:
வட அமெரிக்கா :
கனடா
Canadian elections: candidates' debates filled with by posturing and lies
கனேடிய தேர்தல்: வேட்பாளர்கள் விவாதங்களில் பொய்கள் நிறைந்த மனநிலை
By Keith Jones
18 June 2004
Back to screen version
கனடா தேர்தல்களில் தலைவர்களது விவாதங்கள் கெட்ட நாடகங்களைப்போல் அமைந்தனவே
தவிர கடுமையான அரசியல் கருத்து பரிமாற்றம் நடைபெறவில்லை. தலைவர்கள் பெரும்பாலும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட
விவாதங்களை நாடக வசனம்போல் பேசினர். பெரு நிறுவன ஊடகங்களே நீதிபதிகளைப்போல் அமர்ந்து யார் விவாதங்களில்
''வெற்றி'' பெற்றார்கள் என்று அறிவித்தன. திங்களன்று மாலை பிரெஞ்சு மொழியிலும், செவ்வாயன்று ஆங்கிலத்திலும்,
நடைபெற்ற கலந்துரையாடல்கள் தயாரிக்கப்பட்ட வடிவத்திலேயே அமைந்திருந்தன. கருத்துக்கணிப்புகள் தேர்தல் ஆலோசகர்களை
கலந்தாலோசித்து, தாராளவாத கட்சி பிரதமர் போல் மார்டின் பழமைவாத தலைவர் ஸ்டீபன் ஹார்பர் (Stephen
Harper) சமூக-ஜனநாயகத்தின் புதிய ஜனநாயகக்கட்சியின்
(NDP) Jack Layton,
சுதந்திர கியூபெக் கூட்டின்
தலைவர்
Gilles Duceppe, ஆகியோர் வாக்காளர்களை நோக்கி உரத்த
குரலில் பத்திரிகையாளர் காட்சிக் கூடத்தை குறிவைத்து உரையாற்றினார். பல்வேறு வகைப்பட்ட அரைகுறை உண்மைகள்
அப்பட்டமான பொய்கள், மற்றும் முக்கியமான பிரச்சனைகளை தவிர்க்கின்ற முறைகள் ஆகியவற்றால் தங்களது உண்மையான
நோக்கங்களை மூடிமறைத்தனர், அவர்கள் எத்தகைய நலன்களுக்காக பணியாற்றுகின்றனர் என்பதையும் மறைத்துவிட்டனர்.
தொடர்ந்து மூன்று கூட்டாட்சி தேர்தலில் தாராளவாதிகள் நாடாளுமன்றத்தில்
பெரும்பான்மை இடங்களை பிடித்துக்கொண்டன, தேர்தல் பிரச்சாரங்களில் தனது வலதுசாரி எதிரிகளை கண்டித்தனர். இது
அரசாங்கத்தின் பெருமளவிலான செலவினங்களையும் வரிகளையும் வெட்டியது----பெரிய மந்தநிலை காலத்திற்கு பின்னர்
மிகவும் வலதுசாரி சமூக- பொருளாதார செயற்திட்டங்களை மேற்கொண்டனர். சுருக்கமாக சொல்வதென்றால் வலதுசாரிக்கொள்கைகளை
இந்தத்தேர்தலிலும் வெற்றிபெறுவதற்காக போல் மார்டின் கனடாவில் நிதி வசதி மறுக்கப்பட்ட மிகவும் ஆபத்தான
நிலைக்கு சென்று கொண்டிருக்கிற பொது சுகாதாரத்திட்டத்தை
(Medicare) நிலைநாட்டப்போவதாக பாவனைக்காட்டி வருகிறார்.
மீண்டும் தேர்ந்தெடுக்கதப்படும் தனது தாராளவாத அரசாங்கம் ஒரு தலைமுறைக்கு மருத்துவ சேவையை நிர்ணயிக்கப்போவதாக
குறிப்பிட்டார். இன்றைய தினம் கனடாவின் மருத்துவ சேவைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மார்டினும் முக்கிய காரணமாக
இருந்தவர், அவர் 1993 முதல் 2002 வரை நிதியமைச்சராக இருந்த போது மத்திய அரசாங்கத்திலிருந்து மாகாணங்களுக்கு
மாற்றித்தர வேண்டிய பில்லியன் கணக்கான டொலர்கள் நிது ஒதுக்கீட்டை வெட்டிவிட்ட காரணத்தினால் மாநிலங்களில்
சுகாதார சேவை, நலன்புரி, மேல்நிலைப் பள்ளிக்கு பிந்திய சுகாதாரக்கல்வி ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன்
விளைவாக உயிர்காப்பு சிகிச்சைகளை பெறுவோரும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.
இந்தத்தேர்தல் பிரச்சாரத்திற் சுகாதார சேவையை மையமான அம்சமாக எடுத்துக்கொள்வதற்கு பின்னர் மார்டினும்
தாராளவாதிகளும் மாநில அரசுகள், மருத்தவச்சேவைகளில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவதை ஊக்குவித்து வந்தன.
''புதிய'' பழமைவாத கட்சியை மக்களிடம் அறிமுகப்படுத்தி ஆதரவைத்திரட்டுவதற்காக
நவீன-பழமைவாத கட்சி தத்துவவாதியான ஹார்ப்பர் மிகத்தீவிரமாக முயன்றுவருகிறார். இந்தக்கட்சி மேற்கத்தியதளத்தைக்
கொண்ட வலதுசாரி மக்கள் கனடா கூட்டணி மற்றும் முற்போக்கு பழமைவாதிகள் இணைந்த விளைபயனாகும்-தாராளவாதத்திற்கு
மாற்றான ''நவீன, மிதவாத,'' அமைப்பாகும். ஐந்தாண்டுகளுக்கு மேலாக 37 பில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட
வரிவெட்டுக்களை கொண்டுவரப்போவதாக அறிவித்தும், ''மத்தியதர வர்க்கத்திற்கான வரி வெட்டுக்கள் பொது சேவைகளில்
எந்தவகையான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அறிவிக்கப்பட்டது. அதே போன்று கலந்துரையாடல்களில் டோரி
கட்சிக்காரர்களின் குழந்தை பராமரிப்பு கொள்கைபற்றி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த ஹார்ப்பர் தனது கட்சி பிறக்கின்ற
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வருமானவரி விலக்கு, ''குடும்பத்திற்கு ஆதரவு'' தர விரும்புவதாகக் குறிப்பிட்டார். பணக்காரர்கள்
உட்பட வரி செலுத்துவோர் மட்டுமே இந்த விதிவிலக்கினால் பயனடைய முடியும் பல ஏழை உழைக்கும்மக்கள் வரிசெலுத்தும்
வல்லமை இல்லாதவர்கள் என்பதை குறிப்பிட அவர் தவறிவிட்டார்.
தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும் ஹார்ப்பர் பழமைவாதிகளின் செயற்திட்டங்களையும்,
நோக்கங்களையும் விவாதங்களில் தவிர்த்தே வந்தார். அதற்கு பதிலாக மத்திய அரசாங்கம் பல மில்லியன் டொலர்களை
லிபரல்களுக்கு நண்பர்களான விளம்பர ஏஜென்ஸிகளுக்கு வேலை எதுவுமில்லாமல், அல்லது சொற்ப பணிக்காக ஒதுக்கீடு செய்த
ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக திரும்பத்திரும்ப கூறிவந்தார்.
வரிகளை வெட்டிவிட்டு பெரும் எடுப்பில் இராணுவ ஒதுக்கீடுகளை அதிகரிக்கப்
போவதாகவும், அதற்காக அரசாங்க செலவினங்களில் கணிசமான வெட்டு இருக்காது என்றும் பழமைவாதிகள் கூறிவருவது
தொடர்பாக கனடாவின் பெரிய நிறுவனங்களின் செல்வந்த தட்டினர் விமர்சனம் தெரிவித்தனர். ஹார்ப்பர் தலைமையிலான
அரசாங்கம் புஷ் நிர்வாகத்தை கடைபிடித்து மத்திய அரசாங்கத்தை பொருளாதார நெருக்கடியில் தள்ளிவிடுமென்று அச்சம்
தெரிவித்தனர். இந்தக் கவலைக்கு வடிவம் கொடுக்கிற வகையில் மார்டின் ஹார்ப்பர் ''நாட்டின் வருமானத்தில்
பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக'' குற்றம் சாட்டினார். அதற்கு ஹார்ப்பர் பதிலளித்தபோது: ''உங்ளது
சாதனை பில்லியன் கணக்கான டொலர்களை காணாமல் போய்விட்ட கதையாக இருக்கும்போது என்னுடைய
உறுதிமொழிகளை பற்றி நீங்கள் எப்படி பேசலாம்? உத்திரவாதமளிக்கும் பணம் எங்கே போயிற்று?'' என்று கேட்டார்.
அதற்குப்பின்னர் மார்டின், ஹார்ப்பருக்கு சவால்விட்டார், ஹார்ப்பரின் கருச்சிதைவு மற்றும்
ஓரின
ஜோடிகளின் உரிமைபற்றிய கருத்துக்களை உள்ளடக்கியது அந்த சவால் இதற்கு பதிலளித்த ஹார்ப்பர் ''இது பயத்தினால்
உங்களது வெட்ககேடான மோசடிகள் முறைகேடுகளை மூடிமறைப்பதற்கான தவறான கூற்றுக்களால் எழுந்த பிரச்சாரம்''
என்று குறிப்பிட்டார்.
என்றாலும், ஹார்ப்பர் பிரதமரின் தாக்குதல்களில் சிலவற்றை தவிர்த்தார், மார்டின்
உட்பட பல தாராளவாத கட்சிக்காரர்களின் கருத்துக்களை சுட்டிக்காட்டினார். பழமைவாதிகள் பெண்களது
தேர்ந்தெடுக்கும் உரிமையை தாக்குவதற்கு திட்டமிட்டு வருவதாக குற்றம்சாட்டியபோது ஹார்ப்பர் கனடாவின் அரசியல்
சட்டத்தில் இடம்பெற்றுள்ள ''அது எப்படியிருந்தாலும்'' (Notwithstarding
Clause) என்ற பிரிவை பயன்படுத்தி ஓரின
ஜோடிகளின் உரிமையை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை
ஹார்ப்பர், இரத்து செய்யத்தயாரா என்று பிரதமர் கேட்டார். அதற்கு பதிலளித்த ஹார்ப்பர் மார்டினும் இதர பல
தாராளவாத பாராளுமன்ற உறுப்பினர்களும் ஓரின ஜோடிகளின் திருமணத்தை ஆதரிப்பதாக சுட்டிக்காட்டினார். மார்டின்
கூட ஓரின திருமணம் தொடர்பாக அரசியல் சட்டத்தின், "அப்படியிருந்தாலும் பிரிவை" ("notwithstanding
clause) பயன்படுத்துவது குறித்து உரக்க சிந்தித்துவந்ததாக
குறிப்பிட்டார்.
இந்த வகையில் ஈராக் தொடர்பாக மார்டினுக்கும், ஹார்ப்பருக்கும் இடையில் நடைபெற்ற
கருத்து பரிமாற்றங்கள் சிறப்புக்குரியவை.
ஈராக் மீது அமெரிக்க சட்டவிரோதமான போரை ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு
முன்னர் 2003 மார்ச்சில் அன்றைய தாராளவாத அரசாங்க பிரதமரான
Jean Chrétien
தலைமையிலான கனடா ஆயுதப்படைகள் (CAF)
ஈராக்போரில் பங்கெடுத்துக் கொள்வதைத்தடுத்து நிறுத்தியது.
கட்சிக்குள் தலைமை பதவியை பிடிப்பதற்காக நடைபெற்ற போராட்டத்தில் மார்டின்
அதற்கு முன்னர் மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அமெரிக்கா ஐக்கிய நாடு பாதுகாப்பு சபையின் ஆதரவைப்
பெறத்தவறிவிட்டதால் படையெடுப்பில் பங்கெடுத்துக்கொள்வதில்லை என்ற கனடா அரசாங்கத்தின் முடிவை பகிரங்கமாக
மார்டின் ஆதரித்தார். என்றாலும் தாராளவாத கட்சி தலைமை பதவிக்கான பிரச்சாரத்திலும் மார்டின் பிரதமராக
பதவியேற்ற முதல் வாரங்களிலேயே புஷ் நிர்வாகத்துடன் சமரசம் செய்து கொள்வதை தலைமை முன்னுரிமை
நடவடிக்கையாக எடுத்துக்கொண்டார். போர் தொடர்பாக
Chretien மேற்கொண்ட முடிவிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக்
கொண்டார். எனவே போரில் கனடா பங்கெடுத்துக்கொள்ள வேண்டுமென்று ஆவேசமாக குரல் கொடுத்த
தாராளவாதியான David Pratt-ஐ
பாதுகாப்பு அமைச்சராக நியமித்தார். இராணுவத்திற்கு கணிசமான அளவு நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்தார்
மற்றும் எதிர்காலத்தில் பல வெளிநாடுகளில் ஐ.நா அங்கீகாரம் இல்லாமலேயே கனடா இராணுவம் தலையிடுமென்று
குறிப்பிட்டார்.
ஹார்ப்பர் தனது பங்கிற்கு தாராளவாத அரசாங்கத்தை ஆவேசமாக கண்டித்தார், தனது
''மிக நெருக்கமான'' நண்பர்களோடு சேர்ந்திருக்காததை கண்டித்தார். வாஷிங்டனுக்கு எரிச்சலூட்டி கனடாவின்
நலன்களுக்கு Chrétien
ஆபத்தை உண்டாக்கி விட்டதாக குறிப்பிட்டார். ஆனால் நடப்பு தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் விரோத போருக்கும்,
புஷ் நிர்வாகத்திற்கும் மக்களிடையே எதிர்ப்பு நிலவுவதை கருத்தில் கொண்டு ஹார்ப்பர் இந்தப்போரில் கனடா
பங்கெடுத்துக் கொள்வதை தான் ஆதரிக்கவில்லை என்று திரும்பத்திரும்ப கூறினார்.
பொது மக்களது எதிர்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் நம்பிக்கையிலும் ஹார்ப்பரின்
நிலைப்பாட்டில் காணப்படுகிற முரண்பாடுகளை சுட்டிக்காட்டுகின்ற வகையிலும் செவ்வாயன்று நடைபெற்ற விவாதத்தில்
மார்டின் ஹார்ப்பர் முன்னாள் கனடா, கூட்டணி தலைவர்
Stockwell Day-யோடு சேர்ந்து 2003 ஏப்ரலில் எழுதி
வோல்ஸ் ஸ்ரீட் ஜோர்னலில் பிரசுரித்திருந்த கட்டுரையை மேற்கோள் காட்டினார். ஈராக்கை முறியடிப்பதில்
கனடா துருப்புக்கள் பங்கெடுத்துக் கொள்ள தவறியதற்காக
Chrétien அரசாங்கத்தை கண்டிக்கும் வகையில் அந்தக்கட்டுரை
அமைந்திருந்தது.
தனது சொந்த வார்த்தைகளையே சாட்சியமாக காட்டியிருப்பதை மறுக்க முடியாத அவர்,
ஈராக்கிற்கு கனடா துருப்புக்களை அனுப்புவதை தான் ஆதரித்ததாக ஒப்புக்கொண்டார். 30 கனடா, இராணுவ
அதிகாரிகள் அமெரிக்க இராணுவப் பிரிவுகளில் சேர்ந் உண்மையிலேயே படையெடுப்பில் பங்கெடுத்துக் கொண்டன என்பதைக்
குறிப்பிட்டார்.
ஹார்ப்பர் மேலும் இந்த பிரச்சனையை வலியுறுத்தவில்லை, என்றாலும் உண்மை
என்னவென்றால் தாராளவாத அரசாங்கம் ஈராக் போரில் முற்றிலும் மோசடியான இரட்டைவேடம் புரிந்திருக்கிறது.
Chrétien
அரசாங்கம் புஷ் நிர்வாகத்திற்கு, பொது மக்களது எதிர்ப்பிற்கு சமாதானம் கூற அவசியமானதற்கு மேலாக
போருக்கெதிராக எந்த அறிக்கையையும் வெளியிடப்போவதில்லை என்ற ரகசிய உறுதிமொழி வழங்கியது. மேலும் கனடா,
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நியமித்த பொம்மை ஆட்சிக்கு ஆதரவு காட்டுவதற்காகவும், இராணுவ நடவடிக்கைகளில்
பங்கெடுத்துக் கொள்வதற்காகவும் கனடா தனது துருப்புக்களையும் கடற்படை பிரிவு ஒன்றையும் பாரசீக வளைகுடாவிற்கு
அனுப்பியது. தற்போது பாக்தாத்தில் பன்னாட்டு படையின் துணைத் தளபதியாக கனடிய இராணுவத்தின் மேஜர் ஜெனரல்
''இணைந்துள்ளார்''.
Bloc Québécois மற்றும் புதிய
ஜனநாயகக்கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே தாராளவாதிகளின் வலது-சாரி சமூக- பொருளாதாரக் கொள்கைகளுக்கு
பொது மக்களிடையே நிலவுகின்ற எதிர்ப்புணர்வை திட்டமிட்டு பயன்படுத்திக்கொண்டன. புதிய ஜனநாயகக்கட்சி
தலைவர்
Layton கருத்துத் தெரிவிக்கும்போது பொதுசுகாதார நெருக்கடிக்கு
மார்டின் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டார். தாராளவாதிகள் மருத்துவ சேவைக்கு கணிசமான அளவு
நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதிமொழி தந்திருப்பது 1993 ஆம் ஆண்டு அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையான ரெட்
புக்கிலிருந்து எடுக்கப்பட்டது. Bloc Québécois
கட்சியை சேர்ந்த Duceppe
மார்டின் மீதும், தாராளவாதிகள் மீதும் தனது குற்றச்சாட்டை தெரிவிக்கும்போது அவர்களது அரசாங்கம் வரவுசெலவு
திட்ட பற்றாக்குறையை நீக்குவதற்காக ''வேலையில்லாதவர்கள் முதுகை முறிக்கின்ற வகையில்'' அவர்களது வேலைவாய்ப்பு
காப்பீட்டு நிதியை காலிசெய்து விட்டார்கள் அதன் மூலம் வேலையற்றவர்களுக்கு கிடைக்கின்ற பயன்களுக்கான தகுதி கடுமையாக
குறைக்கப்பட்டுவிட்டது.
கூற அவசியமில்லையென்று, புதிய ஜனநாயகக்கட்சி மற்றும்
Bloc Québécois
தலைவர்கள் தங்களது சொந்தக்கட்சிகள் பொது மற்றும் சமூக சேவைகளை சிதைத்ததில் உடந்தையாக செயல்பட்டது
பற்றி மூச்சுவிடவில்லை.
புதிய ஜனநாயகக்கட்சி மாகாண அரசுகள் குறிப்பாக ஒன்டாரியோவிலும், பிரிட்டிஷ்
கொலம்பியாவிலும் பெருமளவு அரசாங்க செலவினங்களை குறைத்தன, தொழிற்சங்கங்கள் மீது தாக்குதல்களை
தொடுத்தன, இதன் மூலம் கனடாவின் வரலாற்றிலேயே இரண்டும் மிகவும் வலதுசாரி அரசாங்கங்கள் உருவாவதற்கு
வழியமைத்துக் கொடுத்துவிட்டன--- ஹாரிஸ் டோரி அரசாங்கம் மற்றும் தற்போது
Gordon Campbell-ன்
BC
தாராளவாத அரசாங்கம் மத்திய தாராளவாதிகளைப் போன்று
Quebec அரசாங்கத்திற்கு
Bloc Québécois வின் சகோதரக்கட்சியான
Parti Québécois, 1990களின் கடைசியில்தான் முதல் முன்னுரிமை
நடவடிக்கையாக பற்றாக்குறையை நீக்கியது, சுகாதார சேவைகளில், கல்வியில், சமூக சேவைகளில் பெருமளவிற்கு
வெட்டுக்களை கொண்டுவந்தது மற்றும் செவிலியர்கள் (மருத்துவதாதிமார்) கிளர்ச்சி செய்தபோது அவர்களை எதிர்ப்பை
முறியடித்து மீண்டும் வேலைக்கு திரும்புமாறு செய்வதற்காக கொடூரமான தொழிலாளர் விரோத சட்டங்களை
பயன்படுத்தியது.
அதே போன்று, புதிய ஜனநாயகக்கட்சி மற்றும்
Bloc Québécois
ஆகிய இரண்டு கட்சிகளும் ஈராக் போருக்கெதிராக மக்களது கருத்தை பிரதிபலிக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்றன.
ஆனால் தசாப்தங்களாக ஈராக் மீது அமெரிக்க கட்டளையால் கொண்டுவரப்பட்ட பொருளாதாரத் தடை
நடவடிக்கைகளை இந்த இரண்டு கட்சிகளுமே ஆதரித்து நின்றன. இந்தத்தடைகள் ஈராக் மக்கள் பெருமளவில் மடிவதற்கு
காரணமாக அமைந்தன மற்றும் சென்ற ஆண்டு போர் நடப்பதற்கு வழியமைத்துக் கொடுக்க உதவின.
தாராளவாதிகளுக்கும், பழமைவாதிகளுக்கும் சாராம்சத்தில் ஒரே நிலைப்பாட்டை
கொண்டுள்ளனர் என்பதை Layton
அடிக்கடி சரியாகவே சுட்டிக்காட்டுவார். ஆனால் இதில் இரகசியம் எதுவுமில்லை, தேர்தல் முடிந்ததும் புதிய
ஜனநாயகக்கட்சி அரசாங்கம் எது என்று முடிவு செய்கின்ற வலிமைபெற்றதாக விளங்குமென்று கணிப்பிட்டு மார்டின்
தலைமையில் தாராளவாத அரசாங்கம் பதவியேற்பதற்கு பேரம் பேசலாம் என்று அது திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது.
Bloc Québécois, ஒரு பழமைவாத
அரசாங்கத்தை உருவாக்கிவிட முடியும் நிலைக்கு தான் வந்துவிட முடியுமென்று நம்புகிறது. ஏற்கெனவே
Bloc Québécois
மற்றும் பழமைவாத தேர்தல் பிரச்சாரம் இணையாக திட்டமிடப்பட்டு இரண்டு கட்சிகளுமே தங்களது தாக்குதல் கணைகளை
விளம்பர மோசடி மீது குவிமையப்படுத்தியிருந்தன. Quebec
தேசியவாத Bloc Québécois
இன் பழமைவாதிகளும், தாராளவாதிகள் மீது பொதுவாக விரோதம் பாராட்டி
வருகின்றனர். இரண்டு கட்சிகளுமே கனடா கூட்டாட்சி மாநிலங்களுக்கு கூடுதலாக அதிகாரங்களை வழங்குவதற்கு தீவிர
அதிகாரப்பரவலை வலியுறுத்தி வருகின்றன.
Bloc Québécois, "Quebec
நலன்களை'' பாதுகாத்து நிற்பதாக கூறிக்கொள்கிறது. ஆனால்
Quebec கனடாவின்
இதர இடங்களைப்போல் வர்க்க அடிப்படையில் சமூக துருவமுனைப்புகளை சந்தித்தே வருகிறது. கடந்த நான்கு
தசாப்தங்களாக Quebec
மாநிலத்தின் சுதந்திரவாதிகள் (indépendantistes)
இனர் குரல் கொடுப்பதாக சொல்லிக்கொள்கிற கட்சி
மற்ற கட்சிகளைப்போன்றே முதலாளித்துவ நலன்களுக்கு அடிபணிந்தே செல்கிறது. எப்போதெல்லாம்
Quebec இல்
தொழிலாள வர்க்கத்தினது சவால்களை எதிர்கொள்கிறதோ, அந்த நேரத்திலெல்லாம் மத்திய அரசாங்கத்தின் உள்ள
எதிரிகளுடன் சேர்ந்து கொள்கின்றன. Bloc Québécois
உம், Parti Québécois
உம் ஒரு பிரிவு முதலாளிகள் மற்றும் குட்டி முதலாளித்துவதட்டினருக்காக குரல்
கொடுக்கிறது. அவர்களது நம்பிக்கை ஓட்டாவாவிற்கும் பே ஸ்ரீடிற்கும் செல்லாமல், வாஷிங்டனுக்கும், வோல்ஸ்
ஸ்ரீட்க்கும் நேரடியாகச் சென்று விட முடியுமென்று இவைகள் கருதுகின்றன, அல்லது குறைந்த பட்சம்
Quebec மாகாண
அரசிற்கு அதிக நிதி ஒதுக்கீடையும் அதிகாரங்களையும் சூழ்ச்சி முறையில் பெற்றுத்தர முடியுமென்று கருதுகின்றன.
எனவேதான் ''Quebec
நலன்கள்'' என்ற பெயரால் Bloc Québécois
அடுத்த நாடாளுமன்றத்தில் தனது ஆதரவிற்கு கைமாறாக
Quebec இல் இருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிற விமான மற்றும் ரயில்
தயாரிப்பாளர் Bombardier
இற்கு மானியங்களை வழங்க வேண்டுமென்று மத்திய அரசு
Quebec நீர்-மின்சார
தொழிற்துறைக்கு
மிகுந்த ஊக்குவிப்பாக அமையுமென்று
Quebec ஆளும்
செல்வந்த தட்டினர் நம்புகின்ற Kyoto
உடன்படிக்கைக்கு ஆதரவு தரவேண்டுமென்று நிபந்தனை விதித்திருக்கிறது.
ஆளும் வர்க்கத்திற்குள் நிலவுகின்ற பிளவுகளை எதிரொலிக்கின்ற வகையில் பத்திரிகைகள்
தேர்தல் விவாதங்களை வெளியிடுவதிலும் பிளவுபட்டு நிற்கின்றன. மொன்ரீயலில் இருந்து வெளிவரும்
La Presse
மார்டின் கருத்தை வலியுறுத்தியுள்ளது,
Bloc Québécois
விற்கு வலுவான மக்களது ஆதரவு பழமைவாத அரசிற்கு வழிவகுத்துவிடும், அப்படி கன்சர் வேட்டிவ் அரசு அமையுமானால்
அதை ''Quebec
நலன்களுக்கு'' விரோதமாக அமையும், அரசாங்கத்தில்
Quebec -ஐ சேர்ந்தவர்கள் எவரும் இடம்பெற மாட்டார்கள். அதன்
மூலம் Quebec
தனி நாடாக (indépendantiste)
வேண்டும் என்ற கோரிக்கை ஊக்குவிக்கப்படும். வலதுசாரி நேஷ்னல் போஸ்ட் பத்திரிகை ஆங்கில உரையாடலில்
ஹார்ப்பர் வெற்றி பெற்றுவிட்டதாகவும், பழமைவாத அரசாங்கம் அமைவதற்கு நாடுதழுவிய மிகப்பெரும் நல்லெண்ணம்
நிலவுவதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டது.
பாரம்பரியமாக Bay Street
நிதி நலன்களை எதிரொலிக்கின்ற Globe and Mail
ஆட்சிக்கு வருவதற்கு பழமைவாதிகள் தயாராக இருப்பதுபற்றி கவலை தெரிவித்திருக்கிறது. அவர்களது ''பிளவு'' மனப்பான்மை
கொண்ட சமூக பழமைவாத கருத்துக்கள் பற்றியும், அவர்களது அனுபவம் அற்ற நிலை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறது. ''விவாதங்களில்
உயர்ந்து நிற்க மார்டின் ஏன் தவறிவிட்டார்?'' என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியுள்ளது.
Globe
முந்தைய குற்றச்சாட்டான மார்டின் ''தலைவருக்குரிய'' தகுதியைக்காட்டவில்லை
என்று எழுதியிருக்கிறது. அந்தப் பத்திரிகையின் கருத்து பொது மக்களின் கருத்தையும் மீறி பெரு வர்த்தகர்களுக்கு சாதகமாக
நடந்து கொள்ளவேண்டும் என்பதாகும். இந்த நிகழ்ச்சியில், மார்டின், புஷ்ஷின் ஏவுகணை தற்காப்புத் திட்டத்தில் கனடா,
பங்கெடுத்துக்கொள்ளும் என்று திட்டவட்டமாக அறிவிக்க மறுத்துவிட்டார் என்று
Globe மேற்கோள்காட்டியது.
கடந்த தசாப்தங்களின் தாராளவாத இரண்டு ''மகத்தான'' சாதனைகளான மைய மற்றும் முன்னணி இடத்தை பின்பற்ற
தவறிவிட்டார் என்று Globe
தலையங்கம் குற்றம் சாட்டியுள்ளது:
பற்றாக்குறையை ஒழித்துக்கட்டியது, மற்றும்
Clarity சட்டத்தை
இயற்றியது--- இந்த சட்டம் கனடா, நாடாளுமன்றம்தான் எதிர்காலத்தில் பிரிவினை தொடர்பாக
Quebec மாகாணத்தில்
பொதுவாக்கெடுப்பு நடத்துப்படுமானால் அது சட்டப்பூர்வமானதா என்பதை முடிவு செய்கிற அதிகாரம் கனடா நாடாளுமன்றத்திற்கே
உண்டு என்பதுதான் அந்த Clarity Act.
அவர்களுக்கிடையில் என்ன வேறுபாடுகள் நிலவினாலும், முதலாளித்துவப் பத்திரிகைகள் ஒரு
கருத்தை வலியுறுத்திக் கூறியுள்ளன. அடுத்த அரசாங்கதின் அமைப்பு எப்படியிருந்தாலும் கனடாவின், பெரிய நிறுவன
செல்வந்த தட்டு தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் கூர்மையான தீவிரமாக இருக்க வேண்டுமென்று கோரி வருகிறது. |