World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்France: Former prime minister Juppé convicted on corruption charges பிரான்ஸ்: ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் ஜூப்பே குற்றம் நிரூபணம் By Antoine Lerougetel பிரான்சின் ஆளுங்கட்சியான ஹிவிறி (ஹிஸீவீஷீஸீ ஜீஷீuக்ஷீ uஸீ னீஷீuஸ்மீனீமீஸீt ஜீஷீஜீuறீணீவீக்ஷீமீஹிஸீவீஷீஸீ யீஷீக்ஷீ ணீ றிஷீஜீuறீணீக்ஷீ விஷீஸ்மீனீமீஸீt) கட்சியின் தலைவரும், Bordeaux நகர மேயராக பணியாற்றி வருபவரும் முன்னாள் பிரதமருமான அலன் ஜூப்பே, பாரிஸ் நகர Nanterre நீதிமன்றத்தில் "சொந்த நலனுக்காக அரசு பதவியை பயன்படுத்தியதற்காக" தண்டனை பெற்ற பொழுது, ஜனவரி 30ம் தேதியன்று பிரான்சின் அரசியல் கட்டுக்கோப்பு முழுவதுமே "பூகம்ப அதிர்ச்சிக்கு" உள்ளானது. அவர் 18 மாதங்கள் சிறை தண்டனை பெற்றார் மற்றும் 5 ஆண்டுகளுக்கு அவர் வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார். அதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு அவர் பொதுப் பணியாற்ற முடியாது. குற்றச்சாட்டுக்கள் உண்மையென்று நிரூபிக்கப்பட்டால் உடனடியாக அரசியலிருந்து விலகுவதாக ஜூப்பே உறுதியளித்திருந்போதும், தீர்ப்பு வெளிவந்ததும் அவர் உடனடியாக மேல் முறையீடு செய்தார். அப்படியென்றால், தண்டனை நிறைவேற்றம் ஓராண்டு நிறுத்தி வைக்கப்படும் இடையில் சட்டபூர்வமான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். இந்தக் கட்டுரையை எழுதுகின்ற நேரம்வரை, அவர் பொது வாழ்விலிருந்து விலகிக் கொள்வதாக அறிவிக்கவில்லை. RPR- ன் (ஜனாதிபதி சிராக்கின் கட்சியான The Gaullist Rassemblement pour la république UMP கட்சியின் முன்னோடியாகும்) முன்னாள் பொதுச் செயலாளர் என்ற முறையில் 1988 முதல் 1995 வரை பணியாற்றி வந்தார் மற்றும் பாரீஸ் நகர சபை (1983-1995) நிதித்துறை துணை மேயராக பணியாற்றி வந்தார், ஜூப்பே தண்டனை பெற்றதற்கான உண்மையான தவறான நடத்தை பாரிஸ் நகரத்து சம்பளப்பட்டியலில் ஏழு ''போலி ஊழியர்களை'' RPR- ன் பணியாளர்களாக சேர்த்தார் என்பதுதான். அப்போது சிராக், பாரீஸ் நகர மேயராக பணியாற்றி வந்தார், ஜூப்பே RPR கட்சியின் பொருளாளர் ஆக இருந்தார். ஜூப்பே உடன் ஏனைய இருபத்தாறு பேர்கள் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்றது. RPR-கட்சிக்கு ஊழியர்களை தந்து உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட ஏழு வர்த்தகர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மற்றும் பதிமூன்று பேருக்கு ஆறு மாத நன்நடத்தை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. RPR கட்சியின் முன்னாள் நிதி நிர்வாகியும் நிதி மேலாளருமான Louise-yvonne Cassetta-விற்கு 14-மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. லாபம் தரும் ஒப்பந்தங்களை, நிதி தராதவர்களுக்கு தரமாட்டோம் என்று அச்சுறுத்தி பணம் வசூலிக்கப்பட்டதாக பல வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டது. எந்தவிதமான விசாரணைக்கும் உட்படுத்தப்படாத ஒரே நபர், ஜூப்பே சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட காலத்திலெல்லாம் அவருக்கெல்லாம் மேலதிகாரியாக பணியாற்றிய ஜாக் சிராக் தான். குடியரசின் ஜனாதிபதி என்ற முறையில் அவர்மீது வழக்கு தொடர்வதிலிருந்து சட்டபூர்வ பாதுகாப்பு உள்ளது. இதைப்பற்றி Libération -ல் (ஜனவரி 31) Jean-Michel Helvig, "இந்த உலகத்தில் கொடுமை என்னவென்றால் பொறுப்பாக இருக்கும் பெரும்பான்மையினர் தண்டிக்கப்படுவதில்லை" என்று சிலேடையாகக் குறிப்பிட்டார் மற்றும் பல விமர்சகர்கள் ஜூப்பே -பிரதான பொருளை- பாதுகாக்கும் "மின்தடை" (Fuse) சிராக்கிற்கான பதிலாள் என குறிப்பிட்டிருக்கின்றன. அவரை பாதுகாப்பதற்காக இந்த "பொம்மை" வீழ்ந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர். "UMP கட்சியின் தற்போதைய தலைவர் இவ்வாறு சட்டத்தால் தொட முடியாத தொலைவில் இருக்கும் தற்போதைய ஜனாதிபதிக்காக தண்டனை பெற்றிருக்கிறாரா?" என்று Helvig கேட்டிருக்கிறார். பொதுப்பணியாற்றுவதற்கு தகுதியின்மையை விதிக்கக்கூடாது என்ற ஜூப்பே இன் கோரிக்கையை அந்த மூன்று நீதிபதிகளும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். அவர்கள் தங்களது தீர்ப்பில் ஜூப்பே இன் நடத்தை குறித்து கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். "இந்த வகையில் செயல்பட்டதன் மூலம் அலன் ஜூப்பே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகியாக பணியாற்றுகின்ற நேரத்தில் இறையாண்மை கொண்ட மக்களது நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டார். RPR நடவடிக்கைகளுக்கு சில தகுதியுள்ள ஊழியர்கள் தேவை என்பதற்காக சட்டவிரோதமான ஏற்பாடுகளை செய்து கொண்டதன் மூலம் ஒரு குறிப்பிட்ட திறமையை தேர்ந்து எடுத்துக் கொண்டார்.... அலன் ஜூப்பே தெரிந்தே தனது நேரடி அல்லது மறைமுக நன்மைக்காக பணியாற்றியிருக்கிறார். இது அதிகாரத்தை துஷ்பிரயோகமாக பயன்படுத்துவதாகும்." தீர்ப்பு தொடர்ந்து கூறுவதாவது: "பிரான்சு நாட்டின் தலைசிறந்த பள்ளிகளில் (மீறீவீtமீ uஸீவீஸ்மீக்ஷீsவீtவீமீsறீமீs ரீக்ஷீணீஸீபீமீs ஙநீஷீறீமீs) நமது குடியரசின் சிறப்புக்களையும் பொதுப் பணியாற்றுவதின் தலைசிறந்த சிறப்புக்களையும் கற்றுக் கொடுத்தனர். இத்தகைய பல்கலைக் கழகங்களில்தான் அலன் ஜூப்பே யும் படித்தார் மற்றும் பயிற்சி பெற்றார் பின்னர் மூத்த சிவில் பணியாளராக பணியாற்றினார், அதற்குப் பிறகு பொது வாழ்வில் முக்கிய பங்காற்றினார்." இந்த கருத்துக்கள் குடியரசின் ஜனாதிபதிக்கும் சக்திமிக்க வகையில் இல்லாவிட்டாலும் சமமான அளவில் பொருந்துவதாக அமைந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். அலன் ஜூப்பே மீதும் ஜாக் சிராக் மீதும் உள்ள மலையளவிலான ஊழல் குற்றச்சாட்டுக்களில், இந்த தண்டனை ஒரு சிறு துரும்புதான். இத்தகைய குற்றச்சாட்டுக்களில் ஒன்று சிராக் தம்பதியருக்கு தனிப்பட்ட உபயோகத்திற்காக 14 மில்லியன் பிராங்குகள் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன என்பதாகும். உசெலில் உள்ள சிராக் அலுவலகத்திலும் அவரது RPR நாடாளுமன்ற அடிவருடிகளிடமும் பணியாற்றுவதற்காக 60 ''போலி ஊழியர்கள்'' நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு பாரிஸ் மாநகராட்சியிலிருந்து ஊதியம் வழங்கப்பட்டது. லிப்டுகளை புதுப்பிப்பதற்கான ஒப்பந்தங்களுக்காக மாநாகராட்சி வீட்டுவசதி கமிஷன் பற்றிய வழக்கும் உண்டு, அவை சட்ட முறையின் வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டன, மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் கட்டிடத்திற்கான ஒப்பந்தங்களுக்கும் தரகுப்பணம் பெறப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள் விடப்பட்டதில் பெறப்பட்ட தரகுப்பணங்கள் மூலம் சிராக்கும் அவரது குடும்ப நண்பர்களும் மிகப்பெரும் செலவில் சுற்றுப்பயணம் செய்திருக்கின்றனர். இது போன்ற குற்றச்சாட்டுகளில் சட்ட நுணுக்கங்கள் காரணமாக ஜூப்பே மற்றும் சிராக் மீதும் வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை. ஜூப்பே யின் நண்பர்களும் ஆதரவாளர்களும் மற்றும் உடந்தையாக செயல்பட்டவர்களும் கொடுத்துள்ள விமர்சனங்களைப் பார்க்கும்போது பிரான்சில் அரசியல் வட்டாரங்களில் உள்ள சீரழிந்த நபர்கள் மற்றும் தார்மீக சூழல்கள் மற்றும் உறவுகளின் அறிகுறியை வழங்குகிறது. பிரதமர் Jean-Pierre Raffarin வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தீர்ப்பு ''தற்காலிகமானதுதான்'' மற்றும் ''பிரான்சின் பொது சேவைக்கு'' ஜூப்பே தேவைப்படுகிறார் என்பதாகும். தேசிய சட்டமன்றத்தின் தலைவரான François Baroin தீர்ப்புபற்றி கருத்து தெரிவிக்கும்போது ''ஜூப்பே தொடர்ந்து பணியாற்றுவார் என்பதில் தாம் "உறுதியாக இருப்பதாக'' குறிப்பிட்டுள்ளார். "ஜூப்பே யின் தனிப்பட்ட நேர்மை எப்போதுமே சந்தேகிக்கப்பட்டதில்லை" என்று Oise இலாகாவின் துணை UMP தலைவர் Eric Woerth கருத்து தெரிவித்துள்ளார். நீதிபதியின் தீர்ப்பு பற்றி அவர் கீழ்கண்டவாறு: "இந்த வகையில் நீதிபதிகள் பணியாற்றுவது நியாயமற்றது, இதனை வாக்காளர்கள் முடிவு செய்வதற்கு விட்டுவிட வேண்டும்". ஒருவேளை மிகவும் தெளிவாகக் காட்டப்பட்டது என்னவெனில், UMP உறுப்பினர் ஒருவர் கூட்டத்திலிருந்து வெளியே வரும்போது நேரடியாக தொலைக்காட்சி காமிரா முன் பேட்டியளிக்கும்போது, "இதை நான் எதிர்பார்க்கவில்லை, நீதித்துறையில் ஏதோ ஒரு வகையில் சட்ட விரோதமான கட்டுக்கோப்பு நிலவுகிறது என்று குறிப்பிட்டு'' விமர்சனம் செய்திருக்கிறார். செல்வந்தத்தட்டிற்காக எளிதில் பிழைபொறுக்கவும் உண்மையில் விசாரணையிலிருந்து விலக்களிப்பதற்குமான வேண்டுகோள்விடுக்கும் அதே மனிதர்கள், Perben II- என்று அழைக்கப்படும் நீதித்துறை அமைச்சர் டொமினிக் பெர்பெனின் முன்மொழிவுகளில் பொதிந்திருக்கும் அரசின் ஒடுக்குமுறை அதிகாரங்களை பலப்படுத்துவத்றகு ஆதரவளிப்பவர்கள் ஆவர். முன்மொழியப்படும் நடவடிக்கைகள் -தொழிலாள வர்க்க இளைஞர்களை நசுக்குவதற்கு போலீசுக்கு அதிகாரங்களை அதிகமாக வழங்கும் அதேவேளை, கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் காட்டல் மற்றும் உரிமைகளை பலவீனப்படுத்துவதாகும் - துல்லியமாக சிராக் மற்றும் ஜூப்பே சம்பந்தப்படும் பகுதியில், வெள்ளை கழுத்துப்பட்டடை குற்றம் மற்றும் நிதிக்கையூட்டுக்கள் பற்றி ஒரு குறிப்பும் இல்லை. மித்திரோன் காலத்திலும் அதற்குப் பின்னரும் நாட்டு அரசியலில் மிக உயர்ந்த மட்டங்களில் ஊழல் கலாச்சாரம் வேரூன்றி வெளியுறவு கொள்கைக்கும் பரவி, குறிப்பாக ஆபிரிக்க நாட்டில் Elf விவகாரம் அம்பலப்படுத்தியிருப்பதைப்போல், அரசியல் வாழ்வு முழுவதிலும் நிறைந்து நிற்கிறது என்பதை ஜூப்பே மீதான தீர்ப்பு காட்டுகின்றது. ("Elf verdicts reveal state corruption at highest levels"என்பதையும் பார்க்க) இப்போதும் கூட கோலிச உயர் அதிகாரி Jean-Charles Marchiani நைஜிரியா நாட்டில் நடைபெற்ற மறைமுக பேரங்களில் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சட்ட விரோத நிதி சேர்ப்பு சம்பந்தமான வழக்குகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. சிராக் மற்றும் ஜூப்பே போன்றவர்களின் தொடர்புடைய UMP, சோசலிஸ்ட் கட்சி, இடதுசாரி குடியரசு மற்றும் தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் சம்மந்தப்பட்ட இதுபோன்ற வழக்குகளில் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பது எல்லாமே தவறுகள்தான் என்று முடிவு செய்துவிட்டவர்கள் ஒரே குற்றம் அந்த குற்றத்தை செய்து பிடிபடுவதுதான் என்று கூறுகின்றனர். இந்த வட்டாரங்களில் இத்தகைய மனப்பான்மைகள் எந்த அளவிற்கு வேரூன்றி விட்டன என்றால் ஊழலை அவர்கள் ஒரு குற்றமாகவே கருதவில்லை. ஊழல் செய்தவர்கள் துணிந்து தலை நிமிர்ந்து நின்று நீதித்துறையை வளைக்க முயலுங்கள் என்பதுதான் அவர்களது கருத்து. இதே கண்ணோட்டத்துடன்தான் புஷ் மற்றும் பிளேயர் இருவரும் செயல்பட்டனர். ஈராக்கை காலனி ஆதிக்க நாடாக மாற்றுவதை நியாயப்படுத்தும் வகையில் அவர்கள் அந்நாட்டில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய் கூறினர், மற்றும் ஹட்டன் பிரபு மூடி மறைத்து வெளியிட்டிருக்கும் அறிக்கை மீது மகிழ்ச்சி கூத்தாடுகின்றனர். நீதிபதிகள் ஜூப்பே வழக்கு விசாரணையில் அரசியல் நிர்வாகக் கட்டுக்கோப்பையே வியப்பூட்டுகின்ற வகையில் அதிர்ச்சி தரும் தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர். "இறையாண்மை கொண்ட மக்களது நம்பிக்கையை காட்டிக்கொடுத்துவிட்டார்கள்" என்று மிகத் துணிச்சலோடு அம்பலப்படுத்தியிருக்கின்றனர். கோலிஸ் மற்றும் மித்திரோன் காலத்து முன்னணி அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளை விசாரிக்கும் நீதிபதிகளை மாஃபியா கும்பல் தந்திரத்தை பயன்படுத்தி அவர்களுக்கு பீதியூட்டுவது வாடிக்கை. ELF வழக்கில் நீதிபதி இவா ஜோலி நிரந்தரமாக போலீஸ் கண்காணிப்பிற்கு இலக்கானார். பல முக்கியமான சாட்சிகள் மிகக் கடுமையான சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளில் இறந்துவிட்டார்கள். அதே போன்று ஜூப்பே வழக்கை விசாரித்த நீதிபதிகளுக்கு அவர்களது சேவைக் காலம் வெட்டப்பட்டது. அவர்களது அலுவலக கணினிகளில் மோசடிகள் செய்யப்பட்டன மற்றும் கொலை மிரட்டல்களும் விடப்பட்டன. அவர்கள் முக்கியமான ஆவணங்களை தங்களது சொந்த கணினிகளில் பதிவு செய்யும் கட்டாயம் ஏற்பட்டது, அப்போதுதான் அந்த ஆவணங்களில் மோசடி செய்ய முடியாது. அவர்களுக்கும் இத்தகைய குற்ற விசாரணைகளிலிருந்து விலக்களிக்க முடியாதிருப்பதனால், எதிர்கட்சிகள் இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவிப்பதிலும் மந்தமாகவே உள்ளனர். UMP வலதுசாரி கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கிய சிற்பி ஜூப்பே கடுமையான நெருக்கடியில் இப்போது இருந்து வருகிறார். 2002 ஜனாதிபதி தேர்தல்களில் சிராக்கின் வெற்றியைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் UMP கூட்டணியாகும் இது முழு இடதுசாரிகளின் ஆதரவை பெற்றிருந்தது. இதில் இடதுசாரி தீவிர அமைப்புக்களான LCR (Ligue Communiste Révolutionnaire), PT (Parti des Travailleurs) மற்றும் LO (Lutte Ouvrière) ஆகியவை அடங்கியுள்ளன. அவர்கள் முதலாளித்துவ அரசியல்வாதிகளான ஜாக் சிராக்கும், மற்றும் ஜோன்-மேரி லூபென்னையும் புறக்கணிக்க வேண்டுமென்று உலக சோசலிச வலை தளத்தால் விடுத்த ஆலோசனையை ஏற்க மறுத்துவிட்டார்கள். இந்த விவகாரத்தில் இடதுசாரிகளுக்கு எந்தவிதமான அரசியல் ஆதாயமும் கிடைக்கவில்லை, ஆனால் Nicolas Sarkozy-ன் ஜனாதிபதியாக வேண்டும் என்ற ஆசைக்குத்தான் தீனிபோட முடிந்திருக்கிறது. அவர் தற்போது உள்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். பிரான்சின் ஆழமடைந்து வரும் அரசியல் நெருக்கடிக்கு அரசு ஒடுக்குமுறை சாதனத்தை என்றுமில்லா வகையில் அதிகம் பலப்படுத்துவதன் மூலம் தனது முழு அரசியல் செல்வாக்கையும் அடிப்படையாகக் கொண்டுள்ளார். இதில் அவருக்கு செல்வாக்கு மிக்க ஊக்குவிப்புகள் தரப்படுகின்றன. இந்த விவகாரத்தில் லூ பென்னும் திருவாளர் தூய்மை என்று வேடம் காட்டிக் கொண்டு பயனடையக்கூடும், இவை மார்ச் மாதம் நடைபெறும் பிராந்திய தேர்தல்களிலும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய தேர்தல்களிலும் எதிரொலிக்கலாம். சிராக்கையும் ரஃப்பரன் அரசாங்கத்தையும் பதவி விலக கோரிக்கை விடுத்தால், நிலவுகின்ற ஒழுங்கமைப்பிற்கு எதிராக அடிமட்டத்து வெகுஜன இயக்கத்தைத் தூண்டிவிடும் என்ற அச்சத்தால், எந்த அரசியல்வாதியும் அத்தகைய கோரிக்கையை விடுக்கவில்லை. |