WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு
Iran earthquake death toll tops 30,000
Poor planning, shoddy construction contribute to
catastrophe
ஈரான் பூகம்ப இறப்பு 30,000 ஆக உயர்வு
மோசமான திட்டமிடல், மோசமான கட்டுமானம் பேரழிவுக்கு பங்களிப்பு
By Kate Randall
6 January 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
பாம் பகுதியில் உடனடி நடவடிக்கையான இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக்கிடந்த உடல்களை
மீட்கும் பணி திங்களன்று நிறைவுற்றது. டிசம்பர் 26 அன்று அதிகாலையில் 6.7கு
(ஸிவீநீலீtமீக்ஷீ sநீணீறீமீ) வேகத்தோடு பூகம்பம் ஏற்பட்டதால்,
களிமண் செங்கற்களால் கட்டப்பட்டிருந்த 70 சதவீத வீடுகள் தரைமட்டமாகின. கட்டிடங்கள் இடிந்து நொறுங்கியதில்
பூகம்பத்தில் பலியானோரை சாம்பல் தூசிக்குள் சிக்கவைத்தது. புராதன இந்த பாலைவன குடியிருப்பு தெஹ்ரானுக்குத்
தென்கிழக்கே 600 மைல்களுக்கு அப்பால் உள்ள பூர்வீக பாலைவனப் பகுதியாகும்.
ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளின் மதிப்பீட்டின் படி இறந்தவர்களின் எண்ணிக்கை
30,000 முதல் 32,000 வரை இருக்கலாம். இதற்கு முன்னர் ஐ.நா 35,000 பேர் இறந்திருக்கலாம் என தெரிவித்திருந்தது.
ஈரானிய ரெட் கிரசன்ட் குழு (Iranian Red
Crescent) திங்கள் ஜனவரி 5 வரை இடிபாடுகளுக்கிடையிலிருந்த
உடல்களை மீட்டுக் கொண்டிருந்தனர். இறப்பின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். காயம் அடைந்தவர்களின் தொகை
இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு சமமாகும். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பூகம்பம்
நடைபெற்று 9 நாட்களுக்கு பின்னர் சென்ற சனிக்கிழமை இடிபாடுகளுக்கிடையிலிருந்து 97 வயதான மூதாட்டி ஒருவர்
மிகவும் வியப்பளிக்கின்ற வகையில் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறார்.
நகரத்தின் எந்தப் பகுதியையும் பூகம்பம் விட்டுவைக்கவில்லை. பெரிய வீடுகளும்
விழுந்திருக்கின்றன. செங்கற்களால் ஆன சாதாரண வீடுகளும் சரிந்திருக்கின்றன. இரண்டு மருத்துவ மனைகள் அழிந்துவிட்டன.
நகரத்தின் எல்லையில் இருந்த ஒரு சிறைச்சாலைக் கட்டிடம் பூகம்பத்தில் நொறுங்கியதால் கைதிகள் தப்பியோடிவிட்டனர்.
பாம் நகரத்தின் மிகப்பிரபலமான சுற்றுலா மையம் 38 மாடிகளைக் கொண்ட செங்கற்களால் அமைக்கப்பட்ட
கோட்டையாகும். இது பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை
பெரிதும் ஈர்த்த இந்த கோபுரம் பூகம்பத்தால் சரிந்துவிட்டது.
அண்மைக்கால ஈரான் வரலாற்றில் 1990 ஜூன் மாதம் தான் மிக கொடூரமான
பூகம்பம் ஈரானில் வடமேற்கு மாகாணங்ளான Ghilan,
Zandjan இரண்டையும் தாக்கின. இதில் 40,000 முதல்
50,000 பேர் பலியானார்கள். அந்த நேரத்தில் வெளிநாட்டு உதவியை பெறுவதற்கு மறுத்துவிட்ட ஈரான்
அரசாங்கம் கண்டிக்கப்பட்டது. தற்போதைய பூகம்பத்தில் உதவிகளை ஏற்றுக்கொண்டாலும், இவ்வியற்கை அழிவின்
விளைவான பாம் நகரத்தில் இவ்வளவு பெரிய உயிர்சேதம் ஏற்பட்டதற்கு அடிப்படைக்காரணம் மந்தப்போக்கும்,
சரியாக திட்டமிடாத நிலையும் உள்ளூர் மற்றும் தேசிய அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் தகுந்த கவனம்
செலுத்தாத நிலையும்தான்.
