World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

JVP-SLFP alliance heightens political tensions in Sri Lanka

ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க கூட்டணி இலங்கையின் அரசியல் பதட்டநிலையை அதிகரிக்கச்செய்கின்றது

By Vilani Peiris and K. Ratnayake
3 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் (ஸ்ரீ.ல.சு.க) மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) இடையில் ஒரு கூட்டணியை அமைப்பதற்கான ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தீர்மானத்தை அடுத்து இலங்கையில் அரசியல் பதட்ட நிலைமைகள் அதிகரித்துள்ளது. சில காலம் தன்னை சோசலிச கட்சியாக காட்டிக்கொண்ட ஜே.வி.பி, சிங்களப் பேரினவாதத்திற்கு பகிரங்கமாக அழைப்புவிடுப்பதோடு, நாட்டின் நீண்ட உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தமிழீழ விடுதலைப் புலகளுடன் ஒரு உடன்பாட்டை அடைவதை இலக்காகக் கொண்ட, பெயரளவிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் எதிர்க்கின்றது.

ஸ்ரீ.ல.சு.க பொதுச் செயலாளர் மைத்ரிபால சிறிசேனவும் ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை (ஐ.ம.சு.மு) ஸ்தாபிப்பதற்காக ஜனவரி 20 அன்று கொழும்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். அவர்கள், ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்தை வெளியேற்றுவதே தமது இலக்கு எனப் பிரகடனப்படுத்தினர். ஆவனத்தின் முதல்பகுதிகள், விக்கிரமசிங்க ஒரு தனித் தமிழ்நாடு அமைக்க வழியமைப்பதாகவும், நாட்டின் பொருளாதார அடிப்படைகளை சீரழிப்பதாகவும் மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளுக்கு அடிபணிந்து போவதாகவும் அவரைக் கண்டனம் செய்கின்றது. ஐ.ம.சு.மு தனது இலக்குகளை அமுல்படுத்துவதற்காக கடந்த வியாழன் அன்று ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியது.

ஸ்ரீ.ல.சு.க-ஜே.வி.பி கூட்டணியானது ஏற்கனவே கொழும்பில் கொதித்துக்கொண்டிருக்கும் அரசியல் நிலைமைக்கு ஒரு புதிய வெடிக்கும் காரணியை சேர்த்துள்ளது. அரச அதிகாரத்தின் நெம்புகோலைக் கட்டுப்படுத்துவது யார் என்பது பற்றி, அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இருந்து வந்த பதட்டமான அரசியல் விட்டுக்கொடுப்பற்ற நிலைமை, மூன்று மாதகாலமாக எந்தவொரு தீர்வுக்குமான அறிகுறிகளும் இன்றி இப்போதும் இழுபட்டுக்கொண்டிருக்கிறது. ஜே.வி.பி, இராணுவ உயர்மட்டத்தினர் மற்றும் பலவித சிங்களத் தீவிரவாதக் குழுக்களால் தூண்டப்பெற்ற குமாரதுங்க, நவம்பர் 4ம் திகதி மூன்று பிரதான அமைச்சுக்களையும் அபகரித்ததோடு பாராளுமன்றத்தையும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து, அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்யவும் முற்பட்டார். அரசாங்கம் விடுதலைப் புலிகளால் உள்வாங்கப்படுவதாகவும் நாட்டின் தேசியப் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பெரும் வல்லரசுகளின் நெருக்குவாரத்தின் பின்னர் மட்டுமே குமாரதுங்க பின்வாங்கினார். வாஷிங்டன் நாட்டின் உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. யுத்தமானது இலங்கையில் மட்டுமன்றி தெற்காசிய பிராந்தியம் பூராவும் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் மூலோபாய குறிக்கோள்களை கீழறுப்பதாக அது கருதுகிறது. பெரும் வர்த்தகத் தட்டினரும், வெளிநாட்டு முதலீட்டை ஊக்கப்படுத்தவும், தீவை மேலும் மேலும் நெருக்கமாக பூகோள உற்பத்தி முன்னெடுப்புகளுக்குள் ஒன்றிணைப்பதன் பேரிலும் யுத்தத்திற்கு முடிவுகட்ட விரும்புகின்றனர். ஆனால், விடுதலைப் புலிகளுடான சமாதானப் பேச்சுவார்த்தைகள், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக தொழிலாளர் வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் தனது சொந்த அரசியல் ஆளுமையை தூக்கி நிறுத்தவும் தமிழர் விரோத இனவாதத்தை சுரண்டிவந்த ஆளும் கும்பல்களுக்குள் கூர்மையான பதட்டநிலைமைகளை தோற்றுவித்தது.

இந்த அரசியல் முட்டுச்சந்து மூன்றுமாதங்களாக நீடித்தது. கடந்த ஏப்பிரல் மாதம் இடைநிறுத்தப்பட்ட விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவில்லை. உக்கிரமான சர்வதேச அழுத்தங்கள் இருந்த போதிலும், குமாரதுங்கவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒரு சமரசத்தை முன்வைக்கத் தவறியதோடு, கடந்த டிசம்பரில் பொறிந்து விழுந்தன. பிரதானமாக தொற்றிக்கொண்டுள்ள விடயம், பாதுகாப்பு அமைச்சு மீதான கட்டுப்பாடாகும். ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை திருப்பிக்கொடுக்க மறுத்துவரும் அதேவேளை, அரசாங்கம் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை தொடர்வதென்றால் பாதுகாப்பு அமைச்சு அவசியம் என பிரதமர் வலியுறுத்தி வருகிறார்.

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் ஸ்ரீ.ல.சு.க வின் சில பகுதியினர், கட்சியின் ஆதரவுக்கு முண்டுகொடுக்க ஜே.வி.பி உடன் ஒரு கூட்டணியை அமைக்குமாறும் மற்றும் முன்கூட்டிய தேர்தலை நடத்துமாறும் குமாரதுங்கவை நெருக்கினர். ஸ்ரீ.ல.சு.க வின் ஏனைய பகுதிகளும், அதன் பொதுஜன முன்னணி கூட்டணியின் பங்காளர்களான லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க), மற்றும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும், யுத்தத்திற்கு முடிவுகட்டுவதன் பேரில் விடுதலைப் புலிகளுடன் ஒரு உடன்பாட்டை அடையும் எந்தவொரு முயற்சிகளையும் கீழறுக்கும் ஜே.வி.பி உடனான கூட்டணியின் அபாயத்தை சுட்டக்காட்டியுள்ளன. ஸ்ரீ.ல.சு.க பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாராச்சியின் படி, இத்தகைய முன்நகர்வுக்கு எதிராக கட்சியின் மந்திரிகளில் 45 பேர் கையொப்பமிட்ட மனுவொன்றை குமாரதுங்கவிடம் கொடுத்துள்ளனர்.

ஜே.வி.பி உடனான கொடுக்கல் வாங்கல்கள் பட்டும்படாத விடயமகா ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் மீண்டும் மீண்டும் பலமாதங்களாக விவாதத்திற்குள்ளாகியது. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் எதையும் முன்வைக்கத் தவறியதோடு, பின்னர் டிசம்பர் மாதம் இடைநிறுத்தப்பட்டதை அடுத்து, ஜனாதிபதி இறுதியாக ஜே.வி.பி உடனான ஒரு உடன்படிக்கைக்கு சம்மதம் தெரிவித்தார். குமாரதுங்க ஒரு சமரசத்தை அடைவதன் பேரில் ஐ.தே.மு வை நெருக்குவதற்காக ஜே.வி.பி யைப் பயன்படுத்த முயற்சித்தார். அவர் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் வைபவத்திற்கும் மற்றும் கடந்த வார கூட்டத்திற்கும் சமூகமளிக்காமல் இருப்பதன் மூலம் ஜே.வி.பி உடனான தனது இடைவெளியை தக்கவைத்துக்கொண்டார்.

இது மிகவும் அபாயகரமான ஒரு மூலோபாயகமாகும். குமாரதுங்க அரசாங்கத்துடன் சமரசம் காண்பதில் வெற்றியடைந்தால், ஸ்ரீ.ல.சு.க-ஜே.வி.பி கூட்டணி விரைவில் பிளவடையக் கூடும். அவரது சகோதரரான அனுர பண்டாரநாயக்கவால் தலைமை வகிக்கப்படும் ஸ்ரீ.ல.சு.க வின் ஒரு குழு ஜே.வி.பி உடன் செல்வது சாத்தியமாகலாம். குமாரதுங்கவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், குமாரதுங்க முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்கக் கோரும் உக்கிரமான அழுத்தத்திற்கு ஆளாவார். அத்தகைய ஒரு தேர்தலில் ஜே.வி.பி தனது நிலையை உயர்த்திக்கொள்வதற்கான சந்தர்ப்பமாக சுரண்டிக்கொள்ளும். இந்த விசேடமான ஆட்டங்களும் மாற்றங்களும் என்னவாக இருந்தாலும், கொழும்பு அரசியலில் ஜே.வி.பி யின் மிகைப்படுத்தப்பட்ட பாத்திரமானது விடுதலைப் புலிகளுடன் உடன்பாடுகாணும் முன்னெடுப்புகளை மேலும் கீழறுப்பதோடு வெளிப்படையான இராணுவ மோதல்களுக்குத் திரும்பும் அபயாத்தையும் உக்கிரப்படுத்தும்.

ஜே.வி.பி யின் பாத்திரம்

தனது பங்கிற்கு ஜே.வி.பி, அரசியல் நிறுவனத்தின் ஒரு பகுதியாக தன்னை உறுதிப்படுத்திக்கொள்ளவும் ஆளுமைக்கான தனது சொந்த உரிமையை நிலைப்படுத்திக்கொள்ளவும் ஸ்ரீ.ல.சு.க உடனான கூட்டணியை பயன்படுத்த முனைகிறது. பொதுஜன முன்னணியின் தலைமைக் கட்சியாக 1994இலும் 2001இலும் பதவிக்கு வந்த ஸ்ரீ.ல.சு.க, யுத்தத்திற்கு முடிவுகட்டுவது மற்றும் வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றுவது போன்ற அதன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால் ஆதரவை இழந்தது. இரு பிரதான கட்சிகளாலும் அமுல்படுத்தப்பட்டு வந்த பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்களின் அழுத்தத்தால் சிறு வியாபாரிகள் மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியில் எழுந்த அதிருப்தியை ஜே.வி.பி சாதகமாக்கிக் கொண்டது. இறுதியாக 2001ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அது 16 ஆசனங்களை வென்றது.

ஜே.வி.பி, 1964ல் ல.ச.ச.க சோசலிச அனைத்துலகவாதத்தைக் கைவிட்டு ஸ்ரீ.ல.சு.க அரசாங்கத்துள் நுழைந்ததை அடுத்து, மா ஓ வாதம், குவாராயிசம் மற்றும் சிங்களப் பேரினவாதத்தின் கலவையின் அடிப்படையில் அதிருப்தியடைந்த சிங்கள கிராமப்புற இளைஞர்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் 1960 களில் ஸ்தாபிக்கப்பட்டது. எவ்வாறெனினும் கடந்த மூன்று தசாப்தங்களாக, ஜே.வி.பி தனது சோசலிச வாய்வீச்சுக்களை பெருமளவில் தூக்கியெறிந்துவிட்டு, இனவாதத்தின் மிகவும் தீவிரமான வழிமுறைகளை தழுவிக்கொண்ட அதேவேளை, பெரு வர்த்தகர்களின் கோரிக்கைகளுக்கு தன்னை மேலும் மேலும் பொருந்தச் செய்தது.

ஸ்ரீ.ல.சு.க உடனான ஒரு கூட்டணியை அமைப்பதானது, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் சந்தை சீரமைப்புகளை பின்பற்றுவதற்கான ஜே.வி.பி யின் அடுத்த நகர்வை குறித்துக்காட்டுகிறது. புரிந்துணர்வு உடன்படிக்கை உள்ளூர் விவசாயிகள், நிர்வாகிகள் மற்றும் கைத்தொழிலாளர்களுக்கு உதட்டளவிலான சேவையை வழங்கிய அதேவேளை, "வெளிநாட்டு நிதி மூதலீட்டை பரஸ்பர இலாபத்தின் அடிப்படையில் விரிவுபடுத்துவதற்கான" முயற்சிகளையிட்டு எந்தப் பிரகடனமும் செய்யவில்லை. குறிப்பிடத்தக்க வகையில், ஜே.வி.பி, ஸ்ரீ.ல.சு.க வின் சாதனைகளான தனியார்மயமாக்கல், பொதுநல செலவுகள் மீதான கடுமையான வெட்டுக்கள் மற்றும் ஏனைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளையிட்டு விமர்சிப்பதை முழுமையாகக் கைவிட்டுள்ளது.

ஜே.வி.பி யின் பொருளாதார வேலைத்திட்டத்தைப் பற்றி ஏதாவது சந்தேகம் இருக்குமெனில், அது வெளிநாட்டில் வசிக்கும் ஜே.வி.பி தலைவரான சோமவன்ச அமரசிங்கவால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர் தனது கட்சி "முரண்பாடற்ற ஜனநாயக முதலாளித்துவ அமைப்பை" பரிந்துரைப்பதாக லண்டனில் இருந்து கொழும்பு வருவதற்கு முன்னதாக ஏசியன் றிபியூனுக்குத் தெரிவித்திருந்தார். ''ஐ.ம.சு.மு அரசாங்கத்தின் கீழ், "நிர்வாகிகள் மலேசியா, இந்தியா மற்றும் சீனா போன்ற புதிய ஆசியத் தலைவர்களின் வழிப்பாதையை பின்பற்றி, முழு சாத்தியமான விரிவாக்கத்துக்கு இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கான, முன்னெப்போதுமில்லாத ஒரு முன்னேற்ற நிலைமையில் இருத்தப்படுவர் என அவர் வலியுறுத்தினார். விடுதலைப் புலிகள் இலங்கையை ஒரு "ஆசியப் புலியாக" மாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளதைப் போலவே, ஜே.வி.பி யும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கம்பனிகளுக்கு ஒரு மலிவு உழைப்பு மேடையாக இலங்கையை மாற்றுவதாக வாக்குறுதியளிக்கிறது.

ஸ்ரீ.ல.சு.க-ஜே.வி.பி யின் பொருளாதார "சீர்திருத்த" திட்டத்தில் தொழிலாளர்கள் "தனியார் மற்றும் பொதுத் துறையில் உற்பத்தி அதிகரிப்பு" மற்றும் "நவீன முகாமைத்துவம்" ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுக்கப்படுகிறது. கட்சியின் பொருளாதார கொள்கைகளை நியாயப்படுத்தும் அமரசிங்க, இலாபத்தை உருவாக்குவதற்கான எல்லா தடைகளும் நீக்கப்படும் என ஏசியன் றிபியூனுக்குத் தெரிவித்துள்ளார். வர்த்தகம் இலாபமின்றி இயங்குமானால் நிர்வாகிகளால் சம்பளம் வழங்க முடியாமல் போவதோடு நீண்டகாலம் பிழைத்திருக்கவும் போவதில்லை, என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் "வேலைகொள்வோர் தந்தையை போன்று தமது பிள்ளைகளை நடத்துகிறார்கள்" என புத்தரின் போதனையை பின்பற்றி நடத்துமாறு வேலைகொள்வோரை தூண்டுகிறார்.

ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஜே.வி.பி ஆகியவற்றுக்கிடையில் பொருளாதார கொள்கை பற்றிய குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லாத போதிலும் உள்நாட்டு யுத்தம் பற்றிய விடயத்தில் வேறுபாடுகள் உள்ளன. இரு கட்சிகளும் விடுதலைப் புலிகளுடனான "சரியான பேச்சுவார்த்தை" என்பதை முன்வைத்த போதிலும் அத்தகைய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் வேறுபாடுகள் கொண்டுள்ளன. புரிந்துணர்வு உடன்படிக்கை இந்த வேறுபாடுகளின் ஒரு பகுதியை துடைக்கிறது. "இறுதித் தீர்மானம் பற்றிய விடயத்தைப் பொறுத்தளவில், கடுமையான நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான அவர்களின் ஒன்றிணைந்த பயணத்தில் எந்தவொரு தடங்களும் இருக்கக் கூடாது" என அது பிரகடனம் செய்கிறது.

ஆனால் சரியாக பார்ப்போமாயின், யுத்தம் சம்பந்தமான "வேறுபாடானது" கூட்டணியின் மிக மிக ஸ்திரமற்ற தன்மையை சுட்டிக்காட்டுகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பரவலாக்கும் குமாரதுங்க மற்றும் ஸ்ரீ.ல.சு.க வின் பிரேரணைகள், ஐ.தே.மு அரசாங்கத்தின் பிரேரணைகளுடன் அதிகளவு வேறுபட்டதல்ல. இந்த திட்டமானது, தொழிலாள வர்க்கத்தை முறையாக சுரண்டுவதற்காக சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவங்களுக்கு இடையிலான இனவாத அடிப்படையிலான ஒரு அதிகார பரவலாக்கமாகும். ஐ.தே.மு வின் திட்டங்களை தழுவிக்கொள்ள குமாரதுங்க தயங்குவதானது, தமிழ் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகைக்கும் எதிரான சிங்கள தீவிரவாதிகளின் ஆர்ப்பாட்டங்களையிட்டு இரு பிரதான கட்சிகளும் உணர்வுபூர்வமாக இருப்பதன் வெளிப்பாடேயாகும்.

ஜே.வி.பி, மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை பரவலாக்கும் திட்டத்தை முன்வைப்பதோடு, "நிர்வாக அலகுகளுக்கு அதிகாரத்தைப் பரவலாக்குவதற்குப் பதிலாக உள்ளூர் அதிகாரிகளை நியமிக்க அழைப்புவிடுகிறது." இது சாதாரண சொற்கள் சம்பந்தமான வேறுபாடல்ல. விடுதலைப் புலிகள் நீண்டகாலமாக அக்கறைகொண்டுள்ளபடி, அதிகரித்த அதிகாரங்களுடனான ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீதான கட்டுப்பாட்டுகளுடன் பரந்த வேறுபாடு இருப்பதோடு, நகர்பகுதியில் உள்ள உள்ளூர் அலுவலர்களினதும் மாவட்ட மட்டத்திலான அலுவலர்களினதும் அதிகாரங்கள் தாழ்த்தப்பட்டுள்ளது. இத்தகைய அடிப்படையில் விடுதலைப் புலி அலுவலர்கள் பேச்சுவார்த்தைகளுக்குக் கூட உடன்படாத நிலையில், மீண்டும் யுத்தத்திற்கு செல்வதற்கான அடித்தளங்கள் அமைக்கப்படும். ஜே.வி.பி விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு சமரசத்துக்கும் தயாரில்லாத ஆளும் கும்பலின் பிரிவினருக்கே அழைப்புவிடுக்கிறது.

ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஜே.வி.பி ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் அவர்கள் உடன்பாட்டை கைச்சாத்திட்டதில் இருந்தே வெளிப்படையாக காட்சிக்கு வந்துள்ளது. சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகர் லக்ஷ்மன் கதிர்காமர், இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான விடுதலைப் புலிகளின் பிரேரணைகள் இந்ந கூட்டணியால் "ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம்", ஆனால் அது "பேச்சுவார்த்தை மேசையில் நிபந்தனைகள் இன்றி அனைத்தும் கலந்துரையாடப்படவுள்ளது," எனப் பிரகடனம் செய்தார். எவ்வாறெனினும், சுயாதீனத் தொலைக்காட்சியில் தோன்றிய ஜே.வி.பி தலைவர் அமரசிங்க, விடுதலைப் புலிகளின் பிரேரணைகள் "பேச்சுவார்த்தைக்கு எடுத்துக்கொள்ளக்கூடியதல்ல" எனக் குறிப்பிட்டார்.

ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க கூட்டணி அமைக்கப்பட்டதில் இருந்து, குமாரதுங்க அரசாங்கத்துடன் சமரசத்துக்கு செல்வதற்கான கூர்மையான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார். பெரும் வர்த்தகர்களின் பிரதிபலிப்புகள், கொழும்பு பங்குச் சந்தை வியாபாரத்தில் வெளித்தோன்றியது. அது புரிந்துணர்வு உடண்படிக்கை கைச்சாத்திடப்பட்டு அடுத்த மூன்று மணித்தியால வியாபாரத்தில் 9.3 பில்லியன் ரூபாய்களை (95 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) இழந்தது. ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூஷி அகாஷி, கூட்டணி "கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதாகும்" மற்றும் "சர்வதேச சமூகம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு முடிவு காண்பதில் அக்கறையாகவுள்ளது" என கடந்த வாரம் கொழும்பில் எச்சரிக்கை செய்தார்.

பெப்பிரவரி 17ம் திகதி வாஷிங்டனில் சந்திக்கவுள்ள உதவிவழங்கும் நாடுகள், இலங்கை சமாதான முன்னெடுப்புகள் பற்றியும் நாட்டுக்கு நிதி உதவி வழங்குவது பற்றியும் "ஆய்வுசெய்யவுள்ளது". கொழும்பில் உள்ள வர்த்தகக் கூட்டமைப்பானது, நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவுவதற்காக வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் சர்வதேச உதவியை ஆபத்துக்குள் இறுத்த முயற்சிக்க முடியாது, என கடந்த வாரம் எச்சரித்துள்ளது. "நாம் ஏப்பிரல் அளவில் ஒரு பெரும் பண நெருக்கடியை முகம்கொடுக்கவுள்ளோம், காரணம் அரசியல் நெருக்கடியின் காரணமாக நேரடியான வெளிநாட்டு முதலீடுகளும் மற்றும் வெளிநாட்டு நிதி உதவிகளும் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன", என கூட்டமைப்பின் தலைவர் மகேந்திர அமரசூரிய எச்சரித்தார்.

குமாரதுங்கவும், ஸ்ரீ.ல.சு.க உள்ளேயும் அதன் கூட்டாணிகளான ல.ச.ச.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினதும் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு முகம்கொடுத்துள்ளார். ல.ச.ச.க தலைவர் பட்டி வீரகோன், இந்த உடன்படிக்கை "கருத்தாழமற்ற மற்றும் மட்டமான பேச்சுக்களைக்" கொண்டுள்ளதுடன், "இந்த நாட்டின் எரியும் பிரச்சினைகளை" அது அக்கறையில் எடுக்கவில்லை என சாதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீ.ல.சு.க வின் அதிகாரப் பகிர்வு பிரேரணைகளை ஆதரிக்குமாறு ஜே.வி.பி க்கு அழைப்பு விடுத்த போதிலும், கூட்டணியின் நிர்வாகக் குழுவில் அதற்கான ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதிலேயே மிகவும் அக்கறைகொண்டுள்ளது. இந்தக் கட்சி ஜே.வி.பி க்கு எதிரான எந்தவொரு அடிப்படையான நிலைப்பாட்டையும் எடுக்காததோடு கூட்டணியை முழுமையாக அணைத்துக்கொள்ளவும் கூடும்.

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அடுத்து வரும் நாட்களில் என்ன செய்யும் என்பது நிச்சயமில்லாததாக உள்ளது. ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க கூட்டணி அமைக்கப்பட்டமை ஏற்கனவே மிகவும் ஸ்திரமற்று இருக்கும் அரசியல் நிலைமைக்கு ஒரு வெற்றுச் சீட்டை சேர்த்துள்ளது. எவ்வாறெனினும், தெளிவாவது என்னவென்றால், இந்தக் கட்சிகளில் எதுவும் இலங்கையின் உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினர் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு --சமாதானம், அடிப்படை ஜனநாயக உரிமை மற்றும் சிறந்த வாழ்க்கை நிலைமை-- எந்தவொரு தீர்வும் வழங்கவில்லை.

Top of page