World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி German Socialist Equality Party to stand in European elections ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளரை நிறுத்துகிறது Statement of the Socialist Equality Party (Germany) ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திற்கு ஜூன் 11-13-ல் நடைபெறும் தேர்தல்களில் கலந்து கொள்வதற்கான தேசிய வேட்பாளர் பட்டியலைத் தயாரிப்பதென சென்ற மாதம் நடைபெற்ற கூட்டத்தில் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (றிணீக்ஷீtமீவீ யீஜக்ஷீ ஷிஷீக்ஷ்வீணீறீமீ நிறீமீவீநீலீலீமீவீtறிஷிநி) முடிவு செய்திருக்கிறது. ஜேர்மனியில் ஜூன் 13-ல் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. PSG-ன் தலைவரும் உலக சோசலிச வலை தள ஆசிரியர் குழு உறுப்பினருமான உல்ரிச் ரிப்பேர்ட்டை (52) பேர்லினிலிருந்து கட்சியின் முன்னணி வேட்பாளராக சோசலிச சமத்துவக் கட்சி தேர்ந்தெடுத்திருக்கிறது. கட்சியின் இதர வேட்பாளர்கள் பிராங்க்போர்ட் மெயின் இரசாயனத் தொழில் தொழிலாளி ஹெல்முட் எரேன்ஸ் (Helmut Arens) (54); Duisburg-ல் ஆசிரியராகப் பணிபுரியும் Dietmar Gaiseukersting (37), Duisurg- ல் அலுவலக ஊழியராக பணியாற்றும் Elisabeth Zimmermann (47), Bielifeld-லிருந்து மொழிகள் கற்பிக்கும் ஆசிரியை Celia sokolosky(30) மற்றும் Christoph Vandreier(23) பேர்லினில் உளவியல் கற்கும் மாணவர் ஆகியோர் ஆவர். மில்லியன் கணக்கான மக்களை எதிர் கொண்டுள்ள முக்கியமான பிரச்னைகளுக்கு -போர் அச்சுறுத்தல், பெருகிவரும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், சமூக பாதுகாப்பின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் பறிப்பு போன்றவற்றுக்கு தீர்வுகாண்பதற்கான வழிவகைகளை உருவாக்குவதற்கு நாடும் ஒரு அரசியல் வேலைத்திட்டம் பற்றிய ஒரு விரிவான விவாதத்தை ஊக்குவிக்கும் பொருட்டு சோசலிச சமத்துவக் கட்சி ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களை பயன்படுத்திக்கொண்டு வருகிறது. சோசலிச சமத்துவக் கட்சி (PSG) ஜேர்மனியில் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தாலும் அதன் தேர்தல் பிரச்சார இயக்கம் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் நடக்கும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பகுதி என்றவகையில் சோசலிச சமத்துவக் கட்சி- பிரிட்டனில் உள்ள சகோதர அமைப்பான சோசலிச சமத்துவக் கட்சியுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால் PSG- யின் தேர்தல் பிரச்சாரம் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியோடு நெருக்கமான ஒத்துழைப்புடன் நடாத்தப்படுகிறது. அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி இந்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளரை நிறுத்துகிறது. PSG- வேலைதிட்டத்தின் இதயத்துடிப்பான அம்சம் தொழிலாள வர்க்கத்திடையே சர்வதேச ஐக்கியத்தை உருவாக்கவேண்டுமென்பதாகும். ஐரோப்பிய ஒன்றியம், அதன் நிறுவனங்கள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள அரசியல் அமைப்பு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் விரிவாக்குவதற்கான EU திட்டங்கள் ஆகியவற்றை PSG- திட்டவட்டமாக நிராகரிக்கிறது. அதே நேரத்தில் நாங்கள் எல்லா வகையான தேசியவாதம் மற்றும் தம்மை உயர்த்தி பிறரைப்பழிக்கும் வெறியின் அனைத்து வடிவங்களையும் நிராகரிக்கிறோம். தேசிய இறையாண்மையை வலியுறுத்தி கிழக்கு ஐரோப்பாவையும், துருக்கியையும் பிரித்து வைப்பது EU- விற்கு மாற்றாக அமையாது, ஆனால் கூடுதல் சேர்க்கையாகத்தான் செயல்படும். அத்தகைய கொள்கைகள் மக்களை தேசிய, இன, மற்றும் மத அடிப்படையில் பிரித்து அவர்களை ஒடுக்குவதில் உதவுகிறது. வங்கிகளும் பெரிய கம்பெனிகளும் அடங்கிய ஐரோப்பாவிற்கு எதிராக ஐக்கிய சோசலிச ஐரோப்பாவை உருவாக்க PSG- முன்மொழிகிறது. உலகம் முழுவதையும் வன்முறை ரீதியில் தனக்கு அடிபணிந்து நடக்க வாஷிங்டன் மேற்கொண்டுள்ள மேலாதிக்க முயற்சிகள் மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகளுக்கு மட்டும் அச்சுறுத்தலாக இல்லாமல், மீண்டும் ஒருமுறை பெரிய சக்திகளுக்கிடையே ஆயுத மோதல் அபாயத்தை உருவாக்கியுள்ளது. சென்ற ஆண்டு பெப்ரவரி 15-ல் உலகம் முழுவதிலும் வரலாறு காணாத வகையில் மில்லியன் கணக்கான மக்கள் அணிதிரண்டு ஈராக் போருக்கு எதிராக பிரம்மாண்டமான பேரணிகளை நடத்தினர். அந்தப்போர் தங்களுக்கு நேரடியான அச்சுறுத்தலென்று அவர்கள் மிகச்சரியாக கருதினர். ஆயினும், ஐரோப்பிய அரசாங்கங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்ததை எதிர்கொள்ளும் வல்லமை இல்லாதவை. ஒரு சில ஐரோப்பிய அரசாங்கங்கள் --பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் போலந்து-- வாஷிங்டனுக்கு தங்களது நிபந்தனையற்ற ஆதரவை தந்தவேளையில் பாரீஸ் மற்றும் பேர்லினிலிருந்து வந்த ஆரம்ப போர் எதிர்ப்பு எந்த வகையிலும் அக்கறைத்தன்மை கொண்டதற்றதாக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, இரண்டில் எந்த அரசாங்கமும் தங்கள் நாட்டிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை மூடிவிட எந்தவகையிலும் உத்தேசிக்கவில்லை. அப்படிப்பட்ட நடவடிக்கை போருக்கான முன்னேற்பாடுகளை செய்வதில் அது மிகப்பெரிய தடைக்கல்லாக அமைந்திருக்கும். அதற்குப்பின்னர் அந்த இரு நாடுகளும் ஒடுக்கப்பட்ட அந்த நாட்டை ஆக்கிரமித்துக்கொள்வதற்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவித்தன. இதை பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் மிசேல் அலியோ மேரி அண்மையில் வெளிப்படையாக தெளிவுபடுத்தியுள்ளார்: ''ஈராக்கில் அமெரிக்கா தோல்வியடைவதில் எவருக்கும் அக்கறையிருக்க முடியாது. அப்படிப்பட்ட தோல்வி நம் அனைவருக்கும், உலகம் முழுவதற்குமான தோல்வியாக அமையும்'' ஈராக் போரை ஆரம்பத்தில் ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் நிராகரித்தமை, தங்களது சொந்த ஏகாதிபத்திய நோக்கங்களோடு கட்டுண்டிருந்த ஒரு அம்சமாகும். தங்களுக்கு கணிசமான பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் உள்ள பிரந்தியத்தில் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டை நிலைநாட்ட தன்னிச்சையாக மேற்கொண்டுள்ள முயற்சியை இரு நாடுகளும் அச்சத்தோடும் அவநம்பிக்கையோடும் பார்த்தன. போரைத்தடுப்பதற்கு தவறிவிட்ட இரு நாடுகளும் இப்போது ஐரோப்பிய இராணுவமயமாக்கலை முடுக்கிவிட்டு தீவிர நடவடிக்கைகளில் இறங்கி ஆபிரிக்க, ஆசியா மற்றும் உலகின் இதர பகுதிகளில் தங்களது சொந்த இராணுவ தலையீடுகளுக்கு தயாராகி வருகின்றன. ஈராக்கிலேயே துருப்புக்களை நிறுத்துவது குறித்துக்கூட அவர்கள் ஆலோசனை செய்துவருகிறார்கள். இந்தப்போரை எதிர்த்து போரிடுவதற்கு அதன் அடிப்படை மூலங்களைப் புரிந்து கொள்வது அவசியம். இறுதி ஆய்வில், உலகளவிலான முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியிலிருந்துதான் போர் அச்சுறுத்தல் உருவாகி வருகிறது. அமெரிக்க அரசாங்கம் வலுவான நிலையில் நின்றுகொண்டு இதைச் செய்யவில்லை, ஆனால் பலவீன அடிப்படையில் இருந்துதான் செயல்படுகிறது. அமெரிக்க முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள உள் முரண்பாடுகளை சமாளிக்கும் நோக்கில் உலகளவில் சந்தைகளை, லாபத்தை, மலிவான கூலி உழைப்புக்களைத் தேடுகின்ற கடும் போராட்டத்தை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்டது. ஈராக்கை வென்றெடுத்தன் மூலம் அதன் நோக்கங்கள் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி விடுத்துள்ள ஜனாதிபதி தேர்தல் கொள்கை அறிக்கைப்படி ''உலகிலேயே இரண்டாவது பெரிய எண்ணெய் வள ஆதாயங்களை கைப்பற்றிக்கொள்ளவும், அமெரிக்க இராணுவப் படைகளை மத்திய கிழக்கில் நிறுத்தவும் அதன் மூலம் இதர எல்லா எதிர்கால எதிரிகளுக்கும் மேலாக இணையில்லாத புவிசார் மூலோபாய நலனை பெருக்குவதற்கும் மற்றும் உள்நாட்டில் வளர்ந்துவரும் சமூக அதிருப்திகளை வெளிநாடுகளுக்கு திசைதிருப்பிவிடவும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சோசலிச சமத்துவக் கட்சி (PSG) ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மற்றும் போருக்கு எதிரான தனது போராட்டத்தை ஒரு சோசலிச வேலைத்திட்ட அடிப்படையில் நடத்திவருகிறது. அமெரிக்க தொழிலாளர்கள் உட்பட சர்வதேச தொழிலாள வர்க்கத்தை - அதாவது ஊதியம் பெறுகின்ற அனைவரையும் உடல் உழைப்பைத் தருவோர், அலுவலக எழுத்தர்கள் மற்றும் தங்களது அறிவை பயன்படுத்தி வாழ்பவர்கள் ஆகியோர் அனைவரும் தங்களது உழைப்பு ஆற்றலை ஊதியத்திற்கு விற்று வாழ்ந்து வருகிறார்கள், அவர்களது வாழ்க்கைத்தரம் இலாப நோக்கில் தற்போது செயல்பட்டுவரும் பொருளாதார முறைக்கு ஏற்புடையதாக இல்லை, ஏனெனில் இலாபத்திற்கே முதலிடம் தரப்படுகிறது- இவர்கள் அனைவரையும் ஓரணியில் அணிதிரட்டுவதற்கு முயன்றுவருகிறது. அரசு ஆயுதக்குவிப்பு வேலைதிட்டங்களை மேற்கொள்வதாலும் சமுதாய நலன்களை அழித்துவருவதாலும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த உரிமைகளை தீவிரமாக தற்காத்து நிற்பதை குறிக்கோளாகக் கொண்டு PSG செயல்பட்டு வருகிறது. சோசலிச கொள்கைகள் அடிப்படையில் பொருளாதார வாழ்வை மறுஒழுங்கமைப்பதற்கு -வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் ஆகியவை சமூக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, மிகச்சிறுபான்மையினரான பணக்காரர்கள் இலாப நோக்கு உந்துதலுக்கு மாறாக சமூகத் தேவைகளுக்கேற்ப உற்பத்திமுறையை மாற்றியமைக்க- போராடி வருகின்றது. சமூக ஜனநாயம் முதலாளித்துவ முறையை சமூக பொறுப்புள்ளதாக மற்றும் தொழிலாளர் நலன்களை காப்பற்காக ஒழுங்கமைக்க முடியுமென்று வாதிட்டு எப்போதுமே முதலாளித்துவத்தை பாதுகாத்து வருவதை நியாயப்படுத்தி வருகிறது. இன்றையதினம் அத்தகைய கருத்துருக்கள் எதுவுமில்லை. ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி ( SPD) மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் செயல்பட்டுவரும் சமூக ஜனநாயகக் கட்சிகள் அனைத்துமே இன்றைய தினம் தங்கள் செல்வாக்கை முற்றிலுமாக இழந்து நிற்கின்றன. அக்கட்சிகள் சமூக நலன்களுக்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் எதிராக செயல்பட்டு வருகின்றன. அவர்களது பழமைவாத எதிரிகளுக்கும் அவர்களுக்குமிடையே எந்தவிதமான வேறுபாட்டையும் காணமுடியவில்லை. டோனி பிளேயரின் தொழிற்கட்சி தனது எதிரியான பழமைவாத மார்க்கரெட் தாட்சரின் வேலைதிட்டங்களை கையகப்படுத்திக் கொண்டுள்ளது. சுரோடரின் "2010 செயற்பட்டியல்'' அவருக்கு முந்திய பழமைவாத ஜனாதிபதி ஹெல்மூட் கோலினால் மேற்கொள்ளப்பட்ட நலன்புரி அரசுகள் மீதான தாக்குதல்களையும் மிஞ்சி விட்டது. இதே நிலைதான் இத்தாலியிலும், பிரான்சிலும், செயல்பட்டுவரும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் பொருந்தும். ஜேர்மனியில் ஜனநாயக சோசலிச கட்சி (PDS) சோசலிசம் பற்றிய அனைத்துப் பேச்சுக்களையும் பதவிக்கு வந்ததும் காற்றில் பறக்கவிட்டுவிட்டது. பேர்லினில் SPD-PDS கூட்டணியானது சமூக உரிமை, வேலைகள், பொதுத்துறை தொழிலாளர்களின் ஊதியங்கள் மீது தாக்குதல் நடத்துவதில் முன்னணி பாத்திரத்தை வகித்தன. இத்தகைய கட்சிகளின் செயல்பாட்டை திருத்துவதோ அல்லது அக்கட்சிகளில் இருக்கின்ற ''முற்போக்கு'' தட்டினரை தன்பக்கம் ஈர்த்துக்கொள்வதோ PSG- ன் நோக்கமல்ல. அத்தகைய முன்னோக்கு பிற்போக்கானது மற்றும் நடைமுறைக்கு ஏற்றதல்ல. அப்படிச்செய்வதன் மூலம் அத்தகைய கட்சிகளுக்கு இடது முகமூடிதான் கிடைக்கும். இந்தக் கட்சிகளின் செல்வாக்கிலிருந்து தொழிலாளர்களை விடுவித்து சுதந்திரமான அரசியல் இயக்கத்தை உருவாக்க சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை நிறுவுவது PSG- ன் நோக்கம். இருபதாம் நூற்றாண்டின் படிப்பினைகளை அடிப்படையாகக்கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். நான்காம் அகிலத்தின் ஜேர்மன் பகுதி என்ற வகையில் லியோன் ட்ரொட்ஸ்கி நிறுவிய இடது எதிர்ப்பு என்ற பாரம்பரியத்தை தாங்கி நிற்கிறோம். அது சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிராக சோசலிச அடித்தளங்களை தற்காத்து நின்றது. நான்காம் அகிலம், சோசலிசத்தை- அதிகாரத்துவசாதியின் கொடுங்கோன்மைச் சர்வாதிகாரத்துடன் சமப்படுத்துவது சாத்தியம் என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. உழைக்கும் மக்களின் மிகப்பரவலான ஜனநாயக பங்கேற்பின் மூலம்தான் சோசலிசத்தை உருவாக்க முடியும். வரும் வாரங்களில் PSG- தனது சொந்த தேர்தல் அறிக்கையை முன்வைக்கும், அது மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள முன்னோக்கை மிகவிரிவான அடிப்படையில் விளக்கும். உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் அனைவரையும் PSG- யின் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியைப் பெறுவதற்கு 4,000 செல்லுபடியாகும் கையெழுத்தக்களை பெறுவதுதான் தேர்தல் பிரச்சாரத்தின் முதல்கட்ட நடவடிக்கை. அடுத்த கட்டம் தேர்தல் அறிக்கையை விரிவான அடிப்படையில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது மற்றும் நமது வேலைதிட்டத்தை விவாதிப்பதற்கு கூட்டங்களை ஏற்பாடு செய்வது ஆகும். நமது தேர்தல் பிரச்சார இயக்கத்தின் கூடுதல் விவரங்கள், தேர்தல் ஆதரவு படிவங்கள் மற்றும் இதர தேர்தல் விவரங்கள், நமது தேர்தல் பிரச்சாரத்திற்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள வலைதளத்தில் வெளியிடப்படும். |