:
ஆசியா
:
சீனா
South East Asian summit seals free trade
agreement with China
தென்கிழக்கு ஆசிய உச்சி மாநாடு சீனாவுடனான தடையற்ற வணிக உடன்பாட்டினை
ஏற்படுத்திக் கொண்டுள்ளது
By John Roberts
20 December 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
கடந்த மாதம் லாவோஸ் நாட்டின் நலைகரமான வியன்டைனில் நடைபெற்ற தென்
கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பின் (ஏசியான் ASEAN)
ஆண்டுக் கூட்டத்தில் சீனாவுடனான தடையற்ற வணிக ஒப்பந்தத்தில்
கையெழுத்திடுதல் முக்கிய பங்கினைக் கொண்டது. 1977-78 ஆசிய நிதி நெருக்கடிக்குப் பின் குறிப்பிடத்தக்கைவகையில்
இந்த அமைப்பின் 10 உறுப்பினர் நாடுகளும் வணிக உறவிற்கு உகந்த ஊக்கம் மேலும் கொடுக்கும் வகையில் இந்த
ஒப்பந்தம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உடன்படிக்கையின்படி, காப்பு வரி, காப்புவரியற்ற பல வணிகத்தடைகள் முறையாகக்
குறைக்கப்படும் என்றும் இதையொட்டி எழும் பூசல்களை கையாளுவதற்காக ஓர் நிறுவனம் ஏற்படுத்தப்படும் என்றும்
தெரிகிறது. ஏசியான் உறுப்பு நாடுகளில் பொருளாதர வகையில் முன்னேறியிருக்கும் இந்தோனேசியா, சிங்கப்பூர்,
மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் புருனே ஆகிய ஆறு நாடுகளும் சீனாவும் ஜனவரி 1ம் தேதி முதல்
சீனாவுடன் காப்புவரிகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்கும்; 2010ம் ஆண்டுக்குள், சீனா, 4,000 வகைப்
பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளை 5 சதவிகிதம் முதல் 0 சதவிகிதத்திற்குள் கொண்டுவரும் இலக்கையும், வியட்நாம்,
லாவோஸ், கம்போடியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளுடன் 2015க்குள் இந்த இலக்குகளை அடைய வேண்டும்
என்ற இலக்கையும் இந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது.
பலதரங்களில் உள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் மாறுபட்ட நலன்கள் ஏசியான்
நாடுகளிடையே இருப்பதால் விளைந்துள்ள கடினமான நிலையில், "முக்கியப் பொருட்கள்" சிலவற்றிற்கு இந்த அளவு
பேரவா இல்லாத திட்டம்தான் தீட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் உள்ள பொருட்களுக்கான காப்பு வரிகள் 2012
வரை 20 சதவிகிதத்திற்கும் கீழே குறைக்கப்பட மாட்டாது. இரும்பு, எஃகு, எரிவாயு இரசாயனப் பொருட்கள்
இத்தகைய "முக்கியப் பொருட்கள்" வகையில் இருப்பதால் ஒவ்வொரு நாடும் தனித்தனியே காப்பு வரி நிர்ணியிக்கும்
பொறுப்பை 400 விதமான பொருட்கள் மீது விதிக்கும் அனுமதியைப் பெற்றுள்ளது.
ஏசியான் நாடுகளின் ஆளும் செல்வந்தத்தட்டினரைப் பொறுத்தவரையில், தன்னுடைய
பூரிக்கும் பொருளாதாரத்தை கருத்திற்கொண்டு கூடுதலான இணைப்பைக் கொடுக்கும் சீனாவில் அளிப்பை ஏற்பதைத்
தவிர வேறு எந்த மாற்று நடவடிக்கையும் இயலாது. தென்கிழக்கு அண்டை நாடுகளின் இழப்பில் சீனா வெளிநாட்டு
முதலீட்டில் மிகப் பெரும் பங்கைக் கொண்டுள்ளது. 2001ம் ஆண்டு சீனா உலகில் கிடைக்கக் கூடிய வெளிநாட்டு முதலீட்டின்
மொத்த மதிப்பில் 9 சதவிகிதத்தைக் கொண்டது; இது ஏசியான் நாடுகளின் மிகக் குறைந்த 1.7 சதவிகிதத்தை
விட ஐந்து மடங்கு அதிகமாகும். கடந்த சதாப்தத்தில், சீனா தன்னுடைய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில்
உலகத் தொகுப்பில் ஐந்து மடங்கி அதிகமாக்கி 5.3 சதவிகிதம் என்ற தன்மையைக் கொண்டுள்ளது.
ஏசியான் நாடுகள் முதலீட்டு நிதிக்கான போட்டியில் சீனர்களிடம் தோற்றுவிற்றுவிட்ட
நிலையில், சீனாவின் பொருளாதார விரிவாக்கம் அதனுடைய தேவைகளைத் தோற்றுவித்துள்ளது. ஆண்டு வளர்ச்சி
விகிதம் 8ல் இருந்து 9 என்று எட்டியுள்ள நிலையில், சீனத்தொழில் துறை மூலப்பொருட்கள், விசை, மற்றும்
உற்பத்திசெய்யப்பட்ட பாகங்கள் ஆகியவற்றின் பெருகியுள்ள தேவைகளுக்காக தெற்கு ஆசிய நாடுகளைத் தனக்குக்
கிடைக்கும் பகுதிகளுள் ஒன்றாகக் காண முற்பட்டுள்ளது. 1995ல் இருந்து, சீன-ஏசியான் வணிகம் கிட்டத்தட்ட ஆண்டு
ஒன்றிற்கு 15 சதவிகிதம் உயர்ந்து வந்துள்ளது. 2004ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இதன் மொத்த
மதிப்பு 75.45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று பெருகி ஆண்டு முடிவதற்குள் 100 பில்லியன் டாலர்களை
எட்டி, 2003ல் இருந்த 78.2 பில்லியன் டாலர்களில் இருந்து 28 சதவிகிதம் அதிகமாக ஆகும் என்று
கருதப்படுகிறது.
சான்றாக, மலேசியா 1991ல் இருந்து 2002 வரையிலான காலத்தில் சீனாவிற்குத்
தன்னுடைய ஏற்றுமதிகளை ஏழு மடங்காவும், இறக்குமதிகளை ஆறு மடங்காகவும் பெருக்கியுள்ளது. மலேசியாவின்
ஏற்றுமதிகள் பெரும்பாலும், மின்னணு, மின்சார, இரசாயன, இயந்திர உற்பத்தி மற்றும் ஜவுளித் துணிகளோடு
நுகரும் எண்ணெய்கள், தானியங்கள் ஆகியவற்றையும் அடக்கியுள்ளன.
ஏசியான் வணிகம் சீனாவுடன் மிகவிரைவில் அமெரிக்காவுடனான கிட்டத்தட்ட 120
பில்லியன் டாலர்கள் வணிகத்தையும் விஞ்சியதாக மதிப்பிடப்படுகிறது, ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதன் வணிகம் 110
பில்லியன் டாலர்கள் ஆகும். சீனாவிற்கான ஏற்றுமதிகள், ஐரோப்பா, அமெரிக்கா இவற்றுடனான உள்ளதைப்
போன்றே மிகப் பெரும் அளவில் விளங்கி, 1997-98 நிதி நெருக்கடியை சந்திருந்த பெரிய ஏசியான் நாடுகளின்
புத்துயிர்ப்பிற்கு வகை செய்துள்ளன. 2003ஐ ஒட்டி, சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து
மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் உலகத்தின் உற்பத்தித்துறை ஏற்றுமதிகளில் 4.4 சதவிகிதம் கொண்டு 1994ல் இருந்த
நிலையை மீண்டும் அடைந்தது.
நிதியியல் பகுப்பாய்வாளர்கள், ஏசியான் நாடுகள் உயர்ந்த சந்தைகளில் சிறப்புக்
கவனம் செலுத்தி, சொகுசுக் கார்கள் போன்ற உயர் மதிப்புடைய பொருள்களிலும் கவனம் செலுத்தினால்தான்
சீனாவுடனான வணிக உறவுகள் விரிவடைய இயலும் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 3ம் தேதி நடந்த செய்தியாளருக்கான பேட்டி ஒன்றில், இந்தோனேசிய
வணிக அமைச்சர் மாரி இ. பங்கெஸ்டு, ஜவுளிகள், ஆடை உற்பத்தித் துறைகளில் அவருடைய நாடு சீனாவுடன்
குறைந்த விலைப் பொருட்களில் போட்டியிட முடியாது என்றும் கூடுதலான முதலீட்டை ஈர்த்தால்தான் அடையாளப் பெயர்
மற்றும் உயர்மதிப்புச் சேர்ந்துள்ள பொருட்கள் ஏற்றுமதித் துறையில் போட்டியிட முடியும் என்று தெரிவித்தார்.
ஆனால், போட்டி ஒரு புறம் இருக்க, இந்தோனேசியா பெரும் வளர்ச்சியில் உள்ள
சீனப் பொருளாதாரத்துடன் இணைந்து கொள்ளுதல் அவசியமாகும் என்று பங்கெஸ்டு தெளிவாக்கியுள்ளார். "கிழக்கு
ஆசிய ஒரு பகுதியின் உற்பத்தி மையம் என்ற நிலையை அடைவதற்கான அதிகரித்த போக்கின் தன்மையில் உள்ள
நன்மைகளை நாம் முழுமையாக ஏற்றுக் கொண்டு, அதில் சீனா மையப்பகுதியில் உறைந்துள்ளது என்பதையும்
கருத்திற்கொள்ளவேண்டும். தன்னுடைய மிகப்பெரிய ஏற்றுமதிகளினாலும், மிகப் பெரிய உள்நாட்டுச் சந்தையினாலும்
சீனா இந்த மையத்தானத்தை அடைந்துள்ளது. எனவே நாங்கள் அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய கருத்து இந்த
உற்பத்தி வலைப்பின்னலில் நாமும் பங்கு பெறவேண்டும் என்பதுதான்.
சீனாவின் துணைப் பிரதமர் வூ யி, சீன-ஏசியான் காட்சியகம் நான்னிங்கில்
நடைபெற்றபோது, தன்னுடைய நாட்டில் அணுகுமுறையைக் கோடிட்டுக் காட்டினார். பொருளாதாரம் கூடுதலாக
இணைக்கப்பட வேண்டும் என்றும் அதிக மதிப்பு சேர்ந்துள்ள இயந்திர, மின்னணுத் துறைகள் மற்றும் மரபுவழியிலான
பொருட்களின் வணிகம் ஆகியவையும் விரிவாக்கப்படவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். "சீனாவும், ஏசியான்
நாடுகளும் ஒன்று சேர்ந்துச் செயல்படவேண்டும். அவ்வாறு செய்தால்தான் நாம் வாய்ப்புக்களைப் பற்றியெடுத்துக்
கொள்ள முடியும் ...உலகந்தழுவிய முறையில் இருக்கும் மிகக் கடுமையான போட்டியையும் சமாளிக்க முடியும்"
என்று அவர் தெரிவித்தார்.
ஒரு சமநிலைக்கான செயற்பாடு
பெய்ஜிங், ஏசியான் நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகளுக்கு
வாஷிங்டன் உற்சாகம் காட்டாததுடன், இத்தகைய வணிக ஒப்பந்தம் இப்பகுதியில் உள்ள அமெரிக்க ஆதிக்கத்திற்கு
பெரும் அச்சுறுத்தல் என்றும் கருதியுள்ளது. அமெரிக்கப் பகுப்பாய்வாளர்களை மேற்கோள் காட்டி, வாஷிங்டன்
போஸ்ட், ஒரு கட்டுரையில், "இந்த ஒப்பந்தம் எவ்வாறு ஒரு கூடுதலான தைரியத்துடன் சீனா
உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளுகிறது என்றும் அவை எவ்வாறு ஆசியாவில் அமெரிக்கச் செல்வாக்கைக்
குறைத்து, ஒருவேளை இறுதியில் அமெரிக்காவை சவாலுக்கும் உட்படுத்தும் தன்மையையும் கொண்டுள்ளன என்பதையும்
காட்டுகின்றன." என்று எழுதியுள்ளது
அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவமுறை ஆட்சிக் கவிழ்ப்பு இந்தோனேசியாவில்
கொண்டுவரப்பட்டபோது, ஒரு அமெரிக்க சார்புடைய அமைப்பு பொதுவாக சீனாவிற்கு எதிராக
செயல்படவேண்டும் என்ற நோக்கத்தில் தோன்றியதே 1967ல் நிறுவப்பட்ட ஏசியான் அமைப்பு ஆகும். சோவியத்
ஒன்றியம் 1991ல் சரிவுற்றதை அடுத்தும், பனிப்போர் முடிந்ததை அடுத்தும், ஏசியான் வட்டாரப் பொருளாதார
ஒத்துழைப்பை ஊட்டி வளர்ப்பதில் குவிப்பைக் காட்டியுள்ளது. வியட்நாம், கம்போடியா, பர்மா மற்றும் லாவோஸ்
நாடுகள் 1990களில் இதில் சேர்ந்தன.
அமெரிக்க-சீன நெருக்கடிகள் தீவிரமடையக் கூடிய தன்மையை படைத்தவை என்பதை
உணர்ந்துள்ள ஏசியான் நாடுகள் மிகுந்த கவனத்துடன் சமநிலையில் செல்லும் பாதையில் எச்சரிக்கையுடன் நடந்து
வருகின்றன. சீனாவில் பெரும் பொருளாதார வாய்ப்புக்கள் பெருகியுள்ளன என்றாலும், ஏசியான் நாடுகள் ஏற்றுமதி
சந்தைகளுக்கு அமெரிக்காவை பெரிதும் இன்னும் நம்பி உள்ளன. 700 பில்லியன் அமெரிக்க டாலர்களை மொத்த
உள்நாட்டு உற்பத்தியாக, அதாவது கிட்டத்தட்ட சீனப் பொருளாதாரத்தில் பாதியை தங்களுடைய நிலையாகக்
கொண்டுள்ள ஏசியான் பொருளாதாரங்கள், 10 டிரில்லியன் டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக்
கொண்டுள்ள அமெரிக்கப் பொருளாதாரத்துடன் ஒப்பிட்டால் மிகச் சிறியதாகும்.
இந்தக் கண்ணோட்டத்தில், ஏசியான் தலைவர்கள் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி ஜோன்
ஹோவட் இந்த அமைப்பின் 1976ம் ஆண்டு நட்பு, நல்லுறைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததற்கு கொடுத்த
பதில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். நியூசிலாந்து பிரதம மந்திரி ஹெலன் கிளார்க்குடன் ஹோவர்டும் முதல்
தடவையாக ஏசியான் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார். ஏசியான் தலைவர்கள் ஒரு தடையற்ற வணிக
ஒப்பந்தத்திற்காகப் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்குத் தயாராக இருந்த நிலையில் ஆஸ்திரேலிய ஹோவர்ட்
ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததைக் கண்டு அதிர்ந்து போயின. சீனா, இந்தியா, ஜப்பான், பாக்கிஸ்தான்,
தென் கொரியா, ரஷ்யா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் அனைத்தும், வெறும் வர்ணப் பூச்சு உடையதும்,
சாரமற்றதுமான, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஆனால் இப்பகுதியில் பெயரளவிற்குக் கூட தலையீடு செய்வதை துறப்பதற்கு ஹோவர்ட்
மறுப்புத் தெரிவித்துவிட்டார். வாஷிங்டனுடைய தவிர்க்க இயலாத தாக்குதல்களுக்கு தன்னுடைய விளக்கத்தை அறிவித்து,
அவருடைய அரசாங்கம் அண்மை நாடுகளின் இசைவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பயங்கரவாதத் தாக்குதல் என்று
அது கருதுவதை எதிர்த்தாக்குதல் நடத்தும் என்ற அறிவிப்புக் கொடுத்து ஆசியாவில் பெரும் எதிர்ப்பை ஹோவர்ட்
ஏற்கனவே தேடிக் கொண்டுள்ளார். இந்த அடிப்படையில் ஹோவர்ட் அரசாங்கம் ஏற்கனவே ஆஸ்திரேலியப்
பொருளாதார, மூலோபாய நலன்களுக்காகத் தன்னுடைய கொள்கைகளைக் கொண்டுள்ளது; அந்த அடிப்படையில்தான்
1999ம் ஆண்டு கிழக்கு திமோரில் இராணுவத் தலையீடு ஆஸ்திரேலியத் தலைமையில் நடந்தது; 2002 ல்
சாலோமன் தீவுகளில் நடைபெற்றது; மற்றும் பல சிறிய பசிபிக் தீவுநாடுகளையும் மிரட்டும் வேலை நடந்து
கொண்டிருக்கிறது.
கடந்த காலத்தில் ஏசியான் பிரமுகர்களான மலேசியயப் பிரதம மந்திரி மகாதீர்
மொகம்மது போன்றவர்கள் தேசிய இறைமைக்கு ஹோவர்ட் காட்டும் மிரட்டும் வகையிலான அச்சுறுத்தல்களுக்கு கடும்
கண்டனம் கொடுப்பதற்கு தயங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் இன்றுள்ள சர்வதேச அரசியல் சூழ்நிலையில்,
ஹோவர்ட் வாஷிங்டன் ஆதரவுடன் தெளிவாகவே செயல்படும்பொழுது தென்கிழக்கு ஆசியத் தலைவர்கள் கான்பெர்ராவிற்கு
அறைகூவல் விடுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். ஹோவர்ட் தன்னுடைய அரசாங்கம் அப்பகுதியில் நேரடியாக தலையிடுவதற்கு
உரிமை பெற்றுள்ளது என்று வலியுறுத்தியுள்ளார்: அதைப் பற்றியப் பொதுக் குறைகூறல்களும் இல்லை; இத்தகைய
விளைவு ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி அலெக்சாந்தர் டெளனரால் ஆஸ்திரேலியத் தூதரக முறைக்கு கிடைத்த ஒரு
வெற்றி என்று போற்றப்பட்டுள்ளது.
ஏசியான் உடன் சீனாவின் நெருக்கமான தொர்பு அழுத்தங்களை உயர்த்தக் கூடும்.
2006ம் ஆண்டு இந்த அமைப்பிற்கு தலைமைதாங்கும் நேரம் வரும்போது அவ்வாறு செய்யக் கூடாது என்று அமெரிக்கா
ஏற்கனவே தன்னுடைய எதிர்ப்பைக் குறித்துள்ளது. தனக்கு கூடுதலான பரிவுணர்வுடைய அரசாங்கம் வரவேண்டும் என்பதற்காகத்
தற்பொழுது பர்மாவிற்கு எதிராகப் பொருளாதார தடைகளைக் கொண்டுள்ள புஷ் நிர்வாகம், பர்மாவிற்குத்
தலைமைப் பொறுப்பு கொடுக்கப்பட்டால், ஏசியான் அமைப்பையே தான் புறக்கணிக்கக் கூடும் என்ற
அச்சுறுத்தலையும் விடுத்துள்ளது. இதற்கு மாறாக, சீனாவோ பர்மாவுடன் மிக நெருக்கமான உறவுகளைக்
கொண்டுள்ளது.
Top of page |