WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்திய உபகண்டம்
India and Pakistan to pursue "composite dialogue"
''அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தையை'' இந்தியாவும் பாக்கிஸ்தானும்
மேற்கொள்ள இருக்கின்றன
By Keith Jones
29 January 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
பாக்கிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் பெப்ரவரி 16-ம் தேதியில் தொடங்கி
மூன்று நாட்களுக்கு பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலம் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அரசாங்கங்கள்
"அனைத்து விஷயங்ளையும் உள்ளடக்கிய பேச்சுவார்தை" க்கான "நடைமுறைகளை" தொடங்கப் போவதாக
செவ்வாய் அன்று அறிவித்துள்ளன.
செவ்வாய் அறிவிப்பானது பிராந்திய மாநாட்டிற்கான தெற்கு ஆசிய நாடுகளின்
கூட்டமைப்பு (South Asian Association for
Regional Conference (SAARC) உச்சிமாநாட்டிற்கு
அக்கம் பக்கமாக இந்திய மற்றும் பாக்கிஸ்தான் அதிகாரிகளுக்கு இடையே நடந்த பல சந்திப்புக்களுக்குப் பின் எடுக்கப்பட்ட
முடிவுகளில் இருந்து எழுகிறது. ஜனவரி 6-ம் தேதியன்று இந்தியாவின் பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும்
பாக்கிஸ்தானின் சர்வாதிகாரி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் ஆகிய இருவருக்குமிடையில் நடந்த ஒரு மணிநேர சந்திப்புக்குப்
பின்னர் இருநாட்டு வெளியுறவுத்த்துறை அமைச்சர்களும், தெற்கு ஆசியாவின் அணு ஆயுத போட்டி வல்லரசுகள்
ஒட்டுமொத்த, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று உறுதி அளிக்கும் கூட்டறிக்கையை வெளியிட்டனர்.
முஷராஃப் இந்த ஒப்பந்தத்தை ''வரலாற்று'' முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார்.
இந்த மதிப்பீட்டை அமெரிக்க அரசுத்துறை செயலாளர் கொலின் பவலும் எதிரொலித்தார்.
இந்த வர்ணனை வெளிப்படையான உயர்வு நவிற்சியாகும்.
கடந்த வருட நவம்பர் மாதக் கடைசியிலிருந்து பாக்கிஸ்தான் மற்றும் இந்தியப் படைகள்
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைப்பகுதி மற்றும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் எல்லைப்பகுதி ஆகிய இடங்களில்
பொது சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இஸ்லாமாபாத்தும் புது தில்லியும் எல்லை கடக்கும் போக்குவரத்து,
வர்த்தகம் ஆகியவற்றை இலகுவாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. இப்போது இரு அரசாங்கங்களும்
பரஸ்பர எல்லைப் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளவும் அதிகரித்த பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளைப்
பேணவும் பேச்சுவார்த்தை தொடங்க இருக்கிறார்கள். இது போன்ற உறவு முறைகளை வளர்க்க இந்தியாவும்,
பாக்கிஸ்தானும் முதல் முறை அறிவித்தபோது இருந்த நிலையை விட இப்போது இருக்கும் நிலை மிகவும் சீரடைந்திருக்கிறது.
இதில் மிகச் சமீபத்திய வரலாற்றைப் பார்த்தாலே உண்மை புரியும். 1999 மற்றும் 2001-ம் ஆண்டு கோடையில்
உயர் மட்ட அளவில் தொடங்கிய இரு தரப்பு உயர்நிலைப் பேச்சுவார்த்தைகள் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றம்
குறை கூறிக்கொண்டதில் முடிவுக்கு வந்தன.
வரக்கூடிய பேச்சுவார்தையின் முக்கிய பங்கு வகிக்கும் முஷாரஃப்பும், வாஜ்பாயும்
தத்தம் நாடுகளில் தம்மை உயர்த்தி பிறரைப் பழிக்கும் குறுகிய வெறி கொண்ட மற்றும் போர்வெறி கொண்ட சக்திகளுடன்
அடையாளம் காணப்படுபவர்கள். இந்தியாவை இப்பொழுது ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டரசாங்கத்தின் முதல்
பெரும் கட்சியான வாஜ்பாயியுடைய பாரதிய ஜனதா கட்சியானது
(BJP) இந்து மேலாதிக்கவாத
கட்சியாகும். அது இந்திய முஸ்லீம் சிறுபான்மையினரை பாக்கிஸ்தானின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்று பழி
கூறிவந்த கட்சியாகும் மற்றும் தனது அரசியல் எதிரிகளை இஸ்லாமாபாத்திற்கு பணிந்து போக்கிறவர்கள் என்று குற்றம்
சாட்டி வந்த கட்சியாகும். 1999- அக்டோபரில் முஷாரஃப் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்ததற்கான ஒரு
முக்கிய காரணம் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் கார்கிலில் ஊடுருவி இருந்த பாக்கிஸ்தான் இராணுவத்தை
ஒருதலைப்பட்டசமாக திரும்பப் பெற்றதன் மூலம் அமெரிக்க நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டார் என்ற அவரது
நம்பிக்கை ஆகும்.
புவிசார்-அரசியல் ரீதியிலான பரஸ்பர பகைமை இரு நாடுகளின் பிறப்பின்போதே
1947-ல் இத்துணைக் கண்டம் வகுப்புவாத பிரிவினை செய்யப்பட்ட நாள்முதலே இருந்து வருகிறது. அது முறையே
அவர்களின் நாடுகளின் ஆளும் வர்க்கங்களால் சமூகப் பதட்டங்களை ஒரு பிற்போக்கு வழியிலும் அரசியல் ரீதியாய்
சுதந்திரமான தொழிலாள வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியை எதிர்த்துப் போராடவுமான வழிமுறைகளாக
நீடித்திருக்கச்செய்யப்பட்டது. எப்போதாவது ஒட்டு மொத்த தீர்வுக்கு யாராவது முயற்சி செய்தாலும் இந்தியா
பாக்கிஸ்தானில் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் செல்வந்த தட்டில் உள்ள சக்திகளிடமிருந்து எதிர்ப்பை தவிர்க்க
முடியாது எதிர்கொள்ளும். ஒரு தொடர்ந்த போர்வெறிக் கூச்சலுடன் அவர்களது நலன்கள் கட்டுண்டிருப்பதால் இராணுவத்துக்குள்
உள்ள சக்திகளிமிருந்தும் எதிர்கொள்வது குறைந்த அளவில் அல்ல.
இந்தியா-பாக்கிஸ்தானின் நல்லிணக்கத்திற்குப் பின்னே
வாஜ்பாயும், முஷாரஃப்பும் இந்திய பாக்கிஸ்தான் உறவு முறையில் அக்கறை காட்டாதவர்கள்
என்று சொல்லவில்லை, மறுசீரமைப்பதில், பேரார்வமே கொண்டுள்ளனர். இந்தியா- பாக்கிஸ்தான் அரசியல் மற்றும்
வர்த்தக செல்வந்தத் தட்டில் உள்ள சக்திமிக்க 1999 காலகட்டங்களில் மோதல் போக்குள்ள கொள்கைகளைப்
பின்பற்றினர், 2001-02ல் இன்னும் முழு அளவிலான யுத்தத்தின் விளிம்பிற்கு இந்தியா, பாக்கிஸ்தானைக் கொண்டு
வந்து விட்டனர், அணு ஆயுதங்களைக் கொண்டு பரஸ்பரத் தாக்குதல் நடத்தக்கூடிய அளவிற்கும் வந்தன. இந்த நிலையானது
என்றுமில்லாத அளவு குறைந்து செல்லும் புவிசார் அரசியல் பலாபலன்களைத்தான் உருவாக்கியது என்ற முடிவுக்கு அவர்கள்
வந்தனர்.
வாஜ்பாயியும், முஷாரஃப்பும் உறவு சீரமைப்பு சக்திமிக்கதாக்க தனிப்பட்ட முறையில்
கணிசமான அளவு தங்களது அரசியல் செல்வாக்கை முதலீடு செய்துள்ளனர்.
பி.ஜே.பி-யின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, வருகிற தேர்தல்
பிரச்சாரத்தில் பாக்கிஸ்தானுடனான அதன் "அமைதி" முயற்சியை தேர்தலில் மையமாக வைத்து பிரச்சாரம்
செய்வதற்கான அதன் விருப்பை குறிகாட்டி இருக்கிறது. (இதில் குறிப்பிடத்தக்க முரண்பாடு என்னவென்றால்
NDA
1999-ல் பெற்ற தற்போதைய பெரும்பான்மையே, பிரச்சாரத்தில் இந்தியாவை அணு ஆயுத அரசாக
பறைசாற்றுவதற்கான அதன் முடிவை புலப்படுத்தியதிலும் கார்கில் சண்டையில் பாக்கிஸ்தானை ஜெயித்து ''வெற்றி''
பெற்றதை முன்னிலைப்படுத்தியதிலும்தான்.) ஆனால் இந்தமுறை வாஜ்பாய்
SAARC உச்சி மாநாட்டை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய மிகக்
குறுகிய காலத்திற்குள் பி.ஜே.பி-யின் தலைவர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் 14-வது மக்களவைக்கான
(இந்தியப் பாராளுமன்றத்தின் கீழ் சபை) தேர்தலை வருகிற வசந்த கால தொடக்கத்திற்குப் பதிலாக
இலையுதிர்காலத்தில் வைத்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கின்றனர்.
முஷாரஃப் தனது பங்கிற்கு தன் மீது மேலும் கொலை முயற்சிகளை தொடர்ந்தாலும்
இந்தியாவுடனான அமைதிப்பேச்சுவார்த்தை முயற்சி தொடரும் என்று அறிவித்துள்ளார். அவர் மறுமுறை அதிபர்
பதவியேற்ற பின் பாக்கிஸ்தானின் தேசிய சட்டசபையில் நிகழ்த்திய முதலாவது உரையில், ''உள்நாட்டுத்
தீவிரவாதிகள்", அதாவது பாக்கிஸ்தானின் இராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவற்றால் நெடுங்காலமாக
ஆதரவளித்து வளர்க்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத குடிப் படைகள் -இந்தியா அல்ல, இப்போது நாட்டை
அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சனை, என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற பல்வேறு நெருக்குதல்கள், அவற்றுள் அமெரிக்க அழுத்தம்
மிகக்குறைவானது அல்ல, நல்லிணக்கத்தை நோக்கிய இந்திய மற்றும் பாக்கிஸ்தான் ஆளும் வர்க்கத்தினரில் முக்கிய
பகுதியினரின் நகர்வுக்குப் பின்னே இருக்கிறது.
இந்தியா, சர்வதேச தொழில் முதலீட்டாளர்களின் முக்கியமான இடமாக உருவெடுத்திருப்பது
மற்றும் வாஷிங்டனுடன் அதன் உறவு புவிசார் அரசியல் பங்காளராக வளர்ந்து வருவது, பாக்கிஸ்தானிலுள்ள வர்த்தக
மற்றும் அரசியல் செல்வந்தத் தட்டிலுள்ள பலரை சிந்திக்க வைத்திருக்கின்றன. அவர்களது வாதப்படி பாக்கிஸ்தான்
"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" புஷ் நிர்வாகத்துடன் பாக்கிஸ்தான் கைஊட்டில் இருக்கும் இந்த சமயத்திலேயே
புது தில்லியுடன் சமாதான ஒப்பந்தத்தை நாடுவது நல்லது, இல்லையென்றால் எதிர்காலத்தில் இதைவிட பலம் கூடிய
இந்தியாவுடன் பேச வேண்டியிருக்கும். இது மட்டுமின்றி, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தானிலும்,
காஷ்மீரிலும் வளர்த்துவிட்டதானது இப்போது பாக்கிஸ்தானையே திருப்பித் தாக்குகிறது என்ற முஷாரஃப்பின் நிலைப்பாட்டை
அங்கே பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். செப்டம்பர் 11, 2001- சம்பவத்திற்குப் பின் வாஷிங்டனுடன் மோதல்
போக்கைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானது பாக்கிஸ்தான். இதோடு மட்டுமின்றி பாக்கிஸ்தானுக்குள்ளேயே
அதிகரித்த அளவில் குறுங்குழு சச்சரவுகளை தூண்டிவிட்டுள்ளது. கட்நத மாதத்தில் முஷாரப்பின் மீதான இரு கொலை
முயற்சிகளில் இரண்டாவதற்குப்பின் பாக்கிஸ்தானின் அரசாங்க உயர் அதிகாரி கூறியதாவது, ''அவர்களது உச்சபட்ச
செயலை செய்து விட்டனர். (காஷ்மீர் ஆதரவு தீவிரவாதக் குழுக்கள்) அவர்களது துப்பாக்கிகளை எங்கள் மீது திருப்பிவிட்டனர்.''
2001-02-ல் பத்து மாதங்கள் இந்தியா தனது படைகளை பெருமளவில் பாக்கிஸ்தான்
எல்லையில் தாக்குதலுக்கான தயார் நிலையில் குவித்து வைத்திருந்தது, இப்படியான அதிக செலவு பிடித்த முயற்சி
மூலம் இஸ்லாமாபாத்திடமிருந்து பல உறுதிமொழிகளைப் பெற முயற்சித்தது, தோல்வியில் முடிந்ததால் இந்தியாவின்
செல்வந்த தட்டினர் பி.ஜே.பி- அரசாங்கத்தின் மீதான கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தினர். வல்லரசு என்கிற
அந்தஸ்தை மிகப்பெரிய அளவு இராணுவ எண்ணிக்கையை விரிவாக்கலும் இதனுடன் தென் ஆசியாவிலுள்ள பிற ஆறு நாடுகளுடன்
பொருளாதார பங்குதாரர் மூலோபாயத்துடன் மேம்பாடும் சேர்ந்தாலே அடைய முடியும் என்ற கருத்து அதிகமான
அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டு வருகிறது. சார்க் உச்சி மாநாட்டின் ஒரு முக்கிய முடிவும் இஸ்லாமாபாத்துடன்
புதுதில்லி பேச்சுவார்தைக்குள் நுழைவதில் காட்டப்பட்டதில் ஒன்றும் என்னவென்றால், வருகிற 2006-லிருந்து 10-
வருடங்களுக்குள் தென்ஆசிய சுதந்திர வர்த்தக மண்டலத்தை உருவாக்குவதற்கான திட்டங்களை இறுதிசெய்வதாக
இருந்தது. பாக்கிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார செயலர் டாக்டர் தன்விர் அகமதுகான் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில்,
''இந்தியா தன்னைச் சுற்றிலுமுள்ள சிறு நாடுகளை கைப்பற்றி வசப்படுத்தும் நோக்கத்தை விட்டுவிட்டு இப்போது
பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செய்ய விரும்புகிறது என்று தனக்குத் தோன்றுகிறது'' என்றார்.
புஷ் நிர்வாகத்தைப் பொறுத்தவரை தெற்காசியாவில் நடந்துள்ள நிகழ்வுகளை தனது
லட்சியமான 21-ம் நூற்றாண்டின் சவால் செய்ய முடியாத இராணுவ பலம் மற்றும் பொருளாதார பலம் பெற்ற
அமெரிக்கா என்ற நிலை ஏற்பட இம்மாதிரியான நிகழ்வுகள் எவ்வகையில் பயன்படும் என்கிற ரீதியில்தான் இவற்றைக்
கவனிக்கிறது. இந்தியாவுடன் பங்காளராக இருக்க அமெரிக்கா ஆர்வம் கொள்ளுவது இரு காராணங்களுக்காக
ஆகும், முதலாவது அதனுடைய பொருளாதார சாத்தியமான ஆற்றல் காரணமாக - வோல் ஸ்டிரீட் இப்போதெல்லாம்
திரும்பத்திரும்ப இந்தியாவைப் பற்றி குறிப்பிடும்போது ''எதிர்காலத்திய உலக தலைமையகம்'' என்றே குறிப்பிடுகிறது,
இரண்டாவது காரணம் புவிசார் அரசியலில் மற்றும் இராணுவ ரீதியாக சீனாவின் பலத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய
விதத்தில் இந்தியாவால் பணியாற்ற முடியும். உண்மையில் இந்தியா பாக்கிஸ்தான் உறவுகளில்
SAARC மாநாட்டில் ஏற்பட்ட "தடை தகர்த்து உண்டாக்கப்பட்ட
வழிக்குப்" பின் சில நாட்களில் புஷ் பேசுகையில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே "மூலோபாய பங்காண்மையில்
அடுத்த நடவடிக்கைகள்" எனக் குறித்ததை அறிவித்தார். இராணுவத்துறை அல்லாத பிற துறைகளில் அணுசக்தி உபயோகம்
பற்றி மேம்பட்ட ஒத்துழைப்பு, வானவியலில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு சம்பந்தமான ஏவுகணைத்துறையில் கூட்டு முயற்சிக்கான
அழைப்பு மற்றும் உயர் தொழில்நுட்ப வணிகத்தை மறுபடியும் தொடர்வது ஆகியவைகளை புஷ் அறிவித்திருக்கிறார்.
அதே சமயத்தில், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கா தொடர்ந்து
இருக்கவும் எண்ணெய் வளமிக்க மத்திய ஆசியாவில் வேறு எங்காவது எண்ணெய் வளம் எதிர்காலத்தில் தெரிய
வருமானால் அப்போதைய நடவடிக்கைகளுக்கும், அல்கொய்தா மற்றும் மற்ற இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு
எதிரான அதன் போராட்டத்திற்கும் பாக்கிஸ்தானின் பங்கும் மிக முக்கியமானது என்பதை அமெரிக்கா
உணர்ந்துள்ளது.
அமெரிக்கா- சோவியத்திடையே குளிர் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில்
அமெரிக்காதான் இந்திய-பாக்கிஸ்தான் சண்டைகளை கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தது, அதன் மூலம் பாக்கிஸ்தானை
சோவியத் எதிர்ப்பு நாடாக ஆக்க முடிந்திருந்தது. (உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அமெரிக்காவின்
தூண்டுதலின் பேரில்தான் பாக்கிஸ்தான் கால் நூற்றாண்டாக ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை
ஜிஹாதிகளை உருவாக்கி புனிதப்போருக்கு தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது.) ஆனால் நிலைமை மாறியுள்ள இந்த
நிலையில் அமெரிக்கா தனது பாரம்பரிய நண்பனான பாக்கிஸ்தானுக்கும், புது நண்பனான இந்தியாவுக்கும் இடையில்
ஒரு உடன்பாட்டை கொண்டுவர விரும்புகிறது. இதன் மூலம் தனது நோக்கமான ஆசியா முழுமையும் ஆதிக்கம்
செலுத்துவது மற்றும் தனது சூறையாடும் நலன்களை உறுதிப்படுத்த முடியும் என்று நினைக்கிறது.
ஆனால் இதற்கான வழிமுறையானது, வாஷிங்டனை பல்வேறு விதமான
பிரச்சனைகளுக்குள் கொண்டு வந்து விடும் தன்மை படைத்ததாக இருக்கிறது.
உதாரணமாக, முஷாரஃப் அமெரிக்காவிற்கு மிக நெருங்கி இருப்பது அந்த நாட்டு
மக்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. இது மட்டுமின்றி அமெரிக்காவின் சார்பில் உள்ள
IMF-ன்
பல்வேறு நிபந்தனைகள், மறுகட்டமைப்பு திட்டங்கள் பாக்கிஸ்தானின ஏழ்மையுற்ற மக்களை மேலும் சிரமத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
அதே நேரத்தில் இந்தியாவைப் பொறுத்தவரை பாக்கிஸ்தானுடனான எந்த பேச்சுவார்த்தையிலும் அமெரிக்கா மத்தியஸ்தர்
பாத்திரம் வகிப்பது தொடர்பான எந்த வித கருத்துரை தொடர்பாகவும் இடம்கொடாமல் மிகவும் கண்டிப்பாக
இருக்கிறது.
இதன் காரணமாய் அமெரிக்கா சமீபத்தில் நடந்த இந்திய பாக்கிஸ்தானின்
பேச்சுவார்த்தையில் அதன் தலையீடு பற்றி மிகவும் குறைவாகவே காட்டிக் கொள்கிறது. இருந்தாலும் சார்க்
மாநாட்டிற்குப் பிறகு US News-
மற்றும் World Report
ஆகியவற்றில் அமெரிக்காவின் பங்கைப் பற்றி கொலின் பவல் ஒரு பேட்டியில் பெருமிதமாகக் கூறியிருக்கிறார்:
''நாங்கள் இருவரும் அணு ஆயுத சண்டையில் ஈடுபடுவோம்'' என்பதிலிருந்து கிட்டத்தட்ட நாங்கள் இரண்டு வருடங்களாக
இந்திய பாக்கிஸ்தானியருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். நீங்கள் அறிவீர்கள், இது சரித்திர முக்கியத்துவம்
வாய்ந்த மாற்றமாகும். நாங்கள் விதைத்த பல விதைகள் இப்போது துளிர்விட்டு வருகிறது. அறுவடை செய்வதை
நீங்களே பார்க்கப் போக்கிறீர்கள்'' என்று சொல்லியிருக்கிறார்.
பவலின் அறிக்கைக்கு இந்தியாவிடமிருந்து நறுக்குத் தெறிந்தாற்போன்ற பதில்
கிடைத்தது. வெளிவிவகாரத் துறை பேச்சாளர் ஒருவர், "அமெரிக்கா இந்தியா பாக்கிஸ்தானிடையே பல முறை
பேச்சுவார்த்தை நடந்த மத்தியஸ்தராக இருப்பதற்காக கேட்டுக்கொண்டது. ஆனால் இந்தியா-பாக்கிஸ்தானின்
இருதரப்புப் பிரச்சனைகளில் மூன்றாவது நபருக்கு எந்த இடமும் கிடையாது, இனிமேலும் இருக்கப்போவதுமில்லை''
என்று கூறினார்.
சிக்கலான நிகழ்ச்சிப்போக்கு
இந்திய-பாக்கிஸ்தானுக்கிடையில் உள்ள உறவின் சிடுசிடுப்பு ஜனவரி 6-ம்தேதி இருதரப்பு
கூட்டறிக்கையில் வெளிப்பட்டு இருக்கிறது. 153-வார்த்தைகள் மட்டுமே நீளமுள்ள 6-சிறிய பத்திகள் அடங்கிய ஒரு
அறிக்கையைப் பற்றி முடிவிற்கு வர இரு நாடுகளிலுமுள்ள உயர் அதிகாரிகள் ஆறு முறை கூடிப்பேசினார்கள். ஒரு
கட்டத்தில், பாக்கிஸ்தான் மண்ணில் எந்தவிதமான "பயங்கரவாத" செயல்களுக்கும் ஆதரவு கொடுக்ககூடாது
என்கின்ற உறுதி மொழியை இந்தியா கோரியது மீதாக அறிக்கையும் விரிவான பேச்சுவார்த்தைகளைப் புதுப்பிப்பதற்கான
திட்டமும் தகர்ந்துவிடுமோ என்ற நிலை ஏற்பட்டது. முதலில் பாக்கிஸ்தான் சற்றே இறங்கி இந்தியாவிற்கு எதிரான
காஷ்மீரி கிளர்ச்சாளர்களை, பயங்கரவாதிகள் அல்லர், காஷ்மீர் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று குறிப்பிடுவதை
நிறுத்திக் கொள்வதாகக் கூறியது. இதற்குப் பதிலாக பாக்கிஸ்தானின் வாதப்படி ஜம்மு காஷ்மீரின் நிலை தாவாவிற்கு
உரியது என்று இந்தியாவை ஒப்புக்கொள்ள வைத்ததை பெரிய வெற்றியாகக் கூறுகிறது. காஷ்மீரானது முன்பு ராஜாவினால்
ஆளப்பட்டு வந்தது. 1947-ல் இந்திய யூனியனுடன் இணைந்து இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை உள்ள மாநிலமாக
இருக்கிறது. இதனாலேயே இந்த பகுதி குறித்து இந்திய-பாக்கிஸ்தானுக்கு இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான
முறைமையான விஷயமாகவும் இருந்து வந்திருக்கிறது. இதுவரையில் காஷ்மீரில் என்ன நடந்தாலும் அது இந்தியாவின்
உள்விவகாரம் என்றுதான் இந்தியா கூறிவந்திருக்கிறது.
ஜனவரி-6- அறிக்கையில் மறுபடி பேச்சுக்கான நேரம், இடம், எதைப்பற்றிப்
பேசுவது என்பதெல்லாம் தீர்மானிக்கப்படும் என்று விடப்பட்டிருக்கிறது. இது கூட பல்வேறு நிலைகளில் காரசாரப்
பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகுதான் நிகழ்ந்தது. கடந்த நடவம்பர் 26ல் பாக்கிஸ்தான் தான் முதலில் சண்டை நிறுத்த
அறிவிப்பை தன்னிச்சையாகச் செய்தது, பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து விரைவில் நடத்த இஸ்லாமாபாத் வலியுறுத்தியது.
இந்தியா அதே நேரத்தில் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையானது "நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள்" கொண்ட
நீண்ட நிகழ்ச்சிப்போக்கு முதலில் நடைபெறாமல் வெற்றிபெறாது என்று வாதித்து வருகிறது. இந்தியா தனது இந்த
நிலையை நியாயப்படுத்தும் வகையில் ''அவசரப்பட்டால் அனைத்தும் கெட்டுப்போகும்'' என்று கூறினாலும், பாக்கிஸ்தான்
பலவீனமான நிலையில் இருப்பது தனக்கு தெரிந்தே இருப்பதை அதன் அணுகுமுறை உணர்த்துகிறது எனபதில் கேள்விக்கு
இடமில்லை.
இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையின் ஆரம்ப நிலையிலிருந்தே அரசியல் பிரமுகர்களின்
பங்கு இருக்கவேண்டும் என்று வலியுறுத்தும் அதேவேளையில், இந்தியா முதல் கட்டப் பேச்சுவார்த்தையானது கீழ்மட்ட
அதிகாரிகள் அளவில் மட்டும் இருக்கவேண்டும் என்கிறது. கடைசியில் முடிவு என்னவெனில் கீழ்மட்ட அதிகாரிகள் இரண்டு
நாட்கள் கூடி விவாதிப்பார்கள் என்றானது. மூன்றாவது நாளில் இரு நாடுகளின் வெளியுறவுச் செயலர்களும் பங்கேற்பார்கள்.
இன்னும் சொல்லப்போனால் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அடுத்தகட்ட
பேச்சுவார்தையில் எதிர்காலப் பேச்சுவார்த்தைக்கான செயற்பட்டியல் மட்டுமே விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
சென்னையைச் சேர்ந்த பத்திரிகையான இந்துவின் நிருபர் கூறுகிறார், ''உயர் மட்டத்திலுள்ள அரசாங்க
வட்டாரங்கள், இந்தப் பேச்சுவார்த்தை 'ஒட்டுமொத்த பேச்சு வார்த்தையின்' ஆரம்பம் என்றவாறாக அல்ல,
ஒட்டு மொத்தப் பேச்சுவார்த்தையின் படி விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களைப் பற்றி விவாதிக்கும் 'நிகழ்ச்சிப்போக்கு'
ஆகும்" என்று இந்த செய்தியாளரிடம் தெளிவுபடுத்தின.
இந்தியாவில் தேர்தல் நடைபெற இருப்பதும் புதிய அரசாங்கம் அமைத்தலும் பாக்கிஸ்தானுடனான
உருப்படியான எந்த பேச்சுவார்த்தையும் ஜூன் மாதத்திற்கு முன்னால் நிகழப்போவதில்லை என்பதை அர்த்தப்படுத்துகிறது.
Top of page |