:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
:
பிரித்தானியா
BBC announces widespread job losses and
cuts
பரந்த அளவிலான வேலை இழப்புக்கள் மற்றும் வெட்டுக்களை பிபிசி அறிவிக்கிறது
By Robert Stevens
23 December 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (BBC)
இயக்குனர் தலைவரான மார்க் தோம்சன், டிசம்பர் 7 அன்று,
2900 வேலைகள் குறைப்பு உட்பட ஆண்டு ஒன்றுக்கு 320 மில்லியன் பவுன்ட்டுகள் செலவின குறைப்புக்களுக்கு வழிசெய்யும்
வகையில், ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார்.
இந்த அமைப்பு தன்னுடைய செயற்பாடுகள் வருங்காலம் பற்றிய ஆய்வுப் பரிசீலனைகளை
தொடர்ந்து மேற்கொண்டதை அடுத்து, தோம்சனுடைய அறிவிப்பு உலகெங்கிலும் வேலையில் உள்ள, செயற்கைக்
கோள் மூலம் ஒலிபரப்பும் இணைப்புடைய BBC
யின் 27,000 ஊழியர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
இதன் விளவு, மிகத் தொலை நோக்கில் விளவுகளை ஏற்படுத்தக்கூடிய
BBC -ஐ
பழுதுபார்க்கும் மாற்றங்களாகும். நிதி, சொத்துக்கள், வணிக விஷயங்கள், மனித இருப்புக்கள், மூலோபாயம்
மற்றும் பகிர்வு முறை கொள்கை, சட்டத் துறை மற்றும் விற்பனை, தொலைத்தொடர்பு முறை இவற்றில் உள்ள
ஊழியர்கள் அடங்கிய (BBC Professional
Services) பிபிசி சிறப்புப் பயிற்சிப் பணிகள் என்ற துறைதான்
பெரும் பாதிப்பிற்குட்படும் பிரிவாகும். இத்துறையில் 2,500 க்கும் மேற்பட்ட வேலைகள் குறைக்கப்பட்டு, 56
மில்லியன் பவுன்டுகள் அல்லது கிட்டத்தட்ட இதன் செலவினங்களில் நான்கில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுவிடும்.
BBC தன்னுடைய உள் அலுவதக
உற்பத்தித் திறனை 70 ல் இருந்து 60 சதவிகிதமாகக் குறைக்கும் நடவடிக்கையை அடுத்து, நிகழ்வுகள் மற்றும் படிப்பிக்கும்
துறையும் 400 வேலைகள் இழப்புக்களுக்கு உட்படுத்தப்படும். இந்தத் துறைதான் கணக்கிலடங்காத
Blue Planet,
Walking With Dinosaurs
போன்றவை உட்பட, விருதுகள் வெற்றி கொள்ளும் படைப்புக்கள்
வெளிவந்ததற்கு காரணமாகும். தனிப்பட்ட தயாரிப்பாளர்கள் படைப்புத் தொகுதியில் இன்னும் அதிகமாக 25
சதவிகிதம் உயர்த்தப்படுதலுக்கான உற்பத்தி ஒதுக்கீடுக்கு தோம்சன் எதிராக முடிவு எடுத்துள்ள நிலையில் மற்றொரு
25 சதவிகிதம் என்னும் எண்ணிக்கையில் BBC
க்காக தயாரிக்கப்படும் படைப்புக்களும் அலுவலகத் தயாரிப்பாளர்கள், தனிப்பட்ட முறையில் தயாரித்து அளிப்பவர்களுக்கு
இடையிலே "படைப்பாற்றலில் போட்டியைக் காட்டும் தன்மையுடயை பலகணிக்கு" ஒதுக்கப்பட்டுவிடும்.
BBC Scotland ஐ பொறுத்தவரையில்
24 மில்லியன் பவுன்டுகள் அல்லது 15 சதவிகிதக் குறைப்பை, அதன் ஆண்டு 160 மில்லியன் பவுன்கள் வரவுசெலவுத்
திட்டத்தில், அது எதிர் கொள்ளுகிறது. இது மூன்று ஆண்டுகளில் முறையாகக் குறைக்கப்பட்ட வகையில் செயல்படுத்தப்பட்டு
90 வேலை இழப்புக்களை ஏற்படுத்தும்.
அறிவிக்கப்பட்டுள்ள வேலைக் குறைப்புக்களை தவிர, இன்னும் சில வகையில்
அதிகப்படியாக உள்ளவை எனக் கருதப்படும் வேலைகளும்
BBC உடைய ஒவ்வொரு துறையிலும், அதன் சராசரி 15
சதவிகிதச் செலவினக் குறைப்பை அடுத்து, குறைக்கப்பட்டு விடும். அனைத்துத் துறைகளும் தாங்கள் திட்டமிட்டுள்ள
வேலைக்குறைப்புக்களை மார்ச் 2005க்குள் அறிவிக்க வேண்டும் என்றும் மொத்தத்தில் குறைக்கப்படும் வேலை
இழப்புக்கள் 6,000த்தில் இருந்து 10,000 வரை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த துறைகள் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைவதற்காக, அவற்றை
எய்தியே தீரவேண்டும். எடுத்துக்காட்டாக, உலகம் முழுவதும் பிபிசி அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறுவனம் தன்னுடைய
இலாபங்களை இரு மடங்காக அதிகரித்துக் காட்டவேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது.
தன்னுடைய செயற்பாடுகளில் ஒரு பகுதியை பிபிசி விற்றுக் கொண்டும் வருகிறது. பல
சானெல்களுடைய நிர்வாகம், செயல்முறை ஆகியவற்றிற்குப் பொறுப்பைக் கொண்டுள்ள
BBC ஒலிபரப்பு
என்ற பிரிவு விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது; BBC
Resources என்ற பிரிவிற்கு ஒரு பங்காளியைச் சேர்க்கும்
நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதையொட்டி கிட்டத்தட்ட 2,400 பேர்
BBC உடைய
ஊதியம் பெறுவோர் என்ற பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடுவர்.
இந்த மறு வடிவமைப்பு முறையின் ஒரு பகுதியாக, நிறுவனம் தன்னுடைய முக்கியமான
துறைகளை வேறிடங்களுக்கு மாற்றிக் கொள்ள இருக்கிறது, அடுத்த ஐந்தாண்டுகளில் 1,800 ஊழியர்கள்
மான்செஸ்டர் நகரத்திற்கு மாற்றப்படுவர் என்றும் தெரிகிறது. இவற்றுள்
BBC Sport, குழந்தைகளுக்கான தயாரிப்புக்கள் பிரிவு, புதிய
செய்தி ஊடகம் மற்றும் வானொலி 5 நேரடி ஒலிபரப்புப் பிரிவு ஆகியவை உள்ளடங்கும்.
இந்த வெட்டுக்கள் அல்லது தயாரிப்பில் உள்ள குறைப்புக்கள் அனைத்துமே, 2006ம்
ஆண்டில், மாட்சிமை தங்கிய அரசின் சிறப்புப் பட்டயம் மற்றும் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக
மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் ஆகும். மாட்சிமை தங்கிய அரசின் உரிமைப் பட்டயத்தின்படி
BBC உடைய
பங்கு, வடிவமைப்பு, நிதியம் ஆகியவை குறிப்பிடப்பட்டு அன்றாட அரசாங்கத்திற்குப் பொறுப்பிலிருப்பவர்கள் இசைவு
இதற்குத் தேவை என்பதுடன், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஒலி/ஒளிபரப்பு இதையொட்டித்தான் தொடரும் என்பது
குறிப்பிடத்தக்கது.
தோம்சனுடைய அறிவிப்பு, தனியார் மயமாக்குதலை ஆதரிக்கும் ஒரு
விரோதப்போக்கை கொண்டுள்ள தொழிற்கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கையின் விளைவு என்று பரந்த முறையில்
கருத்து நிலவுகிறது. இத்தகைய கருத்தை தோம்சன் மறுத்துள்ளார் என்றாலும், பரிசீலனைகளின் நோக்கமே,
அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப, BBCஐ
இன்னும் கூடுதலான வணிகத் தன்மை, போட்டித் தன்மை என்ற திசைகளில் செலுத்தவேண்டும் என்பது
தெளிவாகியுள்ளது.
தோம்சனுடைய கடந்த கால நிலைச் சான்றுகள்
கிரெக் டைக் ஜூன் மாதம் ராஜிநாமா செய்ததை அடுத்து, மே 2004 அன்று
தோம்சன் இயக்குனர் தலைவராக நியமன அறிவிப்பை பெற்றார். ஆயுதங்கள் ஆய்வாளரான டேவிட் கெல்லியின்
மரணத்தைப் பற்றிய ஹட்டன் பிரபு விசாரணையை அடுத்து டைக் ராஜிநாமா செய்ய நேரிட்டது. அந்த விசாரணை
BBC
உடைய செயற்பாடுகளைக் குறைகூறியதுடன், தொழிற்கட்சி அரசாங்கம் அதன் மீது கொண்டிருந்த தாக்குதல்களுக்கும்
ஆதரவைத் தெரிவித்திருந்தது.
இந்த ஆண்டு பெப்ரவரி 3ம் தேதி, ஹட்டன் விசாரணையின் முக்கித்துவம் பற்றி
வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில், உலக சோசலிச வலைத் தளம் பொது ஒலிபரப்பாளர் என்னும்
முறையில் இருக்கும் தன்மையின் பரந்த உட்குறிப்புக்களைச் சுட்டிக் காட்டியது.
"BBC க்கு எதிரான தீர்ப்பு இந்த
அமைப்பின் வருங்காலம் மற்றும் பரந்த முறையில் பிரிட்டனின் செய்தி ஊடகம் ஆகியவற்றிற்குப் பெரும்
உட்குறிப்புக்களைக் கொண்டுள்ளது. BBC
ஒரு பொது ஒலிபரப்பாளர் என்பதின் முழு வருங்காலமும் 2006ல் அதன் உரிமம் புதுப்பிக்கப்படுவதற்காக
விண்ணப்பம் செய்யும்போது பெரும் கேள்விக்கு உட்படுத்தப்படும். வணிகப் பிரிவுகள் சந்தையில் கூடுதலான பங்கைப்
பெறுவதற்கு அனுமதிக்கப்படலாம்; இந்த முறையில் அரசாங்கத்தின் பெரும் ஆர்வமிகு ஆதரவாளரான ரூப்பர்ட்
முர்டோக் பெரும் நன்மை பெறுபவர்களில் ஒருவர் என்று வரக்கூடும்."
டைக்கிற்குப் பதிலாக இவர் ஏன் வந்தார் என்பதற்கு தோம்சனுடைய முந்தைய
ஒலிபரப்புத்துறை அனுபவமே தக்க விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
BBC யில்
தயாரிப்புத்துறையில் பயிற்சியாளராக தன்னுடைய பணியை இவர் 1979ல் தொடங்கி, இத்துறையிலேயே 20
ஆண்டுகள் பணியாற்றினார். BBC
மூலம் உயர்ந்து பிபிசி 2 என்பதின் கட்டுப்பாட்டு அதிகாரியாக 1996ல் பொறுப்பேற்றார், நாடுகளும் பகுதிகளும்
என்ற பிரிவின் தலைமைப் பொறுப்பை 1996லும் தொலைக்காட்சி இயக்குனர் நிலையை 2000த்திலும் அடைந்தார்.
இந்த அமைப்பிலிருந்து நீங்கி வணிகச் சானெல் 4 ன் (பிரிட்டனில் உள்ள ஐந்து
தரைவழித் தொலைக்காட்சிச் சானெல்களில் ஒன்றாகும்) தலைமை நிர்வாகியானார். அந்தச் சானெலின் தலைமைப்
பொறுப்பில் இருந்தபோது ஏராளமான வேலையிழப்புக்கள், செலவுக் குறைப்புக்கள் இவற்றிற்கு மேற்பார்வையிட்டு
அதையொட்டி இலாபம் கூடுதலானதற்குக் காரணமாயிருந்தார். சானெல் 4ல் இவருடைய "படைப்பாற்றல்"
பெரும்புகழ்வாய்ந்த Film Four
திட்டத்திற்கு மூடுவிழா நடத்தியது ஆகும். சானெல் 4ல் இவர் இருந்தபோது,
"BBC
அமைப்பு பொதுப்பணம் என்னும் ஊற்றில் திளைத்துச் செயல்படுவதால்",
BBC க்கு
ஒதுக்கப்படும் பொது நிதி குறைக்கப்படவேண்டும் என்று கோரியவர்களுடன், இவருடைய குரலும் சேர்ந்து
எதிரொலித்தது.
BBC தலைம நிர்வாகியாகப்
பொறுப்பேற்றுக் கொண்டபின்னர், வெட்டுக்களைப் புகுத்துவதற்கும் "பயனற்றதை அகற்றுவதற்குமான" ஒரு
திட்டத்தை தாம்சன் மேற்கொண்டார். அவருடைய பரிசீலனை அறிக்கையில் இவர் தனக்கு முன்னால் பதவியில்
இருந்தவரின் காலத்தை, "உற்பத்தித்திறனையும், திறமையையும் நாம் அதிகம் வலியுறுத்தாத நான்காண்டு காலம்"
என்று வர்ணித்துள்ளார்.
ஒரு "BBC
அலுவலகத்திற்கு உள்ளிருப்பவர்" கூறியுள்ளார் என்று தெரிவித்து, "கிரெக் (டைக்கின்) கீழ் வேலைசெய்வோர்
எண்ணிக்கை 26,000த்தில் இருந்து 28,000 ஆக உயர்ந்தது; ஆனால் படைப்புக்களும் எண்ணிக்கையில் பெருகின.
