World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

BBC's Gilligan resigns after condemning the Hutton Inquiry and Blair government

ஹட்டன் விசாரணையையும் பிளேயரின் அரசாங்கத்தையும் கண்டனம் செய்த பின்னர் BBC-யின் நிருபர் ஜில்லிகன் ராஜினாமா

By Chris Marsden
31 January 2004

Back to screen version

பிபிசி- யின் நிருபர் ஜில்லிகன் நேற்றிரவு தனது பதவியை ராஜினாமா செய்தார் ஆனால் ஈராக் பற்றி ஊதிக் கெடுத்து வெளிப்படுத்திய டாக்டர். டேவிட் கெல்லியின் மரணம் குறித்த ஹட்டனின் நீதி விசாரணையைக் கண்டித்தும் பிரிட்டிஷ் அரசாங்கம் செப்டம்பர் புலனாய்வு ஆவணத்தை எப்படி'' பாலியல்ரீதியாக குழப்பியது" என்று அம்பலப்படுத்தும் தனது கருத்தை நியாயப்படுத்தியும் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

மே 29-ம் தேதியன்று ஒளிப்பரப்பிய தனது டுடே நிகழ்ச்சி அறிக்கையின் சிலவற்றைத் தவறு என்று ஒப்புக் கொள்வதாகவும் அவற்றுக்காக மன்னிப்புக் கோருவதாகவும், ஆனால் சில சிறுதவறுகள் இருப்பினும் கணிசமான அளவு சரியாக இருந்தன என்றும் ஜில்லிகன் வலியுறுத்திக் கூறினார். ஈராக்கிடம் இருக்கும் பேரழிவுகரமான ஆயுதங்களை 45 நிமிடங்களில் ஏவ முடியும் என்ற, இப்பொழுது முற்றிலும் நம்பகத்தன்மை இழந்து விட்ட கூற்றால், அரசாங்கம் ஆவணத்தில் வேண்டுமென்றே "திரித்திருந்தது,'' இந்த தகவல் தனக்குக் கிடைத்தது டேவிட் கெல்லியின் மூலம் தான் என்ற விஷயம், புலனாய்வுத் துறையினரிடையே குறிப்பிடத் தகுந்த அதிருப்தி உண்டானதாகவும் ஜில்லிகன் தெரிவித்து இருக்கிறார்.

BBC-யின் டைரக்டர் ஜெனரல் கிரேக் டைக், மற்றும் போர்ட் ஆஃப் கவர்னர்ஸ்-ன் தலைவர் கேவின் டேவிசின் ராஜினாமாக்களை தொடர்ந்து ஜில்லிகனின் ராஜினாமா அமைந்துள்ளது. ஜில்லிகனின் நிகழ்ச்சி, அதில் கூறப்பட்டவை ஆகியவைகளில் தவறேதும் இல்லை என்று, தங்களது நிருபரின் பின்னால் ஆதரவாக அவர்கள் இருந்ததால் ஹட்டன் அறிக்கை அவர்களையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறது, அது மட்டுமின்றி பிரதம மந்திரி டோனி பிளேயரின், தகவல் தொடர்புக்கான பொறுப்பு இயக்குநர் அலஸ்டர் கேம்ப்பெல், ஜில்லிகனை தாக்கிப் பேசிய போதும், இவர்கள், ஜில்லிகனுக்கு ஆதரவாக நின்றனர். அரசாங்கத்தை காப்பதற்காக ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்தி "மோசமான தீர்ப்பு" வழங்கிய ஹட்டன் விசாரணையினால், ஒட்டுமொத்த BBC-யுமே பாதித்து இருப்பதாக ஜில்லிகன் தெரிவிக்கிறார். அவர் ஹட்டன் விசாரணை "எல்லா இதழியல் மீதும் ஒரு துன்பத் தாக்குதல்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

அவரது அறிக்கையானது, ஹட்டன், அரசாங்கம், இரண்டிற்கும் எதிரான வலுவான குற்றச்சாட்டுகளாகும். ''ஹட்டன் பிரபு, விசாரணையின்போது தனக்குத் தெரியவந்த விஷயங்களை குறித்து, நியாயமான முறையில் அலசியிருப்பாரேயானால், நான் கூறிய பெரும்பாலான விஷயம் உண்மை என்ற முடிவுக்குதான் வந்திருப்பார்`` என்று குறிப்பிட்டார்.

அவரது தவறுகளைக் குறித்து ஜில்லிகன் கொடுத்த விளக்கமாவது, ``ஒரு நாள் அதிகாலை நேரத்தில் எழுதித் தயாரிக்காத பேட்டி நிகழ்ச்சி ஒன்றில், அதுவும் அந்த நிகழ்ச்சி அதன்பின் ஒரு முறைகூட மறு ஒளிபரப்பு செய்யப்படவும் இல்லை, அதில் நான், 45 நிமிட நேர தயார் நிலை என்ற தகவல் தவறானது என்பது அரசாங்கத்துக்கு 'ஒருவேளை தெரிந்திருக்கலாம்' என்று சொன்னபொழுது, நான் கூறிய இரண்டு தவறான வாக்கியங்களிலிருந்து இவை அனைத்தும் ஏற்பட்டது என்பதை நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது. உண்மையில், நான் கெல்லி மூலம் அறிந்த விஷயங்களிலிருந்து எனது அனுமானத்தைதான் ஆனால், பேட்டியில் சொல்லும்போது, அந்தக் கருத்தை கெல்லியின் கருத்து போல தெரிவித்தேன்`` அவ்வளவு தான்.

அவர் என்னிடம்,'' 45 நிமிட விஷயம் உண்மையான புலனாய்வு தகவலின் அடிப்படையில் தான் என்ற விஷயத்தை ''மிகத் தெளிவாக சொன்னார். நான் அரசாங்கம் தவறான தகவல்களை இட்டுக்கட்டிக் கூறுகிறது என்று குற்றம் சொல்லவில்லை, ஆனால் மிகைப்படுத்திக் கூறுகிறது என்பதைத் திரும்பத் திரும்பத் தெரிவித்து இருக்கிறேன். நான் அதனை உறுதியாகக் கூறுகிறேன், அதிலிருந்து நான் பின்வாங்கப் போவதில்லை."

``அரசாங்கம் ஆவணத்தை ''திரித்துப் பெரிதுபடுத்தி'' இருக்கிறது, ஒருவேளை நடக்கலாம், நடந்தாலும் நடக்கும் என்ற விஷயங்களை நிச்சயமாக நடக்கக்கூடியவை என்று மாற்றி, முக்கியமான அம்சங்களை மறைத்துவிட்டது; 45 நிமிட கூற்று, இதற்கான, 'அற்புதமான உதாரணம்'; பேரழிவு ஆயுதக் கண்காணிப்புத் துறையின் முன்னணி நிபுணர் உட்பட புலனாய்வுத் துறைகளில் இருந்த பலரும், இந்த மாற்றத்தைக் குறித்து வருத்தம் அடைந்திருந்தனர்'' என்று ஜில்லிகன் வலியுறுத்திக் கூறினார்.

இந்த அறிக்கையானது, ''BBC மட்டுமல்லாது ஒட்டு மொத்த பத்திரிகைகள் மீதும் மறைமுக தாக்குதலை செய்திருக்கிறது. நிருபர்களை, அவர்கள் இப்போது சந்தித்து நிகழ்ச்சிகளை பெறுவதற்கு, கோரினால் காணக் கிடைக்காதவாறான தரத்திற்கு, எடுத்துக்காட்டாக, அரசாங்க ஆவணங்கள் போல, மேலும் தடைகளை உருவாக்கியிருக்கிறது`` என்று அவர் எச்சரித்தார்.

``பொதுமக்கள் ஹட்டன் பிரபு அறிக்கையை ஒத்துக்கொள்ளாத நிலை எழுந்துள்ளது பற்றி தாம் உண்மையிலேயே திருப்தி அடைவதாகக் கூறும் அவர், இந்த நிலை, BBC-யின் உறுதிப்பாட்டுக்கு மேலும் வலு சேர்க்கும்`` என்று நம்புவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு முன்னால் கிரேக் டைக் கூறும்போது, ஹட்டனின் விசாரணையில் வெளிவந்த தகவல்களைக் குறித்து தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும், அந்த அறிக்கையில் இருந்த அனைத்து விஷயங்களையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றார். தனது ராஜினாமா செய்தி வெளியிடப்பட்டவுடன், BBC எந்தக் காரணத்திற்காக அரசிடம் மன்னிப்பு கேட்டது என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று மேலும் தெரிவித்தார். ``ஹட்டனின் விசாரணையின் அறிக்கை அரசாங்கத்தின் அனைத்து சாட்சிகளுக்கும், சந்தேகத்தின் பலனைக் கொடுத்து விடுவித்திருக்கும் அதே நேரத்தில் BBC-யைச் சேர்ந்தவர்களுக்கு இல்லை`` என்றும் கூறியிருக்கிறார்.

கிரேக் டைக்கின் கருத்துக்களை, ஜில்லிகனின் அறிக்கையில் உள்ள விஷயங்கள் மேலும் வலுப்படுத்துகின்றன. ஹட்டனின் கண்டுபிடிப்புகளைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை மற்றும் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகக் காரணம் BBC-யின் இயக்குநர்களின்'' முழு ஆதரவு எனக்கு இல்லை என்று முடிவுக்கு" வந்ததனால் மட்டும்தான்.

ஹட்டனின் அறிக்கை, செய்தி ஊடகத்திற்கும் மிகக் கவலை உண்டாக்கக்கூடியது என்று கிரேக் டைக்கும் எச்சரித்தார். ஹட்டன் பிரபு அறிக்கையில் தெரிவித்துள்ளபடி பார்க்கும்போது, ``பத்திரிகையோ, ஒளிபரப்பாளரோ யாராக இருந்தாலும் சரி.... எந்த விஷயத்தையும் வெளிக்கொண்டுவருபவரின் வெளிப்படுத்தல்களை, அப்படியே, செய்தியாக சொல்லக்கூடாது, அவர் அதிகாரபூர்வமானவராக இருந்தாலும் சரி, தகவல்களை அப்படியே வெளியிடாமல், அது உண்மையானதுதான் என்பதை நிரூபிக்கவும் வேண்டும். அது இந்த நாட்டின் சட்டங்களையே மாற்றியமைக்கக்கூடியது.''

பிபிசி-யின் சட்டத்துறைப் பிரிவும், ஹட்டனின் அறிக்கையைக் குறித்து தங்களின் ஆரம்ப புரிதல்கள் இவ்வாறாகத்தான் இருக்கிறது என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார்கள். பிபிசி ஆரம்பத்திலிருந்தே ஒரு விஷயத்தைத் தெளிவாக வலியுறுத்தி வந்துள்ளது. தாங்கள் அரசாங்கம் பொய் சொல்வதாக ஒருபோதும் சொல்லவில்லை. தங்களுக்குக் கிடைத்த தகவல்களை நேர்மையான முறையில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இம்மாதிரி விஷயங்களை வெளிப்படுத்துகிறவர்கள் சொல்வதை அடிப்படையாக வைத்து செய்திகளை வெளியிட முடியாது என்ற நிலை ஏற்படுமானால், அது பத்திரிகைத்துறை சுதந்திரத்தின்மேல் தொடுக்கப்படும் மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படும். அதுமட்டுமின்றி, அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பல விஷயங்களை வெளிவர முடியாமல் நசுக்குவதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

ஜில்லிகனின் அறிக்கையை அடுத்து, அரசாங்கம் தன் நிலையைப் பற்றி எடுத்துக்கூறி விளக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானது. அதுவும் ஈராக்கிற்கு எதிராக போருக்குச் செல்ல வேண்டியதை நியாயப்படுத்த சொல்லப்பட்ட பொய்களையும் டாக்டர் டேவிட் கெல்லியின் மரணத்தில் பிரதமர் பிளேயர், மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் பங்கு ஆகியவைகளைப் பற்றி மேற்பூச்சு பூசி மறைத்த ஹட்டன் அறிக்கை மக்கள் மனதின் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜில்லிகனின் அறிக்கை வந்ததால், அரசாங்கத்திற்கு வேறு வழி இல்லாமல் போனது. பிற பத்திரிகையாளர்கள், சில பத்திரிகை ஆசிரியர்கள் ஆகியோர் ஜில்லிகன் நிலையைக் குறித்து பரிந்து பேசி வருகிறார்கள். கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் வெளியான மிக முக்கியமான செய்தி என்று தெரிவித்த அவர்கள், ஜில்லிகன் மக்களுக்கு ``பொது சேவை`` செய்திருப்பதாகவும் பாராட்டுகின்றனர்.

டெளனிங் தெருவின் மக்கள் தொடர்பு அதிகாரி, ஜில்லிகனின் ராஜினாமா பற்றி "சொல்வதற்கு ஏதும் இல்லை" என்று சொன்னதன் மூலம், ''விஷயத்தை முடிவுக்கு கொண்டுவர", செய்த முயற்சி முழுத் தோல்வியில் தான் முடிந்தது.

ஈராக்கில் இருப்பதாகக் கூறப்பட்ட பேரழிவு ஆயுதங்களளுக்கான எந்த சான்றையும் கண்டுபிடிக்க முடியாதது ஏன் என்பது பற்றியும், அரசாங்கத்தின் புலனாய்வுத் துறைகளைப் பற்றியும் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் பிளேயர் இருக்கிறார். பாராளுமன்றத்தில் பல்வேறு தேர்வுக் கமிட்டித் தலைவர்களின் கூட்டுக் கமிட்டியின் முன்பு அடுத்த வாரம், ஆஜராகி பிளேயர், கேள்விகளை சந்திக்க இருக்கிறார். குறிப்பாக, அமெரிக்க அதிபர் புஷ் மற்றும் அவரது பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைஸ் ஆகியோர், ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதைக் குறித்த போருக்கு முன்னால் தெரியவந்த புலனாய்வுத்துறைத் தகவல் தவறானது என்பதை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்ட பின்னரும் பிளேயர், பேரழிவு ஆயுதங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டிப்பாக கண்டுபிடிக்கப்படும் என்று தொடர்ந்து ஏன் வலியுறுத்தி வருகிறார் என்ற கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved