:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Insurgency forces speedup of Iraqi "handover"
எழுச்சியின் நிர்பந்தத்தால் ஈராக் ''கையளிப்பு'' துரிதப்படுத்தப்படுகிறது
By Bill Van Auken
29 June 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
ஈராக் எதிர்ப்பாளர்கள் பெருமளவில் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சுறுத்தல்
காரணமாக ஈராக்கில் முன்னாள் நாடுகடத்தப்பட்டோர், வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தோர் மற்றும் வாஷிங்டனின்
முகவாண்மைகள் அதிகாரம் செலுத்தும், தேர்ந்தெடுக்கப்படாத இடைக்கால அரசாங்கத்திடம் சம்பிரதாய
மசோதா அடிப்படையில் ''இறையாண்மையை மாற்றம் செய்ய'' 48- மணிநேரமும் முன்கூட்டியே விழா நடத்தப்பட்டது.
அவசரமாக நடத்தப்பட்ட இந்த விழாவில் புஷ் நிர்வாகமும் புதிய அமெரிக்க
பொம்மையாட்சி அதிகாரிகளும் தங்களது துணிச்சலான முகத்தைக்காட்ட முயன்றனர், ஈராக்கியர்கள் இந்த விழாவை
முன்கூட்டியே நடத்த முடிவு செய்தார்கள் என்று கூறினர். துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற நேட்டோ
உச்சிமாநாட்டில் அதிகாரமாற்றம் என்று கூறப்படுவது அறிவிக்கப்பட்டபின் ஜனாதிபதி ஜோர்ஜ்
W. புஷ்
''தன்னம்பிக்கையின் அடையாளம் அது'', "நாங்கள் முன்னேற தயாராக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம்
அது'' என்று அறிவித்தார்.
இந்த நம்பமுடியாத கூற்றை பொய்யாக்குகின்ற வகையில் அந்த விழாவே மிக
இரகசியமாக நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பு தலைமையகங்கள் அடங்கியுள்ள கடுமையான
பாதுகாப்புக்கள் நிறைந்த பாக்தாத்தின் பச்சை மண்டலப்பகுதியின் சுவர்களுக்குள்ளே இந்த விழா நடைபெற்றது,
முன்கூட்டியே அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை, ஒரு சில ஈராக்கியர்தான் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியை
நேரடியாக ஒளிபரப்ப தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. நிருபர்களின் செல்போன்கள்
நுழைவு வாயிலில் பறிமுதல் செய்யப்பட்டன.
புஷ் நிர்வாகத்தை பொறுத்தவரை அந்த நிகழ்ச்சி ஒரு தோல்வியாகும். வெள்ளை
மாளிகை அமெரிக்க மக்களை ஏமாற்ற முயன்றது. ஈராக்கில் அமெரிக்காவின் காலனித்துவ முயற்சிக்கு முற்றுப்புள்ளி
வைக்கப்படுகின்ற அளவில் ஏதோ ஒரு வகையில் அடிப்படை மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று
அமெரிக்க மக்களை நம்பவைத்த முயற்சியை வெட்டிமுறிக்கின்ற வகையில் இப்படி கள்ளத்தனமாக அதிகார மாற்றம்
நடைபெற்று இருக்கிறது.
கடுமையாய் சீர்குலைந்து கொண்டு வந்த பாதுகாப்பு சூழ்நிலை ஈராக்கிலிருந்து
புஷ்-க்கு தேவைப்படும் ''ஒரு நல்ல செய்தி''யைவிடவும் இன்றியமையாமையில் விஞ்சியது என்ற முடிவுக்கு வரும்படி
அமெரிக்க அதிகாரிகள் நிர்பந்திக்கப்பட்டார்கள். இந்த விழா நடைபெறுவதற்கு முன்னர், சில நாட்களில் நாடு
முழுவதிலும் நடைபெற்ற தாக்குதல்களில் பல அமெரிக்க
ஆக்கிரமிப்பு துருப்புக்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.
இடைக்கால அரசாங்கத்தை இயங்கவைக்கவும், கூட்டணி இடைக்கால ஆணையத்தை
(CPA) கலைக்கவும் ஜூன் 30- என்று தேதி
நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் அன்றையதினம் மேலும் மிக குறிப்பிடத்தக்க தாக்குதல்கள் நடைபெறக்கூடும் என்று
எதிர்பார்க்கப்பட்டது.
ஈராக்கிலுள்ள வாஷிங்டன் ஆக்கிரமிப்புத் தலைவர் போல் பிரேமர் பச்சை மண்டல
பகுதியில் விழா தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்குள் ஈராக்கிலிருந்து
C 130-
போக்குவரத்து விமானத்தில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார். அவர் புறப்பட்ட தகவலும் இரகசியமாக
வைக்கப்பட்டிருந்தது.
அதற்கு ஒரு நாளைக்கு முன்னர், ஆஸ்திரேலிய போக்குவரத்து விமானம் ஒன்று
தரையிலிருந்து கிளம்பியதும் சுடப்பட்டு ஒரு அமெரிக்கப்பயணி காயமடைந்தார், அந்த விமானிகள் அந்தப்பயணத்தை
கைவிட்டனர். ஆக 13 மாதங்கள் பாக்தாத்தில் சர்வ வல்லமைபடைத்த அமெரிக்காவின் ஆளுநராக பணியாற்றிவந்த
பிரேமர் அந்த நாட்டிலிருந்து வெளியேறியது மூழ்கிக்கொண்டிருக்கிற கப்பலில் இருந்த ஒரு சுண்டெலி தப்பியது
போன்றுதான் உள்ளது.
துருக்கியிலும் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் ஈராக்
மக்களே தங்களுக்கு புதிதாக கிடைத்திருக்கும் ''இறையாண்மையை'' அறிந்துகொண்டனர். ஈராக் பொது
கொண்டாட்டங்கள் பற்றி எந்த செய்தியுமில்லை. அதற்கு முரணாக, நாட்டிலிருந்து வருகிற மிகப்பெரும்பாலான செய்திகள்
பொதுமக்களிடையே நிலவுகின்ற விரோதப்போக்கையும் ஐயுறவாதத்தையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளன. மில்லியன்
கணக்கான ஈராக்கியருக்கு ஒன்று தெளிவாகத் தெரியும், ஏறத்தாழ 1,40,000 அமெரிக்க துருப்புக்கள் அடங்கிய
ஆக்கிரமிப்பு இராணுவத்தின் இராணுவ வலிமையை சார்ந்திருக்கிற எந்த ஆட்சியும் இறையாண்மை கொண்டதோ அல்லது
சுதந்திரமானதோ அல்ல என்பது ஈராக் மக்களுக்கு தெளிவாகவே தெரியும்.
இடைக்கால அரசாங்கத்திற்கு பொதுமக்களது சட்டப்பூர்வமான அங்கீகாரமில்லை.
அமெரிக்கா நியமித்துள்ள பிரதமர் அயத் அல்லாவிக்கு வாஷிங்டன் மற்றும் லண்டனுக்கு வெளியில் எந்தவிதமான
அடிப்படை ஆதரவும் இல்லை--- பரவலாக அவர் ஒரு அமெரிக்க முகவாண்மை (Agent)
என்று நியாயப்படுத்தப்படுகிறார். அவர் முன்னாள் பாத்திஸ்ட் கட்சியைச் சார்ந்தவர், அவர் 1970-களில் சதாம்
ஹூசைன் ஆட்சியிலிருந்து முறித்துக்கொண்டு சென்றவர். முதலில் பிரிட்டிஷ் புலனாய்வு அமைப்பிற்கும் அடுத்து
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு துறைக்கும் நம்பிக்கைக்குரிய ''சொத்து'' ஆவார். நியூயார்க் டைம்ஸ்
பேட்டி கண்டதில் அறிவித்த CIA
அதிகாரிகள் அவரது அமைப்பான ஈராக் தேசிய உடன்பாடு (INA)
CIA உடன் 1990-களில் பணியாற்றி ஈராக்கில் சீர்குலைவை
ஏற்படுத்த பாக்தாத்தில் கார் குண்டு வெடிப்புக்கு ஏற்பாடு செய்தார்.
