:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Washington Post publishes memo implicating
White House in torture of prisoners
கைதிகள் சித்திரவதையில் வெள்ளை மாளிகையின் உடந்தையை சுட்டிக்காட்டும் குறிப்பை
வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது
By Joseph Kay
17 June 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
நீதித்துறை குறிப்பு ஒன்று 2002 ஆகஸ்டில் இரகசியமாக வாஷிங்டன் போஸ்டிற்கு
கசிந்திருக்கிறது, அது ஜூன் 13ல் வெளியிட்ட அமெரிக்க அரசாங்கம் ''பயங்கரவாதத்திற்கு எதிரான
போர்'' என்று அழைக்கப்படுவதில் சித்திரவதை கொள்கையை கடைபிடித்ததில் சட்டபூர்வமான முதன்மையான ஆதாரங்கள்
இருந்தது என்றும் அந்த நடவடிக்கை ஆப்கனிஸ்தானிலும், ஈராக்கிலும் நடைபெற்றது என்றும் குறிப்பிட்டிருந்தது.
அபு கிரைப் சிறைச்சாலையில் ஈராக் கைதிகள் மீது நடத்தப்பட்ட சித்திரவதைக்கு
காரணம் இராணுவ காவலர்களில் ''சில கெட்டவர்கள் செயல்'' என்று அதிகாரபூர்வமாக கூறப்பட்டுவருவதை
பொய்யாக்குகின்ற வகையில் இந்த குறிப்பு அமைந்திருக்கிறது. புஷ் நிர்வாகத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் அதிகாரிகளின்
ஒப்புதலோடும் அவர்ளுக்கு தெரிந்தும் தான் கைதிகள் மீது சித்திரவதை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.
சர்வதேச மற்றும் அமெரிக்க சட்டங்களில் சித்திரவதையை பயன்படுத்துவதற்கு எதிராக
உள்ள நீண்டகாலமானதும் குறிப்பிட்ட தடைகளுக்கு எதிராக சித்திரவதையை பயன்படுத்த வெள்ளை மாளிகை அதிகாரிகள்
முழுமையாக தெரிந்தே முடிவு செய்திருக்கிறார்கள்.
ஜனாதிபதியின் வழக்கறிஞர்
Alberto Gonzales இற்காக நீதித்துறை அதிகாரிகள்
அந்தக்குறிப்பை எழுதியிருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை இரவு வாஷிங்டன் போஸ்ட் அதன் வலைத்தளத்தில்
2002 ஆகஸ்ட் 1 தேதியிட்ட கட்டுரையில் இந்தக்குறிப்பு நகலை வெளியிட்ட தலைப்பு: ''குறிப்பு: அமெரிக்க
கிரிமினல் சட்ட 18வது பிரிவுகள் 2340-2340A
பிரிவுகள் படி புலன்விசாரணை நடத்துவதற்கான தரநிர்ணய முறைகள்'' இந்த நகலில் துணை சட்டமா அதிபர்
Jay Bybee
கையெழுத்திட்டிருக்கிறார். போஸ்ட் தந்துள்ள தகவலின்படி,
CIA அதற்கு ஏற்பாடு
செய்திருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் அது
Gonzales க்கு அனுப்பப்பட்டிருக்கிறது, எனவே நேரடியாக
ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷோடு தொடர்புபடுத்தபடுகிறது.
அமெரிக்க குற்றவியல் நடைமுறைச்சட்ட (தலைப்பு 18 அமெரிக்க கோட்களின் பிரிவுகளான
2340 மற்றும் 2340A)
பிரிவுகளுக்கு சட்டவடிவம் தருவதாக அந்தக்குறிப்பு அமைந்திருக்கிறது. அமெரிக்க அரசாங்கம் 1994ல் சித்திரவதை
இதர கொடுமைகள் மனிதநேயமற்ற மற்றும் இழிவுபடுத்தும் நடவடிக்கைகள் அல்லது தண்டனைகளுக்கு (CAT)
எதிராக உருவாக்கப்பட்ட உடன்படிக்கை அடிப்படையில் இந்தச்சட்டம் இயற்றப்பட்டது. இந்த
CAT ஒரு சர்வதேச
ஒப்பந்தம் மட்டுமல்லாது றீகன் நிர்வாகத்தின் கீழ் உடன்பாடு காணப்பட்டு, இதில் கையெழுத்திடும் எல்லா
நாடுகளும் சித்திரவதைகளை தடைசெய்யும் சட்டங்களை செயல்படுத்தவேண்டும் என குறிப்பிடுகின்றது.
சர்வதேச சட்டத்தில் போர்குற்றங்களென்று வர்ணிக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு
ஓரளவிற்கு சட்டபூர்வமான முகமூடியை வழங்குவதற்கும், சித்திரவதைக்கு எதிரான சட்டங்களை மீறி நடப்பதற்கும்
ஒரு சட்டபூர்வ சாக்குப்போக்கை, கற்பனையாக உருவாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டுதான் இந்தக்குறிப்பு
தயாரிக்கப்பட்டிருக்கிறது. 2002 ஆகஸ்ட் 1-ந் தேதி குறிப்பை தொடர்ந்து மற்றொரு நீதித்துறை குறிப்பு வந்தது
அது நுட்பமான உண்மைக்கு புறம்பான வாதத்தை அடிப்படையாகக் கொண்ட அல்கொய்தா அல்லது இதர
பயங்கரவாத குழுக்கள் என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகின்ற நபர்களுக்கு ஜெனீவா ஒப்பந்தங்கள் பொருந்தாது
என்பதாகும்.
2002 ஆகஸ்ட் குறிப்பு பற்றிய செய்தி முதலில் சென்றவாரம் பிரசுரிக்கப்பட்டதும்,
அட்டர்னி ஜெனரல் ஜோன் ஆஷ்கிராப்ட் செனட் நீதி விசாரணைக்குழுவில் சாட்சியமளிக்கும்போது குழு
உறுப்பினர்களுக்கு அந்தக் குறிப்புப் பிரதிகளை தருவதற்கு மறுத்துவிட்டார். அந்தக்குறிப்பு வாஷிங்டன்
போஸ்டிற்கு இரகசியமாகத் கசிந்துள்ளது, அதை அந்தப் பத்திரிகை வெளியிட முடிவு செய்தது. இது அரசு
சாதனங்களுக்குள்ளேயும், புஷ் நிர்வாகத்திலும் பொதுவாக அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாகவும்
குறிப்பாக ஈராக் ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் நிலவுகின்ற பாரிய பிளவுகளை சுட்டிக்காட்டுவதாக
அமைந்திருக்கிறது.
ஜனாதிபதியின் சர்வாதிகாரத்திற்கான ஒரு வலியுறுத்தல்
இந்த குறிப்பை உருவாக்கியவர்கள் இரண்டு குறிக்கோள்களை அடைவதை
நோக்கமாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார்கள். முதலாவதாக சித்தரவதைக்கு எதிராக வகைசெய்துள்ள
சர்வதேச சட்டங்களை மீறி பாரம்பரியமாக நடைபெற்றுவரும் பலவிதமான நடவடிக்கைகளை அனுமதிப்பதன் மூலம்,
சித்திரவதையை எவ்வளவு குறுகலான வட்டத்திற்குள் கொண்டுவந்து விளக்கம் தரமுடியுமோ அந்த அளவிற்கு குறுகிய
எல்லைக்குள் கொண்டுவந்து விட்டார்கள். இரண்டாவதாக பயங்கரவாதிகளென்று குற்றம் சாட்டப்படுபவர்களிடமிருந்து
தகவல்களை பெறுவதற்கு புலன்விசாரணையில் பயன்படுத்தப்படும் எல்லா முறைகளையும் நியாயப்படுத்துவது அவர்களது
நோக்கமாகும். இந்த வகையில் சித்திரவதையை தடைசெய்யும், அமெரிக்கச் சட்டங்கள் அமெரிக்க அரசியல்
சட்டப்படி செல்லுபடியாகதவை என்று நீதித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். போர்க்காலத்தில் அமெரிக்க
ஜனாதிபதி தலைமை தளபதி என்ற முறையில் கட்டுத்திட்டமில்லாத அதிகாரங்களை படைத்தவர், என்பது அவர்களது
வாதமாகும்.
இந்தப் போலியான-சட்ட மற்றும் போலியான-அரசியல் நிர்ணய சட்ட கூற்றுக்களின்
விளைவுகளை நாம் அதிகமாக விளக்கத்தேவையில்லை. இதனுடைய பொருள் என்னவென்றால் வெளிநாடுகளில் போர்
ஆரம்பிப்பதற்கு நிர்வாகத்திற்கு எல்லையற்ற அதிகாரங்கள் உள்ளன என்பது மட்டுமல்ல,
உள்நாட்டிலும் ஜனாதிபதி சர்வாதிகார அடிப்படையில்
அதிகாரங்களை பெறமுடியும்---- இந்த அதிகாரங்கள் அரசியல் சட்டம் உறுதிசெய்து தந்துள்ள சிவில் உரிமைகள்
பாதுகாப்பை அப்பட்டமாக மீறுவதாகும். மேலும் நாடாளுமன்றமும், நீதிமன்றமும் நிர்வாகத்தின் செயல்பாடுகளை
கண்காணிக்கும், அரசியல் சட்டவிதிமுறைகளையும் அப்பட்டமாக மீறுவதாகும்.
இந்த அரசாங்கம் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் ஆகிய இரண்டுடைய
ஆதரவோடு சேர்ந்து காலவரையற்ற பூகோள அளவிலான ''பயங்கரவாதத்திற்கெதிரான போரில்''
ஈடுபட்டிருக்கிறது, எனவே போர்காலத்தில் ஜனாதிபதிக்கு எல்லையற்ற கட்டுத்திட்டமில்லாத அதிகாரங்கள் உள்ளன
என்று வலியுறுத்துவது ஜனாதிபதியின் சர்வாதிகாரத்திற்கே வழிசெய்யும்.
சித்திரவதையை நியாயப்படுத்த ஒரு சித்திரவதை
இந்தக் குறிப்பின்படி, மிக மோசமான மனிதநேயமற்ற உடல் மற்றும் உள்ளத்தளவில்
நடத்தப்படுகின்ற முறைகேடுகள், ''சித்திரவதை'' அளவிற்கு உயராது.'' இந்தக் குறிப்பை தயாரித்தவர்களே
இப்படிப்பட்ட அற்புத்தனமான நுட்ப சட்ட விவாதங்களில் ஈடுபட்டு சித்திரவதையை மூடிமறைக்க முயலுவதை
பார்க்கும்போது இதை எழுதியவர்களே இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளானால் என்ன ஆவார்கள் என்று
ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.
அவர்கள் எழுதுகிறார்கள்: ''சித்திரவதையென்று சொல்வதற்கு ஏற்ற உடல்
வருத்தம், துன்பம், என்பது அந்தத் துன்பத்திற்கு கடுமையான உடல்காயமும் சேர்ந்துவர வேண்டும். சில
உறுப்புக்கள் செயல்பட மறுப்பது, உடல் இயங்க மறுப்பது அல்லது மரணம் சம்பவிப்பது போன்ற கடுமையான
காயமாக இருக்க வேண்டும். 2340-வது பிரிவுப்படி சித்திரவதை என்பதற்கு உள்ளத்தளவில் துன்பம் என்பது
மனோதத்துவ அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எடுத்துக்காட்டாக மாதக்கணக்கில் அல்லது ஆண்டுக்கணக்கில்
கூட நீடிப்பதாக இருக்க வேண்டும்''
இந்த குறிப்பின்படி, இந்த முடிவிற்கு வருவது ''கடுமையான'' என்ற பதத்தை
2340A-
பிரிவுபடி ஆய்வு செய்ததிலிருந்து வருகிறது, அதற்கு சித்திரவதை என்பதற்கு தரப்பட்டுள்ள விளக்கம் ''சட்டத்தின்
சாயலை திட்டவட்டமாக எடுத்துக்கொண்டு அதன்படி செயல்படுகின்ற ஒரு நபர் புரிகின்ற செயலால் வருகின்ற
கடுமையான உடல் அல்லது உள்ளப்பூர்வ துன்பம் அல்லது துயரத்தை குறிக்கும்.
சட்டத்தில் கடுமையான என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்படாததால் இந்தக்
குறிப்பை எழுதியவர்கள் இதர சட்டங்களில் அந்தச் சொல்லுக்கு தரப்பட்டுள்ள சட்ட விளக்கங்களை
தேடிச்சென்றிருக்கின்றனர். அவர்கள் பொது சுகாதார நலன்கள் பற்றிய சட்டத்தில் அந்த விளக்கத்தை
கண்டுபிடித்திருக்கின்றனர். இங்கே கடுமையான என்பது'' (1) கடுமையான ஆபத்து (2) உடல் செயல் பாடுகளில்
கடுமையான தடை அல்லது(3) ஏதாவது ஒரு உடல் உறுப்பு அல்லது பகுதி செயல்பாட்டை இழப்பது.
''இந்த சட்டங்கள் 2340- வது பிரிவில் கண்டுள்ள பொருளுக்கு கணிசமான அளவிற்கு
மாற்றாக உள்ள பொருளை பற்றி விளக்கினாலும், கடுமையான உடல் துன்பம் என்றால் என்ன என்பதை புரிந்து
கொள்வதற்கும் அவை உதவுகின்றன.... அத்தகைய சேதம் மரணம் அளவிற்கு உறுப்புசெயல்பாடு இழப்பு அளவிற்கு
அல்லது ஒரு முக்கிய உடல் செயற்பாடு நிரந்தரமாக சேதமடைதல் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கவேண்டும்'' என்று
அந்தக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்தக் குறிப்பின்படி, கடுமையான உடல் துன்பம் கூட சட்டத்தை மீறுவதாக ஆகாது.
ஏனென்றால் அந்தச்செயலைப் புரிபவரது, திட்டவட்டமான நோக்கம் அதில் இடம்பெற்றிருக்க வேண்டும். ''எதிர்
மனுதாரர் கடுமையான துன்பம் வரும் அல்லது தனது நடவடிக்கையால் துயரம் ஏற்படும் என்று தெரிந்து செய்வதால்
பொதுவான நோக்கத்தோடு அவர் செயல்பட்டார் என்று ஆகும்... தத்துவார்த்த அடிப்படையில் பார்த்தால் ஒரு
குறிப்பிட்ட முடிவு வருவது நிச்சயம் என்பதால் மட்டும் அது திட்டவட்டமான நோக்கமாகாது.''
''உள்ளத்தளவில் நடத்தப்படுகின்ற சித்திரவதைகள்'' பற்றி அந்தக்குறிப்பு விளக்குவது
என்னவென்றால் சட்டப்படி நீண்டகால அடிப்படையில் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள நான்கு திட்டவட்டமான
நடவடிக்கைகளில் ஒன்றினால் அந்தத்தீங்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.
இந்தக் குறிப்பின் ஒட்டுமொத்த தொனியையும், தெளிவுபடுத்துகிற வகையில்
அசாதாரணமான சொற்களை கையாண்டிருக்கிறார்கள்: ''எதிர் மனுதாரர், மனுதாரருக்கு நீண்டகால
அடிப்படையில் உள்ளத்தளவில் தீங்கு செய்வதற்கு திட்டவட்டமாக உத்தேசித்து நடவடிக்கை எடுத்தால்தான்
எதிர்மனிதர், சித்திரவதை செய்தார் என்று ஆகும். எதிர் மனுதாரர் திட்டவட்டமான நோக்கத்தோடு மட்டுமே
முடிவுகளை அனுமானிக்கக்கூடிய அந்தச்செயல்களை பாதிப்பு ஏற்பட்டிருக்கவேண்டும்.... இந்த அணுகுமுறை சட்டத்தின்
வாசகர்களுக்கு முரணானது என்று நாங்கள் நம்புகிறோம். எதிர்மனுதாரர் திட்டவட்டமாக கடுமையான உள்ளத்தளவு
துன்பம் ஏற்படவேண்டும், என்று கருதி செயல்பட்டிருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. எனவே நீண்டகால
அடிப்படையில் உள்ளத்தளவு பாதிப்பு ஏற்பட வேண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டும்.''
இதை வேறுவகையில், விளக்கம் தருவதென்றால் எடுத்துக்காட்டாக ஒரு தனிமனிதனின்
தனித்தன்மையையே அழித்துவிடுகிற அளவிற்கு அவனது உள்ளத்தை பாதிக்கின்ற எந்த பொருளை பயன்படுத்தினாலும்,
அது சித்திரவதை அல்ல, நீண்டகால உள்ளத்தளவு பாதிப்பை எற்படுத்தும், திட்டவட்டமான நோக்கத்தோடு
நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் அது சித்திரவதையாக ஆகும். இந்த நடவடிக்கையை எடுப்பவர் தனது
நடவடிக்கையால் அத்தகைய தீங்கு வராது என்று நன்னம்பிக்கை கொண்டிருப்பாரானால் அவரது செயல்கள்
சித்திரவதை ஆகாது.
இவை, மற்றும் இதுபோன்ற இதர நுட்ப சொல் அலங்காரங்களின், நோக்கம்
அவர்கள் ''இதர'' ''சீர்குலைவு'' ''மிக ஆழ்ந்த'' ''உடனடி'' என்பதற்கு தந்திருக்கின்ற
விளக்கங்களிலிருந்து தெளிவாகிறது. சித்திரவதை பற்றிய குற்றச்சாட்டுக்கள் வரும்போது அவற்றிற்கெதிராக
சட்டபூர்வமான பாதுகாப்பிற்கு உறுதி செய்து தரவும், இதுபோன்ற குற்றங்களை செய்தவர்கள் மீது வழக்குத்
தொடர்வதை சிக்கலாக்குவதும்தான் இவர்களது நோக்கம்.
CAT - சித்திரவதைக்கு
தடைவிதிக்கும் சட்டத்தை செயல்படுத்த கையெழுத்திட்ட நாடுகளை கேட்டுக்கொள்கிறது. ''இதர கொடூரமான
மனிதநேயமற்ற இழவுபடுத்தும் நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடுகளை வலியுறுத்திக்
கேட்டுக்கொள்கிறதே, தவிர இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரவில்லை, என்பதை
இந்தக் குறிப்பு எழுதியவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். சித்திரவதை என்பது அத்தகைய நடவடிக்கைகளில்
மிகக்கடுமையானது இந்த ஒப்பந்தமோ அல்லது சட்டமோ பல்வேறுவகையான, விரிவான நடவடிக்கைகளை
கட்டுப்படுத்தவில்லை. அபுகிரைப் சிறைச்சாலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள
மிகப்பெரும்பாலான, நடவடிக்கைகள் இந்தக் குறிப்பில் கண்டுள்ள விளக்கத்தின்படி சித்திரவதையாக
எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
அந்தக் குறிப்பு பின்னர் ஒரு வாதத்திற்குள் நுழைகிறது. ''சித்திரவதை'' என்ற
தகுதிக்குரிய, கடுமையான குற்றத்தை புரிகின்ற ஒருவர் அவருக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு பல
சட்ட வாதங்களுக்கு வழி செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சனைகளில் அந்தக் குறிப்பு தனக்குத்தானே விளக்கம்
கூறிக்கொள்வதைப் பாருங்கள்:
''ஒரு புலன்விசாரணை நடைமுறை 2340A-
பிரிவை மீறுவதாக இருந்தால் கூட அந்தப்பிரிவு அரசியல் சட்டப்படி செல்லுபடியாகாது, ஏனெனில் ஒரு இராணுவ
நடவடிக்கையை எடுக்கின்ற ஜனாதிபதியின் அரசியல் சட்டப்படியான அதிகாரத்தில் அந்தப்பிரிவு குறுக்கிடுவதாக
ஆகும். இதுபோன்ற உயிர்நாடியான போர் விவகாரங்களில் எதிரிப்போராளிகளை கைது செய்து புலன்விசாரணை
செய்வதில் ஜனாதிபதியின் கட்டளைகளுக்கு எந்த வகையிலும், இடையூறு செய்கின்ற முறையில்
2340A- பிரிவை
செயற்படுத்த எந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அது அரசியல் சட்டப்படி செல்லுபடியாகாது. நாடாளுமன்றம்
ஜனாதிபதி போர்களத்தில், துருப்புக்களுக்கு கட்டளையிடுவதை எப்படி நெறிமுறைபடுத்த முடியாதோ, அதேபோன்று
எதிரிப்போராளிகளை கைதுசெய்து, புலன்விசாரணை செய்கின்ற அவரது ஆற்றலையும்,
நெறிமுறைப்படுத்தவியலாது''.
அந்தக்குறிப்பு மேலும் விவாதித்திருப்பது என்னவென்றால், ''அரசியல் சட்டம்
நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்து தருகின்ற நம்பிக்கையான கடமையில் தலைசிறந்ததாக குறிப்பிட்டிருகிறது. இந்த
அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று விளக்கம் தந்த
Hamilton பொதுமக்களது பாதுகாப்பை பாதிக்கிற
சூழ்நிலைகளில் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதை எந்தவகையிலும் கட்டுப்படுத்த இயலாது. அதை எந்த வகையிலும்
கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது. ஒட்டுமொத்த சமுதாயத்தை காப்பாற்றுவதற்கு தற்காப்பிற்காக
எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளின் எல்லைக்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது''
''அல்கொய்தாவிற்கு எதிரான போர் சம்மந்தப்பட்ட இதர கருத்துரைகளில்
நாங்கள் தெளிவுபடுத்தியிருப்தைப்போல் செப்படம்பர் 11 நிகழ்ச்சிகளால் நாட்டின் தற்காப்பு உரிமையை
நிலைநாட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. எதிரி போராளியை புலன்விசாரணை செய்யும் போது
அரசுத்தரப்பு எதிர்மனுதாரர் அவருக்கு தீங்கு செய்கிற வகையில் செயல்பட்டுவிட்டார். அது 2340A
பிரிவை மீறுவதாக அமைந்துவிட்டது என்று கூறப்படுமானால் அந்த அதிகாரி அவ்வாறு செயல்பட்டது அல்கொய்தா
வலைபின்னல் அமைப்பு அமெரிக்கா மீது மேலும் தாக்குதல்களை நடத்துவதை தடுப்பதற்குத்தான். அந்த வழக்கில்
அவரது நடவடிக்கைகள் நாட்டை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் அரசியல் சட்ட நிர்வாகப் பிரிவின்
நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதாகவே ஆகுமென்று நாங்கள் நம்புகிறோம்'' என்று மேலும் அந்த குறிப்பு
தெரிவிக்கிறது.
இவை அசாதாரணமான வாதங்கள். ஜனாதிபதி போரை நடத்துவதற்கான உசித
அதிகாரத்தை கட்டுப்படுத்துவதற்கு காங்கிரஸ் சட்டம் இயற்ற முடியாது, என்று நீதித்துறை வாதிடுகிறது.
செப்டம்பர் 11- தாக்குதலின் விளைவாக நாடு போரில் ஈடுபட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. போர் பிரகடனம்
எதுவும் இயற்றப்படவில்லை. யார் எதிரி என்று தெளிவாகக் கோடிட்டுக்காட்டப்பட வில்லை. இந்தப் போரின்
போது கைதுசெய்யப்படுகிற நபர்களை எப்படி, நடத்துவது என்று ஜனாதிபதி விரும்புகிறாரோ, அந்த
நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான அனுமதியும் இல்லை. சித்திரவதை அல்லது கொலை
தேவையென்று ஜனாதிபதி கருதுவாரானால், அதுதான் போர் முயற்சியை முன்னெடுத்து செல்வது என்று
நினைப்பாரானால் நாடாளுமன்றம் அல்லது மக்கள் அவரை எதிர்ப்பதற்கு எந்தவிதமான உரிமையுமில்லை.
உண்மையிலேயே நாடு போரில் ஈடுபட்டிருக்கிறது, கைதிகள் எதிரிப் போராளிகள்
என்ற நிபந்தனைகள் முற்றிலும் பொருளற்றவை ஏனென்றால் எப்போது நாடு போரில் ஈடுபடுவது, யார் எதிரி
என்று முடிவு செய்கிற உரிமையை நிர்வாகமே எடுத்துக்கொண்டிருக்கிறது. கொள்கை அடிப்படையில் பார்த்தால் அவர்கள்
எதிரிப்போராளிகள் என்ற அடிப்படையில் அமெரிக்க குடிமக்களையே கைதுசெய்ய சித்திரவதை செய்ய, அல்லது
கொலைசெய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. உண்மையிலேயே ஏற்கனவே அரசாங்கம் இந்த உரிமையை நிலைநாட்டியுள்ளது.
அமெரிக்க குடிமக்களான Jose Padilla-வையும்,
Yasser Hamdi-யையும்
கைதுசெய்து வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்துவிட்டது. அவர்கள்மீது குற்றச்சாட்டுக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
வழக்கறிஞர்களையோ, அல்லது நீதிமன்றங்களையோ, அவர்கள் அனுக முடியவில்லை.
இந்த குறிப்பு பிரசுரிக்கப்பட்டிருப்பது ஈராக்கியப்போர், ஈராக் மக்களை ''விடுவிப்பதற்கான''
போராட்டம் என்றும், மத்திய கிழக்கை ''ஜனநாயக மயமாக்கும்'' முயற்சி என்றும் சித்தரிக்க அரசியல் மற்றும்
ஊடக நிர்வாகங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளை மேலும் சிதைத்து, சின்னாப்பின்னப்படுத்தி அம்பலப்படுத்துவதாக
அமைந்துள்ளது. அமெரிக்க வெளியுறவு கொள்கையின் உண்மையான தன்மையை மிகச்சுருக்கமாக வெளிப்படுத்துகின்ற
இரண்டு நோக்கங்கள் சித்திரவதை மற்றும் கிரிமினல் குற்றம்.
இந்த நடவடிக்கைகளை திட்டமிட்டவர்கள் தங்களது நடவடிக்கைகளின் சட்டவிரோதத்தன்மை
குறித்து முழுமையாக அறிந்திருக்கிறார்கள். எனவேதான் இதுபோன்ற போலி சட்டக்குறிப்புக்கள் தேவைப்படுகின்றன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேச நீதி நிர்வாக, அமைப்புகளில் அமெரிக்க அரசாங்கம் இணைவதற்கு
மறுப்பது ஏன் என்பதையும் இது போன்ற குறிப்புக்கள் தெளிவுபடுத்துகின்றன. அதிகாரத்தை செலுத்துபவர்களுக்கு
தங்களது செயல்கள் போர் குற்றங்கள்தான், எனவே அந்த வகையில் வழக்குதொடர முடியும், என்பதை தெரிந்தே
செய்கிறார்கள்.
இந்தக் கொள்கைகளை செயல்படுத்திக் கொண்டிருப்பவர்கள் போர் குற்றவாளிகள்
அவர்கள் மீது அந்த விசாரணை நடத்தப்பட வேண்டும்.
Top of page |