World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Pentagon report exposes lies of Bush administration

"Muslims do not ‘hate our freedoms'...they hate our policies"

புஷ் நிர்வாகத்தின் பொய்களை அம்பலப்படுத்தும் பென்டகன் அறிக்கை

''நமது சுதந்திரங்களை முஸ்லீம்கள் வெறுக்கவில்லை ...அவர்கள் நமது கொள்கைகளை வெறுக்கிறார்கள்''

By Joseph Kay and Barry Grey
10 December 2004

Back to screen version

மூலோபாய தகவல் தொடர்பு சம்மந்தப்பட்ட பாதுகாப்பு விஞ்ஞான வாரியத்தின் பணிக்குழு (Defense Science Board's Task Force) சென்ற மாதம் வெளியிட்ட ஒரு அறிக்கை ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு மத்தியகிழக்கில் நிலவுகின்ற மகத்தான எதிர்ப்பையும் மற்றும் பொதுவாக அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்கு நிலவுகின்ற எதிர்ப்பையும் வெளிப்படையாக சித்தரித்துக் காட்டியிருக்கிறது. அமெரிக்க பாதுகாப்புத்துறையின் ஓர் அங்கமாகவுள்ள ஒரு ஆலோசனைக்குழு பிரசுரித்துள்ள அந்த அறிக்கை மிகப்பெரும்பாலான அரபு மற்றும் முஸ்லீம் மக்கள் அமெரிக்காவை ஜனநாயகம் அல்லது விடுதலைசெய்யும் ஒரு சக்தி என்று கருதவில்லை, ஆனால் மாறாக அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மைக்கு பிரதான ஆதாரமாக கருதுகின்றனர் என்பதை ஒப்புக் கொள்கின்றது.

புஷ் நிர்வாகம் திரும்பத்திரும்ப ''சுதந்திரத்திற்கான ஒரு போர்'' பற்றி பேசி வருகிறது மற்றும் சென்ற செவ்வாய் கிழமைதான் ஜனாதிபதி புஷ் ஈராக்கிய மக்கள் அமெரிக்காவை ஆதரிப்பார்கள் ஏனென்றால் ''சுதந்திரமான மக்கள் எப்போதுமே தங்களை கொத்தடிமைகளாக ஆக்கிக்கொள்ள விரும்பமாட்டார்கள்'' என்று அறிவித்தார். ஆனால் ஈராக்கிய வெகுஜனங்கள், முஸ்லீம் உலகின் இதர வெகுஜனங்களைப் போல் தாங்கள் அடிமைப்படுத்தப்பட்டதற்கு பிரதான காரணம் வாஷிங்டன் என்றே பார்க்கின்றனர் புஷ்ஷின் பாதுகாப்புத்துறை செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் துணை ஜனாதிபதி டிக் செனி மற்றும் வாஷிங்டனிலுள்ள போர் வெறியர் குழுவிற்கு என்று நன்றாகவேத் தெரியும்.

இதுதான் நிச்சயமாக அவர்களது சொந்த அறிக்கை, பாதுகாப்பு விஞ்ஞான வாரியம் (DSB) அவர்களுக்கு சொல்வதாகும். அந்த அறிக்கை உறையில் பென்டகன் முத்திரையோடு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க பாதுகாப்புத்துறை வலைத் தளம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டது.

முஸ்லீம் மற்றும் அரபுநாடுகளை சேர்ந்த மிகப்பெரும்பாலான மக்கள் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதை எதிர்த்து நிற்கின்றனர். மற்றும் இந்த எதிர்ப்பு புஷ்ஷும் மற்றும் அமெரிக்க ஊடகங்களும் வழக்கமாக வலியுறுத்திவருவதைப் போல் ஜனநாயகத்திற்கு எதிர்ப்பின் ஒரு வழிபாடு அல்ல ஆனால் முற்றிலும் எதிரானது என்று அந்த அறிக்கை வெளிப்படையாக தெரிவிக்கிறது. அரபு மற்றும் முஸ்லீம் மக்கள் ''நமது சுதந்திரங்களை வெறுக்கவில்லை, ஆனால் மாறாக நமது கொள்கைகளை வெறுக்கிறார்கள்'' என்று அந்த அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

மூலோபாய தகவல் தொடர்பு தொடர்பான பாதுகாப்பு விஞ்ஞான வாரிய பணிக்குழு பிரதானமாக பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளை கொண்டது. 2004 கோடைகால ஆய்வை பாதுகாப்பு விஞ்ஞான வாரியம் நடத்தியதன் ஓர் அங்கமாக இந்த அறிக்கை வந்திருக்கிறது. மோதல்களிலிருந்து மற்றும் மோதல்களுக்கு மாற்றம் தொடர்பாக இந்த ஆய்வுகுழு அறிக்கைக்கு பாதுகாப்புத்துறை துணை செயலர் போல் வொல்போவிச் ஏற்பாடு செய்தார். இந்தப்படையை உருவாக்குவது தொடர்பான தனது கடிதத்தில் வொல்போவிச் அறிவித்திருந்தார்: ''ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நமது இராணுவ நடவடிக்கைகள் பயங்கரவாதத்தின் மீதான பூகோள போரில் கடைசி நடவடிக்கைகளாக இருந்துவிடப்போவதில்லை'' எதிர்கால வெளிநாட்டு அமெரிக்க இராணுவ தலையீடுகளை மேற்கொள்ளும்போது எழுகின்ற மிக முக்கியமான கேள்விகள் பலவற்றிற்கு விடைதரும் நோக்கில் அந்த கோடைக்கால ஆய்வு நடத்தப்பட்டது.

அது செப்டம்பர் 23 அளவில் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டாலும், நவம்பர் கடைசிவரை அந்த அறிக்கை வெளியிடவில்லை, அதாவது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்கள் முடியும் வரை அது வெளியிடப்பட்ட பின்னர். அதை பெரும்பாலும் அமெரிக்க ஊடகங்களும் மற்றும் அரசியல் ஸ்தாபனங்கள் முழுவதும் புறக்கணித்தன ( "US media ignores damning Pentagon report").- பார்க்க) மூலோபாய தகவல் தொடர்பு பணிக்குழு நம்பகத்தன்மையில் ஒரு நெருக்கடி தோன்றியிருப்பதால் அமெரிக்க அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் நலன்களுக்கு கடுமையான இடையூறுகள் தோன்றியிருப்பதாக முடிவிற்கு வந்திருக்கிறது. அமெரிக்க அரசாங்கம் உலகின் மக்களில் மிகப்பெரும்பாலோரால் பரவலாக வெறுத்து ஒதுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது, குறிப்பாக மத்திய கிழக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க அரசாங்கம் சொல்வதை நம்பவில்லை, மற்றும் அதன் நடவடிக்கைகள் பொதுவாக உயர்ந்த சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட தத்துவங்களால் உந்தப்பட்டு நடைபெறவில்லை, ஆனால் கொச்சையான தேசிய நலன்களால் நடைபெறுகிறது என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த விரோதபோக்கை ஈராக் போர் தீவிரப்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கை குறிப்பிடுவது அமெரிக்க அரசாங்கத்திற்கு மிகத்தீவிரமான எதிர்ப்பில் சில ''எகிப்து, சவுதி அரேபியா, பாக்கிஸ்தான், ஜோர்டான் மற்றும் வளைகுடா நாடுகளின் கொடுங்கோண்மைகளால்'' ஆட்சி செய்யப்படுகின்ற மக்களிடமிருந்து வருகிறது. அந்த அறிக்கை மேலும் தொடர்கிறது ''அமெரிக்கா தன்னை மூலோபாய அடிப்படையில் அருவருக்கத்தக்க நிலையில் ஆட்படுத்திக்கொண்டிருக்கிறது----மற்றும் ஆபத்தான ஒரு நிலைக்கும் சென்று கொண்டிருக்கிறது----- அந்த ஆபத்தான நிலவரம் என்னவென்றால் நீண்ட நெடுங்காலமாக இந்த ஏதேச்சதிகார ஆட்சிகளுக்கு கூட்டணி பங்காளியாகவும் உந்து சக்தியாகவும் செயல்படுகிறது. அமெரிக்கா இல்லாமல் இந்த ஆட்சிகள் வாழ முடியாது.

''முஸ்லீம் சமுதாயங்களிடையே அமெரிக்காவில் நிலவும் நல்லெண்ண உணர்வுகள் அடிப்படையில் அமெரிக்காவினால் தாங்கள் விடுக்கப்பட வேண்டும் என்று ஏக்கமில்லை----ஆனால் அவர்கள் மிகக்கொடூரமான கொடுங்கோண்மைகள் என்று கருதுகின்ற ஆட்சிகளை அமெரிக்கா மிக உறுதியாக வளர்த்து தாங்கி நிற்பதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென்றே விரும்புகிறார்கள்''

அதாவது அமெரிக்காவினால் விடுவிக்கப்படவேண்டும் என்று ஒரு விருப்பத்திற்கு பதிலாக அமெரிக்காவிடமிருந்தும், அது ஆதரித்துக்கொண்டிருக்கும், ஏதேச்சாதிகார ஆட்சிகளிடமிருந்தும் விடுவிக்கப்படவேண்டும் என்றே ஆவல் கொண்டிருக்கின்றனர்.

இந்த பிராந்தியத்தில் சர்வாதிகாரங்களுக்கு அமெரிக்கா ஆதரவு தருவதுடன் அந்த அறிக்கையை உருவாக்கியவர்கள் வாஷிங்டன் மீது பரவலான வெறுப்பு நிலவுவதற்கான காரணங்களையும் தந்திருக்கின்றனர். அவர்கள் எழுதியிருப்பதாவது: ''பாலஸ்தீன மக்களது உரிமைகளுக்கு எதிராக மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒரு தலைப்பட்சமான ஆதரவு தருவதற்கு மிகப்பெரும்பாலான மக்கள் எதிர்ப்புக் குரல்களை கொடுக்கின்றனர்.... அமெரிக்காவின் பகிரங்கமான இராஜதந்திர துறை இஸ்லாமிய சமூகங்களுக்கு ஜனநாயகத்தை கொண்டுவருவது பற்றி பேசும்போது அந்த பேச்சு சுயநல நோக்கில் நடத்தப்படும் அகந்தை என்று கருதப்படுகிறது''

அந்த அறிக்கை மேலும் கூறுவதாவது: ''முஸ்லீம்கள், ஆப்கானிஸ்தானிலும், மற்றும் ஈராக்கிலும் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பு அந்நாடுகளில் ஜனநாயகத்திற்கு இட்டுச்செல்லவில்லை, ஆனால் மேலும் குழப்பமும் துன்பமும்தான் ஏற்படுகிறது என்று கருதுகின்றனர். மாறாக அமெரிக்க நடவடிக்கைகள் உள்நோக்கத்தோடு ஊக்குவிக்கப்பட்டு செயல்படுவதாகக் கருதுகின்றனர் மற்றும் அமெரிக்காவின் தேசிய நலனுக்காக உண்மையான முஸ்லீம் சுயநிர்ணய உரிமையை தத்தம் செய்வதற்காக திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கருதுகின்றனர்''
அந்த அறிக்கை ஒரு Zogby என்னும் கருத்துக்கணிப்பை சுட்டிக்காட்டியுள்ளது அரபு நாடுகளில் மிகப்பெரும்பாலான மக்கள் அமெரிக்காவின் கொள்கையை எதிர்க்கின்றனர் என்று அந்த கருத்துக் கணிப்புகாட்டுகிறது. 2004- ஜூனில், எகிப்து மக்களில் 2 சதவீதம்பேர் மட்டுமே அமெரிக்காவிற்கு சாதகமான ஒரு கருத்தைக் கொண்டிருக்கின்றனர். 2002 ஏப்ரலோடு ஒப்பிடும்போது 15 சதவீதமாக இருந்தது. சவுதி அரேபியாவில் தற்போது 4 சதவீதமாக உள்ளது, 2002இல் இது 12 சதவீதமாக இருந்தது. ஜோர்டானில் 34 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது, மொராகோவில் 38 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.

Zogby கருத்துக்கணிப்பில் நடத்தப்பட்ட நாடுகளிளெல்லாம் ஈராக் போருக்கான ஆதரவு இல்லை என்றே கூறலாம். மொராகோவில் 1சதவீதம், சவுதி அரேபியா 1 சதவீதம், ஜோர்டானில் 2 சதவீதம், லெபனானில் 4 சதவீதம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் 4 சதவீதமாகவுள்ளது.

அமெரிக்காவிற்கு நெருக்கமான நட்புநாடுகளாக உள்ள நாடுகளிளெல்லாம் செயல்படுகின்ற அரசாங்கங்களுக்கு கீழேயுள்ள மக்களிடையே அமெரிக்க கொள்கைகளுக்கு, நிலவுகின்ற பாரிய எதிர்ப்பு, பொது மக்களுக்கும் அந்த நாடுகளை ஆண்டுகொண்டுள்ள சிறிய செல்வந்தத்தட்டினருக்குமிடையே நிலவுகின்ற பாரிய சமூக பிளவை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. இந்த அரசாங்கங்கள் அமெரிக்க அரசை ஆதரிப்பதற்கு பெரும்பாலான அடிப்படை வாஷிங்டன் அந்த அரசாங்கங்களை அதன் சொந்த தொழிலாளவர்க்கங்களிடமிருந்து காப்பாற்றுவதுதான்.

அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் இடைவிடாது வெளியிட்டு வருகின்ற பிரச்சாரத்தை ஏற்றுக்கொள்வதென்றால் மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் வாழ்கின்ற நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் அனைத்தையும் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர் என்ற முடிவிற்கே வந்தாக வேண்டும். எப்படியோ ஒரு வகையில் ஈராக்போருக்கு மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும் ஒட்டுமொத்தமாக தங்களது ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளுக்கு எதிராக இருப்பதாக ஒரு தவறான கருத்தை உருவாக்கிக் கொண்டுவிட்டனர்.

இதில் உண்மை என்னவென்றால் அமெரிக்கா கொள்கையினால் நேரடியாக மிகப்பெருமளவில் பாதிக்கப்படுகின்ற இந்த மக்கள்- தவறாக கருதிவிடவில்லை, மாறாக அமெரிக்க அரசாங்கம், ஜனநாயகக்கட்சி மற்றும் பெரும்பாலான அறிவுஜீவிகளின் எதிர்பின்மை மற்றும் ஊடகங்கள் தெரிந்தே திட்டமிட்டு அமெரிக்க மக்களுக்கும் உலகிற்கும் பொய் சொல்லிக் கொண்டிருப்பது, மற்றும் இராணுவவாத கொள்கை சூறையாடல் மற்றும் அதற்கு அடிப்படையான ஏகாதிபத்திய நோக்கங்களை மறைப்பது ஆகியவை அடிப்படையாக அமைந்திருப்பதால் இந்தக் கருத்துக்கள் உருவாகின்றன.

அதன் போக்கில் விஞ்ஞான வாரிய பணிக்குழு அறிக்கை ஒன்றை ஒப்புக்கொண்டிருக்கிறது. ''பயங்கரவாதத்தின் மீது போர்'' என்று கூறப்படுவது, பொதுமக்களது கருத்தை தவறான அடிப்படையில் உருவாக்குவதற்காகவும் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு ஆதரவை திரட்டுவதற்காகவும் 9/11 க்கு பின்னர் உருவாக்கப்பட்ட ஒரு தத்துவார்த்த -அரசியல் திட்டம் ஆகும்.

அந்த அறிக்கை செப்டம்பர் 11 தாக்குதல்கள் ''தேசிய பாதுகாப்பு தொடர்பாக ஒரு புதிய சிந்தனைவழியை உருவாக்கியிருக்கிற ஒரு உந்துசக்தி'' என்பதுபற்றி பேசுகிறது. அந்த அறிக்கை தொடர்கிறது. ''பனிப்போருக்கு பதிலாக பயங்கரவாதத்தின் மீதான பூகோளப்போர் இடம்பெற்றிருக்கிறது. தேசிய பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு விளக்கம், அரசாங்கங்கள் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயங்கரவாதக் கட்டுக்கோப்பை தகவல் தொடர்பு மற்றும் மதிப்பீடு மற்றும் அடையாளப்படுத்தும் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்களுக்கு அது நெருக்கடியான சம்பவங்களை தொடர்புபடுத்துவதற்கும், முன்னுரிமைகளை அடையாளப்படுத்துவதற்கும், நண்பர்கள், எதிரிகள், பாதிக்கப்பட்டோர் ஆகியோரை அடையாளப்படுத்தி பழிபோடுவதற்கும் ஒரு எளிய ஒன்றுபட்ட தகவலை உருவாக்குவதற்கும் பயன்படுத்துகிறது. பல்வேறு வகைப்பட்ட தேசிய பாதுகாப்பு செய்திகளுக்கும், கதைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் செய்திகளை பயன்படுத்திக்கொள்வோருக்கும், பயங்கரவாதி கட்டுக்கோப்பு பயன்படுகிறது....... இந்தக் கட்டுக்கோப்பு சிக்கலான சம்பவங்களை மிக எளிதாக தகவல் அறிவிக்க உதவுகிறது.

விஞ்ஞான வாரிய பணிக்குழு அறிக்கையிலிருந்து கிடைக்கின்ற ஒரு தெளிவான முடிவு என்னவென்றால் அமெரிக்காவிற்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்கள் அச்சுறுத்தலை குறைப்பதற்கு பதிலாக அமெரிக்க கொள்கைக்கு நிலவுகின்ற மகத்தான எதிர்ப்பு இந்த ஆபத்தை அதிகரித்திருக்கிறது. ஆப்கனிஸ்தான் மீதும் ஈராக் மீதும் நடத்தப்பட்ட படையெடுப்புக்கள், இந்த பிராந்திய முழுவதிலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அந்தஸ்தை உயர்த்தியிருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ''முஸ்லீம் உலகில் அமெரிக்காவின் நேரடி தலையீடு ஒரு முரண்பாடான போக்கை உருவாக்கி தீவிர இஸ்லாமியவாதிகளது அந்தஸ்தை உயர்த்தி அவர்களுக்கு ஆதரவையும் பெருக்கியுள்ளது. அதே நேரத்தில் சில அரபு சமூகங்களின் அமெரிக்காவிற்கான ஆதரவை மிகவும் குறைத்திருக்கிறது''

இது அரசாங்கமே தன்வாயிலிருந்து உண்மையை ஒப்புக்கொள்வதாகும், 2001 செப்டம்பர் 11ல் நடைபெற்ற தாக்குதலுக்குப்பின்னர் உலக சோசலிச வலைத் தளம் உடனடியாக வெளியிட்ட அறிக்கை பின்விளைவை உறுதிபடுத்துவதாக அமைந்திருக்கிறது. 2001 செப்டம்பர் 12ல் பிரசுரிக்கப்பட்ட ஒரு அறிக்கையில் WSWS எழுதியதாவது: ''ஆளும் செல்வந்தத்தட்டினரின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களால் உந்தப்பட்டு அமெரிக்கா கடைபிடித்துவந்த கொள்கைகளினால் உருவான விளைவுகள்தான் செப்டம்பர் 11 செவ்வாய்கிழமையன்று நம்முன் தோன்றிய நினைத்துபார்க்கமுடியாத சம்பவத்திற்கான அடிப்படையை அமைத்தது. இப்போது புஷ் நிர்வாகம் உத்தேசித்துவரும் நடவடிக்கைகள்- ஜனாதிபதி கோடிட்டுக்காட்டியுள்ள அச்சுறுத்தலான, பயகங்கரவாதிகளது நடவடிக்கைகளுக்கு அவர்களுக்கு தஞ்சம் கொடுப்போருக்குமிடையே எந்தவிதமான வேறுபாடும் கருதாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சுறுத்தல் பேரழிவை மேலும் அதிகரிக்கவே செய்யும் ''( See: "The political roots of the terror attack on New York and Washington")

ஈராக் மீது படையெடுப்பிற்கு முன்னர் WSWS குறிப்பிட்டிருந்தது: ''புஷ் நிர்வாகம் கிளப்பி விட்டிருக்கிற நடவடிக்கை மிகத்தீவிரமான கொந்தளிப்பு தாக்கத்தை ஏற்படுத்தும், மத்திய கிழக்கு மட்டுமல்ல ஆனால் பூகோளத்தின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கும் இந்தப்போர் மேலும் சர்வதேச மக்களின் உணர்வை கொந்தளிக்கச்செய்யும் அதன் விளைவாக அமெரிக்க படையினருக்கு எதிராக மட்டுமல்ல அமெரிக்க சிவிலியன்களுக்கு எதிராகவும் உள்நாட்டிலும், மற்றும் வெளிநாடுகளிலும், பலாத்கார எதிர்தாக்குதல்கள் நடப்பதை தவிர்க்க முடியாததாக ஆக்கிவிடும்'' (See: "On the eve of the war against Iraq: the political challenges of 2003")

விஞ்ஞான வாரிய பணிக்குழுவின் பரிந்துரைகள் தனது சொந்த கண்டுபிடிப்புக்களிலேயே கோடிட்டுக்காட்டியுள்ள அமெரிக்க வெளியுறவுக்கொள்கை நெருக்கடியின் பரிணாமங்களை சமாளிப்பதற்கு போதுமான அளவிற்கு இல்லாமல் மிகச்சொற்ப பரிந்துரைகளாகவே அமைந்திருக்கின்றன. என்றாலும் இது தவிர்க்க முடியாதது ஏனென்றால் அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையின் ஒரு கருவியே அந்த வாரியமாகும்.

''பொது இராஜதந்திர கொள்கைகள் பொது விவகாரங்கள் (PSYOP) என்றழைக்கப்படுகிற உளவியல் நடவடிக்கைகள் பகிரங்க இராணவத் தகவல் நடவடிக்கைகள் ஆகியவற்றை'' ஒருங்கிணைப்பதற்கு பல்வேறுவகைப்பட்ட குழுக்களையும் அரசாங்கப் பதவிகளையும் மற்றும் ஆலோசனை வாரியங்களையும், உருவாக்குமாறு பணிக்குழு அறிக்கை ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறியுள்ளது. அதாவது வாரியம் அதிகபயனுள்ள நிரந்தர பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.

இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்காவிற்குள் பொதுமக்களிடையே ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடுமே தவிர மத்திய கிழக்கில் மற்றும் குறிப்பாக ஈராக்கில் வளர்ந்துவருகிற எதிர்ப்பை தடுத்து நிறுத்துவதற்கு நிச்சயமாக எதையும் செய்துவிட முடியாது அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஈராக்கியர் காட்டிவரும் எதிர்ப்பு ஒரு தவறான கண்ணோட்டத்தின் விளைவு அல்ல, அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியம் தகுந்த விளக்கம் தருவதற்கு தவறிவிட்டதால் ஏற்பட்ட விளைவுமல்ல.

அமெரிக்க அரசாங்கம் தன்னை மிகத்தெளிவாகவே ஈராக் மக்களுக்கு விளக்கம் தந்திருக்கிறது: குண்டுவீசி தகர்க்கப்பட்ட நகரங்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட சிவிலியன்கள் போலீஸ்-அரசு முறைகளை பயன்படுத்துகின்ற ஒரு பொம்மை அரசாங்கம் மற்றும் பல்லூஜா போன்ற நகரங்களை கைதிகள் முகாம்களாக மாற்றியிருப்பது போன்ற வடிவங்களில் தெளிவாகவே அமெரிக்கா தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறது. ஒரு காலனி ஆதிக்கபாணி ஆக்கிரமிப்புப் போர் தவிர்க்க முடியாத அளவிற்கு ஒருதலைபட்சமாக பெருமளவிற்கு பலாத்காரத்தையும் அடக்குமுறையையும் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாததாக ஆக்கிவிடும்.

விஞ்ஞான வாரிய பணிக்குழு அறிக்கைக்கு வெள்ளை மாளிகை தந்துள்ள பதில் குறிப்பாக குறிப்பிடத்தக்கது. அந்தப்பணிக்குழு விவரித்துள்ள வெளியுறவுக்கொள்கை தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளவர்களில் ஒருவரான பாதுகாப்புத்துறை செயலர் ரம்ஸ் பீல்ட்டே புஷ் இரண்டாவது தடவையாக பாதுகாப்பு அமைச்சராக நீடித்துள்ளார்.

பாதுகாப்பு விஞ்ஞான வாரியத்தின் மூலோபாய தகவல் தொடர்பு பணிக்குழுவின் முழு அறிக்கையை கீழ் காணலாம்.

http://www.acq.osd.mil/dsb/reports/2004-09-Strategic_Communicati
on.pdf


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved