World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US plans for a new Iraqi regime in disarray

புதிய ஈராக் ஆட்சிக்கான அமெரிக்கத் திட்டங்களில் குழப்பம்

By Mike Head
26 January 2004

Use this version to print | Send this link by email | Email the author

குடியரசுத் தலைவர் ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் சென்றவாரம் நாட்டுக்கு விடுத்த செய்தியில் அமெரிக்கா தலைமையிலான ஈராக் மீதான ஆக்கிரமிப்புக்கு ''எதிர்ப்பு தோல்வியடையும், ஈராக் மக்கள் சுதந்திரமாக வாழ்வார்கள்..... மாதத்திற்கு மாதம், ஈராக் மக்களே அதிக அளவில் தங்களது சொந்த பாதுகாப்பிற்கும், தங்களது சொந்த எதிர்காலத்திற்கும் உறுதிசெய்து தருகின்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.

உண்மையில் ஈராக் சம்பவங்கள் மிக விரைவாக புஷ் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டையும் மற்றும் செல்வாக்கிழந்த ஈராக்கின் ஆளும் கவுன்சிலை (IGC) மீறி சென்று கொண்டிருக்கின்றன. கடந்த பல நாட்களாக ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகள் மீதும் ஈராக்கிய ஒத்துழைப்பாளர்கள் மீதும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அத்துடன் ஜூலை 1-ந் தேதி ஈராக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தை நிறுவ திட்டமிட்டிருப்பதை நிராகரிக்குமாறு ஷியைட் முல்லாக்களால் புதுப்பிக்கப்பட்ட அழைப்புக்களும் சேர்ந்து கொண்டு வருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை, ஆர்ப்பாட்டங்களை பாக்தாத், பாஸ்ரா, நஜாப், கர்பலாவில் அமெரிக்க திட்டங்களுக்கு எதிராக பத்தாயிரக்கணக்கான ஷியைட் முஸ்லீம்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் கொண்ட ஒருவாரத்திற்குப் பிறகு, மிக மூத்த ஷியைட்டுக்களின் மதகுருவான, அயத்துல்லா அலி அல்-சிஸ்தானி, வாஷிங்டனுடன் சமரச ஒப்பந்தம் ஒன்றை கோடிட்டுக் காட்டினார். பொதுமக்கள் கண்டனங்கள் தெரிவிப்பதை நிறுத்தக்கோரினார், அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பது குறித்து அவர்களது நிலையை தெளிவுபடுத்துவதற்கு ஐ.நா விற்கும் அமெரிக்காவிற்கும் அவகாசம் தரவேண்டும் என்று கோரினார்.

ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னன் ஒர் இடைக்கால அரசாங்கத்திற்கான அமெரிக்க திட்டத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பை சமாளிப்பதில் தலையிட வேண்டுமென்று புஷ் கேட்டுக் கொண்டிருந்தார். இடைக்கால அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பிராந்திய குழுக்கள் மூலம் இடைக்கால அரசாங்க உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உதவி செய்வர். ஐ.நா மற்றும் ஈராக் தொடர்பான நிபுணர்கள் நேரடி தேர்தலுக்கு சாத்தியமில்லை என்று கருதுவார்களானால் அந்தக் கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாக சிஸ்தானியின் பேச்சாளர் தெரிவித்தார்.

அப்படியிருந்தும், உடனடியாக இளம் ஷியைட் மதகுரு மொக்தாதா சதர் (Moqtada Sadr) சிஸ்தானியை முந்திக் கொண்டு, சட்டவிரோதமாக ஈராக்கில் அமெரிக்கப்படைகள் இருப்பதற்கு அங்கீகாரம் தந்த ஐ.நா ''நேர்மைக்குறைவான'', ''அமெரிக்காவிற்கு அடிபணிந்து செயல்படுகின்ற அமைப்பு'' என்று முத்திரை குத்தினார். நஜாப் நகரத்தில் தொழுகைசெய்தவர்களிடம், ''தேர்தல்களை மேற்பார்வையிடுவதில் ஐ.நா பங்கெடுத்துக் கொள்வதை நான் ஏற்க மறுக்கிறேன். ஏனெனில் ஐ.நா நேர்மையான அமைப்பல்ல, அது அமெரிக்காவை பின்பற்றுகிறது,'' என்று சதர் குறிப்பிட்டார்.

அமெரிக்க திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க இந்த வார தொடக்கத்தில், சதர் தனது பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களை நஜாப்பில் மற்றும் அருகாமையில் உள்ள கர்பலா அதே போல் பாக்தாத் நகரங்களில் அணிதிரட்டினார். அவரது ஆதரவின் பிரதான தளம் நகர்ப்புற ஏழை ஷியைட்கள் ஆவர், குறிப்பாக தலைநகரில் உள்ள ஏழை ஷியைட்கள். வடக்கு குர்து மக்கள் வாழ்கின்ற பகுதிக்கும், சன்னி முஸ்லீம்கள் வாழும் மத்திய ஈராக் பகுதிக்கும் தன்னாட்சி உரிமைகள் வழங்க வகை செய்யும் கூட்டாட்சி அமைப்பு முன்மொழிவுகளை அவரைப் பின்பற்றுபவர்களும் கூட கண்டனம் செய்தனர் மற்றும் ''இஸ்லாமிய அரசியல் சட்டம்'' இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதன் விளைவாக, அமெரிக்க ஆலோசனைகளை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என தான் கருதுவதாக அறிவித்துக் கொண்டு, சிஸ்தானி அமெரிக்காவிற்கு தான் விடுத்த கோரிக்கையை திரும்ப பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. ''இங்கு ஐ.நா இருக்கிறதா? இல்லையா என்பதைப் பற்றி கவலையில்லை. சிஸ்தானி தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். சிஸ்தானி தனது அதிருப்தியை வெளிப்படுத்துவாரானால் (தெற்கு ஈராக்) முழுப் பகுதியும் கிளர்ச்சியில் இறங்குவதற்கு தயாராகிவிடும்'' என்று சிஸ்தானியின் பிரதிநிதி ஷேக் அபுமுஸ்தபா தெரிவித்தார்.

இந்த அபிவிருத்திகள் புஷ் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல, சென்ற ஆண்டு ஐ.நா-வின் ஈராக் தலைமை அலுவலகம் பாக்தாத்தில் குண்டுவைத்து தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து ஈராக்கிலிருந்து வெளியேறுமாறு நிர்பந்திக்கப்பட்ட ஐ.நா பொறுப்பாளர்களுக்கும் எதிராக ஆழமான பிரச்சனைகளை முன்வைக்கின்றன. வாஷிங்டனுக்கு உதவுவதற்கு ஆர்வமாக இருந்தாலும் வாஷிங்டனின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் ஐ.நா தலைமை மிகுந்த விழிப்புணர்வோடு செயல்பட்டு வருகிறது. ஈராக்கிற்கு இரு-நபர் தூதுக்குழுவை மட்டும் ஐ.நா அனுப்பி வைத்துள்ளது, அமெரிக்காவிற்கும் ஷியைட் மதகுருமார்க்களும் இடையில் பேச்சுவார்த்தைக்கான தொடர்பை ஏற்படுத்தும் வழிவகைகளை திறக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கிறது. நேரடி தேர்தல் நடத்துவதற்கான சாத்தியத்தை ஆராய்வதற்கான குழுவை ஈராக்கிற்கு அறிவிப்பதற்கு முன்னர் ஈராக்கில் நிலவுகின்ற பாதுகாப்பு தொடர்பாக மதிப்பீடு செய்ய ஐ.நா பொது செயலாளர் கோபி அன்னன் கேட்டிருக்கிறார்.

இப்போது சிஸ்தானியும், சதரும் ஷியைட்டுக்களின் மத்தியில் அதிகரித்துவரும் சமூக அதிருப்தியை அடைத்துவைக்கும், மேலோங்கிய ஸ்தானத்திற்காகப் போட்டிபோட்டுக் கொண்டு இருப்பதால் நிலைமை மிகவும் கிளர்ச்சியுடையதாய் மாறிக் கொண்டு வருகிறது. தெற்கு ஈராக் முழுவதிலும் அண்மையில் வேலைவாய்ப்பு, உணவு கோரியும் உத்தியோக ரீதியான ஊழலுக்கு முடிவு கட்டவும் கோரி வெகுஜன எதிர்ப்புக்களால் அமைதியின்மை பெருகியது காணப்பட்டது. அமெரிக்க ஆதரவு பெற்ற முன்னாள் புலம்பெயர்ந்தோர் மற்றும் முன்னாள் பாத்கட்சி தலைவர்களிடமும் ஊழல் தாண்டவமாடுகிறது.

அமெரிக்கா தீட்டியுள்ள திட்டத்தை கைவிடச் செய்து தாங்கள் பதவியில் நீடிப்பதற்கு IGC-தலைவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளால் வாஷிங்டன் முயற்சிகள் சிக்கலடைந்துள்ளன. இத்தகைய தலைவர்களுள் பென்டகன் ஆதரவுடன் IGC- யில் இடம் பெற்றுள்ள ஈராக் தேசிய காங்கிரஸ் தலைவரும் வங்கி மோசடியில் தண்டிக்கப்பட்டவருமான அஹமது சலாபியும் உள்ளடங்குவார், அவர் சென்ற வெள்ளிக்கிழமையன்று விடுத்த எச்சரிக்கையில் பிராந்திய மாநாட்டு (caucuses) அடிப்படையில் அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தால் ''நிச்சயம் ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும்'' என்று விளக்கியிருக்கிறார்.

சென்ற நவம்பர் 15-ல் அமெரிக்கத் திட்டம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் சலாபியும் அவரது சக IGC- தலைவர்களும் குறிப்பாக தாவா இஸ்லாமிய கட்சியைச் (Dawa Islamic Party) சேர்ந்த இப்ராஹீம் ஜப்பாரி மற்றும் இடைக்கால கவுன்சில் தலைவர் ஆதனம் பச்சாச்சியும் தொடக்கத்தில் அதற்குப் பின் நின்று ஆதரவு தெரிவித்தாலும், இப்போது புஷ் நிர்வாகம் இடைக்கால நிர்வாக கவுன்சில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 25-லிருந்து 125-ஆக உயர்த்தினால் போதும், இந்த நிர்வாக கவுன்சிலையே இடைக்கால நாடாளுமன்றமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

அத்தகைய திட்டம், மேலும் எதிர்ப்பையும் கிளர்ச்சியையும் தூண்டிவிடவே செய்யும். நவம்பர் 15 திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஏனென்றால் இப்போது செயல்பட்டுவரும் IGC- வாஷிங்டன் கால்வருடியான கொள்ளைக் கும்பல்தான் என்பதால் அதற்கு கடுமையான கண்டனம் எழுந்து அரசியல் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால்தான். இதே கவுன்சிலை இடைக்கால அரசாங்கமாக நீடித்து அரசியல் சட்டத்தை உருவாக்கும் திட்டத்தை புஷ் நிர்வாகம் கைவிட்டது.

அழுத்தமான பல காரணங்களுக்காக, முறைமையின் ஒரு மூடிமறைப்புடன் ஒரு அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜூலை முதல் தேதிக்கு பின்னரும் காத்திருக்க தன்னால் முடியாது என்று வெள்ளை மாளிகை முடிவு செய்திருக்கிறது. புஷ் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை உத்திரவாதம் செய்வதற்கு, அது ஈராக்கில் சரியான நேரத்தில் அரசியல் ''வெற்றி சரித்திரம்'' ஒன்றை கற்பனையாக உருவாக்கியாக வேண்டும்.

அதே நேரத்தில் ஈராக் மக்கள் "அவர்களது சொந்த எதிர்காலத்தை" நிர்ணயிக்க முடிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற போர்வையில், ஈராக்கில் அமெரிக்கப் படைகளை காலவரையறையின்றி நீடித்திருக்கச் செய்வதற்கு சட்டப்படி அழைப்பு விடுக்கும் இறையாண்மை கொண்ட ஆட்சி என்று அழைக்கப்படுவது அதற்கு தேவைப்படுகிறது. மேலும் சர்வதேச சட்டப்படி பெயரளவில் சுதந்திரமாக செயல்படும் அரசாங்கம்தான் ஈராக்கிய அரசு நடத்திவரும் தொழில்களை தனியார் மயமாக்கி, ஈராக்கின் எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்த அமெரிக்க கம்பெனிகளுக்கு நீண்டகால ஒப்பந்தம் அடிப்படையில் வழங்க முடியும்.

புஷ்சும், அன்னானும் பாசாங்குகாட்டுவதைப் போல், அராசங்கத்தை அமைப்பதற்கான செயல்முறைகள் மீதான மோதல் வெறுமனே ஜூலை முதல் தேதிக்கு முன்னர் தேர்தல்கள் நேரத்தே ஒழுங்கு செய்யப்படமுடியுமா என்பதன் நடைமுறைப் பிரச்சினைகள் மீதானதாக இருந்தன என்றால், ஒரு சமரசத்தை வகுப்பது கடினமானதாக இருக்காது, ஒருவேளை கொஞ்சம் தாமதமாகலாம். ஆனால் சர்ச்சையில் சம்பந்தப்பட்டிருப்பது தங்களது சொந்த குறுகிய நலன்களை நாடும் போட்டியிடும் இன மற்றும் குழு அடிப்படையிலான செல்வந்தத் தட்டுக்கள் ஆகும் மற்றும் அவை தங்கள் ஆதரவுக்கான அரசியல் தளத்தைக் கவருவதற்கு ஈடுபட்டுள்ளன.

உத்தியோகபூர்வ நம்பிக்கை மற்றும் துணிச்சலின் முகப்புத் தோற்றத்தின் பின்னால் வாஷிங்டனில் எச்சரிக்கை அறிகுறிகள் தெரிகின்றன. புஷ் நாட்டுக்கு உரையாற்றிய சில நாட்களில் CIA- அதிகாரிகள் பகிரங்கமாக அவரது நம்பிக்கைமிக்க மதிப்பீடுகளை மறுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்தனர். நேரடி தேர்தலை நடத்துவதற்கான கோரிக்கையை புறக்கணித்தால் ஈராக்கில் வன்முறைகள் வெடிக்கும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத CIA- அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் அறிவித்தனர். ஷியாக்கள், குர்துக்கள் மற்றும் சுன்னி தலைவர்கள் தங்களது கட்டுப்பாட்டை நிலைநாட்டிக் கொள்வதற்காக ஈராக்கில் முட்டி மோதிக் கொண்டிருப்பதால் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் ஆபத்து பெருகி வருவதாகவும் CIA- அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

சென்ற வாரம் நடைபெற்ற கூட்டங்களில் இந்த கவலைகள் குறித்து புஷ் அவரது உயர் தேசிய பாதுகாப்பு உதவியாளர்கள் மற்றும் ஈராக்கில் பணியாற்றும் அமெரிக்க நிர்வாகி போல் பிரேமர் ஆகியோர் விவாதித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உள்நாட்டுப்போர் பற்றிய கவலைகள் CIA- விற்கு மட்டுமில்லை "அரசாங்கத்திற்குள்ளேயும் பரந்த அளவில் நிலவுகின்றது", என்று மற்றொரு "மூத்த அதிகாரி" குறிப்பிட்டார்.

அரசியல் இலக்குகளைத் தாக்கும் கிளர்ச்சிகள்

இந்த திரண்டு வரும் அரசியல் நெருக்கடியில் ஒரு பிரதான காரணி அமெரிக்கா தலைமையிலான படைகளுக்கு எதிராக பரந்து விரிந்து வரும் கிளர்ச்சி ஆகும். சென்ற மாதம் சதாம் ஹூசேன் பிடிக்கப்பட்ட பின்னர் அண்மைய நாட்களில் புதிய அலை வீச்சுபோன்று தாக்குதல்கள் குறிவைத்து நடத்தப்படுகின்றன. அமெரிக்க மற்றும் அதன் ஆதரவு படைகள் மட்டுமின்றி ஆக்கிரமிப்புக்கு உதவியாக செயல்படுகின்ற அரசியல் உடந்தையாளர்களும் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.

சென்ற வியாழக்கிழமை ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் நடைபெற்ற மண்டபத்தில் வைக்கப்பட்ட ஒரு குண்டு வெடித்ததில் இரண்டுபேர் கொல்லப்பட்டனர், அமெரிக்க ஆதரவு ஆட்சிக்கு துணை நிற்பவர்களைத் தாக்குகின்ற நோக்கில் இந்த குண்டு வைக்கப்பட்டிருக்கிறது. ஸ்ராலினிசக் கட்சி அமெரிக்க படையெடுப்பை வரவேற்றது மற்றும் அதற்கு வெகுமதியாக அதன் சார்பில் ஒரு பிரதிநிதி IGC- ல் இடம் பெற்றிருக்கிறார்.

இந்த குண்டு வெடிப்பிற்கு முன்னர் சென்ற புதன் மற்றும் வியாழனில் மத்திய ஈராக் பகுதியில் தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல்களில் 11-பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் அமெரிக்க இராணுவ தளத்தில் பணியாற்றச் சென்ற நான்கு பெண்களும் அடங்குவர். பாக்தாதின் மேற்கே பல்லூஜாவிற்கும் ரமாடிக்கும் இடையில் போலீஸ் சோதனைச்சாவடிமீது துப்பாக்கி ஏந்தியவர்கள் சுட்டபோது இரண்டு ஈராக் போலீசார் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.

பாக்தாத்திற்கு வடகிழக்கில் 60-கி.மீ அப்பால் பக்கோபா அருகில் உள்ள இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் மற்றும் பீரங்கி தாக்குதலில் இரண்டு அமெரிக்க படையினர் பலியாயினர். பாக்தாத்திற்கு தெற்கில் திவானியா பகுதி அருகே பயங்கரவாதிகளுக்கு எதிராக "பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை" நடந்த பொழுது ஈராக்கிலுள்ள ஸ்பெயின் நாட்டு துருப்புக்களின் தலைமை பாதுகாப்பு அதிகாரி சுடப்பட்டு கடுமையான காயம் அடைந்தார்.

இரண்டு நாட்களுக்கு பின்னர் ஈராக் முழுவதிலும் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் எட்டு அமெரிக்க போர் வீரர்களும், ஏழு ஈராக்கியர்களும் கொல்லப்பட்டனர். பாக்தாத் மற்றும் மோசூல் நகரில் வண்டி ஓட்டிக்கொண்டு சுட்டதில் ஒரு ஈராக் போலீஸ் அதிகாரியும் ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரியும் கொல்லப்பட்டனர். வடக்கு கிர்குக் அருகே குண்டு வெடிப்பில் மற்றொரு போலீஸ்காரர் மாண்டார். பாக்தாத்திற்கு வடக்கே 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, சமாரா நகருக்கு அருகில் அரசாங்க கட்டடத்தை தாண்டி அமெரிக்க இராணுவ வாகனங்கள் சென்ற போது குண்டு வெடித்ததில் இரண்டு அமெரிக்க இராணுவத்தினர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர், 30-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கையாரா என்ற வடபுல நகரத்திற்கு அருகில் ஒரு ஹெலிகாப்டர் விழுந்த போது இரண்டு அமெரிக்க விமானிகள் கொல்லப்பட்டனர். இன்னொரு மேற்கு நகரில் உள்ள கால்டியா இராணுவ சோதனைச் சாவடியில் கார் குண்டுவெடிப்பு நடந்தபோது மூன்று அமெரிக்க போர் வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறுபேர் காயமடைந்தனர். பல்லூஜாவின் வடக்கில் தங்களின் வாகனப்பிரிவுகள் சென்றபோது நாட்டு வெடிகுண்டு தாக்குதல்களுக்கு இலக்கான போது இரண்டு அமெரிக்க படையினர் பலியானார்கள்.

திக்கிரித்துக்கு வடக்கிலுள்ள மத்திய பெய்ஜீ நகரில் ஏவுகணை சுழல் எறிகுண்டு அவரது கவச வண்டியைத் தாக்கியதில் மற்றொரு படையாள் காயமடைந்தார். மார்ச் 20-ல் ஈராக் போர் தொடக்கப்பட்ட பின்னர் இதுவரை பலியான அமெரிக்க சேவையிலுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை இந்த இறப்புடன் 513 ஆனது.

புஷ் அவரது நாட்டு மக்களுக்கான உரையில் கூறியவாறு, வெகுஜன ஊடக ஆதரவுடன் அவர் மற்றும் அவரது நிர்வாகம், கிளர்ச்சி செய்பவர்களை ''பயங்கரவாதிகள்'' என்றும், ஈராக் ''சுதந்திரத்திற்கு'' எதிரானவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். ஆயினும், இந்தத் தாக்குதல்கள் பல்வேறு குழுக்களால் பரவலாக நடத்தப்பட்டு வருகிறது- இது நாட்டின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அதன் அவமதிப்பை எதிர்க்கும் மற்றும் பெரும்பாலான மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட அது நிறைவேற்றத் தவறியதை எதிர்க்கும் ஈராக்கியர்கள் மத்தியிலான பரந்த கோபத்தையும் குரோதத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது என்பதன் சான்றாக அது இருக்கிறது.

See Also :

ஈராக்கில் அமெரிக்கா தலைமையில் இயங்கும் படைகள் மீது பெருகிவரும் தாக்குதல்கள்

Top of page