லை. 2000- தேர்தலில் புளோரிடாவில் வாக்காளர்கள்
உரிமைகள் நசுக்கப்பட்டபொழுது அப்போது ஜனநாயகக் கட்சி, புஷ்ஷும், அவரது ஆதரவாளர்களும் மேற்கொண்ட
கிரிமினல் நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை, ஆனால் தனது கட்சி வாக்குகளை பறிக்கின்ற எந்த கட்சிக்கும்
வாக்குப்பதிவில் இடம்கிடைக்காமல் தடுக்கும் முயற்சியை முடுக்கிவிட்டனர்.
சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் இதர மாநிலங்களிலும் இதே போன்ற
ஜனநாயக விரோத தாக்குதல்களை சந்திக்கக் கூடும் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய சவால்கள் ஏற்கனவே
வேறொன்றான மூன்றாவது கட்சி பிரச்சாரத்திற்கு எதிராக எழுப்பப்பட்டுள்ளன. ரால்ஃப் நாடரின் தேர்தல்
பிரச்சாரத்தை தொந்தரவுகொடுக்க அல்லது தடுத்து நிறுத்த சென்றவாரம் ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள்
Oregon மற்றும்
Arizona-வில் அரங்குகளில் ஆத்திரமூட்டல் நடவடிக்கையை
மேற்கொண்டனர். Oregon
இல், நாடேரின் ஆதரவாளர்கள் தங்களது மாநாட்டில் 1000 பேரை
திரட்டுவதற்கு முயன்றனர், அந்த நேரத்தில் ஜனநாயகக் கட்சி அந்த மண்டபத்திற்குள் தனது விசுவாசிகளை அனுப்பி
நாடார் தனது இலக்கை எட்டமுடியாமல் தடுத்துவிட்டார்.
அரிசோனாவில், இரண்டு ஜனநாயகக் கட்சிக்காரர்கள் நாடேருக்கு வாக்குப்பதிவில்
தகுதி வழங்குவதை ஆட்சேபித்து இரண்டு வழக்கை தாக்கல் செய்தனர். இல்லினோய்ஸ் சோசலிச சமத்துவக் கட்சி
பிரச்சாரத்திற்கு தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனை போன்றுதான் மிகவும் நகைப்பிற்குரிய காரணத்தை நாடேருக்கு
எதிராக எழுப்பினார். நாடேருக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட 21,512- கையெழுத்துக்களில் 6,045
தான் செல்லுபடியாகும் என்று கூறினார். அரிசோனா
ஜனநாயகக் கட்சி தலைவர்
Jim Pederson
சென்ற மாதம் டைம்ஸின் வார இதழுக்கு அளித்தபேட்டியில் ''எங்களது முதல் குறிக்கோள் அவர் பெயர்
(நாடார்) வாக்குச்சீட்டில் இடம்பெறக்கூடாது என்பதுதான், ஜோர்ஜ் புஷ் மற்றும் ஜோன் கெர்ரி இவர்களில்
யார் ஜனாதிபதி என்பதுதான் வாக்குப்பதிவே தவிர வாக்குச்சீட்டில் அவரது பெயர் இடம்பெறுமானால்
வாக்குப்பதிவு முழுவதுமே சிதைந்துவிடும் என்று நாங்கள் நினைக்கிறோம்.'' என்று கூறியிருந்தார்.
