World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Pinochet arrested in Chile on "Condor" killings

சிலியில் "கான்டொர்" கொலைகளில் பினோசே கைதுசெய்யப்பட்டுள்ளார்

By Bill Van Auken
14 December 2004

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இராணுவ ஆட்சிகள் 1970களில் சதிசெய்து தங்களுடைய அரசியல் எதிர்ப்பாளர்களை தேடி கொலை செய்ய நிகழ்த்தப்பட்ட Operation Condor என்ற செயல்பாட்டின் தொடர்பாக, சிலியின் முன்னாள் சர்வாதிகாரி ஒகுஸ்டோ பினோசே திங்களன்று குற்றஞ்சாட்டப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

89 வயதான ஓய்வு பெற்ற தளபதி விசாரணையை எதிர்கொள்ளும் வலிமையைக் கொண்டுள்ளதாக நீதிபதி ஜுவான் குஜ்மன் தீர்ப்பளித்து, சர்வாதிகாரத்தின் சித்திரவதை அறைகளில் இருந்து மறைந்துவிட்ட ஒன்பது பேர்களை "நிரந்தரமாகக் கடத்திவிட்ட" குற்றச்சாட்டையும் சுமத்தியுள்ளார்.

காண்டர் நடவடிக்கையில் பலியானோர் இலத்தீன் அமெரிக்காவில் சர்வாதிகாரத்தினால் கொலையுண்ட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அறிவுஜீவுகளின் தொகுப்பில் மிகச்சிறிய சதவிகிதத்தினர் என்றாலும்கூட, இரக்கமற்ற அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு தலைமுறையின் பிரதிநிதிகளாக அவர்கள் இருந்தார்கள். பினோசே ஆட்சியின் எதிரிகளாக இருந்து, நாட்டை விட்டு பாதுகாப்புக் கிடைக்கும் என்று ஓடி ஒளிந்து கொண்ட, நாட்டில் இருந்து கைதுசெய்யப்பட்டு சிலிக்கும் அவர்களுடைய மரணத்திற்கும் அனுப்பப்பட்ட பலரும் இதில் அடங்குவர்.

இக்கொலை வெறி "பயங்கரவாதத்தின் மீதான தாக்குதல்" என்று நியாயப்படுத்தப்பட்டு, எந்தத் தேசிய எல்லைகளையும் மதிக்காமல் இராணுவ ஆட்சியை எதிர்த்தவர்கள் அனைவரையும் பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருந்தது. இச்சதித்திட்டம் CIA, மற்றும் அமெரிக்க அரசுத்துறையால் உன்னிப்பாக கவனிக்கப் பெற்று, அதன் இரகசிய ஆதரவையும் பெற்றிருந்தது.

பினோசே மீதான விசாரணைக்கு வகைசெய்தது, முன்னாள் சர்வாதிகாரி மனத்தளவில் விசாரணையை எதிர்கொள்ள வலுவுடன் இருக்கிறார் என்ற குஜ்மனுடைய தீர்ப்பேயாகும்.

நீதிபதியால் வெளியிடப்பட்ட 70 பக்கத்தீர்ப்பு இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: முதல் பகுதி, பினோசே மனநல மற்றும் பிற பொது உடல்நலத்தைப் பற்றிய சான்றுகளைப் பரிசீலிக்கிறது: இரண்டாம் பகுதி அவருடைய ஆட்சியில் நிகழ்த்தப்பெற்ற குற்றங்களை பட்டியலிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் சிலரைப் பற்றிய முழுத்தகவல்களையும் கொடுத்துள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, ஸ்பெயின் மனித சமுதாயத்திற்கெதிரான குற்றங்களுக்காகப் பிறப்பித்திருந்த கைதாணையின் பேரில் லண்டனில் அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து, பழைய சர்வாதிகாரி குற்றவியல் நடவடிக்கைகளைத் தவிர்க்கும் வகையில், வயது முதிர்ச்சியால் ஏற்பட்ட மனச்சிதைவை அடுத்துத் தன்னால் ஒரு நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள முடியாது என்று கூறிவந்தார். பிரதம மந்திரி டோனி பிளேர் அதைக் காரணம் காட்டி விடுவித்து பின்னர் ஒன்றரை ஆண்டு பிரிட்டனில் இல்லக் காவலில் தொடர்ந்து வைத்து, சிலி நாட்டிற்கு அனுப்பிவைத்தார்.

ஆதேபோல, 2001ம் ஆண்டு "மரண வரிசை ஊர்வலம்" என்று அழைக்கப்பட்டிருந்த வழக்கில் ஒரு குற்றத் தாக்கல் அவர் மீது வந்தபோதும், சிலி நாட்டின் உயர்நீதி மன்றம் அவர் "கிறுக்குப்பிடித்தவர் அல்லது மனநிலை திரிந்தவர்", எனவே விசாரணையை தாங்கும் வலுவற்றவர் என்று கூறி குற்றச்சாட்டுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இந்த வழக்கில் ஜனநாயக முறைப்படி ஆட்சியைக் கைப்பற்றியிருந்த இடதுசாரி சால்வடோர் அலண்டே அரசாங்கத்தை ஓர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முறையில் அகற்றிவிட்டு, செப்டம்பர் 11, 1973 அன்று பினோசே ஆட்சிக்கு வந்த பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவத்தினரின் மரணம் விளைவிக்கும் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கொலைக்குழு நாடு முழுவதும் அனுப்பப்பட்டு அரசியல் கைதிகளைக் கொலை செய்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் காண்டர் வழக்கில் இவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த விலக்கை நாட்டின் தலமை நீதிமன்றம் அகற்றியபின்னர், குஜ்மன், தன்னுடைய தீர்ப்பைப் புதிதாக செய்யப்பட்டிருந்த மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் வழங்கினார்.

சிலிய நீதிபதி, கடந்த ஆண்டு மியாமியில் பினோசே ஸ்பானிய மொழி தொலைக்காட்சி நிலையத்திற்கு கொடுத்த சர்ச்சைக்குரிய பேட்டி ஒன்றையும் மேற்கோளிட்டுள்ளார்; இந்தப் பேட்டியில் அவர் தான் சிலியை ஜனாதிபதியாக ஆண்டபோதும், இராணுவத்தின் தலமைத் தளபதியாக இருந்தபோதும் எடுத்த தனது நடவடிக்கைகள் பற்றித் தெளிவாக சாதகமான முறையில் கூறியிருந்தார்.

மனித உரிமைகள் குழுக்களும், பினோசே ஆட்சியில் கொல்லப்பட்ட அல்லது இடம் தெரியாமல் காணாமற்போய்விட்டவர்களின் உறவினர்களும் இந்தத் தீர்ப்பை வரவேற்று, இதை மாற்றுவது மிகக் கடினம் என்ற முன்கணிப்பையும் கூறியுள்ளனர்.

உறவினர்களின் சார்பாக வழக்கு நடத்தும் எடுவர்டோ கான்ட்ரேரஸ் என்னும் வழக்கறிஞர் சிலிய நாளேடான El Mercurio இடம் தெரிவித்தார்: "இந்தத் தீர்ப்பு பல ஆண்டுகள் உழைப்பின் சிகரத்தைப் பிரதிபலிக்கிறது. "அதனுடைய சர்வதேச பரப்பு, அதில் மிகத் தந்திரமான முறையில் சர்வாதிகாரியுடைய தொடர்பு என்ற வகையில், Operation Condor ஐயத்திற்கிடமின்றி மிகப்பெரும் அடையாளக் குறியான வழக்கு ஆகும்" என்றும் அவர் கூறினார்.

இலத்தீன் அமெரிக்க மக்களில் மொத்தத்தில் மூன்றில் இரு பங்கு கொண்டிருந்த, ஆறு நாடுகளில் இருந்து வந்திருந்த, இராணுவ உளவுத்துறை மற்றும் இரகசிய போலீஸ் அதிகாரிகள் வந்தவர்கள், தங்களுடைய பெருந்தீமையுடைய நடவடிக்கையை தொடக்குவதற்காக, சாண்டியாகோவில் நவம்பர் 1975ல் நடத்திய கூட்டங்களில், பினோசே கலந்து கொண்டதற்கு ஆதாரம் தம்மிடம் இருப்பதாக குஜ்மன் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் சிலியைத்தவிர, அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, பராகுவே மற்றும் பொலீவியா ஆகிய நாடுகளும் கலந்து கொண்டன. ஈக்வடாரிலும், பெருவிலும் இருந்த இராணுவ ஆட்சிகள் பின்னர் இந்தச் சதித்திட்டத்தில் இணைந்து கொண்டன.

குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளதாவது: "1974 தொடங்கி, ஒரு நடைமுறைத்திட்டம், இக்கண்டத்தின் Southern Cone பகுதிகளில் உள்ள சில நாடுகளின் உளவுத் துறைகளுக்கு இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தி, அந்நாடுகளின் விரோதிகள் என்று கருதப்படுபவர்களைத் தேடி, அடக்கிவிடவேண்டும் என்பதை திட்டவட்டமான நோக்கமாகக் கொள்ளுவதற்காக அமைக்கப்பட்டது. அந்த இலக்கை அடைவத்றகாக இச்செயற்பாட்டு முறை அல்லது திட்டம் ஏற்கப்பட்டு அதற்கு "காண்டர்" என்று பெயர் சூட்டப்பட்டது."

அது பின்னர் பினோசே சர்வாதிகாரத்தில் இருந்து தப்பியோடிய பின்னர் அண்டை நாடுகளுக்குக் கடத்தி கொண்டுவரப்பட்டு பின்னர் மரணத்தைத் தழுவ வேண்டிய நிலையில் இருந்த, பாதிக்கப்பட்டவர்களுடைய அடையாளங்களைப் பரிசீலனை செய்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் Villa Grimaldi என்ற இடத்தில், சிலியின் இரகசியப் போலீஸ் DINA நடத்தி வந்திருந்த தடுப்புக் காவல், சித்திரவதை மையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

சிலிய நீதிமன்றத்தின் முடிவு உறுதியாக வாஷிங்டனில் சில எதிரொலிகளைக் கொடுக்கும். இந்தக் குற்றங்களுக்கு எதிராக இறுதியில் பினோசேயின் மீது விசாரணை நடத்தப்பட்டால், அமெரிக்க அரசாங்கமே தன்னைக் கூண்டில் அடைத்துள்ளது போல் உணரக்கூடும். முன்னாள் அமெரிக்க வெளிவிவகார அமைச்சராக இருந்த, புஷ் நிர்வாகத்திற்கு இன்னும் நெருக்கமான ஆலோசகராக இருந்துவரும் ஹென்றி கிசிஞ்சர், 1973 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பிலும் பின்னர் அதைத்தொடர்திருந்த காட்டுமிராண்டித்தனமான அடக்கு முறையிலும் நேரடியாகத் தொடர்புடையவராவர். நிக்சன் மற்றும் போர்ட் நிர்வாகங்களில், காண்டர் செயல்பாட்டின் காலத்தில், மிக உயர்ந்த அதிகாரங்களில் இருந்து இந்தச் சதியில் பங்கு பெற்றவர்கள் துணை ஜனாதிபதி டிக் செனியும், பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பெல்டும் ஆவர்.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததற்காக பினோசேக்கு எதிராக அவர் நாட்டில் மட்டுமில்லாமல் ஸ்பெயினிலும், பிரான்சிலும் மற்ற இடங்களிலும் வழக்குகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவருடைய தற்காப்பு வாதங்கள் எவ்வாறு இருக்கும் என்ற கருத்தின் போக்கு, தன்னுடைய போர்க்குற்றங்களையே ஈராக்கில் இருந்து குவன்டநாமோ வரை செய்துகொண்டிருக்கும் வாஷிங்டனுக்கு வரவேற்கத்தக்கதாக இருக்காது.

பினோசே குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படவேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில், முன்னான் DINA வின் தலைவரான மானுவல் கான்ட்ரேர்ஸும் ஒருவராவர். சிலிய சர்வாதிகாரத்தினால் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்காக இவர் தண்டனைக்குட்பட்டு, சிறையில் உள்ளார். அக்குற்றங்களில் 1976ம் ஆண்டு நிகழ்ந்த ஆர்லண்டோ லெடெலியர் மற்றும் அவருடைய அமெரிக்க உதவியாளர் ரோன்னி மோப்பிட் இருவரும் வாஷிங்டன் தெருக்களில் கொலையுண்டதும் அடங்கும். அத்தகைய கொலைகள் ஆபரேஷன் காண்டரின் ஒரு பகுதியாக நடைபெற்றவை.

அமெரிக்க மத்திய உளவுத்துறையிடம் ஊதியம் பெற்று வந்திருந்தவரான கான்ட்ரேர்ஸ், பினோசேதான் DINA உடைய நடவடிக்கைகளை இயக்குவதற்குப் பொறுப்பைக் கொண்டிருந்தார் என்று வலியுறுத்துகிறார்.

ஆப்பரேஷன் காண்டர் வழக்கைத் தவிர, பினோசே இந்த மாதத்தின் முன்பகுதியில் அர்ஜென்டினாவில் ஒரு கார்க் குண்டு மூலம் ஜெனரல் கார்லோஸ் பிராட்சும் அவருடைய மனைவியும் படுகொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாகவும், தனது சிறப்பு விலக்குத் தகுதியை இழந்துள்ளார். சிலிய இராணுவத்தின் முன்னாள் தலைவரான பிராட்ஸ் 1973ம் ஆண்டு இராணுவத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்து, நாட்டை விட்டு ஓடி புலம்பெயர்ந்திருந்தார்.

இந்த முன்னாள் சர்வாதிகாரி வாஷிங்டனில் உள்ள ரிக்ஸ் வங்கியில் கொண்டுள்ள பல மில்லியன் டாலர் இருப்புக்களையுடைய இரகசியக் கணக்குகள் பற்றிய குற்றவியில் விசாரணையையும் எதிர்கொள்கிறார்; இந்தக் கணக்குகள் அமெரிக்கச் செனட் குழு இவ் வங்கியின் சட்டவிரோத செயற்பாடுகள் பற்றி விசாரணையை நடத்தியபோது கண்டுபிடிக்கப்பட்டன.

Top of page