World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Socialist Equality Party to hold public conference
Support the SEP in the 2004 Election For an independent socialist alternative

சோசலிச சமத்துவக்கட்சி நடத்தும் பொது மாநாடு

சுதந்திரமான சோசலிச மாற்றுக்கு 2004-தேர்தலில் SEP- க்கு ஆதரவு தரக்கோரிக்கை.

ஜனாதிபதி பதவிக்கு பில்வான் ஒகென்

துணை ஜனாதிபதி பதவிக்கு ஜிம் லோரன்ஸ்

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி 2004 ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரமான சோசலிச தேர்தல் பிரச்சாரத்தை நடத்துவதற்காக மெக்சிகன் அன் ஆர்பரில் மார்ச் 13-14, 2004-ல் தேசிய மாநாட்டை நடத்த விரும்புவதால் உலக சோசலிச வலைத் தள வாசகர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அமெரிக்க இராணுவவாத வெடிப்பு, அமெரிக்க தொழிலாளர்களின் மனித உரிமைகள் மீதும், வாழ்க்கைத் தரத்தின் மீதும், தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருப்பதை உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்களும் பின்பற்றி வரும் நிலைமை மேலாதிக்கம் செய்யும் அரசியல் சூழ்நிலைமைகளில் இருந்து இந்த மாநாட்டின் முக்கியத்துவம் தோன்றுகிறது.

புஷ் நிர்வாகத்தின் போர் கொள்கைகள், ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கும் தாக்குதல்கள், மற்றும் சமூகவாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அமெரிக்காவின் நிதி ஆதிக்க செல்வந்த தட்டால் செல்வம் குவிக்கப்படுவதற்கு கீழ்படுத்துவது ஆகிய கொள்கைகளுக்கு அமெரிக்காவிலும், சர்வதேச ரீதியாகவும் இரண்டிலும் மக்களது எதிர்ப்புக்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

இவற்றை எதிர்த்துப்போராடுவதற்கான வழிவகைகளை மில்லியன் கணக்கான மக்கள் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் வேட்பாளர்களிடம் அவர்கள் அவற்றைக் காணமாட்டார்கள். ஜனநாயகக்கட்சி மற்றும் குடியரசுக்கட்சி வேட்பாளர்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை தேர்தல் இயக்கத்தில் பாழடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாட்டை இறுகப்பிடித்துக்கொண்டுள்ள சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகள் குறித்து, நேர்மையான அல்லது ஆழ்ந்த விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை.

ஈராக் போருக்கு அதிகாரம் வழங்கவும், அமெரிக்க தேச பக்த சட்டத்தை ஆதரித்தும், வாக்களித்த அதே ஜனநாயகக் கட்சிக்காரர்கள் புஷ்ஷின் கொள்கைகளை கண்டித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், பெரு நிறுவன நலன்கள், பிரம்மாண்டமான தனியார் செல்வ உடைமை மற்றும் இலாப முறை ஆகியவற்றின் மேலாதிக்கத்திற்கு ஒரு நியாயமான அரசியல் மாற்று உருவாகிவிடாது தடுக்கும் நோக்கில்தான் ஆகும்.

கடந்த 140-ஆண்டுகளாக அமெரிக்க அரசியல் வாழ்வில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு வரும் இருகட்சி அமைப்பு முறையில் ஒரு முறிவை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு மாற்றை உருவாக்கும் அடித்தளத்திற்கான பிரச்சாரத்தை நடத்துவதுதான் சோசலிச சமத்துவக் கட்சியின் நோக்கம். சமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றியமைப்பதன் மூலம் சமூக சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் மற்றும் வறுமையை ஒழிக்க விரும்பும் உழைக்கும் மக்களின் ஒரு பரந்த அடித்தள மக்கள் இயக்கத்தைக் கட்டி அமைப்பதை நோக்கங் கொண்டதாகும்.

சோசலிச சமத்துவ கட்சி வேலைதிட்டத்தின் மையமாக விளங்குவது, அமெரிக்க உழைக்கும் மக்கள் நலன்களை மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் நலன்களை முன்னெடுப்பதற்குப் போராடுவதாகும். பொதுவான முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் சோசலிச வேலைதிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச இயக்கத்தில் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தங்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன் அமெரிக்க உழைக்கும் மக்களின் ஐக்கியத்தை ஒன்றிணைக்கப் போராடுவதற்கு, சர்வதேச அளவில் எமது பிரச்சாரத்தை முன்னெடுப்போம்.

மார்ச் 13,14-ல் நடக்கும் மாநாட்டின் நோக்கம், சர்வதேச இயக்கத்தைக் கட்டி எழுப்புவதற்கு தேவையான அரசியல் வேலைதிட்டத்தைப்பற்றி ஒரு ஆழமான விவாதத்திற்கு முன்முயற்சிப்பதாகும். வாக்குகளை குவிப்பதற்காக நமது கட்சி 2004-தேர்தலில் கலந்து கொள்ளவில்லை, எந்தக் கட்சி வெள்ளை மாளிகையை கைப்பற்றிக் கொண்டாலும், உழைக்கும் மக்களை எதிர்கொள்ளும் ஆழமான நெருக்கடி மற்றும் உக்கிரமான போராட்டத்திற்காக தயார் செய்யவும் அரசியல் கலந்துரையாடல் மற்றும் விவாதத்தின் மட்டத்தை உயர்த்தவும் இந்தத் தேர்தலில் நமது கட்சி பங்கெடுத்துக் கொள்கிறது.

இந்த மாநாடு, தேர்தல் பிரச்சாரத்தில் கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகளையும் விவாதிக்கும். நாடுதழுவிய முயற்சியாக, பில்வான் ஒகெனை ஜனாதிபதி பதவிக்கும், ஜிம் லோரன்சை துணை ஜனாதிபதி பதவிக்கும் தேர்தலில் நிறுத்த, இருவரையும் வாக்குச் சீட்டில் இடம்பெறச் செய்ய தேசிய அளவிலான முயற்சியைத் தொடங்கும், உழைக்கும் மக்களையும், இளைஞர்களையும் ஒரு கடற்கரைப் பகுதியிலிருந்து மற்றொரு கடற்கரைப்பகுதிவரை ஆர்வத்துடன் அரசியல் ரீதியாய் அணிதிரட்டுவதற்கான திட்டங்களை வரைந்து, தேசிய சட்டமன்ற இடங்களுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரங்களுக்கும் ஒழுங்கு செய்யும்.

உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்கள் மற்றும் வாசகர்கள் மாநாட்டின் பிரதிநிதிகளாகப் பதிவு செய்து கொள்ளுமாறும் மார்ச் 13,14-ல் அன் ஆர்பருக்கு வருமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved