World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush's Iraq commission and the "intelligence failure" fraud

புஷ்ஷினுடைய ஈராக் கமிஷனும் ''புலனாய்வுத் தோல்வி'' மோசடியும்

By Barry Grey
9 February 2004

Part 2

Back to screen version

மூன்று பகுதிகளைக் கொண்ட கட்டுரையில் இது இரண்டாம் பகுதி ஆகும். முதலாம் பகுதி 20/02/04 அன்று தமிழில் வெளியிடப்பட்டது.

இரண்டாவது பொய்: "புஷ் தவறாக வழி நடத்தப்பட்டார்"

இந்தக்கூற்று உண்மையானால், குற்றவியல் புறக்கணிப்புக் குற்றம் மற்றும் திறமைக் குறைவு இவற்றின் அடிப்படையில் புஷ்-ஐ அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கு இது போதுமான காரணமாகும். ஒரு அவசர அச்சுறுத்தல் எனும் தவறான தகவல்களின் அடிப்படையில் ஒரு நாட்டைப் போருக்குள் ஈடுபடுத்தும் ஒரு அரசின் தலைவர், அந்த நாட்டை ஆள்வதற்கான தகுதியை இழந்தவராகிறார்.

இதைத்தவிர ஒரு போரை உருவாக்க ஜனாதிபதியே வேண்டுமென்றே தவறாக வழிநடத்திய உயர் பதவிகளை வகித்த நபர்கள் மேல் குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிடுவதுதான் இத்தனை பெரிய சீரழிவிற்கான முறையான பதில் நடவடிக்கையாக இருக்கும்.

உண்மை நிலை என்னவென்றால் "புஷ் தவறாக வழிநடத்தப்பட்டார்" என்ற கூற்றானது நெருக்குதல் ஏதும் இல்லை" என்கின்ற நம்ப முடியாத பொய்யை ஒத்திருக்கிறது. ரம்ஸ் பெல்ட், மற்றும் வொல்போவிட்ச் ஆகிய தீவிரமான இராணுவ சார்புடைய சிந்தனையாளர்கள் கடந்த பத்து வருடங்களாக 1991-ம் ஆண்டு நடந்த வளைகுடா யுத்தத்தில் முடிக்காமல்விட்ட பணியை- பாத்திஸ்ட் ஆட்சியைக் கவிழ்த்து ஈராக்கை வசப்படுத்தி அந்த நாட்டின் எண்ணெய் வளங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருதல்- தொடர்ந்து எடுத்து முடிக்க பிரச்சார ரீதியில் வலியுறுத்தி வந்தவர்கள். புஷ் இவர்களைத்தான் கவனமாகத்தேர்ந்தெடுத்து முக்கிய பதவிகளில் அமர்த்தியிருக்கிறார். இவரும் செனியும் அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் மின்சக்தி ஆகியவைகளை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனக்கூட்டமைபுகளுடன் மிக நெருங்கிய தொடர்பை உடையவர்களாக இருந்தவர்கள். இவைகள்தாம், ஏகாதிபத்திய நிறுவனத்தால் உடனடியாகவும் நீண்டகாலத்திற்கும் பலனடையக்கூடியவர்கள்.

இதுவரையில் கிடைத்திருக்கும் ஏராளமான சான்றுகளின்படி புஷ் மற்றும் அவரது ஆலோசகர்கள் பதவிக்கு வரும்போது ஈராக் மீது படையெடுப்பு என்ற உறுதிப்பாட்டுடனே வந்திருக்கின்றனர். அவர்களுக்கு வேண்டியிருந்ததெல்லாம் ஏதாவது ஒரு சாக்குத்தான் 2001-செப்டம்பர் 11-ந்தேதி நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல் அவர்கள் காத்துக்கொண்டிருந்த காரணமாகவும், சந்தர்பமாகவும் அமைந்தது. சதாம் ஹூசைனுக்கும் அல் கொய்தா இயக்கதினர் நடத்திய விமானக் கடத்தில் மற்றும் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும், அதை மிகவும் மகிழ்ச்சியுடனே பற்றிக் கொண்டார்கள்.

தவறாக நடத்தப்படும் நிலைக்கு பதிலாக, வேண்டுமென்றே தூண்டுதல் இல்லாத யுத்தத்தை நடத்துவதற்கு தேவையான கற்பனையான உருவங்களை, உருவாக்குவதில் புஷ்சும் அவரது சக சதியாளர்களும் முனைப்போடு செயல்பட்டனர், ஜனநாயகக் கட்சி மற்றும் செய்தி ஊடகம் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்பதை நம்பி இதில் இறங்கினர். நிர்வாகத்தின் முக்கிய பணியே புலனாய்வுத் தகவல்களை புனைவதாக அமைந்தது.

செனி, ரம்ஸ்பீல்ட் வொல்போவிச் மற்றும் அவர்களது உயர்நிலை உதவியாளர்கள் புலனாய்வுத்துறை அதிகாரிகளை மிரட்டியும் நெருக்குதல்களை தந்தும், தாங்கள் விருப்புகிறாற்போல் ஆவணங்களையும், மதிப்பீடுகளையும் கண்டுபிடுப்புக்கள், தகவல்களையும் அவர்கள் விரும்பியவாறு மாற்றும்படியும், சாதாரணமாக செயல்படும் புலனாய்வு முறைமைகள் ஆகியவற்றை மீறியும் நடந்து கொண்டனர். புலனாய்வுத் தகவல்களில் காணப்படும் சந்தேகத்திற்குரிய அம்சங்கள் மாறக்கூடிய அம்சங்களைப் பற்றிய அறிவுறுத்தல்கள் ஆகியவற்றையெல்லாம் எடுத்துவிட்டு உண்மை நிலை பற்றிய அறிக்கைகளாக மாற்றப்பட்டது. ஈராக்கிய ஆயுதத்திட்டங்கள் பற்றிய அதிதீவிரமான கூற்று -பெரும்பாலும் ஈராக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட குழுக்களில் உள்ள அமெரிக்க கையாட்களால் அளிக்கப்பட்ட மற்றும் சி.ஐ.ஏ- யினால் சரிபார்க்கப்படாத அல்லது நிராகரிக்கப்பட்ட தகவல்கள் பத்திரிகைகளுக்கு கசியவிடப்பட்டன மற்றும் வெள்ளை மாளிகைக்கு வழங்கப்பட்டன. இது பற்றி அறிந்திருந்த புஷ், செனி, ரம்ஸ்பீல்ட் ஏனையோர் இவைகளை குறிப்பிட்டு தகவல்களாக மக்களிடையே உரைநிகழ்த்தும்போது சேர்த்துப் பேசினார்கள். இப்படியாக இம்மாதிரியான தகவல்கள் மக்களிடையே அசைக்க முடியாத உண்மைத் தகவல்களாக பரவின.

செப்டம்பர்-11-ல் நியூயோர்க் மற்றும் வாஷிங்டனில் நடந்த தாக்குதல்களுக்கு பின்னர் ரம்ஸ்பீல்ட் மற்றும் பென்டகனில் இருந்த அவரைப் போன்ற நவீன பழமைவாதிகளும் அவர்களே சொந்தமாக சிறப்புப்திட்ட அலுவலகம் என்ற பெயரில் புதிய நடவடிக்கையைத் தொடக்கினார்கள். அதன் நோக்கமே காலம் காலமாக இருந்துவரும் புலனாய்வுத் தகவல் மையங்களை கண்டுகொள்ளாமல் இதற்கு அவர்கள் சொன்ன காரணம் அவை இடதுசாரிப் போக்கை உடையதாக இருப்பதால் - சந்தேகத்திற்குரிய வகையில் சூழ்நிலையில் தெரியவந்தாலும், கிடைத்தாலும் அவ்வாறான தகவல்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஈராக்கின் படையெடுப்பதற்கு ஏற்ற முகாந்திரங்களை உருவாக்குவதுதான்.

கென்னத் பொல்லாக் என்பவர் சி.ஐ.ஏ-யின் முன்னாள் ஆய்வு நிபுணர் மற்றும் பாரசீக வளைகுடா விவகாரங்களுக்கான இயக்குநராக கிளிண்டன் அரசாங்கத்தின் தேசியப்பாதுகாப்பு சபையில் இருந்தவர். அமெரிக்க இராணுவவாதத்திற்கு எதிரானவர் அல்ல மாறாக; அச்சுறுத்தும் பெரும் புயல்: ஈராக்கில் படையெடுக்க வேண்டியதற்கான காரணங்கள், என்ற புத்தகத்தை எழுதியவர். இருந்தாலும் அட்லாண்டிக் பத்திரிகையின் தற்போதைய இதழில் அவர் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருக்கிறார். அதில் புஷ் நிர்வாகம் புலனாய்வுத் தகவல்களை எவ்வாறு திரித்து வெளியிட்டு படையெடுப்புக்கான நியாயப்படுத்தல்களை உருவாக்கியது என்பதைத் தெரிவித்து இருக்கிறார். பொல்லக் எழுதுகிறார்:

"நிர்வாகமானது ஈராக்கிய நடவடிக்கைகள் குறித்து வெறுப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் உருவகம் செய்யப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளித்தது. பலவற்றில் புலனாய்வு நிபுணர்கள் நம்பமுடியாதன என்று அறியப்பட்ட விஷயங்கள் அல்லது அவை தவறானவை என்று ஐயத்திற்கிடமில்லாமல் அறியப்பட்ட விஷயங்கள் இருந்தன. அவர்கள் அவ்வாறு எடுத்துச் சொன்னாலும் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை.

"நிர்வாக அதிகாரிகளின் கருத்துக்களை உறுதிப்படுத்தும் பத்திரிகை செய்திகள் குறித்து விரிவான அறிக்கைக்கான கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்தன. இவ்வாறான கட்டுரைகள் பழமைவாதிகளான ஜிம் ஹாக்லாண்ட், வில்லியம் சபையர் மற்றும் ஜோர்ஜ் எப்-வில் ஆகியோரால் எழுதப்பட்டன...

"பென்டகனில் அவர்களுக்கான தனி அலுவலகம் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் சிறப்புத் திட்டங்களுக்கான அலுவலகம் (Office of Special Plans) என்று அழைக்கப்பட்டது. ஈராக் பற்றிய எந்த விஷயத்தையும் தாங்களே ஆராய்வதற்கான ஏற்பாடுதான் இது. OSP யினர் அவர்களுக்கு வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவல்களில் அரசாங்கத்திற்குத் தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டதோடு எஞ்சிய அனைத்தையும் ஒதுக்கினார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக சிக்கல் ஏற்படுத்தும் விஷயம் என்னவென்றால் புலனாய்வில் நன்கு தேர்ந்த அனுபவம் மிக்க அதிகாரிகள் நம்ப முடியாதது மற்றும் முழுக்கவுமே தவறானது என்கிற தகவல்களை ஓ.எஸ்.பி- நம்பி ஏற்றுக்கொண்டது. மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் அமெரிக்க நிர்வாகம் ஆதரித்துவரும் அகமது சல்லாபி தலைவராக உள்ள ஈராக் தேசிய காங்கிரஸிடமிருந்து வரும் தகவல்களை அப்படியே ஏற்றுக்கொண்டது. இவர்களை நம்புவதற்கு மிக முக்கிய காரணம் அமெரிக்க அரசாங்கம் என்ன பிரியப்படுகிறதோ, அதை அவர்கள் மாறாமல் சொல்லிக்கொண்டிருந்தனர். இப்படியாக புலனாய்வுத்துறை ஆய்வாளர்கள் தவறான தகவல்கள் குறித்து நம்ப வேண்டாம் என்றும் இவ்வகையான தகவல்களின் அடிப்படையில் எந்தக் கொள்கை முடிவும் எடுக்க வேண்டாம் என்றும் வற்புறுத்துவதிலேயே பெரும் நேரம் செலவிடப்பட்டது.

"ஓ.எஸ்.பி- யை உருவாக்கிய புஷ் நிர்வாகத்தின் உயர் மட்ட அதிகாரிகள் தங்களது அறிக்கைகளை அரசாங்கத்தின் உச்சபட்ச நிலையில் உள்ளவர்களிடம் நேரிடையாக அனுப்பினார்கள். இத்தகவல்கள் மிகப்பல சமயங்களில் முறைப்படுத்தப்படாத, சரிபார்க்கப்படாத புலனாய்வுத் தகவல்களை நேரிடையாக அமைச்சரவைக்கு வேதவாக்கு போல அனுப்பப்பட்டன. நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் இவ்வகையான தகவல்களின் அடிப்படையில் பொதுமக்களுக்கான அறிக்கைகளாக வெளியிட்டனர். புலனாய்வுத் துறையில் உள்ள பெரும்பாலோருக்கு இவ்வகையான அறிக்கைகள், அறிவிப்புக்கள், அடிப்படையற்றவை என்று தெரிந்தே இருந்தது. (உதாரணமாக அல் கொய்தாவையும்- ஈராக்கையும் தொடர்புபடுத்தி உருவாக்கப்பட்ட தகவல்கள்)."

பாதுகாப்புத்துறையின் இணைச் செயலர் போல் வொல்போவிட்சிற்கு அவப்பெயர் பெற்றுத்தந்த அந்த குறிப்பிட்ட பேட்டியானது 2003-மே மாதத்தில் Vanity Fair இதழில் வெளியானது. அதில் தன்னையும் அறியாமல் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டார் அதாவது ''ஈராக்கிலுள்ள பேரழிவு ஆயுதங்களால் அமெரிக்காவின் பாதுகாப்பு உடனடி அச்சுறுத்தலுக்குள்ளாகும் என்ற புலனாய்வுத் தகவல்தான் புஷ் நிர்வாகம் ஈராக்குடனான யுத்தம் ஆரம்பிக்க முக்கியக்காரணமாக இருந்தது'' என்று கூறியிருந்தார். அந்தப் பேட்டியிலிருந்து முக்கியமான சாராம்சங்கள் வானிடி பேர்ன் ஜூலை-2003- இதழில் அடுத்து வெளியிடப்பட்டது. இது முதல் முறையாக அமெரிக்க பத்திரிகைகளில் 2003-மே 28 அன்று வெளியானது.

வொல்போவிட்ச் தன்னை பேட்டியெடுத்த Sam Tannenhaus இடம் கூறியிருப்பதாவது, ''மூன்று வகையான விஷயங்கள் அலசப்பட்டன. ஈராக்கிலுள்ள பேரழிவு ஆயுதங்கள், பயங்கரவாதத்திற்கு ஈராக்கின் ஆதரவு, பாத்திச ஆட்சியில் இருந்த உள்நாட்டு அடக்குமுறை ஆகியன குறித்து ஆராயப்பட்டன.

உண்மை என்னவென்றால் அமெரிக்க அரசாங்க அதிகாரத்துவத்துடன் நிறைய தொடர்பு கொண்டிருப்பதற்கான காரணங்கள், பெரும்பாலானவர் ஒப்புக்கொண்ட காரணம் பேரழிவுக்கான ஆயுதங்கள் குறித்து நடவடிக்கை என்று முடி செய்தோம்........

எங்கள் முன்னால் மூன்று அடிப்படைக் கவலைகள் இருந்தன. முதலாவது பேரழிவு ஆயுதங்கள், இரண்டாவது பயங்கரவாதத்திற்கான ஆதரவு, மூன்றாவது ஈராக்கியர்கள் மிக மோசமாக நடத்தப்படும் நிலை....... மூன்றாவது காரணம் மட்டுமே ஈராக் மக்களுக்கு உதவி செய்வதற்குரியதாக இருந்தாலும் அதன் காரணமாக நமது அமெரிக்க பிள்ளைகளின் வாழ்க்கையை பணயம் வைப்பதற்கு போதுமானதாக இல்லை. இரண்டாவது காரணமான பயங்கரவாதத்துடன் ஈராக்கின் தொடர்பு குறித்து அதிகாரத்துவத்தினரிடையே அபிப்பிராய பேதங்கள் இருந்தன.

இம்மாதிரியான ஆய்வு தவறான புலனாய்வுத் தகவல்களால் வழிநடத்தப்படும் கொள்கை வகுப்பாளர்களின் புறநிலைரீதியாக முதிர்ந்தநிலைகளைப் போல் விவரிப்பதாக உள்ளதா? இந்தக் கேள்வியியே இதற்கான பதிலாகவும் இருக்கிறது.

அமெரிக்க பாதுகாப்புத்துறையின் 'வலைத்தளத்தில்' காணக்கிடக்கும் இந்த பேட்டியில் வொல்போவிட்ச் அனைத்தையும் சிதறடிப்பதுபோன்ற ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். அதாவது சதாம் ஹூசேனுக்கும் அல்கொய்தாவுக்கும் தொடர்பு இருப்பதாக புலனாய்வு துறையினருக்குள்ளேயே ஒற்றுமையான அபிப்பிராயம் இல்லை என்று. இருந்தாலும் புஷ், செனி, ரம்ஸ் பெல்ட் கொலின் பவல், தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் கோண்டலீசா ரைஸ் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புக்களை வகிக்கும் ஏனையோர் தொடர்ந்து இதே விஷயத்தைப் பற்றி பேசி வந்தனர். இன்றளவும் அமெரிக்க நிர்வாகம் இது குறித்து சொல்லிக்கொண்டே இருக்கிறது. இதைவிட இன்னொரு முக்கிய முரண்பாடு வொல்போவிட்ச் உட்பட புஷ்ஷின் அதிகாரபூர்வ பேச்சாளர்கள் சொல்லிக்கொண்டிருந்த விஷயத்திற்கு நேர்மாறாக துணை பாதுகாப்புத்துறை செயலர், Vanity Fair - இடம் சொன்னதாவது 'சதாம் ஹூசேனின் உள்நாட்டு அடக்குமுறையானது "அமெரிக்க பிள்ளைகளின் உயிரைப் பணயம் வைக்கக்கூடிய அளவுக்கு போதுமான காரணமாக இல்லை'' என்பதுதான்.

அச்சில் வெளியான இந்த அறிக்கைகள் அதுவும் யுத்தத்தை திட்டமிட்டவர்களின் ஒருவரிடமிருந்து வெளிவந்த இந்த விஷயங்கள் எதைத் தெரிவிக்கின்றன என்றால் பேரழிவு ஆயுதங்கள் என்கின்ற காரணம் வெறுப்பூட்டக்கூடியது என்பதால் யுத்தம் செய்தே ஆக வேண்டும் என்ற யோசனையை சந்தேகம் மற்றும் தயக்கம் கொண்ட மக்களிடம் ''விற்பதற்கு'' மேற்படி காரணம் பயன்படுத்தப்பட்டது என்பதாகும்.

அரசாங்கம் சொல்லிவந்த தொடர் பொய்களில் மற்றுமொரு பொய் இன்றைக்கு வெளிப்பட்டு இருக்கிறது. இது மட்டுமே புஷ் புலனாய்வுத் துறையினரால் தவறாக ''வழிநடத்தப்பட்டார்'' என்கிற வாதத்தில் உள்ள அறிவுக்குப் பொருந்தாத தன்மையை வெளிப்படுத்த போதுமானது. 2003-ஜனவரி 28-ம் தேதியில் புஷ் அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் நிகழ்த்திய உரையில் ஆணித்தரமாக ஒரு விஷயத்தை வலியுறுத்தினார். அதாவது ''சதாம் ஹூசைன் சமீபத்தில்தான் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆபிரிக்காவிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பெற முயற்சித்து இருக்கிறார்'' என்பதுதான். பேரழிவு ஆயுதங்கள் குறித்தான பேச்சில் மேற்கண்ட கூற்றுத்தான் அதிகம் பயமுறுத்தக்கூடிய விதத்திலும் அதிக கவனத்தை திருப்பும் விதத்திலும் இருந்தது. இந்த விஷயம் உடனடியாக செய்தி ஊடகத்தால் எடுத்தாளப்பட்டு அடுத்த நாள் அமெரிக்கா முழுவதும் பத்திரிகைகளில் முன்பக்க செய்தியாக வெளியிடப்பட்டது.

அக்டோபர் 7-ம் தேதி ஜனாதிபதி புஷ் ஒஹியோ மாகாணத்தில் சின்சினாட்டி என்ற இடத்தில் நிகழ்த்துவதாக இருந்த உரையில் இதே விஷயம் -ஆபிரிக்காவிலிருந்து செறிவூட்டப்ட்ட யுரேனியம்'' அதிபரின் உரையில் இடம்பெற்று இருந்தது. வேறெவரையும் விட சி.ஐ.ஏ- வின் தலைவராக இருக்கும் ஜோர்ஜ் டெனெட்டே வெள்ளை மாளிகைக்கு தொலைபேசி மூலம் அதிபரைத் தொடர்பு கொண்டு மேற்படி குற்றச்சாட்டை உரையிலிருந்து எடுத்து விடுமாறு வலியுறுத்தினார். ஆபிரிக்க யுரேனியம் பற்றிய கூற்று, உண்மையில், உரையிலிருந்து அகற்றப்பட்டது.

ஆபிரிக்காவிலிருந்து யுரேனியம் என்ற செய்தியை புஷ் உபயோகப்படுத்த வேண்டாம் என்ற விஷயத்தை டெனெட் புஷ்சுக்கு அறிவுறுத்த சரியான காரணங்கள் இல்லாமலில்லை. 1991-வளைகுடாப் போருக்கு முந்தைய பெப்ரவரியில் செனியின் யோசனையின் பேரில் 23-வயது தொழில்முறை வெளிவிவகார அதிகாரியான நான்காம் ஜோஸப் வில்சன் (Joseph Wilson IV) ஈராக்குக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்தவர் நைஜர் என்கிற மத்திய ஆபிரிக்க நாட்டுக்கு அனுப்பப்பட்டார். ஈராக் உண்மையிலேயே ஆபிரிக்காவிடமிருந்து யுரேனியம் வாங்கியிருக்கிறது என்ற குற்றச்சாட்டை ஆராய அவ்வாறு அனுப்பப்பட்டார். இந்த செய்தியானது இத்தாலிய புலனாய்வுத்துறைக்கு விற்கப்பட்டு பிரிட்டனுக்கு தெரியப்படுத்தப்பட்டு, அமெரிக்காவிற்கு தெரிவிக்கப்பட்ட ஒரு பத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.

வில்சன் விஷயத்தை ஆராய்ந்து அந்தத் தகவலை போலியானது, உண்மையற்றது என்று அறிக்கை அனுப்பியிருக்கிறார். அமெரிக்கா மற்றும் பல நாடுகளின் புலனாய்வுத் துறைகள் ஈராக் ஆபிரிக்காவிலிருந்து யுரேனியத்தைப் பெற்றதாகக் கூறும் ஆவணம் உண்மையற்ற, போலித்தனமாக தயாரிக்கப்பட்டது என்று முடிவுக்கு வந்திருந்தன. அமெரிக்கா- பிரிட்டன் கூட்டுப்படைகள் ஈராக்கினுள் நுழைவதற்கு இரண்டுவாரங்களுக்கு முன்னால், சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் நிர்வாக இயக்குநரான முகம்மது எல் பராடி ஐ.நா- சபையின் பாதுகாப்பு சபையிடம் அளித்த அறிக்கையின்படி மேற்படி ஆவணம் "அதிகாரபூர்வமற்றது" என்று கூறி ஈராக் ஆபிரிக்காவிலிருந்து யுரேனியம் பெற முயற்சித்தார்கள் என்ற தகவலை மோசடியானது என்று நிராகரித்துள்ளார்.

இவ்வளவு நடந்து இருந்தாலும் 2003-ஜனவரியில் புஷ் அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்கு முன்பாகவே ஆபிரிக்க யுரேனியம் நிர்வாகத்தின் பிரச்சாரத்தில் மறுபடியும் இடம்பெற்றது. டிசம்பர்19-ம் தேதியிட்டு அமெரிக்க அரசுத்துறை தயாரித்து வெளியிட்ட உண்மைநிலை அறிக்கையில் ஈராக் நைஜரிலிருந்து பெற முயற்சித்த யுரேனியம் குறித்து எந்த விளக்கத்தையும் தரத் தவறியது, பாக்தாத் ஐ.நா-சபையில் டிசம்பர் 12-ம் தேதி சமர்ப்பித்த விளக்க அறிக்கையில் மேற்கண்ட யுரேனியம் குறித்து ஏதும் சொல்லப்படவில்லை என்றும் அந்த செயலே ஐ.நா- தீர்மானங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு சமம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23-ம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியாக ''ஈராக் பொய்பேசுகிறது என்பது நமக்கு எப்படி தெரியும்?" என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு இருந்தது. அதை எழுதிய கொண்டேலிசா ரைஸ் , ''ஈராக்கின் அறிக்கையில் அந்த நாடு ஆபிரிக்காவிலிருந்து யுரேனியம் பெறும் முயற்சிகள் குறித்து எதையும் விளக்கமளிக்கத் தவறியிருக்கிறது...." என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வகையான அறிக்கைகளும் அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் புஷ் நிகழ்த்திய கவனமாக தயாரிக்கப்பட்ட உரையோ தவறுதலாக நடந்தது என்றோ, வெறும் அதிகாரத்துவத்தின் திறமையின்மையின் விளைவு என்றோ ஒதுக்கிவிட முடியாது. போலித்தனமான உண்மையற்ற, குற்றச்சாட்டுக்களை புஷ் முன்னரே முடிவு செய்து கணக்கிட்டு உபயோகப்படுத்தியிருக்கிறார். அதுவுமின்றி இந்தத் தகவலுக்கான மூலம் "பிரிட்டிஷ் அரசாங்கம்"தான் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இது எதற்காக என்றால் மேற்படி குற்றச்சாட்டு சி.ஐ.ஏ- மற்றும் ஏனைய அமெரிக்க புலனாய்வுத் துறையினரால் நிராகரிக்கப்பட்டது என்ற உண்மையை மறைக்கத்தான்.

பேரழிவு ஆயுதங்கள் குறித்தான பொய்களில் குறிப்பிட்ட இந்த பொய்க்கு மட்டும் புஷ் நிர்வாகம் ஏன் உயிர்கொடுக்க வேண்டும்? அதுவும் சி.ஐ.ஏ- தலைமை ஆட்சேபம் தெரிவித்த பின்னரும் இதை ஏன் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்? 2002-ஆண்டின் இறுதி வாக்கில் யுத்தத்தை திட்டமிட்டவர்கள் அரசியல் ரீதியாக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தார்கள். டிசம்பர் மாதத்தில் ஈராக்கிற்கு திரும்பிச்சென்ற ஆயுதக்கண்காணிப்பாளர்கள் இரசாயன, உயிரியல் ஆயுத இருப்புக்கள் அல்லது அணு ஆயுத திட்டங்கள் சம்பந்தமான ஆதாரங்கள் எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வந்தன. இதைத் தவிர சர்வதேச அளவில் இம்மாதிரியான எதிர்ப்புக்கள் கிளம்பின. எப்போதுமில்லாத அளவுக்கு அமெரிக்க தெருக்களிலும் இத்தகைய பெரும் ஆர்ப்பாட்டங்கள் தடைபெற்றன. இவை தவிர அமெரிக்காவும் பிரிட்டனும், ஈராக்கில் தாக்குதல் ஐ.நா- சபை மூலம்தான் தாக்குதலை நடத்த வேண்டும் என்று பிரான்ஸ், ரஷ்யா, சீனா, மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்து பாதுகாப்பு சபையில் புதிய தீர்மானம் கொண்டுவர எடுத்த பெரும் முயற்சிகளின் வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொண்டன.

ஆகவே புஷ் மற்றும் அவரது சகாக்களுக்கு வேறு வழி இல்லாமல் அணு ஆயுத மிரட்டல் என்ற விஷயத்தைக் கையிலெடுத்தனர், அதாவது தாங்கள் முதலில் கொடுத்த எச்சரிக்கையின் படி ஈராக் இன்னும் ஒரே வருடத்தில் அணுகுண்டு தயாரிக்க முடியும் என்பதை வலியுறுத்துவதுதான். பயங்கரவாதிகள் அணுஆயுதங்களை உபயோகப்படுத்தித் தாக்குவார்கள் என்ற மிரட்டல்தான் பயத்தையும், பீதியையும் மக்கள் மத்தியில் கிளப்புவதற்கும் அதன் மூலம் அதன் போர் திட்டங்களை ஊக்குவிக்கவும் அரசாங்கத்திடம் இருக்கும் வலுவான வழிகளாக இருந்தன. ஆனாலும் புஷ் மற்றும் செனி ஆகியோரும் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்ட விஷயம் என்னவென்றால் ஈராக் அணு ஆயுதம் தயாரிக்க வேண்டுமென்றால் அதற்கான மூலப்பொருளை பெற்றால்தான் அதாவது பெற முடிந்தால்தான் நடக்கும் என்பதாகும். நைஜர் என்ற ஆபிரிக்க நாடு யுரேனியம் பெற்றிருந்தது அதனால் இரண்டையும் சேர்த்து அதை தங்களது நோக்கம் நிறைவேற உபயோகப்படுத்திக் கொண்டனர்.

அமெரிக்க அரசியல் வட்டார அமைப்பிலிருந்த வந்த மிகச்சில வெளிப்படையான கருத்துக்களில் ஒன்று ஜோஸப் வில்சன்IV-ஆல் கடந்த ஜூலையில் வாஷிங்டன் போஸ்ட்டிடம், நைஜர் விவகாரத்தில் தனது பங்கு பற்றி வெளிப்படுத்தியதில் குறிப்பிட்டதாவது: "இது எதற்காகவென்றால் யுத்தத்தில் ஈடுபடுவதற்கான அடிப்படை நியாயப்படுத்தலாக இருந்தது. அதே சமயத்தில் இந்த நிலைப்பாடு இன்னொரு கேள்வியை எழுப்புகிறது. ''வேறு எதைப் பற்றியெல்லாம் அவர்கள் பொய் சொல்லி இருக்கிறார்கள்?" என்று.

(தொடரும்...).


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved