:
வட அமெரிக்கா
Statement of the Socialist Equality Party presidential candidate
Senate cover-up of WMD lies underscores
Democrats' support for Iraq war
சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரின் அறிக்கை
WMD பொய்களை செனட்
மூடிமறைப்பு ஈராக் போருக்கு ஜனநாயகக் கட்சியின் ஆதரவைக் கோடிட்டுக் காட்டுகிறது
By Bill Van Auken
10 July 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
செனட் புலனாய்வுக் குழு வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட இரு கட்சி சார்ந்த ''ஈராக்
போருக்கு முந்தைய புலனாய்வு மதிப்பீடுகள்'' பற்றி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கின்ற வகையில்
SEP ஜனாதிபதி
வேட்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை இதுவாகும்.
ஈராக் போர் அமெரிக்க மக்கள் எதிர்கொள்கின்ற மிகவும் கொழுந்துவிட்டு எரியும்
அரசியல் பிரச்சனையாக தொடர்ந்து நீடித்திருக்கும்பொழுது, நவம்பர் தேர்தலுக்கு முன்னர் அதுபற்றி எந்தவிவாதமும்
நடக்கவிடாமல் செய்வதில் குடியரசுக்கட்சிக்காரர்களுடன் சேர்ந்து ஜனநாயகக் கட்சி கூட்டுச்சதி நடத்தி வருகிறது.
செனட் புலனாய்வுக் குழு வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட ஒருமனதான அறிக்கை சந்தேகத்திற்கிடமின்றி
முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
ஈராக்கின் பேரழிவுகரமான ஆயுதங்கள் பற்றிய புஷ் நிர்வாகத்தின் பிரச்சாரம் ''புலனாய்வு
தோல்வியால்'' தோன்றியதே தவிர வெள்ளை மாளிகையால் அல்ல என்றும், மாறாக மத்திய புலனாய்வு ஏஜென்சி
(CIA)
கொடுத்த தகவலின் அடிப்படையில் வந்தது என்று அந்த ஆவணம் வடிவம் கொடுக்கிறது. நிர்வாகமும் துணை ஜனாதிபதி
டிக் செனியும் "ஈராக்கின் பேரழிவுகரமான ஆயுதங்கள் தொடர்பாக ஆய்வாளர்களின் முடிவுகளை மாற்றுவதற்கு எந்தவித
அழுத்தமும், நிர்பந்தமும் கொடுக்கவில்லை அல்லது செல்வாக்கை பயன்படுத்தவில்லை" என்று அந்த அறிக்கை தெளிவாக
குறிப்பிடுகிறது.
சம்பவங்கள் தொடர்பாக இவற்றின் கூற்று முட்டாள்தனமானது. வாஷிங்டன் முழுவதிலும்
தெரிந்த சான்றுக்கு முரணாக இந்த அறிக்கை அமைந்திருக்கிறது. ஈராக்கிலிருந்து உடனடி அச்சுறுத்தலான
இரசாயன, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற ''பிழையுள்ள புலனாய்வை'' புஷ்ஷின் வெள்ளை
மாளிகை ''புலனாய்வாளர்கள்'' மூர்க்கமாக கோரி பெற்று, அத்தகைய ஆபத்துக்கள் நிறைந்த கூற்றுக்களின்
உண்மைத் தன்மையை ஆட்சேபித்த புலனாய்வு அதிகாரிகளின் குரல்களையும் புறக்கணித்தார்கள்.
முன்னாள் நிர்வாக அதிகாரிகள் ஒருவர்பின் ஒருவராக -----முன்னாள் கருவூலச்
செயலாளர் Paul O'Neil
ல் தொடங்கி பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை ஒருங்கிணைப்பாளர்
ரிச்சர்ட் கிளார்க்வரை------ புஷ் நிர்வாகம் ஆட்சிக்கு வந்ததும், ஈராக்குடன் போர் தொடுக்க, ஒரு
சாக்குப் போக்கை உருவாக்குவதில் உறுதியாக நின்றது என்று சான்று அளித்துள்ளார். 2001 செப்டம்பர் 11,
தாக்குதல்களை புஷ்ஷின் போர் என்று சதிகாரர்கள் பிடித்துக்கொண்டு, பாக்தாத்-அல்கொய்தா தொடர்புகளை
கண்டுபிடித்தார்கள். புலனாய்வு அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக இந்த பாசாங்கை அம்பலப்படுத்தியுள்ளனர்.
ஈராக் பேய் மக்களைக் கொன்று தள்ளும் பயங்கர ஆயதங்களைப் பயன்படுத்தி (WMD)
அமெரிக்கா மீது தாக்குதல் நடக்கும் என்ற பீதியை
கிளப்பினார்கள்.
அமெரிக்காவின் படையெடுப்பு தொடங்கிய சில மாதங்களில், ஈராக்கிடம் அத்தகைய
ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது.
CIA
ஆய்வாளர்களும், நிர்வாகத்தின் உள்கட்டுக்கோப்பு செயல்பாட்டாளர்களும், ஊடகங்களில் அதே கருத்துக்களைத்தான்
தெரிவித்தனர். நிர்வாகத்தினர், ---குறிப்பாக செனி, பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் இதர
பென்டகன் சிவிலியன் தலைவர்கள்--- போருக்கான நியாயத்தை கற்பிப்பதற்காக புலனாய்வு தகவல்களை
மாற்றும்படி ''மிரட்டினார்கள்'' மற்றும் "கொடுஞ்சொற்களால் அடக்கினார்கள்" என்று அந்த அதிகாரிகள்
தெரிவித்தனர்.
பென்டகன் தனது அமைப்பிற்குள்ளேயே விரும்பிய முடிவுகளை தயாரிக்கும் புலனாய்வுக்
குழுவை உருவாக்கியது. ஏனென்றால் போருக்கு செல்ல வேண்டும் என்ற துடிப்பு உள்ளவர்கள்
CIA யிடம்
பொறுமையிழந்து காணப்பட்டனர். தற்போது இழிவு படுத்தப்பட்டுள்ள அஹமது சலாபிபையும், அவரது ஈராக்
தேசிய காங்கிரசையும் சான்றுகளை கண்டுபிடிப்பதற்காக அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். அவை தவறானவை
என்பது அமெரிக்க புலனாய்வு வட்டாரங்களுக்குத் தெரிந்தே இதைச் செய்தார்கள்.
ஞாயிறு முதல் பதவி விலக உள்ள
CIA இயக்குநர்
ஜோர்ஜ் டெனட் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனின் அழுத்தத்திற்கு அடிபணிந்தார். இதன் விளைவு 2002
செப்டம்பரில் ஈராக் தொடர்பான தேசிய புலனாய்வு மதிப்பீடு உருவாக்கப்பட்டது. இதற்கு முந்தைய முடிவுகளின்படி
ஈராக்கின் ஆயுதங்கள் திட்டம் கைவிடப்பட்டுவிட்டன. அவசரமாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை நிர்வாகம் கையில் எடுத்துக்கொண்டு,
ஈராக் WMD
க்கள் பற்றி ஆட்சேபனைகள் எதுவும் இல்லாமல் மடைதிறந்த வெள்ளபோல் பொய்களையும் பரப்பி ஈராக்
போருக்கான தயாரிப்புகளைச் செய்தார்கள்.
மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது, கொச்சையான இந்த மூடிமறைப்பு
முயற்சியில் இரு கட்சிக்குள்ளும் ஒற்றுமை நிலவுவது விவரிக்க முடியாததாக தோன்றலாம். செனட் குழுவில் இடம்
பெற்றுள்ள ஜனநாயகக் கட்சிக்காரர்கள் -- அவர்களுள் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் எட்வர்ட்ஸ்சும்
ஒருவர்-- ஏன் புஷ் நிர்வாகத்தை மூடி மறைக்க உடன்படவேண்டும்? தேர்தல் நடக்கும் ஆண்டின் நடுவில், ஒரு
வலிமையான அரசியல் ஆயுதத்தை அவர்கள் உதறித்தள்ளுவது ஏன்? சாக்குபோக்குகளைச் சொல்லி நாட்டை
சட்டவிரோதப் போருக்கு இட்டுச்சென்றதானது, நிர்வாகத்திற்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டாக
இருக்கிறது. இந்தச்செயல் பதவி விலக குற்றவிசாரணைக்குட்பட்டது மட்டுமல்ல ஒரு போர்க்குற்ற விசாரணைக்கும்
உரியது என்பது தெளிவானது.
இந்த அறிக்கையை தயாரிப்பதற்கான அரசியல் தந்திர நடவடிக்கைகள் என்பன
ஜனநாயகக் கட்சி சட்டப்பேரவையின் (Capitol
Hill) ஒட்டுமொத்த நடவடிக்கைகளில் உள்ள கோழைத்தனத்தின்
இழிந்த தன்மையைக் காட்டுகிறது. தொடக்கத்தில் CIA
புலனாய்வு செயல்பாட்டை மட்டுமல்ல போருக்கு நாட்டை இட்டுச்செல்லுகின்ற அளவிற்கு புலனாய்வு தகவலை திசை
திருப்பிய புஷ் நிர்வாகத்தின் பங்கையும் மூடிமறைக்க புலன் விசாரணை ஆலோசனை ஒன்றை தெரிவித்தார்கள்.
குடியரசுக் கட்சித் தலைமையானது இது கமிட்டியின் கணக்கில் சேர்த்துக் கொள்வதல்ல என்று இரத்து செய்து,
CIA
பங்களிப்பை மட்டுமே ஆராய வேண்டும் என்று கூறியது.
விசாரணையில் நிர்வாகத்தின் பங்கு இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டதுடன், இறுதியில்
ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவுகள் நவம்பர் தேர்தலுக்கு பின்புதான் வெளியிடப்படும் என்றும்
கூறப்பட்டிருக்கிறது. இரண்டாவது கட்ட விசாரணை நடக்குமா என்ற சந்தேகமே எழுந்துள்ளது.
இந்த பிரச்சனையில், செனட்டில் இடம்பெற்றுள்ள ஜனநாயகக் கட்சிக்காரர்களின்
முதுகெலும்பு இல்லாத விட்டுக்கொடுக்கும் போக்கு ஒரு திட்டவட்டமான அரசியல் நோக்கத்தைக் கொண்டதாகும்.
ஜனநாயகக் கட்சியின் புலனாய்வுக்குழு உறுப்பினர் வெள்ளிக்கிழமையன்று அந்த அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
புலனாய்வு தகவல் "குறைபாடான" அடிப்படையில் அமைந்தது என்று தெரிந்திருக்குமானால் செனட்டில் 3 க்கு 1
என்ற வாக்கில் ஈராக் போருக்கு அங்கீகாரம் அளித்திருக்க மாட்டோம் என்று மேற்கு வெர்ஜினியாவைச் சேர்ந்த
செனட்டர் ஜோன் ராக் பெல்லர் குறிப்பிட்டார்.
