WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
politics of opportunism: the "radical left" in France
Introduction: Trotskyism and Centrism
சந்தர்ப்பவாத அரசியல்: பிரான்சில் "தீவிர இடது"
முன்னுரை: ட்ரொட்ஸ்கிசமும் இடைநிலைவாதமும்
By Peter Schwarz
8 July 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
"சந்தர்ப்பவாத அரசியல்: பிரான்சில் தீவிர இடது" என்ற ஏழு பகுதித் தொடர்
கட்டுரைகள் WSWS
ல் மே 15 முதல் ஜூன் 4, 2004 வரை வெளிவந்தன.
அவற்றின் முன்னுரை கீழே பிரசுரிக்கப்படுகிறது.
ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் அமைந்துள்ள நான்காம் அகிலம் இப்பொழுது பெரும்
உடனடிச் செயலாற்றலை எதிர்கொண்டுள்ளது. பெரும்பாலான மக்களை எதிர்கொள்ளும் ஆபத்துக்கள், பிரச்சினைகள்,
சமூகச் சரிவு மற்றும் போரின் அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள், தொழிற்சங்கங்களிடையே
எவ்விதமான விடையும் இல்லை. இக்கட்சிகளே, பிரச்சினைகளின் ஒரு பகுதியாகி விட்டன என்பதோடு, போராடிப்
பெறப்பட்ட சமூக மற்றும் ஜனநாயக வெற்றிகளை தகர்க்கவும் இவை தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. மில்லியன்
கணக்கான வாக்காளர்களும், உறுப்பினர்களும் இக்கட்சிகளை விட்டு நீங்கி மாற்று ஒன்றைத் தேடுகின்றனர். ஈராக்
போருக்கு எதிரான மக்களின் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இன்னும் ஐரோப்பா முழுவதும் நலன்சார் திட்டங்களை
அரசாங்கங்கள் அகற்றுவதற்கெதிரான தொடர்ந்த போராட்டங்கள் ஆகியவற்றால் இந்நிலை தெளிவாகக் காட்டப்படுகிறது.
ஆனால், சமூக வெட்டுக்கள், போர் இவற்றிற்கெதிராக தன்னியல்பாய் எழுந்த
போராட்டங்கள், தம் முயற்சியால் ஒரு புதிய செயல்படுத்தக்கூடிய முன்னோக்கைக் கொடுக்க இயலவில்லை.
மாறாக, இருபதாம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கம் பெற்ற வெற்றி தோல்விகளில் இருந்து எழுந்துள்ள படிப்பினைகளை
அறிந்த ஒரு கட்சியால்தான் அத்தகைய மாற்றம் வழங்கப்பட முடியும். இதுதான் நான்காம் அகிலத்தின் துல்லியமான
முக்கியத்துவம் ஆகும். ஸ்ராலினிசத்திற்கு எதிராக லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் எழுந்து இடது எதிர்ப்பில் துவங்கிய
நான்காம் அகிலம், தொடர்ச்சியான உறுதியுடன் சீர்திருத்தவாதம், ஸ்ராலினிசம் மற்றும் இடைநிலைவாதம்
ஆகியவற்றிற்கு எதிராக மார்க்சிய வேலைத்திட்டமான சர்வதேச சோசலிசத்தைக் காத்து வந்துள்ளது.
இந்த நிலைப்பாட்டில் இருந்து பிரான்சில் நடக்கும் நிகழ்ச்சிகளை பெரும் கவனத்துடன்
பார்ப்பது இன்றியமையாதது ஆகும். ஏப்ரல் 21, 2002 ஜனாதிபதி தேர்தல்களின் முதல் சுற்றில், கிட்டத்தட்ட 3
மில்லியன் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனத் தங்களைக் கூறிக்கொண்ட
Lutte Ouvriere (LO
- தொழிலாளர் போராட்டம்)
ஐச்
சேர்ந்த ஆர்லெட் லாகியே,
Lugue Communiste Revolutionnaire (LCR
- புரட்சி கம்யூனிஸ்ட்கழகம்) ஐச் சேர்ந்த
ஒலிவியே பெசன்செனோ மற்றும்
Parti des Travailleurs (PT
- தொழிலாளர் கட்சி) ஐச் சேர்ந்த
டானியல் குளூக்ஸ்ரைன் ஆகியோருக்கு வாக்களித்தனர். பல தசாப்தங்களாக தொழிலாளர்கள் இயக்கங்களிடையே
ஸ்ராலினிசம் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ள ஒரு நாட்டில், ட்ரொட்ஸ்கிச வேட்பாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின்
(PCF)
வேட்பாளரான ரொபேர்ட் ஹூவை விட மூன்று மடங்குகள் அதிக வாக்குகளைப் பெற்றனர். பிரான்சின்
கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள் ஆகியோரிடம் பல பத்தாண்டுகளில் கசப்பான அனுபவத்தைக் கொண்டிருந்த
நிலையில், இந்த விளைவுகள் கணிசமான தொழிலாளர், இளைஞர் பிரிவு சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு
ஒரு புரட்சிகரமான விடையைக் காண முற்படுகின்றது என்பதை நிரூபித்துள்ளது.
ஆனால், தங்கள் பங்கிற்கு
LO, LCR, PT
ஆகிய தீவிர இடது கட்சிகள், அத்தகைய விடையைத் தங்களால் தர இயலாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அவர்களுடைய கொள்கைகளில், நான்காம் அகிலத்தின் புரட்சிகர மரபுகளோடு தொடர்பு கொண்டவை ஏதும்
கிடையாது. இந்தக் கட்டுரைத் தொடர்களில் விளக்கி இருப்பதைப்போல், மிகமுக்கியமான வரலாற்றுத்
திருப்புமுனைக் கட்டங்களில், இந்த மூன்று அமைப்புக்களும் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தை தம்மளவில்
பலகாலம் முன்பே முறித்துக் கொண்டுவிட்டன. தன்னுடைய வாழ்வின் கடைசிக்காலத்தில் மிகக் கடுமையாக
ட்ரொட்ஸ்கி போராடியிருந்த இடைநிலைவாதம்தான்
அவர்களின் இன்றைய அரசியல் என்பதை மிக வருந்தத்தக்க அளவில் நினைவு கூற வைக்கின்றன.
சீர்திருத்தவாதம் மற்றும் ஸ்ராலினிசம் இவற்றிலிருந்து தொழிலாளர்கள் முறித்துக்
கொள்ளாமல் இருப்பதற்கு திட்டவட்டமான தடையாக 1930 களில்
இடைநிலைவாதம் உருவாகியது.
ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்பு,
பின்னர் கம்யூனிச அகிலத்தில் வலதுசாரிகளின் வளர்ச்சி காரணமாக 1933 ல் ஜேர்மன் தொழிலாள வர்க்கம்
தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னர், பல முற்போக்கு கருத்துடைய தொழிலாளர்கள் ஒரு புதிய புரட்சிகர
நோக்குநிலையைக் கொள்ள விழைந்தனர். இத்தேவைக்கேற்ப இருந்தது போல் இடைநிலைவாதம் தோன்றியதால்,
சொற்களில் புரட்சியை நோக்கிச் செல்வது போலும், நடைமுறையில் சீர்திருத்தவாத, ஸ்ராலினிசக் கருவிகளோடு
ஒரு முறிவை நிராகரித்ததிலும் இது இருந்தது.
இடைநிலைவாத
அமைப்பிற்குத் தலைசிறந்த உதாரணமாக, ஸ்பெயினின்
POUM
(Workers Party of
Marxist Unification)
எனப்பட்ட கட்சி
Andres Nin
தலைமையில் விளங்கியது. POUM
பற்றி ட்ரொட்ஸ்கி விளக்கிக் கூறியதாவது: "POUM
தலைவர்கள் ஒரு கணம்கூட சுதந்திரமான பங்கைக் கொள்ளவேண்டும் என்று கருதவில்லை. பெரும் மக்கள் அமைப்பிற்கு
நல்ல 'இடது' ஆலோசகர்களாகவும், நண்பர்களாகவும் தங்கள் பங்கு இருப்பதைத்தான் அவர்கள்
விரும்புகின்றனர்."(1) ட்ரொட்ஸ்கியுடன் பொதுவாக உடன்பாட்டினை ஆந்திரே நின் வலியுறுத்தி வந்துள்ளபோதிலும்,
ஸ்பெயின் புரட்சியில் முக்கிய திருப்புமுனைக் கட்டங்களில் அவர் ஸ்ராலினிசக் கருத்துக்களைத்தான் மாற்றங்களுடன் எடுத்துக்
கொண்டார். இதையொட்டி புரட்சியின் தோல்விக்கு அவர் கணிசமான பொறுப்பைப் பெற்றுவிட்டார். 1936 ம்
ஆண்டு புரட்சிகர அலை மிக உயர்ந்து காணப்பட்டபோது, பின்னர் புரட்சியை நசுக்கிய கட்டலோனியாவில் இருந்த
மக்கள் முன்னனி அரசாங்கத்தின் அணியில் சேரும் அளவிற்குப் போய்விட்டார்.
POUM
க்கு ஒப்பாகத்தான் பிரான்சில்
PSOP (Workers
and Peasants Socialist Party)
என்ற தொழிலாளர்கள், விவசாயிகளின் சோசலிஸ்ட்
கட்சி இருந்தது. 1938 ல்
Marceau Pivert ஆல் தோற்றுவிக்கப்பட்ட
இக்கட்சி இரண்டாம் உலகப்போரின்போது சிதறுண்டாலும் அரசியல் வழிவகைகள், நிலைப்பாடுகள், பழக்கங்கள்
ஆகியவை இன்றளவும் பிரான்சின் தீவிரப்போக்குடைய அமைப்புக்கள் மத்தியில் செல்வாக்கைக் கொண்டுள்ளன.
Daniel Guérin
க்கு ட்ரொட்ஸ்கி எழுதிய கடிதம் ஒன்றில்
PSOP
பற்றி எழுதியதாவது: "இடது இடைநிலைவாதம், அதிலும் குறிப்பாகப் புரட்சிகர நிலைமைகளின் கீழ் சோசலிச
புரட்சியின் வேலைத்திட்டத்தின் சொற்களை ஏற்பதற்கு எப்பொழுதும் தயாராக இருக்கிறது மற்றும் கம்பீரமான
சொற்களைப் பயன்படுத்துவதில் கருமித்தனம் காட்டாது. ஆனால் இடைநிலைவாதத்தின் மரணம் விளைவிக்கும் நோய்,
அதன் பொதுக் கருத்துக்களில் இருந்து துணிவான தந்திரோபாய மற்றும் அமைப்பு ரீதியான முடிவுகளைப் பெற அதனால்
இயலாமல் இருப்பது அல்ல. அவை எப்பொழுதும் அதற்கு இன்னும் காலம் 'கனியாததாக'..தோன்றும்.(2)
POUM
போலவே, PSOP
சொல்லளவில் புரட்சிக்கு ஆதரவு கொடுத்து, அதேநேரத்தில் அரசியல் ரீதியாக, சமூகரீதியாக, அறநெறி ரீதியாக
சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் இவற்றின் ஊழல் மிகுந்த சூழலில்தான் தன்னைப் பிணைத்திருந்தது.
Alfred Rosmer
க்கு 1939 ல் எழுதிய கடிதம் ஒன்றில் ட்ரொட்ஸ்கி வலியுறுத்திக் கூறியதாவது: "இப்பொழுது பிரான்ஸ் கடந்து
கொண்டிருக்கும் சகாப்தத்தில் மிகக் கடினமானதும், முக்கியமானதும் முதலாளித்துவ பொதுக் கருத்துக்களின்
செல்வாக்கிலிருந்து ஒருவர் தம்மை விடுவித்துக் கொள்ளுவது பெரிதல்ல; உள்மனத்தளவில் அதில் இருந்து முறிந்து, அதன்
ஒலங்கள், பொய்கள், அவதூறுகள் இவற்றைக் கண்டு அஞ்சாமல் இருந்தலும், அதன் புகழாரம், போலி உரைகள்
இவற்றை அதே அளவில் வெறுத்தலும் முக்கியமானவையாகும். அந்த நிபந்தனையில்தான் சுதந்திரமான செயற்பாட்டிற்குத்
தேவையான பாதுகாப்பு, சரியான நேரத்தில் மக்களின் புரட்சிக் குரலைக் கேட்டறியும் திறன், முடிவெடுக்கும்
தாக்குதலுக்குத் தலைமை தாங்குதல் இவை வரும்."(3)
PSOP
இத்தகைய பணியை அமைப்புரீதியாக ஏற்கமுடியாமற்
போயிற்று.
இக்கட்சியின் நிறுவனர்
Marceau Pivert
சோசலிஸ்ட் கட்சியின் (SFIO)
புரட்சிகர இடது போக்கின் தலைமையை, 1930 களின் நடுப்பகுதிவரை கொண்டிருந்தார். ஜேர்மன் தொழிலாள
வர்க்கத்தின் தோல்விக்குப்பிறகு அவர் ட்ரொட்ஸ்கிசத்திற்கு நெருங்கி வந்து, தொழிலாளர்களின் ஐக்கிய முன்னணி அழைப்பிற்கு
ஆதரவு கொடுத்தார். 1934 ம் ஆண்டு கோடைக் காலத்திலிருந்து 1935 கோடைக்காலம்வரை,
Pivert,
தங்களுடைய வேலைத்திட்டத்திற்கு இடது சார்புடைய
உறுப்பினர்களை வெல்வதற்காக
SFIO விற்குள் பணிபுரிந்து வந்திருந்த
பிரான்சின் ட்ரொட்ஸ்கிஸ்டுகளோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். இக்காலக்கட்டத்தில் அவர் பலமுறையும்
ட்ரொட்ஸ்கியுடன் உடன்படுவதாகக் கூறிவந்தார்.
1936 ம் ஆண்டு, மக்கள் முன்னணி அரசாங்கத்தின் ஆட்சி நடந்தபோது நடைபெற்ற
பொதுவேலை நிறுத்தத்தின் உச்சக் கட்டத்தில்,
Pivert
ஒரு புரட்சி துவங்க உள்ளது என்று உற்சாகமாக அறிவித்தார். "இப்பொழுது எதுவும் கைகூடும்" என்ற தலைப்பிட்ட
கட்டுரையில் அவர் அறிவித்தார்: "நாம் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாத
முறையில் மக்கள் பெரும்
முன்னேற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் சிக்கல் நிறைந்துள்ள கோட்பாட்டு முறைகளைப் பற்றிக்
கவலைப்படவில்லை; உறுதியான உள்ளுணர்வுடன் அடிப்படைத் தீர்வுகளைக் கோருகின்றனர். அவர்களுடைய
எதிர்பார்ப்பு மிகவும் பெரியது.... மிகக்கடினமான அறுவை சிகிச்சைகளைக்கூட ஏற்கத்தயாராக உள்ளனர்;
ஏனென்றால் முதலாளித்துவ உலகம் ஒரு மரணப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்பதை அறிந்து, பாசிசத்தையும்
போரையும் நிறுத்துவதற்கு, நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒரு புதிய உலகம் அமைக்கப்படவேண்டும் என்று
கருதுகின்றனர்."(4)
ஆனால் இக்கருத்துக்களை
Pivert
எழுதிக் கொண்டிருக்கும்போது,
Leon Blum
தலைமையில் இருந்த மக்கள் முன்னணி அரசாங்கத்தில்
அவர் முக்கியமான தலைவராக தொடர்ந்தும் இருந்தார். அக்கட்சியோ புரட்சிகரப் போராட்டங்களின்
அலைகளைத் திணற அடிக்கத்தான் செய்தது. அரசாங்கத்தின் தலைவர் என்ற முறையில்
Pivert
அரசியல்முறையில் வானொலி, செய்தித் தாட்கள், திரைப்படங்கள் இவற்றை கட்டுப்படுத்தும் பொறுப்பைக்
கொண்டிருந்தார். சமூக ஜனநாயகத்திலிருந்து அரசியல் அல்லது அமைப்பு முறையில் அவர் தன்னை விடுவித்துக்
கொள்ளவில்லை; பின்னர் கடைசியில் வெளிப்படையாகவே நான்காம் அகிலத்தை எதிர்த்தார்.
Pivert
அதிகாரப்பூர்வ தொழிலாளர் தலைவர்களுடன் முறித்துக் கொள்ள மறுப்புத் தெரிவித்தது போலவே,
Freemasons lodge
இலிருந்தும் தன்னுடைய உறுப்பினர் நிலையை முறித்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. இந்த உறுப்பினர் தன்மையின்
முக்கியத்துவம் பற்றி ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகிறார்: "பலதரப்பட்ட வர்க்கங்களின் மக்கள், பல்வேறு அரசியல்
கட்சிகளைச் சார்ந்தவர்கள், பல்வேறு அக்கறை கொண்டவர்கள், தனிப்பட்ட முறையில் பல்வேறு நோக்கங்களைக்
கொண்டவர்கள் ப்ரீமேசன் அமைப்பில் இருந்தனர்.
Freemasonry
தலைமையின் ஒட்டுமொத்த கலையே, பல எதிர்மறைப் போக்குகளின் விரோதப் போக்கை நடுநிலைக்குக்
கொண்டுவருதலும், குழுக்கள், தன்னலக் குழுக்கள் இவர்களிடையே உள்ள விரோதங்களைச் சீராக்குவதும்தான்.
(இது, "ஜனநாயகத்தின்" நன்மைக்கு, "மனிதகுலத்தின்" நன்மைக்காக, அதாவது ஆளும் வர்க்கத்தின்
நலன்களுக்காக எனப்பட்டது.) எனவே எதைப்பற்றி வேண்டுமானாலும், முக்கியத்துவம் வாய்ந்ததைத் தவிர, ஒருவர்
பேசுவது வழக்கமாகிவிட்டது. இந்தத் தவறான, பாசாங்கான, கலப்படம் நிறைந்த அறநெறி முறை,
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே, பெரும்பாலான அதிகாரபூர்வமான பிரெஞ்சுத் தொழிலாளர்
தலைவர்களுடைய உள்ளத்தில் கருக்கொண்டுவிட்டது." (5)
PSOP
உடைய இடைநிலைவாத மரபுகள் கட்சி மடிந்தபின்னரும் கூடத் தொடர்ந்தன. பிரான்சில் இத்தகைய
இடைநிலைவாதக் கருத்து உடையவர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். இவர்கள் முதலாளித்துவ முகாமுக்குச்
செல்லும் வழியின் ஒரு கட்டமாகத்தான் இந்தவாதம் இருந்தது. இவர்கள் இன்று மிக முக்கியமான பங்கை மக்களின்
அரசியல், பொருளாதார வாழ்வுகளில் கொண்டுள்ளனர். அவர்களில் பலர் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு
கட்டத்தில் தாங்கள் ட்ரொட்ஸ்கிஸ்டுகளாக இருந்தோம் என்ற கருத்தை உடையவர்கள். இதற்கு உதாரணமாகப்
பழைய சோசலிசப் பிரதம மந்திரி லியனல் ஜொஸ்பனைக் கூறலாம். இவர்
Pierre Lambert
உடைய OCI (இன்றைய
PT
உடைய ஒரு பகுதி) என்ற கட்சியில் இருந்தார்.
மேலும் Le Monde
உடைய ஆசிரியர் குழுவின் தலைவரான
Edwy Plenel (10
ஆண்டுகள் LCR
ல் இருந்தவர்),
FNAC
புத்தகக் கடைத் தொடரின் நிறுவனர்களான
André Essel and Max Théret
ஆகியோரும் இப்பிரிவைச் சேர்ந்தவர்கள்தாம்.
எல்லா இடது தீவிர அமைப்புக்களிலும்,
Pivert
போன்ற இடைநிலைவாதக் கருத்துக்களைக்கொண்டு, "முக்கியமானதைத்தவிர, மற்றவற்றை கம்பீரமாகப்
பேசுவோர்", முதலாளித்துவக் கருத்தை மாறுதலுடன் எடுத்துக் கொள்ளுபவர்கள், அதிகாரப்பூர்வமான
தொழிலாளர் தலைவர்களுடைய சூழலில் நெருங்கிய தொடர்பு உடையவர்கள் என்று நாம் பலரைக் காணமுடியும்.
PT
ஐப் பொறுத்தவரையில், இதன் நெருங்கிய
தொடர்பு Lodge Grand
Orient மற்றும்
Freemasosnry
உடன்கூட இருப்பதைக் காண்கிறோம்.
PSOP
வைப் போலவே, இந்த அமைப்புக்களின் புரட்சிகர சோசலிசப் பேருரைகள், முற்றிலும் சந்தர்ப்பவாத
நோக்கைத்தான் கொண்டுள்ளன..
ஒவ்வொரு வரலாற்று அனுபவமும் இடைநிலைவாதத்திற்கு எதிரான போராட்டம், பிரான்சில்
ஒரு புரட்சிகரக் கட்சியை அமைப்பதற்குத் தவிர்க்கமுடியாத முன்நிபந்தனை என்பதை நிரூபித்துள்ளது. இது பிரான்சில்
மட்டும் இல்லை. இந்த அடிப்படையில்தான் அரசியல் ரீதியாக ஆயுதபாணியாக்கப்பட்ட மற்றும் வரவுள்ள வர்க்கப்
போராட்டங்களுக்காகத் தயாராயிருக்கக் கூடிய ஒரு கட்சியைக் கட்டுவது சாத்தியம். அல்லது, ஒரு கடிதத்தில்
Daniel Guérin
க்கு டிராட்ஸ்கி குறிப்பிட்டுள்ளது போல், "அத்தகைய சோதனைக்குக் கட்சியைத் தயார் செய்யும் பொருட்டு, அதன்
வளைந்து கொடுக்காத தன்மையை நல்ல முறையில் கொண்டுவருவதற்கு, உயர் சிந்தனைகளை இறுதிவரை பின்பற்றுவதற்கு
இப்பொழுது அதன் முழு நனவையும் தூய்மைப்படுத்துவது, நன்கு தூய்மைப்படுத்துவது, அவசியமானதாகும், துரோகம்
செய்யும் நண்பர்களை மன்னிக்கலாகாது." (6)
ஆகவே, இத்தொடர் கட்டுரைகள் இந்த இலக்கைத்தான் தெளிவாகக் கொண்டுள்ளன.
அத்துடன் இவை, LO, LCR
இவற்றின் அரசியல் கருத்துரு, வேலைத்திட்டம் மற்றும் வரலாறு இவற்றைக் கவனமான விமர்சனத்திற்கு உட்படுத்துகின்றன.
(7) அவர்கள் ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கைப் பெற்றுள்ளோம் என்று கூறினாலும், அந்த இலக்கை
நோக்கிச் செல்வதற்கான எந்த முயற்சிக்கான அறிகுறியையும் அவர்களிடம் காண்பதற்கில்லை. அவர்களுடைய அரசியல்
நோக்கம் பற்றிய கூற்றுக்களுக்கும் நடைமுறைக்கும் இடையே ஒர் ஆழ்ந்த பிளவு உள்ளது.
பிரான்சின் தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு மிகப்பெரிய முறையில் வாய்ப்புக்களை
இழந்து விட்ட பெரும் ஏமாற்றங்களைக் கொண்டுள்ளது. பலமுறையும் நல்ல எதிர்காலம் இருக்க வேண்டிய மக்கள்
இயக்கங்கள் முடங்கிப் போய்விட்டன. இதற்குக் காரணம் அவற்றின் தலைமை தேவையான அரசியல் வழிகாட்டுதலை
அளிக்காதது அல்லது இயக்கத்தைக் காட்டிக் கொடுத்ததினால் ஆகும். 1930 களில் மக்கள் முன்னணியும், 1968 ன்
பொது வேலைநிறுத்தமும் இதற்குச் சிறந்த சான்றுகள் ஆகும். இந்தத் தொடர்கட்டுரையின் நோக்கம், அத்தகைய
தோல்விகள் மீண்டும் வரக்கூடாது எனப் பாதுகாப்பதற்கும் இந்த அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிய திறனாய்வுக்
கருத்தாய்வை மேற்கொள்ளும் முயற்சியோடு, இத்தொடர் ஒரு உண்மையான
பாரிய
சோசலிச மக்கள் இயக்கம் வளர்வதற்கும் அதை வெற்றிப்பாதையில் கொண்டு செல்வதற்குமான அடிப்படையை நிறுவ
முயல்கிறது.
See Also
:
சந்தர்ப்பவாத அரசியல்: பிரான்சில்
"தீவிர இடது"
முதல் பகுதி: LO-LCR
தேர்தல் கூட்டு
சந்தர்ப்பவாத அரசியல்: பிரான்சில் "தீவிர இடது"
பகுதி 2: "முதலாளித்துவ எதிர்ப்பு இடதை"
LCR
ஒன்று திரட்டல்
சந்தர்ப்பவாத அரசியல்: பிரான்சில்
"தீவிர இடது"
பகுதி 3: பப்லோவாத அகிலத்தின்
பதினைந்தாம் உலக மாநாடு
சந்தர்ப்பவாத அரசியல்:
பிரான்சில் "தீவிர இடது"
பகுதி 4: பப்லோவாதத்தின்
வேர்கள் - ஒரு வரலாற்று மறு ஆய்வு
சந்தர்ப்பவாத அரசியல்:
பிரான்சில் "தீவிர இடது"
பகுதி 5: பப்லோவாதிகளும் லூலா அரசாங்கமும்
சந்தர்ப்பவாத அரசியல்:
பிரான்சில் "தீவிர இடது"
பகுதி 6: லூத் ஊவ்றியேர்
இன் மனச்சோர்வடைந்த அரசியல்
சந்தர்ப்பவாத அரசியல்:
பிரான்சில் "தீவிர இடது"
பகுதி ஏழு: லூத் ஊவ்றியேரும் நான்காம் அகிலமும்
Top of page |