WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ரஷ்யா மற்றும் முந்தைய USSR
Georgia: "Rose revolution" destabilises southern
Caucasus
ஜோர்ஜியா: "ரோஜாப் புரட்சி" தெற்கு காகசஸ் பகுதியின் உறுதித்தன்மையைக் குலைக்கிறது
Part 1 | Part 2
By Simon Wheelan
30 December 2003
Use this version
to print |
Send this link by email |
Email the author
ஜோர்ஜியாவில் அமெரிக்க ஆதரவுடன் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு, அதைத்
தொடர்ந்த நிகழ்ச்சிகள் பற்றிய முடிவும் இரண்டாவதுமான தொடர்கட்டுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றல் (Energy)
சர்ச்சையில், ஓர் அமெரிக்க ஆலோசகரான, ஸ்டீவன் மன் என்பவர்,
ஜோர்ஜியாவைப் பற்றி, இந்த ஆண்டு ஜூன் மாதம், "ஜோர்ஜியா, கிழக்கு-மேற்கு ஆற்றல்
(Energy)
தாழ்வாரப்பகுதி சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையக் கெடுக்கும் வகையில், எதையும் செய்யக்கூடாது." என்று
ஷெவர்ட்நாசேக்கு (Shevardnadze)
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜுலை மாதத்தில், பழைய வெளியுறவு துறை அமைசரும், டெக்சாஸ் எண்ணைய் அதிபரும்,
புஷ் குடும்பத்திற்கு நெருங்கியவருமான ஜேம்ஸ் பேக்கர், ரிபிலிஸி (Tbilisi)
க்கு சென்றிருந்தார். ஷேவர்ட்நட்ஜே
உடைய ஆட்சிக்கும், மத்தியத் தேர்தல் குழு அமைப்பது பற்றிய எதிர்க்கருத்துக்களுக்கும்
இடையே தோன்றிவிட்ட தேக்கநிலைக்குத்தீர்வு காண்பது அவருடைய பணி என்று அதிகாரபூர்வமாக இருந்தது.
பேக்கருடைய சட்ட அலுவலகமான பேக்கர் போட்ஸ் என்னும் நிறுவனம் அதன் வலைதளத்தில், தாங்கள் எவ்வாறு
"எண்ணெய், எரிவாயு, இவை தொடர்பான ஹைட்ரோகார்பன் தொழில்கள் காஸ்பியன் பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய
எழுச்சி பற்றியும், அப்பகுதியிலேயே முதலீடு சம்பந்தமான அனைத்து வகைகளைப் பற்றியும் அதிக அளவு நடைமுறைகளில்
ஈடுபட்டுள்ள நிறுவனம்" என்பதைப் பறை சாற்றியிருந்தது.
வாஷிங்டனால் முறிக்கப்பட்டபின்னர், ஷெவர்ட்நாசே, ஆகஸ்ட் மாதம் முதல் தனக்கு
ஆதரவாகக் கிரெம்ளின் புறம் சாயத்தொடங்கினார். ரஷ்யாவின்
Gazprom உடன்
நேர்த்தியான உடன்பாடு ஒன்றில் கையைழுத்திட்டதன்மூலம் மாஸ்கோவுடைய தயவை நாடுபவரானார். மற்றொரு
மாஸ்கோ தளமுடைய நிறுவனம் Unified Energy
Systems (UES), முன்பு அமெரிக்கக் கட்டுப்பாட்டிற்குள்
இருந்த முறையிலேயே ஆற்றல் தொழிற்கூடங்களையும், பகிர்வு இணையங்களையும், தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவந்துவிட்டது.
தங்களுடைய ரஷிய ஆதிக்கத்திற்கு இடையூறான இத்தகைய நடவடிக்கைகளுக்கு
விடையிறுக்கும் வகையில், புஷ் நிர்வாகம் ஜோர்ஜியாவிற்கு அளித்து வந்த உதவிகளில் பெரும் வெட்டுக்களைக்
கொண்டு வந்தது. திரைக்குப் பின்னால் அவர்கள் ஏற்கனவே ஷெவர்ட்நாசேயை அகற்றுவதற்கு ஏற்பாடுகளைச்
செய்து கொண்டிருந்தனர். கடந்த கோடையில் முற்பகுதியில் உலக வங்கி ரிபிலிஸி இடம் தன்னுடைய அதிருப்தியைத்
தெரிவித்து, சமுதாய, ஆற்றல் திட்டங்களை ஜோர்ஜியாவில் தற்காலிகமாக நிறுத்திவிட்டது.
அக்டோபர் மாதத் துவக்கத்தில், ஜான் மக்கயின், ஜெனரல் ஷேலிகஷ்வில் மற்றும்
ஸ்ட்ரோப் டால்போட் ஆகிய மூவரும் ரிபிலிஸிக்கு வருகை புரிவதாக இருந்தது. அவர்களுடைய வரவு தவிர்க்க
முடியாத நிலையிலும், வாஷிங்டனின் அழுத்தம் தீவிரமாகப் போனதினாலும், ஷெவர்ட்நாசே நிருபர்களிடம் கூறினார்:
"அவர்கள், நமக்கு உதவ வருகிறார்களா அல்லது நம்மைப் புதைக்க வருகிறார்களா, என்ன திட்டத்தைக்
கொண்டுள்ளார்கள் என்பது தெரியவில்லை."
கிளின்டன் நிர்வாகத்தின் பழைய அயலுறவு மந்திரியான மேடலின் ஆல்பிரைட் தலைமயில்
உள்ள அனைத்துலக விவகாரங்களுக்கான தேசிய ஜனநாயக அமைப்பு
(National Democratic Institute for
International Affairs), மக்கயின் மற்றவர்களுடைய
பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஜோர்ஜிய மக்களிடம் மக்கயின் கூறினார்: "ரஷ்யாவிடமிருந்தோ அல்லது
மற்ற எந்த நாட்டிடமிருந்தோ, எத்தனை சுதந்திரமாக ஜோர்ஜியா இருக்க முடியுமோ, அத்தனை சுதந்திரமாக
இருக்கவேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்."
இப்பொழுது ரிபிலிஸியில் தூதராக இருக்கும் ரிச்சார்ட் மைல்ஸ், அமெரிக்காவில்
பயிற்சி பெற்றிருந்த வழக்குரைஞர் மிகைல் சாகஷ்விலிக்குத்
(Mikhail Saakashvili)
தீவிரமாக மாற்றத்தைக் கொண்டுவருவதற்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார். அவர்கள் வைத்த பொறியில்
நேராக விழும் வகையில், நவம்பர் 2ம் தேதி தேர்தல் முடிவுகளைப் பொய்யாகக் கூறும் முயற்சிகளைச்
செய்தவிதத்தில் ஷேவர்ட்நட்ஜே நடந்துகொண்டார். 1996 லிருந்து 1999 வரை யூகோஸ்லாவியாவில் பணிகளின்
தலைமையாளராக மைல்ஸ் இருந்தவர். கோசோவோப் பிரச்சினையின் நெருக்கடித்தன்மையை போராக்கியதில்
அவர் முக்கிய பங்கு கொண்டிருந்ததோடு, அதையொட்டி நேட்டோ தலையிட்டு சேர்பியாவை நசுக்கும் முயற்சி
வெற்றியடைந்தது. 2000ம் ஆண்டில், ஸ்லோபோடன் மிலோசெவிக், ஷெவர்ட்நாசே எவ்வாறு பின்னர்
மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து வீழ்ச்சியாடைந்தாரோ, அதேபோன்ற முயற்சிகளால் பதவியை
இழந்தார்.
