World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP public meeting to commemorate the death of Keerthi Balasuriya

கீர்த்தி பாலசூரிய மறைவை நினைவுகூரும் சோ.ச.க பொதுக் கூட்டம்

29 January 2004

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) கீர்த்தி பாலசூரியவின் மறைவின் 16வது நினைவுதினத்தை கொண்டாடுவதற்காக ஜனவரி 31 அன்று கொழும்பில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளது. கீர்த்தி பாலசூரிய சோ.ச.க வின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க) ஸ்தாபகப் பொதுச் செயலாளராவார். 1987 டிசம்பர் 18ம் திகதி அவர் தனது 39 ஆவது வயதில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரது மறைவானது சோ.ச.க வுக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கும் (நா.அ.அ.கு) ஒரு பேரிழப்பாகும்.

கீர்த்தி பாலசூரிய, 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டரசாங்கத்தினுள் நுழைந்ததை எதிர்த்த சில இளைஞர்களுடன் சேர்ந்து பதினேழே வயதில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைந்துகொண்டார். ல.ச.ச.க வின் தீர்மானமானது, சோசலிச அனைத்துலகவாதத்தின் முக்கிய அடிப்படைகளை முழுமையாக கைவிடுவதை பிரதிநிதித்துவம் செய்ததோடு, இலங்கையிலும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு ஆழமான அரசியல் விளைவுகளை கொண்டதாகவும் இருந்தது. அது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காகப் போராடுவதை கைவிட்டமை, இனவாத அரசியலை அடிப்படையாகக் கொண்ட குட்டி முதலாளித்துவ இயக்கங்களின் தோற்றத்திற்கும், இறுதியாக நாட்டின் 20 வருடகால அழிவுகரமான யுத்தத்திற்கும் நேரடியாக வழிவகுத்தது.

கீர்த்தி பாலசூரிய ல.ச.ச.க வின் காட்டிக்கொடுப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை வகித்ததோடு நா.அ.அ.கு வின் ஒரு பகுதியையும் இலங்கையில் உருவாக்கினார். அவர் சந்தர்ப்பவாதத்தின் தளராத எதிரியாக இருந்ததோடு, 1985-86 ம் ஆண்டுகளில் நா.அ.அ.கு வில் இருந்து பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சி பிளவடைந்த காலத்தில் ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைகளை காப்பதில் தீர்க்கமான பாத்திரம் வகித்தார். அவரது அரசியல் வாழ்க்கை பற்றிய படிப்பினைகள் இந்தியத் துணைக்கண்டத்திலும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு இன்று இன்றியமையாததாகும். சோ.ச.க கூட்டமானது அவர் ட்ரொட்ஸ்கிசத்திற்கு ஆற்றிய முன்னேற்றகரமான, தீர்க்கதரிசனம் மிக்க பங்களிப்பை மீளாய்வு செய்ய அர்ப்பணிக்கப்படும். நாம் தொழிலாளர்கள் இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் அனைவருக்கும் இக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கிறோம்.

இடம்:

வை.எம்.சி.ஏ மண்டபம்,
பிரிஸ்டல் வீதி,
கொழும்பு கோட்டை

நேரம்: ஜனவரி 31, மாலை 3 மணி.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved