World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

SEP launches presidential petition drive in Ohio

Ohio- MTM SEP- ஜனாதிபதி வேட்புமனு இயக்கம்

By David Lawrence and Shannon Jones
12 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

SEP- தனது ஜனாதிபதி வேட்பாளர் பில்வான் ஒகெனையும், துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜிம் லோரன்சையும் வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்வதற்காக Ohio வில் வாக்காளர்களின் கையெழுத்துக்களை திரட்டும் பணியை மேற்கொண்டிருக்கிறது. ஏற்கனவே டேட்டன், சின்சினாட்டி, டோலடோ, மற்றும் பிற நகரங்களில் வாக்காளர்கள் கையெழுத்தை பெறுகின்ற வேலை தொடங்கிவிட்டது.

பொதுத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவதற்கு Ohio - மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களில் குறைந்த பட்சம் 5000- பேர் மனுவில் கையெழுத்திட வேண்டும். ஏற்கனவே இல்லினோய்ஸ் மாகாண சாம்பைன் கவுண்டியில் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் செய்திருப்பதைப்போல் இங்கும் ஜனநாயகக் கட்சி ஏதாவது ஆட்சேபனை கிளப்புமானால் அதை சமாளிப்பதற்காக 5000-த்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் கையெழுத்தை திரட்டுவதற்கு SEP திட்டமிட்டிருக்கிறது.

Ohio அமெரிக்காவின் மத்தியமேற்கில் உள்ள பிரதான தொழில் கேந்திர மாகாணம், மக்கள் தொகை 11-மில்லியனுக்கு மேற்பட்டதாகும். புஷ்ஷும், கெர்ரியும் Ohio மீது தங்கள் பிரச்சாரத்தை கவனம் செலுத்தி வருகின்றனர். நியூயோர்க் டைம்ஸ் தந்துள்ள தகவலின்படி ஜனாதிபதி புஷ் 18-முறையும் ஜனநாயகக் கட்சி நியமனத்தைப் பெற்றபின்னர் கெர்ரி 8-முறையும் Ohio விற்கு வந்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த அமெரிக்காவையும் எடுத்துக்காட்டுகின்ற பெரிய மாகாணம் Ohio. அமெரிக்காவின் மிகப்பெரிய 50-நகரங்களில் மூன்று Ohio வைச் சார்ந்தவை. கிளிவ்லாண்ட், கொலம்பஸ், மற்றும் சின்சினாட்டி இந்த மூன்று பெரிய நகரங்களாகும். 50- மிகப்பெரிய நகரங்களில் உள்ள நான்கு மாகாணங்களில் Ohio வும் ஒன்று. இதுபோன்ற மற்ற மூன்று மாகாணங்கள் கலிபோர்னியா, டெக்சாஸ் மற்றும் அரிசோனா ஆகும்.

SEP மனுதிரட்டும் இயக்கத்திற்கு ஏற்கனவே மிக வலுவான ஆதரவு திரண்டு வருகிறது. குறிப்பாக SEP ஈராக்கிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் நிபந்தனை எதுவும் இல்லாமல் வெளியேற வேண்டும் என்று கூறிவருவதற்கு ஆதரவு திரண்டுவருகிறது.

துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் SEP வேட்பாளர் ஜிம் லோரன்ஸ் Ohio டேட்டன் பகுதியில் ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்கூடங்களில் 30-வருடங்கள் பணியாற்றியவர். சென்ற வாரக்கடைசியில் டேட்டனில் நடைபெற்ற கலாச்சார விழாவில் அவர் தனது மனுவில் கையெழுத்து வாங்க தொடங்கினார். அவர் WSWS ற்கு பேட்டியளித்தபோது கூறினார்: "போர் தொடர்பான கருத்துக்களுக்கு, வேலை வாய்ப்புக்கள் மற்றும் வாழ்க்கைத்தரம் தொடர்பானவற்றுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களுக்கு பொதுப்பணித் திட்டங்கள் வகுப்பதற்கான அழைப்பு மிகுந்த வரவேற்பை பெற்றன.

''ஜனநாயகக் கட்சி ஒரு முழக்கத்தை பயன்படுத்துகிறது. மூன்றாவது தரப்புக்கட்சிகள் தேர்தலில் கலந்துகொள்ளாது தடுப்பதை நியாயப்படுத்துவற்காக புஷ்ஷை தவிர வேறு எவராகயிருந்தாலும் என்ற கூற்றை முன்னெடுத்திருப்பது முற்றிலும் ஜனநாயக விரோத நடவடிக்கை என்று நான் தொழிலாளர்களுக்கு தெரிவித்தேன். 2000- ஆண்டு தேர்தலில் புளோரிடா பகுதியில் குடியரசுக் கட்சிக்காரர்கள் பதிவான வாக்குகளை எண்ண மறுத்ததற்கு அப்பாலும் செல்லுகின்ற நடவடிக்கையாக இது அமைந்திருக்கிறது. தொழிலாளர்கள் முதலில் தாங்கள் விரும்புகின்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுப்பதாக இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது.