சாகஷ்விலியும் அவருடைய பரிவாரமும் மிகப்பெரிய அளவில் தலைமை கொள்ளத் தகுதி
உடையவர்கள் என்ற பரந்த தயாரிப்பு ஏற்பட்டு, அமெரிக்கத் தேர்தல் கணிப்பாளர்கள், தந்திர உத்தி
ஆலோசகர்கள், அரசாங்கத் துறையில்லா அமைப்புக்கள் அனைத்தும், வாக்கெடுப்புச் சீர்கேட்டை அகற்றும்
வகையில் "இணையான வாக்கு எண்ணிக்கை,வாக்கு முடிந்தபின்னர் உடனடிக் கணிப்பு போன்ற முறைகளைக்
கையாண்டனர். அவர்களுடைய பிரச்சாரயுத்தம் மிகப் பரந்த முறையில் ருஸ்டவி-2 போன்ற ஷெவர்ட்நாசே
எதிர்ப்பு தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பியதின் மூலம் வெற்றியடைந்தது.
காகசஸ் பகுதியில் ஆதிக்கம் செலுத்த ரஷ்ய முயற்சிகளை இருமடங்காக்குதல்
வாஷிங்டன் எவ்வாறு மத்திய அமெரிக்காவைத் தன்வீட்டுக் கொல்லைப்புறம் போலக்
கருதுகிறதோ, அதேபோல் கிரெம்ளின், ஜோர்ஜியாவையும் தெற்கு காகசஸ் பகுதியையும் கருதுகிறது. புதிய
ஆட்சியை மதியோடு நடந்து கொள்ளுமாறும், ஜோர்ஜியாவை எதிர்கொண்டுள்ள " பூகோளஅரசியல் உண்மை
நிலையைக்" கருத்திற்கொள்ளுமாறும், புடின் ஜோர்ஜியாவிடம் வலியுறுத்தியுள்ளார். மத்திய ஆசியாவிலும்,
காகசசிலும் அமெரிக்கர் தலையீட்டை எளிதாக எடுத்துக்கொள்ள கிரெம்ளின் தயாராக இல்லை என்பதுடன்,
எண்ணெய் மற்றும் எரிவாயுக் குழாய்களில் அவர்களின் முதலீடானது வேண்டுமேன்றே ரஷ்ய நிலப்பகுதியைத் தவிர்த்தல்,
பிராந்தியம் முழுவதும் இராணுவ தளங்களை அமைத்தல், கடைசியாக ஆனால் முக்கியத்துவம் சிறிதும் குறையாத
தன்மை படைத்த வாஷிங்டனுடைய விருப்பத்திற்கேற்ப
comprador அரசாங்கங்களை அப்பகுதி முழுவதும் அமைத்திடல்,
ஆகியவையும் எளிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.
சமீபத்திய அமெரிக்க இராணுவத் தலையீடுகளின் படிப்பினைகளை ரஷ்ய
கொள்கைவகுப்போரால் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளன. ரஷ்யாவின் பழைய தனியார்மயமாக்குதல் வகையின்
தலைவராள அனடோலி ஷுபைய் (Anatoly
Chubai), இப்பொழுது
Unified Energy Systems (UES)
உடைய தலைவராக உள்ளார். செப்டம்பர் மாதம் ஒரு ரஷ்யச் செய்தித்தாளில், ரஷ்யர்கள் "தாராள
முதலாளித்துவத்தை" வளர்க்க வேண்டும் என்றும் "ஒரு தாராளப் பேரரசை" நிறுவவேண்டும் என்ற தேவையைப்
பற்றி எழுதியுள்ளார். பொருளாதாரத்திலும் பண்பாட்டளவிலும், சுதந்திரமான பொதுநல நாடுகள் என்பதற்கு (Commonwealth
of Independent States -CIS), ரஷ்யா "ஓர்
இயற்கையான தலைமை நாடு" என்று சேர்த்துக்கொண்ட அவர் ரஷ்யா சுறுசுறுப்புடன் இயங்கி, இந்த புவியில்
பகுதியில் தன்னுடைய தலைமையிடத்தை அதிகரித்து வலுவாக்கி கொள்ளவேண்டும்" என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
வருங்கால ரஷ்யாவின் அயல்நாட்டுக் கொள்கைகளுக்கு, தடையற்ற சந்தை,
பொருளாதாரத் தீவிர நடவடிக்கைகளின் பெருக்கம்தான் நல்ல அஸ்திவாரமாக அமையும் என்று, அவர் தேசியத்
தொலைக்காட்சியில் மேற்கோளிட்டு உரைத்தார். அவற்றை ஏற்றுக்கொண்டு, மிகுந்த ஆர்வத்துடன் திட்டமிட்டுச்
செயல்படுத்தினால், பேரரசை நிறுவுவதற்கு, ரஷ்யா "தன்னுடைய இயற்கையான உயர்நிலையை அமெரிக்கா,
ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் இவற்றுடன் கொண்டு வரலாற்றில் அது பெறவேண்டிய இடத்தை எய்தும்."
ஜோர்ஜியா-UES
உடன்பாட்டை, சுபாய் கோடையில் பேசிமுடித்தவுடன், அதற்கான ஒப்பந்தங்களையும் அடிக்கட்டுமானங்களையும்
வாங்கினார். அண்மையில் Kyrgyzstan
ல் இராணுவத் தளம் திறக்கப்பட்டது, ஷுபையின் பேரவாக்களை வலியுறுத்துவது போலிருக்கிறது. "Eurasian
Union'' என்று கூறத்தக்க இந்த "ஐரோப்பிய-ஆசிய
ஒன்றியம்", போல்ஷிவிக்குகளை எதிர்த்திருந்த இளவரசரான நிகோலாய் எஸ். ட்ரூபெட்ஸ்கோயுடைய யூரேசியச்
சார்பு தேசியத்தின் எதிரொலியாக விளங்கி, ரஷ்யாவை அப்பகுதியில் அமெரிக்கத் திட்டங்களுடன் பூசல்களைக்
கொள்ளவைக்கும்.
"அண்மையிலுள்ள அயல்நாடு" என்று ரஷ்யா கருதும் நாடுகள்மீது தன்னுடைய
செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள, அதன் தெற்கு காகசஸ் பற்றிய முன்னணியில் உள்ள உத்திமுறை பெரிதும் உதவும்.
இதேபோன்ற உத்திகளைத்தான், முன்னர் சோவியத் ஒன்றியத்தின் உக்ரைனை, மத்திய ஆசிய மாநிலங்களாக
இருந்தவை உட்பட, ரஷ்ய செல்வாக்கு மண்டலத்திலுருந்த மற்றய பகுதிகளிலும் பயன்படுத்த இருப்பதாக மொஸ்கோ
ஒப்புக்கொண்டுள்ளது.
மாபெரும் ரஷ்ய மின்சக்தி நிறுவனங்களான
RAO, UES,
இதன் பெரும்பகுதி அரசிற்கு சொந்தமானதாகும். இவ் நிறுவனங்கள் இப்பகுதியில் தங்களுடைய உயர்செல்வாக்கை
நிறுவி முன்னணியில் இருக்க முயற்சி செய்து வருகின்றன.
RAO, அண்மையில் இருக்கும் ஆர்மினியா, ஜோர்ஜியா ஆகியவற்றில்
ஆற்றல் நிறுவன அமைப்புக்களில் பெரும் கட்டுப்பாட்டைக் கொண்டுவிட்டது மட்டுமல்லாமல் துருக்கிக்கும்
அஜெர்பைஜனுக்கும் மின்சக்தி ஏற்றுமதி செய்யவும் திட்டங்களை அறிவித்துள்ளது.
அக்டோபர் மாதம், ஆர்மேனியத் தலைநகரான ஜெரவானுக்கு, அதன் தலைவரான
ராபர்ட் கோஷரினுடன் ஒப்பந்தத்தை இறுதிசெய்துகொள்ளவதற்காக, ஷுபை பயணம் செய்திருந்தார்.
இப்பொழுதைய புடின் நிர்வாகத்தில் ஷுபைசிற்கு அதிகாரபூர்வமான பதவி இல்லையென்றாலும், இவர் நாட்டின்
பிரதம மந்திரியை மட்டுமின்றி அவருடைய பாதுகாப்புமந்திரியான
Serzh Sarkisian
ஐயும் சந்தித்தார். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, ரஷ்யத்
தலைமையிலான ஜோர்ஜியா, அஜெர்பைஜன் உட்பட, பழைய சோவியத் ஒன்றியத்தின் 10 குடியரசுகளைக் கொண்டு
அமைக்கப்படும் ஆற்றல் வழங்கும் இணையதளம் (Energy
Supply Network) ஒன்றில், ஆர்மினியாவும் சேர்க்கப்படும்
என்று தெரிவித்தார். இப்பொழுது ஆர்மினியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியில் 80 சதவிகிதம்
UES ஆல்
கட்டுப்படுத்தப்பட்டு, இந்நிறுவனத்தை, ஆர்மினியாவிலிருந்து, அஜெர்பைஜன், துருக்கிவரை படர்ந்திருக்கும் உயர் மின்
அழுத்தக் கொடிகளின் மூலம் செலுத்தவும், பராமரிக்கவும் பயன்படுத்த விரும்புகிறது. ரஷ்யாவினால் இப்பகுதியின்
மின்சக்தி வினியோகம் தீவிர ஆதிக்கத்தைப் பெருகுவதைப் பற்றி உலக வங்கி, கடுமையான முறையில் கருத்துக்கள்
கொண்ட அக்கறையைக் காட்டியுள்ளது.
பகுவும், அங்காராவும் ஜெரவானுடன் நெருக்கடியான உறவுகளைக் கொண்டுள்ளதைப்
பற்றி, UES
அதிக கவலைப் படுவதாகத் தெரியவில்லை. ஷுபைஸ், தெற்குக் காகசஸ் பகுதியைத் துருக்கியச் சந்தைக்குப்
பாலம் போல் பயன்படுத்த விழைகிறது. துருக்கிய வாய்ப்புக்களை, மொத்தவிலையின் அடிப்படையில், மின்சக்தி
உற்பத்தி, அதன் வளர்ச்சித் தன்மைகள் இவற்றைப் பொறுத்தவரையில், அவர் "வியத்தகு அளவில் கவர்ச்சி
உடையவை" என்று கூறியுள்ளார். இதைத் தவிர, ரஷ்ய அரசாங்கம், துருக்கிய அலுமினியப் பிரிவு, மற்றும்
அதிகமாக மின்சக்தி தேவைப்படும் நுகர்பொருட்கள் தொழில்களிலும், தன்னுடைய கவனத்தைச் செலுத்த உள்ளது.
ரஷ்ய அதிகாரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமத்துவதின் தேவையைப் பற்றி
வெளிப்படையாகவே பேசும் ஷுபைஸ், "ரஷியா வலுவடையவேண்டும், இது உறுதி." என்று தைரியமாகவே
கூறியுள்ளார்.
எரிவாயு மற்றும் எண்ணெய்க் குழாய்கள் மீதான முரண்பாடு
ஜோர்ஜியா தன்னுடைய இரு தன்னாட்சிக் குடியரசுகளான
Abkhazia, South Ossetia
மற்றும் மூன்றாவது குறைவான தன்னாட்சி உடைய
Ajaria , ஆகியவற்றுடன் கொண்டுள்ள உறவின் தன்மையை,
கணக்கில் எடுத்துக்கொண்டு, அதைத் தன்னுடைய ரிபிலிஸி உடனான தொடர்பைச் சமன் செய்துகொள்ளுவதற்கு, ஒரு
திறமையான நெம்புகோலாக மொஸ்கோ கருதுகிறது. ஜோர்ஜியாவின் நிலப்பகுதி முழுமைக்கு ஆதரவு அளிப்பதாகப்
பலமுறை கூறிவந்தாலும், ரஷ்யா அந்த மூன்று அரசாங்கங்களின் தலைவர்களையும் மொஸ்கோவிற்குப் பேச்சு
வார்த்தைகளுக்கு அழைத்துள்ளது. தன்னுடைய அரசாங்கம் இந்த மூன்று பகுதிகளுக்கும், தொடர்ந்து உதவியளிக்கும்
என்று பிரதம மந்திரி Mikhail Kasyanov
பழையபடி கூறியுள்ளார்.
காஸ்பியன் பகுதியில் அமெரிக்கா மேலும் படைகளைத் தளம் கொள்ளும் முயற்சிகளில்
ஈடுபடுவதைப் பற்றிய எச்சரிக்கையை ரஷ்ய அரசாங்கம் விடுத்துள்ளது. அஜெர்பைஜனில் ரஷ்ய தூதராக உள்ள
Nikolai Ryabov
"காஸ்பியன் பகுதிப் பாதுகாப்புப் பிரச்சினைகள், பகுதியிலிருக்கும் நாடுகளாலேயே, அமெரிக்கர்கள் ஏதும்
குறிக்கிடாமல் தீர்க்கப்படும்; அமெரிக்காவோ தன்னுடைய நாட்டிலிருந்து ஆயிரக் கணக்கான கிலோமீட்டர்கள்
தொலைவிலுருக்கும் பகுதியைப்பற்றி ஒவ்வொரு விதத்திலும் கவலை வருமாறு நடந்துகொள்ளுகிறது." என்று
விளக்கியுள்ளார்.
இதன் 5 மில்லியன் மக்கட்தொகையுடைய நிலையை விட, ஜோர்ஜியாவின்
பூகோள-அரசியல் முக்கியத்துவம், குழாய்களை ஒட்டி, மிகப்பெரிய தன்மையுடையதாக வளர்ந்துவிட்டது. 2005ம்
ஆண்டு முடிக்கப்பட இருக்கும் குழாய்கள், நாள் ஒன்றுக்கு எண்ணெய் வளம் மிகுந்த
Azeri, Chirag
மற்றும் Gunashli
ஆகிய காஸ்பியன் எண்ணெய் நிலங்களிலிருந்து, துருக்கிக்கு, ஒரு மில்லியன் பீப்பாய் எண்ணெய் எடுத்துச் செல்லவுள்ளன.
ரஷ்ய நிலப்பகுதியைச் சுற்றி இது அமைக்கப்பட்டுள்ளதால், ரஷ்யா இந்த வழிக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது;
பழைய சோவியத் பகுதியில் தன்னுடைய ஆற்றல் நலன்களும் செல்வாக்கும் மதிப்புக்குறைவிற்கு உட்படுத்தப்பட்டு
விட்டதாகவும் அது கருதுகிறது. மேலும், அமெரிக்க ஆதரவு உடைய இந்த வழி, அஜெர்பஜைனிலிருந்து ஷேஷன்யா
வழியாக கருங்கடல் துறைமுகத்தை அடையும் ரஷ்யாவின் பகு-நோவோரோஸிக் வழியோடு போட்டி இடுவதாகவும்,
அது கூறியிருக்கிறது. இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு வந்து, உடன் கொண்ட தொலைபேசித்தொடர்புகளில்,
Burdzhanadze,
பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு தன்னால் இயன்ற அளவு ஆதரவைப் புதிய எண்ணெய், எரிவாயுக் குழாய்களுக்கு
அளிப்பதாக உறுதிமொழி கொடுத்தது, ஒன்றாகும்.
இந்த ஆண்டுத் துவக்கத்தில்,
Gazprom,
ஜோர்ஜியாவிற்கு எரிவாயு வழங்குவதற்கான வடிவமைப்பு கொண்டிருந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டது. முன்பு அது
செய்தது போல், ஜோர்ஜியாவிற்குக் குளிர்காலத்தில், வினியோகம் செய்வதைக் குறைக்க முடியும் என்பது
மட்டுமல்லாமல், Gazprom
க்கு பகு-திபிலிசி-எர்ஜெளரம் எரிவாயுக் குழாயைவிடக் கூடுதலான அளவு துருக்கியச் சந்தைக்கு, இருக்கும்
இணையங்கள் மூலம் கொடுக்கமுடியும்.
யூகோசுடைய பழைய நிர்வாகியான
Mikhail Khodorkovsky
ஐக் கைது செய்ததும், புடின் ஆட்சி கொண்டுள்ள இதேபோன்ற திட்டங்களின் ஒரு பகுதியே ஆகும். ரஷ்யப்
பாதுகாப்பு மந்திரியான செர்ஜி ஐவனொவ் (Sergei
Ivanov), ரஷ்ய ஆற்றல் இருப்புக்களை அரசாங்கம் கூடுதலான
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்று
Mikhail கைதுசெய்யப்பட்ட பிறகு அழைப்பு விடுத்துள்ளார்.
எண்ணெய் நிறுவனங்கள் போதுமான அளவு புதிய இருப்புக்களைக் கண்டுபிடிப்பதற்குச் செலவழிப்பது இல்லை என்றும்,
இப்பொழுது உற்பத்திசெய்யப்படும் எண்ணை முந்தைய சோவியத் ஒன்றிப்பின் முயற்சியின் விளைவுதான் என்றும் குறைகூறியிருக்கிறார்.
Yokos
ä Khodorkovsky
துவங்கியபோது அது பெருத்த நஷ்டத்தைத்தான் கொண்டிருந்தது. இப்பொழுது அது பெறும் இலாபத்தின் அளவு,
Exxon-Mobil
என்னும் மாபெரும் அமெரிக்க எண்ணெய் நிறுவனம், இதை வாங்காலாமா என்று நினைக்க வைத்துள்ளது.
தெற்கு காகசஸ் பகுதியில் ஆற்றல்
(Energy) வினியோகத்தில்
ஆதிக்கம் செலுத்த ரஷ்யா மேற்கொண்டுள்ள முயற்சிகள், வாஷிங்டனுடைய கவனத்தை ஈர்க்காமல் இல்லை.
அக்டோபர் 15ம் தேதி, "ஜோர்ஜியாவின் ஆற்றல் பாதுகாப்பு: ஆக்கத் திறனுடையதா, அழிவைத் தருவதா"
என்ற தலைப்பில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் பங்குபெற்றவர்கள், ஜோர்ஜியாவை, ஆற்றல் இருப்புக்கள்மீதான
கட்டுப்பாட்டை மீண்டும் எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி ஜோர்ஜியாவிலிருந்த புலம் பெயர்ந்த,
ஜோர்ஜிய அரங்கு என்ற வணிகக் குழு ஒன்றினால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இது ஜோர்ஜியாவின் அரசியல்,
பொருளாதார வளர்ச்சியை ஆதரித்து, ரிபிலிஸிக்கும், வாஷிங்டனுக்கும் இடையே நல்லுறவுகளை வளர்க்க
விரும்புகிறது.
ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் காஸ்பியன் ஆய்வுகள் திட்டத்தைச் சேர்ந்த
Brenda Schaffer,
மொஸ்கோவுடன் பங்கு கொண்டு பணியாற்றுமாறு புஷ் நிர்வாகத்திற்கு
ஆலோசனை கூறியிள்ளார். "ரஷ்யா மேற்கொண்டுள்ள முக்கிய பங்கை அறிந்து, அது தொடர்ந்து அப்பகுதியில் செய்ய
இருக்கும் பணிகளின் தன்மையை உணர்ந்து, அதைச்செயல்படுத்தும் வகையில், வாஷிங்டன் நடந்து கொள்ள
வேண்டும்...அமைதித் திட்டங்கள் தங்கள் பாதுகாப்பிற்குக் குறைந்த அளவிலாவது இல்லை என்று ரஷ்யாவிற்குத்
தோன்றினால், அவற்றைக் குறைமதிப்பீட்டிற்கு அது உட்படுத்திவிடும்." என்று இந்த அம்மையார் கூறியுள்ளார். ஆனால்
அத்தகைய நிலை தோன்றுவது, மொஸ்கோ மற்றும் வாஷிங்டன் கொண்டுள்ள பெரும் பசிக்கு இரைபோடாது.
Top of page
|