World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka's president remains silent after sacking the government

இலங்கை ஜனாதிபதி அரசாங்கத்தை பதவிவிலக்கியதை அடுத்து மெளனம் சாதிக்கிறார்.

By K.Ratnayake
10 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசாங்கத்தை பதவி விலக்கி இரண்டு நாட்களின் பின்னரும், தனது நடவடிக்கையை நியாயப்படுத்தி எந்தவொரு வெளிப்படையான அறிக்கையையும் விடுக்கவில்லை. நான்கு வருடங்களுக்கும் குறைவான காலத்துள் ஒரு மூன்றாவது பொதுத் தேர்தலுக்கு வழிவகுத்த அவரது தீர்மானமானது, நாட்டை அரசியல் குழப்பத்துக்குள் தள்ளியுள்ளதுடன், வர்த்தகத் தலைவர்கள், ஊடக ஆய்வாளர்கள் மற்றும் அரசாங்க அமைச்சர்களின் தரப்பில் விமர்சனங்களைக் கிளப்பிவிட்டுள்ளது. குமாரதுங்க, தானே நெருக்கடியை தொடங்கிவைத்த போதும், அவர் வேண்டுமென்றே மெளனம் காக்கின்றார்.

ஜனாதிபதி சனிக்கிழமை பின்னிரவு தனது கருத்துக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது அவரது அமைச்சர்களுக்கோ கூட அறிவிக்காமல் தனது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இரவு 10 மணியளவில், அவரது உதவியாளர்கள் ஜனாதிபதி பாதுகாவலர்களின் வழித்துணையுடன் கடும் பாதுகாப்பிடப்பட்டிருந்த அரசாங்க அச்சகத்திற்கு ஜனாதிபதியின் கட்டளையை எடுத்துச் சென்றனர். இறுதியாக பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவில் வெளியிடப்பட்டது.

ஆயினும், உத்தியோகபூர்வ வர்த்தமானி தீர்மானத்தைப்பற்றி விளக்கமளிக்கவில்லை. அது பாராளுமன்றத்தை கலைக்கவும் மற்றும் புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுக்கவும், அரசியலமைப்பில் உள்ளபடி ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவதாக அறிவித்தது. குமாரதுங்கவும் அவரது ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க) எதிர்கட்சியில் இருக்கும்போது, நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைய சர்வாதிகாரமானது என தொடர்ச்சியாக கண்டனம் செய்துவந்தனர். இப்போது, ஜனாதிபதி என்ற வகையில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் (ஐ.தே.மு) இன்னமும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள போதிலும், அதை பதவிவிலக்குவதற்காக அவர் இதே கொடுங்கோன்மையான அதிகாரங்களைப் பயன்படுத்தியுள்ளார்.

குமாரதுங்க, முன்னதாகவே அவரது நடவடிக்கைகளை பாதுக்கும் விடயத்தை அவரது ஆலோசகர்களுக்கு ஒப்படைத்துள்ளார். பாராளுமன்றத்தை கலைப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் ஜனாதிபதியால் அஞ்சல், தொலைத் தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட டி.எம் ஜயரத்ன, கேகாலையில் இடம்பெற்ற கூட்டத்தில் "நாட்டை பாதுகாப்பதன் பேரில்" "நன்கு சிந்தித்தே" அவர் இந்த முடிவை எடுத்தார் எனத் தெரிவித்தார்.

கடந்த நவம்பரில், குமாரதுங்க திடீரென மூன்று பிரதான அமைச்சுக்களின் கட்டுப்பாட்டை அபகரித்து, அரசாங்கத்துடன் ஒரு நீண்ட அரசியல் விட்டுக்கொடுப்பற்ற நிலையை தோற்றுவித்த போதும் இதே நியாயப்படுத்தல்களே வழங்கப்பட்டன. ஜனாதிபதியும் அவரது பங்காளிகளும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் "நாட்டைப் பிளவுபடுத்த வழியமைப்பதாகவும்," நாட்டின் பாதுகாப்பை கீழறுப்பதாகவும் விக்கிரமசிங்க மீது குற்றஞ் சாட்டினர்.

ஆனால் அப்போதிலிருந்து, பாதுகாப்பு அமைச்சும் உள்துறை அமைச்சும் குமாரதுங்கவின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன. இதற்கும் மேலாக சமாதானப் பேச்சுவார்த்தைகள் கடந்த ஏப்பிரலில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. அப்போதும் சரி, இப்போதும் சரி, குமாரதுங்க நாட்டின் இரு தசாப்தகால உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்காக தமிழ் சிறுபான்மையினருக்கு சலுகை வழங்குவதை எதிர்த்துவரும் இராணுவ உயர்மட்டத்தினரதும் சிங்களப் பேரினவாதிகளதும் கோரிக்கைகளையே பிரதிபலித்துள்ளார்.

மூன்றுவாரங்களுக்கு முன்னர், குமாரதுங்க மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி) ஒரு கூட்டணி அமைக்க வழிசெய்தார். சிங்களப் பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கட்சி, ஐ.தே.மு அரசாங்கத்தை நாட்டைக் காட்டிக்கொடுப்பதாக கண்டனம் செய்து வருவதோடு விக்கிரமசிங்கவை வெளியேற்றுமாறு ஜனாதிபதியைக் கோரிவருகின்றது. மூன்று வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றத் தேர்தல்களில் பிரதான கட்சிகள் மீதான அதிருப்தியை ஜே.வி.பி சுரண்டிக்கொண்டது. இந்த இரு பிரதான கட்சிகளும் வாழ்க்கை நிலைமையை கடுமையாக சீரழித்த பொருளாதார மறுசீரமைப்பு சீர்திருத்தங்களை அமுல்படுத்தியுள்ளன.

ஜே.வி.பி உடனான ஸ்ரீ.ல.சு.க கூட்டணி, வெளிப்படையாகவே விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து கவிழ்ப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. குறிப்பிடத்தக்க வகையில், சனிக்கிழமை குமாரதுங்கவின் பாராளுமன்றக் கலைப்பு செயலானது, தேர்தல் ஆணையாளர் புதிதாக அமைக்கப்பட்ட ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க கூட்டணியை ஒரு அரசியல் கட்சியாக உத்தியோகபூர்வமாக பதிவுசெய்து, அதன் தேர்தல் சின்னமாக வன்னத்துப்பூச்சியை அங்கீகரித்து சற்றே ஒரு நாள் கடந்தபின்னரே வெளிவந்தது.

இந்தக் கூட்டணி ஸ்ரீ.ல.சு.க உள்ளே குறிப்பிடத்தக்க எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே அமைக்கப்பட்டது. குமாரதுங்கவின் நடவடிக்கைகளை எதிர்த்து 45 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மனுவில் கைச்சாத்திட்டிருந்தனர். உண்மையில் அவர் முன்சென்றதானது, அவர் பாராளுமன்றத்திலும் மற்றும் தேர்தலிலும் மிகக் குறைவான அக்கறையே கொண்டுள்ளதோடு, இறுதி ஆய்வில், இராணுவத்தின் ஆதரவைப்பெறும் அவரது நிறைவேற்று அதிகாரத்தையே நேரடி அடித்தளமாகக் கொண்டிருக்கிறார் என்பதற்கு நிச்சயமான சமிக்ஞைகளாகும்.

அவரது தொடர்ச்சியான மெளனத்திற்கு மத்தியில், உலக சோசலிச வலைத் தளம் குமாரதுங்கவின் ஊடக ஆலோசகர் ஜனதாச பீரிஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டது. ஜனாதிபதி அவரது நடவடிக்கைகளைப் பற்றி விளக்கமளிக்காமல் இருப்பது ஏன் எனக் கேட்டபோது, "பெரும்பாலும்" அவர் இன்றிரவு தேசியத் தொலைக்காட்சியில் தோன்றலாம், என பீரிஸ் தற்காப்பாகத் தெரிவித்தார். ஆனால் அவர் நிச்சயப்படுத்தவில்லை.

ஜனாதிபதியின் மெளனம், அவரது பொனபாட்டிச நடவடிக்கைகள் ஆளும் வட்டாரங்களில் உள்ள ஆழமான பிளவுகளின் விளைவுகளே என்ற உண்மையை கோடிட்டுக்காட்டுகிறது.

கொழும்பில் உள்ள வர்த்தகத் தலைவர்கள், கடந்த மூன்று மாதங்களாக குமாரதுங்கவும் விக்கிரமசிங்கவும் சமரசத்தை அடையவேண்டும் எனவும், சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்காக விடுதலைப் புலிகளுடன் கொடுக்கல் வாங்கல்களுக்கு ஒழுங்கு செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி வந்துள்ளனர். பெரும் வல்லரசுகளும், விசேடமாக அமெரிக்காவும், திரைமறைவில் இதே கோரிக்கைகளுக்காக ஜனாதிபதியை நெருக்கிவருகின்றது.

மறுபுறத்தில், அவரது சொந்தக் கட்சியில் இருந்துகொண்டு ஜே.வி.பி யுடன் ஒரு கூட்டணியை அமைக்கக் கோரியவர்கள் உட்பட்ட சிங்களப் பேரினவாதிகளும், அதேபோல் இராணுவத்தில் உள்ள பலம்வாய்ந்த பகுதியினரும் விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு உடன்பாட்டையும் கசப்புடன் எதிர்க்கின்றனர்.

ஜனாதிபதியின் நடவடக்கைகள், வெற்றிகரமான முறையில் ஸ்ரீ.ல.சு.க-ஜே.வி.பி அரசாங்கத்தை பெறுபேறாகத் தருமானால், சாத்தியமான எல்லா வகையிலும் விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைவதோடு, நாடு மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளப்படலாம். குமாரதுங்கவின் தர்மசங்கட நிலை, இந்த நடவடிக்கைகளை அவரது முன்னாள் வியாபார ஆதரவாளர்கள் மற்றும் பெரும் வல்லரசுகள், குறிப்பாக வாஷிங்டனுக்கு எவ்வாறு நியாயப்படுத்துவது என்பதில் தங்கியுள்ளது. ஒரு அறிக்கையை விடுப்பதில் அவருக்கு நீண்டகாலம் எடுப்பது சிறிது வியப்புக்குரியதாகும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், சொற்களைவிட நடவடிக்கைகள் சத்தமாகப் பேசும். குமாரதுங்கவின் அரசியலமைப்பு சதியானது, இலங்கை சமுதாயத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகளின் ஆழத்தைப் பற்றி சத்தமாகப் பேசுகின்றது. அது இலங்கை ஆளும் வர்க்கம் பாராளுமன்ற ஜனநாயகம் என்ற பழைய அமைப்பில் இருந்து வேகமாக விலகிவருவதற்கான தெளிவான எச்சரிக்கையை விடுக்கின்றது.

See Also :

இலங்கை ஜனாதிபதி அரசியல் சதியில் அரசாங்கத்தை விலக்கினார்

ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க கூட்டணி இலங்கையின் அரசியல் பதட்டநிலையை அதிகரிக்கச்செய்கின்றது

Top of page