இல்லினோய் மாநிலத்தேர்தல் சட்டத்தில் சிறப்பான தகுதி பெற்ற சட்டத்தரணியான
Andrew Spiegel,
WSWS ற்கு பேட்டியளிக்கும்போது
வழக்கமான ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் இது போன்ற ஆட்சேபனைகளை மூன்றாவது கட்சி மனுக்களுக்கு
எதிராக எழுப்புவது வாடிக்கை என்று கூறினார். அமெரிக்காவிலேயே மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு
சட்டங்களை இல்லினோய் கடைபிடித்து வருகிறது. எடுத்துக்காட்டாக ஒரு ''புதிய கட்சி'' வாக்குப்பதிவு தகுதியை
பெறவேண்டுமென்றால் முந்தைய தேர்தலில் ஒரு அரசியல் துணை பிரிவில் வாக்குப்பதிவு செய்த மொத்த வாக்காளர்களில்
தகுதி பெற்ற 5சதவீத வாக்காளர்கள் மனுவில் கையெழுத்திட வேண்டும். சுயேட்சைகள் 10 முதல் 16சதவீத
வாக்காளர் ஆதவரை பெறவேண்டும். இல்லினோய்
ஜனாதிபதி வேட்பாளர் தகுதியை பெறுவதற்கு குறைந்த பட்சம்
25,000 தகுதி பெற்ற வாக்காளர்களின் கையெழுத்துக்களை பெறவேண்டும்.
பல்வேறு மூன்றாவது கட்சிகள் வழக்குகள் நடத்திய அனுபவப்பட்ட சட்டத்தரணியான
Spiegel
பொதுவாக ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்கள் கையெழுத்திற்கே, ஆட்சேபனை தெரிவிப்பது வாடிக்கை
என்று குறிப்பிட்டார். வாக்குப்பதிவு அடையாள அட்டையில் காணப்படுகின்ற கையெழுத்திற்கும் மனுவில் பெறப்பட்ட
கையெழுத்திற்கும் நெருக்கமான தொடர்பு இல்லை என்று அவர்கள் ஆட்சேபனைகளை எழுப்புவார்கள், ''நாம் அனைவரும்
ஒன்றை அறிவோம், ஒவ்வொரு முறையும் கையெழுத்து மாறும்'' என்று
Spiegel குறிப்பிட்டார்.
மற்றொரு ஆட்சேபனை முகவரி தொடர்பானது பதிவு செய்தது ஒரு இடமாகவும், வாக்களிப்பது மற்றொரு இடமாகவும்
இருக்கலாம்.
ஜூலை 6 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு
Champaign County
நீதிமன்ற அறை K
யில் மக்மனும் சோசலிச சமத்துவக் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.
உள்ளூர் வாரியத்தின் முடிவு அறிவிக்கப்பட்டு 10 நாட்களுக்குள் வேட்பாளர் அல்லது ஆட்சேபிப்பவர்
Circuit நீதிமன்றத்திற்கு
மனுச்செய்யவேண்டும்.
Champaign பகுதியில் பசுமைக்
கட்சியோடு சோசலிச சமத்துவக் கட்சி தொடர்பு கொண்டிருக்கிறது. இதர மூன்றாவது கட்சிகளோடு இணைந்து
ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் ஜனநாயக விரோத ஆட்சேபனைகளை முறியடிக்க கூட்டு நடவடிக்கை
எடுப்பதை சோசலிச சமத்துவக் கட்சி வரவேற்கிறது.
தனது ஆதரவாளர்களும், ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து நிற்போரும்,
Champaign
County
தேர்தல் வாரியத்திற்கு மின்னஞ்சலில் ஜனநாயகக் கட்சியின் முயற்சிகளை எதிர்த்து கடிதத்தை அனுப்புமாறு சோசலிச
சமத்துவக் கட்சி கேட்டுக்கொள்கின்றது. நமது வேட்பாளர்களுக்கு எதிரான ஆட்சேபனைகளை தள்ளுபடி செய்யுமாறு
கடிதம் எழுத வேண்டும் அந்த அலுவலக அதிகாரி மார்க் ஷெல்டன் அலுவலகத்திற்கு அவை மின்னஞ்சலில் அனுப்பப்பட
வேண்டும்.
mail@champaigncountyclerk.com
See Also :
Illinois-
மாநில சபை பிரச்சாரத்திற்கான தகுதிபெற SEP
மனு தாக்கல்
Top of page |