"SEP- மட்டுமே போர் ஆதரவு வேட்பாளர்களான கெர்ரிக்கும், புஷ்ஷிற்கும் உண்மையான மாற்று வேட்பாளர்களை தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் வழங்குகிறது.

''Ohio -வில் உள்ள WSWS வாசகர்களும், ஆதரவாளர்களும், என்னையும், பில்வான் ஓகெனையும் ஆதரிக்கும் வகையில் தாமாக முன்வந்து எங்களது மனுக்களை சுற்றுக்கு விடவேண்டும்''.

போட்ஸ் மவுத் பகுதியில் தொண்டராக பணியாற்றும் ஆதரவாளர் மைக், அவர் WSWS க்கு பேட்டியளிக்கும்போது கூறினார்: ''நமக்கு மாற்று வேட்பாளர் தேவை என்பதைப் பற்றி பலர் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிகப்பெரும்பாலான மக்கள் தற்போதுள்ள இருகட்சி கட்டுக்கோப்பில் நிறைய நம்பிக்கை இருப்பதாக நினைக்கவில்லை. ஜனநாயகக் கட்சிக்காரர்கள் வேறு எவரையும் ஏன் அனுமதிப்பதில்லை என்பது வியப்பளிக்கும் வகையில் உள்ளது. இரண்டுக்கு மேற்பட்ட (வேட்பாளர்களை) தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக்களை அவர்கள் விரும்பவில்லை. கெர்ரி- புஷ்ஷைவிட வேகமாக சென்று ஈராக்கிற்கு மேலும் படைகளை அனுப்பவேண்டும் என்று கோருகிறார் என்று மக்களிடம் கூறினேன். இரண்டு தீங்குகளில் குறைந்த தீங்கின் பக்கம் கட்டாயமாக செல்வதற்கு நிர்பந்திப்பது மிகவும் கடுமையான ஜனநாயக நெறிக்கு புறம்பானதாகும்.''

சனிக்கிழமையன்று டோலடோ பகுதியில் SEP குழுவினர் மனுவில் கையெழுத்து வாங்குவதற்கு சென்றபோது பல தொழிலாளர்கள் கண்ணியமான ஊதியம் தருகின்ற பணிகள் தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருவது கண்டு கவலை தெரிவித்தனர், ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். இப்போது அந்தப் பகுதியில் குறைந்த ஊதிய மற்றும் சேவைப்பிரிவு பணிகள்தான் கிடைக்கின்றன. புஷ் பதவியேற்றபின்னர் Ohio மாநிலத்தில் 200,000 வேலைகள் அழிக்கப்பட்டுவிட்டன, தனிமனிதர்கள் வருமான கணக்கில் அம்மாநிலம் அடி மட்டத்திற்கு சென்றுவிட்டது. தற்போது (2004- மே மாத நிலவரப்படி) Ohio மாநிலத்தில் 5.6 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். 2000-ம் டிசம்பரில் இது 4 சதவீதமாகத்தான் இருந்தது.

மே- மாத புள்ளி விவரங்களின்படி Ohio மாநிலத்தில் நான்கு கவுண்டிகளில் வேலையில்லாத் திண்டாட்டம் 10-சதவீதத்திற்கு மேல் உள்ளது. மாகாணத்தில் வேலையில்லாத் திண்டாட்ட உதவித் தொகைகளை 35,000- தொழிலாளர்களுக்கு முற்றிலுமாக பயன்படுத்தி முடித்துவிட்டனர். இது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட 176- சதவீதம் அதிகமாகும். 2002 மார்ச்சில் அவசர தற்காலிக வேலையில்லாத்திண்டாட்ட இழப்பீடு வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி 52,000 மக்கள் அந்த உதவித்தொகையை முழுமையாக பயன்படுத்தி முடித்துவிட்டனர்.

பொருளாதாரக் கொள்கை நிறுவனத்தால் தேசிய ரீதியாக தயாரிக்கப்பட்ட, "வேலையில்லாதோர் தோல்வி" என்று தலைப்பிடப்பட்ட ஒரு அறிக்கை, நாட்டிலேயே 8-மாநிலங்கள் கணக்கிடப்பட்டு அதில் Ohio ஒன்றில்தான் வாரத்திற்கு 20 மணி நேரங்கள் என வேலையிலமர்த்தப்பட்ட குறைந்த பட்ச கூலித் தொழிலாளர்கள், கதவடைப்பு இருந்தால் வேலையில்லாத் திண்டாட்ட உதவித்தொகை பெறுவதற்கு ஆண்டு முழுதும் தகுதிபெறவில்லை. வேலையில்லா பகுதிநேர பணியாளர்கள் பகுதிநேர வேலை பெற்றால் உதவித்தொகை பெறமுடியவில்லை. சென்ற ஆண்டு வேலையில்லாதவர்களில் வேலையில்லா ஆண்கள் 50.8- சதவீதம் பேர் உதவித்தொகை பெற்றதுடன் ஒப்பிடுகையில் பெண்களில் 35.9-சதவீதம் பெண்கள் மட்டுமே வேலையில்லாத் திண்டாட்ட உதவித்தொகைகளை பெற்றனர் என அறிக்கை கூறுகிறது.

வேறு சில மாநிலங்களைப்போல் அல்லாமல் Ohio-வில் கிடைக்கும் உயர்ந்த பட்ச உதவித் தொகைகளை கொண்டு மத்திய அரசின் வறுமைக்கோட்டுக்கு மேல் மூன்று பேரைக் கொண்ட குடும்பம் வாழமுடியும். அப்படியிருந்தும் Ohio வில் உதவித்தொகை தாராளமானது என்று சொல்லிவிட முடியாது. இரண்டு பேரைக்கொண்ட குடும்பத்தைச்சார்ந்த ஒரு ஊழியர் இதற்கு முன்னர் மாகாண சராசரி வருமானத்தை பெற்றிருந்தவர், இப்போது வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கிக்கொண்டால், அவருக்கு வாரத்திற்கு 256- டாலர்கள் வேலையில்லாத் திண்டாட்ட உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இது வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள உதவித்தொகைதான்.

இதுபோன்ற வேலை அழிப்புக்களை சரிக்கட்டுவதற்கு புஷ் அல்லது கெர்ரி- முன்னெடுத்து வைக்கின்ற திட்டம் கம்பெனி முதலீடுகளை மேலும் ஊக்குவித்து ஊதியங்களை மேலும் குறைத்து அமெரிக்க தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்துவதுதான். இந்தக் கொள்கையின் தர்க்கம் என்னவென்றால் அமெரிக்காவில் கூலிகளை (ஊதியங்களை) குறைப்பது -ஏற்கனவே, மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் விட குறைவாக உள்ளது- வறுமை வயப்பட்ட வெளிநாடுகள் அளவிற்கு அமெரிக்காவில் ஊதிய விகிதங்களைக் குறைப்பதுதான்.

1994- முதல் Ohio- வில் பணியாற்றி வந்த இரண்டு மாநில அரசாங்கங்களுமே தேசிய சராசரியை விட கூடுதல் விகிதத்தில் வர்த்தகர்களுக்கு வரி குறைப்பு செய்திருக்கின்றனர். இதனால் நிகர வேலைவாய்ப்பு எதுவும் பெருகவில்லை. மாகாணத்தில் நிதி வசதிகள் சீர்குலைவதற்கே உதவி செய்தன வேலையில்லா திண்டாட்ட உதவித்தொகை அறக்கட்டளை நிதி குறைந்தது. இப்படி நிதிகுறைந்ததால் அதிகரித்தவேலையின்மை வீதங்களுடன் சேர்ந்து வேலையில்லாது திண்டாடுபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை.

Ohio சின்சினாட்டியில் உள்ள முதலாவது மாவட்டத்தில் காங்கிரசிற்கு SEP வேட்பாளராக போட்டியிடும் ''டேவிட் லோரன்ஸ்'' SEP துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜிம் லோரன்சின் புதல்வர் ஆவார். இந்த வாரக்கடைசில் அவர் சின்சினாட்டியில் மனுச்செய்தார். டேய்டன், அரசாங்கப் பள்ளியில் அவர் ஆசிரியர், Ohio விலும், நாடுமுழுவதிலும் கல்வி சீர்கெட்டுப்போனதற்கு ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்கள் தான் பொறுப்பு என்று சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவிலேயே மிக அதிக அளவிற்கு சார்டர் பள்ளிகள் குவியலாக உள்ள மாகாணம் Ohio. Ohio கல்விச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "Ohio சார்டர் பள்ளிகளின் தற்போதைய வேலைத்திட்டம் ஒரு மாணவனுக்கு 6,315- டாலர்கள் மானியம் பெறுவதாகவும், பாரம்பரிய பள்ளிகள் ஒரு மாணவனுக்கு 3,194- டாலர்கள் மட்டுமே மானியம் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கிளிவ்லாண்டில் மற்றொரு தனியார் பள்ளித் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு பள்ளி வவுச்சர் திட்டம் என்றுபெயர். மில்லியன் கணக்கான டாலர்களை பிரதானமாக மதம் சார்ந்த பள்ளிகளுக்கு திருப்புவதற்குத்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

SEP மனுவில் கையெழுத்திடுவதற்கு வாக்காளர்கள் முன்வந்த விதம் அமெரிக்க சமுதாயத்தில் உள்ள ஆழ்ந்த வர்க்க துருவமுனைப்படலையும், மில்லியன் கணக்கான அமெரிக்க தொழிலாளர்கள் இரு கட்சிகளுக்கும் அப்பாற்பட்ட மாற்று ஒன்றை விரும்புகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. வரும் வாரங்களில் SEP Ohio வில் தனது மனுச்சேகரிப்பு இயக்கத்தை முடுக்கிவிட்டு நமது இலக்குகளை அடையவும் அதனை மிஞ்சுவதற்கும் திட்டமிட்டு வருகின்றது.

See Also :

ஒகியோ SEP வேட்பாளர் டேவிட் லோரன்ஸ் அறிக்கை

Top of page