World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US media ignores damning Pentagon report

பென்டகன் கண்டன அறிக்கையை புறக்கணித்துவிட்ட அமெரிக்க ஊடகங்கள்

By Joseph Kay
10 December 2004

Back to screen version

மூலோபாய தகவல் தொடர்பு சம்மந்தப்பட்ட பாதுகாப்பு அறிவியல் வாரியத்தின் பணிக்குழு அறிக்கை தொடர்பான செய்திகள் அந்த அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு பின்னர், நவம்பர் இறுதிவரை அது வெளியிடப்படவில்லை. தேர்தலில் பிரச்சார காலத்தில் அந்த ஆவணம் மறைக்கப்பட்டது, ஏனென்றால் அப்போது அந்த முடிவுகள் புஷ் நிர்வாகத்திற்கு சந்தேகத்திற்கு இடமின்றி கடுமையான பிரச்சனைகளை உருவாக்கியிருக்கும் (புஷ் நிர்வாகத்தின் பொய்களை அம்பலப்படுத்தும் பென்டகன் அறிக்கை'' என்ற கட்டுரையையும் காண்க)

அந்த அறிக்கை மிகக்குறைந்தபட்ச அளவிற்கே ஊடகங்களில் இடம்பெற்றது. மற்றும் அரசியல் நிர்வாகத்தில் இடம்பெற்றிருக்கிற எவரும்- குடியரசுக்கட்சி அல்லது ஜனநாயகக் கட்சிக்காரர்கள் அதன் முடிவுகளை ஒரு பிரச்சனையாகவே ஆக்கவில்லை.

முதலாவது கட்டுரை அந்த அறிக்கை பற்றி நியூயோர்க் டைம்ஸில் ஒரு சிறிய கட்டுரையை 14-ம் பக்கத்தில் ''முஸ்லீம் உலகிற்கு கொள்கைகளை விளக்க அமெரிக்கா தவறிவிட்டது, குழு சொல்கிறது'' என்ற தலைப்பிட்டு, நவம்பர் 24-ல் பாதுகாப்பு அறிவியல் வாரியத்தின் பென்டகன் வலைத் தளத்தில் பிரசுரிக்கப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் வெளியிட்டிருக்கிறது.

அசோசியேட்ட் பிரஸ் அந்த செய்தியை, ''9/11 தாக்குதலுக்குப் பின்னர் தீவிரவாத இஸ்லாமிஸ்டுகளின் அந்தஸ்து உயர்ந்துவிட்டதாக பென்டகன் குழு சொல்கிறது'' என்ற தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவின் பிரதான செய்தி வெளியீட்டு பிரதான அமைப்புக்கள் ஒவ்வொன்றும் AP-க்கு சந்தா செலுத்துகின்றன, எனவே அனைவருக்கும் அந்த அறிக்கையின் கண்டன முடிவுகள் தெரிந்தேயிருக்கும்.

தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளும் ஒவ்வொரு செய்தி பத்திரிக்கையும் அந்த செய்தியை புறக்கணித்துவிடுவதென்று ஒரு முடிவிற்கு வந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த அறிக்கை மீது வாஷிங்டன் போஸ்ட் ஒரு கட்டுரையை பிரசுரிக்க தவறிவிட்டது. அதே போன்று சிகாகோ டிரிபியூன் மற்றும் போஸ்டன் குளோப் மற்றும் இதர அமெரிக்க பிரதான செய்தி பத்திரிகைகளும் அவ்வாறே செய்துவிட்டன. ெலாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தனது ஒரு நீண்ட டிசம்பர் முதல் தேதி கட்டுரைக்கு கீழே முடிவில் ஒரு சிறிய குறிப்பாக தந்திருக்கிறது. (''PR Meets Psy- ops in war on Terror" என்ற தலைப்பில் அந்த நீண்ட கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தது). வலைத் தளத்தை தேடியதில் இந்தச் செய்தி பத்திரிகைகள் எதுவும் AP செய்தி நிறுவனத்தின் விவரங்களை வெளியிடவில்லை என்று இந்தக்கட்டுரை ஆசிரியர் முடிவுசெய்ய முடிந்தது.

வாஷிங்டன் போஸ்ட்-டின் (Ombudsman) தனிநபர் கூறும் புகாரை விசாரிக்கும், Micheal Getler அந்தசெய்தி பத்திரிகை புரிந்துவிட்ட தவறு மிக வெளிப்படையாக வெளிச்சம் போட்டுக்காட்டியிருப்பதாக கருதி, அவரே தனது வாராந்திர கட்டுரையில் அதைப்பற்றி ஒரு குறிப்பு வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. (டிசம்பர் 5ல் வெளியிடப்பட்ட அந்தக் கட்டுரையின் தலைப்பு ''வாசகர்கள் பார்த்தும், பார்க்காததும்'') ஜனாதிபதி புஷ் - ஈராக்கியர்கள் தங்களது நாட்டில் அமெரிக்கப் படைகளை எதிர்த்து நிற்பதற்கு காரணம் ''அவர்கள் நம்மை வெறுக்கிறார்கள், மற்றும் அவர்கள் சுதந்திரத்தை வெறுக்கிறார்கள்'' என்று இடைவிடாது பேசிக் கொண்டு வந்ததற்கிடையில் அந்த அறிக்கை வந்தது என்று Getler சுட்டிக்காட்டியுள்ளார்.

Salon Com. வலைத் தளத்தில் கிளிண்டனின் முன்னாள் உதவியாளர் Sidney Blumenthel எழுதிய ஒரு கட்டுரை ''இதை விடுதலை என்று நீங்கள் அழைக்கிறீர்கள்" என்ற தலைப்பிட்டு பிரசுரிக்கப்பட்டிருந்தது. அது பிரிட்டிஷ் செய்தி பத்திரிகையான கார்டீயனிலும் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்க பத்திரிகையில் வெளியிடப்படவில்லை.

எதிர்பார்த்தப்படி, அந்த வாரியத்தின் முடிவுகள் தொடர்பான விரிவான அறிக்கைகள் வெளிநாடுகளில் பிரசுரிக்கப்பட்டன, ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த Sunday Herold டிசம்பர் 5-ல் விரிவான கட்டுரையை பிரசுரித்திருந்தது: ''ஈராக்கில் இதயங்களையும் உள்ளங்களையும் கவர்வதற்கான போர் இப்போது, தோற்றுவிட்டதாக அமெரிக்கா ஒப்புக்கொள்கிறது'' என்ற தலைப்பில் Neil Mackay அந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.

அமெரிக்க ஊடகங்களைப் பொறுத்தவரை, இது ஒரு செய்தியே அல்ல அதன் செவிடன் காதில் ஊதிய சங்கை ஜனநாயகக் கட்சியும் எதிரொலித்தது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved