World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSRUkraine power struggle: constitutional settlement favors opposition leader Yushchenko உக்ரைன் அதிகாரப் போராட்டம்: அரசியல் சட்ட ஒப்பந்தம் எதிர்க்கட்சி தலைவர் யுஷ்செங்கோவிற்கு சாதகம் By Peter Schwarz வலுவான சர்வதேச நிர்பந்தத்தின் கீழ் உக்ரைன் நாடாளுமன்றம் டிசம்பர் 8-ல் ஒரு புதிய தேர்தல் சட்டத்தையும், விக்டர் யுஷ்செங்கோ தலைமையிலான எதிர்க்கட்சி இயக்கத்தின் கோரிக்கைகளை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அரசியல் சட்டத்தில் ஒரு மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த நடவடிக்கை ஜனாபதி லியோனிட் குஷ்மாவால் உடனடியாக சட்டமாக கையெழுத்திடப்பட்டது இந்த உடன்படிக்கை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய (EU) ஆதரவு பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் யுஷ்செங்கோவிற்கும் தற்போது பிரதமராக இருக்கிற விக்டர் யானுகோவிச்சிற்கும் இடையில் ஒரு மறுதேர்தல் நடப்பதற்கு வகை செய்திருக்கிறது மற்றும் யானுகோவிச், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஆதரவு பெற்றவர். நவம்பர் 21-ல் நடைபெற்ற தொடக்க தேர்தலில் அரசாங்கத் தேர்தல் அதிகாரிகள் பதவிவிலகும் ஜனாதிபதி குஷ்மாவின் ஆதரவு பெற்ற வேட்பாளர் யானுகோவிச் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். ஆனால் எதிர்க்கட்சியும், அதன் மேற்கு நாடுகளின் ஆதரவாளர்களும், அரசாங்க முகாம் தேர்தலில் பரவலாக மோசடி செய்ததாக புகார்கூறினர் மற்றும் கீவில் வெகுஜன கண்டன பேரணிகளுக்கு ஏற்பாடு செய்தனர், இது உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய நிலையை உருவாக்கியது, அது முதலில் நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என்று தீர்ப்பளித்ததுடன் டிசம்பர் 26-ல் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டுமென்று கட்டளையிட்டது. புதன்கிழமையன்று இரண்டு முகாம்களுக்கிடையில் உருவான உடன்படிக்கையும், நாடாளுமன்றத்தில் நடந்தவாக்கெடுப்பும், மறுவாக்குப்பதிவிற்கு வழி செய்தது. மறுவாக்குப் பதிவில் யுஷ்செங்கோ வெற்றிபெறுவார் என்று மிகப்பெரும்பாலான பார்வையளர்கள் நம்புகின்றனர். ஐரோப்பிய ஒன்றிய தலையீட்டில் குஷ்மாவும் யுஷ்செங்கோவும் உருவாக்கிய சமரசத்திற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 450- பேரில் 402-பேர் வாக்களித்தனர். இந்த உடன்படிக்கை எதிர்க்கட்சி கோரியதைப்போல் மாற்று வாக்குச்சீட்டுக்களையும் வீட்டிலிருந்து கொண்டே வாக்குப்பதிவு செய்வதையும் சட்டபூர்வமாக தடைசெய்கிறது. குஷ்மா கோரியதைப்போல் இந்த மாதமே செயல்படத் தொடங்காமல் 2005 செப்டம்பரில் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் அரசியல் சட்டத்திருத்தம் செயல்படத்தொடங்கும். இதன் பொருள் என்னவென்றால் தேர்தலில் வெற்றுபெறுபவருக்கு ஒரு மந்திரிசபையை அமைப்பதற்கு 9- மாதங்கள் அவகாசம் கிடைக்கும் மற்றும் நாடாளுமன்றத்தின் தலையீடு இல்லாமல் அரசியல் மாற்றங்களை செய்ய முடியும். தற்போதுள்ள அரசாங்கம் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுமென்றும், மத்திய தேர்தல் கமிஷன் உறுப்பினர்கள் அனைவரும் மாற்றப்படவேண்டுமென்று எதிர்க்கட்சி விடுத்திருந்த கோரிக்கைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. என்றாலும், சென்ற செவ்வாயன்று ஜனாதிபதி குஷ்மா ஏற்கனவே பிரதமர் யானுகோவிச் ஒரு விடுமுறையில் செல்லவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். மற்றும் தேர்தல் கமிஷன் தலைவரான Serhiy Kivalov மற்றும் தேர்தல் கமிஷனில் இரண்டு உறுப்பினர்கள் யானுகோவிச்சிற்கு சாதகமாக செயல்பட்டவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் மாற்றப்படுவார்கள். இதன் பொருள் என்னவென்றால் தேர்தல் கமிஷனில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஒரு பெரும்பான்மையைப் பெறுகின்றனர். யுஷ்செங்கோ இந்த உடன்படிக்கையை பாராட்டினார். ''பதினேழு நாட்கள் அமைதியாக நடைபெற்ற மக்கள் எதிர்ப்பு நம்மை ஒரு இறுதி வெற்றியை பெறச்செய்திருக்கிறது. நாம் இப்போது ஒரு மாறுபட்ட நாட்டில் இருக்கிறோம். நாம் ஒரு ஐரோப்பிய நாடாக இறுதியாக உணர்வு பெற்றிருக்கிறோம்'' என்று கீவ்வில் திரண்டிருந்த தமது ஆதரவாளர்களிடையே குறிப்பிட்டார். இரத்தம் சிந்தவில்லை என்று பெருமைப்பட்டுக்கொண்டார், அரசாங்கக் கட்டிடங்களை முற்றுகையிட்டுள்ள ஆர்பாட்டக்காரர்கள் அதை கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அவரது எதிரியான யானுகோவிச் இந்த உடன்படிக்கை ''மெல்ல ஊர்ந்து கொண்டே வருகின்ற ஆட்சிக்கவிழ்ப்பு'' என்று கண்டித்தார். இந்த உடன்படிக்கையை எதிர்க்கும் வாக்குகள் அவரது முகாமிலிருந்து வரவில்லை, அவரது ஆதரவாளர்கள் அனைவரும் ஜனாதிபதி குஷ்மாவின் மாற்றங்களுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். மாறாக "எதிர்த்து'' வாக்களித்தவர்கள் இரண்டாவது மிக முக்கியமான முன்னணி எதிர்கட்சி தலைவரான Yulia Tymoshenko-வின் ஆதரவாளர்கள் ஆவர். குஷ்மா முகாம் நிபந்தனை எதுவுமில்லாமல் ஒட்டுமொத்தமாக சரணடைவதைத்தவிர வேறு எந்தத் திட்டத்தையும் Tymoshenko ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. யுஷ்செங்கோ ஏற்றுக்கொள்ளவியலாத சலுகைகளை தந்துவிட்டதாக Tymoshenko குற்றம் சாட்டினார். தேர்தல் சட்டத்தையும், அரசியல் சட்ட திருத்தத்தையும் அரசியல் சட்ட நீதிமன்றத்தின் முன் ஆட்சேபித்து வழக்கு தொடரப்போவதாக Tymoshenko அறிவித்தார். கீவில் நடைபெற்ற சம்பவங்கள் மாஸ்கோவிற்கும், வாஷிங்டனுக்குமிடையே கொந்தளிப்புக்களை உருவாக்கிவிட்டன. கீவில் ஒரு ரஷ்யாவிற்கு எதிராக மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவு ஆட்சி பதவிக்கு வருவது ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கை நலன்களுக்கு ஒரு பாரிய அளவு பேரிடியாக அமைந்துவிடும், ஏற்கனவே வாஷிங்டனின் ஆக்கிரமிப்புக்கொள்கைகளால் ரஷ்யாவின் வெளியுறவு கொள்கைகளுக்கு கடுமையான அடி விழுந்திருக்கிறது. செவ்வாய்கிழமையன்று பல்கேரியாவில் நடைபெற்ற ஐரோப்பாவின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் (OSCE) கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கொலின் பவலுக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் Sergei Lavrov-விற்கும் இடையில் சூடான வாக்குவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. OSCE நூற்றுக்கணக்கான தேர்தல் பார்வையாளர்களை உக்ரைனுக்கு அனுப்பி தேர்தல் கண்காணிப்பையே ''ஒரு அரசியல் கருவியாக'' ஆக்கிவிட்டது என்று Lavrov குற்றம்சாட்டினார். ''அங்கே நாம் கண்டது சர்வதேச சமுதாயம் ஜனநாயகத்தை ஆதரிக்க திரண்ட காட்சியைத்தான்'' என்று கூறி பவல் OSCE நடவடிக்கையை ஆதரித்தார்.''ரஷ்யாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற சம்வங்கள் மிகக்குறிப்பாக பத்திரிகை சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான'' சம்பவங்கள் குறித்து அவர் கவலை தெரிவித்தார். ஜோர்ஜியா மற்றும் மால்டோவாவிலிருந்து ரஷ்ய துருப்புக்களை விலக்கிக் கொள்ளவேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கைகளை அவர் வலியுறுத்தினார். பவலின் அறிக்கைகளின் உள்ளார்ந்த பொருள் என்னவென்றால், எதிர்காலத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ''ஜனநாயக இயக்கத்தின்'' இலக்காக புட்டின் ஆட்சி குறிவைக்கப்படலாம் என்பதுதான், மற்றும் தனது அரசியல் மற்றும் ராஜதந்திர தாக்குதல்கள் மூலம், ரஷ்ய கூட்டமைப்பின் எல்லைகளான முன்னாள் சோவியத் குடியரசுகள் உட்பட ரஷ்யாவின் பாரம்பரிய செல்வாக்கு அரங்கின் மீதான பிடியை பலவீனப்படுத்துகின்ற நோக்கம் வாஷிங்டனுடையதாகும். புட்டினை பொறுத்தவரை அண்மை நாட்களில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை திரும்பத்திரும்ப தாக்குதல் தொடுத்தார். திங்களன்று ஐரோப்பா ''மீண்டும் மேற்கு மற்றும் கிழக்கு மக்கள்'' என்று பிளவுபடுத்தபடுவார்கள் என்று எச்சரித்தார். உக்ரைனில் புட்டினுக்கு அதிக அக்கறையுள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் அமெரிக்கா மிகுந்த மூர்க்கத்தனமாக ஈடுபட்டு வருகிறது ரஷ்யாவை பொருளாதார அரசியல் மற்றும் இராணுவ அடிப்படையில் பெருமளவில் தனிமைப்படுத்துகின்ற அச்சுறுத்தலை அதிகரித்து வருகிறது. அமெரிக்கா முந்தைய சோவியத் குடியரசுகளான மத்திய ஆசியாவில் துருப்புக்களை நிறுத்தி வைத்துள்ளது மற்றும் காக்கஸஸில் தனது செல்வாக்கை குறிப்பாக ஜோர்ஜியாவில் உயர்த்தியுள்ளது, அங்கே ஒரு வருடத்திற்கு முன்னர் அமெரிக்க ஆதரவு ஆட்சிக்கு அதிகாரத்தை வழங்கியது. அதே சமயத்தில், பால்டிக் அரசுகள் அனைத்தும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகியுள்ளது. உக்ரைனை அமெரிக்க ஆதரவு ஆட்சி கையில் எடுத்துக்கொண்டால், முந்தைய சோவியத் ஒன்றியத்தில் மிகவும் முக்கியமான தொழிற்துறை பிராந்தியங்களின் வல்லமையை மட்டும் இழப்பதற்கு வழிவிடுவது மட்டுமல்லாமல், தனது கட்டுப்பாட்டின் மிகவும் முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு வழிகளையும் இழக்கும், ரஷ்யாவின் அடித்தள இடமான கருங்கடல் கப்பல்தளமான Sevastopol கூட கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். கருங்கடலிருந்து ரஷ்ய கப்பற்படை துண்டிக்கப்படுமானால், மத்தியதரைக்கடல் வழியும் துண்டிக்கப்படும். தற்போது கீவி
உம் மேற்கு நாட்டு முகாமிற்கு செல்லப்போவதாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
எனவே புட்டின் இனி ஒதுங்கி நின்று எதுவும் செய்யாமல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மாஸ்கோ,
உக்ரேனை இழந்துவிடுமானால் அதன் வல்லரசு அந்தஸ்திற்கான எல்லா நம்பிக்கையும் அடிபட்டுபோய்விடும். ஏற்கனவே
சோவியத் சாம்ராஜியத்தை சிதைத்துவிட்ட பிளவு சக்திகள் இன அடிப்படையிலும், மத அடிப்படையிலும் கலந்திருக்கும் ரஷ்ய
கூட்டாட்சியில் சிதறி ஆட்டம்போட தொடங்கிவிடும். கிரெம்ளினிலிருந்து அதிக சுதந்திரம் வேண்டுமென்று நீண்டகாலமாக
காத்துக்கிடக்கும், ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதிகளும்
Kalmucks, Tatars-கள்,
Baskris-கள் ஆகியோரும் உசுப்பிவிடப்பட்டுவிடுவர்'' என்று பத்திரிகை
எழுதியது. யுஷ்செங்கோவும் அவரது பங்காளியான Tymoshenko-ம் ஒரு பக்கமாகவும், மற்றும் குஷ்மா மற்றும் யானுகோவிச்சும் மறுபக்கமாகவும் அதே புதுப்பணக்கார செல்வந்தத்தட்டின் வேறுபட்ட இரண்டு குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்----அந்தத்தட்டினர் சோவியத் ஒன்றியம் சிதைந்தபின்னர் அந்த மக்களை சுரண்டி பணக்காரர்கள் ஆனவர்கள். இதில் பெரிய வேறுபாடு என்னவென்றால் முந்தையவர்கள் அமெரிக்கப்பாதுகாப்பில் தங்களது நலன்கள் சிறப்பாக பாதுகாக்கப்படும் என்று நம்புகின்றனர், அதே நேரத்தில் பிந்தையவர்கள் ரஷ்யாவை நோக்கி அதிகம் சாய்கிறார்கள். எதிர்க்கட்சி தலைமையில் ''ஜனநாயகவாதிகள்'' என்று அழைக்கப்படுபவர்களுக்கு உண்மையான ஜனநாயகத்தில் எந்தவிதமான அக்கறையும் இல்லை உண்மையான ஜனநாயகம் என்பது சமூக நீதி மற்றும் சமத்துவத்திலிருந்து பிரிக்க முடியாதது. உண்மையான ஜனநாயகம் வலதுசாரி ''சுதந்திர சந்தை'' பொருளாதார திட்டத்துடன் ஒருங்கிணைந்து செல்லமுடியாதது. குஷ்மா ஜனாதிபதியாக இருந்தபோது அவர்கள் எதிர்த்துவந்த அதே சர்வாதிகார அதிகாரங்களை யுஷ்செங்கோ எதிர்கால ஜனாதிபதி என்கின்ற முறையில் பெற்றாக வேண்டுமென்று ஏற்கெனவே அவர்கள் வலியுறுத்துவதிலிருந்து தெரிகிறது. |