World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

What US-backed "democracy movements" have produced in Serbia and Georgia

அமெரிக்க ஆதரவு பெற்ற ``ஜனநாயக இயக்கங்கள்
சேர்பியாவிலும் ஜோர்ஜியாவிலும் விளைவித்தது என்ன?``

By Justus Leicht
9 December 2004

Back to screen version

சேர்பியாவில் (2000) மற்றும் ஜோர்ஜியாவில் (2003) ஆட்சி மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட பாணியில் உக்ரைனில் ஒரு ஆட்சி மாற்றம் நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அமைப்புகளிலிருந்து கணிசமான நிதி, சித்தாந்த மற்றும் தர்க்கரீதியான ஆதரவை பெற்று வருகின்ற ``ஜனநாயக இயக்கங்கள்`` என்றழைக்கப்படுபவை, தற்போதுள்ள ஆட்சிக்கு பதிலாக ஒரு புதிய மேற்கு நாடுகளின் ஏகாதிபத்திய வல்லரசுகள் முற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் புதிய ஆட்சிக்கு வழிவிட்டு விலகுகின்ற வரை அழுத்தம் கொடுத்து வருகின்றன.

உக்ரைனில் ``ஆரஞ்சு புரட்சியை`` ஆதரித்து நிற்பவர்கள் ஜோர்ஜியாவின் எடுவர்டு செவர்னெட்சே விற்கு எதிராக நடத்தப்பட்ட ``ரோஜா புரட்சிக்கும்`` மற்றும் மிலோசேவிக் வீழ்ச்சிக்கு வித்திட்ட சேர்பியாவின் ``சமாதான புரட்சிக்கும்`` கடமைப்பட்டிருப்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கின்றனர். சேர்பியாவின் Otpor குழு ஜோர்ஜிய Kmara-விற்கும், உக்ரைனிய Pora இயக்கங்களுக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

பெல்கிரேடில், Otpor செயல்பாட்டாளரான அலெக்ஸான்டர் மாரிக் தற்போது ``ஒரு சாத்வீக எதிர்ப்பு மையத்தை`` நடத்தி வருகிறார். அது ஊழியர்களுக்கு பயிற்சியளித்து வருகிறது. ஜீரிச் செய்தி பத்திரிக்கையான Tagesanzeige தந்துள்ள தகவலின்படி, உலகம் முழுவதற்கும் ``பெல்கிரேடு புரட்சியை ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறார்கள்.`` அவரது வாடிக்கையாளர்களில் வெனிசூலாவில் Hugo Chavez-ஐ எதிர்ப்பவர்களும் Morgan Tsvangirai தலைமையிலான ஜிம்பாப்வே எதிர்க்கட்சியும், ஜோர்ஜியா மற்றும் உக்ரைன் ஊழியர்களும் அவரது வாடிக்கையாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பெல்கிரேடில் (செர்பியா) மற்றும் டிப்லிசில் (ஜோர்ஜியா) மற்றும் தற்போது கீவில் நடந்து கொண்டுள்ள ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிரச்சார பக்கவாத்தியமாக மேற்கு நாடுகளின் பத்திரிக்கைகள் பணியாற்றுகின்றன. அந்த நாடுகளின் நடைமுறைகளை மிகவும் கவர்ச்சிகரமான வார்த்தைகளில் ``ஒரு ஜனநாயகப் புரட்சி`` என்று வர்ணிக்கின்றன. என்றாலும், இந்த ஆட்சிகள் கவிழ்க்கப்பட்ட பின்னர், என்ன நடக்கிறது என்பது பெரும்பாலும் செய்திகளாக வெளியிடப்படுவதில்லை. புதிய ஆளும் அரசாங்கங்கள் தந்த ஜனநாயக உறுதிமொழிகளின் விளைவுகள் பற்றி புலனாய்வு செய்கின்ற சங்கடத்தை எந்த ஒரு தனிப்பட்ட பத்திரிக்கையாளரும் எடுத்துக்கொள்ளவில்லை.

என்றாலும், சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பும், இதர அமைப்புக்களும் வெளியிட்டிருக்கின்ற அறிக்கைகள் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலவரம் பழைய ஆட்சிகளின் கீழ் இருந்த அளவிற்கு மோசமாகத்தான் உள்ளது என்று காட்டுகின்றன, உண்மையில் படுமோசமடைந்துவிட்டிருக்கிறது. புதிய ``ஜனநாயக`` ஆட்சியாளர்களுக்கு ஒரு முன்னுரிமை நடவடிக்கை என்னவென்றால், தங்களது அரசியல் எதிரிகளை முறைகேடாக நடத்துவதுதான்.

சேர்பியா

தனது 2004 ஆண்டு அறிக்கையில், சர்வதேச பொதுமன்னிப்பு சபை சேர்பியாவில் நடைபெற்ற ``சமாதான புரட்சி``யின் விளைவுகளை விளக்கும் போது, ``போலீஸ் அதிகாரிகள் சித்திரவதை செய்வதும், முறைகேடுகளாக நடத்துவதும் பரவலாக நடைபெற்று வருகிறது, குறிப்பாக, 'Operation'-ன் கீழ் நடைபெற்றுக் கொண்டுள்ளன`` என்று குறிப்பிட்டிருக்கிறது.

"Operation Sabre"-ன் கீழ் பிரதமர் Zoran Djindjic கொலை செய்யப்பட்ட பின்னர் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது மற்றும் ஒரு மாதத்திற்குள் வாரண்ட் எதுவுமில்லாமல் 10,000 பேர் கைது செய்யப்பட்டனர். அவற்றுள் சிலவற்றை சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு விவரமாக வெளியிட்டிருக்கிறது.

``மார்ச் 14-ல் Goran Petrovic மற்றும் Igor Gajic இருவரும் சேர்பியாவிலுள்ள Krusevac-கில் கைது செய்யப்பட்டனர் மற்றும் இருவரும் மே 13 வரை வெளியுலகத் தொடர்பின்றி காவலில் வைக்கப்பட்டிருந்தனர். பிரசுரிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, ஒப்புதல் வாக்குமூலம் அவர்களிடமிருந்து பெறுவதற்காக நிர்பந்தம் கொடுக்கும் வகையில் சித்திரவதை செய்யப்பட்டனர். புலன் விசாரணையின் போது அவர்கள் தலையில் அதிகாரிகள் மூட்டைகளை வைத்து கட்டினர். அதற்கு பின்னர் இருவரையும் தாக்கத் துவங்கினர். Igor Gajic மீது தண்ணீர் ஊற்றப்பட்டு அதற்கு பின்னர் அவர் மின்சார அதிர்ச்சிகளால் சித்திரவதை செய்யப்பட்டார்.

``pQTM, Montenegro-விலுள்ள Pljevlja வில் உள்ள மூன்று போலீஸ் அதிகாரிகள் மீது அவர்கள் Admir Durutlic, Dragoljub Dzuver, Jovo Dosovic மற்றும் Mirko Gazdic ஆகியோரிடமிரு:ந்து ஒப்புதல் வாக்குமூலங்களை பெறுவதற்காக சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். வெளியிடப்பட்ட தகவல்களின்படி, போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்காக அவர்கள் Admir Durutlic-ஐ தாக்கினர், கால்களால் உதைத்தனர் மற்றும் அவரது பிறப்புறுப்பிலும் அடித்தனர். போலீஸார் அவரை கீழே தள்ளி திரும்பத்திரும்ப ஒரு கழிப்பறைக்குள் அவரது தலையை திணித்தனர். Dragoljub Dzuver வயிற்றிலும் விலாக்களிலும் உதைத்தனர். அந்த நான்கு பேரும் இரவில் போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டனர், அங்கு மறுபடியும் தாக்கப்பட்டனர். அவர்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளில் பல்வேறு புண்படுத்தல்களும் காயங்களின் வடுக்களும் காணப்பட்டன.``

புதிய ஆட்சியின் கீழ் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையும் நீடித்தது. சர்வதேச பொதுமன்னிப்பு சபை எழுதுகிறது:

``Roma சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகிறார்கள். ஒரு சர்வதேச அரசு சாராத அமைப்பான Roma-களுக்கான ஐரோப்பியன் உரிமைகள் நிலையமும், மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஹை கமிஷனரும் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ரோமர்களுக்கெதிராக பாரபட்ச நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளன. இனவெறி குழுக்களால் தாக்குதல்களை Roma சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சந்திக்கும்போது அதிகாரிகள் அவர்களுக்கு பாதுகாப்பு எதுவும் தருவதில்லை, Blegrade-லுள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் பிப்ரவரி மாதம் Roma-க்கள் மீது ஒரு இளைஞர் குழு தாக்குதல் நடத்தியபோது அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கத் தவறிவிட்டனர்.

``மே-யில் பெல்கிரேட்டில் இருந்த ஒரு அதிகாரப்பூர்வமற்ற ரோமா குடியிருப்பு அழிக்கப்பட்டது. சுமார் 250 பேர் கொசோவாவில் இருந்து வந்த Roma சமுதாயத்தை சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் அந்த பகுதியிலிருந்து மாற்று குடியிருப்பு எதுவும் தராமல் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர்.``

எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நிருபர்கள் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பத்திரிக்கை சுதந்திர தர வரிசையில் செர்பியா/மான்டிநிக்ரோ உலகில் 77வது இடத்திலுள்ளது, மான்டிநிக்ரோ பிரதமர் சம்மந்தப்பட்ட ஒரு ஊழல் மோசடியை புலனாய்வு செய்த ஒரு பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த தர வரிசை நிர்ணயிக்கப்பட்டது.

ஜோர்ஜியா

அமெரிக்காவில் பயிற்றுவிக்கப்பட்ட 36 வயது அட்டர்னி Mikhail Saakashvili பதவிக்கு வந்த பின்னர், எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நிருபர்கள் அமைப்பின் பத்திரிக்கை சுதந்திர குறியீட்டு எண்ணில் ஜோர்ஜியா 73-வது இடத்திலிருந்து 94வது இடத்திற்கு சென்றுவிட்டது. இந்த ஆண்டு ஜூலை மாதம் பிரசுரிக்கப்பட்ட ஒரு பகிரங்கக் கட்டிடத்தில் சர்வதேச மனித உரிமைகள் கூட்டமைப்பு (FIDH) ``ஜோர்ஜியாவில் மனித உரிமைகள் தொடர்பாக அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து கவலை`` தெரிவித்துள்ளது. ஜனாதிபதி Saakashvili-க்கு நாடாளுமன்றத்தை கலைக்கவும், நீதிபதிகளை நியமிக்கவும், நீக்கவும் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதாக அந்தக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள புகார்களில் கூறப்பட்டிருக்கிறது.

ஜனவரியில் நடைபெற்ற இரண்டு அமைதியான கண்டன பேரணிகளில் போலீசார் பலாத்காரமான முறையில் தலையிட்டனர். சமூக பிரச்சனைகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு பேரணியில் கலந்துகொண்ட Zaal Adamia அந்த ஆர்பாட்டம் முடிந்தபின்னர் அவரது வீட்டில் சுயநினைவு இழக்கும் வரை தாக்கப்பட்டு பின்னர் போலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். மார்ச்சில் ``ஒரு தீவிரவாத மதபோதகர்`` பணியாற்றிய சர்ச்சுக்குள் போலீஸார் தீடிரென்று புகுந்து அங்கிருந்த முப்பது பேரைத் தாக்கினர். இன்னொரு ஆர்பாட்டத்தில், போலீஸ் தலைமை அதிகாரியே ஒரு பெண் ஆர்பாட்டக்காரரைத் தாக்கினார்.

FIDH தந்துள்ள தகவலின்படி, Krtsanisi கிராமத்தில் எண்ணெய்க் குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு கண்டனப் பேரணியை கலைப்பதற்காக 2004 ஜூன் 9-ல் ``மிதமிஞ்சிய பலாத்காரம்`` பயன்படுத்தப்பட்டது, அதேபோன்று ஜூலை மாதம் தலைநகரான Tiflis-ல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய ஒரு உண்ணாவிரதத்திலும், போலீசார் மிதமிஞ்சிய பலாத்காரத்தை பயன்படுத்தினர். உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் போலீசார் தாக்கியதால் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ சிகிச்சை பெறவேண்டி வந்தது என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர் Saakashvili போலீஸ் நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.

மனித உரிமைகள் அமைப்பு எழுதுகிறது: ``சித்தரவதை, மனித நேயமற்ற மற்றும் இழிவுபடுத்தும் நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. எந்தவிதமான வரைமுறையும் இல்லாமல் கைது செய்து காவலில் வைப்பது FIDH-ற்கு ஆழ்ந்த கவலையை உருவாக்குகிற விவகாரங்களாகும்.... பல்வேறு சித்ரவதை முறைகளை போலீசார் பயன்படுத்துகின்றனர்------ ரப்பர் கம்புகளால் அல்லது நாற்காலிகளால் ஒரு பீரோவில் மக்களை பூட்டி வைத்து அந்த பீரோவிற்கு வெளியிலிருந்து தாக்குகிறார்கள், தலைகீழாக தொங்கவிடுகிறார்கள், ஒப்புதல் வாக்குமூலங்களையும், சாட்சியங்களையும் சில சந்தர்ப்பங்களில் முற்றிலும் தவறான முறையில் பெறுவதற்காக மின்சார அதிர்ச்சி போன்ற முறைகளைக் கையாளுகின்றனர்... அடிக்கடி மனித உரிமைகளுக்காக போராடுவோர் வன்முறையில் நடத்தப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக, மே, 4-ல் முன்னாள் அரசியல் கைதிகளுக்கான அரசுசாரா நிறுவனத்தின் Rustavi கிளைத் தலைவர் Levan Sakhvadze அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.``

ஜனநாயக உரிமைகளை Saakashvili ஆட்சி காலில் போட்டு மிதித்து வருகிறது, அதன் மேற்கு நாடுகளின் ஆதரவாளர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகிறது. அமெரிக்க அரசாங்கம் நடத்தி வருகிற ரேடியோ சுதந்திர ஐரோப்பா ``ரோஜா புரட்சிக்கு`` பின்னர் ஓராண்டு இருப்புநிலைக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது:

``நிதி கட்டுப்பாட்டை நிலைநாட்டும் அரசாங்க முயற்சிகள் காலியாகிவிட்ட அரசாங்க கருவூலத்தை நிரப்புவதற்கு உதவியிருக்கிறது. சோவியத் பாணி கல்வி முறை, பொருளாதாரத்தில் தனியார் மயமாதல் மற்றும் இராணுவத்தையும் போலீஸ் படைகளையும் நவீனமயமாக்கல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. Saakashvili ஆட்சியின் கீழ் ஜோர்ஜியா சர்வதேச நிதி சமுதாயத்தோடும், நன்கொடைகள் வழங்கும் நாடுகளோடும் உறவுகளை மேம்படுத்தியுள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்தோடு தனது உறவுகளை வளர்த்து கொண்டிருக்கிறது.``

பிப்ரவரியில் Saakashvili ஜனாதிபதி புஷ்ஷை சந்தித்தார், ஜோர்ஜியா போர் வீரர்கள் பல்லாயிரக்கணக்கானோரை அமெரிக்க பயிற்சியாளர்கள் பயிற்றுவித்தது தொடர்பாக பெருமையாக கூறிக்கொண்டார், ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் சேர்வதற்கு ஜோர்ஜியா முயன்றுவருவதாகக் கூறினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved