:
வட அமெரிக்கா
US: SEP files for Colorado ballot status
அமெரிக்கா: கொலரடோவில்
SEP
வேட்பு தகுதி கோரும் மனுத்தாக்கல்
By Tim Tower
30 June 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
கொலரடோவில் அமெரிக்க ஜனாதிபதி துணை ஜனாதிபதி பதவிகளுக்கு வேட்பு தனுத்தாக்கல்
செய்வதற்கான தகுதியை வழங்கவகை செய்யும் பிரம்மாண வாக்கு மூலங்களையும் கையெழுத்துகளையும் சோசலிச
சமத்துவக் கட்சி ஆதரவாளர்கள் ஜூன் 21 திங்களன்று தாக்கல் செய்தனர். ஜூலை 2 கடைசி தேதிக்கு முன்னர்,
ஒன்பது தேர்ந்தெடுப்பவர்களும் (electors)
நான்கு மாற்றாளர்களும் (alternates)
மனுத்தாக்கல் செய்தனர், பில்வான்
ஓகென் மற்றும் ஜிம் லோரன்ஸ் இருவரும் மாநில வாக்குச்சீட்டில்
இடம்பெறுவதை உறுதிசெய்வதற்காக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜூலை மாதத்தில் முதல் இரண்டு
வாரங்களில் வேட்பாளர்கள் எந்த வரிசையில் வாக்குச்சீட்டில் இடம்பெற வேண்டுமென்று குழுக்கள் முறையில் முடிவு செய்யப்படும்
பூர்த்தி செய்யப்பட்ட வாக்குச் சீட்டு செப்படம்பர் 8-ல் சான்றளிக்கப்படும்.
இந்த தேர்ந்தெடுப்பவர்களில் பலர்
SEP க்கு புதியவர்கள்,
எனவே அவர்கள் ஆர்வத்துடன் முன்வந்திருப்பது இரு-கட்சி முறையின் மீது வளர்ந்துவரும் வெறுப்புணர்வையும், ஏகாதிபத்திய
போர் மற்றும் சமூக பிற்போக்குத்தனத்திற்கு எதிர்ப்பு எழுவதையும் இது காட்டுகிறது.
இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவுதரவும் நிதியளிக்கவும், முன்வந்து உலக
சோசலிச வலைத் தளத்திற்கு ஏராளமான கடிதங்கள் எழுதிய வாக்காளர்களில் இருந்து ஒரு சிலர்
மனுகொடுப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Boulder பகுதியில் வேலையில்லாதிருக்கும் ஒரு உயர்நிலைப்பள்ளி
ஆசிரியர், ''ஒரு உலகக் கட்சி என்ற முறையில், SEP
உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களின் நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற கட்சி என்பது தெளிவாகத் தெரிகிறது,
அப்படியிருக்கும்போது, அமெரிக்கா மேலும், மேலும் உலகில் மேலாதிக்கம் செலுத்தி உலகையே ஆட்சி செய்ய
விரும்புகிறது என்ற உண்மை, கருத்தை பிரதிநிதித்துவம் செய்யாமல் எந்த அரசாங்கமும் இருக்க முடியாது என்ற
கருத்தை அது குறிப்பால் உண்ர்த்துகிறது'' என்று குறிப்பிட்டார்.
கூர்மையான நெருக்கடியுள்ள இந்த மாநிலத்தில் ஏற்புடைய வேலை என்பது கிடையாது
என்று அவர் குறிப்பிட்டார். ஏப்ரலில், 6,000 கொலோரடியன் வேலையிழந்திருக்கிறார்கள். இவர்களையும்
சேர்த்து மாநிலத்தில் வேலையில்லாதிருப்போர் 127,200 பேர் உள்ளனர். நாடு முழுவதிலும்
வேலையில்லாதிருப்போர் 2,377,300, இது வேலையில்லாத் திண்டாட்ட அளவை 5.1 சதவீத அளவிற்கு அதாவது
20-ல் 1 சதவீதத்திற்கு வேலையில்லை என்ற நிலையில் உயர்ந்துள்ளது.
Denver- ல் பல வாக்களர்கள்
ஆதரவைப்பெற்ற பின்னர் SEP
ஆதரவாளர்கள் Boulder
நகருக்கு சென்றனர், அது கொலரடோ பல்கலைக்கழகத்தால் ஆதிக்கம் செய்யப்படுகிறது. நகரின்
மையப்பகுதியிலுள்ள Pearl Street Mall-
ல் தேர்தல் பிரச்சார வெளியீடுகளை விநியோகித்த பின்னர் முக்கியமான ஆதரவாளர்களான, பட்டதாரி
மாணவர்கள், ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர், ஒரு கவிஞர், ஒரு இசையமைப்பாளர், ஒரு கட்டுமானத்
தொழிலாளி ஆகியோர் பிரச்சார இயக்கமேடையை சுற்றி நின்று ஈராக் போரை எதிர்ப்பதற்கான சோசலிச
மூலோபாயம் பற்றி கலைந்துரையாடினர். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோன் கெர்ரி போருக்கு ஆதரவு
தருவது பற்றியும் புஷ் நிர்வாகத்தின் உள்நாட்டு வேலைதிட்டங்களை ஆதரிப்பதையும் குவிமையப்படுத்தியும் இருகட்சி
முறைக்கு சோசலிச மாற்றீடு அவசியம் குறித்தும் கலைந்துரையாடப்பட்டது.
நான்காண்டுகளுக்கு முன்னர்
Denver பகுதியில் பசுமை கட்சிக்காரர்கள் வேட்புமனு தாக்கல்
செய்வதற்கான மாநாட்டை நடத்தியபோது அதற்கு தாம் ஆதரவு தந்ததாக ஒரு வாக்காளர் குறிப்பிட்டார்.
முதலாளித்துவத்திற்கு எதிராக அக்கட்சி அடிமட்டத்தில் பரந்த ஒரு இயக்கத்தை உருவாக்கும் என்று தான்
நம்பியதாக குறிப்பிட்டார். அதற்குப் பின்னர், பசுமை கட்சிக்காரர்கள் மேற்கொண்டுவரும் சந்தர்ப்பவாதப்
போக்கு குறித்தும் இருகட்சி முறைக்கு உள்ளே அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி குறித்தும் வெறுப்படைந்ததாக அவர்
குறிப்பிட்டார்.
கொலரடோவில், குடியரசுக்கட்சி கவர்னரின் பழைமைவாத மற்றும்
பிற்போக்குத்தனமான கொள்கைகள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவர் புஷ் நிர்வாகத்தைப் பின்பற்றி
பணக்காரர்களுக்கு பெருமளவில் வரிகளை குறைக்க வாதிட்டு வந்துள்ளார், அதே நேரத்தில் சமூக சேவைகள்
மற்றும் கல்விக்கான செலவினங்களை அடிமட்டத்தில் குறைத்திருக்கிறார். இந்த மாநில வரலாற்றிலேயே இல்லாத
அளவிற்கு கவர்னர் மிகப்பெருமளவிற்கு வெட்டுக்களை வரிவிதிப்பில் கொண்டு வந்திருக்கிறார், கவர்னர்
Bill Owens கொண்டுவந்துள்ள வரிவெட்டுக்களால் 1 பில்லியன்
டாலர் விற்பனை, தனிப்பட்ட வருமானம், மூலதன இலாப வரி ஆகியவற்றில் வெட்டுக்கள் உயர்த்தி, மாநில
வேலைத்திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதால் பெரிய பணக்காரர்களின் பைகள் நிரம்பின.
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் மாநில கல்விக்கான
ஒதுக்கீட்டை தனிமனிதர் வருமான வரியோடு ஒப்புநோக்கி ஆராய்ந்துள்ளது. 2000-2001 ல் கொலரடோ,
K 12 வருவாயில் 49-வது இடத்திலும்
K-12-
செலவினங்களில் 48-வது இடத்திலும் உள்ளது. தனிப்பட்ட வருமான கணக்கை தவிர்த்து விட்டுப்பார்த்தால்
கொலரடோ ஒரு மாணவருக்கு வருவாய்க்கணக்கில் 7,366-டாலர்கள, செலவு கணக்கில் 6,515- டாலர்கள்
என்று 36-மற்றும் 33 வது வரிசையில் உள்ளது.
மாநிலத்தின் பள்ளிகளில் நிலவுகின்ற நெருக்கடியை எடுத்துக்காட்டுகின்ற வகையில்
''2003 தர மதிப்பீடுகள்'' கொலரடோவிற்கு ''C'
தரத்தை தந்திருக்கிறது. கல்விக்கான நிதிவசதி ஆதாரங்களை
கொண்டு கணக்கிடும்போது 50- மாகாணங்களில் 41-வது இடத்தில் உள்ளது. மேலும் அமெரிக்க கல்வித்துறை
வெளியிட்டுள்ள செலவின வரிசையில் 1999- 2000- ம் ஆண்டில் கல்விக்கு செலவிட்ட வரிசையில்
Colorado-
46-வது இடத்தில் உள்ளது. கல்வி தொடர்பான செலவினங்களில் இந்த மாநிலம் தனது வருவாயில் 57.9-
சதவீதத்தை கல்விக்காக செலவிட்டு வருகிறது. இதில் தேசிய சராசரி 61.7- சதவீதமாகும்.
வாஷிங்டனில் உள்ள இரண்டு கட்சிகளையும் போல், மாநில நிர்வாகம் பள்ளிகளில்
ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஆசிரியர்களும் பள்ளி ஊழியர்களும்தான் காரணம் என்று பழி போடுகிறது. இவர்கள் தங்களது
வாழ்க்கைத்தரம் மோசமடைந்து வருவதற்கு ஒவ்வோரு நாளும் போராடி வருகின்றனர். கவர்னர்
Owens கல்வியில்
கடமை உணர்வை கணக்கிடும் முறையை புகுத்தினார்--- ஆன்லைனில் பள்ளி அறிக்கை கார்டுகளை பதிவு செய்ய திட்டமிட்டிருக்கிறார்----
இந்த கணக்கெடுப்புத் திட்டம் பிற்போக்குத்தனமான ஹெரிடேஜ் பவுண்டேஷன் மற்றும் கல்வி செயலாளர்
Rod Paige ஆகியோர்
பாரட்டுக்களை பெற்றது, ''நாடே பொறாமைப்படுகிற அளவிற்கு இந்த திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக''
Rod Paige
கூறியுள்ளார்.
இந்த மாதம், அமெரிக்க குடும்பங்கள், ''மூன்றில் ஒன்று:
''முதியவர்களுக்கான சுகாதார காப்பீடு தொடர்பாக'' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டன, அதில் வெளியிடப்பட்டுள்ள
புள்ளிவிவரத்தின் படி மற்ற மாநிலங்களை விட கொலரடோ சிறப்பாக செயல்படவில்லை. 65- வயதிற்கு குறைந்தவர்களில்
மூன்று பேரில் ஒருவர் இரண்டாண்டுகள் வரை காப்பீடு எதுவும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள் காப்பீடு செய்து
கொள்ளாத 1.3 மில்லியன் கொலரடோ-
மாகாண மக்களில் மூன்றில் இரண்டு பேர் (66 சதவீதம் பேர்) 2002 மற்றும் 2003ம் ஆண்டில் 6- மாதங்கள்
அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு காப்பீடு எதுவும் இல்லாமல் விடப்பட்டிருக்கின்றனர். 65- வயதிற்கு
குறைந்த மாகாண மக்கள் தொகை 4,078,000- இதில் மருத்துவ காப்பீடு இல்லாதவர்கள் 1,309,000.
இப்படி பெருமளவில் காப்பீடு இல்லாத 84.1- சதவீதம் பேர் ஒன்றில் பணியாற்றுபவர்கள்
அல்லது தொழிலாளர்களது குடும்பங்களைச்சார்ந்தவர்கள்.
Hispanic,
ஆபிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் இதர இன சிறுபான்மையினர்தான், வெள்ளையர்களைவிட, ஹிஸ்பானிக்கர் அல்லாதவர்களை
விட நலக் காப்பீடு இல்லாமல் அதிகமாக இருப்பர். ஆனால் கொலரடோவில் 683,000- வெள்ளையர்கள் மற்றும்
ஹிஸ்பானிகர் அல்லாதவர்களும் காப்பீடு இல்லாமல் இருக்கின்றனர். அந்த மாநிலத்தில் 56.1- சதவீத ஹிஸ்பானிக்கர்
36.5-சதவீத ஆபிரிக்க அமெரிக்கர்கள் 38.8- சதவீத ''இதர'' இனச்சிறுபான்மையினர் காப்பீடு எதுவும்
இல்லாத நிலையில் உள்ளனர். இவர்களோடு ஒப்புநோக்கும் போது 24.1 சதவீத வெள்ளையர்களும் ஹிஸ்பானிக்கர்
அல்லாதவர்களும் காப்பீடு இல்லாமல் உள்ளனர்.
கொலரடோ ஸ்பிரிங்ஸ் மற்றும்
Ouray மலைப்பகுதிகளிலிருந்து தென்மேற்குப் பகுதி வரையுள்ள
ஆதவராளர்களும், தொண்டர்களும் WSWS
ஐ தொடர்பு கொண்டு வரும் மாதங்களில் டென்வர் பகுதிகளிலும் மற்றும் மாநிலம் முழுவதிலும்
SEP நடத்தும்
தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவ முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Top of page |