அடிப்படையில் அதிகாரமில்லாத பொம்மையாட்சிக்கு அல்லாவியை தலைவராக
நியமித்திருப்பது வாஷிங்டனின் இரண்டு நோக்கங்களை பூர்த்தி செய்வதற்கென்று தோன்றுகிறது. அமெரிக்க
ஆக்கிரமிப்பிற்கு எதிராக கிளம்பும் பொதுமக்களது கிளர்ச்சியை நசுக்கும் நடவடிக்கைகள் ஈராக்கியர்
எதிர்கொள்கின்றனர் என்று காட்டுவதற்காகும். அதே நேரத்தில், பாத்திஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் என்கிற
முறையில் சதாம் ஹூசேன் ஆட்சியில் இயங்கி வந்த இரகசிய போலீஸ் சாதனத்தில் மிச்சம் உள்ளவர்களை கொண்டு
மீண்டும் அதே அமைப்பை அல்லாவி உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தை கோடிட்டுக்காட்டும் வகையில் அல்லாவி ஜூன் 27-ல் வாஷிங்டன்
போஸ்டில் தனது கருத்தை தெரிவிக்கும் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். தனது ஆட்சி ''பயங்கரவாதத்திற்கு
எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் புலனாய்வு திறன்களை கொண்ட அமைப்பை உருவாக்க'' உத்தேசித்திருப்பதாகவும்
அறிவித்திருக்கிறார். ''கண்ணியமான ஈராக்கின் இராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட முன்னாள் அதிகாரிகள்
மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார்கள்'' என்று அறிவித்திருக்கிறார்.
''ஈராக்கின் முரட்டுத்தனமான அரசியல் பரப்பில் ஒரு படையை உருவாக்க
வேண்டியதன் பொருளை புரிந்து கொண்டிருக்கிற மிகக்கடுமையான அரசியல்வாதி அல்லாவி, அவர் அரசியல்
சாதுர்யம் மிக்கவர், பல போர்களில் கலந்துகொண்டு அனுபவப்பட்டவர் என்பதன் காரணமாக'' புஷ் நிர்வாக
அதிகாரிகள் அல்லாவி மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் திங்களன்று
அறிவித்திருக்கிறது.
இந்த மதிப்பீட்டிற்கும் சதாம் ஹூசைன் குவைத் எண்ணெய் கிணறுகளை பிடித்துக்கொண்டு
அமெரிக்க நலன்களுக்கு புறம்பாக நடந்து கொள்வதற்கு முன்னர் பல ஆண்டுகள் அவரை பற்றி றேகனும் மூத்த
புஷ்ஷும் செய்த மதிப்பீடுகளுக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை.
திங்களன்று துருக்கியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஜோர்ஜ்
W. புஷ்,
அல்லாவியையும் அவரது கூட்டாளிகளையும் போர்வீரர்களுக்கு சமமான ''துணிவுமிக்கவர்கள்'' என்று வர்ணித்தார்.
''நாம் டெக்ஸாஸில் சொல்வதைப்போல் அவர்கள் சுறுசுறுப்பு மிக்கவர்கள்.'' குற்றவியல் அடிப்படை
நடவடிக்கையை ஆதாரமாகக்கொண்டு இயங்குகின்ற ஒரு நிர்வாகத்திற்கு அல்லாவி மீது ஏற்பட்டிருக்கிற கவர்ச்சி
முற்றிலும் புரிந்து கொள்ளத்தக்கதுதான்.
அல்லாவி பாக்தாத்தின் புலனாய்வு ஏஜென்சியான முக்காபரத்தின் முன்னாள்
ஏஜெண்டாக பணியாற்றியவர், 1970-களில் ஐரோப்பிய நாடுகளில் நடமாடிய பாத்திஸ்ட் அதிருப்தியாளர்களை
வேட்டையாடிக் கண்டுபிடித்து கொலை செய்த "தாக்குதல் குழுவின்" நடவடிக்கைகளில் பங்கெடுத்துக்கொண்டவர்
என்று அமெரிக்காவின் காபினெட் அந்தஸ்துள்ள மத்திய கிழக்கு பெயர் குறிப்பிட விரும்பாத தூதரை
மேற்கோள்காட்டி சென்ற வாரம் New Yorker-TM
Seymour Hersh
என்பவரால் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
ஆக புஷ் ஜனநாயகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அரண் என்று பிரகடனப்படுத்தும்
பொம்மையாட்சிக்கு தலைமை வகிப்பவர் முன்னாள் ஈராக் இரகசியப்போலீஸ் குண்டர், அவர்
CIA கட்டளைப்படி
பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தவராவர்.
ஈராக்கில் ''ஸ்திரத்தன்மை'' கொண்டுவரும்வரை அமெரிக்கத்துருப்புக்கள்
நீடித்திருக்குமென்று திங்களன்று புஷ்ஷும் இதர அதிகாரிகளும் பிரகடனப்படுத்தினர். ஐ.நா இந்த மாதத்
தொடக்கத்தில் நிறைவேற்றியுள்ள ஒரு தீர்மானத்தின்படி, பொம்மையாட்சிக்கு ஆக்கிரமிப்புப்படைகளை
விலக்கிகொள்ள சம்பிரதாய முறையில் அதிகாரம் உண்டு. ஆனால் ஒரு அமெரிக்க முகவாண்மை தலைமையிலான அந்த
ஆட்சிக்கு, மற்றும் குரோதம் கொண்ட மக்களிடம் இருந்து தனது ஆட்சியை பாதுகாத்துக்கொள்வதற்காக
முழுமையாக அமெரிக்க இராணுவத்தை நம்பிக்கொண்டிருக்கிற ஒருவர் படைகளை விலக்கிக்கொள்வது பற்றி
அம்முடிவைப் பற்றி சிந்தித்தாலும் கூட ஆபத்தில்லை.
அதேவேளை, இடைக்கால அரசாங்கம் என்ற திரைச்சீலைக்குப் பின்னால் உண்மையான
அதிகாரத்தை செயற்படுத்த உறுதியாக காலனித்துவப் பாணி ஆட்சியை வாஷிங்டன் உருவாக்கியிருக்கிறது.
அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டுவிட்ட CIA
வின் அதிகாரிகள் அதே பணிகளை மீண்டும் செய்வார்கள், அவர்களுக்கு பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தில்
புதிய பதவிகள் தரப்பட்டுள்ளன. உலகிலேயே வேறு எந்தநாட்டிலும் இல்லாத மிகப்பெரிய தூதரகம் இது.
ஐ.நா-வினால் அமெரிக்காவின் பிரதிநிதியாக பணியாற்றி வந்த மற்றும் 1980-களில் நிகரகுவாவில் நடைபெற்ற
இரகசிய போரில் பிரதான பங்களிப்பு செய்த ஜோன் நெகரோபொன்ட் அமெரிக்க தூதராகவும் புதிய
ஆளுநராகவும் இருந்து மேற்பார்வையிடுவார்.
ஒவ்வொரு ஈராக் அமைச்சகத்தின் பொறுப்புக்களும் அமெரிக்க அதிகாரிகள்
கட்டுப்பாட்டில் உள்ளன, அவர்கள் முக்கியமான முடிவுகளை எடுப்பார்கள் அது தவிர அமெரிக்க ஆக்கிரமிப்பு
தலைவர் பிரேமர் தான் வெளியேறும் முன்னர் குறைந்தபட்சம் ''இரண்டு டசின் ஈராக்கியர்களை
அரசாங்கப்பணிகளில் நியமித்தார். திட்டமிட்ட அரசியல் அதிகாரம் மாற்றப்பட்டபின்னர் அரசாங்கம் பற்றிய தனது
கருத்துக்களை வளர்ப்பதற்கான முயற்சியாக இந்த நியமனங்களை செய்திருக்கிறார்'' என்று ஞாயிறன்று
வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்தது.
பிரேமர் வெளியிட்டுள்ள ஒரு கட்டளை அல்லாவி தனது தேசிய பாதுகாப்பு
ஆலோசகராகவும் தேசிய புலனாய்வுத் தலைவராகவும் எவரை நியமித்தாலும் அவரது பதவிக்காலம் ஐந்து
ஆண்டுகளாக இருக்கும் என்று பத்திரிகை அறிவித்தது. இதனுடைய தெளிவான நோக்கம் என்னவென்றால் இறுதியாக
நடைபெறும் தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் CIA
ம் அமெரிக்க இராணுவமும் ஈராக்கின் அரசு அடக்கு முறை சாதனத்தை தன்கையில் வைத்திருக்குமென்று அந்தப்
பத்திரிகை தெரிவித்திருக்கிறது.
ஒவ்வொரு ஈராக் அமைச்சகத்திலும் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பெரும்பாலும்
வாஷிங்டனுக்கு நெருக்கமான பழைய ஈராக் குழுக்களை சேர்ந்தவர்கள் பொறுக்கி எடுக்கப்பட்டு 5-ஆண்டுகளுக்கு
நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் வாஷிங்டனுக்கு கட்டுப்பட்டு அதிகாரம்
இருக்கவேண்டுமென்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தான் பதவி விலகிய நேரத்தில் பிரேமர் மற்றொரு கட்டளையை
பிறப்பித்திருக்கிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவிருப்பதாக கூறப்படும் 275- உறுப்பினர்
நாடாளுமன்றத்திற்கு வாக்குப்பதிவு சம்மந்தப்பட்டது. குடிப்படை சம்மந்தப்பட்ட எந்தக்கட்சியும் தேர்தலில்
போட்டியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஈராக்கில் செயல்பட்டுவருகின்ற ஒவ்வொரு கட்சியும்
ஏதாவது ஒரு வகையில் ஆயுதந்தாங்கிய பிரிவுகளை வைத்திருக்கின்றன. வாஷிங்டன் எதிர்க்கின்ற எந்த கட்சியும்
தேர்தலில் போட்டியிட முடியாத நிலையை உருவாக்குவதற்கான சாக்குப்போக்கு இது என்று பரவலாக
கருதப்படுகிறது.
இந்த மாதத் தொடக்கத்தில் பிரேமர் ஒரு கட்டளையை பிறப்பித்தார். அது
பத்திரிகை சுதந்திரத்தை கடுமையாக கட்டுப்படுத்துகிறது, ஆக்கிரமிப்பிற்கும் அதன் உள்நாட்டு கையாட்களுக்கும்
எதிரான கருத்துக்கள் பிரசுரிக்கப்படுவதற்கு தடைவிதிக்கிறது. ஈராக்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை
கடுமையாக சீர்குலைக்கிற வகையில் ஈராக் ஊடகங்கள் அல்லது வெளியீட்டு நிறுவனங்கள் பிரசுரிப்பதை
ஒளிபரப்புவதை அந்த சட்டம் கட்டுப்படுத்துகிறது." சட்டத்தை மீறும் எந்த பத்திரிகையும் அல்லது ஒலிபரப்பு
அமைப்பையும் உடனடியாக கைப்பற்றுவதற்காகவும் மூடவும் அதன் உரிமையாளர்களை ஓராண்டிற்கு சிறையில் தள்ளவும்
வழி செய்கிறது.
போஸ்ட் சுட்டிக்காட்டியிருப்பதைப் போல், அமெரிக்க ஆக்கிரமிப்பு
அதிகாரிகள் பிறப்பித்துள்ள அரசியல் சட்டம் பிரேமர் பிறப்பித்த 97- கட்டளைகளில் எதையும் இடைக்கால
அரசாங்கம் எனப்படுவது இரத்துசெய்ய முடியாதபடி உண்மையில் ஆக்கி இருக்கிறது. அந்த கட்டளைகள் "ஈராக்
மக்களை கட்டுப்படுத்தும் கட்டளைகள் அல்லது கட்டுப்படுத்தும் அறிவுறுத்தல்கள்" என்று
CPA வர்ணித்துள்ளது. இந்த கட்டளைகளில் எதையும் மாற்றுவதற்கு
ஜனாதிபதி இரு துணை ஜனாதிபதிகள் பிரதமர் மற்றும் அல்லாவி மந்திரி சபையின் பெரும்பான்மை தேவை. இவர்கள்
வாஷிங்டனுக்கு கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடப்பவர்கள், அத்தகைய கிளர்ச்சி மிகவும் விரும்பத்தகாதது.
புதிய அரசாங்கம் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் இயற்றிய எந்த சட்டத்தையும்
மாற்றமுடியாது என்பதுடன் இடைக்கால அரசியல் சட்டம் புதிய சட்டங்கள் இயற்றப்படுவதையும் தடுக்கிறது.
இறுதியாக இடைக்கால அரசாங்கம் தனது நிதியாதாரங்களுக்கு முழுமையாக
அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையை வாஷிங்டன் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உருவாக்கியுள்ளது. ஈராக்
எண்ணெய் வளங்கள் பாதுகாப்பாக அமெரிக்கர்கள் கையில் உள்ளன. ஜூன் 18- பிரேமர் ஒரு கட்டளைமூலம்
"வேலைத்திட்ட மறுபரிசீலனை வாரியத்தை" அமைத்திருக்கிறார். அந்த வாரியம் ஈராக்கில் நிவாரண மற்றும்
சீரமைப்பு நடவடிக்கைகளுக்கான நிதித்தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் ஒருங்கிணைத்து உருவாக்கும், இந்தத்
தேவைகளை நிறைவு செய்வதற்கு இருக்கும் வளங்களை ஒதுக்கீடு செய்யும் திட்டங்களுக்கு நிதி உதவித் திட்டங்களை
அபிவிருத்தி செய்தலாகும்.
இந்த வாரியத்தை வாஷிங்டன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, முக்கியமாக
ஈராக்கின் நிதியாதாரங்களை கைப்பற்றிக்கொண்டது மற்றும் அவற்றை ஹாலிபர்டன் போன்ற அமெரிக்க கம்பெனிகள்
வளமடைவதற்கு திருப்பிவிட்டிருக்கிறது. ஐ.நா அனுமதி வழங்கியுள்ள ஈராக் அபிவிருத்த நிதியில் சேர்ந்திருக்கும் 2.5
பில்லியன் அமெரிக்க டாலர்களை சீரமைப்பு ஒப்பந்தங்களுக்கு செலுத்த அந்த வாரியம் அண்மையில்
கட்டளையிட்டிருக்கிறது. இந்த செலவினங்கள் ஏற்கனவே அமெரிக்க நாடாளுமன்றம் ஒதுக்கீடு செய்த தொகைக்கு
மேற்பட்டதாகும். இந்தத்தொகை ஈராக்கின் எண்ணெய் வளத்தின் மூலம் கிடைத்தவை.
கோடீஸ்வரர் George
Soros- ன் பகிரங்க சமுதாய அமைப்பிலிருந்து உருவாகிய
ஈராக் வருவாய் கண்காணிப்புக்குழு அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை, "இடைக்கால
அரசாங்கமும், அதற்கு பின்னர் வருகின்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் தன்னாட்சி உரிமைகளை
செயல்படுத்துவதை அர்த்தப்படுத்துவன, பணத்தை எப்படி செலவிடுவது என்பதை முடிவு செய்கின்ற அதிகாரத்திற்கு
கடுமையான விளைவுகளை" அந்த வாரியத்தின் நடவடிக்கைகள் கொண்டிருக்கின்றன என எச்சரித்தது.
ஆக்கிரமிப்பு நிர்வாகம் நிதியை பயன்படுத்தியிருப்பதை அந்த அறிக்கை "கடைசி நிமிட
தாராள செலவின வீச்சு" என்று வர்ணித்திருக்கிறது. இவ்வளவு பெருந்தொகையை விருப்பப்படி செலவிடுவதற்கு அதை
செலவிடுவதற்கான அமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னர் ஒதுக்கப்பட்டது. ஏன்? பதவி ஏற்கின்ற அரசாங்கம்
அத்தகைய நடவடிக்கைகளை முடிவு செய்வதற்கு அனுமதிக்கப்படாது, கடைசி நிமிடத்தில் இத்தகைய செலவின
ஒதுக்கீடுகளை கட்டாயப்படுத்தியிருப்பது ஏன்? என்று அந்த அறிக்கை கேட்கிறது.
கேள்விகள் கேட்கப்படுவது விடையிறுப்பதற்காக. அந்த கேள்வியிலேயே பதில்களும்
அடங்கியிருக்கின்றன. இடைக்கால அரசாங்கத்திற்கு எந்தவித சுதந்திர நிதியாதாரமும் இருக்கக்கூடாது, தன்னையே
முழுமையாக சார்ந்திருக்க வேண்டுமென்று வாஷிங்டன் முயன்றுவருகிறது. அதே நேரத்தில் ஈராக்கின் செல்வத்தையும்,
பொருளாதார வளங்களையும் சூறையாடுவதை வாஷிங்டன் - கண்காணித்து வருகிறது. அதிலிருந்து திருப்பப்படும்
பில்லியன் கணக்கான டாலர்கள் புஷ் நிர்வாகத்தின் பெரிய வர்த்தக ஆதரவாளர்களுக்குப்போய் சேர வேண்டும்
என்று விரும்புகிறது.
கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ள ஈராக்
மறுசீரமைப்பு நிதியின் அளவு 24-பில்லியன் டாலர்கள், இது அமெரிக்க கம்பெனிகளுக்கு மிகப்பெரிய இலாபம்
ஈட்டும் நிதியாதார வசதியாகும். அதே பணிகளை ஈராக்கியர் செய்வதைவிட 10 மடங்கு கூடுதலான செலவினத்தில்
அமெரிக்கக் கம்பனிகள் நிறைவேற்றி வருகின்றன என்று சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் சென்ற ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடக்கத்திலிருந்து ஈராக்கில்
எண்ணெய் வளத்தின் மூலம் சேர்ந்துள்ள 20 பில்லியன் டாலர்களை வாஷிங்டன் கையாண்டு வருகின்ற முறைகள் குறித்து
இரண்டு அறிக்கைகள் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
மனிதநேய உதவி அமைப்பான கிறிஸ்தவ உதவி அமைப்பு பிரிட்டனின் தாராளவாத
ஜனநாயகக் கட்சியும் 20- பில்லியன் டாலர்கள் ஈராக் எண்ணெய் வருவாயை அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகள்
எப்படி செலவிட்டார்கள் என்பதற்கு கணக்குகாட்ட தவறிவிட்டார்கள். இதனால் அமெரிக்கா, அப்பட்டமாக
கொள்ளையடித்துவிட்டதோ என்ற சந்தேகங்கள் எழுந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளன.
தாராளவாத ஜனநாயகக் கட்சிக்காரர்கள் எண்ணெய் ஏற்றுமதியில் ஈராக் சம்பாதித்ததற்கு
ஆக்கிரமிப்பு அதிகாரிகள் வளர்ச்சி நிதியில் செலுத்தியிருப்பதற்குமிடையில் 3.7- பில்லியன் டாலர்கள் கணக்கில் வேறுபாடு
காணப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றம் ஒதுக்கீடு செய்துள்ள மறுசீரமைப்பு நிதி செலவு தொடர்பாக நான்கு
தனித்தனி தணிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் சென்ற ஏப்ரல் வரை ஈராக் எண்ணெய் வருவாய் செலவிடப்பட்டது
பற்றி எந்த தணிக்கையும் செய்யப்படவில்லை என்று கிறிஸ்தவ உதவி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அத்தகைய தணிக்கை
ஜூலை மாதம் வரை பூர்த்திசெய்ய முடியாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு பின்னர் ஈராக்
எண்ணெய் வருவாயை செலவிட்ட CPA
சம்பிரதாயபூர்வமாக கலைக்கப்பட்டு இருக்கும்.
Top of page |