WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Exploitation and political cynicism
Bush unveils "bracero" program for immigrant workers
சுரண்டலும் அரசியல் சிடுமூஞ்சித்தனமும்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக "பிரசீரோ" திட்டத்தை, புஷ் வெளிப்படுத்துகிறார்
By Bill Vann
9 January 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
அரசியல் சிடுமூஞ்சித்தனத்தில் ஆழ்ந்திருந்த ஒரு சைகையின் மூலம், புதன்கிழமையன்று
ஜனாதிபதி புஷ் அமெரிக்காவில் வரம்பிற்குட்பட்ட, தற்காலி அந்தஸ்தை, ஆவணங்கள் ஏதுமில்லாத 12 மில்லியன்
புலம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கும் ஒரு தெளிவற்ற திட்டத்தை முன்வைத்தார். இந்தத் திட்டத்தை இப்பொழுதுள்ள
முறையை விடக் கூடுதலான "மனிதத்தன்மை" வாய்ந்தது என்று உயர்வாகவும் பேசினார்; ஆனால் அமெரிக்க ஜனாதிபதியின்
திட்டம், பெருநிறுவனங்கள், வேலையளிப்போர் ஆகியவர்களுடைய நலன்களைக் கூடுதலாகக் கருத்திற்கொண்ட
தன்மையை பெற்றுள்ளது. இது நிறைவேற்றப்பட்டால், சட்டபூர்வமாக, ஓர் இரண்டாந்தர, பெரும் சுரண்டப்படுதலுக்கு
உட்படுத்தப்படும் தொழிலாளர் அடுக்கைக் கொள்ளும் வழிவகையை தோற்றுவித்துவிடும்.
வெள்ளை மாளிகையில் பேசுகையில் புஷ், "அமெரிக்கக் கனவு", "தவறாகப் பயன்படுத்தப்பட்டு
சுரண்டப்படும்" தொழிலாளர்களை "இருட்டிலிருந்து" வெளியே கொண்டுவருதல் போன்ற அலங்காரச் சொற்களைக்
கூறினார். புலம்பெயர்ந்தோர் நலன் வாதிடும் வழக்குரைஞர்களோ, இவருடைய திட்டத்தைத் தளைகளுக்குட்பட்ட
அடிமைத்தனமான முறை, தீவிரமான அடக்குமுறை, பெருமளவு வெளியேற்றப்படுதல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்
தன்மையுடையது என கண்டித்துள்ளார்கள்.
இப்பொழுது அமெரிக்காவில் உரிய பத்திரங்கள் இல்லாமலுள்ள தொழிலாளர்கள்,
நிரந்தரமாக வாழும் உரிமை, குடியுரிமை பெறுதல் இவற்றைப்பற்றி புதிய வழிமுறை எதுவும் இந்தத் திட்டத்தில்
இல்லை. "பொதுமன்னிப்பு, தக்க ஆவணங்களில்லாத தொழிலாளர்கள் எவ்விதத்தடையும் இல்லாமல் முறையாகக்
குடியுரிமை வழங்கப்படுதல்" போன்ற நடவடிக்கைகளை தான் எதிர்ப்பதாகவும், புஷ் வெளிப்படையாக
அறிவித்தார்.
மாறாக, இத்திட்டம், குறைந்த உரிமைகளும், வேலைகொடுப்போர், மற்றும்
அரசாங்கத்தின் தயவை நம்பியிருக்கவேண்டிய, "தற்காலிகத் தொழிலாளர்கள்" என்ற ஒரு புதிய பிரிவைத்
தோற்றுவிக்கும்.
இந்த அறிவிப்பு, குடியரசுக் கட்சியின் திட்டமிடுவோர், கலிபோர்னியா, டெக்சாஸ்,
புளோரிடா உட்பட பல மாநிலங்களிலிருக்கும் ஹிஸ்பானிய மக்களுடைய ஆதரவைப் பெறுவதை நோக்கமாக உடைய
தேர்தல்-ஆண்டின் கீழ்த்தரமான தந்திர உத்தியாகத்தான் பரவலாகக் கருதப்படுகிறது. இந்தத் திட்டம் மிகச்
சுருக்கமாக, விவரங்கள் எதையும் தெரிவிக்காமலிருந்ததுடன், தேசியச் சட்டமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் பல
குடியேற்றச் சட்டவரைவுகளைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
புஷ்ஷினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், ஏற்கனவே முறையான
ஆவணங்கள் இல்லாமலுள்ள குடிபெயர்ந்தோரும், அயல்நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வரக்கோரும்
தொழிலாளர்களும், நாட்டில் மூன்று ஆண்டுகள் தங்குவதற்கான உரிமையும், அவர்கள் வேலையில் இருந்தால் மற்றும்
ஒருமுறை அது புதுப்பிக்கப்படக்கூடிய வாய்ப்பும் கொடுக்கப்படுவதற்கான தற்காலிக தொழிலாளர் அந்தஸ்திற்கு
விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.
முறையான ஆவணங்கள் இல்லாமல்
அமெரிக்காவில் வாழும் தொழிலாளர்கள், தாங்கள் பணியில்
இருப்பதற்கான ஆதரவைக் கொடுப்பதுடன், பாதுகாப்பு பற்றிய சோதனைக்கு உட்படுவதோடு, ஒரு கட்டணமும்
செலுத்தவேண்டும். வெளிநாட்டிலிருந்து வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்கள், அமெரிக்கத் தொழிலாளர்களால்
தேவையில்லை என்று அரசாங்கம் எவ்வாறோ முடிவுகொள்ளும் பணிகளில் மட்டும்தான் அமர்த்தப்படும் தகுதியைப்
பெறுவார்கள். இந்த வேலைகள் அமெரிக்கத் தொழிலாளர் துறையினால் பட்டியலிடப்பட்டு தொழிலாளர்
ஒப்பந்தக்காரர்களின் உதவியுடன் நிரப்பப்படும்.
நிர்வாகமும் செய்தி ஊடகத்தின் சில பிரிவுகளும், இத்திட்டம் குடிபெயரும்
தொழிலாளர்கள் தவறான முறையில் பயன்படுத்த ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்பதற்கு பாதுகாப்புக்
கொடுக்கிறது என்ற கூற்று பெருமளவு கண்துடைப்பு ஆகும். உண்மையில் இது எந்தப்புதிய உரிமைகளையும் தொழில்
செய்யும் இடங்களில் கொடுக்கவில்லை. இப்பொழுதுள்ள சட்டம் ஏற்கனவே, முறையான ஆவணங்கள் இல்லாத
குடிபெயர்ந்துள்ள தொழிலாளிகளுக்கு, குறைந்த ஊதியப் பாதுகாப்பு, தொழிலாளர்களுக்கான இழப்பீடு,
சுகாதாரம், பாதுகாப்புத்தரங்கள், கூடுதல்நேரப் பணிக்கான ஊதியம், சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமை
ஆகியவற்றை பெயரளவில் கொடுத்துள்ளது.
இத்திட்டம் நடைமுறைக்கு வந்தபின், இப்பொழுது இருப்பதைவிட,
வேலைகொடுப்பவர்கள் இந்த விதிகளைக் கண்டிப்புடன் கடைபிடிக்கவேண்டிய நிலைமையை எதிர்பார்ப்பார்கள் என்று
நம்புவதற்கான காரணங்கள் எதுவும் இல்லை. உண்மையில், இத்திட்டம் இந்தத் தொழிலாளர்களை தங்களுக்கு வேலை
அளிப்போர்மீது இன்னும் அதிகமாக நம்பவேண்டிய நிலையில் தள்ளி, வேலைகொடுப்போர் தயவில்தான் நாட்டிற்கு
வருவதாக ஆகிவிடும்.
"இத்தகைய சட்டத்தின்மூலம், நாம் மிக அதிக எண்ணிக்கையில் அடிப்படையில் மிகுந்த
தளைகளை உடைய வேலையாட்களை தோற்றுவிக்கத்தான் போகிறோம்." என்று ஜோர்ஜ்டெளன் பல்கலைக் கழக
குடியேற்றத்துறை வல்லுநரும், 1990 களில் அமெரிக்காவில் குடியேறுவோர் பற்றிய சீர்திருத்தக் குழுவின்
தலைவராக இருந்தவருமான சூசன் எப். மார்டின்,
Washington Post இடம் தெரிவித்தார். "கடந்த
25 ஆண்டுகளில் வந்துள்ள குடியேற்றம் பற்றிய திட்டங்களில் மிகுந்த கஷ்டங்களை கொடுக்கக் கூடிய திட்டம்தான்
புஷ்ஷின் திட்டம்" என்றும் இந்த அம்மையார் சேர்த்துக் கொண்டார்.
La Raza வின் தேசியக் குழு எனப்படும் ஒரு
ஹிஸ்பானிய குடியேற்ற உரிமைகள் குழுவின் தலைவரான Raul Yzaguirre,
இரண்டாம் உலகப்போரின்போது தொடங்கப்பெற்ற "பிரசிரோ
திட்டத்தை (Bracero Programme) மறுபடியும் சூடாக்கிக்
கொடுத்துள்ள பதிப்புத்தான் இது" என்று புஷ்ஷின் திட்டத்தைப்
பற்றி தெரிவித்துள்ளார்; அத்திட்டத்தின்படி மில்லியன் கணக்கில் மெக்சிக்க பண்ணைத் தொழிலாளர்கள்,
அமெரிக்காவிற்குள் தற்காலிக ஒப்பந்தத்தில் வரவழைக்கப்பட்டு, மிருகத்தனமான முறையில், விவசாய நிலங்களில்
சுரண்டப்பட்டனர். "வர்த்தக சமூகத்தினருக்கு தேவைப்படும் குடியேற்றத் தொழிலாளர்களைப் பெறுவதற்கு
முழுவழிவகை செய்வதுடன், தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த நலன்கள் மட்டுமே கிடைக்குமாறும் இருக்கும் என்றும்
தோன்றுகிறது" என்று புஷ் திட்டம் பற்றி அவர் மேலும் குறிப்பிட்டார்.
3 ஆண்டுகள் தற்காலிக அந்தஸ்திற்குப் பிறகும், கூடுதலான கால அளவு
முடிந்தபின்னர், தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுவர். அவர்கள்
பச்சை அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று இருந்தபோதும்கூட, அந்த ஆவணங்கள் கிடைப்பதற்காக காத்திருக்கும்
காலம் மிகவும் பொறுத்துக்கொள்ளமுடியாததாகும். -பெரும்பாலான மெக்சிக்க மக்களுக்கு 8லிருந்து 15 ஆண்டுகள்
வரை ஆகும்.
தன்னுடைய நிர்வாகம், ஒவ்வொரு ஆண்டும் குடியுரிமை இல்லாதவர்களுக்கு நாட்டில்
நிரந்தரமாக வசித்து வேலைபுரியும் உரிமையைக் கொடுக்கும் பச்சை அட்டை வழங்குதலை அதிகரிக்கும் என்று புஷ்
கூறினாலும், எண்ணிக்கையின் அளவைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை.
தற்பொழுது, அமெரிக்க அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் புதிய பச்சை
அட்டைகளின் எண்ணிக்கை 140,000 அதிகபட்சம் என்று நிர்ணயித்துவைத்துக்கொண்டுள்ளது. ஏற்கனவே இந்த
எண்ணிக்கையைப்போல் 100 மடங்கு அதிகமான ஆவணங்களற்ற குடியேறியோர் நாட்டில் இருப்பதுடன் இன்னும்
எத்தனையோ மில்லியன் மக்கள் வெளிநாடுகளிலிருந்து அவ் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்தவாரம் முடிவடைந்த
பச்சை அட்டை லாட்டிரியில், கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் 110,000 என்று நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு
விண்ணப்பித்திருந்தனர்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர், இறுதி விளைவு வெளியேற்றப்படுதல் என்பது வரவுள்ள
திட்டத்தின் கருத்து என்பது தெரிந்தாலும்கூட, இந்தத்திட்டத்தின் கீழ் பங்கு பெறுவதற்கு ஏற்கனவே இருக்கும் மிகப்
பெரிய எண்ணிக்கையிலான, முறையான ஆவணங்கள் இல்லாத குடியேறிய தொழிலாளர்கள் வருவரா என்பது பெரும்
கேள்விக்குரியதாகும். அவர்கள் தங்களை விசாரணைக்கும், உடல்கூறுபற்றிய அறிவியல் தோற்றப் பதிவுமுறைக்கும்
(Biometric Imaging)
உட்படுத்திக்கொள்ளவேண்டும்.
இந்தத் திட்டத்திற்கு மிக ஆர்வமான வரவேற்பு, பெருவர்த்தக நிறுவனங்கள்
குழுவிடமிருந்து வந்துள்ள; குடியேறும் தொழிலாளர்களை மிக அதிகம் சுரண்டும் தன்மை கொண்டுள்ள இப்போதைய
முறையை ஒழுங்கிற்குட்படுத்தி சட்டபூர்வமாக ஆக்குவதாக இருக்கும் என்பது அவர்கள் கருத்து.
"இருக்கக் கூடிய வேலைகளுக்கு தக்க தொழிலாளர்களை நாம் அமர்த்தாவிட்டால்,
பொருளாதாரம் விரிவாக்கப்படமுடியாது. இன்றைய அறிவிப்பு நமக்கு முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பை கொடுத்து,
அறிவார்ந்த, விரிவான குடியேற்றச் சீர்திருத்தத்திற்கும் வகை செய்யும்."
என அமெரிக்க வர்த்தகக்குழுவின் துணைத்தலைவர் ராண்டி
ஜோன்சன் கூறியுள்ளார்.
புஷ்ஷினுடைய குடியரசுக்கட்சியிலேயே சில பிரிவுகள், முறையான ஆவணங்கள் இல்லாத
தொழிலாளர்களைக் கொடுமையாக நடத்தும் தன்மையைப் போதியவகையில் இந்தத் திட்டம் கொண்டிருக்கவில்லை
என்று எதிர்த்துள்ளனர். சான்றாக, சட்டமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சித் தலைவரான ரொம் டிலே
(டெக்சாஸ்-குடியரசுக் கட்சிக்காரர்), "சட்டவிரோதமாகப் புகுந்து குடியேறியவர்களை அமெரிக்க
விருந்தாளி-தொழிலாளர் போல் நடத்தும் திட்டத்தின் சலுகைகள், சட்டவிரோதப் போக்கு உடைய நடவடிக்கை
கொண்ட தொழிலாளர்களுக்கு வெகுமதி அளிப்பதுபோல் உள்ளது." என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றக் கீழ்ப்பிரிவு உறுப்பினரும், குடியேற்றங்கள் பற்றிய சட்டவரைவுகள்
தயாரிக்கும் குழு உறுப்பினருமான, கலிபோர்னியக் குடியரசிக்கட்சியின் எல்டன் காலேகி, புஷ்ஷின் திட்டம் "ஒரு
குற்ற நடவடிக்கையை மன்னிப்பதுபோலவும், உங்கள்விட்டு கார் ஷெட்டில் 100 டாலர் அச்சிடப்படுவதை
ஏற்பதற்கும் சட்டத்தின் முன் வேறுபாடு இல்லாத தன்மையைத்தான் கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
சட்டமன்றப் பெரும்பான்மை குடியரசிக் கட்சியின் மற்ற உறுப்பினர்களும், இத்திட்டம்
உடனடி முன்னுரிமை கொடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், எந்த வடிவமைப்பிலும் அண்மையில்
சட்டபூர்வமாவதற்கு வழி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில், சமீபத்தில்தான் இதையும் விட குவிப்புக்
குறைந்திருந்த, விவசாயத் தொழிலாளர்களுக்கான சீர்திருத்தச் சட்டம் ஒன்றை, குழு மட்டத்திலேயே மடியுமாறு
செய்துவிட்டது.
தன்னுடைய திட்டத்திற்கும் அதே கதி கிடைக்கக் கூடாது என்பதற்காகத் தன்னுடைய
அரசியல் மூலதனத்திலிருந்து சிறிது செலவழிக்கும் கருத்து புஷ்ஷிற்கு இருக்காது என்றே தோன்றுகிறது. தன்னுடைய
ஹிஸ்பானிய வாக்காளர் தொகுப்பின் ஆதரவைப் பெறவேண்டும் என்ற கருத்துடன் அவர்களுடைய நண்பர்கள் போல்
காண்பித்துக்கொண்டு, அவர் அதேநேரத்தில், வெளிநாட்டில் பிறந்திருக்கும் தொழிலாளர்கள்பால் வெறித்தனமான
விரோதப்போக்கு உடைய, தன்னுடைய தீவிர வலது சாரித் தளத்தைத் திரட்டித் தக்கவைத்துக்கொள்ளவும்தான்
முற்படுவார்.
மெக்சிகோவில் மொன்டெர்ரி நகர அரையுலக உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளுவதற்கு
சிலநாட்கள் இருக்கும்பொழுது இந்த அறிவிப்பு வருமாறு அமைந்துள்ளது. புஷ் நிர்வாகம், செப்டம்பர் 11, 2001
பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு, குடியேறுவோரின் பிரச்சினையை புறக்கணிப்பது பற்றியும், வெளிநாடுகள்
மீதான போர்நடவடிக்கைகள் பற்றியும், உள்நாட்டில் குடியேறியவர்களுக்கு எதிரான போலீஸ்-அரசாங்கக் கடும்
நடவடிக்கைகளையும், ஜனாதிபதி Vicente Fox
உடைய மெக்சிக அரசாங்கம் கடுமையான குறைகூறலைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட, முறையான பத்திரங்கள் இல்லாமல் இருக்கும்
தொழிலாளர் தொகுப்பில் 70 சதவிகிதத்திற்கு மேலும் உள்ள மெக்சிக்கோ நாட்டுக் குடியேறுபவர்கள் பற்றி,
அதை ஒழுங்குபடுத்துவதற்காக Fox
உடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் தன்னுடைய ஜனாதிபதிக் காலத்தைப் புஷ் தொடங்கினார்; இந்தப்
பேச்சுவார்த்தைகள் திடீரென்று நிறுத்தப்பட்டுவிட்டன. புதன்கிழமையன்று தன்னுடைய திட்டம் தன்னிச்சையாக எடுக்கப்பட்டது
என்றும், மெக்சிக்கோவுடன் இதுபற்றிய பேச்சுவார்த்தைகள் கொள்ளப்படவில்லை என்றும் புஷ் கூறினார்.
புஷ்ஷின் திட்டத்திற்கு மெக்சிகோவிலோ அல்லது அமெரிக்காவிலுள்ள மெக்சிக்கோ
தொழிலாளரிடையேயோ எந்த உற்சாகத்தின் அடையாளமும் காணப்படாத நிலையில், பாக்ஸ் அரசாங்கம் அதை
ஒரு முன்னேற்றமான வளர்ச்சி என்றே கருதுகிறது. 2001 வசந்த காலத்திலும், கோடையிலும் நடந்த பேச்சு
வார்த்தைகளில், முறையான ஆவணங்கள் இல்லாத குடியேற்றத் தொழிலாளர்களை முறைப்படுத்த ஒரு அமைப்பு
வேண்டுமென்பது ஒரு மைய இடத்தைக் கொண்டிருந்தது என்ற உண்மை இருந்தபோதிலும்கூட, புஷ்ஷின் திட்டத்திலிருந்து
இது ஒதுக்கப்பட்டுவிட்டது.
மெக்சிக்கோவின் ஆட்சி உயர்சிறுகுழுவிற்கு, எல்லைக்கு வடக்கே, குடியேறிச் சென்றுள்ள
வறிய தொழிலாளரின் ஜனநாயக உரிமைகள் பற்றியவை, அடிப்படைப் பிரச்சினையாக இல்லை; நாட்டிற்கு வெளிநாடுகளின்
மூலம் கிடைக்கும் வருவாயில் இரண்டாம் இடத்தைக் கொண்டுள்ள, இந்த தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு உறுதியாகத்
தொடர்ந்து வரும் பணம்தான் முக்கிய பிரச்சினையாகும். பாக்ஸ் அரசாங்கம், இந்தத் தற்காலிக அந்தஸ்துத்
திட்டம் தொழிலாளருக்கு கொடுப்பதை, அத்தகைய வருமான ஆதாரத்தை உறுதிப்படுத்துவதாகத்தான் நினைக்கிறது.
Top of page |