WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு
Libyan government assists US aggression in the Middle East
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வலியத்தாக்கும் நடவடிக்கைக்கு லிபிய அரசாங்கம்
உதவுகிறது
By Steve James
30 December 2003
Use this version to
print |
Send this link by email |
Email the author
தனது "பேரழிவு ஆயுதங்களை" கைவிடுவதாக
(WMD) லிபியா அறிவித்திருப்பது கேர்னல் முகமது கடாஃபி
ஆட்சி உலகை மறுபங்கீடு செய்யும் அமெரிக்கத் திட்டத்தினை ஏற்க நீண்டகாலமாக நடைபெற்று வந்த ஒரு நிகழ்ச்சிப்போக்கு
முடிவுக்கு வந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது.
லிபியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அரசாங்ககளுக்கிடையில் உருவான பேரம்
பற்றிய விவரங்கள், டிசம்பர் 19-ந்தேதி அறிவிக்கப்பட்டதன் கீழ், தன்னிடம் அணு மற்றும் இரசாயன ஆயுதங்கள் "தயாரிப்புத்திட்டம்"
இருந்ததாக லிபியா ஒப்புக்கொண்டது. இனி அவற்றை ஒழித்துக்கட்டுவதில் சர்வதேச அளவிலான சோதனைகளுக்கு
தன்னை உட்படுத்திக் கொள்வதாக உறுதியளித்தது. இனி தனது ராக்கெட்டுகளின் ''வீச்சை'' 300-கிலோ மீட்டர்
தொலைவிற்குள் வைத்துக்கொள்வதாக இணங்கியது. இது சம்மந்தமாக ஆவணங்களை லிபியா தாக்கல் செய்ததோடு
சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆய்வாளர்கள் லிபியாவுக்கும் செல்ல இருக்கின்றனர். இதற்கு பிரதிபலனாக கடந்த
25-ஆண்டுகளாக அமெரிக்க முதலீடுகளுக்கு தடைவிதித்து அமெரிக்கா பிறப்பித்திருந்த பொருளாதாரத் தடைகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா முன்னர் விதித்திருந்த பொருளாதாரத் தடை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் W.
புஷ் பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேயர் இருவராலும் அறிவிக்கப்பட்ட இப்பேரம், சதாம் ஹூசேன் பிடிக்கப்பட்டு
சில நாட்களில் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' சரிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இரு அரசாங்கங்களையும்
பொறுத்தவரை ஒரு வெற்றி முயற்சியாக முன்வைக்கப்பட்டது. அமெரிக்க இராணுவ வலிமையைக் கண்டு கடாஃபியின்
சரணடைவு பென்டகன் ஆலோசகர் கென்னத் ஆடல்மேன் வார்த்தைகளில் "முரட்டுச் சர்வாதிகாரிகளிடம்
இருந்து பயம் நீங்கியது" அமெரிக்க இராணுவ பலத்தைக் காட்டுவதாக புஷ் நிர்வாகம் பெருமைப்பட்டுக்
கொண்டது. கட்டுரையாளர் வில்லியம் சஃபையர் கருத்துத் தெரிவிக்கும்போது ''ஆட்சிமாற்றத்திற்கு உள்ளாகும் தலைவர்கள்
பட்டியலில் அடுத்த இடம் பெறாது தவிர்ப்பதற்காக முன்கூட்டி சரணடைதல் எனும் ஒரு மூலோபாயத்தை" கடாஃபி
உருவாக்கிச் செயல்பட்டிருக்கிறார். கடாஃபி என்கிற யானை "அமெரிக்க இராணுவ வலிமையின் முன் பூனையாகிவிட்டது''
என்று எழுதியுள்ளார்.
ஈராக்கில் இரத்தக் களரி ஆக்கிரமிப்பில் அமெரிக்கப்படைகள் சிக்கிக்கொண்டிருக்கின்றன.
எனவே பலாத்காரம் வெற்றி தரும். என்பதை நிரூபிப்பதற்கு புஷ் நிர்வாகத்திற்கு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனின் முகாமில், பிளேயர் லிபியாவை மீண்டும் சர்வதேச சமுதாயத்தில்
இணைத்துக் கொள்வதற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். படைபலத்திற்கு வெற்றி என்பதைவிட லிபியாவுடன்
உருவாகியுள்ள உடன்பாடு பிரிட்டன் வெளியுறவுத்துறைக்கும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ராபின் குக்கிற்கும்
"மகத்தான சாதனை" என்று கார்டியன் பத்திரிகை வர்ணித்துள்ளது. லிபியாவுடன் சமரச முயற்சியை
ராபின் குக் தொடங்கினார் மற்றும் ஈராக் மீது படையெடுப்பதைக் கண்டித்தார். குளிர்யுத்த இறுதிக்கால
கட்டத்திலிருந்து தொடங்கி "பொறுமையான ராஜதந்திரம், பேச்சுவார்த்தைகள், சமரச முயற்சிகள், தெளிவாக
விளங்கக் கூறும் கோட்பாடுகள் மற்றும் எச்சரிக்கைகள், மரியாதை, பரஸ்பர நம்பிக்கை மற்றும் கவர்ச்சிகர
ஊக்குவிப்புகள் - என இந்த நாகரிக கருவிகள் ஆயுதக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில்... மிகவும் குறிப்பிடத்தக்க
சாதனை உருவாவதற்கு பயன்பட்டிருக்கிறது'' என்பதை கார்டியன் பத்திரிகை தனது தலையங்கத்தில்
சுட்டிக்காட்டியுள்ளது.
லிபியாவுடன் செய்து கொண்ட சமரசம் ஓர் அடிப்படை அம்சத்தை, முன்னாள் காலனி
நாடுகளில் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின்- அதன் மிகத் தீவிரப்போக்குள்ளவர்கள் கூட ஏகாதிபத்திய அரசுகளின்
சூறையாடும் ஆசைகளை எதிர்க்க இயலாததை தெளிவாக விளக்குகிறது. இப்போது லிபியாவுடன் சமரசம்
ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து மத்தியகிழக்கு, வட ஆபிரிக்கா, மற்றும் இதர பகுதிகளில் அமெரிக்காவால் மேலும்
இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கு ஊக்குவிக்கப்படலாம்.
கடாஃபி ஆட்சி
கடாஃபி 1969-ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். அவரது வழிகாட்டித்
தலைவரான எகிப்தின் கமால் அப்துல் நாசர் பாணியில் முன்னாள் இத்தாலி காலனியான லிபியாவை முன்னேற்றுவது
பற்றி உறுதி மொழிகளைத் தந்தார். மன்னராட்சி கவிழ்க்கப்பட்டது. மிகப்பெரும் எண்ணெய்த் தொழில்
அரசுடைமையாக்கப்பட்டது. முன்னாள் காலனி ஆதிக்க நாடுகளின் தீவிர தேசியத் தலைவர்கள் போன்று கடாஃபி
அமெரிக்காவிற்கும் மேற்கு ஐரோப்பாவிற்கும் ஈடுகொடுக்கின்ற வகையில் சோவியத் யூனியனை சார்ந்திருக்கும் நிலை
உருவாயிற்று. இது லிபிய அரசாங்கத்திற்கு சுதந்திரம் போன்ற மாயத்தோற்றத்தை வழங்கியது. கடாஃபி
திட்டவட்டமான ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை மேற்கொண்டதுடன் சர்வதேச அளவில் பல்வேறு தேசிய
விடுதலை இயக்கங்களுடன் தன்னை இணைத்துக்கொண்டார்.
றேகன் நிர்வாகம் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கை "சுருட்டி அனுப்புவதற்கான"
முயற்சிகளை மேற்கொண்டது, அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக 1980-கள் முதல் அமெரிக்காவின் குரோத
உணர்விற்கு லிபியா பெருமளவில் இலக்கானது. அமெரிக்காவின் விமானப்படை போர் விமானங்களும் போர்க்
கப்பல்களும் லிபியாவிற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் இறங்கின, அவற்றின்
உச்சமாக 1986-ம் ஆண்டு திரிபோலி மீது குண்டு வீச்சு தாக்குதல் நடந்தது. அந்த தாக்குதலில் கடாஃபியின்
புதல்வி கொல்லப்பட்டார். அதே நேரத்தில் அமெரிக்கா லிபியா மீது பொருளாதார தடைகளையும் விதித்தது.
லிபியாவின் தூதரகம் லண்டனில் முற்றுகையிடப்பட்டபோது ஒரு பெண் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டதை அடுத்து,
பிரிட்டனில் கடாபி ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட பல லிபியாக் குடிமக்கள் கொல்லப்பட்டதையும் தொடர்ந்து,
லண்டனிலிருந்து லிபிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர்.
லாக்கர்-பி பகுதியில் 1988-ம் ஆண்டு பான் அமெரிக்கன் பயணிகள் விமானம் ஒன்று
வெடித்து சிதறியதற்கு லிபியா தான் பொறுப்பு என்று அமெரிக்காவும் பிரிட்டனும் குற்றம் சாட்டி லிபியாவிற்கு
எதிரான இயக்கத்தை நடத்தியதைத் தொடர்ந்து 1992-ல் ஐ.நா- லிபியாவிற்கு எதிராக பொருளாதாரத்
தடைகளை விதித்தது. மேற்கு நாடுகளின் தடைகளோடு சேர்ந்து சோவியத் ஒன்றியமும் சிதைந்து விட்டதால்
கடாஃபி சுதந்திரமாக கையாளுவதற்கு வழியில்லாமல் ஆகிவிட்டது. பொருளாதார சீர்குலைவை கடாஃபியின்
அரசாங்கம் சந்தித்ததைத் தொடர்ந்து லிபியாவில் உள்ள பணக்கார முதலாளித்துவ பிரிவினர் பிரதான ஏகாதிபத்திய
அரசுகளுடன் குறிப்பாக அமெரிக்காவுடன் நட்புறவை மீண்டும் நிலைநாட்டுவதற்கு முயன்றனர்.
1999-ம் ஆண்டு, லாக்கர்பி விமான தாக்குதலை தூண்டிவிட்டவர்கள் என்று குற்றம்
சாட்டப்பட்ட இரண்டு லிபியர்களை விசாரணைக்காக பிரிட்டனிடம் ஒப்படைக்க லிபியா முன்வந்து பிரிட்டனால்
நடத்தப்பட்ட பேரத்தை அடுத்து ஐ.நா பொருளாதாரத் தடை அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து
வெளிநாடுகளிலிருந்து முக்கியமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து முதலீடுகள் குவிந்தன. அப்படியிருந்தும் அமெரிக்க
தடைகள் நீக்கப்படாததால் ஐரோப்பிய நாடுகள் லிபியா மீது வர்த்தக மேலாதிக்கம் செலுத்தி வந்தன.
லிபியாவில் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள உலக எண்ணெய் வள மதிப்பீடுகளின் படி அடிப்படையில் 3-சதிவிகித
எண்ணெய் வளத்தை ஆராய்ந்து துரப்பன பணிகளை மேற்கொண்டு மிக எளிதாக உயர்ந்த தரமான எரிபொருளை
தயாரிப்பதற்கான முயற்சியில் பிரான்சின் டோட்டல் பினாஎல்ப்
(Total Fina Elf) மற்றும் இத்தாலியின் ENI -
நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டன.
ஒரு நற்பேற்றை இழந்துவிடக்கூடிய நிலையைக் கவனத்தில்கொண்டு, கொனோகோ,
ஓசிடெண்டல், அமெராடா ஹெஸ் மற்றும் மாரத்தோன் போன்ற அமெரிக்க எண்ணெய்க் கம்பெனிகள் தடைகளை
இறுதியாய் விலக்குவதற்காகவும் லிபியாவுடன் முழு வர்த்தக உறவுகளைப் புதுப்பிக்கவும் கிளர்ச்சியை ஆரம்பித்தன.
அமெராதா ஹெஸ், மாரத்தோன் மற்றும் கோனோகோ ஆகியன லிபியாவின் தேசிய எண்ணெய்க் கம்பெனியுடன்
சேர்ந்து ஒரு நாளைக்கு 850,000 பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்கின்றன. லிபிய அரசாங்கம்
அமெரிக்கக் கம்பெனிகளின் சொத்துக்களை ஒருபோதும் கைப்பற்றவில்லை.
இந்த நிறுவனங்களுக்கும் புஷ் நிர்வாகத்திற்கும் இடையே நெருக்கமான உறவுகள்
நீடித்தாலும் புஷ் ஆதவாளர்கள் மற்றும் அமெரிக்க அரசு எந்திரத்தின் உயர் மட்டங்களிடையே இருபது ஆண்டுகளுக்கு
மேலாக நிலவிய லிபியாவிற்கு எதிரான ஆவேச உணர்வுகளை எளிதாக உடனடியாக நீக்கிவிட முடியவில்லை. புஷ்ஷின்
"தீய அச்சுக்கள்" பட்டியலில் லிபியாதான் அண்மையில் சேர்க்கப்பட்டதால், அமெரிக்காவின் வலியத்தாக்குதலுக்கு
எந்த நேரத்திலும் அந்நாட்டை இலக்காக்கும் நிலையை உண்டுபண்ணியது.
அமெரிக்காவுடன் புலனாய்வு தகவல்கள் பரிமாற்றம்
இந்த நிலவரத்தை சீர்படுத்த லிபியா அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்து
முயற்சிகளையும் மேற்கொண்டது. உலக வர்த்தக மைய கட்டிடத்தில் செப்டம்பர்-11-ல் நடைபெற்ற தாக்குதலை
லிபியா அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டு தனது அமெரிக்க உறவுகளை தீவிரமாக்கிக் கொள்ள முயன்றது
ஒப்சேர்வர் பத்திரிகை அண்மையில் ஒரு தகவலை பிரசுரித்தது. லிபியாவின் புலனாய்வு சேவைகள் அமைப்பின்
தலைவரான மூஸா கெளஸா 1980-ம் ஆண்டு பிரிட்டனிலிருந்து வெளியேற்றப்பட்டவர், 2001-அக்டோபர் மாதம்
ஹீத்ரூ விமான நிலையத்தில் இத்தாலிய துணை வெளியுறவு அமைச்சர், லண்டனில் உள்ள அமெரிக்க தூதர், அமெரிக்க
வெளியுறவுத் துறையின் வடக்கு ஆபிரிக்க பிரிவுத் தலைவர் மற்றும் பல முன்னணி
CIA- மற்றும்
MI-16-அதிகாரிகளை சந்திப்பதற்காக வந்திருந்தார்.
அந்தக் கூட்டம் லாக்கர்பி குண்டு வெடிப்பில் பலியான பாதிக்கப்பட்ட குடும்பங்களைச்
சேர்ந்தவர்களுக்கு லிபியா இழப்பீடு வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்படுவதற்காக நடந்ததாக வெளியில்
அப்படித்தான் எல்லோரும் நினைத்தார்கள், ஆனால் அமெரிக்காவின் பொருளாதார தடையை ரத்து செய்வதற்கான
ஏற்பாட்டை விவாதித்து முடிவு செய்தார்கள் என்பது பின்னர் தெளிவாக தெரிந்தது. லாக்கர்பி விமானக் குண்டு
வெடிப்பிற்கு லிபியா பொறுப்பை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் அல்கொய்தா இயக்கத்திற்கு எதிராக
அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவும், அணு ஆயுதங்கள், ரசாயன மற்றும் உயிரியல்
ஆயுதங்களைப் பெறுவதற்கான முயற்சிகளைக் கைவிடவும் லிபியா ஒப்புக்கொண்டதற்கான பேரம் நடத்தப்பட்டது.
ஒப்சேர்வர் தகவலின்படி கெளசா ஏராளமான ஆவணங்களின் குவியலைக் கொடுத்தார். அவற்றில் ஆபிரிக்கா,
ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் செயல்படுவது தொடர்பாகவும்
அவர்களது அமைப்பு பிரிவுகள் பற்றியும் விபரங்கள் அடங்கியிருந்தன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்கா பிரிட்டன் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளுடன்
லிபியாவின் உறவுகள் நேசமாக மாறிக்கொண்டுவந்தன. அமெரிக்கா அறிவித்துள்ள "தீய அச்சு" பட்டியலில் லிபியா
இடம் பெற்றிருப்பது குறித்து அமெரிக்கா அதிகமாக வலியுறுத்தவில்லை. அமெரிக்காவிலிருந்து இயங்கும் மிகுந்த
செல்வாக்குள்ள மத்திய கிழக்கு தொடர்பான ஆய்வு அமைப்பு ஒன்று ஆகஸ்ட் 2003-ல் புஷ் அரசாங்கம் அதன்
பொருளாதாரத்தடைக் கொள்கையை மறு ஆய்விற்கு உட்படுத்துமாறு வலியுறுத்தியது. "ஒருதலைப் பட்ச அமெரிக்க
பொருளாதார தடை நடவடிக்கைகளின் கீழ் ஓரளவிற்காவது பயன் இருக்கும் என்ற மாயையில் புஷ் நிர்வாகம்
இருந்து விடக்கூடாது" என்று அந்த அறிக்கை எச்சரிக்கை செய்திருந்தது.
லாக்கர்பி விமான குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டு
தொகைகளை வழங்குவதற்கு லிபியா தொடங்கியது. அதற்கு கைமாறாக ஐ.நா-பாதுகாப்பு சபை செப்டம்பர்
மாதம், ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லிபியா மீதான பொருளாதார தடைகளை
நிரந்தரமாக ரத்து செய்தது. பிரான்ஸ் நாடும் லிபியாவுடன் ஒரு பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பாக
தகராறு செய்து கொண்டிருந்தது. அந்த பிரச்சனை தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தபோது அமெரிக்கா
ஐ.நா-பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வில்லை, மேலும் தனது ரத்து அதிகாரத்தையும்
பயன்படுத்தவில்லை. அதற்குப்பின்னர் ஸ்பெயின் நாட்டு பிரதமரும் புஷ் நண்பருமான ஜோஸ் மரியா அஸ்னர்
லிபியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவது பற்றி விவாதித்தார்.
ஜிம்பாப்வே தொடர்பாக பிரிட்டனின் கொள்கையையும் லிபியா ஆதரித்தது.
நெருக்கடிக்கு உள்ளான றொபர்ட் முகாபே ஆட்சிக்கு எதிராக லிபியா எண்ணெய் சப்ளையை நிறுத்தியது.
ஐ.நா-வில் பணியாற்றி வருகின்ற அமெரிக்காவின் துணைத் தூதர் ஜேம்ஸ் கன்னிங்ஹாம்
லிபியாவிற்கு எதிராக, அந்நாடு "பேரழிவு ஆயுதங்களைத் தயாரிப்பதையும் அவற்றை வழங்குவதற்கான
நடைமுறைகளையும்" -வாஷிங்டனுக்கும் திரிபோலிக்கும் இடையிலான தொடர்ந்து இருக்கும் சச்சரவின் முக்கிய அம்சம்
பற்றி இன்னும் கூறவேண்டிய தேவை இருக்கிறது என்று எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.
இந்த வகையில் டிசம்பர் மாதம் ரோம் மற்றும் லண்டனில் உள்ள லிபியா தூதர்களுடன்
கெளசா பிரிட்டனின் வெளியுறவு அலுவலக டைரக்டர் ஜெனரலையும் முன்னணி
MI6-உளவாளிகளையும் லண்டன் பால்மார் பகுதியில் உள்ள
சுற்றுலாப் பயணிகள் கிளப்பில் தனியாக சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பில் ஏற்பட்ட உடன்பாட்டைத்
தொடர்ந்து பிளேயருக்கும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ரோவிற்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு
ஆலோசகர் ஹோண்டலிசா ரைசிற்கும் ஓர் அறிக்கை அனுப்பப்பட்டது. லிபியா தனது பழைமையான அணு ஆயுத ஆய்வை,
உயிரியல் ஆயுதங்களை கைவிட சம்மதித்தது. அந்த ஆயுதங்கள் மனிதக் கழிவுகளுடனான மறைவாய் வெடிக்கின்ற
தன்மை கொண்டவை என்றும் பிரதான வல்லரசுகளைக் காட்டிலும் லிபியா மக்களை அச்சுறுத்துவதற்கான ஆயுதங்கள்
என்றும் எங்கும் கருதப்பட்டன. இப்படிப்பட்ட சம்மதக் கடிதத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அமெரிக்கா ஏற்கனவே
பயனற்றவை என்று கருதிக் கொண்டிருக்கும் பொருளாதார நடவடிக்கைகளை ரத்து செய்து, 1980 முதல் முன்னணி
அமெரிக்க நிறுவனங்கள் லிபியா எண்ணெய் மார்க்கெட்டில் பங்கு பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை ரத்து செய்தது,
அந்த தடை மூலம் அமெரிக்க நிறுவனங்கள் லிபியா சந்தையை ஐரோப்பிய போட்டியாளர்களிடம் இழந்துவிடும்
என்றும் அச்சம் நிலவியது. அமெரிக்கா லிபியாவிற்கு சாதாரண ஆயுதங்களை விற்பதற்கும் முன் வந்தது.
லிபியா புஷ் நிர்வாகத்திற்கு ஒரு பிரச்சார வெற்றியை வழங்கியுள்ளது. ஹோண்டலீசா
ரைஸ் லிபியாவின் கலாவதியாகிவிட்ட, பயனற்ற ஆயுத திட்டங்கள் பற்றி விவாதித்து இறுதி சமரச அறிக்கையில்
"ஆயுத திட்டங்கள்" பற்றிய குறிப்பு இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். இது ஆக்கிரமிப்புப்
படைகள் எந்தவிதமான உண்மையான பேரழிவு ஆயுதங்களைக் கண்டுபிடிக்கத் தவறியமை, சதாம் ஹூசேன் "ஆயுத
திட்டங்களை" கொண்டிருந்தார் என்ற ஆர்வம் குறைந்த குற்றச்சாட்டாக வாஷிங்டன் மாற்றுவதற்கு வழிவகுத்த ஈராக்குடன்
ஒப்பிடுவதற்கு வகை செய்தது.
அமெரிக்காவுடனும், பிரிட்டனுடனும் இணைந்து, லிபிய மண்ணிற்கு ஆயுத ஆய்வாளர்களை
அழைத்திருப்பதன் மூலம் ஈரானும் சிரியாவும் தனித்து ஒதுக்கப்படுவதில் கடாஃபி கணிசமான பங்களிப்பு செய்திருக்கிறார்.
சிரியாவிற்கும் ஈரானுக்கும் பேரழிவு ஆயுத திட்டங்கள் தொடர்பாகவும் பயங்கரவாதிகளை ஊக்குவித்து வருவதாகவும்
அத்தகைய நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் இறுதி எச்சரிக்கைகளை அமெரிக்கா விடுத்திருக்கிறது.
லிபியா அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு சமாதான முயற்சிகளை மேற்கொண்டு
வருகிற அதேநேரம், பெருமளவிற்கு பொருளாதாரத்தில் தனியார் மயமாக்கும் கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது.
அவற்றின் மூலம் லிபியாவில் தனது ஆதரவாளர்களை பெரும் பணக்காரர்கள் ஆவதற்கு கடாஃபி வழி செய்திருக்கிறார்,
ஏற்கனவே லிபியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 30-சதவிகிதமாக உள்ளது.
சென்ற ஜூன் மாதம் கடாஃபி ஒபெக்கின் முன்னாள் தலைவர் சுக்ரி கானம்-ஐ தனது
பொருளாதார அமைச்சகத்தின் தலைவராக நியமித்தார். அவர் இப்போது பொது மக்கள் கவுன்சிலின் செயலாளர்
அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்கிறார், அது அவரை சக்தி மிக்க பிரதமராக ஆக்குகின்றது. அவர் 300-அரசாங்க
நிறுவனங்களை தனியார் மயமாக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நடவடிக்கை ''மக்கள் முதலாளித்துவம்''
என்று கடாஃபியால் வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஏகாதிபத்தியத்துடன் தனது உடன்பாடு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் லிபியா
நாட்டு மகளிர் கூட்டத்தில் கடாஃபி உரையாற்றும் போது, ''அரபு தேசியவாதம் மற்றும் ஒற்றுமைக்கான காலங்கள்
மறைந்துவிட்டன..... மக்களைத் திரட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கருத்துக்கள் தற்போது செல்லாக்காசுகளாகி
விட்டன'' என்று குறிப்பிட்டார். லிபியாவின் பக்கத்து நாடுகளை விமர்சிப்பதாகக் கருதி அவர் கூறிய வார்த்தைகள்,
அவரது ஆட்சிக்கும் அரபு தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும்
சமூகத்தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு தவறிவிட்ட முதலாளித்துவ தேசியவாதத்தின் அனைத்து விளக்கிக் காட்டல்களுக்கும்
மிகப் பொருத்தமான கண்டனங்களாக அமைந்து விட்டன.
Top of page |