புஷ்ஷை CIA
முட்டாளாக்கிவிட்டது என்ற கூற்றைப் போன்றுதான் இதுவும் உண்மையைத் தலைகீழாக புரட்டுவதாக
அமைந்திருக்கின்றது. 2002 கோடைக்கால கடைசியில் வாஷிங்டனின் ஜனநாயகக்கட்சிக்காரர்கள், ஈராக்
தொடர்பான புலனாய்வு மதிப்பீட்டை CIA
படுவேகமாக தரவேண்டும் என்று ஓங்கிக்குரல் கொடுத்தவர்களில் ஒருதரப்பாக இருந்தனர். ஈராக் மீது
படையெடுப்பதற்கு புஷ்ஷிற்கு கட்டுப்பாடு எதுவுமில்லாத அதிகாரம் வழங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் அந்த
மதிப்பீடு அறிக்கை Capitol Hill
க்கு வந்தது. அப்போது அமெரிக்க கீழ்சபையிலும் செனட் சபையிலும்
ஜனநாயகக் கட்சித் தலைமையானது, ஈராக்கிடம் இரசாயனவியல் மற்றும் உயிரியல் தொகுப்பு மற்றும் நடமாடும்
அணு ஆயுதத் திட்டங்கள் உள்ளன என்பதை குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய அறிக்கையை
CIA தாக்கல் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியது. அதன் மூலம்
புஷ்ஷிற்கு ஆத்திரமூட்டல் எதுவுமில்லாத போரை தொடங்குவதற்கு அரசியல் முகமூடி கிடைக்கவேண்டும் என்று
பாடுபட்டது.
தற்போது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்திய பொய்கள் முழுமையாக
அம்பலப்படுத்தப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்களும் ஏறத்தாழ, 900 அமெரிக்கத்
துருப்புக்களும் மாண்டு விட்டபின்னர், ஜனநாயகக் கட்சிக்காரர்கள் அந்தப்போரை தொடர்ந்து ஆதரித்து
வருகின்றனர்---- அவர்களது ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரியின் வார்த்தையை நம்புவது என்றால்---
அவர்கள் அமெரிக்க தலையீட்டை தீவிரமாக்குவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
அண்மையில் கெர்ரி ஒரு கேள்விக்கு எழுத்துமூலம் அளித்த பதில் சென்ற மாதம்
பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. ''ஈராக்கில் - அமெரிக்க கொள்கைக்கு அதிகமான அளவு மருந்து யதார்த்தம்
வேண்டும்'' என்று தலைப்பிடப்பட்டிருக்கின்றது. அன்றைய இராணுவத் தலைவர் ஜெனரல் எரிக் ஷின்செக்கி
அறிவித்திருப்பதைப்போல் "அதிக துருப்புக்கள் தேவைப்படும் என்று அவர் வாதிக்கும்பொழுது அது சரி" என்று
கூறினார்.
''இங்கே நாம் குறிப்பிட விரும்புவது வரலாற்றை திரும்பிப்பார்க்க வேண்டும்
என்பதல்ல. ஆனால் ஒரு புதிய கொள்கையை நமக்குத்தெரிந்த அடிப்படையில் மிகவும் பயனுள்ள கொள்கையை நாம்
உருவாக்க வேண்டும். அப்போது ஈராக் தோல்வி அடைந்த அரசாக ஆவதை தடுக்க முடியும்'' என்று கெர்ரி,
தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஏன் வரலாற்றை "திருப்பிப் பார்க்கக்கூடாது"?
அமெரிக்க மக்களை திட்டமிட்டு ஏமாற்றியதை, சர்வதேச சட்டமீறல்களை மற்றும் ஈராக் போரின்
தொடக்கத்திலிருந்து ஆக்கிரமிப்பின் ஆபாசமான இலாபநோக்கை ஏன் ஆராயக்கூடாது? இதற்கு பதில்
மிகத்தெளிவானது. தான் நீடிக்க விரும்புகின்ற ஒரு போரை மேலும் சட்டத்திற்கு புறம்பானது என்று சித்தரிக்க
கெர்ரி தயாராக இல்லை.
ஈராக்கில் நடைபெற்று வருகின்ற படுகொலைகளை ''புஷ்ஷின் போர்'' என்று
குற்றம் சுமத்திட ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தயாராக இல்லை. இது அவர்களது போரும் கூடத்ததான்.
