Mehring Books
New Release from Mehring Books: The Crisis of
American Democracy: the Presidential elections of 2000 and 2004
மேஹ்ரிங் நூலகத்திலிருந்து புதிய வெளியீடு:
அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி: 2000 மற்றும் 2004 ஜனாதிபதி தேர்தல்கள்
22 December 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
உலக
சோசலிச வலைத்
தளத்தின் தலைவரும் சர்வதேச ஆசிரியர் குழு தலைவருமான டேவிட்
நோர்த்தால் எழுதப்பட்ட அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி, 2000 மற்றும் 2004-ன் ஜனாதிபதி
தேர்தல்கள் வெளியீட்டை அறிவிப்பதில் மேஹ்ரிங் நூலகம் பெருமைகொள்கிறது.
2000 மற்றும் 2004 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்கள் பற்றிய ஒரேகாலத்து நிகழ்வுகளின்
ஆய்வுகளை கொண்டிருக்கும் நான்கு விரிவுரைகளின் 156 பக்கங்கள் கொண்ட, இந்த தொகுதியின் ஆங்கில மொழி
பதிப்பு உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களுக்கு இப்பொழுது கிடைக்கும்.
அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி-யில், நோர்த், ஜனாதிபதி ஜோர்ஜ்
புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படல் அமெரிக்க மற்றும் சர்வதேச அரசியலில் ஒரு தீக்குறியான திருப்புமுனையைக்
குறிக்கிறது என்று வாதிடுகிறார். அதிகாரத்திற்கு திரும்ப வந்ததுடன், ஐக்கிய அமெரிக்க அரசுகளின் வரலாற்றிலேயே
மிகவும் பிற்போக்கான நிர்வாகம் அதன் சர்வதேச இராணுவவாதத்தையும் உள்நாட்டு ஒடுக்குமுறையையும் தீவிரப்படுத்தவிருக்கிறது.
விரிவான வரலாற்று ஆய்வுகளின் வழியாக, ஐக்கிய அமெரிக்க அரசுகளில் ஜனநாயகத்தின்
நிலைமுறிவுக்குப் பின்னால் அமெரிக்க முதலாளித்துவத்தின் பூகோளப் பொருளாதார நிலையின் சீரழிவும், முன் என்றும்
இருந்திராத மட்டங்களுக்கு செல்வக்குவிப்பும் சமூக சமத்துவமின்மையும் இருக்கின்றது என்று நோர்த் நிறுவுகிறார். வெளிநாடுகளில்
வலியத்தாக்கும் இராணுவ வாதத்திற்கு திரும்புதலும், கடந்த மூன்றாண்டுகளாக போலீஸ் அரசை பரந்த அளவில் விரிவுபடுத்துலும்,
"பயங்கரவாத அச்சுறுத்தல்" என்று அழைக்கப்படுவதில் இருந்து எழவில்லை, மாறாக அமெரிக்க சமுதாயத்திற்குள்ளேயே
உள்ள அதிஉச்ச அளவு கூர்மையடைந்து வரும் சமூக மற்றும் வர்க்கப் பதட்டங்களிலிருந்து எழுகின்றது.
இந்த ஆங்கில மொழி தொகுதியானது, றோனால்ட் றேகனுக்கு கூர்மையான இரங்கற்குறிப்பு
மற்றும் ஜோன் எப்.கென்னடி படுகொலை செய்யப்பட்டதன் 40ம் ஆண்டு நிறைவு தொடர்பாக நோர்த்தாலும்
பில்வான் ஒக்கென்னாலும் எழுதப்பட்ட கென்னடி ஜனாதிபதி பதவிக்காலம் பற்றிய ஒரு மதிப்பீட்டையும் கூட உள்ளடக்கி
இருக்கிறது.
அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி- புத்தக பிரதிகளுக்கு அமெரிக்காவில்
ஒரு படிக்கு 19.95
அமெரிக்க டாலர்கள் என்ற அளவில்
sales@mehring.com
முகவரியிலும், இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் ஒரு படிக்கு
ா8.99 என்ற
அளவில்
sales@mehringbooks.co.uk
ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் ஒரு படிக்கு 19.95
ஆஸ்திரேலிய டாலர்கள் என்ற அளவிலும்
mehring@ozemail.com.au
என்ற முகவரியிலும் அஞ்சல் மற்றும் இதர செலவுகளுக்கு (அமெரிக்காவிலும்
ஆஸ்திரேலியாவிலும் 5 டாலர்கள், பிரிட்டனில் 2 பவுண்டுகள் - சர்வதேச கட்டண வீதங்கள் மேலதிகமாக) மேஹ்ரிங்
நூலகம் மூலமாக அனுப்புமாறு வேண்டுகோள் விடலாம்.
Top of
page |