World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Report of the Socialist Equality Party presidential candidate

The Fourth of July, 2004: America's revolution 228 years on

சோசலிச சமத்துவ கட்சியுடைய ஜனாதிபதி வேட்பாளரின் அறிக்கை

2004, ஜூலை நான்கு: அமெரிக்கப் புரட்சியின் 228-வது வருடம்

By Bill Van Auken
3 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

SEP ஜனாதிபதி வேட்பாளரின் கீழ்க்கண்ட அறிக்கை WSWS TM PDF வடிவமைப்பில் பிரசுரிக்கப்படுகிறது. நம்முடைய வாசகர்களையும், ஆதரவாளர்களையும் இவ்வறிக்கையின் பிரதிகளை எடுத்து ஜூலை நான்கு அன்று நடக்கும் கூட்டங்கள், வேலையிட நிகழ்ச்சிகள் மற்றும் பிற பொது இடங்களிலும் விநியோகிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நான்காம் ஜூலை மீண்டும் நம்மிடையே வந்துள்ளது. கூடுதல் வேலை செய்து, குறைவாக ஊதியம் பெறும் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு, குடும்பத்துடன் இருக்கும் ஒரு சில நாட்களில் இதுவும் ஒன்றாகும். பெருவர்த்தக அரசியல்வாதிகளைப் பொறுத்த வரையில், தங்களை மீண்டும் தேசியகொடியால் சுற்றிக்கொண்டு, தேசியவாதம், இராணுவவாதம், "சுதந்திர சந்தையின்" நல்லியல்புகள் இவற்றைப் பற்றி உரையாற்றுவதற்கு மற்றொரும் ஒரு வாய்ப்பு ஆகும்.

அதிகாரபூர்வமான விடுமுறை அறிவிப்புக்களில் இந்நாள் எதை நினைவூட்டுகிறது என்பது பற்றிய முக்கிய விளக்கம் தவிர்க்கப்படமுடியாமல் நீக்கப்பட்டிருக்கும்: அதாவது உலகெங்கிலுமிருந்த மக்களை ஒருகாலத்தில் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்காக ஊக்குவித்த தினத்தை நினைவு கூர்தல் என்பது புலப்படுத்தப்படவில்லை.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைச் செயலர் டோம் ரிட்ஜ், இந்த விடுமுறை நாளை ஒட்டி மற்றும் ஒரு தொகை எச்சரிக்கைகளை தவிர்க்கமுடியாத பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி தெளிவற்ற முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்; ஆனால் எப்படி, எப்பொழுது, எங்கு அத்தகைய கொடூரங்கள் நேரலாம் என்பது பற்றிய தகவல் குறிப்பிடப்படவில்லை.

அந்நாளின் வாணவேடிக்கை கோலாகலங்கள் காலனித்துவத்திற்கும் கொடுங்கோன்மைக்கும் எதிரான ஆயுதமேந்திய புரட்சியின் அடையாளம் என்ற உண்மையைப் பற்றி சிந்திக்குமாறு எவரும் தூண்டப்படுவதில்லை. ஆயினும் கூட முதல் ஜலை 4 முடிந்து 228 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, அப்புரட்சியிலிருந்து தோன்றிய வினாக்கள் இன்னும் மேலும் கூர்மையான முறையில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு நம்முடைய வரலாற்றில் எழுந்துள்ளன.

1776ம் ஆண்டு அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திடப்பட்ட நாளின் ஆண்டுவிழாவை இவ்விடுமுறைநாள் குறிக்கிறது. பிரகடனத்திற்கு அறிவிக்கப்பட்ட சமத்துவம், "விட்டுக் கொடுக்க முடியாத உரிமைகள்", கொடுங்கோன்மைக்கு எதிரான புரட்சியை அது நியாயப்படுத்திய முறை, ஒரு உலக வரலாற்று முக்கியத்துவத்தை அதற்குக் கொடுத்துள்ளது. அதில் கையெழுத்திட்டவர்கள், குறிப்பாக அதை எழுதிய தோமஸ் ஜெபர்சனும், புத்தெளிச்சி (அறிவு ஒளி சார்ந்த) காலத்தின், அறிவார்ந்த, அரசியல் முறை, அறநெறிப் பண்பாட்டின் தன்மையினால் ஊக்குவிக்கப் பெற்று, அந்த ஆவணத்தை ஒரு தனிப்பட்ட அமெரிக்க சாசனமாக மட்டும் கருதாமல் கொடுங்கோன்மையாட்சிக்கு எதிரான உலகந்தழுவிய எழுச்சிக்கு அழைப்பாகக் கருதினர்.

இப்பிரகடனத்தைப்பற்றி ஜெபர்சன் கூறினார்: "இது உலகம் முழுவதற்குமாக ஒளிகாட்டும் என்று நான் கருதுகிறேன் (சில பகுதிகளுக்கு விரைவிலேயே, சில பகுதிகளுக்குப் பின்னர், இறுதியில் அனைத்துப் பகுதிகளுக்கும்); சமயநெறித்தனமான அறியாமை, மூடப் பழக்கங்கள் இவற்றை ஒட்டி மக்கள் தம்மைத் தாமே தளைகளில் பிணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இருந்து தளைகளை வெடித்துச் சிதறச்செய்து எழுப்புவதற்கு அடையாளமாகவும், தம்மைத் தாமே ஆளுவதில் பாதுகாப்பும் பெருஞ்சிறப்புக்களையும் ஏற்பதற்கும் இது அடையாளமாக விளங்கும். தற்போதுள்ள நிலைக்குப் பதிலாக நாம் பதிலீடு செய்துள்ள வடிவமைப்பு தடையின்றி பகுத்தறிவும், எண்ணங்களின் சுதந்திரமும் தடையின்றிச் செயல்படுத்தும் உரிமையை அளித்துள்ளது. மனித உரிமைகளுக்காக அனைத்துக் கண்களும் திறந்துள்ளன, அல்லது திறந்துகொண்டிருக்கின்றன."

இத்தகைய ஜனநாயக உயர் சிந்தனைகளுக்கும் அமெரிக்க சமுதாய முறையின் யதார்த்தத்திற்கும் இடையே இருந்த முரண்பாடுகள் ஆரம்பத்தில் இருந்தே மறுக்கப்படமுடியாமல்தான் இருந்திருந்தன. வேர்ஜீனியாவில் அடிமைகளின் எஜமானராக இருந்த ஜெபர்சனின் முயற்சி பிரிட்டிஷ் மன்னர் அடிமை வணிகத்திற்குக் கொடுத்த ஆதரவை "மனித இயல்பிற்கே எதிரான கொடுமையான போர்", "தன்னை ஒருபோதும் தாக்காத எங்கோ வாழும் மக்களுடைய சுதந்திரங்கள் மற்றும் உயிர்களின் புனித உரிமைகள்" மீறப்படுதல் என்று கண்டித்திருந்த ஆவணத்தை சேர்க்க முடியாமல் போனதிலேயே உச்சக் கட்டத்தின் தொகுப்பாக இருந்தன.

ஆரம்பகாலத்தில் அடிமை முறையோடு தொடர்பு கொண்டிருந்தும், பின்னர் பொருளாதாரச் சமத்துவமற்ற முறை, சுரண்டல் இவற்றோடும் தொடர்பு கொண்டிருந்த ஒரு சமுதாயத்தில், ஜனநாயகக் கொள்கைகள் பற்றிய பிரகடனமும், சமுதாய உண்மை நிலைப்பாட்டில் இருந்த முரண்பாடு சோசலிசத்திற்காக போராட்டித்திற்கு ஒரு ஆரம்பகட்டமாகவே இருந்து, உண்மையில் அநீதிக்கு எதிரான எந்தப் போராட்டத்திற்குமே ஆரம்பகட்டமாக இருந்தது; அடிமை முறை அகற்றப்படுதலில் இருந்து தொழிலாளர்கள் உரிமைகள் பற்றிய வெகுஜன இயக்கங்கள் மற்றும் இனப்பிரிவினையை எதிர்த்து குடிமையுரிமைப் போராட்டத்திற்காக ஜிம் க்ரோ நடத்திய போராட்டம் என்று, அமெரிக்க வரலாற்றில் பலவற்றிற்கு அடிப்படையாகும்.

இப்பொழுள்ளது போன்ற அப்பட்டமான முரண்பாடுகள் எப்பொழுதுமே இருந்ததில்லை. இப்பொழுது வெள்ளை மாளிகையில் இருப்பவரை "ஜோர்ஜ் மன்னர்" என்று குறிப்பிடுவது ஒருபுறம் இருக்க, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜெபர்சன், மற்றும் அவருடைய சக புரட்சியாளர்கள் வரைந்திருந்த பிரகடனத்தின் சொற்களும் இன்றைய புஷ் நிர்வாகம் மற்றும் அமெரிக்க அரசியல் நடைமுறையின் முழுப்பகுதியின் மீதும் ஒரு குற்றஞ்சார்ந்த பெரும் தாக்குதல் போலத்தான் இயங்குகின்றன.

ஆங்கிலேய அரசரின், முடியாட்சிக்காக "தெய்வீக உரிமைக்" கோட்பாட்டை நிலைநிறுத்தும் வகைக்குப் பதிலாக சுதந்திரப் பிரகடனம், "அரசாங்கங்கள் மனிதர்களிடையே நிறுவப்பட்டு தங்களுடைய அதிகாரங்களை ஆளப்படும் மக்களிடமிருந்தே பெறுகின்றன" என்று வலியுறுத்துகிறது. ஆயினும்கூட, இன்று அமெரிக்கர்கள் 2000ம் ஆண்டில் திருடப்பட்ட தேர்தலின் மூலம், மக்களுடைய வாக்குகள் நசுக்கப்பட்ட முறையில் வந்துள்ள, தான் ஆளுகின்ற மக்களுடைய பெரும்பான்மையினரின் இசைவின்றி அதிகாரத்தை கொண்டுள்ள அரசாங்கத்தால் ஆளப்படுகின்றனர்.

இந்த அரசாங்கம் ஈராக்கின் மீது போர் தொடுத்து அந்நாட்டில் 25 மில்லியன் மக்களை காலனித்துவ முறையிலான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியுள்ளது; இந்த நடவடிக்கை பிரித்தானியா பதினெட்டாம் நூற்றாண்டு அமெரிக்கக் காலனித்துவங்களின் மீது செலுத்தியதைவிடக் கடுமையானதும் குருதி சிந்துவதும் ஆகும். இது முடிவில்லாத "பயங்கரவாதத்தின் மீதான போரை" ஆரம்பித்துள்ளது; ஈராக் போர் இதில் ஒரு பகுதி என்றே கருதப்படுகிறது. சுதந்திரப் பிரகடனம் மற்றும் அமெரிக்க அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை கைவிடுவதற்கும் இது ஒரு காரணமாகக் காட்டப்படுகிறது.

மூன்றாம் ஜோர்ஜிற்கு எதிராக பிரகடனத்தில் உள்ள விவரங்களில், "அவர் இராணுவத்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்து சுதந்திரமாகவும், உயர்ந்த நிலையிலும் வைக்க முற்பட்டார்" என்ற குற்றமும் முன்வைக்கப்பட்டிருந்தது.

சட்டசபையால் முறையாக போர் அறிவிப்பு இல்லாமல் அமெரிக்க அரசியல் முறையிலும் பல பத்தாண்டுகளாக இதே போக்கு மறுக்க முடியாமல், நீண்ட பட்டியலில் இராணுவத் தலையீடுகள் என்று நடத்திய செயற்பாடுகள் வெளிப்பட்டிருந்தாலும்கூட, புஷ் நிர்வாகம் தடையற்ற இராணுவ வாதத்தை முன்னொருபோதுமில்லாதளவிற்கு உயர்த்தியுள்ளது. இந்த அரசாங்கம் இராணுவம் சாதாரண ஆட்சிக்கு கீழ்ப்படிந்து இருக்கவேண்டும் என்ற கொள்கையை திட்டமிட்டு இல்லாதொழித்துள்ளது.

"தலைமைத் தளபதி" என்னும் முறையில் வினாயெழுப்பமுடியாத அதிகாரத்தின்கீழ் ஜனாதிபதி அசாதாரணமான அதிகாரங்களைக் கொண்டுள்ளார் என்ற கூற்றை இந்நிர்வாகம் முன்வைத்துள்ளது. இதையொட்டித்தான், நிர்வாகம் சர்வதேச சட்டத்தை தவிடுபொடியாக்கும் முறையில் தன் அதிகாரத்தை வலியுறுத்தியுள்ளது; அமெரிக்காவிற்கு எதிராக எந்த விரோத நடவடிக்கைகளையும் கொள்ளாத நாடுகள் மீது தூண்டுதல் இன்றி "ஒருதலைப்பட்சமான" போர்களையும் தொடக்கியுள்ளது. நிர்வாகத்தின் வழக்குரைஞர்கள் ஜனாதிபதி தேவையானால் அவர் கருத்தின்படி போர்க்கைதிகளை சித்ரவதை செய்யவும், கொல்லவும்கூட அதிகாரத்தை கொண்டுள்ளார் என்று வாதிடுகின்றனர்; இத்தகைய இழிவான கோரமான சட்ட கோட்பாடு அபுகிரைப் சிறைச்சாலையிலும் மற்ற அமெரிக்க காவல் மையங்களிலும் நடைமுறையில் உள்ளன.

பிரகடனம் பிரிட்டிஷ் அரசரை, "எங்களை பல வழங்குகளில் யூரிகளை (Jury) வைத்து விசாரணை செய்யும் நலனையும் கொடுக்க மறுத்தவர்" என்று கண்டனத்திற்கு உட்படுத்தியது. அமெரிக்க அரசியல் அமைப்பின் ஐந்தாம், ஆறாம் திருத்தங்கள் குற்றச்சாட்டுக்கள் கொண்டுவராமலோ, விசாரணை இல்லாமலோ சர்வாதிகார முறையில் மக்களை சிறையில் அடைக்கும் வழக்கத்தை சட்டவிரோதமாக்கியுள்ளன. உரிமைகள் சட்டத்தின் இப்பிரிவுகள், "எந்த மனிதனும் ஒரு குற்றத்திற்கு அது தக்கமுறையில் நீதிபதிகள் முன்னிலையில் குற்றச்சாட்டு வைக்கப்படவில்லை என்றால் விடையிறுக்கத் தேவையில்லை" என்றும் "குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவான, பொது விசாரணைக்கு, பாரபட்சமற்ற நீதிபதிகளால் கொள்ளப்படும் விசாரணைக்கு உரிமை பெற்றவர்கள்" என்றும் உறுதியளித்துள்ளது.

"பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற கூற்றில், புஷ் நிர்வாகம் பழைய ஜோர்ஜ் அரசர் கூட எடுத்துக்கொள்ள அச்சப்படும் அதிகாரங்களை எடுத்துக் கொண்டுள்ளார். ஒரு தனி நபரை, அமெரிக்க அல்லது சர்வதேச சட்ட நெறியில் இல்லாத, "போரிடும் விரோதி" என்று அறிவிப்பதின் மூலம், ஜனாதிபதியும் அவருடையை குற்றவியல் வழக்குரைஞர்களும் எந்த நபரையும் "காணமற் செய்துவிடும்" அதிகாரம் கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

குடிமக்களையும், வேறுநாட்டினரையும் எந்தக் குற்றச்சாட்டுக்களும் இல்லாமல், விசாரணையும் இல்லாமல் அவர்களுடைய குடும்பத்திற்கும் தெரிவிக்காமல் சிறையில் அடைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்று கூறுகின்றனர். இந்த காவலில் வைத்தலுக்கு அவர்கள் காலவரம்பையும் ஏற்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் நாட்டிற்கு விரோதி என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு சிறிதளவு சான்றுகூட இல்லாமல் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படலாம் என்ற கருத்து உள்ளது. ஜனாதிபதி அவ்வாறு கருத்துக் கொண்டுள்ளார் என்பதைத் தவிர வேறு சாட்சியம் தேவையில்லை என்று கூறுகின்றனர்.

இக்கொள்கையின் விளைவாக குவாண்டநாமோ வளைகுடா, கியூபா இன்னும் பிறிது இடங்களில் உள்ள காவல் முகாம்களில் ஏராளமானோர் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர்; இரண்டு அமெரிக்க குடிமக்கள் கடற்படைச் சிறையிலும் உள்ளனர். அமெரிக்காவில் குடியேறியுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் செப்டம்பர் 11 தாக்குதலை ஒட்டி, எக்குற்றச்சாட்டலுக்கும் உட்படாமல் சிறையில் உள்ளனர்.

பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிரான புரட்சியை நியாயப்படுத்திய பிரகடனத்தில் உள்ள குற்றச்சாட்டுக்கள், தங்கள் நாட்டில் அமெரிக்கர்கள் ஆக்கிரமித்துள்ளதற்கு ஆயுதம் ஏந்திய எதிர்ப்புக்களை நடத்தும் ஈராக்கியர்களும் தங்கள் ஆவணத்தில் எளிதில் சேர்த்துக் கொள்ளும்படித்தான் உள்ளன.

1776ம் ஆண்டு, அமெரிக்க காலனித்துவத்தில் இருந்த மக்கள் "ஏராளமான படைவீரர்களை எங்கள் மீது சுமத்தியிருக்கிறார்" என்று அரசர் மீது குற்றஞ்சாட்டினர். ஈராக்கில், கிட்டத்தட்ட 140,000 அமெரிக்க படையினரும் கடற்படையினரும் காலவரையற்று நிறுத்தப்பட்டுள்ளனர்; இவர்கள் கொல்வதும் கொல்லப்படுவதும் அன்றாட வாடிக்கையாக ஒரு காலனித்துவப் போராக மாறிவிட்டதோடு; இப்போர் ஈராக்கை அடக்கி அதன் எண்ணெய் வளத்தை அமெரிக்க ஆதிக்கத்திற்கு பயன்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது.

பிரிட்டிஷ் மன்னர் தன்னுடைய படைகளுக்கும், நிர்வாகிகளுக்கும் அமெரிக்காவில் இழைக்கும் குற்றங்களுக்காக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இருந்து பாதுகாப்பு கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டை பிரகடனம் முன்வைத்தது. "அவர்களைப் பாதுகாத்து, போலி விசாரணை நடத்தி இப்பகுதிகளில் நடத்தும் கொலைகளுக்காக கூட தண்டனை இல்லாமல் பார்த்துக் கொண்டார்." என்று பிரகடனம் அரசர் மீது குற்றம் சாட்டியது.

அமெரிக்க கைப்பாவைகளுக்கு, ஏளனத்திற்குரிய "இறைமையை ஒப்படைத்தல்" நடந்ததற்கு முன்பு, வாஷிங்டனின் அமெரிக்கப் படைகள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் மொத்தமாக ஈராக்கிய சட்டத்திலிருந்து இவர்கள் செய்யும் எந்தக் குற்றங்களுக்காகவும் விசாரணைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என்ற நிலையை ஏற்படுத்தியது. "போலி விசாரணைகளும்" இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன; சில சாதாரண நிலை இருப்பு அதிகாரிகள்மீது மட்டும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன; பெரிய அதிகாரிகள் இவர்கள் தண்டனை அனுபவிக்கலாம் என்று விட்டுவிட்ட, வெள்ளை மாளிகையில் முறையாக சித்திரவதை கொள்கைக்கு ஏற்பாடு செய்தவர்கள் எக்குற்றச்சாட்டையும் பெறவேண்டியதில்லை எனச் செய்து விட்டனர்.

பிரகடனம் மேலும் கூறியிருந்தது: "ஜோர்ஜ் மன்னர் இத்தருணத்தில் ஏராளமான வெளிநாட்டு கூலிப்படைகளை இறப்பு, தகர்ப்பு, கொடுங்கோல் இவற்றை முடிப்பதற்கு பயன்படுத்தியது" ஈராக்கிய ஆக்கிரமிப்பில் முன் கண்டிராத ஒரு கூறுபாடு மிகப் பெரிய அளவில் கூலிப்படைகளை பயன்படுத்தியது ஆகும்; கறைபடிந்த பல செயல்களைப் புரியும் இவர்கள் தந்திரமாக "சாதாரண ஒப்பந்தக்காரர்கள்" என்று அழைக்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட 20,000 பேர் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ள இப்படைகள் அமெரிக்கப் படைகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய இராணுவ சக்தியாக இருக்கின்றனர். அவர்களுள் நன்கு அறியப்பட்ட போர்க் குற்றவாளிகள், தென்னாபிரிக்காவின் இனவாத அரசாங்கத்தின் மரணப் படையில் இருந்த உறுப்பினர்கள், சிலியில் பினோசேயின் சர்வாதிகாரத்தில் இருந்த கூலிப்படையினர் ஆகியோர் உள்ளனர்.

இந்தப் படைகளைப் பயன்படுத்துதல் அரசியல் தொடர்புடைய இராணுவ ஒப்பந்தக்காரர்களில் வங்கிக் கணக்கை பெருக்க உதவுவதோடு மட்டும் இல்லாமல், எவருக்கும் விடையிறுக்க வேண்டிய கட்டாயம் இல்லாத பயிற்சி பெற்ற கொலைகாரர்கள், சித்ரவதை செய்பவர்கள் ஆகியோர் பாரியளவு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய இழிந்த அரசியல் உண்மைகளுக்கும் சுதந்திரப் பிரகடனத்தில் நிறைந்துள்ள உயர் சிந்தனைகளுக்கும் இடையே உள்ள அப்பட்டமான முரண்பாடுகளைக் காணும்போது, அந்த ஆவணம் ஒரு மடிந்துவிட்ட ஆவணம் என்ற எளிதில் முடிவுகட்ட தோன்றும். அரசியல் வழிவகைகளை முறையாக ஊழலுக்கு உட்படுத்திவிட்டதும், ஜனநாயக உரிமைகளைத் திறமையுடன் தகர்த்து விட்டதும் 1776 புரட்சி மரபுகளை முன்னரே அணைத்துவிட்டது போல் ஆகிவிட்டது. பூகோளம் முழுவதும் இருக்கும் வெகுஜனத்திற்கு ஜெபர்சன் புகழ்ந்திருந்த ஜனநாயகம், சமத்துவம் என்பவற்றிற்கு அடையாளமாக அமெரிக்க இருக்கவில்லை: மாறாக, புஷ்ஷின் ஆக்கிரமிப்பு செயல்கள், ஏராளமான மக்கள் படுகொலை செய்யப்பட்டது, சித்திரவதைக்குள்ளானது இவற்றின் அடையாளமாகத்தான் உள்ளது.

ஆயினும்கூட, இண்டு அமெரிக்காக்கள் இப்பொழுது இருக்கினறனர். ஒன்று புஷ்ஷின் அமெரிக்கா, செல்வம் நிறைந்த நிதியாதிக்க ஒரு சிலர் ஆட்சி, குற்றஞ்சார்ந்த முயற்சிகள் மூலம் நாட்டின் சமுதாயக் கட்டுமானத்தை அழித்தும், போரினாலும் தன்னைக் கொழுக்க வைத்துக் கொண்டுள்ள ஓர் அமெரிக்கா. இந்த மில்லியனர்கள், பில்லியனர்கள் சிறுகுழு அவர்களுடைய நலன்களை விசுவாசத்துடன் செயல்படுத்தும் ஜனநாயக, குடியரசுக் கட்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

மற்றொரு அமெரிக்கா, உழைக்கும் மக்கள் அதிகரித்தளவில் பூகோளத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் இங்கு வந்து நிறைந்துள்ள அமெரிக்கா ஆகும். மக்களின் பெரும்பான்மையினரான இந்த அமெரிக்கர்கள் ஒவ்வொரு மாத ஊதிய காசோலையைத்தான் எல்லாவற்றிற்கும் நம்பியுள்ள நிலையில் இருந்து, இருகட்சி முறையினால் அரசியல்ரீதியாக செல்வாக்கு இல்லாமல் உள்ளனர். அவர்களுடைய குழந்தைகள்தான் பொருளாதாரத் தேவையை ஒட்டி இராணுவத்தில் சேர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்; இவர்கள்தான் ஈராக்கில் கொல்லப்பட்ட 900 அமெரிக்கப் படைகளிலும், பல்லாயிரக்கணக்கான காயமுற்றவர்களிலும் பெரும்பங்கானவர் ஆவர்.

இந்த இரு அமெரிக்காக்களுக்கும் இடையே உள்ள முன்னொருபோதுமில்லாத இடைவெளி நாட்டின் நிறுவன ஆவணங்களில் பொறிக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கொள்கைகளை செயலற்றுச் செய்துவிட்டது. சமுதாயப் பிளவு எப்பொழுதுமே இந்த அளவு அதிகமாக இருந்தது இல்லை. கூட்டாட்சி இருப்பு வங்கியின் சமீபத்திய பகுப்பாய்வு ஒன்றின்படி, கடந்த இரு தசாப்தங்களில் சமுதாயத்தின் உயர்மட்ட 1 சதவிகிதம் தன்னுடைய செல்வத்தை இருமடங்காகப் பெருக்கிக் கொண்டுள்ள நிலையில், கடைசி 20 சதவிகிதத்தினர் தங்களுடைய செல்வம் 46 சதவிகிதம் குறைந்து விட்டதைத்தான் கண்டுள்ளனர்.

ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி இரண்டுமே கடைப்படித்த கொள்கைகளினால் வியத்தகு அளவில் வளர்ந்துள்ள பொருளாதாரச் சமத்துவமற்ற நிலை, நிதி செல்வந்த தட்டு மற்றும் வாழ்வதற்கு உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான அமெரிக்கர்கள் இரு பிரிவுகளின் நலன்களையும் ஒருங்கிணைக்கும் கொள்கையை எந்த அரசியல் பிரச்சினைக்கும் கொண்டுவரமுடியாதபடி செய்துவிட்டது. இத்தகைய முறை பெரிதும் மக்களை ஏமாற்றுவதிலும் அனைத்து உண்மையான அரசியல் விவாதத்தை அடக்குவதையும் இயல்பாகக் கொண்டுள்ளது. இறுதியில், அமெரிக்க விடுதலைப் போராட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஜனநாயக உரிமையின் எஞ்சிய கூறுபாட்டையும் அழிப்பதைத்தான் இந்நிலை வலியுறுத்தும்.

புஷ், மற்றும் அவருடன் ஒத்துழைக்கும் ஜனநாயகக் கட்சியினர் கூறும் "சுதந்திரம்", "ஜனநாயகம்" என்ற சொற்கள், அமெரிக்க பெரு நிறுவனத்தின் ஆதிக்கம் உள்நாட்டிலும், தடையற்ற சுரண்டல் மற்ற நாட்டிலும் என்பதின் உட்பொருளாக இருக்கும்போது, பெரும்பாலான அமெரிக்க உழைக்கும் மக்களுக்கு அவை வேறு பொருளைத் தருகின்றன. அரசாங்கம் வெளிப்படையாக பெருஞ் செல்வந்தர் நலன்களுக்காகவே ஆட்சி நடத்துவதையும், அதன் விளைவாக நாட்டை ஒரு குற்றஞ்சார்ந்த போரில் பொய்களின் அடிப்படையில் இழுத்துவிட்டதற்காகவும், அதையொட்டி மக்களுடைய ஜனநாயக உரிமைகள், வாழ்க்கைத் தரம் ஆகியவை தகர்வதையும் கண்டு மில்லியன் கணக்கான மக்கள் சீற்றத்தில் உள்ளனர்.

இப்பொழுதுள்ள அரசியல் அமைப்புமுறையில் இந்தச் சீற்றம் தக்க வெளிப்பாட்டை காண இயலாது. ஆளும் செல்வந்த தட்டுகளிடையே இப்பொழுது நடைபெற்று வரும் கடுமையான விவாதத்தின் அடிப்படை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு, உயர்மட்டத்தினரிடையே உள்ள பாரியளவு செல்வச் சேகரிப்பு, குடியுரிமைகள் தாக்கப்படுதல் ஆகியவை பற்றி அல்ல. மாறாக, எந்த வேட்பாளர் சிறந்த தலைமை நிர்வாகியாக இருந்து அமெரிக்கப் பெரு நிறுவன நலன்களைக் காப்பார் என்பது பற்றித்தான். வெள்ளை மாளிகைக்கு புஷ்ஷோ அல்லது கெர்ரியோ, 2005ல் எவர் வந்தாலும் இந்த அடிப்படை கொள்கைகள்தான் தொடரும்.

எனவேதான் சோசலிச சமத்துவ கட்சி (SEP) 2004 தேர்தல்களில் தலையிட்டுள்ளது. என்னுடைய பிரச்சாரத்தினதும், மற்றும் சோசலிச சமத்துவ கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர்களுடைய நோக்கம், தொழிலாள வர்க்கத்திற்கு சுயாதீனமான அரசியல் குரல் ஏற்படவேண்டும் என்பதும், போர், சமூகப் பிற்போக்குத்ன்மை, ஜனநாய உரிமைகள் மீதான தாக்குதல் இவற்றை எதிர்த்துப் போராட ஒரு முன்னோக்கும் வேலை திட்டமும் வழங்குவதற்காகத்தான். அமெரிக்கப் புரட்சியில் முன்னேற்றமான, மற்றும் ஜனநாயகமான கருத்துக்களின் எஞ்சியுள்ள அளிப்புக்களையாவது காக்கவேண்டும் என்ற உணர்வில்தான் நாங்கள் தொடங்கினோம்; இதை முன்னோக்கி எடுத்துச் செல்ல சோசலிசத்திற்கான போராட்டத்தில் அமெரிக்க உழைக்கும் மக்கள் சுயாதீனமாக அணிதிரட்டப்படவேண்டும்.

இந்த ஜூலை 4ம் நாள், சுதந்திரப் பிரகடனத்தில் பொறிக்கப்பட்டுள்ள மக்கள் கொண்டுள்ள, தங்களுடைய "மாற்ற இயலாத உரிமைகளுக்குக்" குறுக்கே நிற்கும் எந்த வடிவான அரசாங்கத்தையும் "மாற்றவோ அல்லது அகற்றவோ" உரிமை உண்டு என்பதும் அந்த முறையை வேறு ஒரு முறையைக் கொண்டு "தங்களடைய பாதுகாப்பு, மகிழ்ச்சி இவற்றை கொண்டுவரக்கூடியதைச் செயல்படுத்தும்" உரிமையை நினைவு கூர்தல் மிக முக்கியமானது ஆகும். சோசலிச சமத்துவ கட்சியில் இருக்கும் நாங்கள் அமெரிக்க உழைக்கும் மக்கள் இந்த உரிமையை பயன்படுத்துவார்கள் என்றும், உலகெங்கிலும் இருக்கும் உழைக்கும் மக்களுடன் இணைந்து வரவிருக்கும் மற்றோர் புரட்சியில், முதலாளித்துவத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கவும், ஒரு புதிய சமுதாயத்தை சமத்துவம், மனித ஒற்றுமை, ஒருங்கிணைந்த போராட்டம் நடத்தி மனிதகுலத்தை வறுமையிலிருந்தும் அடக்கு முறையிலிருந்தும் விடுவிக்கவும் முன்வருவர் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளோம்.

Top of page