:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Election Alternative meets in Berlin
Another safety valve for German social democracy
பேர்லினில் தேர்தல் மாற்று கூட்டம்
ஜேர்மன் சமூக ஜனநாயகத்திற்கு மற்றுமொரு பாதுகாப்பு கதவு
By our correspondent
28 June 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
ஜூன் 20 இல் பேர்லினில் ''தேர்தல் மாற்றீடு:
''வேலைவாய்ப்பு மற்றும் சமூக நீதி'' அமைப்பின் முதலாவது தேசிய மாநாடு நடைபெற்றதில் இந்தக் குழுவின்
நோக்கத்தையும், அரசியல் தன்மையையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஜேர்மன் அதிபர் ஷ்ரோடரின் அரசாங்கத்திற்கு
வளர்ந்துவரும் சமூக எதிர்ப்பை எடுத்துக்காட்டுகின்ற ஒரு வாகனமாக உருவாவதற்கு பதிலாக இது இந்த எதிர்ப்பை
திசை திருப்புகிற அதிகாரத்துவ இயந்திர அமைப்பாகவும், ஆளும் சமூக ஜனநாயக கட்சியை
(SPD) பாதுகாப்பதாகவும்
உருவாகியுள்ளது.
மாநாடு உலக சோசலிச வலைத் தளத்தின் முன்கணிப்பை நிலைநாட்டுகின்ற
வகையில் நடவடிக்கை அமைந்துள்ளது, அவை வழங்கிய சீர்திருத்த வேலைதிட்டத்தை பார்க்கும்போது ஆரம்பத்தில்
பிரகடனப்படுத்திய குறைந்தபட்ச நோக்கங்களைக் கூட விரைவில் கைவிட்டுவிடும்போல் தெரிகின்றது.
இந்த மாநாடு, தேர்தல் மாற்றீடால் வலியுறுத்தப்பட்ட அடிப்படையை மறுக்கின்ற
வகையில் இந்த ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற முதலாவது பகிரங்க அறிக்கையின் வெளியீடு அமைந்துள்ளது. ''ஏதாவதொரு
வகையில் அரசியல் முன்னேற்றம் காண்பதற்காக,'' அவர்கள் ''நாடாளுமன்றத்திற்கு வெளியில் நிலவும் சமூக அழுத்தங்களை
ஓர் அரசியல் அமைப்பாக மாற்றும் முக்கியமான ஒரு தேர்தல் மாற்றீடு தேவை'' என்று எழுதியிருந்தனர்.
அவர்களது இந்த திட்டம் அக்கறையுடையதாகவும், வெற்றிகரமானதாக
செயற்படக்கூடியதாகவும், இருந்திருக்குமானால், தேர்தல் மாற்றீட்டின் முதலாவது மாநாடாட்டிலேயே அதற்கான
செயல் வடிவத்தை உருவாக்கி இருக்க முடியும். இதைவிடச்சாதகமான அரசியல் நிலைமை அதற்கு அமைய முடியாது.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் படுதோல்வி கண்டு, சமூக ஜனநாயகக் கட்சி பலவீனப்பட்டு நிற்கையில்
வெளிப்படையாக அவற்றை தாக்குதல் தொடுக்கலாம். ஷ்ரோடர் அரசாங்கத்தின் சமூக தாக்குதல்களை எதிர்த்து
நிற்கவேண்டிய தீர்க்கமான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் கட்டாயமாக அதற்கு உழைக்கும் மக்களிடையே ஆதரவு
பெருகி இருக்கக்கூடும்.
ஆனால் தேர்தல் மாற்றீடு,
அத்தகைய வெளிவரும் வழிகளை தடுத்து அணிதிரட்டலையும் தடுத்து
நிறுத்தியது. மூர்க்கமான மெத்தனப்போக்கின் தன்மையால் இந்த மாநாடு அமைந்துள்ளது. இந்த அரங்கின் முன்னணிப்
பேச்சாளர் அல்லாத, தேர்தல் மாற்றீட்டின் உறுப்பினர்கள் கூட ஒரு கட்சியை உருவாக்குவதில் உள்ள ஆபத்துக்கள்
குறித்து எச்சரித்தனர். துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கூறிய இரண்டு பேச்சாளர்கள் விரைவில்
புறக்கணிக்கப்பட்டனர்.
பிரேமன் நகர பொருளாதார நிபுணர் அக்ஸல் ட்ரூஸ்ட் (Axel
Troost) மாநாட்டின் வேலை திட்ட கலைந்துரையாடல் அறிக்கையை
தயாரித்திருந்தார், அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது அடுத்த ஆண்டு நடக்கும்
North Rhine Westphalia
மாநிலத் தேர்தலில் இந்தக்குழு போட்டியிடாது என அறிவித்தார். (North
Rhine Westphalia ஜேர்மனியிலேயே
[மேற்கு]
அதிக மக்கள் தொகையுள்ள மற்றும் தொழிற்துறை அதிகமாக அமைந்துள்ள மாநிலமும் இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர்
சமூக ஜனநாயகத்தின் உயிர்நாடி பகுதியுமாகும்.)
ஜூன் 3ல் முதலாவதாக ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஆரம்பிக்கப்படுமென
Troost
அறிவித்தார். 2004 அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தக் குழுவின் உறுப்பினர்கள் ஒரு அரசியல் கட்சியை
உருவாக்குவதா இல்லையா என்பதை முடிவு செய்வார்கள். கட்சி உருவாக்கப்படுமானால், 2006 தேசிய
தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்துவதா என்பது குறித்து மற்றொரு முடிவு எடுக்கப்படும்.
இந்த முயற்சிகளோடு சேர்ந்து, தேர்தல் மாற்றீடும்,
சமூக ஜனநாயக கட்சியின் மரணப்படுக்கையை சுற்றி நின்று
கொண்டு அக்கட்சிக்கு புத்துயிர்ப்பை உருவாக்க முடியுமா என்று ஆலோசித்துக்கொண்டுள்ள ஏராளமான டாக்டர்கள்
வரிசையில் சேர்ந்து கொள்கிறது. எடுத்துக்காட்டாக ஜேர்மனியில் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர்
Michael Sommer
ஜூன் 18ல் அதிபர் ஷ்ரோடருக்கு ஒரு கடிதம் எழுதியதில், அவரது இழிவுபெற்ற ''2010 செயற்திட்ட''
வெட்டுகளின் வேலைதிட்டத்தில் மேலெழுந்தவாரியாக சில மாற்றங்களைச் செய்ய முன்வந்தால் அரசாங்கம் சமூக
நலத் திட்டங்களை வெட்டியதை விமர்சிக்கப்போவதில்லை என்று கூறி இருந்தார். இதற்கிடையில் இடதுசாரி பிரமுகர்
என்று கருதப்பட்டவரும் 1999ல் ஷ்ரோடரின் நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விலகியவருமான
Oskar Lafontaine, Saarland
மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சமூக ஜனநாயக கட்சி மாநாட்டில், வலதுசாரி
சமூக ஜனநாயக கட்சி தலைவர்
Franz Müntefering உடன் வெளிப்படையாக
கைகுலுக்கினார்---இப்படம் ஜேர்மன் ஊடகங்களில் விரிவாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. சமூக ஜனநாயக கட்சியின்
இளைஞர் அணியான இளம் சோசலிஸ்டுகள் (Jusos)
உம் இதில் இணைந்துகொண்டது. அதன் புதிய தலைவர்,
Björn Böhning,
முனிச் நகரில் நடந்த இளம் சோசலிஸ்டுகள் தேசிய மாநாட்டில்
கலந்துகொண்டு ''கட்சியை நாம் காப்பாற்ற வேண்டும்!''
என்றுக்கேட்டுக்கொண்டார்.
இந்த அணியில் ஓர் அங்கம்தான் தேர்தல் மாற்றீடு,
வெளியிலிருந்து சமூக ஜனநாயக கட்சிக்கு ஆதரவு தருவதற்கு
முயன்று வருகிறது. இதன் நோக்கம் ஜேர்மனியின் தொழிலாள வர்க்கத்தை சமூக ஜனநாயக கட்சியின் பாரம்பரிய
அரசியலினுள் கட்டுப்படுத்தி உள்ளார்ந்த அரசியல் கூட்டணியை நிலைநிறுத்துவதே ஆகும்.
முதலாவது அரசியல் தேசிய மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அணுகுமுறைக்கு
வேறு எந்த வகையிலும் விளக்கம் தரவியலாது. இந்த அமைப்பை ஆரம்பித்த வேறு எவரும்
Axel Toost
இனை தவிர பகிரங்கமாக மேடையில் பேசவில்லை, அவர் வரம்புக்குட்பட்ட கலைந்துரையாடலுக்கு தலைமை
வகித்தும், பத்திரிகைகளுக்கு சுருக்கமான அறிக்கையை மட்டும் கொடுத்தார். மாநாட்டு அரங்கில் நான்கு
தலைவர்கள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது, அவர்களில் இரண்டுபேர் புதிய கட்சி ஆரம்பிக்கப்படுவதை
திட்டவட்டமாக எதிர்த்தனர்.
மாநாட்டின் ஆரம்பத்தில், அற்றாக்கை (Attac)
சேர்ந்த
Sabine Lösing
இந்தக் குழுவின் நிலைநோக்கை எடுத்துத்துரைத்தார்:
தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதை வலியுறுத்தினார். அவர் சமூக
ஜனநாயக கட்சிக்குள் உள்ளார்ந்த மாற்றத்திற்கு வாய்ப்புக்கள் இல்லை. சாதாரண உழைக்கும் மக்கள் வேலை
இல்லாதிருப்போர், சலுகைகள் மறுக்கப்பட்டோரை ஐக்கியப்படுத்தி
சமூக ஜனநாயக கட்சின் பக்கம் கவரப்படுவதற்கு இயலாது.
ஜனநாயக சோசலிச கட்சி (PDS-
கிழக்கு ஜேர்மனியின் முந்தைய ஸ்ராலினிச ஆளுங்கட்சியின் வாரிசு) பேர்லின்
மற்றும் கிழக்கு மாநிலமான
Mecklenburg-Vorpommern சமூக ஜனநாயக கட்சி-ஜனநாயக
சோசலிச கட்சி கூட்டு அரசாங்கத்தில் பங்கெடுத்துக்கொண்டு சமூக வெட்டுகளில் பங்குபெற்றதால் இதுவும் அவமதிப்புக்குள்ளாகியது.
அடுத்த பேச்சாளர்
Detlef Hensche, ஜேர்மன் தொழிற்சங்க இயக்கத்திலும்
இடதுசாரி அணியிலும் பிரபலமானவர். 2001 வரை,
Hensche ஊடக தொழிலாளர்கள் தொழில்துறை சங்க (IG-
Medien) தலைவராகவும், தற்போது அவர் பேர்லினில்
வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். 65வயதான
Hensche, சமூக ஜனநாயக கட்சியில் 40ஆண்டுகள்
உறுப்பினராக இருந்து 2003ல்
இராஜினாமா செய்தார். ''சமூக ஜனநாயக கட்சிக்கு மறுபடியும் புத்துயிர் அளித்து இயங்கச்செய்ய முடியுமென்ற
நம்பிக்கை முற்றிலும் நப்பாசைமிக்கது'' என அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தேர்தல் மாற்றீட்டில்
Hensche
பங்கெடுத்துக் கொள்ளவில்லை, ''பக்குவமடைவதற்கு'' முன்னரே புதிய கட்சியை அமைக்கக் கூடாது என அவர்
எச்சரித்தார். விரிவான சமூக அடிப்படையில் வேர்விடாத புதிய கட்சிக்கு, பசுமை மற்றும் ஜனநாயக சோசலிச
கட்சிக்கு ஏற்பட்டகதி போன்று ஏற்படுமென்றார். ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட கொள்கையின் ஒரே பாதைக்கு
அடிபணிந்தும் ஒன்றினைத்தும் கொண்டு செல்லவே இது முயலும். முக்கியமான பணியே, சமூக இயக்கங்களை
வளர்ப்பதில்தான் அடங்கியிருக்கிறதென்று அவர் கூறினார்.
''ஆத்திரம், மனமுறிவு, கண்டனம் மட்டுமே ஒரு அரங்கை உருவாக்குவதற்கு
போதுமானவை அல்ல என்று Hensche
வலியுறுத்தினார். ''நலன்புரி அரசை பாதுகாப்பதற்கு, தொழிற்சங்க
முன்னோக்கை'' மட்டுமே முன்வைப்பது போதுமானதல்ல என்றார். ''சமூக போராட்டங்களின் அனுபவத்தை
பொதுமயமாக்கும்'' ''தீர்க்ககரமான கற்பனாவாததின் தோற்றம் '' இல்லாதிருக்கின்றது என்று அவர்
குறிப்பிட்டார். ''சமுதாயத்தில் தேவையான முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் நாடாளுமன்ற
பிரதிநிதித்துவத்தை அடைவதற்கு முயலுவது குறித்து'' அவர் மறுபடியும் எச்சரித்தார்.
தேர்தல் மாற்றீட்டை ஆரம்பித்தவர்களின் காரணத்தின் முழுமையான நிலைப்பாட்டை
கொண்டதாக இவர் வாதம் உள்ளது. சமூக ஜனநாயகத்தின் தோல்வி குறித்து அடிப்படை படிப்பினைகளை
உருவாக்கிய அம்சங்கள் குறித்து விவாதம் நடத்துவதை தேர்தல் மாற்றீட்டை ஆரம்பித்தவர்களும் அடக்கியே
வருகின்றனர். Hensche
யின் கருத்து அதே அடிப்படையில் அமைந்து, இறுதியாக தர்க்கரீதியாக முடிவுக்கு வந்து, புதிய கட்சி ஆரம்பிப்பது
சரியானதல்ல என்கிறார்.
தேர்தல் மாற்றீட்டினரும்
Hensche உம் சமூக ஜனநாயக கட்சிக்கு அரசியல் அறைகூவலாக
ஒரு அமைப்பு தொடங்குவதை தடுக்கின்ற வகையில் இவர்கள் ''சமூக போராட்டங்களை'' பற்றி பேசி கொண்டேயிருக்கிறார்கள்.
பொதுமக்களை அரசியலில் வாயில்லாப்பூச்சிகளாக மாற்றுகின்ற நோக்கில் இதுபோன்ற கருத்துக்கள் கூறப்பட்டு
வருகின்றன. இந்த அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற தேர்தல் கூட்டணி எதுவும் பொதுமக்களது அதிருப்திக்கு எதிராக
பாதுகாப்பு கதவாக செயல்படும்.
அடுத்த பேச்சாளர் ஜேர்மன் அற்றாக் (Attac)
தலைமையிலிருந்து வந்த Peter Wahl.
இவர் Hensche
இன் கருத்தையே எதிர்ரொலித்தார். கடந்த மூன்றாண்டுகளாக
நவீன-தாராளவாத கொள்கைகளுக்கு எதிராக பொதுமக்களை அணிதிரட்டுவதில் பங்களிப்பை அற்றாக்கின் பங்களிப்பை
புகழ்ந்துரைத்தார். ''புதிய திட்டம்'' குறித்து தனது அவநம்பிக்கையை எடுத்துரைத்தார். இந்த பிரச்சனையில்
அற்றாக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக குறிப்பிட்டார். எதிர்கால அரசியல் கூட்டணிகள் எதிலும் பங்கெடுத்துக்கொள்வதில்லை.
நடுநிலை வகிக்கவேண்டுமென்று ஜேர்மன் அற்றாக் முடிவுசெய்திருக்கிறது. அற்றாக் உறுப்பினர்கள் அத்தகைய அணிகளில்
பங்கெடுத்துக் கொள்வார்களானால் அவர்கள் அற்றாக் இலிருந்து நீக்கப்படுவர். அவர்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால்
அற்றாக்கின் அனைத்து அதிகாரபூர்வமான பதவிகளிலிருந்தும் விலகிக்கொள்ள வேண்டும்.
இந்த நிலைப்பாடு பசுமைக்கட்சியினர் மற்றும்
ஜனநாயக சோசலிச கட்சியின் அனுபவங்களை தொடர்ந்து
''எந்த திட்டத்திலும் நிலவும் ஆழமான அவநம்பிக்கையிலிருந்து கிளம்பிவந்திருப்பதாகும்'' என
Peter Wahl குறிப்பிட்டார்.
அற்றாக்கின் இந்த முடிவு கடுமையான அரசியல் ஆய்விற்கு உட்படுவதல்ல. அரசியலை
சமூக ஜனநாயக கட்சிக்கு விட்டுவிடும் போக்கைக்கொண்டது. இதில்
வியப்படைவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் ஆரம்பத்திலிருந்தே ஐரோப்பிய சமூக ஜனநாயகத்தோடு அற்றாக்
நெருக்கமான உறவு கொண்டிருக்கின்றது.
கடைசி பேச்சாரளர்
Anny Heike பவேரிய மாநில நகரான
Furth இல் உள்ள
IG
மெட்டல் தொழிற்சங்கத்தின் முன்னணி தலைவர் தேர்தல் மாற்றீட்டை நிறுவியர்களில்
சமூக ஜனநாயக கட்சி பின்னணி இல்லாத தலைவர்களில் இவரும்
ஒருவராகும்.
செயற்திட்டம் 2010 வெட்டுக்கள் தொழிற்சங்க உறுப்பினர்களிடையே
தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அரசாங்க கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவிட முடியுமென்று அரசியல் அடிப்படையில்
தான் தீவிரமாக பங்கெடுத்துக் கொண்டதாக Heike
குறிப்பிட்டார். Heike
தவிர,
வேலைக்கும் சமூக நீதிக்குமான இயக்கத்தினை (ASG)
நிறுவனர்கள் 6 பேரில் வேறு இரண்டுபேர் மட்டுமே மாநாட்டில் கலந்து கொண்டனர்.
Klaus Ernst ஒரு சிறிய குறிப்பைத்தந்தார்.
Thomas Händel பத்திரிகை நிருபர்கள் மாநாட்டில் கலந்து
கொண்டார்.
''தேர்தல் மாற்றீட்டை'' தோற்றுவித்தவர்களில் முக்கியமான இருவர்
Joachim Bischoff
மற்றும் Ralf Krämer
மாநாட்டில் பகிரங்கமாக உரையாற்றவில்லை. அவர்களது இந்த நடவடிக்கை இந்த திட்டம்முழுவதன் கொள்கையற்ற
தலைமையை எடுத்துக்காட்டுகிறது. Joachim
Bischoff, ''sozialismus''
செய்திப் பத்திரிகையின் ஆசிரியர் பல தலைமுறைகளாக தொழிற்சங்க அரசியலில் தீவிரமாக இருப்பவர்.
Ralf Krämer
ஜேர்மன் சேவைப்பிரிவு தொழிற்சங்கமான ver.di
யை சேர்ந்தவர். அண்மை ஆண்டுகளில்
ஜனநாயக சோசலிச கட்சியில் சேர்ந்த இவ் இருவரும், சமூக ஜனநாயகத்திற்கு
தற்காப்பு வலையை உருவாக்கிய அரசியல் நிலைப்பாட்டுக்கான ஆசிரியர்கள் ஆவர்.
Top of page |