இந்தப் போர் முன்னேற்பாடு செய்யப்பட்டமுறை, அது நடத்தப்பட்ட முறை ஒரு
கட்சி அல்லது ஒரு நிர்வாகத்தின் மீது மட்டும் குற்றம்சாட்டுவது அல்ல. ஆனால், அமெரிக்க ஆளும் செல்வந்த
தட்டின் அனைத்து தரப்பினர் மீதுமான குற்றச்சாட்டாகும். ------ஜனநாயகக் கட்சிக்காரர்களிலிருந்து ஒத்து
ஊதுகின்ற ஊடகங்கள்வரை, ஈராக்கைக் கைப்பற்றி அதன் எண்ணெய் செல்வத்தால் இலாபம் பெறமுடியும் என்ற
பெரிய கம்பெனிகள் வரை அனைத்துப் பகுதியினர் மீதான குற்றச்சாட்டாகும். இது சர்வதேச சட்டம் மற்றும்
அமெரிக்க மக்களின் ஜனநாக உரிமைகளை கடுமையாக மீறுதலை பிரதிநிதித்துவம் செய்கின்றது.
வாஷிங்டனின் இராணுவ வலிமையைக்கொண்டு உலக சந்தையையும் உயிர்நாடியான
வளங்களையும், மிக முக்கியமாக எண்ணெயைக் கைப்பற்றி, அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்ற
பொதுக்கருத்துக் கொள்கை அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் உருவாக்கப்பட்டு ஈராக் படையெடுப்பும்
ஆக்கிரமிப்பும் நடந்திருக்கிறது.
நிதி ஆதிக்க ஒரு சிலர் ஆட்சியின் (financial
oligarchy) சக்திமிக்க பிரிவுகள் தற்போது புஷ்ஷிற்கு
எதிராக திரும்பியிருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம் அவர் அந்த திட்டத்தில்
தோல்வியடைந்துவிட்டார் என்பதால்தான். இப்போது கெர்ரி புஷ்ஷை விட சிறந்த ''CEO"
ஆக கருதப்படுகிறார். ஏதாவதொரு வகையில் தந்திரோபாய ஒழுங்குபடுத்தலால் மொத்த பேரழிவை அவர்
தவிர்த்து விடக்கூடும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
ஆளும் தட்டுகளின் கணிப்புக்களுக்கும் அமெரிக்க பரந்த வெகுஜனங்களின்
உணர்வுகளுக்குமிடையே உள்ள இடைவெளியானது, அவர்களில் பெரும்பாலானோர் கெர்ரிக்கு வாக்களிப்பதை
போருக்கு எதிரானதாக தவறாகப் பார்க்கிறபொழுது அகன்றதாக இருக்க முடியாது. கெர்ரியின் கொள்கைகளில்
உண்மையான தோற்றத்திற்கும் பேணி வளர்க்கப்பட்டுள்ள மாயத் தோற்றத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு வியாழன்
இரவு நியூயோர்க்கில் உள்ள வானொலி நகர இசையரங்கில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது. அங்கிருந்த
கலைஞர்கள் மற்றும் பொழுதுபோக்காளர்களிடம் போட்டிபோட்டுக்கொண்டு ஜனநாயகக்கட்சி கட்சி வேட்பாளர்கள்
நிதி திரட்டினார்கள்.
அது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கின்ற மாய்மாலக் காட்சியாகும். நடிகர்களும்,
இசையமைப்பாளர்களும் மேடையில் தோன்றி ஈராக் போரை மிக ஆவேசமாக கண்டித்தனர். ''பாக்தாத்தில் தூங்குகின்ற
குடும்பங்கள்'' மீது குண்டுவீசப்படுவது பற்றி Meryl
Streep பேசினார்.
Jessica Lange
''சுயநலமிக்க வஞ்சக, பாசாங்கு, மோசடி போர்புரிகின்ற ஆட்சி''
என்று கண்டித்தார். "நமது இளைஞர்களை பலிகொடுக்கும் இழிவான முரடர்" புஷ் என்று வர்ணிக்கும் பாடல்களை
John Mellencamp
பாடினார். கெர்ரியும், எட்வர்ட்சும் பதிலளிக்கும்போது ''உண்மையான அமெரிக்க மதிப்புகளை'' பாதுகாப்பது
பற்றிய அற்பமான உரையாற்றினர்.
கோடிக்கணக்கான அமெரிக்க மக்கள், தொழில் சார்ந்தவர்கள், மாணவர்கள்,
மற்றும் இளைஞர்கள், ஈராக் போரால் வெறுப்படைந்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று
விரும்புகின்றனர். அந்த இலக்கை அடைய ஒரு முன்நிபந்தனை உண்டு. ''புஷ்ஷைத் தவிர வேறு எவரும்'' என்ற
சுருக்கமான கொள்கையில் அடங்கியுள்ள மாய்மாலத்தை கைவிட்டால்தான் அது சாதிக்கப்பட முடியும். கெர்ரியும்,
ஜனநாயகக் கட்சிக்காரர்களும் மேற்கொண்டுள்ள அரசியல் செயல்திட்டத்திற்கும் போர் முடிவிற்கு வரவேண்டும் சமூக
மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து நிற்க வேண்டும் என்ற போராட்டத்திற்கும் எந்த விதமான தொடர்பும்
இல்லை. இதை புரிந்து கொள்ள ஜனநாயகக் கட்சியின் அறிக்கைகளை படிக்க வேண்டும் அல்லது அவர்கள் என்ன
சொல்கிறார்கள் என்பதைக் கேட்க வேண்டும்.
இந்த அரங்கில் போரை தொடக்கியதற்காக நிர்வாகத்தை அவர்கள்
கண்டிக்கவில்லை. மாறாக கோழைத்தனமான ஒரு சொற்றொடர் மூலம் புஷ் நிர்வாகத்தின் போர்க்
குற்றவாளிகளையும், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் ஜனநாயகக் கட்சிக்காரர்களையும் காப்பாற்ற
முயன்றிருக்கிறார்கள். ''நல்விருப்பம் கொண்ட மக்கள் அமெரிக்கா போருக்கு சென்றிருக்க வேண்டுமா என்பது
குறித்து கருத்துவேறுபாடு கொண்டிருப்பர்'' என்று ஜனநாயகக் கட்சி குறிப்பிட்டிருக்கின்றது.
தற்போது, கொழுந்துவிட்டு எரிகின்ற அரசியல் பிரச்சனை -பொய்களை
அடிப்படையாகக் கொண்டு தொடக்கப்பட்ட ஒரு ஏகாதிபத்தியப் போரினால் ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ஈராக்
மற்றும் அமெரிக்க உயிர்கள் பலியாகியிருக்கின்றன. பில்லியன் கணக்கான டாலர்கள் செலவாகியிருக்கின்றது. இந்தச்
சூழ்நிலையில் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் கூறுகின்ற காரணம் மிகுந்த இறுமாப்பான தெளிவில்லாத கருத்தாகும்.
ஒரு ''பெரிய'' கட்சி தார்மீக மற்றும் அரசியல் வங்குரோத்துடன் இதுபோன்று நடந்து கொண்டதற்கு முன்
உதாரணம் எதுவும் இல்லை.
அவர்கள் அமெரிக்க துருப்புக்களை விலக்கிக்கொள்ள வேண்டுமென்று கேட்கவில்லை.
இப்போது அமெரிக்க மக்களில் ஏறத்தாழ பாதிப்பேர்- குறிப்பாக ஜனநாயகக் கட்சியின் கணிசமான
பெரும்பான்மையினர் உடனடியாக அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேற வேண்டும் என்று கூறுவது கருத்துக்கணிப்புக்கள்
மூலம் தெளிவாகின்றது. இதற்கு மாறாக ஜனநாயகக் கட்சியினர் ஈராக்கிற்கு மேலும் துருப்புக்களை அனுப்பி அந்த
துருப்புக்கள் ஈராக் மக்களைக் கொல்ல வேண்டும் மற்றும் ஈராக்கில் அவர்கள் மடிய வேண்டும் என்று
கூறுகிறார்கள்.
இந்த தேர்தலை, ஈராக்போர் தொடர்பான பொது வாக்கெடுப்பாக மாறிவிடாது
தடுப்பதில் இரண்டு கட்சிகளுமே உறுதியாக உள்ளன. இதன்மூலம் போரை எதிர்க்கின்ற கோடிக்கணக்கான அமெரிக்க
மக்களின் வாக்குரிமையை அரசியல் ரீதியாகப் பறித்துள்ளனர். குறிப்பாக, ஜனநாயகக் கட்சிக்காரர்கள் ஜனநாயக
விரோத குறிக்கோளை கடைப்பிடித்து அதிகாரத்துவத்தின் சூழ்ச்சிகளோடு சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் இதர
சுயேட்சை மற்றும் மூன்றாவது கட்சி வேட்பாளர்களை வாக்குப்பதிவில் கலந்து கொள்ள விடாது தடுத்து வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வருகின்ற நேரத்தில் ஒவ்வொரு நாளும் போர்பற்றி இரண்டு கட்சிகளுமே
விவாதிக்காமல் இருப்பது, ஒரேயொரு முடிவைத்தான் சுட்டிக்காட்டுகிறது. போரைத் தடுத்து நிறுத்த
வேண்டுமென்றால் இருகட்சி கட்டுக்கோப்பை உடைத்துக்கொண்டு வெளிவரவேண்டும் என்பதுதான் அந்த ஒரே
முடிவாகும். அமெரிக்க உழைக்கும் மக்கள், மிகப்பெரும்பாலான பொதுமக்கள், தங்களது தேவைகளையும் நோக்கங்களையும்
புதிய சுயாதீனமான, பாரிய அரசியல் இயக்கத்தை சோசலிச வேலைத்திட்ட அடிப்படையில் கட்டியெழுப்பாமல் அடையமுடியாது.
அத்தகைய இயக்கத்தை அரசியல் ரீதியாகத் தயார் செய்வதற்காகத்தான்,
சோசலிச சமத்துவக் கட்சியைச் சேர்ந்த நாங்கள் இந்தத் தேர்தலில்
பங்குகெடுத்துக் கொள்கிறோம் மற்றும் அதற்காகப் போராட தயாராக உள்ள பல்லாயிரக்கணக்கானோரை திரட்டி
வருகிறோம்.
நானும், என்னுடைய சகாவாக துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் ஜிம் லோரன்சும்
நாட்டின் இதர பகுதிகளில் மாகாண சட்டசபைகளுக்கு போட்டியிடுகின்ற, நாடாளுமன்ற இரு அவைகளுக்கும்
போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடன் இணைந்து நின்று இருகட்சி சார்ந்த அரசியல் விவாதத்தில் நேரடியாக எதிர்த்து
நிற்கிறோம். இந்தத் தேர்தலில் போரை நிறுத்துவதற்கான போராட்டத்தை மையமான கொள்கையாக கொண்டுவர
நாங்கள் முயலுவோம்.
ஆகவே, உடனடியாக எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல், அனைத்து அமெரிக்கத்
துருப்புக்களும் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் மற்றும் இந்த சட்டவிரோதமான போரை தொடங்குவதற்கு சதி
செய்த அனைவர் மீதும் வழங்குத் தொடரப்பட வேண்டும் என்று ஓய்வின்றி கோரிக்கை எழுப்புவதற்கு எங்களது
தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்துவோம். ஈராக் மக்களுக்கும் இந்த போரில் தங்களது உயிரை தியாகம் செய்த
நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் குடும்பங்களுக்கும் கடுமையாக காயம் அடைந்த படையினர்களுக்கும்
இழப்பீடு தரவேண்டும் என்றும் கோருவோம்.
Top of page |