World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Georgian election worsens Russian-US tensions

ஜோர்ஜியாத் தேர்தல் ரஷிய-அமெரிக்க நெருக்கடிகளை மோசமாக்கியுள்ளது

By Simon Whelan
12 January 2004

Use this version to print | Send this link by email | Email the author

மிகையில் சாகேஷ்விலி (Mikhail Saakashvili) ஜனவரி 4ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகத்தான வெற்றி கொண்டார் என்ற அறிவிப்பு உறுதியாக வரத்தான் போகிறது. நாட்டு மக்களில் பாதிப் பேராவது வாக்களித்திருந்து, இந்த முடிவை சட்டநெறியாக்கிவிடுவர். இறுதி முடிவுகள் வெளியாகவில்லையென்றாலும்கூட, வாக்குகள் பதிவான பின்னர் எடுத்த கணிப்பின்படி, குறிப்பிடத்தக்க வித்தியாசத்தில் சாகேஷ்விலி வெற்றிபெறுவார் என்று இருக்கிறது. இந்த 37 வயதான வேட்பாளர் குறைந்தது பதிவான வாக்குகளில் 85 வீதங்கள் பெற்றிருப்பார் என்றும், சிலர் 90 வீதங்களை பெற்றிருப்பார் என்றும் கூறுகின்றனர். அதிகாரபூர்வமான வாக்கு எண்ணுதல் ஜனவரி 12 ம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூரைச் சேர்ந்த கருத்துரையாளர்கள், Nino Burjandze என்பவர் பாராளுமன்றத்தின் அவைத் தலைவராக வருவார் என்றும், ஆட்சியைக் கவிழ்த்த மூவர் குழுவில் மூன்றாமவரான Zhurab Zhavnia என்பவர் பிரதம மந்திரிப் பதவிக்கு வலுவான போட்டியாளராக இருப்பார் என்றும் கூறுகின்றனர்.

வாக்குப் பதிவிற்கு வந்திருந்த ஜோர்ஜிய மக்களிடையே, சாகேஷ்விலியிடமிருந்து எதிர்பார்ப்புக்கள் அதிகமகவே உள்ளன. பழைய வக்கீலுக்கு வாக்களித்தவர்களில் பலர் தங்களுடைய வாக்குகளுடன் சிறிய குறிப்புக்களில் செய்திகளை, "மிஷா, ஒய்வூதியக்காரர்களை மறந்துவிடாதீர்கள்", "மிஷா, ஊழலை எதிர்த்துப் போராடுங்கள்" போன்றவற்றைக் குறித்திருந்தனர். (மிஷா என்பது மிக்காயிலுடைய சுருக்கமான பெயர் வடிவமாகும்.)

சாகேஷ்விலி இத்தகைய உற்சாகமான எதிர்பார்ப்புக்களை சற்று நிதானத்திற்குக் கொண்டு வருவதுபோல், ரோமாபுரி ஒரு நாளில் கட்டப்படவில்லை என்ற எச்சரிக்கையை ஜோர்ஜியர்களுக்குக் கொடுத்துள்ளார். ஜோர்ஜியாவின் தேசியக் கடன் கிட்டத்தட்ட 1.7 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. சாகேஷ்விலியுடைய குழு சர்வதேச நாணய நிதியம் (IMF), மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் நெறிகளை முற்றிலும் பின்பற்றப்போவதாகத் தெரிவித்துள்ளது.

ஜோர்ஜியத் தேர்தல்கள் நடந்த உடனேயே சர்வதேச நாணய நிதியம், பெப்ருவரி மாதத் துவக்கத்தில், புதிய ஜோர்ஜிய அரசாங்கத்துடன், புதிய கடன் திட்டம் பற்றிய பேச்சுவார்த்தைகளை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து Tbilisi க்கு இனி கிடைக்க இருக்கும் கடன்கள், ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும் அது தொடர்பாக கடும் சிக்கன நடவடிக்கைகளும், சமூகநலத் துறையில் வேலையிழப்புக்களும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

"மிஷா" என்றே அழைக்கப்பட்ட, சமீபத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பழைய ஜனாதிபதி எட்வாட் ஷேவானாட்சே, (Eduard Shevardnadze) தன்னுடைய வாக்கு சாகேஷ்விலிக்குத்தான் என்ற விருப்பத்தையும் அறிவித்துள்ளார். புதிதாகப் பதவியேறுபவரைப் பெருந்தன்மையுடன் புகழ்ந்ந பின்னர் ஷேவர்நாட்சே, மக்களுடைய எதிர்பார்ப்புக்களை அதிகம் உயர்த்த வேண்டாம் என்று சாகேஷ்விலிக்கு எச்சரிக்கையாகக் கூறினார். "அவர் பேசுவதைக் குறைத்துக் கொண்டு, அதிகமாக வேலையைச் செய்யவேண்டும்" என்றார்.

பல ஜோர்ஜியர்கள் சாகேஷ்விலியைப் பற்றித் தவறான தோற்றக் கருத்துக்களைக் கொண்டுள்ள போதிலும் அவர்களுடைய பொறுமை காலவரையற்று நீடிக்காது. Dato Bashidze என்ற 40 வயதான ஜோர்ஜியர், பெரும்பாலானவர்களைப் போலவே வரவையும் செலவையும் சரிக்கட்டுவதற்குத் திணறுபவர். வரம்பிற்குட்பட்ட பொறுமையைப் புதிய ஜனாதிபதியிடம் காட்டுவதைப் பற்றி New York Times இடம் சாகேஷ்விலியைப் பற்றிக் கூறுகையில், "அவருக்கு கால அவகாசம் குறுகியதாகத்தான் இருக்கும். எங்களுடைய தேவைகளுக்காக உழைப்பதற்குத்தான் அவரைத் தேர்ந்தெடுத்தோம்" என்றார்.

Tbilisi ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ், ஷேவர்நாட்சே அமைதியுடன் பதவியிலிருந்து இறங்கியதற்காக நன்றி தெரிவித்து கடிதம் ஒன்று எழுதியதாகத் தெரியவந்துள்ளது. இந்தக் கடிதம் பழைய தலைவர் போதிய அனுபவம் இல்லாத புதிய ஆட்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறது.

வாஷிங்டனில் திட்டமிடப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு என்பதைத் தவிர, ஷேவர்நாட்சே இடமிருந்து சாகேஷ்விலி ஆட்சிக்குத் தொடர்ந்தது என்பது முற்றிலும் நாட்டின் உள்விவகாரம் ஆகும். புதிதாகப் பதவியேற்றிருக்கும் ஜனாதிபதி மற்றும் அவருடைய பழைய குரு இருவரும் ஜனாதிபதி மாளிகையில் ஒன்றாகக் குடியிருப்பார்கள் என்று தெரிவதுடன், ஷேவர்நாட்சேயுடைய குடும்பம் முறையற்றுச் சேர்த்துள்ள பணத்திற்கு எவ்வளவு வரிவிதிப்பது என்பது பற்றியும் உடன்பாடு கொண்டுள்ளனர் என்ற வதந்திகள் பரவியுள்ளன.

தன்னுடைய அரசாங்கத்தின் முதல் விருப்பங்களாக ஊழல் கடுமையாக அடக்கப்படும், சட்டத்தின் ஆட்சி மேம்பாட்டுடன் நிறுவப்படும் மற்றும் ஜோர்ஜிய நீதித்துறையும் நாடும் பாதுகாக்கப்படும் என்பவையாக இருக்கும் என்று சாகேஷ்விலி தெரிவித்துள்ளார். இது மிகச் சிறிய விஷயம் இல்லை. ஜோர்ஜியப் பொருளாதாரம் நிலைகுலைந்துள்ளது. நாட்டு மக்களின் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் வறிய நிலையில் வாழ்கின்றனர். மரபுவழியிலான மத்தியதர வர்க்கம் முற்றிலும் சரிந்துள்ளதுடன், வேலையின்மை தலைவிரித்தாடுகின்றது. அரசாங்கக் கருவூலங்கள் ஒட்டடையைத்தான் சேகரிக்கின்றன. சாகேஷ்விலியின் திட்டத்தில் ஜோர்ஜியப் பெருந்தலைகள் மொத்தமாக உருளாவிட்டால் செயல்படுத்தப்பட முடியாது. அத்தைகைய பணிக்கு, ஜனாதிபதி வருங்காலத்தில் ஓர் உயர்மட்ட செயல்படுத்தும் அமைப்பை நிறுவப்போவதாக அறிவித்துள்ளார்.

தன்னுடைய நிர்வாகம் திறமையுடன் பதவியில் அமர்த்தியுள்ள ஜனாதிபதிக்கு, புஷ் Orthodox Christmas Day ஐப் பயன்படுத்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். விரைவில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யுமாறும் வாஷிங்டன் சாகேஷ்விலியை அழைத்துள்ளது.

அவர்களுடைய உரையாடலைப் பற்றிச் செய்தி ஊடகத்திடம் பேசிய, புதிய Tbilisi அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளரான ஜோர்ஜி அர்வலேட்ஜ் என்பவர், சர்வதேச நிலைபற்றியும் பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றியும் தொடர்ந்து முறையாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று சாகேஷ்விலிக்குப் புஷ் தெரிவித்ததாகக் கூறினார். சாகேஷ்விலி தாங்கள் நியமனம் செய்துள்ள நபர் என்பதை அவர் கணமேனும் மறப்பதற்கு வாஷிங்டன் அனுமதிக்காது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொலின் பவல், ஜனவரி 25 ம் தேதி சாகேஷ்விலி பதவி ஏற்க இருக்கும் தினத்தில் வரவிருப்பதுடன், அவருடன் தொடக்கப் பேச்சுவார்த்தைகளையும் நடத்துவார்.

தெற்கு காகசஸ் பகுதியில் தனக்குக் கிடைத்துள்ள தற்பொழுதைய வாய்ப்பைச் சிறிது காலம் கூட வீணடிக்க விரும்பாத பென்டகன், தேர்தல் முடிந்தவுடனேயே, ஜோர்ஜியாவின் அரசாங்கம் இராணுவத்தின் தன்மையைத் தனியார்மயமாக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. கார்டியன் (Guardian) செய்தியின்படி, அவர்கள் ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ அதிகாரிகள் குழு ஒன்றுடன் தொடர்பு கொண்டு, ஜோர்ஜிய அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கவும், ஆலோசனை கூறவும் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது. இந்தச் செய்தியைக் கேட்டவுடன் மாஸ்கோவின் புட்டின் ஆட்சி இறகுகளைக் கக்குவதாக அறியப்படுகிறது.

Tbilisi ற்கு ஏற்கனவே டிசம்பர் மாதம் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பெல்ட் விஜயம் செய்தபின், அங்கு இருபது, முப்பது இராணுவ அதிகாரிகள் இருப்பதாகத் தெரிகிறது. இக்கூலிப்படையினர், அதிகாரபூர்வமாக "தனியார் பாதுகாப்பு ஆலோசகர்கள்" என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வாஷிங்டனுடைய பாதுகாப்பு நிறுவனமான Cubic ஆல் நியமிக்கப்பட்டவர்கள் என்பதுடன், மூன்று வருடங்களுக்கு 15 மில்லியன் டொலர்கள் ஒப்பந்தத்தை பென்டகனுடன் பெற்றுக்கொண்டு ஜோர்ஜியாப் பாதுகாப்பிற்காக ஆதரவளிப்பர்கள் ஆவர்.

பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த மேலைநாட்டுத் தூதர் ஒருவர், "இராணுவப்பிரிவுகள் குறிப்பிட்ட இலக்கைக் கைப்பற்றிப் பாதுகாக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும் என்பது இலக்குகளில் ஒன்றாகும். ஆலோசகர்கள் அமெரிக்கப் பாதுகாப்புத் தொடர்புத்துறையுடன் இணைந்து Tbilisi துதரகத்திலும், Stuttgart லுள்ள ஐரோப்பியக் கட்டுப்பாட்டு மையத்துடனும் சேர்ந்து பணியாற்றுவார்கள்" என்று கூறியதாக கார்டியன் அறிவித்துள்ளது.

இதே தூதர், இத்திட்டம் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள மூன்று ஆண்டுகாலத் திட்டத்திற்குப் பின்னும் தொடரலாம் என்று கூறியுள்ளார்.

அவர்களுடைய முக்கியமான பணிகளில் ஒன்றாக, ஜோர்ஜியாப் பகுதிவழியே செல்ல உள்ள எண்ணெய், எரிவாயுக் குழாய்களைப் பாதுகாப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. "குறிப்பிட்ட இலக்கைக் கைப்பற்றிப் பாதுகாத்தல்" என்ற பேச்சில், பிரிந்து சென்றுள்ள குடியரசுகளான தெற்கு ஓசேஷியாவிற்கும், அப்காஜியாவிற்கும் (South Ossetia and Abkhazia) ஆபத்து நிறைந்த உட்குறிப்புக்கள் இருக்கின்றன. அவர்கள் மீண்டும் கட்டாயமாக ஜோர்ஜியாவுடன் இணையவேண்டும் என்றும் ஜோர்ஜியாவிற்குள் உள்ள ரஷிய தளங்கள் மூடப்படவேண்டும் என்றும், இவற்றிற்கு அச்சுறுத்தும் முறையில் சாகேஷ்விலி தெரிவிப்பதில் பிரியமுள்ளவராகக் காணப்படுகிறார்.

இது உடனடியாக பகுதித் தன்னாட்சியுடைய அஜாரியாவில் (Ajaria) எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்யும். அப்பகுதியின் தலைவரான ஆஸ்லான் அபஷிட்ஜே (Aslan Abashidze) என்பவர் முதலில் ஷேவர்நாட்சே அகற்றப்பட்டு சாகேஷ்விலி பதவிக்கு வந்ததற்கு அங்கீகாரம் தர மறுத்திருந்தார். அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் மைல்ஸைச் சந்திக்கும் வரை, அபஷிட்ஜே தன்னுடைய முடிவான ஜனவரி 4 ம் தேதித் தேர்தலைப் புறக்கணிப்போம் என்ற அச்சுறுத்தலை நிறுத்தவில்லை.

இப்பகுதியில் பின்னர் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் நடந்த சில தினங்களுக்குள்ளாகவே அபஷிட்ஜே, அஜாரியாவில் மீண்டும் நெருக்கடி ஆட்சியைக் கொண்டு வந்தார். கடைசியாக இருந்த நெருக்கடிநிலை, ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப்பதிவு செய்யப்படுவதற்கு முதல் நாள்தான் நீக்கப்பட்டிருந்தது. அஜாரியத் தலைநகரான படூமியிலிருக்கும் (Batumi) ஆட்சி, "சில சக்திகள்" தன் தலைமையை அகற்ற முயலுவதாகக் கூறியுள்ளது. சாகேஷ்விலியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த தேசிய இயக்கம் மற்றும் மாணவர் குழுவான கம்ராவின் (Kmara) உறுப்பினர்களை அஜாரியப் படைகள் கைது செய்தன. அப்பகுதிப் போலீசார், சட்ட விரோதமான ஆயுதங்கள், போதைப் பொருட்கள், டொலர்கள் ஆகியவற்றை கம்ரா உறுப்பினருடைய உறவினர் ஒருவரின் வீட்டில் கண்டெடுத்ததாகக் கூறினர்.

Kmara உறுப்பினர்கள் படூமியில், "அபஷிட்ஜேயின் சர்வாதிகாரம் வீழ்க" என்று கூறியிருந்த துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர். ஜோர்ஜியாவின் உள்துறைத் துணை மந்திரியான Givi Ugulava, அபஷிட்ஜே தன்னுடைய அதிகார வரம்பை மீறி நடந்து கொள்ளுவதாகக் கூறினார். "நாட்டின் நெருக்கடி நிலை பற்றிப் பிரகடனம் செய்வது, ஜோர்ஜிய ஜனாதிபதியுடைய சிறப்பு உரிமையாகும்" என்றார்.

Zhurab Zhvania என்பவர், அபஷிட்ஜேயின் நடவடிக்கைகள் முற்றிலும் கடுமையான விளைவுகளைத் தரும் என்று அச்சுறுத்தினார்.

முன்னர் மேற்கோளிடப்பட்ட மேலை நாட்டுத்தூதர் கார்டியனிடம், புஷ் நிர்வாகம் ஜோர்ஜியாவை இராணுவக் கருவிகளும், எரிபொருளும் நிரப்பிவைக்கப்பட இருக்கும் "ஒரு முன்னணி நடைமுறை பகுதியாக" மாற்றும் திட்டத்தைக் கொண்டுள்ளதாகவும் கூறினார். கூலிப்படையுடன்கூட, இத்தகைய திட்டத்தைச் செயல்படுத்துவது வாஷங்டனுக்கு "உண்மையான தளம் ஒன்றை" ஜோர்ஜிய நிலப்பகுதியில், தூதரக முயற்சிகள் என்ற தொந்திரவு இல்லாமல் நிரந்தரத் தளத்தை அமைக்கும் நிலையைக் கொடுக்கும்.

ரஷிய இராணுவம், இந்த நாட்டில் இரண்டு இராணுவத் தளங்களைக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் Tbilisi மற்றும் வாஷிங்டன் ஆகிய இரண்டு இடங்களிலும் இருந்து எரிச்சல் மூட்டும் வகையில், அவற்றைக் கலைப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பிடிக்கும் என்று கருதப்படுகின்றது. ஆனால், கிரெம்ளின், தெற்கு காகசஸிலிருந்து 2011 என்ற புதிய காலத்தில்தான் தங்கள் படைகளை திரும்பப்பெறமுடியும் என்று கூறியுள்ளது.

Tbilisi யில் நடந்த பதவிமாற்றத்தில், புட்டின் ஆட்சியை முழுவதுமாகத் தந்திரமுறையில் வாஷிங்டன் வெற்றி கண்டதற்கு, மாஸ்கோவில் ஒருவரையொருவர் பெரும் குறைகூறலுக்கு உட்படுத்துவது அதிகமாயுள்ளது. சில ஆலோசகர்களும், கருத்துக்கூறுவோரும், Tbilisi யுடன் ஒத்துழைக்குமாறு மாஸ்காவை வலியுறுத்தியுள்ளனர். மற்றவர்கள் சாகேஷ்விலி தன்னுடைய பொது அறிவுப்புக்களில் ஜோர்ஜியா, ரஷியாவுடன் உறவுகளை அபிவிருத்தி செய்துகொள்வதாகக் கூறியிருப்பது நம்பத்தகுந்த உண்மையில்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாகேஷ்விலி வெற்றி பெற்றவுடன் கிரெம்ளினுடைய முதல் எதிர்விளைவு, நேரத்தைக் கடத்துதல் என்பதாக இருந்தது. Versiia என்ற செய்தித்தாளில் Leonid Radzikhovskii என்பவர் ஒரு கட்டுரையில் "இதுவரை, ஜோர்ஷியாவைப் பற்றி என்ன செய்வது என்பது பற்றி, கிரெம்ளின் முடிவு எடுக்கவில்லை" என்று கூறியுள்ளார். நேரம் கடத்தும் நோக்கத்துடன், அயலுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் Aleksandr Yakovenko என்பவர் Tbilisi இல் உள்ள புதிய அரசாங்கம் பற்றிய அவர்களது கண்ணோட்டம் எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கு, அதிகாரபூர்வமான முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே எத்தகைய பார்வையைக் கொள்ளுவது என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்று கூறினார்.

ஜோர்ஜ் சோராஸ் என்னும் பில்லியனரின் ஆதரவில் நடத்தப்படும் Eurasianet.com என்ற இணையத் தளம், புட்டினுடைய ஆட்சி இனைக்கமுடியாத அளவிற்கு Tbilisi உடன் பிளவுண்டிருப்பதாக, மாஸ்கோவின் கார்நிகி மையத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் Aleksei Malshenko என்பவர் கூறுவதாக எழுதியுள்ளது. மற்ற வர்ணனையாளர்கள், Tbilisi இடம் கிரெம்ளின் அச்சுறுத்தும் போக்கைக் கொண்டிருப்பதுபோல் காட்டிக் கொள்ளுவது, உறுதியான கொள்கையற்ற நிலையை மூடிமறைக்கும் முயற்சிதான் என்று தெரிவிக்கின்றனர்.

அயலுறவு, பாதுகாப்புக் குழுவின் தலைவரான Sergei Karaganov என்பவர் சோவியத் ஒன்றியம் சரிந்ததிலிருந்தே தொடர்ந்து வந்திருக்கும் ரஷிய அரசாங்கங்கள் தீவிரமான முறையில் ஜோர்ஜியா அல்லது தெற்கு காகசஸ் பற்றிய கொள்கைகளை வகுக்கவில்லை என்று கூறியிருப்பதாக Eurasianet.com மேற்கோளிட்டுத் தெரிவித்துள்ளது.

"இது ஒரு பெரிய சக்தியைப் பற்றிய கொள்கை அல்ல, அதன் கேலிக்கூத்தே ஆகும்."

ஜோர்ஜியாவுடன் நட்புமுறையான கொள்கையைக் கொண்டால், ரஷியா அதன் பூகோள ரீதியான தெற்குப்பகுதிக்கு அருகில் இருக்கும் நிலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று Karagonov மேலும் கூறியுள்ளார். "நாம் ஜோர்ஜியர்களுக்குக் காரட்டைக் கொடுக்கத் துவங்குவோம். தேவையானல் எப்பொழுதும் தடியையும் எடுத்துக் கொள்ளலாம்" என்று கறுப்பான உணர்வுகள் ததும்ப அவர் கூறினார்.

மாஸ்கோவில் கூடுதலான மரபு வழியில் அயலுறவுக் கொள்கை வகுப்போர் சாகேஷ்விலியுடைய சமரசப் போக்குடைய அலங்காரச் சொற்களை வளைக்கும் முயற்சியைத்தான் கொண்டிருக்கின்றனர். அரசியல் ஆய்வு மையத்தினுடைய இயக்குனரான, கிரெம்ளினுடன் நெருங்கிய தொடர்புடைய Sergei Markov என்பவர் Tbilisi உடைய உண்மையான கருத்துக்களைப் பற்றி அவநம்பிக்கையுடன்தான் இருக்கிறார். "ஜோர்ஜியாவில் உள்ள மூவர் ஆட்சி, ரஷிய இராணுவப் படைகளை நாட்டிலிருந்து அகற்றுவதையும், மாஸ்கோவின் நிலைப்பாடு பற்றி சர்வதேச அரங்குகளில் குறைகூறுவதுமான கொள்கையைத் தொடர்ந்து கொள்ளும்."

Tbilisi யில் இருக்கும் புதிய ஆட்சி, அமெரிக்க ஆதரவுடன் NATO உடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் சேர்ந்து இணைந்திருக்கும் என்றும், நாட்டை ரஷியாவின் செல்வாக்கிற்கு அப்பால் அழைத்துச் சென்றுவிடும் என்றும் மாஸ்கோ பயப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் வாஷிங்டன் தனக்கு அருகே இருக்கும் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தத் தயாராகும் நிலையை, மாஸ்கோ கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்திருக்காது.

Top of page