WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Congress-led government offers band-aid to haemorrhaging
rural India
கிராமப்புற இந்தியாவில் காயப்பட்டவருக்கு மருந்து தடவும் காங்கிரஸ் தலைமையிலான
அரசாங்கத்தின் நடவடிக்கை
By Parwini Zora and Daniel Woreck
16 December 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
சென்ற மாதம் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தென் மாநிலமான ஆந்திர பிரதேசத்தின்
ஒதுக்குப்புற கிராமம் ஒன்றிற்கு விஜயம் செய்து தேசிய வேலைக்கு உணவு திட்டத்தை
[NFFWP]
தொடக்கி வைத்தார்.
சிங் தனது திட்டத்தை அறிவித்திருப்பது வறுமையையும், பசியையும், ஒழித்துக்கட்டுவதில்
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (UPA)
பலத்தை எடுத்துக்காட்டும் ஒரு அடையாளச் சின்னத்தை அர்த்தப்படுத்துவதாகும். ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த
விவசாயிகள் கடன், வறட்சி மற்றும் வறுமையினால் பீடிக்கப்பட்டு அண்மை ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.
ஆந்திராவிலுள்ள ஆனந்தப்பூர் மாவட்டத்தில் மட்டுமே கடந்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 600 விவசாயிகள்
தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.
கடந்த இளவேனிற்கால தேர்தல் பிரச்சாரத்தில் ``நாட்டிலிருந்து வறுமை, பசி,
வேலையில்லாத் திண்டாட்டத்திலிருந்து நாட்டை விடுவிப்பதாக`` உறுதியளித்திருந்ததை நிறைவேற்றுவதற்கு ஹிறிகி-வில்
ஆதிக்கம் செய்யும் பங்காளியான காங்கிரஸ் எடுத்திருக்கும் முதல் கட்ட நடவடிக்கைதான் ழிதிதிகீறி என்று சிங் கூறினார்.
இந்தியாவில் 150 ஏழ்மை நிறைந்த மாவட்டங்களில் முதலில் இந்த திட்டம் தொடக்கப்படும் என்றும், பின்னர் தேசிய
அளவில் விரிவுபடுத்தப்படும் என்றார், நாட்டின் 450 இதர மாவட்டங்களுக்கும் எப்பொழுது விரிவுபடுத்தப்படும்
என்று திட்டவட்டமான காலக்கெடு எதையும் வழங்கவில்லை.
இந்தத் திட்டத்திற்கு முதல் கட்டமாக 445 மில்லியன் டாலர்கள் செலவாகும், ஏழை
விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு அவர்களது உழைப்பிற்காக தினசரி 5 கிலோ அரிசி
வழங்கப்படும். பெரும்பாலானவை உழைப்பிற்காக வழங்கப்படுபவை உணவை வடிவமைத்து உருவாக்கப்படும், சிறிய
அளவு பணம் வழங்கப்படும் (20 சதவீதம் வரை).
UPA ``தேசிய வேலை வாய்ப்பு
உத்திரவாதத்தை'' உருவாக்கி செயல்படுத்துகின்ற வரை
NFFWP ஒரு இடைகால நடவடிக்கை என்று
அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நவீன தாராளவாத சீர்திருத்தங்களால் 13 ஆண்டுகளாக வறுமையும், பொருளாதார
பாதுகாப்பின்மையும் பெருகி சமூக துருவ முனைப்பு பெருகிவிட்டதால் பொதுமக்களது எதிர்ப்பு அலையால் காங்கிரஸ்
கட்சி அதற்கே வியப்பு தரும் வகையில் சென்ற மே மாதம் ஆட்சியில் அமர்த்தப்பட்டது. பாரதிய ஜனதாக் கட்சி
தலைமையிலான தேசிய ஜனநாயக அணி 1998 முதல் இந்தியாவை ஆண்டு வந்தது, ``இந்தியா ஒளிர்கிறது`` என்று
கூறிற்று, கிராமப்புற ஏழைகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்திடம் நிலவிய அதிருப்தியை காங்கிரஸ் தேர்தல்
பிரச்சாரம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. வறுமையை விரட்ட கூடுதல் நிதி ஒதுக்கீடு
செய்வதாகவும், பொது சேவைகளை அதிகரிப்பதாகவும், உறுதிமொழி தந்தது. இந்த உறுதிமொழிகளில்
முக்கியமான ஒன்று விரைவாக ஒரு தேசிய வேலை வாய்ப்பு உத்திரவாதத்தை செயல்படுத்துவது, அதில் ஏழை,
நடுத்தர வகுப்பில் ஏழ்மையில் உள்ளவர்கள், ஆகியோர் கிராமங்களிலும், நகரங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு ஓராண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் சட்டபூர்வமாக உறுதிமொழி
தரப்பட்ட வேலை தரும் வகையில் பொது பணித்திட்டங்கள் உருவாக்கப்படும்.
இந்த உறுதிமொழி தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் தனது
UPA
பங்காளிகளுடனும் மற்றும் ஸ்ராலினிஸ்ட்டுகள் தலைமையிலான ''வெளியில் இருந்து கொண்டு ஆதரவு தரும்''
இடதுசாரி அணியினரோடும் கலந்துரையாடி குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை (CMP)
உருவாக்கியது, அதிலும் இந்த உறுதிமொழி இடம்பெற்றிருக்கிறது.
UPA அரசாங்கத்தின்
செயற்பட்டியலின் உள்நோக்கம் CMP-யுடன்
அது ஏழை மக்களுக்கு அவர்களைக் கவர்கின்ற வகைகளில் உறுதிமொழி அளிப்பது அத்துடன் இந்திய
பெருவர்த்தகத்திற்கு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, தனியார்மயமாக்கல், நெறிமுறை தளர்வு, மற்றும் இதர
முதலீட்டாளர் நண்பர்கள் ஆதரவு கொள்கைகளை கடைப்பிடிப்பதாக உறுதி தந்திருக்கிறது.
UPA ஆட்சிக்கு வந்த சில
வாரங்களுக்குள்ளேயே தேசிய வேலை வாய்ப்பு உறுதிமொழிச் சட்டம் ஒரு அரசாங்க முன்னுரிமையல்ல என்பது
தெளிவாகிவிட்டதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. UPAவின்
முதலாவது பட்ஜெட்டில் அதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
செப்டம்பர் வாக்கில் முதலாளித்துவ பத்திரிக்கைகளில் பொதுவாக
ஒப்புக்கொள்ளப்பட்டது என்னவென்றால், புதிய அரசாங்கம் இதற்கு முந்திய வலதுசாரி ஆட்சியினரைப் போல்
ஏறத்தாழ ஒரே மாதிரியான பொருளாதார இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது
என்பது தான். பாரம்பரிய இந்திய முதலாளித்துவ ஆளுங்கட்சியின் தாராளமயமாக்கல் அரசாங்கத்திற்கு ஆதரவு
தருவதை நியாயப்படுத்துவதற்கு இடதுசாரி முன்னணி சில கொள்கை மாற்றங்களை செய்வதில் ஆர்வம் கொண்டு
UPA வேலை வாய்ப்பு உத்திரவாத உறுதிமொழியை நிறைவேற்ற
வேண்டுமென்று வற்புறுத்தியது.
இறுதியாக ஒரு நகல் மசோதா பிரசுரிக்கப்பட்டது மற்றும்
NEGA நடப்பு
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று உறுதிமொழி அளித்தது. இந்தச் சட்டம், இந்தியாவில்
படுமோசமான வறுமையிலுள்ள மாநிலங்களில் 2005-ம் ஆண்டு இளவேனிற் காலத்தில் நிறைவேற்றப்படும்.
என்றாலும், அண்மை வாரங்களில் அரசாங்கம் நகல் மசோதாவை கணிசமாக
தளர்த்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது மற்றும் இந்த மாதத்திலேயே நாடாளுமன்றத்தில் சட்டம்
அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்தும், அரசங்கம் முரண்பட்ட சமிக்கைகளை தந்துகொண்டிருக்கிறது.
அரசாங்கத்திற்குள்ளேயே இடம்பெற்றுள்ள சில சக்திகள் இந்தத் திட்டம் மிதமிஞ்சிய
செலவு பிடிக்குமென்று புகார் கூறியுள்ளன----- இந்தியா முழுவதற்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் போது
இந்தியாவின் ஆண்டு GDP-ன்
1 சதவீதம் அல்லது சுமார் 8.9 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இணையான தொகை செலவாகும் என்று
மதிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, இந்த சக்திகள் பல்வேறு மாற்றங்கள் செய்ய ஆலோசனைகளை கூறியுள்ளன.
இப்படி மாற்றங்கள் செய்தால் வேலை வாய்ப்பு உத்திரவாதத் திட்டம் எதற்கும் பயனற்றதாக ஆகிவிடும்
இத்தகைய மாற்றங்களில் திட்டத்தை கிராமப்புறங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்துவது
என்பதும் அரசு ஏழைகள் என்று விளக்கம் தருகின்றவர்கள் மட்டுமே பயனடைவார்கள் என்றும் கிராமப்புற இந்தியா
முழுவதும் விரிவுபடுத்தப்படுவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கக்கூடாது என்றும், திட்டத்தை இரத்து செய்ய எந்த
நேரத்திலும் அரசாங்கத்திற்கு உரிமை உண்டு என்றும் மற்றும் ஒரு வீடு என்பதற்கு சட்டபூர்வமான விளக்கம் தரவும்
இப்படி பல மாற்றங்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள் (இந்தியாவில் பலர் கூட்டுக் குடும்பங்களாக வாழ்வது
என்பது சர்வசாதாரணமானது).
கடைசியாக கூறப்பட்டுள்ள ஆனால் அதே நேரத்தில் மிக முக்கியமான திருத்தம்
என்னவென்றால், தேசிய வேலை வாய்ப்பு உத்திரவாத திட்டத்தின் கீழ் அரசாங்கம் குறைந்தபட்ச ஊதிய
விகிதங்களுக்கும் கீழ் ஊதியம் வழங்க வகை செய்கிறது, தற்போதுள்ள குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் அஸ்ஸாமில்
ஒரு நாளைக்கு ரூ.40 அல்லது ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவு முதல் கர்நாடகத்தில் ஒரு நாளைக்கு ரூ.120
(சுமார் 2.70 அமெரிக்க டாலர்கள்) வரை இந்தியாவில் குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் நிலவுகின்றன. நகல்
மசோதாவில் இது சம்மந்தமான வாசகம் வருமாறு: ``1948 குறைந்தபட்ச ஊதியங்கள் சட்டத்தில் கண்டுள்ளவை
எதுவாக இருந்தாலும் மத்திய அரசாங்கம் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பளிக்கும் தொழிலாளர்களுக்கு
ஊதிய விகிதங்களை நிர்ணயிக்கலாம்.``
தாராளமய பொருளாதார நிபுணரும், வளர்ச்சித் திட்ட நிபுணருமான
Jean Dreeze
மூல நகல் மசோதாவை தயாரிப்பதற்கு உதவினார். அது ஒரு பெரிய சமூக முன்னேற்றக் கொள்கை என்று
எடுத்துரைத்தார். ``அதில் கண்டுள்ள அடிப்படையான மற்றும் சமரசப் பேச்சு வார்த்தைகளுக்கே இடம் இல்லாத
அம்சங்களை முன்மொழிவு மாற்றங்கள், தூக்கி எறிந்துவிடுவதாக அமைந்துள்ளன`` என்று அவர் கூறியுள்ளார்.
இடதுசாரி முன்னணி இந்த மாற்றங்களை விமர்சித்திருக்கிறது, இந்த மாற்றங்களில்
``வலுவற்ற உத்திரவாதம்" தான் கிடைக்கும் என்று கூறியுள்ளது, அது மூல நகல் மசோதாவையும், வலதுசாரி
கண்ணோட்டத்தில் கண்டித்திருக்கிறது. மேற்கு வங்காளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) தலைமையில்
நடைபெற்று வருகின்ற அரசாங்கம் நகல் மசோதாவில் இடம் பெற்றுள்ள ஒரு விதியைக் கண்டித்துள்ளது. இந்தத்
திட்டத்தை மாநிலங்கள் தான் செயல்படுத்தும், செலவில் கால் பங்கு ஏற்றுக்கொள்ளும் தகுதி வாய்ந்த நபர் மனுச்
செய்து 15-நாட்களுக்குள் பணி எதையும் வழங்குவதற்கு மாநில அரசு தவறிவிடுமானால், மாநில அரசாங்கம்
அவர்களுக்கு மானியத்தொகை வழங்க வேண்டும். இந்த விதியை மேற்கு வங்காள அரசங்கம் ஆட்சேபிக்கிறது.
மேற்கு வங்காளத்தில் 1977-ல் ஆட்சிக்கு வந்தவுடன் இடதுசாரி முன்னணி அரசாங்கம் இத்தகைய உதவித் தொகைத்
திட்டத்தை கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தின்படி மிகுதியுள்ளவர்களுக்கு பணம் கொடுக்க நிதி வசதி இல்லையென்று
கூறி 2001-ல் திட்டத்தையே கைவிட்டுவிட்டது.
சட்டத்தில் உத்திரவாதம் தளர்த்தப்படுவதையும், மேற்கு வங்காள அரசாங்கம்
விரும்பவில்லை. ஏனென்றால் திட்டத்தில் பின்னர் செய்யப்படும் மாற்றங்களால் மடைதிறந்த வெள்ளம் போல்
இழப்பீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்று அஞ்சுகிறது. உண்மையிலேயே இந்திய பெரு வர்க்கத்தினரைப்
போல் ஸ்ராலினிஸ்ட்டுகளும், இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்ட நெருக்கடியின் ஆழத்தினால் திட்டத்திற்கான
செலவினம் உச்சாணிக்கொம்பிற்கு சென்றுவிடும் என்று அஞ்சுவதால் அவர்களும் திட்டத்தை வெட்டுவதற்கு சுதந்திரம்
கேட்கின்றனர்.
வளரும் வேலையில்லாத் திண்டாட்டமும் பட்டினியும்
சாதாரணமாக தற்காலிக கடின உழைப்புப் பணிக்கு மிகச் சொற்ப ஊதியம்
வழங்கப்படுகிறது. இத்தகைய ஒரு திட்டத்தை கொண்டு வருவதற்கு இந்தியாவில் ஆதரவு காணப்படுவது, குறிப்பாக,
கிராமப் பகுதிகளில் நிலவுகின்ற மிகத் தீவிரமான சமூக நெருக்கடியை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது.
அண்மை ஆண்டுகளில் மிகப்பெரும்பாலான துறைகளில் மற்றும் குறிப்பாக விவசாயத்தில்,
அது இந்தியர்களில் பாதிப்பேருக்கு மேற்பட்டவர்களுக்கு வாழ்வு தருவது, கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
``நடப்பு தினசரி அந்தஸ்தில்`` 1993-94-ல் 6 சதவீதமாக இருந்த
வேலையில்லாத் திண்டாட்டம், 1999-2000-தில் 7.3 சதவீதமாக உயர்ந்து, 2003 இறுதிவாக்கில் இது 9.5
சதவீதத்தைத் தொட்டுவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிப்போரில் மூன்றிற்கு இரண்டு பங்கிற்கு
மேற்பட்டவர்கள் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் 60 சதவீதம் பேர் படித்தவர்கள்.``
மிகப்பெரும்பாலான விவசாயிகளின் நில உடைமைகளின் அளவு வீழ்ச்சியடைந்துவிட்டது.
இப்போது சராசரியாக 2.5 ஏக்கர்கள்தான் சொந்தமாக உள்ளன. விவசாய, விளைபொருட்களுக்கான
அரசாங்க ஆதரவு விலை குறைந்துவிட்டது. பல்வேறு இதர மானியங்களும் குறைக்கப்பட்டுவிட்டன. எனவே
விவசாயிகள் கடன் சுமையில் சிக்கிக்கொள்கின்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இரு தசாப்தங்களுக்கு முன்னர் 100 கிராமக் குடும்பங்களில் 31 குடும்பங்கள்
நிலமற்றவர்களாக இருந்தார்கள். இன்றைய தினம் இது 41 ஆகிவிட்டது.
நிலமற்றவர்கள் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருப்பதோடு விவசாயத்தில்
இயந்திரமயமாதல் நடந்துகொண்டிருப்பதுடன் அரசாங்கத் திட்டங்களும் வெட்டப்பட்டுள்ள நிலைகளில் இந்தியாவின் பல
பகுதிகளில் சராசரியாக ஒரு விவசாயத் தொழிலாளிக்கு கிடைக்கின்ற வேலை நாட்கள் 50-க்கும் குறைந்துவிட்டது.
1997-98-ல் அரசாங்க நிவாரணத் திட்டங்களின் கீழ் 860 மில்லியன் மனித நாட்கள் வேலை தரப்பட்டது,
2002-ல் இது 523 மில்லியன் மனித நாட்களாக குறைந்துவிட்டது.
இந்திய அரசாங்கமும், உலக வங்கியும், 1991-முதல் இந்தியாவில் வறுமை வீழ்ச்சியடைந்து
கொண்டு வருவதாகக் கூறி வந்தாலும், வளர்ச்சித் திட்ட நிபுணர்கள் இந்தியர்களின் சராசரி உணவு சத்தூட்டத்தின்
அளவு கணிசமாக குறைந்துகொண்டு வருவதாக எடுத்துக்காட்டியுள்ளனர்.
Dreeze தந்துள்ள
மதிப்பீட்டின்படி இந்தியா ``ஒரு சத்தூட்ட அவசர நிலையை`` சந்தித்துக் கொண்டிருக்கிறது. 1999-2000
தொடர்பாக முழுமையான புள்ளி விவரங்கள் கிடைக்கின்றன, அதன்படி சராசரி மனிதனது கலோரி தேவையான
2400-க்கும் மிகக் குறைவாக கிராம மக்களில் 40 சதவீதம் பேர் 1900 அல்லது அதற்கும் குறைந்த கலோரி
உணவையே உட்கொண்டு வருகின்றனர்.
இந்த நெருக்கடியின் வீச்சை பார்க்கும்போது
NEGA அதன் மூல
வடிவத்தில் இருந்தால் கூட நவீன தாராளவாத, சீர்திருத்தத் திட்டங்களை முதலாளித்துவ வர்க்கம் மேற்கொண்டதால்
கிராமப்புற இந்தியா இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும்போது அது ஒரு காயத்திற்கு கட்டுப்போடுவதாகவே அமையும்
ஏனென்றால் நகரங்களில் பத்து மில்லியன் கணக்கான மக்கள் வறுமையிலும், பொருளாதார பாதுகாப்பற்ற நிலையில்
வீழ்ந்து கொண்டிருப்பது அதிகரித்து வருகிறது.
திட்டத்தின் வீச்சு முன்மொழிவு திருத்தங்கள் கடுமையாக குறைத்துவிடும் என்பதுடன்
அதை ஒரு கருவியாகப் பயன்படுத்தி பெரும் வர்த்தகங்கள் ஊதிய விகிதங்களை குறைப்பதற்கு முயற்சி செய்வதுடன்
ஏற்றுமதி வளர்ச்சி மூலம் பொருளாதார மேம்பாட்டிற்கு வகை செய்யும் அதேவேளை, உள்கட்டமைப்புத் திட்டங்களில்
வேலையில்லாதிருப்போரை மலிவுக் கூலித் தொழிலாளர்களாக பயன்படுத்திக்கொள்வதற்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது.
சமுதாயத்தின் மிகுந்த கொந்தளிப்பை பற்றி எரியச் செய்யும் தாராளமயமாக்கல்
கொள்கையை முதலாளித்துவ வர்க்கம் முன்னெடுத்துச் செல்வதை காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் வலியுறுத்திக்கொண்டிருக்கிற
நேரத்தில் அதை ஆதரிப்பதை நியாயப்படுத்துவதற்கு ஒரு வழியாக ஸ்ராலினிஸ்ட்டுகள்,
NEGAவை வலியுறுத்தி
வருகின்றனர். மாறாக, மிக கடுமையாக குறைக்கப்பட்டுவிட்ட இந்த நலன்புரி நடவடிக்கையை கூட அரசாங்கம்
நிறைவேற்ற இயலவில்லை என்பது----- இந்தியாவின் உழைக்கும் வெகுஜனங்களின் தேவைகளை முதலாளித்துவ
திட்டத்தால் சரிகட்ட முடியாது என்பதைத் தான் வலியுறுத்துவதாக அமைந்திருக்கிறது---- மக்களில்
பெரும்பாலோர், ஒரு சமூக படுகுழியில் விழுந்துவிடாது தடுப்பதற்காக தீட்டப்பட்ட குறைந்தபட்ச திட்டத்தைக்கூட
காங்கிரஸ் தலைமையிலான அரசு நிறைவேற்ற முடியவில்லை.
Top of page |