:
வட அமெரிக்கா
SEP submits petitions to qualify for Illinois State House campaign
Illinois-
மாநில சபை பிரச்சாரத்திற்கான தகுதிபெற
SEP
மனு தாக்கல்
By Joe Parks
23 June 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்
Thomas Mackaman, Illinois-ல்
103-வது மாவட்டத்தில் மாநில சபைக்கு போட்டியிடுவதற்கான தகுதிகோரி ஜூன் 21-ல் திங்களன்று மனுத்தாக்கல்
செய்தார். அங்கு தான் Champaign
மற்றும் Urbana
நகரமும் பிரபல
Illinois- பல்கலைக்கழகமும் உள்ளது. ஜனநாயக அல்லது
குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு எதிராக
போட்டியிடுவதற்கு உறுதி செய்யும் வகையில் 2000- த்திற்கும் மேற்பட்ட
வாக்காளர்களின் கையெழுத்தை SEP
ஆதரவாளர்கள் திரட்டினர்----இது தேவைப்படும் 1344- வாக்காளர்களை விட அதிகம் ஆகும்.
Illinois- மாநில
தேர்தல் வாரியத்தின்படி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு ஐந்து நாட்களுக்குள் முன் ஆட்சேபனை எதுவுமிருந்தால்
அதைத் தாக்கல் செய்யப்படவேண்டும்.
வெளிநாடுகளில் நடைபெற்றுவரும் ஏகாதிபத்தியப்போர், உள்நாட்டில் மேலும்
வாழ்க்கைத்தரம் குறைந்து கொண்டுவருவதற்கு எதிராக சோசலிச மாற்றை ஆதரிப்பதற்கு அதிகரித்த அளவில்
இளைஞர்களும் தொழிலாளர்களும் காட்டிவருகின்ற ஆதரவை இந்த மனுத்தாக்கல் வெற்றி எடுத்துக்காட்டுகிறது.
நாட்டிலேயே கடினமான ---கட்டுப்பாடுகள் நிறைந்த தேர்தலில் நிற்க தகுதிபெறும் சட்டத்தை
Illinois- பராமரித்து
வருகிறது----- இந்த சட்டங்களுக்கிடையிலும், சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர்கள் மனுவில் கையெழுத்தை
அன்பாக வழங்கினர்.
இந்த மனுவில் கையெழுத்து வாங்கும்போது நடைபெற்ற பல்வேறு உரையாடல்களில்
ஈராக் போருக்கும் புஷ் நிர்வாகத்திற்கும் அப்பட்டமான விரோதம் நிலவுவது தெளிவாக வெளிப்பட்டது,
அதேபோல ஜோன் கெர்ரியும், ஜனநாயகக் கட்சியும் ஈராக் போரிலும், அந்த நாட்டை பிடித்துக்கொண்டதிலும்
உடந்தையாக செயல்பட்டார்கள் என்ற பெருகிவரும் விழிப்புணர்வும் வெளிப்பட்டது.
கையெழுத்திட்ட பலர் நவம்பர் 2-ல் பரந்தளவில் மாற்று வேட்பாளர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அல்லது ஜனநாயக மற்றும் குடியரசுக்கட்சிக்காரர் மீது தங்களது
வெறுப்பை பதிவு செய்யும்பொருட்டு ஆர்வத்துடன் பலர் முன்வந்தனர். ''இப்போதுள்ள இரண்டு கட்சிகளைவிட எந்த
புதிய கட்சியும் சிறந்ததுதான்'' என்று கையெழுத்திட்ட ஒருவர் குறிப்பிட்டார். உண்மையிலேயே கிழக்கு மத்திய
Illinois-
மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற 1,00,000க்கு மேற்பட்ட மக்களில் குறைந்த அளவினர்தான் ஸ்தாபன
கட்சிகளை அடையாளப்படுத்திக் கொள்கின்றவர்கள். நூற்றுக்கணக்கான துண்டறிக்கைகளை விநியோகம் செய்து அந்தப்
பகுதி மக்களை உலக சோசலிச வலைத் தளத்தை வாசிக்குமாறு ஊக்குவித்தும், ஈராக் போரை
ஐயத்திற்கிடமின்றி எதிர்க்கின்ற ஒரே அரசியல் கட்சியான
SEP-ன் பக்கம் ஆவேசமும், விரக்தியும் கொண்ட மக்களை
திருப்பிவிடவும் மனு திரட்டியவர்கள் பணியாற்றினர்.
உள்ளூர் மக்களிடையே இந்த பிரச்சாரம் கணிசமான ஆதரவைப் பெற்றது. உள்ளூர் செய்திப்
பத்திரிகையான Champaign News-Gazette,
Mackaman- ஐ பேட்டி கண்டது, அதேபோல வானொலிக்கு
பேட்டி வழங்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. அந்தப் பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரையில்
SEP தேர்தல் பிரச்சாரத்தின் அடிப்படையை சுட்டிக்காட்டினார்.
''ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டிற்கும் மாற்றாக ஒரு கட்சியை உங்களுக்கு தருவதற்காக நாங்கள்
முயன்று வருகிறோம். நடைமுறைரீதியாக, அப்படி என்றால் எங்களது கட்சிதான் போருக்கும் உள்நாட்டில்
வாழ்க்கைத்தரம் சீரழிவிற்கும் ஒரு அரசியல் மாற்றாகும்'' என்று
Mackaman குறிப்பிட்டார்.
ஜனநாயகக் கட்சியின் இன்றைய உறுப்பினர் Naomi
Jakobsson-ஐயும் அவரது குடியரசுக் கட்சி எதிர்ப்பாளர்
Deborah Feinen-யையும் எதிர்த்து
Mackaman
போட்டியிடுகிறார்.
ஜனநாயகக் கட்சி, சுயாதீனமான சோசலிச சவாலை, குறிப்பாக விரோதப்
போக்கோடு நோக்கியது. News-Gazette
கட்டுரையில் Jokobsson, SEP
பிரச்சாரத்தின் நோக்கம்
Illinois
பல்கலைக்கழக நிதியளிப்பை கீழறுப்பதற்காகத்தான் என்று கூறினார், இது அடிப்படையிலேயே பொருத்தமற்ற
குற்றச்சாட்டாகும். இன்னொரு சம்பவம், Urbana
விவசாய சந்தையில் SEP
மனுவில் கையெழுத்துவாங்கிக் கொண்டிருந்த ஒரு தொண்டருக்கு உள்ளூர் ஜனநாயகக் கட்சி தலைவர் ஒருவர்
தொந்தரவு கொடுத்தார், ஜனநாயகக்கட்சியின் ''வாக்குகளை களவாடுவது தான்'' இந்த பிரச்சாரத்தின்
நோக்கம் என்று குற்றம் சாட்டினார்--- வாக்குகள் என்பவை ஜனநாயகக் கட்சியின் அசைக்க முடியாத
சொத்துரிமை என்று அவர் நினைத்துக்கொண்டார் போலும்.
ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர் இருவரும் நாடுதழுவிய ஆழமான
சமூக நெருக்கடிக்கு தலைமை வகித்தவர்களாவர், இது அமெரிக்க தொழிலாளர்களது வாழ்க்கைத்தரத்தின் மீது இடைவிடாத
தாக்குதல்களையும், வெளிநாடுகளில் இராணுவவாதத்தையும் கொண்டுவந்தது. இந்த நெருக்கடியின் பரிணாமங்களை
Champaign
மற்றும் Urbana-வில்
மக்களது வாழ்வில் பல அம்சங்களில் காண முடிகிறது. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தேவையான மருத்துவ
வசதிகள் கிடைக்கவில்லை. கடந்த 10-ஆண்டுகளுக்கு மேலாக வறுமை வளர்ந்திருக்கிறது, குற்றங்களின் புள்ளி
விபரங்கள் மற்றும் இளைஞர்கள் சிறைக்கு செல்வது உயர்ந்துள்ளது. இப்படி பொருளாதார நெருக்கடிகளினால் உந்தப்பட்டு
கிழக்கு மத்திய Illinois-
பகுதிகளிலிருந்து இராணுவத்தில் சேர்ந்த பலர் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அந்த நாடுகளின் மக்களை
தாக்குகின்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மரணத்தை, காயங்களை மற்றும் உளவியல் ரீதியான
உளைச்சலை சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.
Illinois பல்கலைக்கழகத்தில்,
மீண்டும் மீண்டும் படிப்புக் கட்டணத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி அடிக்கடி கல்விக்கட்டணம் உயர்த்தப்படுவதால்
மத்தியதர வர்க்க குடும்பங்கள் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகின்றனர், ஏழைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தினது
மாணவர்கள் உள்ளூர் சமுதாய கல்லூரியில் சேர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பட்டதாரி கல்வி உதவியாளர்கள்
மற்றும் இணை பல்கலைக்கழக துணைப்பணியாளர்கள் குறைந்த ஊதியத்தில் சலுகைகள் எதுவுமில்லாமல் எதிர்காலம்
பற்றிய உத்திரவாதமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். 9/11- தாக்குதலுக்கு பின்னர் சர்வதேச அளவிலான
மாணவர்கள் அமெரிக்காவிற்கு வந்து படிப்பதில் புதிய தடைக்கற்களை தாண்டிவர வேண்டியிருக்கிறது.
இந்தப் பிரச்சனைகளுக்கு ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்கள் தகுந்த
தீர்வுகளை தருவதற்கு தவறிவிட்டனர் என்பது மட்டுமல்ல, இந்த பிரச்சனைகள் நீடிப்பதற்கு அரசியல் அடிப்படையில்
அவை பொறுப்பாகும். Champaign-லும்,
Urbana-விலும் மேற்கொள்ளப்பட்ட
SEP பிரச்சாரத்தின்
வெற்றி எடுத்துக்காட்டுவது என்னவென்றால், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இவர்களைப்பற்றி
ஒரே முடிவிற்கு வரத்தொடங்கி இருக்கிறார்கள் மற்றும் மாற்றுக் கட்சியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
என்பதுதான்.
Top of page |