World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு On the British and US response to the Bam earthquake பாம் பூகம்பத்திற்கு பிரிட்டனும் அமெரிக்காவும் எத்தகைய எதிர்விளைவைக் கொடுத்தன By Jean Shaoul டிசம்பர் 26 ம் தேதி தென்கிழக்கு ஈரானைத் தாக்கிய பூகம்பமானது, கடந்த 25 ஆண்டுகளில் மிகுந்த பேரழிவை அளித்துள்ளது. கிட்டத்தட்ட 40,000 மக்களுக்கு மேல் இதில் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 30,000 பேராவது காயமடைந்தனர். பாமில் கிட்டத்தட்ட 80 சதவிகிதக் கட்டிடங்களை அழித்துவிட்டதுடன் சுற்றியிருந்த நகரங்கள், கிராமங்கள் எல்லாவற்றிலுமாக 100,000 க்கும் மேற்பட்ட மக்களை வீடிழந்தவர்களாகச் செய்தும் விட்டது. தாராளக் கொள்கையுடைய செய்தி ஊடகத்தின் பார்வையில், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டும் இந்த நிலநடுக்கத்திற்கு என்ன விளைவு கொண்டிருந்தது என்று பார்த்தால் பயன்தருவதாக இருக்கும். அது, ஒரு சூனியக்காரி கொடுக்கும் நம்பிக்கையின்மைக் கலவை, மெத்தனமான போக்கு, தன்னலம் இவை இணைந்ததாகும். அவர்கள், தமது அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயங்களை அடைவதற்காக இந்தப் பேரழிவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர். ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அதன் ஆதரவாளர்களைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு நிகழ்வும், எவ்வளவு சோகமாயிருந்தாலும்கூட, அதன் மூலோபாய நலன்கள் என்ற குறுகிய முப்பட்டைக் கண்ணாடிப் பார்வையில்தான் எதுவும் ஆராயப்படும் என்பது கார்டியன் (Guardian) உடைய வர்ணனைக் குறிப்புக்கள் காட்டுகின்றன. டிசம்பர் 29 ம் தேதி, "பாமின் குமிழ்கள்'' என்ற தலைப்பில் ''பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் இப்பொழுது உணவு, மருந்து, வேலை, வீடு இவையனைத்தையும் இழந்து நிற்கின்றனர். பழைய அனுபவம் ஏதேனும் வழிகாட்டும் என்றால், இவர்கள் இன்னும் பல மாதம், இல்லாவிட்டால், பல ஆண்டுகள்கூட, இதேநிலையில்தான் இருப்பார்கள்" என்று இப்பத்திரிகை எழுதியது. சில நாட்கள் முன்பு, இரண்டு பேர் இறந்து சில கட்டிடங்களையழித்திருந்த தெற்கு கலிஃபோர்னியாவில் இதே வேகத்துடன் நிகழ்ந்த நிலநடுக்கத்துடன், பாம் நிலநடுக்கத்தையும் கார்டியன் ஒப்பிட்டு எழுதியது. அத்துடன், ஈரானுடைய தேர்ந்ததெடுக்கப்படாத அரசாங்கம் பூகம்பத்தின் தாக்குதலை அதிகரித்ததில், கட்டிட விதிகள் எவ்வாறு முறையான விதிகளை மீறியதாக இருந்ததைக் கவனியாமல் விட்டதால், அதிகமாக்கிவிட்டது என்ற நியாயமான குறையையும் கூறியது. நடக்கவிருக்கும் பேரழிவை காத்துத்தான் பாம் இருந்தது. ஈரானில் அடிக்கடி நிகழும் செயல்களுக்கு, அரசாங்கம் போதிய தயாரிப்புக்களுடன் இல்லாதது, பெரும் சோகத்தை அதிகரித்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. கார்டியன், ஈரானியச் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிடமிருந்தும் அரசாங்கத்தைப் பற்றிய குறைகூறல்கள் இருந்தன என்றும், "இதையொட்டி மிகப்பெரிய சமுதாயப் பின் அதிர்ச்சி" பரந்த அளவில் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதுவரை, எல்லாம் சரிதான். ஆனால் இதற்குப் பிறகு கார்டியன், தன்னுடைய அரசியல் செயல்பட்டியலை எழுதத் தலைப்பட்டது. "ஈரானின் பூகோள-அரசியல், மூலோபாய முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு, இந்தப் பெரும் சோகத்தைப் பயன்படுத்திக்கொண்டு மேற்கு நாடுகள் அரசியல் அளவில் ஆதாயங்களைக் காணவேண்டும் என்றும், எவ்வாறு தங்கள் சர்வதேச உதவி அமைப்புக்கள் "அடிப்படை பொருளாதார தேவைகளுக்கு" உயர்ந்த தரத்தில் விடையிறுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்பதை நிரூபிக்கவேண்டும் என்றும், எழுதியுள்ளது. சிறிதும் மறைக்கும் முயற்சியில் ஈடுபடாத மகிழ்ச்சியைக் காட்டி, தலையங்கம் எவ்வாறு இரண்டு அமெரிக்க உதவி விமானங்கள் ஈரானுக்கு வந்தன என்றும், கடந்த பத்து ஆண்டுகளில் முதல் தடவையாக ஈரானில் இறங்கும் அமெரிக்க விமானங்கள் அவை என்றும், பாமில் ஏற்பட்டுள்ள பெரும் மனித அழிவைப் பொறுத்தவரையில் சர்வதேச சமூகம் எப்படி அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை இது காட்டுகிறது என்றும், தலையங்கம் குறிப்பிட்டுள்ளது. அதன் பின் தலையங்கம் வருங்காலத்தைப்பற்றிய ஊகம் போன்ற குறிப்பைக் கொடுத்து முடிக்கிறது: "நிலநடுக்கங்கள், இயற்கைக் காரணங்களை ஒட்டி வரலாம், ஆனால் பலமுறை அவை அரசியல் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன." தன்னுடைய வாசகர்கள் சரியாகப் பொருளறிந்து கொள்ளுவர் என்ற நோக்கத்தில், தன்னுடைய மட்டமான கட்டுரை வந்த மறுநாளே, இப்பத்திரிகையானது டேவிட் அரொன்விச் (David aaronvitch) என்பவர் எழுதியிருந்த ஒரு கட்டுரையை வெளியிட்டது. "பாமில் ஏன் இவ்வளவுபேர் இறந்து போயினர்? என்ற தலைப்பில், கட்டுரையாசிரியர் தன்னுடைய வழக்கமான அகெளரவமான முறையில், இந்தப் பேரழிவைப் பயன்படுத்தி, சுதந்திர சந்தையின் குணநலன்களைப் புகழும் கருத்துக்களையும், அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு எதிராகக் குறைகூறுவோரையும், முதலாளித்துவம் பற்றிக் குறைகூறுவோரையும் பற்றி மட்டமான நகைச்சுவைத் துணுக்குக்களையும் வெளியிட்டார். கலிஃபோர்னியப் பூகம்பம் பேரழிவாகப் போகாததற்குக் காரணம், மைக்கேல் மூர் போன்றோர் பெருவணிக நிறுவனப் பேராசை கொண்டிருந்தாலும், குறுகிய காலத்தில் பணம் பண்ணவேண்டும் என்றிருந்தாலும் அவற்றை, பாதுகாப்பு, ஒழுங்குமுறை இவற்றிற்கு முன்னுரிமை கொடுத்த பிறகுதான் பின்பற்றினர். தங்களுடைய குடிமக்கள் மேலிருந்து விழும் கட்டிடப் பொருட்களினால் உயிரிழக்கக் கூடாது என்பதில் கலிஃபோர்னியா கவனம் செலுத்தியது என்று இவர் எழுதுகிறார். இத்தகைய ஆர்வமுடன் "அமெரிக்க வழிமுறைக்குக்" கைதட்டும் தலைவர், மற்றவர்களுக்குத் தெளிவாகத் தெரிவதைக் கவனிக்கவில்லை. முதலாளித்தவத்தின் கீழ்தான் உலகில் பில்லியன் கணக்கில் மக்கள் வசித்துக் கொண்டிருக்கின்றனர். தாராளவாத ஜனநாயக வடிவமைப்பைக் கொண்டிருந்தாலும் அல்லது கொள்ளாவிட்டாலும், அவர்கள் வறுமை, மிக இழிந்த சுற்றுப்புறம், வீடின்மை, ஆகியவை இருக்கும் நிலையிலேயே, மில்லியன் கணக்கில் அமெரிக்கா, கலிஃபோர்னியா உட்படப் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர். கார்டியன் வாசகர்களில் ஓருவர், டேவிட் அரொன்விச் உடைய அமெரிக்க முதலாளித்துவத்தைப்பற்றி ரோஜாப்பூ பூச்சு கொடுத்து எழுதப்பட்டிருந்த கட்டுரையில், எவ்வாறு அமெரிக்கா இளகிய மனத்துடன் தன்னுடைய குடிமக்களைக் கவனிக்கிறது என்பதற்கு விளக்கத்துடன் பதில் கொடுத்து இருந்தார். இவர் 1993 ல் புளோரிடாவிற்குச் சென்றிருந்த போது எப்படி, அந்த நேரத்தில் கரிக்கன் ஆன்ரோ (Hurricane Andrew) எனப்பட்ட பெரும் சூறாவளி தாக்கியது என்றும், ஆயிரக் கணக்கான மக்கள் வீடின்றி நின்றதையும் குறிப்பிட்டார். "இந்த இடம் பெரும் சூறாவளிக்கு இலக்காகும் இடம் என்று தெரியவந்திருந்தும் கூட, பெரும்பாலான கட்டிட ஒப்பந்தக்காரர்கள், பணத்தை மிச்சப் படுத்துவதற்காக, பல கூரைகளையும் இணைக்க ஆணிகளைக் கொண்டுகூட அடிக்காமல் அதையும் விட மென்மையான பொருளால் பிணைத்திருந்து பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தனர் என்றும் அந்த வாசகர் குறிப்பிட்டிருந்தார். இதையும்விட முக்கியமாக, மேற்குத் தாராள ஜனநாயகத்தின் சிறப்பு மாதிரிகளான அமெரிக்காவும் பிரிட்டனும், சொல்லப்போனால் உலகிலேயே முதல் மற்றும் நான்காம் பணக்காரநாடுகள், பாம் நிலநடுக்கத்தை எப்படி எதிர்கொண்டன என்பது ஆராயத்தக்கது. சர்வதேச வளர்ச்சி நிறுவனத்தின் (International Devlopment - DfID) முக்கியச் செயலரான ஹிலேரி பென், பிரிட்டனின் பெருந்தன்மை என்பது எத்தகைய தவறான கூற்று எனக் காட்டுகிறார். பிரிட்டன் 68 தேடிக் கண்டுபிடிக்கும் வல்லுனர்களை DfID அமைப்பின்மூலம் சிறப்பு விமானம் ஒன்றில் அனுப்பி வைத்தது. இந்தக் குழுவில், தீயணைப்போர் மற்றும் அரசாங்கம் சாராத இதர அமைப்புக்களான சர்வதேச மீட்புக்குழு, குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் குழு, Canis, Rapid மற்றும் Bird அமைப்புக்கள் மற்றும் DfID இவற்றின் உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களிடத்தில் மோப்ப நாய்களும், கற்களுக்கிடையே ஊடுருவி மோப்பம் பார்க்கக் கூடிய வெப்பத்தோற்ற அமைப்பு கொடுக்கும் கருவியும் இருந்தது. DfiD குழு எது தேவைப்படும் என்பது பற்றி மதிப்பீடு போட்டுக்கொண்டிருந்தது. இதையே வேறுவிதமாகக் கூறினால், மாட்சிமை தங்கிய மகாராணியின் அரசாங்கம் உதவி நிறுவனங்களுக்கு சிறப்பு விமானம் ஒன்றையையும் சில அதிகாரிகளையும் பாம் வரையில் செல்லக் கொடுத்தது. இந்த அற்ப செலவு பிரிட்டனின் கருவூலத்தை உடைத்துவிடப் போவதில்லை. இந்தச் செலவினங்களின் பெரும்பாலன அளவு, பொதுமக்கள் நன்கொடை அளிக்கும் உதவி நிறுவனங்களால் ஏற்கப்படுகின்றன. ஜனாதிபதி புஷ்ஷுடைய விளைவு இன்னும் மோசமாக இருந்தது. கார்டியனுடைய பாம் நிருபரான ஜேம்ஸ் ஆஸ்ரில் (James Astill) என்பவர், அமெரிக்கா காட்டிய விளைவு எவ்வாறு போலியாகவும், பிரச்சார நோக்கத்தையும் கொண்டிருந்தது என்று அம்பலப்படுத்தியுள்ளார். "இவர்கள் செய்ததில் எதுவுமே அடையாளம் போன்ற விளம்பரத்தைத்தவிர, மகத்தானதாக இல்லை. மிகவும் புகழ்ந்து பேசப்பட்ட, அமெரிக்கத் தள மருத்துவமனை மிகச் சிறியதாக, வெகு தாமதமாக, தேவைக்குப் பொருந்தாததாக இருந்தது" என்று மேலும் குறிப்பிட்டார். பூகம்பத்திற்கு 36 மணிநேரத்திற்குப்பிறகு, பாமில் பதின்மூன்று அயல்நாட்டுத் தள மருத்துவமனைகள் செயல்பட்டன. அமெரிக்கக் குழு வருவதற்கு 5 நாட்கள் எடுத்துக்கொண்டது. இந்தக் குழு, பிராங்க்போர்ட்டிற்குச் செல்ல ஒரு C-17 ரக இராணுவ விமானத்திற்குக் காத்துக்கொண்டு, பின்னர் ஈரானிய அதிகாரிகள் இவர்களுக்கு அனுமதி தருவதற்காக குவைத்தில் காத்துக்கிடந்தது. முடிவில் தேடிக்கண்டுபிடிக்கும் குழு இனி தேவைப்படாது என்று குவைத்திலேயே விட்டுவிடப்பட்டது. பெரும்பாலான உயிர்தப்பியவர்கள் சரிந்த இடிபாடுகளிலிருந்து Red Crescent உடைய ஈரானியர்களால் காப்பாற்றப்பட்டவர்கள் ஆவர். சர்வதேச மீட்புக்குழுக்கள் உயிராடு அதிகமாக எவரையும் காப்பாற்றவில்லை. அமெரிக்க மருத்துவரைப் பொறுத்தவரை, ஆஸ்டிலுடன் பேசுவதற்கு அவருக்கு நிறைய நேரம் இருந்தது. அவரிடம் அதிக நோயாளிகள் வரவில்லை. இதற்குக் காரணம் பலர் உயிர்தப்பவில்லை. மற்றொரு காரணம் அமெரிக்க கள மருத்துவமனையில் தேவையான வசதிகள் இல்லை. மருத்துவமனை திறந்த 5 மணி நேரம் கழித்து 14 டாக்டர்களும், அறுவை இயல் வல்லுனர்களும் 12 நோயாளிகளுக்குத்தான் வைத்தியம் பார்த்திருந்தனர். உக்ரைனுடைய கள மருத்துவமனை, 100 படுக்கைகளைக் கொண்டிருந்தது. இதின் தலைமை மருத்துவரான டாக்டர் ஜோர்ஜி ரோசின், (Dr. Georgyi Roshchin) பூகம்பத்திற்குப்பிறகு திங்கட்கிழமையிலிருந்து குறிப்பாக, அதில் முதல் நாள் தான் 200 நோயாளிகளுக்கு மருத்துவ வசதி கொடுத்திருந்ததாக கார்டியன் நிருபரிடம் கூறினார். "அமெரிக்க மருத்துவமனை ஒரு அரசியல் பிரச்சினையாகும். அவர்கள் ஒரு சிறிய மருத்துவமனையைக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் ஒரு பெரிய மருத்துவமனையைக் கொண்டுள்ளோம்" என்று மேலும் குறிப்பிட்டார். கிட்டத்தட்ட 700,000 டாலரிலிருந்து 1 பில்லியன் டாலர் வரை நீண்டகாலத் திட்டமாகச் செலவு செய்தால் தான் இந்தப் பேரழிவிலிருந்து பாம், சீரமைக்கப்படமுடியும் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டிருக்கும்பொழுது அமெரிக்க உதவித்தொகை அப்பின்னணியில் சிறுத்து நிற்கிறது. ஈரானிய அரசாங்கம் இந்தத் தொகையில் பாதிக்கும் குறைவாக, 425 மில்லியன் டாலரை உதவி நடவடிக்கைகளுக்காக, வங்கியில் பின்னர் எடுத்துக் கொள்ளும் வகையில் இருப்பாக வைத்து, அதிலிருந்து ஈரானிய வங்கிகள் 82.5 மில்லியன் டாலர் தொகையை 10,000 வீடுகள் கட்டக் கடன் கொடுக்கவும், பண்ணைகளுக்காகச் செலவழிக்கவும் பாமில் திட்டமிட்டுள்ளது. இதற்கும் மேலாக, 36 இருபுறக் கட்டுப்பாடு உள்ள நிறுவன அமைப்புக்கள், 6 சர்வதேச அளவிலான அரசாங்கம் சார்ந்திராத அமைப்புக்கள் (NGOs) 7 ஐ.நா. அமைப்புக்கள் ஆகியவை உதவித்தொகையாக 100 மில்லியன் டாலரை கொடுக்க இருக்கின்றன. இந்த எஞ்சிய தொகை முழுவதையும் அமெரிக்கா கொடுக்கக் கூடிய திறன் கொண்டுள்ளது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அதன் குற்றஞ்சார்ந்த போர்களில் செலவழிப்பதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இத்தொகை பெருங்கடலில் ஒரு துளி போல்தான் இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஈராக்கில் இருப்பதற்காக அமெரிக்கா பில்லியன் கணக்கில் செலவழித்துக் கொண்டிருக்கிறது. ஈரானோடு போர் தொடுக்கவேண்டும் என்றாலும், உயிர்களை காப்பாற்ற இல்லாவிட்டாலும், உயிர்களை அழிப்பதற்கு எவ்வளவு பணம் அமெரிக்கருக்குக் கிடைக்கும். இந்தப் பேரழிவைப் பயன்படுத்தி ஈரானுக்கு எதிராக 25 ஆண்டுகளாக இருந்த பழைய பொருளாதாரத் தடைகளை அகற்றுவதற்கு அமெரிக்கா அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. இதற்குக் காரணம் அமெரிக்கத் தடையைப் பயன்படுத்தி, ஐரோப்பிய, ரஷ்யா, ஜப்பானியப் பெரு நிறுவனங்கள் அமெரிக்காவைவிடக் கூடுதலான அளவு ஈரானியச் சந்தையில் பங்கு கொண்டுள்ளன. ஈரானுக்குச் செலுத்தப்படும் நிதியங்களின் மீதான தடையும் அகற்றப்பட்டுள்ளது. பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டதானது, வாஷிங்டன் தன்னுடைய அரசியல், பொருளாதார ஆதிக்கத்தை இந்த முக்கியமான மத்திய கிழக்கு நாட்டில் மீண்டும் ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பாகமாகும். ஈரானைச் சுற்றிலும் இராணுவமுறையில் அமெரிக்கா வலுவாகத் தளங்கள் கொண்டிருப்பதைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் அமெரிக்கக் கோரிக்கைகளான அணு ஆயுதங்களைப் பற்றிய ஆய்வை ஒப்புக்கொண்டுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களைக் கைவிட்டு, பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்கத் தயாராக இருந்து, ஜனயாயகத்தை ஏற்கவும் தயாராக இருந்தால்தான் சாதாரண உறவுகள் கொள்ளப்படும் என்று புஷ் அறிவித்து விட்டார். இந்தக் கடைசிக் கோரிக்கை, அமெரிக்கா தன்னுடைய அரசியல் சதித்திட்டங்களை ஈரானிய மக்களுக்கு எதிராக நடத்திக்கொண்டிருக்கிறது என்பதின் கருத்தே ஆகும். எவ்வாறாயினும், தடைகளைத் தளர்த்தியது, ஈரான் அமெரிக்க வழிக்கு வராவிட்டால் மீண்டும் சுமத்தப்படும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. "தீய அச்சு" (axis of evil) என்ற பெயரில் புஷ் நிர்வாகம் ஈரானிற்கு பெரிய இடத்தைக் கொடுத்துள்ளது. ஈராக்கிற்குக் கொடுக்கப்பட்ட தண்டனையைப் பெறுவதற்கு இது வரிசையில்தான் இருக்கிறது. எனவே, கார்டியனால் புகழப்பட்டு, காப்பாற்றப்பட்டிருக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஆயிரக்கணக்கான உயிர்கள் எடுக்கப்பட உள்ளன. |