:
ஐரோப்பா :
ரஷ்யா
மற்றும் முந்தைய USSR
Power struggle in Ukraine: what do Yushchenko and
Yanukovich stand for?
உக்ரைனில் அதிகாரப் போராட்டம்: யுஷ்செங்கோவும் யானுகோவிச்சும் எதற்காக நிற்கின்றனர்?
By Patrick Richter
1st December 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
உக்ரைனில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக சண்டையிட்டுக் கொண்டுள்ள இரண்டு
அதிகாரபூர்வமான குழுக்களுமே --எதிர்க்கட்சி வேட்பாளர் விக்டர் யுஷ்செங்கோவினால் தலைமை தாங்கப்படும்
குழு மற்றும் பிரதமர் விக்டர் யனுகோவிச் தலைமை வகிக்கும் குழு-- பரந்த வெகுஜனங்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக
இல்லை.
இரண்டு குழுக்களுமே பகுதி அளவில் நியாயபூர்வமான நலன்களையும், தேவைகளையும்
முன்னிறுத்தியுள்ளன---- யுஷ்செங்கோ ஜனநாயகத்திற்காக கோரிக்கை விடுகிறார், சர்வாதிகார முறைகளை கையாள்கின்ற
ஓர் ஆட்சிக்கு விரோதப்போக்கு காட்டுகிறார், ஊடகங்களின் சுதந்திரத்தை ஒடுக்குவதையும், தேர்தல்களில்
மோசடிகள் நடத்தப்படுவதையும் கண்டிக்கிறார், யானுகோவிச் நாட்டை மேற்கு நாடுகளின் முதலீட்டிற்கு
முழுவதுமாக திறந்துவிடுவதால் சீரழிவு சமூக விளைவுகள் ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கிறார் மற்றும்
பாரம்பரியமாக ரஷ்யாவுடனும், கிழக்கு உக்ரைன் தொழிற்துறை பகுதிகளுடனும் நிலைநாட்டப்பட்டுவரும் நெருக்கமான
உறவுகள், பலவீனமடைவதால் ஏற்படும் அச்சத்தையும் வெளிப்படுத்துகிறார்.
ஆனால் இவ்வேண்டுகோள்கள் ஏமாற்று வித்தைகளாகும். ஒரு குறுகலான செல்வந்த
தட்டினரின் செல்வமும் அதிகாரமும், பரந்த வெகுஜனங்கள் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டிருப்பதையும், வறுமையில்
வாடிக்கொண்டிருப்பதையும், வெளிப்படையாக வெளிச்சம்போட்டுக் காட்டுகின்ற முரண்பாட்டை மூடி மறைக்கவே
அவை சேவை செய்கின்றன. இந்தக் கோரிக்கைகளுக்கு மக்களிடையே ஒரு ஆதரவு உணர்வு ஏற்பட்டிருப்பதற்கு காரணம்
பல தசாப்தங்களாகக நடந்து வந்த ஸ்ராலினிச ஆட்சி, தொழிலாள வர்க்கத்தில் குழப்பத்தையும் அரசியல் திசைவிலகலையும்
பாரம்பரியமாக விட்டுச் சென்றிருக்கிறது.
யுஷ்செங்கோ முகாம் விரும்புகிற ``ஜனநாயகம்`` எத்தகைய தன்மை கொண்டதாக
இருக்கும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணத்தை ஹங்கேரி, போலந்து மற்றும் இதர கிழக்கு ஐரோப்பிய நாடுகளின்
ஆட்சிகளைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம், அங்கு செயல்பட்டு வருகின்ற வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி
கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு உள்நாட்டு தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கு சிறந்த நிலைமைகளை
சர்வதேச பெருநிறுவனங்களுக்கு வழங்க போட்டிபோடுகின்றன. அமெரிக்காவிலிருந்து செயல்படும்
ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை போன்ற அமைப்புக்கள் இந்த ''ஜனநாயக'' எதிர்க்கட்சிகளை
ஆதரிப்பதைப்பற்றி நிறையவே கூறுகின்றன, இது வெனிசூலா ஜனாதிபதி
Hugo Chavez-ஐ கவிழ்க்கும் முயற்சியில் பலத்த பங்களிப்பு
செய்திருக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைனின் கனரக தொழிற்துறையை
கையகப்படுத்திக் கொண்ட ஒருசிலவராட்சி குழுக்களை யனுகோவிச் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர்கள் பெரும்
செல்வந்தர்களாக வளர்ந்திருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து பணம் குவித்துக்கொண்டே வருவதற்கு உறுதி செய்து
தருகின்ற அரசியல் அதிகாரத்தை தங்கள் கையிலேயே வைத்துக்கொள்வதில் உறுதியாக உள்ளனர்.
இரண்டு குழுக்களும், மற்றும் அவர்களது நாடாளுமன்ற குழுக்களும் ஏறத்தாழ
பகிரங்கமாகவே காரியத்தை சாதிக்க பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றன மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆதரவை
பெறுகின்றன.
மேற்கு நாட்டு ஊடகங்கள் யானுகோவிச்சிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின்
ஆதரவு தந்து தலையிடுவதாக மிக விரிவாக செய்திகளை வெளியிட்டும், கண்டனங்களைத் தெரிவித்தும் வருகின்றன.
உக்ரைன் சம்பவங்களை ரஷ்யாவின் உயிர் நாடி நலன்களுக்கு ஒரு அச்சுறுத்தல் என்று புட்டின் கருதுகிறார்.
பால்டிக் அரசுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில்
(EU) சேர்ந்துகொண்ட பின்னர், (முன்னாள் சோவியத் குடியரசுகள்
உட்பட) மத்திய ஆசியாவில் அமெரிக்கத் துருப்புக்கள் நிறுத்தப்பட்டிருப்பது மற்றும் வாஷிங்டன் ஏற்பாடு செய்த
ஆட்சி மாற்றம் ஜோர்ஜியாவில் நடந்திருப்பது ஆகியவற்றால் மாஸ்கோ, உக்ரைன் ஒரு மேற்கு நாட்டு ஆதரவு
அரசாங்கத்தின் கீழ் வந்துவிடுமானால் அது தன்னை தனிமைப்படுத்திவிடும் என்று அஞ்சுகிறது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின்
மிக முக்கியமானதொரு தொழிற்துறை பிராந்தியங்களில் தனது செல்வாக்கை இழந்துவிடுகின்ற அளவிற்கு ரஷ்யா
அச்சுறுத்தப்பட்டும் தனது மிக முக்கியமான கச்சாப்பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி வழித்தடங்கள்
மீது தனது கட்டுப்பாட்டை மாஸ்கோ இழக்கும் அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்கிறது.
மாறாக மேற்கு நாட்டு ஊடகங்கள், உக்ரைன் ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்காவும்
ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவைவிட அதிகமான அளவிற்கு பகிரங்கமாக தலையிட்டது பற்றி கருத்துகள் எதையும்
வெளியிடவில்லை. எதிர்க்கட்சிக்கு அவர்களது ஆதரவு, தீவிர உறுப்பினர்களுக்கு பயிற்சியளிப்பது அரசியல் ஆலோசனை
வழங்குவது மற்றும் மில்லியன் கணக்கான டாலர்களை வழங்குவதாக உள்ளது. நவம்பர் 21 தேர்தலுக்கு பின்னர்
அவர்கள் யஷ்செங்கோவிற்கு பகிரங்கமாக ஆதரவு தந்தனர், நடப்பு ஜனாதிபதி லியோனிட் குச்மா
கட்டுப்பாட்டிலுள்ள தேர்தல் அதிகாரிகளின் படி அத்தேர்தலில் யானுகோவிச் வெற்றி பெற்றார்.
மேற்கு நாடுகளின் வல்லரசுகள் பாரியளவில் கட்டுப்பாடு எதுவுமில்லாமல்
தலையிட்டது, உள்நாட்டு மோதலை மோசமாக்கியிருப்பதுடன் நாட்டையே உள்நாட்டுப் போர் விளிம்பிற்கு கொண்டு
வந்துவிட்டது.
எந்த சக்திகள் செயல்பட்டு வருகின்றன?
உக்ரைனில் நடைபெற்றுக்கொண்டுள்ள அதிகாரத்திற்கான போராட்டம் மேலாதிக்கம்
செய்துவரும் செல்வந்த தட்டினருக்குள் நீண்ட நெடுங்காலமாக நீறுபூத்த நெருப்புப் போல் புகைந்து கொண்டிருந்த
ஒரு மோதலை அம்பலத்திற்கு கொண்டு வந்துவிட்டது. யஷ்செங்கோவும் அவரது மிக முக்கியமான ஆதரவாளரான
Yulia Tymoshenko-ம்,
வெளிநாட்டு முதலீடுகளுக்கு நாட்டை திறந்துவிடுவதில் ஒரு தீவிரமான நடவடிக்கை எடுப்பதில் உறுதி கொண்டுள்ள
ஆளும் தட்டினரின் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள்.
1993-க்கும் 1999-க்கும் இடைப்பட்ட காலத்தில் யஷ்செங்கோ நாட்டின் மத்திய
வங்கி தலைவராக பணியாற்றி வந்தார். அதற்குப் பின்னர் அவர் ஒன்றரை ஆண்டுகள் பிரதமராக பணியாற்றினார்.
``நமது உக்ரைன்`` என்ற எதிர்க்கட்சி கூட்டணிக்கு அவர் தலைமை வகித்தார், இரண்டாண்டுகளுக்கு முன்னர்
நடைபெற்ற தேர்தலில் மிக சக்திவாய்ந்த நாடாளுமன்ற (கன்னையாக) பிரிவாக அது இருந்தது. யுஷ்செங்கோ
அரசியல் பொருளாதார ``இனக்கட்டமைப்புகளை`` சிதைக்க முயன்று வருகிறார் மற்றும் வெளிப்படையாக
``ஜனநாயக அமைப்புக்களை`` வளர்க்கவும், வலுப்படுத்தவும் முயலுகிறார். உக்ரைனை
நேட்டோவிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் சேர்த்துவிட
விரும்புகிறார் மற்றும் ``மேற்கு நாட்டு பாணி`` முதலாளித்துவத்தை ஆதரிக்கிறார்.
அவர் மில்லியனராகிய (அல்லது சில வட்டாரங்கள் சொல்வதைப் போல் பில்லியனர்)
முன்னாள் உதவிப்பிரதமர் Yulia Tymoshenko
தலைமையிலான தேசியவாத Batkywschtschyna
கட்சியால் ஆதரிக்கப்படுகிறார். அவ்வம்மையார் தனது செல்வத்தை சேர்த்தவிதம் யானுகோவிச்சின்
முகாமை சேர்ந்த மாஃபியா கும்பல் தலைவர்கள் மற்றும்
ஒருசிலவராட்சியினரின் படுமோசமானவர்கள், வளர்ந்துவிட்ட கதையோடு ஒப்பு நோக்கத்தக்கதாக உள்ளது.
குச்மா ஆட்சியில்தான் இவ்வளவு பெரிய பணக்காரராக இவர், அவரது ஆட்சிக்கு எதிராக ''ஜனநாயகம்''
மற்றும் ''சுதந்திரத்திற்காக'' கோரிக்கை விடுப்பது முற்றிலும் பண்பாடற்ற போக்காகும்,
44 வயதாகும்
Tymoshenko, கிழக்கு உக்ரைன் நகரான
Dnepropetrovsk-விலிருந்து
வந்தவர். அவர் 1990களின் தொடக்கத்தில் Pavel
Lasarenco-வின் அறிமுகத்தோடு கீவ் நகரத்திற்கு வந்தார்.
இந்த இருவரும் பின்பற்றிய குச்மாவும் கூட
Dnepropetrovsk- வை மூல இடமாகக் கொண்டவர்.
1996-TM Lasarenco
பிரதமாக ஆனார், மற்றும் Tymoshenko-வுடன்
சேர்ந்து கொண்டு கணிசமான அளவிற்கு செல்வத்தை குவித்தார்.
Tymoshenko
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு பதிலாக உக்ரைனின் தொழிற்துறை பொருட்களை பெறுவதற்கான ஒரு
இயங்குமுறையை அபிவிருத்தி செய்தார். இதில் வருகின்ற தொகையில் ஒரு கணிசமான பங்கை தான் சொந்தமாக
நிறுவிய கம்பெனியியான United Energy
Systems
கஜானாவில் போய்ச்சேர வகை செய்துகொண்டார்.
Lasarenko பல்வேறுபட்ட
ஒருசிலவராட்சி உறுப்பினர்களுடன் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஒரு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக
அவரை Kuchma
1999-ம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கினார். பண பரிவர்த்தனை மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களில்
Lasaranco
தற்போது அமெரிக்க சிறையில் இருக்கிறார்.
Tymoshenko அந்த விவகாரத்திலிருந்து தப்பி 1999-ல்
பிரதமர் யஷ்செங்கோவினால் துணை பிரதமராக நியமிக்கப்பட்டார்.
பிரிட்டனின் கார்டியன் செய்தி பத்திரிக்கை, தனது நவம்பர் 26
பதிப்பில், Matthew Brzezinski,
எழுதிய, Casino Moscow
என்ற நூலை மேற்கோள்காட்டி, அந்த நூலில்
Tymoshenko
பற்றி ஒரு முழு அத்தியாயமே எழுதப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. அதில், ``பதினோரு பில்லியன்-டாலர்
பெண்`` என்று Tymochenko
வர்ணிக்கப்பட்டிருக்கிறார். நாடு முழுவதும் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் போது அந்த நாட்டின் செல்வத்தில்
20 சதவீத்த்தை அவர் குவித்துக் கொண்டார், அவர் சோவியத் சிறப்புப் படைகளின் முன்னாள் பிரிவு ஒன்றால்
முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இப்போது அவர் தன்னை ஜனநாயக எதிர்க்கட்சி தலைவராக பிரகடனப்படுத்திக்
கொண்டிருக்கிறார், அவர் தனிப்பட்ட முறையில் செல்வம் குவித்ததில் யானுகோவிச் முகாமிலுள்ள அவரது எதிரிகளின்
இழிவான மற்றும் ரத்தக்களரி மோசடிகளை விட சற்றும் குறைந்ததல்ல..
சோவியத் யூனியன் உடைந்த பின்னர் பழைய ஸ்ராலினிச தலைமையில் ஒரு பகுதி
உக்ரைன் பொருளாதாரத்தின் கணிசமான பகுதிகளை தனியார்மயார்மயமாக்க நடவடிக்கையை எடுத்தபோது
கிரிமினல் நடவடிக்கைகளை பயன்படுத்தி அருவருக்கத்தக்க அளவிற்கு செல்வத்தை குவித்துக்கொண்டனர். அதே
நேரத்தில், நாடு பெருகிவரும் வறுமையில் தத்தளித்தது. தனியார் மயமாக்கலுக்கு முதன்மை இலக்கு உக்ரைனின்
கிழக்கு பகுதியில் தீவிரமாக சோவியத் சகாப்தத்தில் உருவான தொழிற்துறைகளாகும், அந்தப் பகுதி வளமான
இரும்புத்தாது மற்றும் நிலக்கரி உள்ளதாகும். அந்தப் பகுதியில் சுரங்கங்கள், எஞ்ஜினியரிங் தொழிற்சாலைகள்
மற்றும் தளவாடத் தொழிற்சாலைகள் நிறைந்திருக்கின்றன. இந்த பொருளாதார பிரிவுகளைத்தான் குச்மாவும்,
யானுகோவிச்சும் நம்பியிருக்கின்றனர்.
யானுகோவிச் பிராந்திய கட்சியின் தலைவர் மற்றும் உக்ரைனின் கிழக்கு பகுதியில்
கனரகத் தொழிற்துறை நிறைந்துள்ள டோன்ட்ஸ்க் பகுதியின் முன்னாள் கவனர் ஆவார்.
Rinat Achmetov தலைமை வகித்து நடத்திச் செல்லும்
Donetsk
ஒருசிலவராட்சி இனக்குழுத் தலைவர்களின் அரசியல் பிரதிநிதியாக கருதப்படுகிறார். அவர் இரண்டு பில்லியன் டாலர்
சொத்து மதிப்பு உள்ளவர் என்றும் அவர் உக்ரைனிலேயே பெரிய பணக்காரராகவும் கருதப்படுகிறார்.
குச்மா 1994 முதல் ஜனாதிபதியாக பணியாற்றி வருகிறார், அவர் சோவியத் ஆட்சி
காலத்தில் KGB
உளவு நிறுவனத்தின் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் மற்றும்
Dnepropetrovsk-ல் உள்ள மிகப்பெரிய ஆயுதக் கம்பெனியில்
டைரக்டராகவும் பணியாற்றியவர்.
Dnepropetrovsk-ன் ஒருசிலவராட்சி இனக்குழுத்
தலைவர்களின் பிரதிநிதியாக குச்மா செயல்பட்டு வருகிறார், அவரது மருமகன் விக்டர் பின்சக்கும் ஒரு
சிலவராட்சியை சேர்ந்தவர் மற்றும் முன்னாள் பிரதமரும் கூட ஆவார்.
சோவியத் சகாப்தத்தில் ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்குமிடையில் மிக நெருக்கமான
பொருளாதார உறவுகள் நீடித்தன, USSR
சிதைந்து உக்ரேன் தனி நாடான பின்னரும் இந்த உறவு நீடிக்கிறது. பல்வேறு ஒருசிலராட்சி பிரிவுகளுக்கிடையே
ஒன்றோடு ஒன்று நலன்கள் பின்னப்பட்டுக் கிடப்பதை பிரதிபலிக்கின்றன. உக்ரைனின் அலுமினியத் தொழிற்துறையில்
எடுத்துக்காட்டாக 83 சதவீதம் ரஷ்யர்களுக்கு சொந்தமானது.
உக்ரைன், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை நம்பியிருக்கிறது---- அதன்
தேவைகளில் 5-ல் 4 பகுதியை ரஷ்யா வழங்கி வருகிறது---- இது பக்கத்து கிழக்குப்பகுதியோடு நெருக்கமான
உறவுகள் வைத்திருப்பதை கோடிட்டுக்காட்டுகிறது. இதை ரஷ்யா பயன்படுத்தி உக்ரைன் மீது தனது செல்வாக்கை
நிலைநாட்டி வருகிறது. எரிபொருள் பங்கீடு மூலம், ரஷ்யா கணிசமான நிர்பந்தத்தை தர முடிகிறது.
ரஷ்யாவின் எரிபொருள் நிறுவனங்களான
Lukoil மற்றும்
Gazprom
போன்றவை ரஷ்ய அரசோடு நெருக்கமான தொடர்புள்ளவை. எனவே உக்ரைன் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின்
கிளை அலுவலகங்களாக அவை செயல்படுகின்றன. முன்னாள் ரஷ்ய பிரதமரும்
Gazprom
தலைவருமான Victor Chernomyrdin
2001 முதல் உக்ரைனின் தூதராக பணியாற்றி வருகிறார்.
1994-TM Kuchma
பதவிக்கு வந்ததும், உக்ரைனுக்கு ஒரு சுதந்திரமான பங்களிப்பை அபிவிருத்தி செய்ய முயன்றார். ரஷ்யா ஒரு
பக்கமாகவும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் மற்றொரு பக்கமாகவும் நின்று கொண்டிருக்கையில், தனது
உறவுகளில் ஒரு சமச்சீர் நிலையை உருவாக்க Kuchma
முயன்று வருகிறார். உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் இணைப்பதற்கு ஒரு முயற்சியை முன்னின்று
தொடங்கிய அவர், அதே நேரத்தில் சோவியத் யூனியன் சிதைந்த பின்னர் உருவான பல்வேறு அரசுகளும் அடங்கிய
சுதந்திர அரசு சம்மேளனத்தின் பொருளாதார செல்வாக்கையும்
(CIS) வலுப்படுத்த முயன்று வருகிறார். இந்த
CIS-ல் ரஷ்யா
மேலாதிக்கம் செலுத்தி வருகிறது.
ரஷ்யாவை தவிர்த்துவிட்டு செல்லுகின்ற ஒரு வர்த்தக வழித்தடம் ஐரோப்பாவிற்கும்,
ஆசியாவிற்குமிடையே உருவாக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டத்திலும் உக்ரைன் பங்கெடுத்துக்கொண்டது.
இப்போது அந்தத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது. ஜோர்ஜியா, உஸ்பெஸ்கிஸ்தான், அஜர்பைஜான், மோல்டேவியா
ஆகிய நாடுகள் ஐரோப்பிய வல்லரசுகளின் ஆதரவோடு 1998-99-ல் இந்தத் திட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டன.
அதே நேரத்தில், குச்மா தலைமையிலான உக்ரைன் அமெரிக்க நிதியுதவியை மிகப்பெருமளவில் பெற்ற நாடுகளில்
ஒன்றாகும்.
இன்றைய எதிர்க்கட்சி தலைவரான யுஷ்செங்கோ
ஏற்கெனவே 1990களில் மேற்கு நாட்டு முதலாளித்துவ நலன்களோடு
நெருக்கமாக பணியாற்றியவர். உக்ரைனின் மத்திய வங்கித் தலைவராக பணியாற்றிய போது அவர் மேற்கு நாட்டு
வங்கிகளோடும், அமைப்புகளோடும், உறவுகளை நிலைநாட்டுவதில் வெற்றி பெற்றார். ரஷ்யாவும், இதர முன்னாள்
சோவியத் நாடுகளும் 1998ல் ரூபிள் நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது பாதுகாக்க மேலும் கடன்களை பெற்றார்.
இதனால் அவரது செல்வாக்கு ஒருசிலவராட்சி தலைவர்களிடையே வளர்ந்தது. அவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன்
சிறப்பான உறவுகளை சாதித்து தங்களுக்கு உதவுவார் என்று நம்பினர். 1999 டிசம்பரில், யஷ்செங்கோ பிரதமாக
நியமிக்கப்பட்டார்.
என்றாலும், 1999 கொசோவா போருக்கு பின்னர் மற்றும் யூகோஸ்லாவிய
ஜனாதிபதி சுலோபொடன் மிலோசேவிக் நீக்கப்பட்ட பின்னர், இந்த நலன்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது
ஆக்கிரமிப்பு முயற்சியால் தங்களையும் பிடித்துக்கொண்டு மேலாதிக்கம் செலுத்துவதற்கு தயங்காது என்பதை
உணர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இலாபத்தில் இயங்காத சுரங்கங்கள் மற்றும் எஃகு ஆலைகளை
மூடிவிடப்போவதாக யுஷ்செங்கோவே அச்சுறுத்தினார், அதன் மூலம் கிழக்கு உக்ரைனில் ஒருசிலவராட்சியின்
உறுப்பினர்களின் ஆதிக்க அடித்தளத்திற்கு நேரடியாக அச்சுறுத்தலை உருவாக்கினார்.
அப்போது
துணைப் பிரதமராகவும், ரஷ்யாவுடன் எரிபொருள் வர்த்தகத்திற்கு பொறுப்பு
வகித்து வந்த, Tymoshenko,
குழாய் இணைப்பு அதிபரும், குச்மாவின் மருமகனுமான பின்சக்கோடு
மோதுகின்ற நிலை ஏற்பட்டது. 2001 ஜனவரியில் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார், புலன் விசாரணைக்கிடையில்
அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதே ஆண்டு ஏப்ரலில்
யுஷ்செங்கோ பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அமெரிக்க ஆதரவோடு ஜோர்ஜியாவில் ``ரோஜா புரட்சி`` ஏற்பட்டதைத்
தொடர்ந்து 2003 நவம்பரில் Eduard
Shevardnadze பதவியிலிருந்து நீக்கப்பட்டார், மீண்டும்
ரஷ்யாவுடன் நட்புறவு மேற்கொள்ள Kuchma
முயன்றார். மேலும் வாஷிங்டனை சமாதானப்படுத்துவற்கு ஈராக்கிற்கு 1,600 போர் வீரர்களை அவர்
அனுப்பியது, புஷ் நிர்வாகத்தை ஈர்க்கத் தவறிவிட்டது..
அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பு மூலோபாயத்தை தொடர்ந்து கடைபிடித்தது, எதிர்க்கட்சி
வேட்பாளர் யுஷ்செங்கோவை பேணி வளர்த்தது. அவர் ஜனநாயகக் கட்சியின் கிளின்டன் நிர்வாகத்தில் வெளிவிவகார
அமைச்சராக இருந்த Madeline Albright-டோடு
நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார் மற்றும் ஜிம்மி கார்ட்டர் ஜனாதிபதியாக இருந்தபோது தேசிய
பாதுகாப்பு ஆலோசகராக இருந்த Zbigniew
Brzezinski மற்றும் நிதியாளர்
George Saros உடனும் நெருக்கமான உறவு
கொண்டிருந்தார். Soros
தந்த நன்கொடைகளால் உக்ரைன் மாணவர் இயக்கமான ''போராவிற்கு''
("It is Time") சைபீரியா மற்றும் ஜோர்ஜியா வில் உள்ள
அதேமாதிரி இயக்கங்களை ஒத்த அதே
பாணியில் நிதியுதவி தரப்பட்டது. இந்த போரா மாணவர் இயக்கம் எதிர்க்கட்சிகளுக்கு
ஆதரவான ஆர்பாட்டங்களில் முன்னணியில் நின்றது.
நாட்டின் சமூக நிலவரத்தில் ஒரு சீரழிவு நிலையை அரசாங்கம் மாற்றம் மூலம் திருத்திவிட
முடியுமென்ற நம்பிக்கையில் எதிர்க்கட்சிகளுக்கான பொதுமக்களது ஆதரவு சார்ந்திருந்தது. சோவியத் ஒன்றியம்
சிதைந்துவிட்ட பின்னர் உக்ரைனில் சராசரி மாத வருமானம் 30 டாலராக வீழ்ச்சியடைந்துவிட்டது. நகரங்களில்
அது 60 டாலருக்கு மேல் உயரவில்லை, கீவ் நகரில் மாத வருமானம் ஏறத்தாழ 100 டாலர்கள் ஆனது.
1989-க்கும் 1999-க்கும் இடைப்பட்ட காலத்தில் வாங்கும் சக்தி 40 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டது.
சோவியத் ஒன்றிய காலத்தில் தொழிற்சாலைகளோடு வலுவான அடிப்படையில் இணைக்கப்பட்டிருந்த
சமூக மற்றும் நலன்புரி --கட்டமைப்புகள் சீரழிக்கப்பட்டுவிட்டன. வாழும் வயது பெண்களுக்கு 73 ஆண்டுகளாகவும்
ஆண்களுக்கு 62 ஆண்டுகளாகவும், வீழ்ச்சியடைந்துவிட்டது-- ரஷ்யாவிற்கு அடுத்து ஐரோப்பாவில் இதுதான் மிகக்
குறைந்த சதவீதமாகும். இதற்கிடையில் புதிதாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உலகிலேயே
மிக உயர்ந்த அளவிற்கு சென்றுவிட்டது. கடந்த சில ஆண்டுகளில் உக்ரேனிலிருந்து 4 மில்லியன் மக்கள் வெளியேறிவிட்டனர்,
சுரங்கத் தொழிலாளர்கள் சாவு எண்ணிக்கை சீனாவைத்தவிர இங்குதான் அதிகமாகவுள்ளது.
Top of page |