WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Blair's 45-minute WMD claim refuted by Iraqi group that
supplied the intelligence
பிளேயரின் 45 நிமிட மக்களை கொன்று குவிக்கும் ஆயுதங்கள் பற்றிய கூற்றை, அந்த புலனாய்வு
தகவலை தந்த ஈராக் குழு மறுத்துள்ளது
By Chris Marsden
29 January 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
சதாம் ஷூசேன் 45 நிமிடங்களுக்குள் பேரழிவுகரமான ஆயுதங்களை ஏவிவிடக்கூடும்
என்று பிரதமர் டோனி பிளேயர் கூறியதற்கு அடிப்படையாக அமைந்த தகவலை, மேற்கத்திய சார்பு ஈராக் தேசிய
உடன்பாட்டுக் கட்சி (Iraqi
National Accord - INA) பிரிட்டனின்
தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு தந்ததாக இப்போது ஒப்புக்கொண்டிருக்கிறது. மேலும் அந்த புலனாய்வு தகவல்
தவறானது என்றும் ஒப்புக் கொண்டிருக்கிறது.
நியூஸ்வீக்
ஜனவரி 12 இதழிலும் கார்ட்டியன்
ஜனவரி
27 இதழிலும் ஈராக் தேசிய உடன்பாட்டுக்
கட்சியின் ஒப்புதல்கள் அடிப்படையில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இக்கட்சியானது
அஹமது சலாபியின் ஈராக் தேசிய காங்கிரஸ்சிற்கு
போட்டி அமைப்பாக இருப்பதுடன், அது
CIA மற்றும்
M-16
உளவு நிறுவனங்களுடன் நீண்டகாலத் தொடர்புகளையும் வைத்திருக்கிறது. இயாத் அலாவி இதற்கு தலைவராக இருப்பதுடன்,
தற்போது பாக்தாத்தில் ஈராக் ஆளும் குழுவில் உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.
செப்டம்பர் 2002 ல் பிரிட்டன் வெளியிட்ட புலனாய்வு ஆவணத்தில் உயிர்நாடியான
கருத்தாக இடம்பெற்றுள்ள 45 நிமிட தாக்குதல் தொடர்பான கூற்றுத்தான், ஈராக்கிற்கு எதிராக சட்ட விரோதமான
போரை தொடங்குவதற்கு புஷ் நிர்வாகம் மேற்கொண்ட திட்டங்களை ஆதரிப்பது என்று முன்கூட்டியே பிளேயர் முடிவு
செய்தார். அதை நியாயப்படுத்துகின்ற வகையில், அந்த புலனாய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. ஈராக் விமானப்படை
முன்னாள் அதிகாரியான லெப்டினன் கேர்னல் அல் டாபா
(al-Dabbagh)
என்பவரை மட்டுமே மூலமாகக் கொண்டு அந்த புலனாய்வுத் தகவல் கிடைத்தது. பிரிட்டனின் சன்டே டெலிகிராப்
தனது டிசம்பர் 7 ம் திகதி பதிப்பில் வெளியிட்ட தகவலுக்கு இந்த அதிகாரிதான் செய்தி மூலம் என்று குறிப்பிட்டுள்ளது.
2002 ல் முன்னணி ஈராக்கிய இராணுவப் பிரிவுகளுக்கு பல பெட்டிகளில் இரசாயன
மற்றும் மரபு உயிரியல் ஆயுதங்கள் வழங்கப்பட்டிருப்பதாக இந்த அதிகாரி அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தியவர் டாக்டர் டேவிட் கெல்லியாவர்.
செப்டம்பர் ஆவணத்தில் அரசாங்கம் ''பாலியலாக குழப்பம்'' செய்து விட்டது மற்றும் 45 நிமிடம் என்ற கூற்று
சம்மந்தப்பட்ட வகையில் அரசாங்கம் எந்தவிதமான தவறையும் செய்யவில்லை, புலனாய்வு அமைப்பான
M16
அல்லது அரசாங்கம் புலனாய்வுத் தகவலை சந்தேகிப்பதற்கு எந்தவிதமான அடிப்படையுமில்லை, எனவே டேவிட்
கெல்லி கூறியது தவறு என்று ஹட்டன் பிரபு விசாரணை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. டாக்டர் கெல்லி,
BBC
யைச் சேர்ந்த ஆன்ட்ரூ கில்லிகனுக்கு
வழங்கிய பேட்டியில், அரசாங்கத்தின் புலனாய்வு ஆவணத்தின் பலவீனம் தொடர்பாக அரசாங்க பாதுகாப்பு சேவைகள்
கலவரமடைந்துள்ளன என்று குறிப்பிட்டிருந்தார். அரசாங்கமும்,
M16
புலனாய்வு அமைப்பும், அரசியல் நோக்கில் ஈராக் தேசிய உடன்பாட்டுக் கட்சி தந்த தகவலை சரிபார்ப்பதற்கு
ஏராளமான அவகாசமும் வாய்ப்புக்களும் இருந்திருக்கின்றன. அந்தத் தகவலை அப்படியே ஏற்றுக்கொண்டது அரசாங்க
தரப்பை வலுப்படுத்துவதற்காகத்தான் என்று இப்போது தெரிகிறது.
ஈராக் தேசிய உடன்பாட்டுக் கட்சி, பாத்திஸ்டு ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதில்
சொந்த அக்கரையுள்ள கட்சியாகும். இந்தக் கட்சி, இத்தகவலை போருக்கு முன்னர் மக்களைக் கொன்று குவிக்கும்
ஆயுதங்களை ஈராக் வைத்திருப்பதாக கூறியதை உறுதிப்படுத்தியுள்ளது. அதே போன்று அடிப்படையில்லாத ஆதாரமற்ற
குற்றச்சாட்டை சதாம் ஹூசேன் மீதும் கூறியுள்ளது. அவருக்கும் செப்டம்பர் 11 விமானக் கடத்தியான முகம்மது
அட்டாவுக்கும் தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை இக்கட்சி கூறியதாக நியூஸ்வீக் பத்திரிகை
கூறியுள்ளது.
ஈராக் தேசிய உடன்பாட்டுக் கட்சியின் தலைவர் அலாவியின் வாஷிங்டன் பிரதிநிதியான
நிக் தேரோஸ் என்பவர், (Nick
theros) லெப்டினன் கேர்னல் அல்
டாபா இந்தக் குழுவின் ஒரு உறுப்பினர் என்று நியூஸ்வீக்கிடம் தெரிவித்தார். ஆயுதங்கள் பெட்டகம் என்று
கூறப்பட்ட பெட்டகங்களில் என்ன இருந்தது என்பது அவருக்கு தெரியாது. இப்போது அவர் கூறுவது ''அதில்
பீங்கான் பாத்திரங்கள் கூட இருந்திருக்கலாம்'' என்பதாகும்.
ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு பின்னர் கார்டியனில் ஒரு கட்டுரையை
தேரோஸ்
எழுதியிருந்தார். அதில் அவர் அதே சுவையான
விளக்கங்களைத் தந்திருந்ததோடு, லெப்டினன் கேர்னல் அல் டாபாவின் கூற்றை விவரித்திருந்தார். ''நாங்கள்
மக்களைக் கொன்று குவிக்கும் ஆயதங்களை தெளிவாகப் பார்க்கவில்லை'' என்று குறிப்பிட்டார்.
அல் டாபா கூறியது சரிபார்க்கப்படாத புலனாய்வு தகவல்தான். அது ஒரு
தனிப்பட்ட மூலத்திலிருந்து கிடைத்தது. ''இந்தத் தகவலை ஈராக் தேசிய உடன்பாட்டுக் கட்சி தந்த ஏராளமான
தகவல்களோடு இணைத்து நாங்கள்
M16
புலனாய்வு அமைப்பிற்கு நல்லெண்ணத்தின்
அடிப்படையில் கொடுத்தோம். அந்தத் தகவலை சரிபார்க்க வேண்டியது அவர்களது கடமை'' என்று
கார்டியனுக்கு அவர் தெரிவித்தார்.
அல் டாபா, ஈராக் தேசிய உடன்பாட்டுக் கட்சியின் உளவாளி என்று இப்போது
ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவர் கயிறு திரித்திருக்கிறார். அதன் அடிப்படையில் பொய் மூட்டைகளை
ஆதாரமாகக்கொண்டு பிரிட்டனை பிளேயர் அரசாங்கம் போரில் ஈடுபடுத்திவிட்டது.
ஈராக் தேசிய உடன்பாட்டுக் கட்சியின் கதைகள் ஆதாரமற்றவை என்று நம்பினாலும்,
இந்தக் கட்சி
நம்பிக்கையான நண்பன் என்று அவர்கள்
இன்னும் கருதிவருவதாக CIA
மற்றும்
M16
ஆகியவற்றோடு நெருக்கமாக தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்தனர் என்று நியூஸ்வீக் இப்போது
கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. (வலியுறுத்தி சேர்க்கப்பட்டது)
ஹட்டன் விசாரணையின் போது
M16
ன் தலைவர் சேர் ரிச்சார்ட் டியர்லாவின்(Sir
Richard Dearlove) 45 நிமிட
கூற்று சம்மந்தமான தகவல், ஈராக் ஆயுதப்படைகளைச் சேர்ந்த ஒரே மூலத்திலிருந்து கிடைத்தது. அந்த ஆதாரம்
''நம்பகத்தன்மையுள்ளது நிலையானது'' என்று அவர் தெரிவித்தார். இப்போது ஈராக் தேசிய உடன்பாட்டுக்
கட்சி வெளியிட்டுள்ள அறிக்கைகள், இது தவறானது என்பதை நிரூபிக்கின்றன. ஆனால், புலனாய்வுத் தகவல் சரியானதாகவே
இருந்தாலும் அதை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்திவிட்டது. அல் டாபாவின் கூற்றுக்கள் போர்க்களத்தில் பயன்படுத்தப்படுகின்ற
ஆயுதங்களை மட்டுமே குறிப்பிடுவதாகும். அப்படியிருந்தும் பிளேயர் சைப்ரஸிலுள்ள பிரிட்டன் தளங்களை தாக்கக்கூடிய
வல்லமையுள்ள ஆயுதங்களைப் பற்றி விளக்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
அல் டாபாவின் கூற்றுக்கள் முதலில் டெலிகிராப் பத்திரிகையில் வெளியிடப்பட்டபோது,
உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்டிருந்த கட்டுரையில், ஆயுத ஆய்வாளர் டாக்டர் கெல்லியின்
மரணம் தொடர்பாக ஹட்டன் பிரபு நடத்திவரும் விசாரணையின் விளைவுகள் மேலும் சங்கடத்திற்குள்ளாகும் என்று குறிப்பிட்டிருந்தது.
''அல் டாபாவின் சாட்சியத்தை நம்ப முடியாது. அவர் திட்டவட்டமான அரசியல்
நோக்கம் கொண்டவர். அவரது நோக்கம் பிளேயரின் கூற்றுக்களை ஆதரிப்பதாகும். சதாம் ஹூசேனிடம்
மக்களைக் கொன்று குவிக்கும் ஆயதங்கள் உள்ளது, அவருக்கு பின்னர் வருகின்ற ஆட்சியாளர்களும் அதை பயன்படுத்திக்
கொள்ளமுடியும் என்பதை வலியுறுத்தி பிளேயருக்கு ஆதரவு திரட்டுவதற்காக அவ்வாறு கூறியுள்ளார். இந்த வகையில்
ஆக்கிரமிப்பு படைகள் மேலும் ஒடுக்குமுறைகளை கையாளுவதற்கும், அவர்களது பொம்மை அரசாங்கத்தை நியாயப்படுத்துவதற்கும்
அந்தத் தகவலைத் தந்திருக்கிறார். ஏனென்றால் அந்த பொம்மை அரசாங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவராக அவர்
பணியாற்றி வருகிறார்.
''புஷ் நிர்வாகம் ஈராக்கில் ஆட்சி மாற்றம் செய்வதற்காக, அதற்கு எதிராக
போர் தொடுக்கவேண்டும் என்பதில் சொந்த நலன்களோடு செயல்பட்டு வருவதற்கு ஆதரவாக உற்சாகம் ஊட்டும்
வகையில் செயல்படும் சக்திகளின் தரப்பிலிருந்து செப்டம்பர் ஆவணம் வந்தது. அதை அப்படியே அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்''
என்று அதில் குறிப்பிட்டிருந்தோம்.
Top of page |