ஆனால் உண்மை உலகில் ஒவ்வொரு நிறுவனமும் குறைந்த செலவில் கூடுதலாக உற்பத்தியைச் செய்யவேண்டும்;
அப்படித்தான் நீங்கள் உற்பத்தித்திறனை உயர்த்த வேண்டும்
BBC அத்தகைய கருத்தைக் கொண்டிருக்கவில்லை" என
மேற்கொளிட்டு நவம்பர் 28ல் Observer
குறிப்பிட்டுள்ளது.
ஆளும் வட்டங்களில் ஙிஙிசி க்கு எதிராக பெருகி வந்த எதிர்ப்பு
1926 ம் ஆண்டில் தேசிய ஒலிபரப்பாளர்
என்று நிறுவப்பட்ட காலத்தில் இருந்து, BBC
பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் அதிகாரபூர்வ குரலாக இங்கிலாந்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ஒலித்துக்
கொண்டு வருகிறது. இந்தப் பணியில் அதன் திறமை வெளிப்பாடு அரசியலில் நடுநிலைமை கொண்டுள்ளது போன்ற
தன்மையைக் காட்டிக் கொள்ளும் தன்மையை அது நம்பியிருந்தது; அதேநேரத்தில் இது பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின்
அடிப்படைக் கருத்துக்களின் சாரத்தைத்தான் வெளியிட்டுப் பரப்பி வந்திருந்தது.
ஆனால் அரசாங்கத்திற்கு வெளிப்படையான ஆர்வத்தைக்காட்டும் வகையில் செயல்படாமல்
இருந்த நிறுவனத்தின் தன்மையும், பிரிட்டனின் "தேசிய மயமாக்கப்பட்டிருந்த துறைகளில்" கடைசியாக எஞ்சியிருக்கும்
அமைப்பு என்ற தன்மையும் முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் எரிச்சலை இதன்பால் ஈர்த்தது; புதிதாக பிறந்தவர்களிடையே
இது ஒன்றும் நட்புறவை கொண்டிருக்கவில்லை. புதிய தொழிற்கட்சியின் தாட்சரிச தடையற்ற சந்தையை ஆதரிப்பவர்கள்
பிபிசி எவ்வாறு அதன் மக்கள்-விரோத நடவடிக்கைகளை கூர்ந்து வெளியிட்டது என்பதை பொறுத்துக் கொள்ள
முடியாமல்தான் இருந்தனர்.
இந்த நிறுனத்தை தன்னுடைய கட்டுப்பாட்டின்கீழ் இன்னும் நேரடியாகக் கொண்டுவரவேண்டும்
என்ற எண்ணத்தை பிளேயர் அரசாங்கம் தெளிவாக்கியிருந்தது; மற்றும் அனைத்திற்கும் மேலாக அதன் பெருவணிக
ஆதரவாளர்கள் கோரும் தனியார் ஊடகச் செயற்பாடுகளை ஊக்குவித்துப் பரப்பும் வகையை எளிதாக்கும் வகையில்
மர்டோக்கிற்கு முக்கியமாக ஆதரவு தரும் வகையில், கட்டுப்பாட்டுத் தளர்த்தல் அனைத்துப் பிரிவுகளிலும் வர
வேண்டும் என்பதையும் தெளிவாக்கியிருந்தது.
தோம்சன் வெளியிட்ட அறிவிப்பு வலதுசாரிச் செய்தி ஊடகத்தில் பரந்த வரவேற்பினைப்
பெற்றது; ஒரே துணைக் கோரிக்கை வெட்டுக்கள் இன்னும் அதிகம் செய்யப்படவில்லை என்ற பரிசீலனைக்
கருத்துத்தான்.
Daily Telegraph ல்
டிசம்பர் 8ம் தேதி வந்த கட்டுரை ஒன்றில் இன்னும் கூடுதலான குறைப்புக்களை தோம்சன் செய்திருக்க வேண்டும்
என்றும், "வணிக ஒலிபரப்பாளர்கள் பணியாற்றும் பகுதிகளில் இருந்து சிறிது சிறிதாக
BBC பின்வாங்கிவிட
வேண்டும் என்றும் ரேடியோ1 விற்கப்பட்டுவிடலாம் என்றும்
News 24 மூடப்பட்டுவிடலாம்
என்றும், பெரும் புகழை அதற்குத் தேடிக்கொடுத்துள்ள தரமான ஒலி/ஒளிபரப்பில் மட்டும் கவனம் செலுத்தினால்
போதுமானது" என்றும் கூறியிருக்கிறது.
Top of page |