மீட்புப்பணிகள் உச்சக்கட்டமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் பாம் நகரத்தில்
30 நாடுகளைச் சேர்ந்த 1,700 சர்வதேச மீட்பு தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். 1981 இன் பணயக்கைதிகள்
நெருக்கடிக்கு பின்னர் ஈரானுடன் அமெரிக்காவிற்கு எந்தவிதமான இராஜதந்திர தொடர்புகளும் இல்லாதபோதும்,
ஈரானுக்கு உதவி வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை தற்காலிகமாக தளர்த்துவதற்கு தலைமை வெளியுறவுக்
கொள்கை ஆலோசகர்கள் யோசனைப்படி புஷ் நிர்வாகம் செயல்பட்டது. அதன்படி அமெரிக்க இராணுவ விமானங்கள்
டிசம்பர் 28 அன்று அவசர உதவிகளை வழங்கின. மற்றும் டிசம்பர் 30இல் 80 அமெரிக்க மருத்துவர்களும், மீட்பு
தொழிலாளர்களும் விமானங்களில் வந்து சேர்ந்தனர்.
2002 இல் நாட்டின் நிலைமை தொடர்பாக வழங்கப்பட்ட உரையில் ஈரானையும்
"துன்ப
அச்சு(axis of evil)"
நாடுகளின் அணியில் சேர்த்து பிரகடனப்படுத்தியிருந்த கொள்கையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை.
அதற்கான சமிக்கையாக இந்த அவசர உதவியை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று புஷ் வலியுறுத்திக் கூறினார்.
அப்படியிருந்தாலும் அமெரிக்காவின் இந்த சைகை ஈரானின் உள்நாட்டு விடயங்களில் ஆதிக்கத்தை செலுத்த முயலும்
முயற்சி என்றே பரவலாக கருதப்பட்டது. ஈரான் அரசாங்கத்தின் சில பிரமுகர்கள் பூகம்பத்தை வாஷிங்டன்
அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த முயலுவதாக குற்றம் சாட்டினர்.
பல சர்வதேச உதவிப்பணியாளர்கள் அழிவு ஏற்பட்ட பகுதிக்கு சென்று அடைவதில்
நிலவிய சிரமங்கள் குறித்து தங்களது விரக்தியை வெளிப்படுத்தினர்.
Steve Owens
(டிசம்பர் 30) இன்டிபென்டன்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பிரிட்டனின் சர்வதேச தேடும்
குழுவைச் சார்ந்த பணியாளர்கள் 125 மைல்களுக்கு குறைந்த தூரத்தை கடப்பதற்கு 14 மணி நேரம் பயணம்
செய்யவேண்டி வந்ததாக குறிப்பிட்டார். ''எவரையும் நாங்கள் உயிரோடு பார்க்கவில்லை'' அந்த இடத்திற்கு
ஒரு நாள் தாமதமாகவே போய்ச்சேர்ந்தோம். இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்போது அந்தக் குழுக்கள்
விரைவாக சென்றடைவதற்கும், வழிவகைகள் இருந்தாக வேண்டும்'' என்று ஓவன்ஸ் குறிப்பிட்டார்.
சில நாடுகளில் மீட்புப்பணிக் குழுக்கள் ஈரான் அரசாங்கத்தின் முறையான அழைப்பிற்கு
காத்துக் கிடக்கவேண்டி வந்தது. எக்னோமிஸ்ட் குறிப்பிட்டுள்ளதைப்போல் (டிசம்பர்-30) உதவிக்குழுக்கள்
பாம் நகரத்து சிறிய விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும் அவர்களை நகரில் எந்தப்பகுதியில் அதிக பாதிப்பு
ஏற்பட்டதோ, அங்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கு எவரும் விமான நிலையத்தில் இல்லை.
ஈரான் நாட்டின் ரெட் கிரசன்ட் அமைப்பைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும், நிவாரணப்
பொருட்களும் பூகம்பம் ஏற்படக்கூடும் என்று கருதப்பட்ட நாட்டில் வடக்குப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தன. தங்களுக்கு
தற்காலிக முகாம்கள் வரும் என்று எதிர்பார்த்து பாம் நகரில் உயிர் தப்பிய ஆயிரக்கணக்கானவர்கள்
இரண்டு இரவுகள் உறையும் குளிரில் வாடவேண்டி வந்தது. சர்வதேச அளவல் கணிசமான உதவி ஈரானுக்கு வந்து
சேர்ந்தது என்றாலும் காயம் அடைந்த மற்றும் வீடுகளை இழந்த பல்லாயிரக்கணக்கானோருக்கு இப்போது
கிடைத்திருப்பதவைவிட மேலும் உதவிகள் தேவைப்படலாம் என்று மீட்புப்பணி ஊழியர்கள் மதிப்பிட்டுள்ளனர். வெளிநாடுகளைச்
சேர்ந்த மீட்புப் பணிக்குழுக்கள் தங்களது சிறப்பு சாதனங்களை ஈரானிலேயே கொடுத்துவிட்டு செல்லவேண்டும் என்று
ரெட் கிரசன்ட் அமைப்பு கோரியுள்ளது.
பாம் நகரத்தில் இரண்டு வரிசை செங்கல் வீடுகள் பூகம்பத்தில் விழுந்துவிட்டன.
அவற்றில் இடுபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்ட நூற்றுக்கணக்கான மக்களில் 10 பேர் மட்டுமே உயிரோடு தப்பி
உள்ளனர். அவர்களில் Hamideh Khordoosta
22 வயதான ஒரு பெண். அவர் புறநகரப் பகுதிகளில் வாழ்க்கை நிலவரம் குறித்து விளக்கினார். கால்பகுதி ஆண்கள்
வேலையில்லாமல் இருப்பதால் இளம் ஜோடிகள் தங்களது உறவினர்களுடன் வாழ்ந்து வந்தார்கள். கிழக்கு ஈரானைச்
சேர்ந்த பலூச்சி மக்களிடம் ஹேராயின் என்கிற போதைப்பொருளை பயன்படுத்துகிற பழக்கம் பரவலாக உள்ளது.
ஹமீதா ஜனவரி 2இல் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ''எங்களது
சகோதரிகள், எங்களது குழந்தைகள் மற்றும் பெற்றோர் இறந்துவிட்டனர். எங்களது துக்கம் முடிவில்லாதது. தனித்திருப்பதால்
துக்கத்தை பகிர்ந்து கொள்வதற்குக் கூட எவரும் இல்லையே'' என்று வேதனைப்பட்டார். அவர் கணவர் உயிர்
தப்பிவிட்டார். எனது பாட்டி அவரது சகோதரி டசன் கணக்கில் அத்தைகள், மாமாக்கள் மற்றும் மைத்துனர்களை
அந்த பெண் இழந்துவிட்டார்.
பூகம்பம் நடைபெற்ற நேரத்தில் அந்தப்பெண் வெளியில் நின்றிருந்தார். தகவல்
தெரிந்ததும் ஓடிவந்து பிறருக்கு உதவினார். ''இடிபாடுகளுக்கு இடையில் இருந்து மக்களை
இழுத்துக்கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி இறந்து கிடந்தார்கள், அல்லது சாகும் நிலையில் துடித்துக்
கொண்டிருந்தார்கள்.'' எல்லா இடங்களிலும் மக்கள் மடிந்து கொண்டிருந்தார்கள் என்று ஹமீதா குறிப்பிட்டார்.
தனது பக்கத்து வீட்டுக்காரர் மூன்று வயது மகனை இடிபாடுகளிலிருந்து மீட்டார். ஆனால் அந்தக் குழந்தைக்கு
இழுப்பு நோய் ஏற்பட்டு இறந்துவிட்டது.
''பூகம்பம் ஏற்பட்டு முதல் இரண்டு நாட்களில் எங்களுக்கு உதவுவதற்கு எவரும்
இல்லை. மக்களுக்கு உதவுவதாக அரசாங்கம் சொல்லியது வெறும் வார்த்தைகள், எங்களுக்கு எவரும் உதவிக்கு
வரவில்லை. நான் ஒரு டாக்டர் அல்ல, இந்தக் குழந்தைக்கு என்ன செய்வது என்று எனக்கு என்ன தெரியும்? என்று
நிருபரிடம் கேட்டார்.
உயிர் தப்பியவர்கள் நிவாரண உதவிகள் தாமதமாக தங்களுக்கு வந்ததாகவும் அரசாங்க
அதிகாரிகள் தங்களது துன்பத்தை பொருட்படுத்த வில்லை என்றும் புகார் கூறினார். ''நிவாரண ஊழியர்கள், கிராம
மக்களை நோக்கி உணவுப் பொட்டலங்களை வீசி எறிந்தார்கள். நாங்கள் விலங்குகள் அல்ல'' என்று உயிர்தப்பிய
அப்பாஸ் மர்க்கத்தார் பாராவர்த்தியும், அவரது பக்கத்து வீட்டுக்காரர்களும் டிசம்பர் 30 ஆம் திகதி லாஸ்
ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தனர்.
நாட்டின் இதரப்பகுதிகளில் உள்ள ஈரானியர்கள் அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு
பணம் கொடுப்பதை நம்பாமல் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகளை நேரடியாக
தந்தனர். வசதியான சிலர் தங்கள் வாகனங்களிலேயே நிவாரணப் பொருட்களை கொண்டு வந்து வழங்கினர்.
உயிர் தப்பியவர்களிடம் ஆத்திர உணர்வு பெருகி வருவதை உணர்ந்த முக்கிய ஈரான்
தலைவர்கள் டிசம்பர் 29இல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, நகரை சீரமைப்பதற்காக உறுதிமொழி
தந்தனர். ஹயத்துல்லா அலி ஹமேனி (Ayatollah
Ali Khamenei) பாம் நகரம் ''இதற்கு முன்னர்
எந்தக்காலத்திலும் இருந்திராத அளவிற்கு வலுவான அடிப்படையில்'' மீண்டும் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார்.
பல மணிநேரத்திற்கு பின்னர் குடியரசுத் தலைவர் முஹம்மத் கட்டாமி நிருபர்களுக்கு வழங்கிய பேட்டியில்
''பூகம்பத்தால் ஏற்பட்டுள்ள அழிவின் அளவு மிகப்பெரிது, இதுவரை செய்யப்பட்டிருப்பது போதுமானதல்ல,
தொடர்ந்து நிவாரண உதவிகள் வரும் என நம்புவதாக'' கூறினார்.
எவ்வாறிருந்தபோதிலும், அரசாங்கம் மிக மெத்தனமாக நடவடிக்கையில் ஈடுபட்டதாக
கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களே இந்தக் கண்டனத்தை தெரிவித்திருக்கின்றன.
இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனத்தின் ஆங்கில மொழி வலைதளம் ஈரான் டெய்லி அது டிசம்பர் 29
அன்று ஒரு கேள்வியை கேட்டிருந்தது. ''ஆழமான காயங்களைச் சுற்றி சிறிய கட்டைப்போட்டுவிட்டு இடத்தைவிட்டு
வழக்கமாக சென்றுவிடுவது போல் அதிகாரிகள் சென்று விடுவார்களா?'' என்று கேட்டிருந்தது.
1990 பூகம்பத்திற்கு பின்னர் வீடுகட்டும் திட்டம் தொடர்பான ஒழுங்குமுறைகளை பின்பற்றுவதற்கு
ஈரான் அதிகாரிகள் தவறிவிட்டதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பாம் நகரத்தின் தரக்குறைவான
களிமண்ணால் செய்யப்பட்ட செங்கற்களால் வீடுகள் கட்டப்பட்டன. அதைப்பற்றியும் இப்போது ஆட்சேபணைகள்
எழுந்துள்ளன. ஈரானில் கட்டிடங்கள் பாதுகாப்பாக உருவாக்கப்படுவதில் தவறு செய்த வீட்டு வசதி அமைச்சர் மீது
வழக்குத் தொடரவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார்.
நில நடுக்கம் தொடர்பான நிபுணர்கள் ஈரானின் வடக்குப் பகுதி 50 மைல் நீளத்திற்கு
பூகம்பத்திற்கு இலக்காகும் தன்மை கொண்டது என்று மதிப்பிட்டிருக்கின்றன. தெஹ்ரானில் பூகம்பம் ஏற்பட்டால் 12
மில்லியன் மக்களில் நூறாயிரக்கணக்கானவர்கள் அல்லது 6 சதவிகிதம் பேர் மடிந்து விடுவார்கள் என்று நிபுணர்கள்
மதிப்பிட்டு உள்ளனர். 7.0 அளவு நில அதிர்வு நகரத்தின் மருத்துவ மனைகளில் 90 சதவீதம் சிதைந்து விடும் என்று
அந்நாட்டின் சுகாதார அமைச்சகமே கூறியுள்ளது.
அப்படியிருந்தும் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான ஒழுங்குமுறைகள் வழக்கமாக
புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. தெஹ்ரானில் பணியாற்றும் சிவில் பொறியியல் பேராசிரியர் அலிபக்ஷி கட்டிடங்களை
உருவாக்குபவர்கள் தங்களது இலாபத்தை பெருக்கிக் கொள்வதற்காக கட்டுமான ஒழ்ங்குமுறைகளை புறக்கணித்து வருவதாகவும்,
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை என்றும்
Reuters செய்தி
நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
தெஹ்ரான் பல்கலைக் கழகத்தில் பூகோளபெளதீகவியல் பேராசிரியராக பணியாற்றிவரும்
பக்ரான் ஆக்சே தற்போது அரசாங்க ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். அவர் கருத்து தெரிவிக்கும்
போது ''தெஹ்ரானில் சில பகுதிகள் சாதகமற்ற நிலையில் உள்ளது:
பூமி அமைப்பு மிக மிருதுவாகவும், நொறுங்கும் தன்மை கொண்டதாவகும்
ஒழுங்குவிதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டால் அது மிகப்பெரும் ஆபத்தாகிவிடும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முறையாக கட்டிடங்கள் கட்டப்பட்டால் டிசம்பர் 26 அன்று பாம் நகரில் ஏற்பட்டதைவிட கடுமையான
பூகம்பத்தைக்கூட நகரங்கள் தாக்குப்பிடித்து நிற்கமுடியும். சென்ற செப்டம்பர் மாதம் ஜப்பானில் 8.0கு
அளவிற்கு கடுமையான பூகம்பம் ஏற்பட்டும் எவரும் பலியாகவில்லை, 500 பேர் மட்டுமே காயம் அடைந்தனர்.
1830 ஆம் ஆண்டு தெஹ்ரானில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இப்போது
''பாம் நகரத்தில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தைத் தொடர்ந்து தலைநகரை வேறுபகுதிக்கு மாற்றுவது குறித்து அதிகாரிகள்
யோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் ஈரானின் தலை நகராக
இருந்த மத்திய நகரான இஸ்பகான் பகுதிக்கு தலைநகரை மாற்றிவிடலாம் என்ற ஆலோசனை கூறப்பட்டு வருகிறது.
தலைநகரை மாற்றுவதற்கான காலக்கெடு பற்றி எந்த ஆலோசனையும் தெரிவிக்கப்படவில்லை.
Top of page
|