World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Fatah lines up behind Abbas and threatens Barghouti

பத்தா, அப்பாஸிற்கு ஆதரவு- பார்க்குற்றிக்கு அச்சுறுத்தல்

By Jean Shaoul
9 December 2004

Back to screen version

யாசர் அரஃபாத் காலமான பின்னர் ஃபத்தா கட்சிக்குள்ளிருக்கும் அனைத்து கன்னைகளும் தங்களது மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அபு மஸேன் (Abu Mazen) என்றும் அழைக்கப்படுகின்ற மஹ்மூத் அப்பாஸிற்கு பின்னால் அணி திரண்டு ஆதரித்து நிற்கின்றனர். அவருக்கு மிகக்கடுமையான தேர்தல் போட்டியாளராக தேர்தல் களத்தில் இறங்கியுள்ள மர்வான் பார்குற்றி (Marwan Barghouti) யை கட்டுப்பாட்டை மீறி நடந்ததாக கட்சியிலிருந்து வெளியேற்றப்போவதாக அச்சுறுத்தியும் உள்ளனர்.

ஃபத்தாவின் தலைவரான Faraq Quddumi பாலஸ்தீன நிர்வாக (PA) ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து Barghouti விலகிக்கொள்ளாவிட்டால், அவர் கட்சியிலிருந்து தூக்கி எறியப்படுவார் என உறுதிசெய்தார். ''Marwan எங்களது வீரர்களில் ஒருவர். அவர் பாலஸ்தீன மக்களது பொதுக்கருத்தை மீற மாட்டார் என்றும் அவரது செல்வாக்கை சிதைத்துவிடமாட்டார் என்றும் நம்புகிறோம்'' என்று அவர் கூறினார்.

ஃபத்தாவிற்குள் ஒரு தீவிரவாத ஆயுதந்தாங்கிய குழுவான Al- Aqsa தியாகிகள் படையும் Barghouti க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவர்களில் ஒருவரான Zacharaich Zubedi ''பொதுக்கருத்து அடிப்படையில் ஃபத்தாவின் ஆதரவு பெற்றுள்ள வேட்பாளரை நாங்கள் ஆதரித்து நிற்போம்'' என்று குறிப்பிட்டார்.

நவம்பர் 25-ல் பத்தா புரட்சி கவுன்சில் ரமலாவில் நடத்திய வாக்கெடுப்பில் இரண்டுபேர் கலந்து கொள்ளாத நிலையில் அராபத்திற்கு அடுத்து அப்பாஸ்-ஐ தலைவர் பதவிக்கு ஆதரிப்பதாக முடிவு செய்தது. ''ஃபத்தா இயக்கத்தின் ஒரே வேட்பாளர்'' அப்பாஸ் என்று பாலஸ்தீன அதிகாரி Tayeb Abdel அறிவித்தார்.

ஏற்கனவே அரஃபாத்திற்கு பதிலாக பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) தலைவராக பொறுப்பேற்றுள்ள மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான எழுச்சியை எதிர்த்து நிற்கும் ஒரு முன்னணி எதிர்ப்பாளர் அப்பாஸ் ஜனவரி 9-ல் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று ஃபத்தா தலைமை உறுதியாக முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு பெற்ற வேட்பாளர் அப்பாஸ் ஆவார். அவர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பவல் மற்றும் அப்பாஸிற்கு ஆதரவை அதிகரிக்கவும் பிரதமர் Ahammed Qurei க்கு ஆதரவு திரட்டவும் மத்திய கிழக்கில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோவுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். ஆயுதந்தாங்கிய போராளி குழுக்கள் மற்றும் கட்சிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாலஸ்தீன மக்களது எழுச்சியை முழுமையாக ஒரு முடிவிற்கு கொண்டுவந்துவிட அப்பாஸ் உறுதியளித்துள்ளார். ''ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு விரிவான மற்றும் முழு அமைதி தேவை'' என்று அவர் கூறியுள்ளார். இந்த வகையில் வெற்றிகிடைப்பதற்கு இஸ்ரேல் ''பாலஸ்தீன பகுதிகளில் கொலைகளையும், தாக்குதல்களையும் நிறுத்தவேண்டும் மற்றும் அதன் குடியேற்ற நடவடிக்கைகளையும் தடுப்புச்சுவர் எழுப்புவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார். நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் இண்டிபாடா எழுச்சியை முடிவிற்கு கொண்டுவர எந்தவித முன்நிபந்தனைகளும் விதிக்கப்படமாட்டாது என்று அப்பாஸ் வலியுறுத்திக் கூறினார்.

இஸ்ரேலுக்கு எதிராக வன்முறை கிளர்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்று ஹமாஸ் இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் al Aqsa படை உட்பட அனைத்து ஆயுதந்தாங்கிய குழுக்களையும், ஏற்கச்செய்வதுதான் தமது முதல் முன்னுரிமை நடவடிக்கை என்று அப்பாஸ், பவலிடமும், ஜாக் ஸ்ட்ரோ விடமும் தெரிவித்தார். Al-Aqsa படைப்பிரிவுகள் உட்பட தனது ஆயுதந்தாங்கிய போராளிக் குழுக்கள் அனைத்தையும் ஃபத்தாவின் மத்திய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடப் போவதாக ஃபத்தா உறுப்பினரும், பாலஸ்தீன தற்பாதுகாப்பு தலைவருமான Rashid Abu Shbak கூறினார்.

''தேர்தல்கள் முடிந்த பின்னர் எந்த நேரத்திலும் இஸ்ரேல் பிரதமர் ஷரோனை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்'' என்று அவர் நியூஸ் வீக் -இடம் தெரிவித்தார். அடுத்த ஆண்டு காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் வெளியேறுகின்ற நேரத்தில் பாலஸ்தீன நிர்வாகம் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்கின்ற நிலைக்கு வந்துவிடுமென்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அகதிகள் தாயகம் திரும்புவதற்கு அவர்களுக்குள்ள உரிமையை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டுமென்று தாம் கோரப்போவதாக பாலஸ்தீன நாடாளுமன்றத்தில் பேசியதாக கூறப்படுவது பற்றி நியூஸ் வீக் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது, ''சாலை வரைபடத்திற்கு'' அப்பால் நான் எதைப்பற்றியும், சொல்லவில்லை. நீங்கள் கூறியது போல் எதையும் பேசவில்லை''. சாலை வரைபடம் என்பது அமெரிக்கா வகுத்தளித்த ஒரு துண்டுதுண்டாக சிதறிக்கிடக்கும், பாலஸ்தீன நாடாகும். அதற்கு பதிலாக இஸ்ரேலுக்கு அனைத்து எதிர்ப்புக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்பது அமெரிக்காவின் திட்டம்.

ஃபத்தா, அப்பாஸை தனது வேட்பாளராக தேர்ந்தெடுத்திருப்பது, வாஷிங்டனும் இஸ்ரேலும், அரஃபாத் சமாதானத்திற்கு ஒரு தடைக்கல்லாக இருக்கிறார் என்று இடைவிடாது சித்தரிக்க தொடர்ச்சியாக எடுத்த முயற்சிகளை வெளிச்சம்போட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. அரஃபாத்திற்கு, பாலஸ்தீன தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிடையே ஒரு செல்வாக்குடைய சமூக அடித்தளம் இருந்தது. அதே நேரத்தில் அப்பாஸிற்கு அது எதுவுமில்லை. அரஃபாத்திடம் பாலஸ்தீன மக்கள் 1993- ஒஸ்லோ உடன்படிக்கைகள் கையெழுத்திட்டபின்னர் எதிர்பார்த்த ஜனநாயக உரிமைகள் மீது முழுமையாக தாக்குதல் நடத்த அவரால் முடியவில்லை. கிழக்கு ஜெருசலேமிற்கு பாலஸ்தீனமக்கள் உரிமை கோருவதையும் இஸ்ரேலுக்கு திரும்பும் அவர்களது உரிமையையும் மற்றும் ஒரு சிதைந்துவிட்ட பயனற்ற ஒரு சிறிய நாட்டிற்கு பதிலாக தண்ணீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வது உட்பட பாலஸ்தீன மக்களது உரிமைகள் அனைத்தையும் இஸ்ரேலின் சார்பில் கட்டுப்படுத்த அவரால் முயடிவில்லை. ஏனென்றால் ஒரு பொதுமக்கள் தேசியவாத இயக்கத்திற்கு தலைமை வகித்த ஒரு தலைவர் இந்த நடவடிக்கையை இவ்வளவு தீவிரமாக எடுக்க முடியாது.

அத்தகைய கட்டுப்பாடுகள் எதையும் அப்பாஸ் அல்லது Qurei இடம் எதிர்பார்க்க முடியாது. நீண்ட நெடுங்காலமாக அரஃபாத்தோடு அவர்களுக்கு உறவு இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் தங்களுக்குள்ள வெகுஜனத்தொடர்புகளை உதறித்தள்ளிவிட்டார்கள். அப்பாஸ் ஒரு வர்த்தகர், அவரது ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்கு சலுகை காட்டும் போக்குகளால் பரவலாக கண்டிக்கப்பட்டுவருகிறார். பேரழிவிற்கு வித்திட்ட ஒஸ்லோ ஒப்பந்தங்களோடு அவர் நெருக்கமாக சம்மந்தபட்டிருந்தார். அது மேற்குக்கரையிலும், காசாவிலும் இடைக்கால பாலஸ்தீன சுய ஆட்சி அரசாங்கத்தை அமைத்தது. ஆனால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேல் தனது குடியிருப்புக்களை இரட்டிப்பாக்குவதற்கு வழியமைத்துக் கொடுத்தது. மற்றும் பாலஸ்தீன மக்களது சமூக மற்றும் பொருளாதார துயரங்களை மேலும் அதிகரித்தது.

ஒரு சிறிய நிதி செல்வந்தத்தட்டு பிரதிநிதியாக அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். மிகப்பெரும்பாலான பாலஸ்தீன மக்களது வறுமையை பயன்படுத்தி அந்த செல்வந்தத் தட்டினர் கோடீஸ்வரர்களானார்கள். அமெரிக்கா, அரபு ஆட்சிகள், மற்றும் இஸ்ரேலின் தொடர்புகளை அடிப்படையாக கொண்டுதான் அவர்களது நிதி குவிப்பின் வெற்றி சார்ந்திருக்கிறது எனவே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு தோன்றுகின்ற எல்லா எதிர்ப்புக்கைளயும் ஒடுக்குவதற்கு, அவர்கள் தயாராக இருக்கிறார்கள், இப்படிச்செய்வதால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எல்லைகளுக்குள் ஒரு பலாத்கார மோதலை அவர்களது நடவடிக்கை கிளறிவிடும் என்பதையும் அவர்கள் அறிந்தேயிருக்கிறார்கள்.

அப்பாஸ் மற்றும் Queri பாலஸ்தீன முதலாளித்துவ வர்க்கத்திற்குள் மிகத்தீவிரமான வலதுசாரி சக்திகளின் பிரதிநிதிகள் என்றாலும், ஃபத்தாவிற்குள் உள்ள எந்தப்போக்கும் அல்லது அதன் எதிராளிகள் மத்தியில் உள்ள எவரும் அவர்களது சரணாகதி நிலைப்பாட்டிற்கு ஒரு மாற்றை தரவில்லை.

ஃபத்தாவிற்குள் உள்ள இளைய தலைமுறை சக்திகள் அப்பாஸிற்கு எந்த சவாலையும் விடுக்க மறுத்துவிட்டது. ஏனென்றால் எந்தப் பிளவுகள் ஏற்பட்டாலும் தேர்தலில் தோல்வி ஏற்பட்டு ஜனாதிபதி பதவி தங்களுக்கு தருகின்ற அதிகார சலுகைளை இழக்க வேண்டிவரும். Al - Aqsa தியாகிகள் படைகள் அப்பாஸை ஆதரித்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றன. இளைஞர் குழு தலைவர்கள் எவரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை.

Mohammed Dahlan ஒரு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், 1993- ஒஸ்லோ உடன்படிக்கைகளுக்கு பின்னர் கிடைத்த வர்த்தக வாய்ப்புக்களில் தனக்கு கிடைத்த பங்காக செல்வத்தை குவித்த ஒரு சிலரில் அவரும் ஒருவர். அவரது ஆதரவாளர்கள் சென்ற ஜூலையில் அரஃபாத்தின் பாதுகாப்பு படைகளோடு நடைபெற்ற ஆயுதந்தாங்கிய மோதல்களில் சம்மந்தப்பட்டருந்தார்கள் அவரும் அரஃபாத்தின் மேற்குகரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜிப்ரில் ரஜோப்பும் அப்பாஸிற்கு பின் அணிவகுத்து நிற்கின்றனர். இவர்களில் எவருக்கும், அதிகமான மக்கள் ஆதரவு இல்லை மற்றும் Dahlan மேற்கு நாட்டு அரசுகளின் ஒரு எடுபிடி என்று பரவலாக கருதப்பட்டு வருகிறார். சென்ற மாதம்தான் முகமூடி அணிந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் காசாவில் அரஃபாத்திற்காக அமைக்கப்பட்டிருந்த இறுதி அஞ்சலிக் கொட்டகைக்கு சென்றபோது வானத்தை நோக்கி சுட்டு "அப்பாஸிற்கும் Dahlan க்கும் ஆதரவு இல்லை" என்று முழக்கமிட்டார்கள். அவர்கள் இருவரும் அமெரிக்க உளவாளிகள் என்று குற்றம்சாட்டினர். இரண்டு மெய்க்காவலர்கள் கொல்லப்பட்டனர். Dahlan -னின் காருக்கு நெருப்பு வைக்கப்பட்டதென்றும் செய்திகள் வந்தன.

இஸ்லாமிய கட்சிகளான ஹமாஸும், இஸ்லாமிய Jihad- ம், மதச்சார்பற்ற தேசியவாத ஃபத்தாவிற்கு மிகத்தீவிரமான எதிர்ப்பு அணியாக தங்களை காட்டிக்கொண்டாலும், இப்போது ஜனாதிபதி பதவியை அப்பாஸ் ஏற்று இஸ்ரேலுடன் ஒரு பேரத்தை உருவாக்கிக் கொள்ளட்டும் என்று வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டுவிட்டனர். ஆக எழுச்சியை ஒடுக்குவதற்கு சம்மதித்துவிட்டனர். ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளர்கள் எவரையும் நிறுத்தவில்லை மாறாக தனது ஆதரவாளர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். பாலஸ்தீன மக்கள் அனைவருக்கும் அந்த வேண்டுகோளை விடவில்லை. ஒரு புதிய பாலஸ்தீன நிர்வாக அரசாங்கம் அமைக்கப்படும்போது தன்னையும் அதில் சேர்த்துக்கொண்டால் இஸ்ரேல் மீதான தாக்குதலை நிறுத்திவிடுவதாக அது குறிப்பிட்டது. அண்மையில் பிரதமர் Qurei யுடன் நடந்த கூட்டத்தில் ஹமாஸ் ஒரு தேசிய கூட்டுத் தலைமையில் தானும் ஓர் அங்கமாக இருக்க விரும்பியது. இதற்கு எப்போதுமே அரஃபாத் எதிர்ப்புத்தெரிவித்து வந்தார்.

அரஃபாத்திற்கு பின் மிக செல்வாக்குப்படைத்த ஃபத்தா தலைவரான மர்வான் பார்குற்றி மட்டுமே இப்போது பிரதான எதிர்கட்சி வேட்பாளராக அப்பாஸிற்கு எதிராக களத்தில் இறங்கியிருக்கிறார். மொத்தம் 9-பேர் போட்டியிடுகின்றனர்.

பார்குற்றிக்கு பொதுமக்களது செல்வாக்கு எந்தளவிற்கு உள்ளது என்பது தொடர்பாக முரண்பட்ட மதிப்பீடுகள் வந்து கொண்டிருக்கின்றன, சில கருத்துக்கணிப்புக்கள் அவர் விளிம்பு நிலையில் முன்னணியில் இருப்பதாக குறிப்பிடுகின்றன. வாஷிங்டனின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கிற ஃபத்தா தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முயலுபவர்களது ஆதரவை அவர் வென்றெடுப்பார் என்பது நிச்சயம்.

43- வயதான பார்குற்றி மேற்கு கரையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் வளர்ந்த பாலஸ்தீன இளைய தலைமுறையை சேர்ந்த தலைவர்களில் ஒருவர். இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாலஸ்தீன மக்களின் ஒரு சின்னமாக அவர் விளங்குகிறார். பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு ஒரு இஸ்ரேல் சிறையில் ஐந்து ஆயுள் தண்டனைகளை அவர் அனுபவித்துவருகிறார். அவர் எப்போதுமே அத்தகைய தாக்குதலில் தனக்கு சம்மந்தமில்லை என்று கூறிவருகிறார், தான் ஒரு அரசியல் தலைவரே தவிர, இராணுவத்தலைவர் அல்ல என்று கூறுகிறார்.

இந்த காரணத்தினால் தான் பாலஸ்தீன நிர்வாகம், அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது. பாலஸ்தீன காபினட் அமைச்சர் Kadura Fares, பார்குற்றியிடம் பல மணிநேரம் பேசி அப்பாஸை எதிர்த்துப் போட்டியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார், அதற்குப்பின்னர் ஃபத்தாவை பிளவுபடுத்துவதை தவிர்ப்பதற்காக போட்டியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கூறினார். ''ஃபத்தா இயக்கத்தின் மைந்தர்களும், ஆதரவாளர்களும், அந்த இயக்கத்தின் வேட்பாளரான மஹ்மூத் அப்பாஸை ஆதரிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் கடைசி நேரத்தில் பார்குற்றியின் மனைவி அவரது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார் என்று தெரிவித்தார். 2002- ஏப்ரலில் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் இஸ்ரேல் முதல்தடவையாக அவரது மனைவியையும் இரண்டு பாலஸ்தீன அதிகாரிகளையும் 5மணி நேரம் சந்தித்துப்பேச அனுமதித்தது. தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து அவரை விலகிக்கொள்ளச் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அந்த சந்திப்பிற்கு இஸ்ரேல் அனுமதித்தது. இஸ்ரேலுடன் பேச்சு நடத்துவதற்கு முன் நிபந்தனையாக பார்குற்றியின் விடுதலையை அப்பாஸ் கோரமாட்டார் என்பது தெளிவான பின்னர்தான் பார்குற்றி தனது மனதை மாற்றிக்கொண்டார் என்று தோன்றுகிறது.

என்றாலும், அப்பாஸை போன்று பார்குற்றி ஒரு சிறிய பாலஸ்தீன நாட்டை அமைப்பது குறித்து இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை ஆதரிக்கிறார். அது எப்படிப்பட்ட பாலஸ்தீன நாடாக இருக்குமென்றால் முதலாளித்துவ அடிப்படையில் வலுவான பக்கத்து நாட்டின் உதவிகளை சார்ந்திருக்கும் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியை நீடிப்பதன் மூலம் இஸ்ரேலிடமிருந்து சலுகைகளை பெறுவதற்கு கூடுதல் நிர்பந்தங்களை தருவது ஒன்றில்தான் அவர் வேறுபடுகிறார். அரசியல் விமர்சகர்கள் பார்குற்றி தனது வேட்பு மனுவை திரும்பப்பெறுவதற்கு ஒரு பேரம் உருவாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறை இன்றைக்கும் தள்ளுபடி செய்துவிடவில்லை.

அப்பாஸை, ஃபத்தா முன்னிறுத்தியிருப்பது, அந்த இயக்கத்தின் தேசிவாத முன்னோக்கு அடிப்படையில் ஒரு மதச்சார்பற்ற பாலஸ்தீன நாட்டை இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகள் மூலமும் அதே நேரத்தில் ஆயுதந்தாங்கிய போராட்டம் மூலமும் நிறுவிவிட முடியுமென்ற முன்னோக்கில் தோல்வி ஏற்பட்டுவிட்டதன் ஒரு திட்டவட்டமான வெளிப்பாடுதான். தேசிய முதலாளித்துவ வர்க்கம் துரோகம் செய்துவிட்டது என்பதற்காக, அதை எதிர்ப்பதற்காக தொடர்ந்து பொது மக்களது கண்டன போராட்டங்களையும், குறைந்த அளவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியை நடத்துவதையும் முன்னெடுத்துச் செல்வதன் மூலம் அந்த துரோகச்செயல்களை எதிர்த்து நிற்க முடியாது. அந்த நடவடிக்கைகள் சியோனிச ஆட்சிகளையும் அவர்களது ஏகாதிபத்திய ஆதரவாளர்களையும் முறியடிக்க தெளிவாகவே தவறிவிட்டது.

இப்போது தேவை என்னவென்றால், ஒரு சோசலிச வேலைத்திட்ட அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமான அரசியல் அணியாக திரட்டுவதற்கான ஒரு மாற்று முன்னோக்காகும், இதைசெய்ய ஃபத்தாவிற்கு உள்ளேயும், வெளியிலும் இருந்து கொண்டு பெயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற எந்த குழுவும் தயாராக இல்லை. பாலஸ்தீன மக்களை அவர்களது சமூக பொருளாதார மற்றும் அரசியல் ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்க, முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு சோசலிச மதச்சார்பற்ற இயக்கத்தில் ஒட்டுமொத்த அரபு தொழிலாள வர்க்கமும், அவர்களது இஸ்ரேலிய வர்க்க சகோதர, சகோதரிகளும் ஒன்றுபட்டு தாக்குதலில் இறங்கினால்தான் முடியும். இதற்கு தொழிலாளர்கள் அப்பாஸிற்கு பின்னால் தேசிய ஒற்றுமை அடிப்படையில் அணிவகுக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் அல்லது இதர அரபு முதலாளித்துவ வர்க்க பிரதிநிதிக்கு பின்னாலும் அணிவகுத்து நிற்பதை தவிர்த்து தங்களது சொந்த கட்சியை உருவாக்குவது ஒன்றே தேவைப்படுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved